Monday, December 1, 2008
பூ - தமிழின் மகத்தான சினிமா
இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்டோகிராப் வரைந்துகொண்டிருந்த தமிழ்ச்சினிமாப் பரப்பில் முதன்முறையாக ஒரு பெண்ணின் அதுவும் திருமணமான கிராமத்துப்பெண்ணின் காதல் நினைவுகளைத் தைரியமாய்ச் சொல்லும் படம்தான் பூ. திருமணமான பிறகும் பொங்கலுக்குத் தன் பழைய காதலன் வருவான் என்று பனைமரத்தினடியில் காத்திருக்கும் காதலியிடம் தோழி கேட்கிறாள். ''நீ இன்னும் தங்கராசுவை மறக்கலியா?''. கதை நாயகியின் பதில், அல்லது எதிர்க்கேள்வி இதுவரை தமிழ்ச்சினிமா கேட்டறியாதது, ''ஏன் மறக்கணும்?''. இப்படியான அரசியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, ஒரு அசல் சினிமாவின் பல்வேறு சாத்தியங்களையும் எத்தனித்திருக்கிறார் இயக்குனர். தமிழ்ச்சினிமாவில் அதிகம் பேசப்படாத சிவகாசி நாடார்களின் வாழ்வியலைப் பேசும் படம். முகத்தில் இத்தனை உணர்ச்சிகளைக் காட்டுவதில் கதைநாயகி பார்வதி தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஷோபா. சமகாலச் சாம்பார் சிறீகாந்த், சில செயற்கையான காமெடிக் காட்சிகள், படத்தில் ஒட்டாது தனித்துத் தெரியும் பரவை முனியம்மா பாடல்காட்சி இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இயக்குனர் சசி ஒரு மகத்தான சினிமாவைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். படம் பற்றி இன்னும் கூடுதலாக எழுதினால் அது தந்த பரவசத்தை இழந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். நீங்களும் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
kadai vachalae nadar thana ?????
\\சமகாலச் சாம்பார் சிறீகாந்த்,\\
சுகுணா இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
வணிக ரீதியான படங்களில் முதலமைச்சர் கனவோடு நடிப்பவர்களை இதுவரை சாடி வந்துள்ளீர்கள். இயல்பான கதைகளில் இயல்பான வேடங்களில் நடிப்பவரை சாம்பார் என்று சொன்னால், கதானாயகன் ஆக்ஷன் ரோலில் தான் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
நடிப்பு சரியில்லையென்றால் நடிக்க தெரியவில்லை என்று கூறுங்கள். ஏற்கும் வேடத்தை வைத்து சாம்பார் என்று கூறுவதா?
சாம்பார் உங்களுக்கு பிடிக்காதா?
பார்ப்பனர்களுக்கு சாம்பார்னு பேருன்னா?
மத்த சாதிகளுக்கும் எதாவது கொழம்பு பேரு இருக்குதா?
ஒரு நடிகனை நடிகனா பாக்காமா எப்படி அவன் சட்டைகுள்ள எட்டி பாக்க முடியுது?
//Anonymous said...
kadai vachalae nadar thana ?????//
ஆமாங்க
சாதி மனுசன விட்டாலும் மனுசன் சாதிய விடுறதில்ல
வட்டிக்கு விட்டா செட்டியாரு,
நெசவு பண்ணா முதலியாரு,
வெள்ளாமை பண்ணா கவுண்டரு
இப்படி எதுக்கெடுத்தாலும் சாதிய தேடுரது உண்மையான பார்பனீயம்.
Post a Comment