Tuesday, June 1, 2010

நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்?

அன்பு நண்பர்களுக்கு...

மூன்றுநாட்களாக இணையத்தின் பக்கம் வர இயலாத அளவு சில தனிப்பட்ட வேலைகள். வந்து பார்த்தால் நர்சிம்-சந்தனமுல்லை-வினவு-பைத்தியக்காரன் சர்ச்சைகளைப் பார்க்க நேர்ந்தது. நான் கள்ளமௌனம் சாதிப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், இதுதான் சாக்கென்று தனிப்பட்ட வன்மத்தோடு அள்ளித் தெளிக்கப்பட்ட அவதூறுகள். என் எழுத்தைப் பல ஆண்டுகாலமாக வாசித்து வருபவர்கள் நான் இதுமாதிரியான ஆண் திமிரை ஆதரிப்பவனில்லை என்பதை அறிவார்கள். அது நர்சிம்மிடமிருந்து வந்தாலும் சரி, வினவிடமிருந்து வந்தாலும் சரி, அது கண்டிக்கத்தக்கதுதான். குறிப்பாக நர்சிம்மின் ‘பூக்காரி’ பதிவு, ‘ஒரு பெண் பொதுவெளிக்கு வந்தாலே அவளைத் தேவடியாளாகப் பார்க்க வேண்டும்’ என்கிற உச்சபட்ச ஆண்திமிர். அதைப் புனைவு என்றோ பழிக்குப் பழி என்றோ நியாயப்படுத்தி விட முடியாது. ஆனால் ‘தமிழ்மணத்தை விட்டு நர்சிம்மை நீக்க வேண்டும்’ என்பது மாதிரியான கோரிக்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. எந்த ஒரு மோசமான கருத்துக்கும் இடம் வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. மேலும் ‘இதுமாதிரியான பதிவர்கள் திரட்டியில் இருந்தால் பெண் எழுத்தாளர்கள் இருக்க முடியாது’ என்றால் திரட்டியை விட்டு அனுப்பிவிட்டால் மட்டும் அது சரியாகிவிடுமா, என்ன? தொடர்ச்சியாக இத்தகைய ஆண் திமிர், அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் அதை அம்பலப்படுத்தி எழுதுவது ஒன்றுதான் சரியான வழி. ஆனால் ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நடந்த ஒரு அறமற்ற செயல் குறித்து எழுதுவதற்காகத்தான் இந்த பதிவு. வினவில் வந்த பதிவு, சிவராமன் எழுதியதாக அரசல்புரசலாகச் செய்திகள் எழுந்தவுடன், ‘நான் எழுதினாலும் அப்படித்தான் எழுதியிருப்பேன்’ என்று சிவராமன் எழுதியிருக்கிறார். ஆனால் நண்பர்களே நூற்றுக்கு நூறு சதவிகிதம் அது சிவராமனால் எழுதப்பட்டதுதான். எழுதப்பட்ட பதிவு, சந்தனமுல்லைக்கு அனுப்பப்பட்டு, பின் இறுதிப்படுத்தப்பட்டு வினவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வினவு தோழர்கள் அதை எடிட் செய்து தங்கள் பெயரில் பதிவாகப் போட்டுள்ளனர். சிவராமன் எழுதி, வினவுக்கு அனுப்பிய, எடிட் செய்யப்படாத பிரதியைக் கீழே பதிவிடுகிறேன். இது எப்படி கிடைத்தது என்கிற கேள்வி தேவையற்றது. சிவராமனுக்குப் பிடித்த மொழியில் சொல்வதென்றால் ‘எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது’. இரண்டு பிரதிகளையும் நண்பர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். என்னைப் பற்றி ஆழ்மன வக்கிரத்தோடு சிவராமன் எழுதி, வினவு எடிட் செய்த பகுதிகளை மட்டும் சிவப்பு வண்ணம் பூசியிருக்கிறேன்.
--------------------
சொல்லுங்கள், பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம்?

வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. துடிக்கத் துடிக்க வன்னியர் குல சத்திரியர் என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவர் சந்தனமுல்லையை பிராமண சமூகத்தை சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். பார்ப்பனீய திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என ஒற்றை பார்வையுடன் இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது. இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்னர் இது தொடர்பான இன்னொரு கேள்விக்கு விடை தேடுவது நம் புரிதலுக்கு வழிவகுக்கும்.

'ஏன் செய்யவேண்டும்?'

இந்த இரண்டாவது கேள்விக்கு முதலில் விடை தேடுவோம். இதற்கு சில பழைய கணக்குகளை தூசி தட்ட வேண்டியிருக்கிறது. பல பதிவர்களும் குறிப்பிடுவது போல் இது 'ஒரு இடுகை' சார்ந்த பிரச்னை இல்லை. கிட்டத்தட்ட 18 மாத ஆணாதிக்க பகை. பார்ப்பனீயத்தின் விஷத்துக்கு பல்லாயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு.

பழைய கணக்கு

'நான் கடவுள்' திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன்வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்தியவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) 'இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?' என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை - ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் - அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத்தாண்டி பெண்கள் வேறு எந்தவிதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதில் 24 மணிநேரங்களும் கவனமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை - ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம். இவர்கள் பிறப்பால் பிராமணர்கள் அல்ல. ஆனால், பிராமணர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனுதர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள்.

கார்க்கி - ராப் - சந்தனமுல்லை
முன்னணி படைத்தளபதியாக இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் கார்க்கி, முன்பு ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். இப்போது சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக அறிகிறோம். தனது வலைத்தளத்தில் தன் அக்கா மகன் குறித்து அவ்வப்போது இடுகைகள் எழுதுவார். அந்தச் சிறுவன் சிரித்தாலும் பதிவு. அழுதாலும் பதிவு. கிண்டல் அடித்தாலும் பதிவு என்று எழுதும் இந்த கார்க்கி -

தன் மகள் பப்புவின் வளர்ச்சி குறித்து அங்குலம் அங்குலமாக எழுதும் சந்தனமுல்லையின் பதிவுகளை உண்மையில் ஆதரிக்க வேண்டுமல்லவா? ஆனால், எதிர்க்கிறார். என்ன காரணம்?

கார்க்கியின் வலைத்தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆண் மைய திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையின்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை. இந்த கார்க்கியும் - வெளிநாட்டில் வசிக்கும் ராப்பும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். கார்க்கி தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி எழுதுவதை, ராப் கண்டித்தார். உடனே கார்க்கி, 'ராப்' என தலைப்பிட்டு எவ்வளவு மோசமாக முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பெண்களை இழிவுப்படுத்தி ஒரு இடுகையை எழுதினார். இதற்கு எதிர்வினையாக ராப், ஒரு இடுகையை பதிவிட்டார். அதில் எந்த வாசகமும் இடம்பெறவில்லை. ஒரேயொரு குப்பைத்தொட்டியின் படம். அதில் கார் கீயை தூக்கிப் போடுகிறார்கள். இடுகையே அவ்வளவுதான்.

இதற்கு 'சபாஷ்... கலக்கிட்ட... சரியான எதிர்வினை' என்று பொருள்தரும் மறுமொழியை சந்தனமுல்லை எழுதினார். சந்தனமுல்லை மீது கார்க்கி கொள்ளும் கோபத்துக்கு அடிப்படை இந்த மறுமொழிதான். அதனால்தான் இப்போது 'மயில் (விஜி) தளத்தில் சந்தனமுல்லையின் மறுமொழி கண்டிக்கத்தக்கது' என கார்க்கி கூச்சலிடுகிறார். உண்மையில் அந்த பழைய மறுமொழியை மனதில் வைத்துத்தான் இப்போது லபோ திபோ என அழுகிறார்.

அபி அப்பா
பெண் பதிவர்களிடம் ஜொள்ளு விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா - லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். 'ஆபரேஷன் சல்மா' மூலம் பார்ப்பனரான ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். அவற்றை இவர்கள் இருவரும் எப்போது பொது வெளியில் வைக்கப் போகிறார்கள் என்று அறிய ஆவல்.



மேலே குறிப்பிட்ட ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் சந்தனமுல்லைக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அபிஅப்பாவுக்கு, சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதுதான் இப்போது நர்சிம்மை ஆதரிக்க வைத்திருக்கிறது.



கடந்த ஓராண்டில் மட்டுமே ராப் - சோம்பேறி உட்பட பல பெண் பதிவர்கள், எழுதுவதை நிறுத்தி, வலையுலகைவிட்டே ஒதுங்கியிருக்கிறார்களே... அதற்கு என்ன காரணம்? சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் இதற்கு விடையளிக்க வேண்டும்.



யார் இந்த நர்சிம்?



பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பிராமணர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத்தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத்தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத்தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை உதாசீனப்படுத்தி இருக்கிறார்.



இந்நிலையில்தான் பிரபல பதிவர்களின் அன்பைப் பெற்றால், தன் கடையும் பிரபலமாகும் என்று திட்டமிட்ட நர்சிம், யார் யார் பிரபலமானவர்கள் என லிஸ்ட் எடுத்திருக்கிறார். அதில் தன் சாதியை சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியக்காரன் ஆகியோரையும், தன் சாதியாக இல்லாவிட்டாலும் வருணாசிரமத்தை ஏற்கக் கூடிய பிற மேல் சாதியை சேர்ந்த பதிவர்களையும் அணுகி நட்பு பாராட்டி தானாகவே சீடனாகி இருக்கிறார். நன்றாக கவனித்தால் தனது 'குரு'வாக எந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களையும் தலித்துகளையும் இவர் ஏற்கவில்லை என்பது புரியும். அதுமட்டுமல்ல, எந்த பெண் எழுத்தாளரையும் குறைந்தபட்சம் வழிகாட்டியாகக் கூட நர்சிம் ஏற்றதில்லை. அறிவு ஆண்களுக்கு மட்டுமே - அதுவும் பிராமணர்களுக்கு மட்டுமே - சொந்தம் என்பதில் அவ்வளவு நம்பிக்கை!



பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது 'குரு'க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே 'இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி' என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, 'தனது சீடர்' என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை... ஆகியோர் சாருநிவேதிதாவின் அடிவருடிகள் என்பது தற்செயலாக நடப்பவை அல்ல.



எதற்கெடுத்தாலும் சாதியை பார்க்கிறீர்கள்... நர்சிம்மின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை ஆதரவாளர்கள் எழுப்பலாம்.



நல்லது நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்? இதையும் அவர் திருடித்தான் செய்திருக்கிறார். 'பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் பேப்பரை பார்த்து காப்பி அடிப்பதாக' மயில் கிண்டலடித்ததற்கு காரணம் இதுதான். இந்த 'உண்மை'யை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது யார் தெரியுமா? இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் 'முற்போக்கு' பதிவரான லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாதான்.



ஒருமுறை நர்சிம் ஒரு கதையை எழுதியிருந்தார். அந்தக் கதை மின்னஞ்சலில் வலம் வரும் ஒரு ஆங்கிலக் கதையின் அப்பட்டமான காப்பி என்ற உண்மையை லக்கிலுக் போட்டு உடைத்தார். உடனே என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அந்த இடுகையையே தன் தளத்திலிருந்து நர்சிம் தூக்கிவிட்டார்! இப்படித்தான் நர்சிம் கதைகளை எழுதுகிறார். பழைய குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளிவந்த ஒருபக்க, இருபக்க கதைகளை டிங்கரிங் செய்து புனைவாக்குவதுதான் அவர் வேலை.



கம்பரையும், வள்ளுவரையும், குறுந்தொகையையும் தன் தளத்தில் எழுதும் இந்த நர்சிம், ஒருபோதும் எந்த அறிஞரின் விளக்கவுரையிலிருந்து தான் எடுத்திருக்கிறோம் என்று சொல்லியதில்லை. வார்த்தை மாறாமல் அந்த விளக்கவுரையை டைப் செய்து தன் தளத்தில் வெளியிடுவது மட்டுமே இவரது வேலை. இந்த உழைப்புக்கு கிடைத்த பட்டம்தான் 'கார்ப்பரேட் கம்பர்!' வாங்கிய காசுக்கு மேல் கூவுவது என்பது இதுதான்.



எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா? ஈழப் பிரச்னை தொடர்பாக 'சோ'த்தனமாக 'தினமலரை' காப்பியடித்து ஒரு இடுகையை எழுதப் போக, பெயரிலி வெளுத்து வாங்க, 'ஐயனே என்னை மன்னித்துவிடுங்கள்' என சரண்டர் ஆன கதை அனைவருக்கும் தெரிந்ததுதானே? நித்தியானந்தா சம்பவத்தின்போது, பிரேமானந்தாவையும் உடன் இணைத்து பதிவு எழுதியவர், ஜெயேந்திரனை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 'அவாள்' பாசம். நிதியானந்தரின் இணையதள பி.ஆர்.ஓ.வாக செயல்பட்ட சாருநிவேதிதாவையாவது கண்டித்தாரா என்றால் அதுவும் இல்லை.



ஆனால், சந்தனமுல்லை தொடர்ந்து பொதுப்பிரச்னைகள் சார்ந்து எழுதிவருகிறார். ஏப்ரல் மாத 'உன்னதம்' இதழில் 'தெலுங்கானா' பிரச்னை குறித்து 'எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி'யில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்தவர், மே மாத 'உன்னதம்' இதழில் 'தலித்துகள் ஏன் நீதிபதியாக வரமுடியவில்லை?' என்ற கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறார். தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியே சமூக பிரச்னைகளை ஆராய்கிறார். தண்ணீர் தினத்தை முன்னிட்டு 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' நூலை வெகு அழகாக சென்னை கூவம் நதிக்கரையோர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சந்தனமுல்லை எழுதிய இடுகைக்கு சமமான இடுகையை எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?



நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுழொகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

குட் டச் பேட் டச்

தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், 'குட் டச் பேட் டச்' நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா. சிறுமிகள் மீது நிகழும் வன்கொடுமைகளை கண்டித்து தீபா ஒரு பதிவு எழுத, இது குறித்து அரங்கக் கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் மறுமொழியில் சொல்ல... அப்படித்தான் இக்கூட்டம் அரங்கேறியது. பெண் பதிவர்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அப்போது இவர்களுடன் நட்பு பாராட்டிய நர்சிம், தானும் உதவுவதாக சொல்லி களத்தில் இறங்கினார். அவ்வளவுதான். வந்தது வினை. டாக்டர் ருத்ரனுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அந்தப் பொறுப்பை ஏற்ற நர்சிம், டாக்டரை தொடர்பு கொள்ளவேயில்லை. பதிவுகளில் வந்த அறிவிப்பை பார்த்துவிட்டு டாக்டர் போட்ட பின்னூட்டம் இன்றும் நினைவில் இருக்கிறது. 'யாரும் என்னை முறைப்படி தொடர்பு கொண்டு தேதியை சொல்லவில்லை. இருந்தாலும் பதிவர்களுக்காக நிகழ்ச்சிக்கு வருகிறேன்' என்று பொருள்பட எழுதினார். இதற்கு அடுத்து நடந்த க்ளைமாக்ஸ்தான் முக்கியம்.

இந்நிகழ்வு குறித்து 'ஜூனியர் விகடனில்' செய்தி வெளியிட்ட ரமேஷ் வைத்யா, இந்நிகழ்வு நடக்க முழுக்க முழுக்க நர்சிம்தான் காரணம் என கூலிங் க்ளாஸ் அணிந்த நர்சிம்மின் புகைப்படத்துடன் எழுதியிருந்தார். பிரமாதமாக ஏதோ தானே உழைத்து நிகழ்ச்சியை நடத்தியதுபோல் நர்சிம்மும் பேட்டியளித்திருந்தார். 'ஜூ.வி' வெளிவந்ததும் வழக்கம்போல் 'நன்றி ஜூ.வி' என இடுகை எழுதிய நர்சிம், மறுமொழியில் பல பதிவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தீபாதான் காரணம் என்று சொன்னதும், அந்த இடுகையையே தூக்கிவிட்டார். ஆக, தான் அம்பலமாகாத இடுகைகளை மட்டுமே நர்சிம் தன் வலைத்தளத்தில் வைத்திருக்கிறார். திருட்டுக் குற்றம் வெளிப்பட்ட இடுகைகளை சத்தமில்லாமல் தூக்கிவிடுவார்.

இந்த நிகழ்வில் சமூகப் பொறுப்புணர்வுள்ள சந்தனமுல்லை தன்னை முன்னிலைப்படுத்தாமல் தீபாவுக்கு உதவினார். எதுவும் செய்யாமல், ஆனால், எல்லாம் தன்னால்தான் என்று சீன் காட்டும் நர்மிம்மை நண்பனாகக் கூட இதன் பிறகு சந்தனமுல்லை மதிக்கவில்லை. ஆக, சந்தனமுல்லை மீது நர்சிம் ஆத்திரப்பட்ட இதுமாதிரியான பல திருட்டுகளே காரணம்.

இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாகவும், அப்படிப்பட்ட பதிவர் எந்த அடிப்படையில் இந்த 'குட் டச் பேட் டச்' நிகழ்ச்சியை நடத்த முயல்கிறார் என்றும் கேட்டிருந்தார். பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல!

தீபா - நர்சிம் - நகைச்சுவை - மயில்

கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர்பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான 'குசும்பு' பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை 'எட்டாதபடி' கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான்.

இந்த கோமாளி வேடத்தைத்தான் குசும்பன் வலையுலகில் கையில் எடுத்திருக்கிறார். 'மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்' என்று பெயர் வாங்கத் துடிக்கும் நர்சிம், அவ்வப்போது இதுமாதிரியான இடுகைகளை எழுத முயன்றிருக்கிறார். உரையாடல் அமைப்பு சார்பில் சிறுகதைப் பட்டறை நடத்தப்பட்டபோது அது தொடர்பாக ஒரு 'காமெடி' இடுகையை நர்சிம் எழுதியது ஒரு உதாரணம்.

ஆனால், இதே வேலையை முன்பு தீபாவும், இப்போது மயிலும் செய்தபோது நர்சிம் துள்ளி குதித்து விஷத்தை கக்குகிறார். தீபா விஷயத்தில் என்ன நடந்தது?


சுயமோகியான நர்சிம், தனக்கு வந்ததாக ஒரு வாசகர் கடிதத்தை தன் தளத்தில் பிரசுரித்தார். அதில் அவரை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழப்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்படியொரு வாசகர் கடிதம் வந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். படு மொக்கை இடுகைகளை எழுதும் நர்சிம்மையும் மதித்து பாராட்டும் மொக்கைகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.


நர்சிம்மின் இந்த வாசகர் கடிதத்தை கிண்டல் செய்து தீபா ஒரு இடுகையை எழுதினார். அந்த இடுகையில் சந்தனமுல்லை மறுமொழி எழுதினார். இப்போது நர்சிம்மை ஆதரிக்கிறார்களே... அவர்களேதான் அப்போதும் தீபாவுக்கு எதிராக பொங்கி எழுந்தார்கள். சந்தனமுல்லைதான் இதற்கெல்லாம் காரணம் என டார்கெட் செய்தார்கள். வலையுலகமே இரண்டு பட்டது.



இந்த பழைய வரலாறுதான் இப்போதும் நடந்திருக்கிறது. அப்போது நர்சிம்முக்கு வந்த வாசகர் கடிதம். இப்போது நர்சிம் அளித்த பேட்டி. இரண்டு இடங்களிலும் நர்சிம்மை கிண்டல் செய்தவர்கள் பெண் பதிவர்கள். இரண்டிலும் அந்த கிண்டலை ஆதரித்து மறுமொழி எழுதியவர் சந்தனமுல்லை.



ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? நர்சிம் இதேபோல் பார்ப்பன விஷத்தை கக்குவாரா? நர்சிம்மை ஆதரிக்கும் பதிவர்கள் இதேபோல் எதிர்வினை புரிவார்களா? கலாய்த்தல் என்பதும், கிண்டல் என்பதும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண்கள் அப்படி செய்யக் கூடாதா?



ஆதிமூலகிருஷ்ணன் எடுத்த நர்சிம்மின் பேட்டியை கிண்டல் அடித்து மயில் எழுதிய இடுகையை வரிக்கு வரி ஆமோதிக்கிறோம். பழைய புத்தகக் கடையிலிருந்து திருடித்தான் நர்சிம் பதிவு எழுதுகிறார் என்பது நகைச்சுவை மட்டுமல்ல, உண்மையும் கூட. இதை சந்தனமுல்லை ஆமோதித்து மறுமொழி எழுதியதில் என்ன தவறு இருக்கிறது?



விதூஷ் - டி.ஆர்.அசோக்



எந்தளவுக்கு நர்சிம்மும் அவரது ஆதரவாளர்களும் பார்ப்பன வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் டி.ஆர்.அசோக். 'சங்கம்' தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பதிவர் டி.ஆர்.அசோக், பெண் பதிவரான விதூஷை (வித்யா) பார்த்து, 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்...' என்று சொன்னாராம். உடனே நர்சிம் சாமியாடினார் பாருங்கள்... அடேங்கப்பா நினைத்தாலே புல்லரிக்கிறது. 'ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்வதற்கு சமம்... இப்படியெல்லாம் ஆண்கள் இருந்தால் எப்படி பெண்கள் எழுத வருவார்கள்...' என்றெல்லாம் கேள்வி கேட்டார். மறுமொழியிலும் பலர் நர்சிம்மை ஆதரித்து, டி.ஆர்.அசோக்கை எதிர்த்து எழுதினார்கள்.



அப்படியானால் இப்போது சந்தனமுல்லையை குறிவைத்து வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம்மின் செயல் எப்படிப்பட்டது? இதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. விதூஷ் என்கிற வித்யா ஒரு பிராமணப் பெண். அவரது அழகை வர்ணித்த டி.ஆர்.அசோக் பிராமணரல்லாதவர். பார்ப்பன பெண்ணை வேறொரு சாதி ஆண் எப்படி ரசிக்கலாம் என்ற பிராமண இளைஞனின் கோபம்தான் நர்சிம்மிடம் அப்போது வெளிப்பட்டது. மத்தபடி பெண்களை காப்பாற்றும் எந்த புண்ணாக்கு செயலும் இதில் இல்லை. ஒருவேளை டி.ஆர்.அசோக் பிராமணராக இருந்திருந்தால், நர்சிம் இந்த 'கமெண்ட்டை' ரசித்திருப்பார்.



சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பிராமணர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய 'இயல்பாக' இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் 'பொழுதுபோகலைனா...' என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?



நர்சிம் செய்த வன்புணர்ச்சி



சந்தனமுல்லை மீது இந்தளவுக்கு கீழ்த்தரமான வசவுகளை நர்சிம் பயன்படுத்தக் காரணம், ஆண் என்ற திமிரும், மேல் சாதிக்காரன் என்ற ஆணவமும்தான். இத்துடன் முதுகெலும்புடன் சந்தனமுல்லை நிமிர்ந்து நிற்பது நர்சிம்முக்கு வயித்தெரிச்சலை கிளப்பியிருக்கிறது. அதனால்தான் சந்தனமுல்லையை குறிவைத்து நர்சிம் எழுதிய 'பூக்காரி' என்ற படுமட்டமான செக்ஸ் கதையில் இந்த //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.// சொற்பிரயோகம் வருகிறது.



என்ன சொல்ல வருகிறார் நர்சிம்? தன் குலம் பிராமணக் குலம்... தன் வளர்ப்பு மேம்பட்ட வளர்ப்பு



எங்கே போனார் சுகுணா?

வார்த்தைக்கு வார்த்தை பெரியார், முற்போக்கு என்றெல்லாம் ஜல்லியடிக்கும் சுகுணா திவாகர் இந்த விஷயத்தில் இதுவரை வாயே திறக்கவில்லை. சீமாட்டி லீனா மணிமேகலை ஊற்றிக் கொடுக்கும் சரக்குக்காக அவரை ஆதரிக்கும் இந்த அடிவருடி, கோமான் நர்சிம் தி.நகர் 'அருணா பாரில்' அவருக்கு ஊற்றிக் கொடுக்கும் சரக்குக்கு விசுவாசமாகத்தானே நடந்து கொள்வார்? சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூடநம்பிக்கை தொடரான 'அம்மன்' சீரியலை இயக்குவது அ.மார்க்ஸின் மகள் பாரதிதான். குரு எவ்வழியோ, சீடன் அவ்வழி!



நடுநிலையாளர்களே...
பெண் பதிவர்களே...

தமிழ்மணம் நிர்வாகிக்கு...

இப்போது சொல்லுங்கள், நர்சிம்மை என்ன செய்யலாம்?
--------
அன்பின் சிவராமன் (எ) பைத்தியக்காரன்...

நீங்கள் இப்படித்தானே ஆரம்பிப்பீர்கள்! நல்லவேளையாக ஈரத்துணியைக் கழுத்தில் போட்டு அறுக்கும் கலையை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை. எவ்வளவு வக்கிரம் இருந்திருந்தால் நான் சரக்கிற்காக விலைபோகிறவன் என்று எழுதியிருப்பீர்கள்? என் மீது சமீபத்தில் கூட பத்வா பிரச்சினை தொடர்பாக விமர்சனம் வைத்த ரோசாவசந்த போன்றவர்கள் இதுமாதிரியான இழிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததில்லை. ஆனால் நீங்கள் வைக்கிறீர்கள் என்றால் என்ன மாதிரியான அடிமன வக்கிரம் உங்களிடம் இருக்க வேண்டும்? லீனாமணிமேகலை எனக்கு சரக்கு ஊற்றிக்கொடுத்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா சிவராமன்? இதே அருணாபாரில் நர்சிம் தனது நூல் வெளியீட்டுவிழாவை நடத்தியபோது பிரதியைப் பெற்றுக்கொண்டு, குடித்து சிரித்து மகிழ்ந்தீர்களே சிவராமன், நீங்கள் யாருக்கு விலைபோனவன்? ராசேந்திரசோழன் முதல் ராஜசுந்தர்ராஜன் வரை எழுத்தாளர்களைச் சிலாகித்து எழுதுகிறீர்களே, யார் யார் உங்களுக்கு ஊற்றிக்கொடுத்தார்கள் என்று எழுதமுடியுமா? ஆர்குட்டில் வன்னிய ஃபோரத்தில் இணைந்து தன் சுயசாதி அடையாளத்தை உறுதிசெய்கிற சந்தனமுல்லையைப் புரட்சித்தலைவியாகச் சித்தரிக்கிற வினவு பதிவுக்காக உங்களுக்கு அவர் எத்தனை பாட்டில்கள் சப்ளை செய்தார் என்றாவது சொல்ல முடியுமா? ஒரு அரசியல் விமர்சனம் செய்யத் துப்பில்லாமல் ’ஊற்றிக்கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு’ என்று கிசுகிசு எழுதுவதற்கு என்ன மயிருக்கு பூக்கோ, நீட்ஷே, மார்க்சியம் லெனினியம்?

அ.மா மகள் ’அம்மன்’ சீரியலை இயக்கினாரா இல்லையா என்பது இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியாது. அப்படியிருந்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் மார்க்சும் அவரது மகளும்தான். ஆனால் ‘நாகவல்லி’ என்னும் மூடநம்பிக்கை தொடருக்கு நீங்கள் வசனம் எழுதியது பதிவுலகமே அறிந்த கதை. அது எப்படி சிவராமன் இந்த மானம், வெட்கம், சுயகூச்சம், குற்றவுணர்ச்சி இதுவெல்லாம் இல்லாமல் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடிகிறது?

பெரியாரியப் பள்ளியிலிருந்து வந்து பெரியாரியத்தைச் சாத்தியப்பட்டவரை வாழ்க்கையில் செயல்படுத்த எத்தனிக்கிற என்னை மாதிரியான ஆட்களுக்கு உங்களிடமிருந்து பார்ப்பன எதிர்ப்பு, ஆணாதிக்கம் குறித்துப் பாடம் கேட்க நேர்வது அவலம்தான். இந்துமதத்தின் அடையாளமாகிய குங்குமத்தை நெற்றியில் அணிந்துகொள்கிற, இன்னும் பூணூலைக் கழற்றாத, தீபாவளி, சித்திரை முதல்நாள் போன்ற பார்ப்பனப் பண்டிகைகளுக்கு நான் உட்பட நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி வாழ்த்துக்கள் அனுப்புகிற பச்சைப் பார்ப்பான் நீங்கள். அது எப்படி கூச்சமேயில்லாமல் சாதி அடையாளத்தைத் துறப்பது குறித்தும் பார்ப்பன எதிர்ப்பு குறித்தும் உங்களால் எழுத முடிகிறது? இப்படியெல்லாம் யாராவது கேள்வி கேட்டு விடுவார்கள் என்றுதானே, ’’இப்போது நான் பூணல் அணிவதில்லை. சடங்குகள் செய்வதில்லை. மத அடையாள சின்னங்களை பூசிக் கொள்வதில்லை. அதனால் பார்ப்பன சாதியிலிருந்து வெளிவந்துவிட்டேன் என்று சொல்லாதே. புற அடையாளங்களல்ல... அக அடையாளங்களே சாதிக்கான அடித்தளம்” என்று சர்வஜாக்கிரதையாக எழுதுகிறீர்கள். பூணூலையே கழற்றாத உனக்கு எதற்குப் புண்ணாக்குப் பார்ப்பன எதிர்ப்பு?

அவ்வளவு ஏன், டோண்டுராகவன் கூட பார்ப்பனர்களைப் பார்ப்பனர்கள் என்று எழுதுகிறவர். ஆனால் பார்ப்பனர்களைப் ‘பிராமணர்கள்’ என்று எழுதுகிற ’புரச்சிகர’ப் பார்ப்பான் நீங்கள். வினவுக்கு நீங்கள் அனுப்பியிருக்கிற மேற்கண்ட பதிவில் இருக்கிற உங்கள் ‘பிராமணர்களை’ப் பார்ப்பனர்கள் ஆக்கியிருக்கிறார்கள் வினவுத்தோழர்கள். உங்கள் லாஜிக்படியே சில கேள்விகளை முன்வைப்போம்.

‘உரையாடல்’ கலை இலக்கிய அமைப்பை உங்களோடு நடத்துவதற்கு ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவரோ கிடைக்கவில்லையா? ஜ்யோவ்ராம்சுந்தர் என்ற பார்ப்பனர்தான் கிடைத்தாரா? (நிச்சயம் சுந்தர் பைத்தியக்காரனை விட நூறுமடங்கு நேர்மையானவர் என்பதும் பார்ப்பனீயத்தின் மீது விமர்சனம் உடையவர் என்பதும்தான் என் கருத்து. ஆனால் சிவராமனின் ‘லாஜிக்’கிற்காக இதைக் கேட்க வேண்டியிருக்கிறது. சுந்தர் மன்னிக்க வேண்டுகிறேன்.) சினிமா போடுவதற்கு உங்களுக்குப் பத்ரி என்ற பார்ப்பனரின் கிழக்கு மொட்டைமாடிதான் கிடைத்ததா? நீண்டகால வாசிப்பு உடைய யாரும் பாலபாரதி திருநங்கைகள் குறித்து எழுதிய ‘அவன் - அவள்- அது’ நாவலைக் குப்பை என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதைக் கொண்டாடி பாலபாரதிக்கு உம்மா கொடுக்கிறேன், உப்புமா கொடுக்கிறேன் என்று நீங்கள் எழுதியதற்குப் பாலபாரதி பார்ப்பனர் என்பதுதான் காரணமா?

இந்த லாஜிக் கருமத்தை விட்டுவிடுவோம். ‘உன்னைப் போல் ஒருவன்’ பின்னால் உள்ள முஸ்லீம் விரோத அரசியல் குறித்து நான் பதிவு எழுதியபோது பார்ப்பன குயுக்தியோடு அதைத் திசைதிருப்பும் வகையில் ‘சுகுணா ஆணாதிக்கவாதி’ என்று பதிவுபோட்டீர்கள். (அதை அப்போதே வினவு எதிர்தத்து.) சரி, ‘உமாஷக்திக்கு அரசியல் தெரியாது’ என்று நான் சொன்னது உண்மையிலேயே உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது என்றால் ‘லீனாவுக்கு அரசியல் தெரியாது’ என்று அய்யனார் எழுதியபோதும் உங்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் ‘சங்கரராமசுப்பிரமணியன் விக்கிரமாதித்யனைக் காட்டிக்கொடுத்தார்’ என்று சம்பந்தமில்லாமல் ம.க.இ.கவுக்காக ஆஜர் ஆனீர்கள். எவ்வளவு பகைமை இருந்தபோதும் அய்யனாரின் ஆண் திமிரை வினவு அந்த பதிவிலேயே சுட்டிக்காட்டியது. குறைந்தபட்சம் அவர்களுக்கு அரசியல் மனசாட்சி இருந்தது. உங்களுக்கு மனசாட்சியே இல்லையே சிவராமன்? பவுத்தம் வீழ்ந்ததற்குக் காரணம் பார்ப்பனீயமில்லை, பொருளாதாரக் காரணங்கள்தான் என்பது தொடங்கி நீங்கள் எழுதிய பல பதிவுகளில் உள்ள பார்ப்பன மனோபாவத்தை என்னால் சுட்டிக்காட்ட முடியும். எந்த யோக்கியதையில் பார்ப்பன எதிர்ப்பு பற்றிப் பேசுகிறீர்கள் சிவராமன்?

நீங்கள் நர்சிம்மின் ’பார்ப்பனத்திமிர்’ குறித்தோ ஆணாதிக்கத் தடித்தனம் குறித்தோ இதே மொழியில் ஏன் உங்கள் தளத்தில் எழுதவில்லை? அட அரசியல் கருத்துக்களை விடுங்கள், குசும்பனின் பதிவுகளை எத்தனை முறை பின்னூட்டம் போட்டு பாராட்டியிருப்பீர்கள், நர்சிம்மின் பதிவுகளையும் ‘சபாஷ்’ என்று பின்னூட்டமிட்டிருப்பீர்கள். ஆனால் ’வினவு’ பதிவில் ‘நர்சிம் மரணமொக்கைகள் எழுதுபவர்’ என்றும் ‘பற்றியெரியும் புரச்சிகர நெருப்பைக் குசும்பன் ஒண்ணுக்கு அடித்து அணைத்துவிட்டார்’ என்கிற ரீதியில் எழுதுகிறீர்களே, அபிப்பிராயம் சொல்வதிலும் கூட இரட்டை வேடமா, கேவலமாக இல்லையா? சில மாதங்களுக்கு முன்பு ‘பதிவுலகம் முட்டாள்களின் கூடாரம்’ என்று சொல்லி எதிர்ப்புகளைச் சந்தித்தேன். ஆனால் அதையெல்லாம் என்னுடைய அபிப்பிராயமாக முன்வைத்தேனே தவிர, உங்களைப் போல வினவின் வேட்டிக்குப் பின்னால் ஒளிந்து அல்லவே.

எப்போதுமே நீங்கள் இரட்டை வேடம் போடுவதை வெட்டுப்புலி - பிரபாகரன் விமர்சனத்தின்போது நான் சுட்டிக்காட்டினேன். அதைப் பன்மைத்தன்மை, ஆசிரியன் மரணம் என்றெல்லாம் ஜல்லியடித்தீர்களே சிவராமன் (அந்த வன்மம்தான் என்னை ஊற்றிக் கொடுக்கப்படுகிறவனாகச் சித்தரித்ததோ என்னவோ) இந்த அயோக்கியத்தனங்களுக்கும் பெயர் பன்முகத்தன்மைதானா சிவராமன்?

அது எப்படி சிவராமன் நேரில் பார்க்கும்போது ‘நல்லாயிருக்கியாம்மா’ என்று சிரித்து விட்டு, போலிப்பெயரில் ஒளிந்துகொண்டு ‘அடிவருடி, சரக்குக்கு விலைபோகிறவன்’ என்று எழுதமுடிகிறது? ஒரு பார்ப்பனரல்லாத அரசியல் செயற்பாட்டாளரான என்னை இழிவு செய்வதற்குப் பின்னால் உங்கள் பார்ப்பனத் திமிர் இல்லையா சிவராமன்?

பதிவர்களிடம் பழகி, அவர்களின் அந்தரங்க ரகசியங்களைத் தெரிந்து, அதைப் போட்டுக்கொடுத்து ‘புரட்சிகரப் பட்டம்’ வாங்குகிற சிவராமனை என்ன செய்யலாம் என்று பதிவர்கள் முடிவுசெய்து கொள்ளட்டும். எனக்கு இந்த தீர்ப்புகளின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, மன்னிக்கவும் சிவராமன், காறித்துப்பக்கூட உங்கள் முகத்தில் விழிக்க விரும்பவில்லை.

அன்பார்ந்த வினவுத் தோழர்களுக்கு...

ம.க.இ.க அமைப்பின் மீது என்னை மாதிரியானவர்களுக்கு இருக்கும் மரியாதையே அது அர்ப்பணிப்பும் நேர்மையும் உள்ள இயக்கம் என்பதுதான். இன்னும் சொல்லப்போனால் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பலபேர் உங்கள் அமைப்பை ஆதரிக்கக் காரணமே, ‘அவர்கள் களத்தில் நிற்கிறார்கள், நம்மால் முடியவில்லை’ என்னும் குற்றவுணர்ச்சிதான். சமயங்களில் அதிகப்படியோ என்று தோன்றுமளவுக்கு, வாழ்க்கையில் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பிடிவாதமாய் இருப்பவர்கள் ம.க.இ.க தோழர். ஒரு ம.க.இ.க தோழர் தனது திருமணத்தில் மொய் வாங்கிவிட்டார் என்பதற்காக அவர் மீது அமைப்பு நடவடிக்கை எடுத்த கதையெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் தோழர், தன் வாழ்க்கையில் சின்ன அரசியல் பரிசோதனை கூட நிகழ்த்தாத, பச்சைப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடித்து வரும் ஒருவரிடம் ‘பார்ப்பன எதிர்ப்பு’ குறித்துப் பதிவு வாங்கிப் போடுவது வெட்கமாக இல்லையா தோழர்? அதுவும் அந்த பதிவை ‘வினவு’ என்று உங்கள் பெயரிலேயே போடுகிறீர்களே, கேவலமாக இல்லையா தோழர்? லீனா பிரச்சினை போன்ற ஒருசில பிரச்சினைகளில் உங்களோடு முரண்பட்டாலும் தொடர்ச்சியாகப் பல சமயங்களில் உங்களை ஆதரித்து எழுதியிருப்பவன் நான். ’வினவு’ என்கிற இணையதளம் உருவாவதற்கு முன்னால் நீங்கள் பேசுகிற பல விஷயங்களை, எந்த கும்பல் துணையுமின்றி, தனியாக எழுதி எதிர்ப்புகளைச் சம்பாதித்தவன். இந்த வலையுலக வரலாறு தெரிய மீண்டும் சிவராமனிடம் சரணடைய வேண்டாம். அசுரன், ராஜாவனஜ் மாதிரியான தோழர்களிடம் கேட்டால் தெரியும். லீனா பிரச்சினைக்குப் பிறகு கூட யோபுராஜ் என்பவர் ’ம.க.இ.க மீது எழுத்தாளர்கள் பகைமையை அறிவிக்க வேண்டும்’ என்று எழுதியபோது கூட, ’இது பாசிச்ச்சிந்தனை’ என்று பின்னூட்டமிட்டவன் நான். இது உங்களிடம் கருணை கோருவதற்காகவோ, என் அரசியல் நேர்மையை நிரூபிப்பதற்காகவோ அல்ல, ஆதரவுச்சக்திகளை எவ்வளவுதூரம் நீங்கள் கேவலப்படுத்துகிறீர்கள், நயவஞ்சர்களிடம் ஏமாந்துபோகிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நர்சிம்மின் ஃபாரின் சரக்கிற்கு விலை போகிறவன் என்றால் இத்தனை ஆண்டுகாலம் பார்ப்பனீயம், இந்துத்துவம் குறித்து எழுதும்போதெல்லாம், ‘அரபிலிருந்து பணம் வருகிறது’ என்று இந்துத்துவவாதிகள் பின்னூட்டம் போடுவார்களே, அதற்கும் உங்களது மனநிலைக்கும் என்ன வித்தியாசம்? நர்சிம்மின் பார்ப்பனத்திமிர், ஆணாதிக்கத் திமிரை அம்பலப்படுத்த உங்களிடம் உண்மையிலேயே சொந்தமாகச் சரக்கு இல்லையா? ஏன் தோழர் அ.மார்க்சின் சிஷயப்பிள்ளை என்று என்னை எழுதுவதற்கு உங்களுக்குப் போயும் போயும் ஜெயமோகனின் சிஷ்யப்பிள்ளைதானா கிடைத்தார்? எப்படியிருந்தபோதிலும் ’லீனாமணிமேகலை எனக்குச் சரக்கு ஊற்றிக்கொடுத்து அடிவருடியாக்கினார்’ என்னும் வரலாற்றுப் பழியிலிருந்து என்னைக் காப்பாற்றிய உங்கள் அன்புக்கு நன்றி தோழர்.

நெகிழ்ச்சியுடன்
சுகுணாதிவாகர்.





42 comments:

சுகுணாதிவாகர் said...

குறிப்பு 1 : மேற்கண்ட பதிவு ’சிவராமன் எழுதியதில்லை’ என்று வினவு தோழர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை சிவராமனோ வினவோ அதை மறுத்தால் அதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார்.

குறிப்பு 2 : சிவராமன் குறித்து பதிவுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி வரும் பின்னூட்டங்களோ, வினவை எதிர்த்த அரசியல் காழ்ப்பு பின்னூட்டங்களோ அனுமதிக்கப்படாது.

ராம்ஜி_யாஹூ said...

ஆனால் ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நடந்த ஒரு அறமற்ற செயல் - இந்த வரியில் உங்களுடன் உடன் படுகிறேன்

ஆனால் நீங்களும் பெரும்பாலான பதிவர்கள் போல, உங்களை பற்றிய கருத்து, சுய விளக்கம், தன் முனைப்பு என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதுதான் வருத்தம் அளிக்கிறது.

ஒரு பொது பிரச்னை குறித்து எழுதாமல் (ஆண் ஆதிக்கம் மற்றும் சாதிய தாக்குதல் என்ற பிரச்னையை விட்டு விட்டு) அவரவர் சுய விளக்கங்களை பக்கம் பக்கமாக எழுதும் போதுதான் படிப்பதற்கு அயர்ச்சியும், எரிச்சலும் வருகிறது.

மங்களூர் சிவா said...

பெண் பதிவருக்கு செக்ஸ் டார்சர் கொடுக்க போட்டியாமே யார் யாருக்கு நான் டார்சர் செஞ்சேன்??

கிழிந்தது வினவின் / பைத்தியக்காரனின் சமூக அக்கறை

ஆதாரம் இல்லாமல் எழுதுவதற்கு பதில் மாமா வேலை பார்க்க போகலாம்.

மங்களூர் சிவா said...

வினவின் தளத்தில் நான் இட்ட கமெண்ட்டை என் தளத்தில் பதிவாகவும் இட்டுள்ளேன்.

இங்கும் பதிகிறேன்
- - - - - -

/
பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். ‘
/

நான் காதலித்த என்னை காதலித்த பெண்ணை தவிர யாரிடமும் அதிகம் பேசியது கிடையாது. வினவு ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் பெயரை சேர்த்தது ஏன் என நிரூபிக்கவும்.

குசும்பன் said...

//அட அரசியல் கருத்துக்களை விடுங்கள், குசும்பனின் பதிவுகளை எத்தனை முறை பின்னூட்டம் போட்டு பாராட்டியிருப்பீர்கள், //

சுகுணா இதுபற்றி தெரியவந்த பொழுது, சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டமாக இருந்தது!.

மின்னுது மின்னல் said...

பின்னுட்டத்தை மெயிலில் பெற

மணிஜீ...... said...

எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. அவர் மறுத்துவிட்டார். அது உண்மையென்றால் அவரிடம் சில கேள்விகள்.

நர்சிம் எது எழுதினாலும் , உங்கள் ஓட்டும் பின்னூட்டமும் இருக்கும். அது கூலிக்கு மாரடித்ததா?

சுகுணாவை ஆதாரம் கேட்டு உங்களால் பின்னூட்ட முடியுமா?

நீங்கள் பதில் சொன்னால் தொடர்கிறேன்

சுகுணாதிவாகர் said...

நண்பர் ராம்ஜி,

என்னைப் பற்றிச் சுயவிளக்கம் கொடுத்துத்தான் என்னை நிரூபிக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் அரசியல் விமர்சனம் செய்யாமல், அவதூறு பரப்புகிற சிவராமனின் இரட்டை வேடத்திற்குப் பின்னால் உள்ள வன்மத்தையும், மார்க்சிய அரசியலை விட இதுமாதிரியான தனிநபர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைத் தன் பதிவில் போட்டுக்கொள்கிற வினவின் அறமற்ற தன்மையையும்தான் அதிகம் பேசியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

தியாகு said...

சிவராமன் எழுதி கொடுத்த பதிவெல்லாம் போட்டு வினவு ஏன் அம்பலப்பட்டுகிறாங்கன்னு தெரியலை

மற்றபடி சுகுணா உங்களின் இந்த பதிவு
அருமை எனில் இதில் சிவராமனுடன் சேர்ந்து அம்பலபட்டு போனது வினவின்
போலி பெண்ணியம்

பார்ப்பான் said...

:-)

பார்ப்பான் said...

:-)

வெண்பூ said...

இந்த‌ பிர‌ச்சினையில் ப‌ல‌பேரோட‌ முக‌மூடிக‌ள் கிழிஞ்சிருக்கு.. அதைவிட‌ அதிக‌மா சிவ‌ராம‌னுட‌ன் ப‌ல‌பேர் வைத்திருந்த‌ ந‌ட்பும்... :(((((((((

..:: Mãstän ::.. said...

ஹ்ம்ம்ம்ம்...

என்ன சொல்லுறதுன்னு ஒன்னுமே புரியலை சுகுணா...

இந்த பதிவ படுச்சு முடிச்சவுடனே எனக்கு என்ன தோனுச்சுன்னா இங்கு யாருமே சுத்தம் கிடையாதுன்னுதான், எல்லாரும் நேரத்துக்கு தகுந்த்து போல் வேசம் போடும் நடிகர்கள்தான்.

சரி, சிவராமன் எழுதியை பற்றி தெரியாமல் இருந்தால் இப்படி பட்ட பதிவு வந்திருக்காதோ???

நான் நர்சிம்மின் பதிவுகளை படிப்பவன் இல்லை, சரி என்னதான் சந்தன முல்லையை பற்றி எழுதிவுள்ளார் என்று சென்றால், அந்த பதிவே இல்லை... நடந்ததை வைத்து ஊகுக்க முடிந்ததில், அனைத்து எழுத்தாளர்களும் ஜாதி ரீதியாக பிளவு படுகிறீர்கள். எப்படி இருந்தாலும் என்னதான் முற்போக்காக சிந்தித்தாலும் ஒரு சில விசயங்களில் கோட்டை விட்டு விடுகிறார்கள். ம்ம்ம்ம்....

<<<
நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பலபேர் உங்கள் அமைப்பை ஆதரிக்கக் காரணமே, ‘அவர்கள் களத்தில் நிற்கிறார்கள், நம்மால் முடியவில்லை’
>>>
நூற்றுக்கு நூறு மிகவும் உண்மையான வார்த்தை சுகுணா.

நான் உங்களின் எழுத்துகளை தொடர்ந்து படித்து வருபவன் சுகுணா, சிவராமன் எழுதியை பற்றி விட்டு விட்டு, தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

//ஆனால் தோழர், தன் வாழ்க்கையில் சின்ன அரசியல் பரிசோதனை கூட நிகழ்த்தாத, பச்சைப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடித்து வரும் ஒருவரிடம் ‘பார்ப்பன எதிர்ப்பு’ குறித்துப் பதிவு வாங்கிப் போடுவது வெட்கமாக இல்லையா தோழர்? அதுவும் அந்த பதிவை ‘வினவு’ என்று உங்கள் பெயரிலேயே போடுகிறீர்களே, கேவலமாக இல்லையா தோழர்?//


//நர்சிம்மின் பார்ப்பனத்திமிர், ஆணாதிக்கத் திமிரை அம்பலப்படுத்த உங்களிடம் உண்மையிலேயே சொந்தமாகச் சரக்கு இல்லையா? ஏன் தோழர் அ.மார்க்சின் சிஷயப்பிள்ளை என்று என்னை எழுதுவதற்கு உங்களுக்குப் போயும் போயும் ஜெயமோகனின் சிஷ்யப்பிள்ளைதானா கிடைத்தார்?//


நியாயமான கேள்விகள் சுகுனா..

//மேற்கண்ட பதிவு ’சிவராமன் எழுதியதில்லை’ என்று வினவு தோழர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். //

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் மணிகன்டன் என்பவருக்கு வினவு கீழ்கண்டவாறு பதிலளித்திருக்கிறது

//பைத்தியக்காரன் பெயரை தேவையில்லாமல் இழுப்பதில் என்ன உள்நோக்கமோ தெரியவில்லை. ஒன்று தெரிகிறது மணி, நீங்கள் பைத்தியக்காரனின் பதிவுகளையோ, வினவின் பதிவுகளையோ தொடர்ந்து படித்ததில்லை என்று தெரிகிறது. படித்திருந்தால் இருவரின் எழுத்து நடையைப்பற்றியும் அதில் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் தெரிந்திருக்கும். நீங்கள் வினவின் விமரிசனத்தை ஏற்கவில்லை என்றால் நேரடியாக தெரிவிக்கலாம். இப்படி சுற்றிவந்து தெவங்கி, தெவெங்கி ஓடி வரவேண்டியதில்லை.//

Anonymous said...

இது என்னவிதமான உலகம் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை... யாருக்கு உதவி தேவைப்படினும் ஓடிப்போய் செய்கிற, கண்ணியமான, பழகுவதற்கு அவ்வளவு இனிமையான நர்சிம் நரகலைப் போன்ற ஒரு கேவலமான வசவை பதிவிடுகிறார்... அதற்கு காரணமான முல்லை ஒரு உதாரணப பெண்மணி என்று அவர் பதிவுகளை பார்த்து முடிவு செய்திருந்தேன். நர்சிம்மை அவர் சீண்டிய சீண்டல்களும், ஆக்குட்டின் ஜாதி குழுமத்தில் உருப்பினாரகும் அளவுக்கு பிர்போக்கானவர் என்பதும் தெரிய வருகிறது....
கிழக்கில் நடந்த முதல் உலகப் படத் திரையிடலின் முடிவில் கூட்டத்தை விட்டு ஒதுங்கி நின்றிருந்த அறிமுகமே இல்லாத எனக்காக தேநீர் கோப்பையை ஏந்தியபடி வந்த சிவராமன் என்ற நபரின் அன்பில் நெகிழ்ந்திருக்கிறேன்..... அவர் இப்படி போலித்தனமாக ஒரு பக்க சார்பாக விஷத்தை உமிழ்கிறார்.... அடிப்படையில் நல்லவர்களாக இருக்கும் அனைவரும் எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும்.....? மனம் மிகவும் வேதனைக்குள்ளாகிறது.
-----செல்வம்.

Anonymous said...

Sreedharan from Sharjah Said,

Well Done Suguna!

In fact i would like to write with strong words against Sivaraman in his blog but as i have no google ID, i could not.

You replicated my views.

Sivaraman justified his name 'Paithiyakkaran'

மணிஜீ...... said...

நர்சிமின் தந்தையார் என்னவாக இருக்கிறார் முதற்கொண்டு , சாருவின் மனைவியின் ஜாதியை லிங்க் செய்து..வினவு என்ன தெகல்காவா ? அவங்க சும்மா லோக்கல் பார்ட்டிகள்தான். அப்ப யார் கறுப்பு ஆடு?

..:: Mãstän ::.. said...

சுகுணா, தயவுசெய்து சிவராமனை விமர்சித்து வரும் பின்னூட்டம் வெளியிடவேண்டாமே...

தனிமனித தாக்குதல் என்றும் வேண்டாம் :)

Anonymous said...

உன்னதம் இதழில் சந்தனமுல்லை எழுதியதாக சொல்லப்படும் மொழிபெயர்ப்பு கட்டுரைகளை எழுதியவரும் சிவராமன் என்பது படித்து பார்த்தால் புரிகிறது.

இலக்கிய வாதிகளும் இலக்கிய உலகமும் நாசமாக போகட்டும்.

மணிகண்டன் said...

I have asked vinavu directly on whether it was written by sivaraman and they said a categorical "No".

Anonymous said...

Sreedharan from Sharjah said,

I was more hurt when i saw Kusumban being victimized unnecessarily.
Think of the languagae that made him feel strongly and post a sorry in his blog.

We love Kusumban for his witty language that dilutes the burning issues but it is unfortunate that we got a post from him without any wit or fun.

Anonymous said...

சரியான சமயத்தில், சரியான வகையில் இந்த பிரச்சணையை அணுகியிருக்கிறீர்கள் சுகுனா... உண்மையில் இந்த பதிவு பல 'புரட்சிகர' மயக்கத்தை தெளியவைத்திருக்கிறது.

ஒருபக்கம் தங்களுக்கு எதிராக எழுதும் பெண்ணை 'அவ கெடக்குற தேவடியா' என்று பேசிவிட்டு இன்னொரு பக்கம் பெண்ணியத்திற்காக‌ ஓங்கி குரல் கொடுப்பது, பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசிக்கொண்டே, பச்சை பார்ப்பான்களிடம் சுமுகமான உறவை பேணுவது அவர்களிடம் பதிவு வாங்கி போடுவது, வன்னிய சாதி வெறி என்று எழுதிக்கொண்டே, வன்னிய சாதி பெருமை பேசும் ஒரு பெண்ணை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண் என்று பூடகமாக எழுதி கருணை கோருவது என பல தீவிர புரட்சிகளை செய்துகொண்டிருக்கும் புண்ணிய்வான்களை போட்டுடைத்திருக்கும் உங்கள் பதிவுக்கு எனது பாராட்டுக்கள் பல கோடி!!

ராஜன் said...

வினவு மீதான நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துவிட்டது. ஹிட்சுக்காக விபச்சாரம் செய்யவும் தயார் என்று நடுரோட்டுக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்கு ஏஜண்டாக சிவராமன் செயல்பட்டிருக்கிறார்.

Anonymous said...

பொய் சொல்வது யார் வினவா இல்லை சுகுணா திவாகரா.யாராக இருந்தாலும் இதில் பலர் அம்பலப்பட்டுப் போயிருப்பது நன்று.
ஒருவரைப் பற்றி இன்னொருவர் எழுதுவதை எந்த அளவு நம்புவது என்று தெரியவில்லை.சந்தன முல்லை இணையத்தில் ஆர்குட்டில் எங்கே உறுப்பினர், யாருடைய அப்பா எதில் உறுப்பினர் என்று உளவு வேலை பார்ப்பதில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.வலைப்பதிவரைப் பார்த்தால் தூர விலகு என்று சொல்லுமளவிற்கு உங்களில் சிலர் நடந்து கொள்கிறீர்கள்.

வால்பையன் said...

அது பைத்தியகாரன் எழுதியதாக இருந்தால்!


பல தவறான தகவல்களுடன் பதிவின் முக்கிய மையத்தை சிதைத்து விட்டார், தோள் கொடுத்த நண்பர்கலுக்கும் சேர்த்து அவப்பெயர்!,அவ்வளவு அறசீற்றம் உள்ளவர் சொந்த தளத்திலேயே அதை வெளியிட்டிருக்கலாம்!, அப்பொழுதும் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போலயே நாடகம் ஆட நினைத்திருக்கிறார்!

நர்சிம் தனது பதிவை புனைவு என்று நியாயபடுத்தும் முயற்சியும், வினவு தோளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் முயற்சியும் ஒன்றாக தான் எனக்கு தெரிகிறது!


நர்சிம்மிற்கு நான் தெரிவித்த அனைத்து கண்டனங்களையும், பைத்தியகாரனுக்கும் தெரிவித்து கொள்கிறேன்!


நீங்கள் தாக்கபட்ட காரணத்திற்காக பிரச்சனையின் மையத்தை நீங்களும் சிதைத்து விட வேண்டாம் தோழரே!, இரண்டு பார்பனர்களுக்குமே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது!

மணிஜீ...... said...

ஆயிரங்கள் இருந்தாலும் நான் நட்பை விட்டு கொடுக்க போவதில்லை. சிவராமன் செய்தது பச்சை துரோகம். நேற்று இரவு வழக்கமான மன நிலைமையில் நான் சிவராமனிடம் பேச நேர்ந்தது.அது என் தார்மீக கோபம்.அதற்காக வருந்தவும் செய்தேன். ஆனாலும் மனம் ஒரு நிலைக்கு வர முடியவில்லை.அழுத்தமாக பதிவு செய்கிறேன். நான் நர்சிமுக்குதான் ஆதரவு . ஜாதி முத்திரை வேண்டாம் ப்ளீஸ்...

Anonymous said...

லீனா அவ்வாறு கவிதை எழுதியதால்தான் நாங்கள் இவ்வாறு வக்கிரத்தைக் கேள்விகளாகக் கொட்டினோம் என்று வினவு கொக்கரிப்பதற்கும், மனது காயப்பட்டதால் எழுதிவிட்டேன் என்று நர்சிம் பம்முவதற்குமிடையில் ஒரு வேறுபாடுமில்லை. நர்சிமுக்குத் தனது ஆணாதிக்க வக்கிரத்தை வாந்தியெடுப்பதற்கு புனைவு முகமூடியென்றால் வினவுக்குத் தனது ஆணாதிக்க வக்கிரத்தை வாந்தியெடுப்பற்குப் புரட்சிகர முகமூடி. இதையே வினவுவின் மொழியில் சொன்னால், நர்சிம் செய்தது Rape. ம.க.இ.கவினர் செய்ததோ Gang Rape. குற்றங்கள் ஒன்றாயிருக்கும்போது ‘தண்டனை’களும் ஒன்றாயிருக்க வேண்டியதுதான் நியாயம். மறுக்கப்பட்ட நீதியைக் காட்டிலும் தாமதமான நீதி ஒன்றும் மோசமானதல்ல. பதிவுலகத் தோழர்கள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும்..(மேலும் படிக்க)

www.shobasakthi.com

சென்ஷி said...

:(

பைத்தியக்காரன் அவர்களை தன் மனதிற்கேற்ப நேர்மையாய் செயல்படுபவர் என்று நினைத்திருந்தேன். வினவில் பதிய(?!) வைத்த கருத்துகளை அவர் பதிவில் ஏற்றியிருக்கலாம்.

//நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பலபேர் உங்கள் அமைப்பை ஆதரிக்கக் காரணமே, ‘அவர்கள் களத்தில் நிற்கிறார்கள், நம்மால் முடியவில்லை’ என்னும் குற்றவுணர்ச்சிதான்.//

ஆமோதிக்கின்றேன்...

Anonymous said...

//நயவஞ்சர்களிடம் ஏமாந்துபோகிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.//

பார்ப்பன அடையாளங்களை இன்னும் விட்டொழிக்காத, பார்ப்பன பண்டிகைகளை எஸ்.எம்.எஸ் அனுப்பி கொண்டாடுகிற ஒரு பச்சை பார்ப்பானுடைய கிசு கிசு கட்டுரையை தன் பெயரில் வினவு பதிப்பித்திருப்பதை எப்படி நயவஞ்சகர்களிடம் ஏமாந்து போன ஒரு விசயமாக, இவ்வளவு எளிமையாக பார்க்கிறீர்கள் சுகுனா?

எல்லாருடைய ஜாதகத்தையும் நோண்டி எடுத்து இவர் அப்படிப்பட்டவராம், அவர் இப்படிப்பட்டவராம் என்று நொள்ளை பேசும் வினவு, பூணூலை கழற்றாத ஒரு பார்ப்பனரிடம் கட்டுரை வாங்கி, அதை வெளியில் தெரியாமல் தம்முடைய பெயரில் போடுகிறதென்றால் அது சாதரணமான ஒன்றா, அதனை நயவஞ்சகர்களிடம் ஏமாந்து போன நிகழ்வாக நாம் பார்க்க முடியுமா சுகுனா?

இடஒதுக்கீடு போன்ற விசயங்களில் தாம் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாடு காரணமாக பார்ப்பன தலைமை கொண்ட அமைப்பு என்று பலரால், குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌டும் ஒரு அமைப்பு இப்படி பார்ப்பன உறவை ஒரு பக்கம் வைத்துக்கொண்டிருக்கிறது என்றால், 'நெருப்பில்லாமல் புகையாது..' என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

பா.ராஜாராம் said...

இதில் குறிப்பிட்டுள்ள அரசியல் தெரியலை சுகுணா.

நர்சிமிற்கு நல்ல நன்பன் என்ற வகையில் சிவராமனை அறிந்து வந்திருக்கிறேன்.

(தமிழ்மண நட்சத்திர வாரத்தில் அவரின் இடுகை ஒன்றில் சுந்தர், நர்சிம் குறித்து சிலாகித்து இருந்ததை வாசித்து அறிந்தது மூலமாக.)

முல்லை விஷயத்தில் நர்சிம் நிதானம் தவறியபோது, நர்சிம்மை நிதானப் படுத்த எவ்வளவோ வழிகள் இருந்தும் (நல்ல நண்பனாக) செய்ய தவறிய சிவராமன் மேல் முதல் மரியாதை குறைவு ஏற்பட்டது.

பிறகு, தொடர்ச்சியாக நர்சிம் மேலான வன் பாய்ச்சல் பார்த்து மிரண்டு போய் விட்டேன்.

தாங்கவே முடியாத வலி நம்பிக்கை துரோகம் சுகுணா.

அதுவும் நண்பனிடம் இருந்து கிடைக்கிற நம்பிக்கை துரோகம்.

நர்சிம்,

முல்லை விஷயத்தில் நிதானம் தவறியது போலவே, நட்பை தேர்வதிலும் தவறு செய்திருக்கிறீர்கள்.

சுந்தர்,

முழிச்சுக்கோடா...

எறும்பு said...

for Followup comment

கென்., said...

நண்பர் பைத்தியக்காரனின் இந்த செய்கை தெரிவதற்கு முன்பே அவரின் இடுகைக்கும் வினவுக்கும் அவரிடம் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.

நன்றி சுகுணா மிக மிக தேவையான இடுகை சிவராமனை என்னால் சக நண்பனாக இனி எப்போதும் யோசிக்க முடியாது :(((((((

மணிகண்டன் said...

சுகுணா, இந்த சமயத்தில் முல்லை ஜாதி குழுவில் மெம்பராக இருக்கிறார் போன்ற கிசுகிசு பாணி எழுத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தேவையற்ற character assasination. எனது கண்டனங்கள்.

V.Radhakrishnan said...

சார், நீங்க ஆதாரத்தை வெளியிட்டுவிடுங்கள். அந்த ஆதாரம் உண்மையானதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

திருடன் எப்போதும் தன்னை திருடன் என ஒப்புக்கொள்வதில்லை. இருப்பினும் எங்களைப் போன்றோருக்கு அந்த ஆதாரம் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் நான் எவரையும் அத்தனை எளிதாக பகைத்து கொள்ள விரும்புவதில்லை. சந்தர்ப்ப சூழலில் தவறிவிட்டான், பிழைத்துப் போகட்டும் எனும் கொடிய எண்ணம் எனக்கு உண்டு.

எனக்கு சிவராமன் மேல் உரையாடல் அமைப்பு நடத்துகிறார் எனும் காரணத்திற்காகவே தனி மதிப்பு உண்டு.

அவர் எழுதிய இடுகையை நேற்று படித்து அவரை பல கேள்விகள் கேட்க வேண்டும் என நினைத்தேன். ஏனோ மனம் இடம் கொடுக்கவில்லை. விழலுக்கு இறைத்த நீர் என நினைத்துவிட்டேன்.

இதுபோன்ற இழிநிலை மனிதர்களுடன் உறவாடுவது தவறு என புரிந்த அடுத்த கணத்தில் எவரெல்லாம் இழிநிலை மனிதர்கள் என எப்படி அடையாளம் காண்பது? எனும் கேள்வியும் வந்து சேர்கிறது.

தப்பித்தேன் என சந்தோசம் கொள்வதா? என்றாவது இது போன்ற நண்பர்களால் முதுகில் குத்தப்படுவேன் என அழுவதா?

நன்றி. பட்டு தெளியும் முன்னர் பல படித்து தெளிந்து கொள்கிறேன்.

Chellamuthu Kuppusamy said...

தல... இதெல்லாம் டிஆர்பீ ரேட்டிங்க காப்பாத்திக்க நடக்கற முயற்சிகளோ என சந்தேகிக்க இடமிருக்கா? (ச்ச்சும்மா) இனியும் ஏதாச்சும் மொசக் குட்டி வெளிய வருமா பாஸ்?

கோவி.கண்ணன் said...

ஸப்பா.....கண்ணைக் கட்டுதே.....எல்லா வற்றையும் கொட்டியதற்கு பாராட்டுகள் சுகுணா...இனி 'பொறுக்குபவர்கள் பொறுக்கிக்' கொள்ளட்டும்

கோவி.கண்ணன் said...

//அவ்வளவு ஏன், டோண்டுராகவன் கூட பார்ப்பனர்களைப் பார்ப்பனர்கள் என்று எழுதுகிறவர். ஆனால் பார்ப்பனர்களைப் ‘பிராமணர்கள்’ என்று எழுதுகிற ’புரச்சிகர’ப் பார்ப்பான் நீங்கள்.//

ஐ லைக் திஸ்.... நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே.

Anonymous said...

லீனா விசயத்தில் அசுரன் உங்களுக்கு எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லிய பிறகே வினவை நீங்கள் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது.

மிஸ்டர் மிஸ்டேக்

Karthikeyan G said...

Wow!!! Atlast You have found a great way to unhook Narsim form shameful controversy. :(

Anonymous said...

சிவராமனையோ அல்லது வினவுடன் உங்களது முரன்பாட்டையோ எப்போது வேண்டுமானாலும் தீர்த்திருக்கலாம்(அம்பலப்படுத்தியிருக்கலாம்). ஆனால், இப்போது ஆணாதிக்கத்தையும், நர்சிம்மையும் எதிர்க்கும் மொத்த மனவுணர்வை திசை திருப்பும் வகையில் இதனை பதிய வேண்டிய அவசியமென்ன?

வெற்றிகரமாக வினவை (மீண்டும்), மற்றும் சிவராமனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியாகிவிட்டது. கோவி. கண்ணனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இதைத்தானடா எதிர்பார்த்தேன் என்று சிரிக்கிறார்.

சுகுணா தனது கருத்தைப் பதிவு செய்யவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக யாராலும் முன் வைக்கப்படவில்லை. அது அரசல் புரசலாகவே பேசப்பட்டது. இந்தப் பதிவை சிறிது தாமதமாக இட்டிருந்தாலும் தவறில்லை. சுகுணா நர்சிம் பிரச்சினையில் சீரியஸாக இருந்திருப்பால் எனில் இந்த ரசல் புரசலை பிறகு நிதானமாகவே அனுகியிருப்பார்.

வினவு அல்லது 'பைத்தியக்காரனது வினவு' பதிவில் சொல்லியுள்ள மையமான கருத்துக்கள் குறித்து சுகுணாவின் எதிர்வினை இருக்கும் என்ற பார்த்தால்

இப்படி மொன்னையாக எழுதியுள்ளார் சுகுணா

//‘இதுமாதிரியான பதிவர்கள் திரட்டியில் இருந்தால் பெண் எழுத்தாளர்கள் இருக்க முடியாது’ என்றால் திரட்டியை விட்டு அனுப்பிவிட்டால் மட்டும் அது சரியாகிவிடுமா, என்ன? தொடர்ச்சியாக இத்தகைய ஆண் திமிர், அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் அதை அம்பலப்படுத்தி எழுதுவது ஒன்றுதான் சரியான வழி. //

நர்சிம்மை அம்பலப்படுத்தி நீங்கள் ஏன் இதுவரை எழுதவில்லை? எழுதிய ஒரு பதிவுக்கும் ரிஷி மூலம் தேடுவதை பிரதான வேலையாக எடுத்துக் கொண்டது ஏன்?(ரிஷி மூலம் தேடுவது அம்பலப்படுத்துவது தவறில்லை)

முதலில் நர்சிம்மை கண்டித்து செயல்படுங்களய்யா, பிறகு அதனை ஒட்டி நிகழ்ந்த பிற உள்குத்துக்களை பேசுங்கள். நர்சிம்மை சும்மா சம்பிரதாயமாக கண்டிப்பது ஏன்?

கே.ஆர்.பி.செந்தில் said...

கடைசியில் பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது...

தமிழ் சினிமாவின் மொக்கை திரைகதைகளை மிஞ்சும் நாடகம் அரங்கேறி தொடர்கிறது ..

திருந்தவே மாட்டீங்களா நீங்க?

கோவி.கண்ணன் said...

//வெற்றிகரமாக வினவை (மீண்டும்), மற்றும் சிவராமனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியாகிவிட்டது. கோவி. கண்ணனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இதைத்தானடா எதிர்பார்த்தேன் என்று சிரிக்கிறார்.//

அண்ணே பெண்ணியம் என்று பிரச்சனை கிளப்பியதில் பெண்ணியமும் இல்லை வெங்காயமும் இல்லை. சந்தனமுல்லையின் சாதியையும், நர்சிம்மின் சாதியையும் அம்பலப்படுத்தப்பட்டு பிரச்சனையை ஊதியவர்கள் அம்மணாகிக் கிடக்கிறார்கள். இதுல எனக்கு மகிழ்ச்சின்னு எதை வைத்து சொல்கிறீர்கள் ?