Sunday, November 4, 2007
வீரவணக்கம்!
ஆதிக்கச்சாதி நாய்கள் இன்னொரு சாதிவெறியனின் காலையே நக்கித் திரிவார்கள் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. சாதிவெறியும் இந்துமதத்திமிருமுடைய முத்துராமலிங்கம் என்னும் கேடுகெட்ட தேசவெறியனுக்கான நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடிய கருணாநிதி அரசு, கருணாநிதிக்கு கலைஞர் என்னும் பட்டத்தை வழங்கிய கலகக்கலைஞன் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டுவிழாவைப் புறக்கணித்திருக்கிறது. அடுத்தாண்டு கலைவாணர் என்.எஸ்.கேவின் நூற்றாண்டுவிழா. அதுவும் கொண்டாடப்படுமா அல்லது வேறு ஏதாவது சாதித்தலைவனின் நூற்றாண்டு வருமாவெனத் தெரியவில்லை. கொலைகாரனும் சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாகய உணர்வற்றவனுமான முத்துராமலிங்கம் திருவுருவாக்கப்படும் இப்போதில் அவனை எதிர்த்து கொலையுண்ட தோழர். இம்மானுவேல் குணசேகரனையும் எதிர்வரும் நவம்பர் 26ல் சாதியொழிப்பிற்காய் அரசியல்சட்டத்தைக் கொளுத்தி சிறைசென்ற போராளிகளையும் நினைவுகூர்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நீங்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றீ முழுமையாக அறியவில்லை என் நினைக்கிறேன்,, தேவர் சமுதாய மக்கள் அவரை தங்கள் தலைவராக காட்டிக்கொண்டாலும். தேவர் அவர்கள் தன்னை அவ்வாறு காட்டிக்கொள்ளவில்லை..
ஒரு வேளை, இது கருணாநிதி மீதான வெறுப்போ???
பி கு. நான் தேவர் இனம் இல்லை.. ஆனால் தேவர் பற்றி படித்துள்ளேன்.. ஆகவே சொல்கிறேன்..
//சாதிவெறியும் இந்துமதத்திமிருமுடைய முத்துராமலிங்கம் என்னும் கேடுகெட்ட தேசவெறியனுக்கான//
True
சுகுணா,
மிக முக்கியமான ஒரு விஷயத்தினன பேசி இருக்கிறீர்கள். தேவர் திருவிழா என்ற பெயரில் சென்னையில் அடிக்கப்பட்ட கூத்துகள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விரிவாக எழுதுங்கள். இந்த தேவர் ஜெயந்திக்கு முதல்வரும் போனது மிகுந்த வருத்தத்திற்குரியது. இம்மானுவேல் குணசேகரனை பற்றி வலைப்பதிவர்கள் அறிய ஒரு குறிப்பு எழுதுங்கள். மிகவும் அவசியம் மற்றும் முக்கியமான காலத்தில் நாமிருக்கிறோம்.
கலைஞர் என்ன அய்யங்காரா?
ஆதிக்க சாதின்னு சொல்றதுக்கு.
இங்க நடக்குறது எல்லாமே ஓட்டு அரசியல் தான.அப்புறம் எதுக்கு கலைஞர மட்டும் குறிப்பிட்டு திட்டுற.
உனக்கு கோபம் முத்துராமலிங்கம் மேலயா? இல்ல கலைஞர் மேலயா?
விதண்டாவாதம என்னத்தையாவது எழுதனும்னே எழுதுவியா?
ஒவ்வொரு வருடமும் இந்த சாதிவெறி பிடித்த மிருகத்தின் திருவிழாவின்போதும்
30 வருசமா நான் மட்டும் தான் தவறாம சமாதிக்கு போறேன்னு கரடியா கத்துறானே வைகோ என்கிற இழிபிறவி
அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?
இல்ல, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக நான் பாப்பாத்தி, நடப்பது முக்குலத்தோர் ஆட்சி என்று சொல்லாமல் சொன்னாளே ஜெயலலிதா
அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?
விஜயசாந்தி, செந்தில்,உன்ன மாதிரி ஆளுகளுக்கு கலைஞர் மட்டும்னா குண்டி தொடச்ச காகிதம் மாதிரி தெரியுது.
தோழர்,
இம்மாணுவேல் சேகரன் என்னும் அந்த போராளிக்கு என் வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன், முத்துராமலிங்கனை சாடிவந்திருக்கும் இந்த சாட்டையடி பதிவுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.,
ஸ்டாலின்
ராதாவுக்கும், கலைவாணருக்கும் இவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாடி அசிங்கப்படுத்தாமல் இருப்பது நிம்மதியாக இருக்கிறது...
அவர்களை நினைவில் வைத்திருக்க அவர்கள் எவ்வளவோ விட்டுச்சென்றிருக்கிறார்கள்...அது போதும்
ஆமாம் சுகுணா, இவர்கள் எம்.ஆர் இராதவுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி அசிங்கப்படுத்தாமல் இருந்தார்களே அதுவரைக்கும் நாம் மகிழ்ச்சிதான் அடையவேண்டும், இல்லாவிட்டால் கலைவானர் அரங்கில் பகத்சிங்குக்கு ஏற்பட்ட கதிதான் எம்.ஆர்.இராதவுக்கும் ஏற்பட்டிருக்கும்.,
இரண்டு நாட்களுக்கு முன்பாக "காலத்தின் கலைஞன் எம்.ஆர்.இராதா" என்ற நூலை உயிர்மை கம்பெணி வெளியிட்டது, சீமான், பாமரன், சிவக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். "பார்ப்பான் பார்பனீயம்" என்ற சொற்கள் கூட உச்சரிக்கப்படாமல் எம்.ஆர்.இராதவினை பற்றிய நூல் வெளியீட்டு விழா இனிதே நடந்தேறியது., இப்படித்தான் இருந்திருக்கும் அரசு விழாவும்..
Post a Comment