Thursday, March 6, 2008

பூனைகள் விளையாடும் மதுக்கூடம்











அடிக்கடி பூனைகள் வந்துபோவதன்றி வேறெந்த ரம்மியமும் அறியாத மதுவங்காடியின் மூலையிலிருந்தது தமயந்தியின் கண்ணாடியிடப்பட்ட புகைப்படம். அவள் உதடுகளில் மேய்ந்துகொண்டிருந்த சர்ப்பத்தைத் தடவியபடி வந்த பேரர் கேட்டார், " வாட் டூ யூ வாண்ட் சார்?" ஆங்கிலம் தவிர வேறெதுவும் தெரியாதென்று அடம்பிடித்த பேரரிடம் ஜப்பானிய மொழியில் ஆர்டர் செய்துவிட்டு, எங்களிடம் திரும்பிய ரோசாவசந்த், அனேகமாய்ப் பேரரின் பெயர் ரவிசீனிவாசாக இருக்கலாமென்றும் கூடுதலாய்த் தகவல் சொன்னார்.

தனக்கான கடைசி மிடறுகளை கடைசி விருந்தின் ஜீசஸைப் போல அவசரமாய்க் குடித்து, திருமணப் பத்திரிகை வைப்பதற்காய் விடைபெற்றுப்போன அய்காரஸ் பிரகாசிற்கு இப்போதுதான் திருமணம் ஆகி இருநூற்றாண்டுகளாகின்றன. அத்தகைய வழுக்கி விழும் ஒரு திரவப்பொழுதுகளிலும் தன் லேப்டாப்பில் தமிழ்மணத்தின் யோனி - மன்னிக்கவும் - சூடான இடுகைகளுக்காக 5567 பதிவுகளை அனுப்பிக்கொண்டிருந்தார் தமிழச்சி.

அதிலிருந்த யோனி வார்த்தைகளை எண்ணிப்பார்த்த அய்யனார் "மொத்தம் 5008 யோனி வருகிறது. ஒரு பெரியாரிஸ்ட் இத்தகைய இந்துத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வக்காழி இந்த யோனி நாசமத்துப்போகட்டும்" என்றான் அய்யனார். அய்யனாரிடம் பூணூலும் தன்னிடம் பிளாக்பெல்ட்டுமிருக்கிறதா என்று உறுதி செய்துகொண்ட தமிழச்சி சற்றும் மனந்தளறாமல் யோனிஜெயம் எழுததொடங்கினார்.

"சாப்பிட்டியா, என்னது சாம்பார்சாதமா, நானும் அதான் சாப்பிட்டேன்" என்று 308வது முறையாக போனில் சொல்வதன் ஆயாசத்தோடு வந்தமர்ந்தான் சுகுணா. சற்றுப் பின்னர் வந்த ஜ்யோராம்சுந்தர் "உங்களைத் திட்டிப் போட்ட பின்னூட்டத்தை வெளியிட்டிருந்தீங்க. உங்கள் ஜனநாயக உணர்வுக்கு நன்றி" என்று கைகுலுக்கினார். பூனைகளின் வால்பட்டு சிதறியது கோப்பையொன்று. மீண்டும் மீண்டும் பூனைகளின் கால்பட்டு கோப்பைகள் உடைய வேண்டினோம். மதுவில் நனைத்த மீசைகளில் உருகிவழிந்த கவிதைத்துளியொன்றைக் கைப்பற்றிக்கொண்டது யாரென்று தெரியவில்லை.

மேற்கொண்டு கதையைத் தொடரமுடியாததற்குக் காரணம் நண்பனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. சுஜாதா இறந்ததைக் கொண்டாடிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான். எனக்கு அதிர்ச்சியாகவும் ஆவேசமாகவுமிருந்தது. "ஒரு மரணத்தைக் கொண்டாட உனக்கு மனசாட்சியில்லையா?" என்றேன். " போன மாதம் மேற்குவங்காளத்தில 60000 கோழிகளை உயிரோடு புதைச்சது பற்றி நீ கவலைப்பட்டியா?" " அது சீக்குக் கோழிகள்" "நான் மூத்திரம்தான் அடிப்பேன், எய்ட்ஸ் நோயாளிகளைப் பரிவோடு கவனிச்சுக்கணும்னு கமலஹாசன் சொன்னாரே, அது என்னடா ங்கோத்தா?" " என்னதானிருந்தாலும் சுஜாதா ஒரு முக்கியமான எழுத்தாளர்" " அடப்போடாங்க, உலகத்தின் முதல் புலம்பெயர்ந்த குரலை, முதல் போர்வெறியின் விளைவாய் உண்டான கையறு நிலையைச் சொன்ன குரலை வக்கிரமா வசனம் எழுதினவன் எழுத்தாளன் மசுரு. அங்கவைன்னா அங்கவைக்கவான்னு கேக்கறான். சுஜாதா வாயிலதான் வைக்கணும் " என்றான்.


"உனக்கான கவிதையை நீ எழுது. உன் கவிதையை நான் ஏன் எழுதலைன்னு கேக்காத"
" அந்தத் தாயோளிங்கல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க. ஆனால், எனக்கான கவிதைய நான் எழுதினா இது கவிதையா, இல்லையான்னு வந்து தாலியறுப்பாங்கெ"
எழுத்தாளர்களையும் பிணங்களையும் மதிக்கத்தெரியாத இவன் என்ன மனிதன்? "உன்னை நினைச்சாக் கேவலமாயிருக்கு"ன்னேன்.

இப்போது தொலைபேசியைத் தாண்டியும் மதுக்கூடங்களிலும் அவன் சிரிப்பு பட்டு கோப்பைகள் உடைந்தன. பூனைகள் நடுங்கத்தொடங்கின.

"நல்லறிவை சம்யக்ஞானம் என்கிறது சமணம். மொத்தம் ஆறுவகையான ஞானங்களிருக்கின்றன. மதி ஞானம், ஸ்ருதஞானம், அவதிஞானம், மனப்பர்யஞானம், கேவலஞானம். அந்த சமண ஞானத்தைத்தான் கேவலம்ன்னா இழிவானதுன்னு மாத்தினது உன் மொழி. புத்தவிகாரை விகாரமாச்சு. ஆயிரம் வருசமா செத்தது அறம். நீ சுஜாதா செத்ததுக்காக கவலைப்படறே."

பார்ப்பனக்கறை படிந்த சொற்களின் மீது பூனைகளின் மூத்திரம் நிறைவதாக.

உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்து
அலகிலாத அளந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்கு
இலகு மாமலர்ச் சேவடி ஏத்துவம்.


திணை : சாவும் சாவு நிமித்தமும், துறை : சென்னை தி.நகர், வடக்குபோக்ரோடில் அமைந்துள்ள ஜி.ஆர்.டி ஓட்டலின் எதிர்ப்புறமுள்ள ஒரு அரசு மதுக்கூடம்.

4 comments:

லக்கிலுக் said...

:-(

இதெல்லாம் என்ன கொடுமை சுகுணாதிவாகர் சார்?

உண்மைத்தமிழன் said...

//எழுத்தாளர்களையும் பிணங்களையும் மதிக்கத்தெரியாத இவன் என்ன மனிதன்? "உன்னை நினைச்சாக் கேவலமாயிருக்கு"ன்னேன்.//

இந்தப் பதிவிலேயே உருப்படியான ஒரு வார்த்தை இதுதான் மிஸ்டர் திண்டுக்கல் நவீனம்..!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மிகச் சுமாரான புனைவு. வேலைக்காகாது :)

இதை வெளியிடப் போகும் உங்கள் ஜன நாயகப் பண்பை முன் கூட்டியே வாழ்த்தி விடுகிறேன் :) நல்ல விஷயங்களைத் தேட வேண்டியதா இருக்குதப்பா :)

கருப்பன் (A) Sundar said...

தங்கள் டெம்ப்ளேட்டை மாற்றினால் Firefox உலாவியில் படிக்கும் என்போன்றோருக்கு உதவியாய் இருக்கும்.