Sunday, December 23, 2007

ங்கோத்தாபாடு, யோனி மற்றும் சில கெட்டவார்த்தைகள்....

சமீபத்தில் என் எழுத்துக்களைப் பற்றி எழுதும்போது 'சுகுணாதிவாகரின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்தால் புதிதாக ஒரு கெட்டவார்த்தையைத் தெரிந்துகொள்ளலாம்' என்று ஒரு நண்பர் 'பாராட்டி' எழுதியிருந்தார். ஆகமொத்தம் என் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து படித்தால் கெட்டவார்த்தைகளுக்கான அகராதியை உருவாக்கிவிடலாம். ((-.

அகராதி என்றதும் நினைவுக்கு வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழ் அகராதியைத் தொகுக்கும் வேலையில் நானும் சில நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். க்ரியாவின் தமிழ் அகராதிக்குப் பிறகு உருப்படியான அகராதி தமிழில் கிடையாது க்ரியா அகராதி வெளியாகியே பதினைந்து வருடங்களிருக்கும். இந்தப் பதினைந்து வருடங்களுக்குள் பின்நவீனம், கட்டவிழ்ப்பு, விளிம்புநிலை, மறுகாலனியாதிக்கம் போன்ற பல சொற்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றையெல்லாம் அகராதியில் கொண்டுவருவது எங்கள் நோக்கமாயிருந்தது.

இத்தோடு தமிழின் கெட்டவார்த்தைகளையும் அகராதியில் கொண்டுவரலாமென்றிருந்தோம். ஏனெனில் கெட்டவார்த்தைகள் வட்டாரத்தன்மையுடையனவாகவிருக்கின்றன. ஙோத்தா என்றால் தஞ்சை திருச்சி வட்டாரங்களில் உங்கம்மா என்று அர்த்தம். ஙோத்தாவைப் பற்றித் தெரியாதா என்றால் உங்கம்மாவைப் பற்றித் தெரியாதா என்று பொருள்.

இதுவே மதுரையில் ங்கோத்தா என்பது உச்சபட்ச கெட்டவார்த்தை. ங்கோத்தா, தேவடியாமகன் என்று ஒருவர் அழைத்தால் கொலை விழுவதற்கான சாத்தியங்களும் உண்டு. குறைந்தபட்சம் அடியாவது உண்டு. ஆனால் சென்னையில் பதினைந்து வயது சிறுவன் கூட அறுபது வயது கடைக்காரரை 'ஙோத்தா, சிகரெட் இல்லையா' என்பான். ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவிருந்தாலும் போகப்போக 'ங்கோத்தா' பழகிப்போனது.

இப்படியாக கெட்டவார்த்தைகளை அகராதியில் கொண்டு வரும் முயற்சியில் எங்களுக்குப் பெரும் சவாலாயிருந்தது 'பாடு' என்னும் சென்னைக்கேயுரிய கெட்டவார்த்தை. பொதுவாக பெரும்பாலான கெட்டவார்த்தைகள் பெண்களை வசைபாடுபவையாகவோ, அல்லது பெண்களுடன் தொடர்புள்ளவையாகவோ இருக்க பாடு மட்டும் முழுக்க ஆணுக்கான வசைச்சொல்லாகவே விளங்குகிறது. பாடு என்றால் மாமாக்கார பையன் என்று பொருள்.

ஆனால் தமிழில் இந்தியைப் போல B ஓசை, f ஓசை உள்ள எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகக்ள் கிடையாது. ஓசையைக்குறிக்கவாவது முன்னால் ஃ போட்டு எழுதும் வழக்கமுள்ளது. உதாரணம் :ஃ பாருக்,ஃ பாத்திமா. ஆனால் B ஓசையில் தொடங்கும் சொல்லுக்கு அதுவும் கிடையாது. எனவே B ஓசை உடைய சொல்லை எழுதுவதற்காக ஒரு குறியீடு அவசியமென்று உணர்ந்தோம். ஆனால் அந்த அகராதி வேலை பாதியிலேயே நின்று போனதால் மேற்கொண்டு தொடரமுடியவில்லை.

வைரமுத்துவின் ரசிகனாயிருந்த என்னை நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி நவீன இலக்கியக்களத்திற்கு அழைத்துவந்தவர் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரும் அதிகாரமற்ற நண்பனுமாகிய யவனிகாசிறீராம். அவரது முதல் கவிதைதொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு பேருந்கில் பயணம் செய்யும்போது பக்கத்திலிருந்தவர் என்னை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே வந்தார்.

பிறகுதான் காரணம் விளங்கியது. நூலின் பெயர், 'இரவு என்பது உறங்க அல்ல'. அவருக்கு அது ஏதோ மலையாளப் பட டைட்டிலைப் போலத் தெரிந்திருக்க வேண்டும். (இப்படித்தான் எமர்ஜென்சிக் காலத்தில் இந்திராகாந்தி இந்தியர்களின் அத்தியாவசியக் கடமைகளை நினைவூட்டுவதற்காகப் பல முழக்கங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றிலொன்று 'பேச்சைக்குறை உற்பத்தியைப் பெருக்கு'. பின்னால் ஒரு மலையாளப் படத்திற்கு அவ்வாக்கியமே டைட்டிலாக வைக்கப்பட்டது.)

நான் நவீனக் கவிதைகளை எழுதும்போதே கெட்டவார்த்தைகளுடன்தான் தொடங்கினேன். இத்தனைக்கும் அப்போது வானம்பாடிக்கவிஞர்களைத் தாண்டி வாசிப்பு கிடையாது. ஆனால் கெட்டவார்த்தைகளைக் கவிதைகளில் பயன்படுத்துவதில் எனக்குத்தயக்கமிருந்ததில்லை. ஒருமுறை கலை இலக்கியப்பெருமன்றம் திண்டுக்கல்லில் தலித்தியக் கவியரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது கார்கில் போர் நடந்துகொண்டிருந்த சமயம். செய்தித்தாள்களைப் போர்ச்செய்திகளே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. ஒருநாள் மாலைமலரில் ஒரு செய்தி, உத்திரப்பிரதேசத்தில் ஒரு தலித்பெண்ணைப் பதினாலு யாதவர்கள் நடுவீதியில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையில் எந்த செய்தித்தாளிலும் அந்தச் செய்தி இடம்பெறவில்லை. மீண்டும் கார்கில் சாகசச்செய்திகள்.

இந்த இரு செய்திகளையும் தொடர்புபடுத்தி நான்லீனியராக ஒரு கவிதையொன்றை வாசித்தேன். இந்தியாவையும் பாரதமாதாவையும் கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்கும் கவிதை. ( அந்தக் கவிதையை எங்கு எப்போது எழுதினாலும் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்படும் அபாயமுண்டு) 'தோழர்கள்' திகைத்துப்போனார்கள். அதன்பின் கலை இலக்கியப் பெருமன்றக்கூட்டங்கள் எனக்கு அழைப்பு அனுப்பப்படாத ரகசியக்கூட்டங்களாக நடக்கத்தொடங்கின.

எனது கவிதைத்தொகுப்பைக் கொண்டு வருவதென்று முடிவு செய்தபோது நான் வைத்தபெயர் 'யோனியில் முளைத்த குறுவாள்'. ஆனால் நூலுக்கு நூலக அனுமதி கிடைக்காது என்று யவனிகா 'விலா எலும்பு' என்று பெயர்வைத்தார். நானோ கடைசியில் தீட்டுப்பட்ட நிலா என்று பெயர் வைத்தேன். (அப்படியும் நூலக அனுமதி கிடைக்கவில்லை என்பது வேறு விசயம்)

திண்டுக்கல்லில் பேருந்து நிலையப் புத்தகக் கடைகள் பழக்கமானவை என்பதால் கவிதைத்தொகுப்பை விற்பனைக்குக் கொடுத்திருந்தேன். கெட்டவார்த்தைகள் அதிகமுள்ள அந்நூலை யாரோ ஒரு அப்பாவி வாங்கியிருக்கிறார். பேருந்தில் ஏறுவதற்கு முன்பு புத்தகத்தைப் பிரித்து ஒன்றிரண்டு கவிதைகளை வாசித்திருக்கிறார். நூலின் விலை முப்பது ரூபாய். அலறியடித்து புத்தகக்கடைக்கு ஓடிவந்தவர், 'புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், எனக்குப் பத்து ரூபாய் தந்தால் போதும்' என்றிருக்கிறார்.

இப்போது கெட்டவார்த்தைகள் குறித்து சில யோசிப்போம். பெண்கவிஞர்கள் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவதா என்று தமிழ்க்கலாச்சாரக்காவலர்கள் கொதித்துப்போன செய்தி நமக்குத் தெரியும். உதாரணமாக சல்மாவின் 'எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி' என்னும் வரி. ஆனால் கவிதைகளில் பயன்படுத்தப்படும் பல கெட்டவார்த்தைகள் கெட்டவார்த்தைகள் என்றே வெகுமக்கள் அறியமாட்டார்கள் என்பது வேடிக்கை.

உதாரணமாக யோனி என்னும் வார்த்தை சாதாரண தமிழ் ஜனங்களுக்குத் தெரியாது. யோனிக்குப் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் நேரடி வார்த்தைகளைக் கவிதையில் பயன்படுத்தினால் கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்வார்கள்? தெரியவில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் யோனி என்னும் வார்த்தையின் அர்த்தமே தெரியாமல் பயன்படுத்தப்படும் தளம் ஜோதிடம்.

என் அப்பா என் அண்ணனுக்கு சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்திருப்பார். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் அழிந்துபோன அத்திப்பட்டியைத் தவிர அனைத்து ஊர்களிலும் பெண் பார்த்திருப்பார். அப்போது அவர் அடிக்கடி கூறும் வாக்கியம், 'யோனிப்பொருத்தம் சரியில்லை' என்பது. எனக்கு ஆச்சரியமாயிருக்கும் யோனியின் அளவு ஜோசியக்காரனுக்கு எப்படித் தெரிந்தது என்று.

உண்மையில் கெட்டவார்த்தைகளைப் படைப்புகளில் பயன்படுத்துவது கலகபூர்வமானதுதானா என்றால் ஒரு வகையில் ஆம் என்றாலும் இன்னொரு வகையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்பே கூறியது போல தமிழின் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்துபவை. மேலும் FUCK என்கிற வார்த்தைக்குத் தமிழில் பயன்படுத்தப்படும் கெட்டவார்த்தைகளையோ அல்லது 'போடுவது' மாதிரியான குறியீட்டுச் சொற்களையோ எடுத்துக்கொண்டால் ஒரு உண்மை விளங்கும்.

இவ்வார்த்தைகள் அனைத்தின் சாரம் : பாலியல் உறவில் ஆண் இயங்குகிறான், பெண் ஏற்றுக்கொள்கிறாள். எனவே இவ்வகையான கெட்டவார்த்தைகள் பெண்ணுக்கு நீதி செய்யவில்லை. பாலுறவு என்பது இருவரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுச்செயற்பாடு என்பதைமறுத்து, பெண்ணுடலை பாலியல் செயற்பாட்டுக்கான கருவியாகவே பார்க்கும் ஆண்மய்யப்பார்வையையே கொண்டுள்ளன. முட்டாள், கிறுக்கு என்றெல்லாம் ஆரம்பிக்கும் கெட்டவார்த்தைகள் பெண்ணுறுப்பையே திட்டுகின்றனவே அன்றி ஒரு சொல்லும் ஆணைத் திட்டுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

16 comments:

குசும்பன் said...

///'யோனிப்பொருத்தம் சரியில்லை' என்பது. எனக்கு ஆச்சரியமாயிருக்கும் யோனியின் அளவு ஜோசியக்காரனுக்கு எப்படித் தெரிந்தது என்று.///

அதன் மேல் உள்ள ஈர்ப்பால் ஜோதிடம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கேட்டபொழுது நிறைய விளக்கம் கொடுத்தார், இந்த ஜாதககாரணுக்கு குறி இப்படி இருக்கும் யானை போன்ற அவன் முயல் போன்ற பெண்ணுடன் சேர முடியாது அவர்கள் தாம்பத்யம் சிறக்காது என்றார். அது போல் பல விளக்கம் கொடுத்தார்.
பின்பு காமசூத்திரம் படித்தபொழுதும் இதுபோல் ஆணை சில மிருகங்களோடும் பெண்ணை சில மிருகங்களோடும் ஒப்பிட்டு இந்த வகை பெண்களுக்கு இதுபோல் ஆண் என்று எல்லாம் சொல்லி இருந்தது! ஆகையால் ஏதோ எங்கயோ ஜோதிடத்துக்கும் இதுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது போல்:)))

திட்டுவது என்றால் வாஸ்த்யானரை திட்டவும்:) நான் ஒரு வாசகன் மட்டுமே!!!

களப்பிரர் - jp said...

ங்கோத்தா,

கலக்கிட்டப்பபா !! சூப்பர் !

பொண்ணுங்க கிட்ட கேட்டா, பசங்கள மய்யமா வச்ச அர்ச்சனை வார்த்தைகள் கிடைக்கும்னு நினைக்கிறேன்...

Muruganandan M.K. said...

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். உண்மையில் சொற்களுக்கான அர்த்தம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது என்பது உண்மை. மயிர் என இலங்கையில் சொன்னால் முடி என அர்த்தம். ஆனால் தமிழ் நாட்டில் இச் சொல்லைப் பயன்படுத்திய போது நான் கேவலப்பட்டேன். அதே போல யோனி என்பது விஞ்ஞானத் தமிழ்க் கலைச் சொல். என்பதும் உண்மையே

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கெட்ட வார்த்தைகள் விலக்கிவைக்கப் பட்டவையாக இருந்த போது அவற்றைப் புனைவுகளின் உபயோகிக்க வேண்டியு ஒரு காலக் கட்டாயம் இருந்தது.

இப்போது அத்தேவை பெரும்பாலும் நிறைவேறி விட்டதால் அத்தகைய கெட்ட வார்த்தைகளில் உள்ள ஆண் மைய்யப் பார்வைகளை விமர்சிக்க வேண்டியுள்ளது.

பால் வேறுபாடுகளற்ற மொழியை உருவாக்க முடிந்தால், பால் வேறுபாடுகளற்ற கெட்ட வார்த்தைகளை உற்பத்தி செய்ய முடியும். இப்போதைக்கு, ஆண்களைக் கேலி செய்யும் பாடு, கேனப் பூலு போன்ற வார்த்தைகளைப் புனைவுகளில் உபயோகிக்க முயற்சிக்க வேண்டும்.

PRABHU RAJADURAI said...

குறுநகை தவழ வைக்கும் பதிவிற்கு நன்றி!

தமிழ்நாடோ, வடநாடோ இல்லை அமெரிக்காவோ...தாயையும் தமக்கையையும் வம்பிற்கிழுப்பது பொதுவான மனித குணமாக தெரியவில்லை.

மனைவியை இந்த அளவிற்கு இழுக்காததற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்?

PRABHU RAJADURAI said...

குறுநகை தவழ வைக்கும் பதிவிற்கு நன்றி!

தமிழ்நாடோ, வடநாடோ இல்லை அமெரிக்காவோ...தாயையும் தமக்கையையும் வம்பிற்கிழுப்பது பொதுவான மனித குணமாக தெரியவில்லை.

மனைவியை இந்த அளவிற்கு இழுக்காததற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்?

லக்கிலுக் said...

ரசித்துப் படித்தேன் :-)

'டாபரு' என்ற வார்த்தை கெட்டவார்த்தையா? நான் பள்ளிப் பருவத்தில் 'ஓத்தா'க்கு அப்புறமாக அதிகமாக பயன்படுத்திய வார்த்தை.

நல்ல கட்டுரைக்கு நன்றி!!!

புரட்சி தமிழன் said...

பேமானி,
மொல்லமாரி,
போன்ற வார்த்தைகளும் ஆண்களை மட்டுமே குறிப்பவைதான்

Anonymous said...

யோனிக்குள்
துருத்தியது
எதுவோ?
லிங்கம்
என்றால்
கும்பிடுகிறான்
பக்திகதை
கேட்கிறான்.
யோனிக்குள்
துருத்தியது
ஆண்குறி
என்று
கவிதை
எழுதினால்
கழிசடை
என்கிறான்.

Anonymous said...

இந்த்துவாவை
விமர்சித்தால் மட்டும் போதுமா.தஸ்லிமாவை வெளியேற்ற கம்யுனிஸ்ட் கட்சியை, அவர்
உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள இஸ்லாமிய அமைப்புகளை அ.மார்க்ஸ் கண்டிக்காததன்
ரகசியம் என்ன?

Anonymous said...

ennappa tamilmurasu .... unakku indian languagela irukkira ella ketta varthaiyum theriyumame? unmaiya?

Enbee said...

Super!

வவ்வால் said...

//முட்டாள், கிறுக்கு என்றெல்லாம் ஆரம்பிக்கும் கெட்டவார்த்தைகள் பெண்ணுறுப்பையே திட்டுகின்றனவே அன்றி ஒரு சொல்லும் ஆணைத் திட்டுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.//

இப்போது நீங்கள் சொல்ல வருவது தமிழில் கெட்ட வார்த்தைகள் எப்படி அதன் பொருள் என்ன என்றா இல்லை ஆணைக்குறிக்கிறதா பெண்ணைக்குறிக்கிறதா? என்று கேள்விக்கேட்கும் நோக்கமா? தெளிவாக இல்லையே உங்கள் பதிவு?

ஆணைக்குறித்தும் இழி சொற்கள் உண்டே,
பொட்டை, ஒம்போது, அலி என்ரெல்லாம் சொல்வார்களே.

அலி என்றால் உருதில் நெருப்பு/உண்மை என்று அர்த்தம் , அதை எப்படி இழிவான சொல்லாக பயன்ப்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை.

நீங்கள் தமிழின் கெட்ட வார்த்தைகளை யும் அகராதியில் சேர்க்க வேண்டும் என்று செயல்ப்பட்டவர் எனில் வித்தியாசமான முயற்சி என்றே சொல்வேன்,(ஆங்கிலத்தில் "slang dictionary" என கொச்சை வார்த்தைகளுக்கு உண்டு) ஆனால் அப்படி முயற்சித்தமை உங்கள் எழுத்துக்களில் காணப்படவில்லை!

ங்கோத்தா என்றால் தஞ்சை திருச்சியில் யார் உங்க அம்மா என்று உங்களுக்கு அர்த்தம் சொன்னார்கள்?

ஏன் அந்த வார்த்தை கெட்ட வார்த்தையாக பிரயோகிக்கப்படுகிறது என தெரியாமலே நீங்கள் அகராதிப்போட போனீர்களா? :-))

ங்கோத்தா என்றால் "உங்க அம்மாவை ஒழுத்தா"... என்று சொல்வதன் சுருக்கம், அப்புறம் அது கெட்ட வார்த்தை ஆகாமல் என்னவாக இருக்கும்.

பல கெட்டவார்த்தைகளின் வீரியம் தெரியாமலே சகஜமாக "fuck" என்று சொல்லும் எமோஷனல் வார்த்தையாக பயன்ப்படுகிறது அதே போல பல சாதாரண வார்த்தைகளும் கெட்ட வார்த்தை என்று பயன்ப்படுத்தப்படுகிறது.

பின்னூட்டங்களில் சிலர் சொன்ன வார்த்தைகளின் மூலத்தை சொல்கிறேன்.

டாபரு என்றால் டாஃபர் மேன் டாக் என்ற அர்த்தத்தில் நாய் என்று சொல்ல சுருக்கமாக சொன்னது.

பேமானி என்பது பேய் மானி ... மனிதாபிமானி என்று சொல்வது போல , பேய் மீது விஸ்வாசம் கொண்டவர் என்ற அர்த்தத்தில் கெட்ட நோக்கம் கொண்டவர் என சொல்வது அது.

மொல்லமாரி என்பது முல்லை மாதிரி என்று சொல்லும் அழகிய தமிழ் சொல், அப்படி எனில் எதாவாது சொன்னால் வாய்மூடிக்கிட்டு கம்னு இருப்பவன் என்று அர்த்தம்.நீங்களே கவனித்திருக்கலாம் யாரையாவது மொல்லமாரினு சொல்லும் போது என்ன சொன்னாலும் வாயத்தொறக்க மாட்டான்னு கூடவே விளக்கமும் செய்வார்கள்!

அப்படியே தமிழில் திரிந்து போன பல சொற்களை எல்லாம் கெட்ட வார்த்தைகளாக நாமே உருவகப்படுத்திக்கொண்டு விட்டோம்.

தட்னா தராந்துடுவனு சொல்வாங்க .. அப்படினா அடித்தால் தாரை வார்த்து விட்டு = கை விட்டு விட்டு ஓடி விடுவான் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது அது. இன்னும் பல வார்த்தைகளுக்கும் அர்த்தம் இப்படித்தான் கிடக்கு!

மற்றப்படி பாலியல் உறுப்புகளை சுட்டிப்பேசுவது அனைத்து மொழிகளிலும் கெட்ட வார்த்தைகளாகத்தான் கருதப்பட்டு இருக்கு.

ஆங்கிலத்தில் ஒருவனை கேவலப்படுத்த "you lick my ass" என்று சொல்வதை தான் அவ்வப்போது திரும்பி பின் பக்கத்தை தட்டிக்காட்டி விட்டு செல்வார்கள். அல்லது "my ass" என்று மொட்டையாக சொல்வார்கள்.

இன்னும் உங்களுக்கு கெட்ட வார்த்தை அகராதி வார்த்தைகள் வேண்டும் என்றால் கேளுங்கள், தரப்படும்!

PRABHU RAJADURAI said...

"பேமானி என்பது பேய் மானி ... மனிதாபிமானி என்று சொல்வது போல , பேய் மீது விஸ்வாசம் கொண்டவர் என்ற அர்த்தத்தில் கெட்ட நோக்கம் கொண்டவர் என சொல்வது அது"

பேனாமி என்பது பினாமி என்கிறோமே அந்த உருது வார்த்தைதான்...வவ்வால் அவர்களின் அர்த்தம் சரியாயிருக்கமுடியாது

Anonymous said...

aangalai penneeya moziyil thitta nalla ketta vaarthaigal koduthu udhavungal.

Anonymous said...

ரசித்துப்படித்த பதிவு...!!!!!!!!!