Wednesday, August 6, 2008
தூங்கும்போது காலாட்டுதல்
நீண்டநாட்களாகி விட்டன. இன்னும் மூன்று மாதங்கள் எழுதாமலிருந்தால் தங்கமணி, ரோசாவசந்த் வரிசையில் 'மூத்த வலைப்பதிவர்கள்' பட்டியலில் சேர்வது உறுதி. நிறைய பதிவர்கள் புதிதாக எழுத ஆரம்பித்திருத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான செய்திதான் என்றபோதும் பெரிதும் ஆழமற்ற இடுகைகளே அதிகம் தென்படுகின்றன. சினிமாச்செய்திகளுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. ம.க.இ.க, பெரியார் திராவிடர் கழகம் போன்ற மாற்று இயக்கத்தோழர்களின் பதிவுகளும் குறைந்துவருகின்றன. சிறுபத்திரிகை மாதிரி எழுத்துப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் இதில் வருந்துதற்குரிய விஷயங்கள் இரண்டு. 'கலக்கப்போவது யாரு' அசத்தப்போவது யாரு' கோவை குணா, ரோபோ சங்கர் வகையறாக்களைப் போல, ரமேஷ் பிரேம், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனைப் பாவனை செய்யும் மிமிக்ரி கலைஞர்கள் பதிவர்களாக மாறியிருப்பது ஒரு சோகமெனில், நடைமுறை சார்ந்த அரசியல் குறித்த அவதானமோ அக்கறை இவர்களிடம் துளியும் இருப்பதாய்த் தெரியவில்லை. பொத்தாம்பொதுவாக இடதுசார்பு அரசியல்தான் எங்களுடையது என்று சொல்லிக்கொண்டாலும் கூட 90 களுக்குப் பின் உலகமயமாக்கல் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் நுழைத்திருக்கும் பாரியத்தாக்கங்கள், இன்னமும் உத்தபுரம் போன்ற பகுதிகளில் பேய்ப்பல் காட்டிச்சிரிக்கும் சாதித்திமிர் இவையெல்லாம் குறித்துப் பின்நவீனப்பூசாரிகளிடமிருந்து ஒரு எழுத்தும் வருவதில்லை. போரடிக்கும் லெக்சர்களும் எழுதிப்பழகும் உத்திகளுமே நவீன வலைப்பதிவு எழுத்துக்களாய் மீளவும் மீளவும் வைக்கப்படுகின்றன. இவற்றினின்று விலகிச் சமீபமாய் என்னைக் கவர்ந்த பதிவர் 'வினவு'. பெரிய ஆர்ப்பாட்டம், பின்நவீனத்துவ டிரெய்லர்கள் எதுவுமின்றி இயல்பாக எழுதுகிறார். குறிப்பாக் ஜெயமோகனும் நாவல்பழமும் குறித்த பதிவு ஜெமோவின் வர்க்கச்சார்பைத் தோலுரிக்கிறது. இந்தியாடுடே முஸ்லீம்களுக்கு எதிராய் வெளியிட்டுள்ள சிறப்பிதழ் குறித்து வினவு மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது துயரளிக்கிறது.
----------------------------
வலைப்பதிவுலகப் பரபரப்புச் செய்திகளை வாசிக்க நேரமில்லை. முதலாவதாகப போலி பிரச்சினை ஒருவழியாக முடிவிற்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக விடாதுகருப்பு பக்கத்தில் மூர்த்தி எழுதிய கடிதம் மட்டும் படிகக நேர்ந்தது. அப்புறம் பெயரிலி அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணியதாக அறிகிறேன். அதுகுறித்தும் முழுதாக ஏதும் தெரியாது. என்றாலும் ஒருநாள் கூகுளில் என் பெயரிட்டுத் தேடியபோது ஒரு அனானிப்பின்னூட்டத்தை வாசிக்க நேர்ந்தது. நான் எனக்கு எதிரான பின்னூட்டங்களை மட்டுறுத்திவிடுவதாகவும் ஆனால் கருத்துச்சுதந்திரம் குறித்துப் போலிக்கூச்சல் போடுவதாகவும் நண்பர் ஒரு வர் எழுதியிருந்தார். திருமணத்திற்குப் பின்னும்கூட 'உன் மனைவியை ஒழுத்ததைக் கதையா எழுதுவியாடா' என்று வந்ததைக்கூட வெளியிட்டிருக்கிறேன். எனவே இத்தகைய குற்றச்சாட்டுகளில் உள்ள அபத்தங்களை நினைத்து சிரிக்க மட்டுமே ஏலும். முன்பு நான் எல்லாவகையான பின்னூட்டங்களையும் வெளியிட்டுக்கொண்டுதானிருந்தேன், அப்பின்னூட்டங்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்றபோதிலும்கூட கருத்துச்சுதந்திரம் என்பதால். ஆனால் பின்னாளில் அத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். கடைசியாக என் பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம் கூட அவ்வாறாக வலையுலகிற்குத் தொடர்பில்லாத வேறுசில மனிதர்களைப் பற்றி அபத்தமும் ஆதாரமற்றதுமான அவதூறுகளைச் சுமந்துவந்தது. எனன செய்ய? எச்சில் இலைகளைக் குப்பைத்தொட்டிகளில்தானே எறியவேண்டும்!
--------------------------------------
தோழர் தமிழச்சி 'வெளியிட வேண்டாம் என்று ஒரு பின்னூட்டத்தை எழுதியிருந்தார். நீண்டநாட்களாக வெளியிடாமலும் ஆனால் அழிக்காமலும் வைத்திருந்தேன். இந்த எச்சில் இலை பதட்டத்தில் தவறிப்போய் வெளியிட்டுவிட்டேன். உடனடியாகச் சுதாரித்து அழித்தும்விட்டேன். அது மொத்தம் என் வலைப்பக்கத்தில் இருந்ததே மூன்று முதல் அய்ந்துநிமிடங்கள்தானிருக்கும். ஆனால் அதற்குள் அந்தப் பின்னூட்டத்தை வைத்து சர்ச்சை உருவானதாக அறிகிறேன். அது எப்படி இருபத்துநாலுமணிநேரமும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார முடிகிறது என்று தெரியவில்லை. உண்ணவும் மலங்கழிக்கவும் தேவையற்ற தேவர்களாயிருக்கக்கூடும்.
பின் நவீனம் பற்றி நான் ,அய்யனார், சுந்தர் ஆகியோர் அறிவதற்கு முன்னமே தன் தொப்புளுக்குக்கீழே முடிவளர்ந்துவிட்டதாகவும் பெயரிலிரி அண்ணை எழுதியிருந்தாராம். வாழ்க பின்நவீனத்துவத்தாத்தா பெயரிலி அண்ணை!
----------------------------------
இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் கருத்துரிமைக்கான போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
------------------------------------------------
ஒருவழியாக மன்மோகன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவை அய்ந்தாண்டுகள் நிலையாக ஆண்ட முதல் பார்ப்பனரல்லாத பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால் சீக்கியச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மன்மோகனாக இருந்தாலும், மாயாவதி மாதிரியான தலித் பிரதமராக இருந்தாலும் இடதுசாரிகளானாலும் அமெரிக்க அடியாட்களாய் மாறுவார்களின்றி வேறில்லை. மாவோயிஸ்ட்களின் அரவணைப்பிலிருக்கும் நேபாளம் என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்.
-------------------------------------
இனி வாரம் ஒருமுறையாவது எழுதவேண்டும். தீவிர இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாத சினிமாக்காரர்கள் குறித்து எழுத எண்ணம். முதலாவதாக கவுண்டமணி குறித்து எழுத ஆசை.
+ = &
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ஜோரா காலாட்டுறேளே?
வாங்க சார்.. வாங்க!!!!
வெளியிடவேண்டாம் என்று பின்னூட்டம் வருவது எனக்கும் கூட தர்மசங்கடத்தை உருவாக்குகிறது.
வால்பையன்
//முதலாவதாக கவுண்டமணி குறித்து எழுத ஆசை//
தமிழகத்தில் அனைவரும் அவரது நகைச்சுவையின் ரசிகர்கள் .. But இன்னும் அவரை பற்றி ஒரு நல்ல கட்டுரை கூட வரவில்லையே என பலதடவை நினைத்திருந்தேன் ..ஆரம்பிச்சு வைங்க ..
சீக்கிரம் சார்..
அதிரடிக்கார மச்சான் மச்சான் வருக வருக !
:))
வரும் போதே அணல் பறக்குது !
//தோழர் தமிழச்சி 'வெளியிட வேண்டாம் என்று ஒரு பின்னூட்டத்தை எழுதியிருந்தார். நீண்டநாட்களாக வெளியிடாமலும் ஆனால் அழிக்காமலும் வைத்திருந்தேன். இந்த எச்சில் இலை பதட்டத்தில் தவறிப்போய் வெளியிட்டுவிட்டேன். உடனடியாகச் சுதாரித்து அழித்தும்விட்டேன். அது மொத்தம் என் வலைப்பக்கத்தில் இருந்ததே மூன்று முதல் அய்ந்துநிமிடங்கள்தானிருக்கும்.//
சுகுணா, இப்படி ஒரு பச்சைப் பொய்யுடன் திரும்பி வருவீர்களென்று முன்பே தெரிந்திருந்தால் முந்தைய இடுகையிலேயே தமிழச்சியின் பின்னூட்டத்தின் அடிப்படையில் உங்களுடைய இரட்டை வேடமிடும் மனசாட்சியில்லாத்தனத்தைச் சுட்டிக் காட்டியிருப்பேன்.
பொதுவாக நான் வலைப்பதிவுகளை உடனுக்குடன் படிப்பவனல்ல. நானிட்ட பின்னூட்டங்களை வைத்தே ஒருமுறை நண்பர் ஒருவர் கிண்டலடித்தார், ”திருவிழா முடிந்த பின்னால் வந்து எதையோ புரியாமல் சொல்லி விட்டுப் போகிறவர் என்று”. அதுவும் காமச்சொற்கள் சர்ச்சை போய்க்கொண்டிருந்தபொழுது என்னுடைய இந்தியப் பயணம் முடிந்து அமெரிக்கா வந்து சேர்ந்த நேரம். மற்ற வேலைகள் மும்முரத்தில் தமிழ்மணத்தையே சில நாட்களாக மறந்திருந்த நேரம். அப்பொழுது தமிழ்மணம் சர்ச்சையைச் சொல்லி, சென்னை பதிவர் சந்திப்பைக் குறிப்பிட்டு ஒரு இடுகையைப் பார்த்ததாக நண்பர் ஒருவர் சொன்னார். அதில் என் பெயரும் குறிப்பிடப் பட்டதாகச் சொன்னார். உடனேயே எழுந்த ஆர்வத்தில் தமிழ்மணத்துக்கு வந்தபொழுது உங்கள் இடுகையைக் கண்டேன். நேரமின்மையால் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று மேம்போக்காகப் பார்த்தேன். என்னைப் பற்றித் தவறாக எழுதவில்லை என்றாலும், வேறு சில பதிவர்களைப் போலவே தமிழ்மணத்தின் மேல் தவறான புரிதலுடன் எழுதியிருக்கிறீர்கள் என்றுணர்ந்தேன். பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களை வேகமாகப் பார்க்கும் பொழுது தமிழச்சியின் பெயரில் ஒரு அனானிப் பின்னூட்டத்தைப் பார்த்தேன். அதைப் படிக்கும் பொழுது அவர் எழுதியது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. அவர் வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருந்தும் அதை எப்படி நீங்கள் வெளியிட்டீர்கள் என்று அதிர்ச்சியாயிருந்தது. சென்னையில் சில மணி நேரங்கள் சந்தித்து உரையாடிய நண்பரென்ற முறையில் உடனடியாக ஒரு கேள்வியை உங்கள் மனசாட்சிக்கு வைக்கலாம் என நினைத்தேன். நேர நெருக்கடியால் உடனே செய்ய முடியவில்லை. அடுத்த முறை வந்தபொழுதும் அந்தப் பின்னூட்டம் அப்படியே இருந்தது. அப்பொழுது அந்த இடுகையையும், 'சாதிப்புத்தி' பற்றி நீங்கள் முன்பு அளித்த தன்னிலை விளக்கங்களையும் ஒருமுறை படிக்க வேண்டுமெனத் தோன்றியது. (நான் அதை ஒப்பிட்டு எழுத வேண்டுமெனத் தோன்றியதால்). படிக்க ஆரம்பித்து பாதியில் விட்டுப் போய்விட்டேன். அதன்பின் சில நாட்கள் கழித்து வந்த பிறகு அப்பின்னூட்டம் அங்கில்லை. அதை வெளியிட்டதற்கு நீங்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாலும், நீங்கள் உண்மையிலேயே வருத்தப் பட்டிருக்க மாட்டீர்கள் என்கிறபடியால் நானும் என்னுடைய பின்னூட்ட உந்துதலை அப்படியே விட்டு விட்டேன்.
உண்மை இப்படியிருக்க ஐந்தே நிமிடங்கள் உங்களை அறியாமல் தமிழச்சியின் அப்பின்னூட்டத்தைத் தவறாக விட்டு வைத்திருந்தேன் என்று ஒரு பொய்யை எல்லாவற்றையும் மறந்து போயிருப்பார்கள் என்ற தைரியத்தில் எழுதுகிறீர்கள் போலும்.
இப்பொழுது நான் உங்கள் மனசாட்சியைக் கேட்க நினைத்தது. விளக்கமாகச் சொல்லும் ஆர்வம் இப்பொழுதில்லை. மிகச் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.
தமிழச்சி எழுதிய பின்னூட்டத்தின் ஒரு துளி --தமிழ்மணம் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. பெயரிலி இயக்க ஆள். (நிறைய விடயங்கள் சொல்ல இருக்கிறது தோழர் எனக்கு எழுத நேரமில்லை. முக்கிய வேளை இருக்கு)---
இந்த வரிகளில் உள்ள அபாண்டமான கிரிமினல் குற்றச்சாட்டு உங்கள் மனசாட்சிக்குக் கொஞ்சம் கூட உரைக்கவில்லையா? ”தமிழ்மணத்தை நடத்துபவர்கள் இயக்க ஆட்கள்” என்று போகிற போக்கில் சொல்லும் வரிகள் எவ்வளவு ஆபத்தானவை என்று புரியவில்லையா? அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சட்டப்படி பேச்சுரிமையிருந்தும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசினார்கள் என்பதற்காக ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்று உங்கள் புரட்சி மூளைக்குப் புலப்படவில்லையா? இயக்க ஆட்கள் என்று சொல்வதன் பின்னாலுள்ள அபாயம் உங்களுக்குப் புரியவில்லையா. ”உங்களுக்கு பிள்ளைமார் சாதிப்புத்தி இருக்கு” என்று வளர்மதி சொன்னதற்காக எவ்வளவு கண்ணீர் விட்டீர்கள், அதிர்ச்சியடைந்தீர்கள், ஆறுதல் சொல்லாதவர்களையெல்லாம் நேர்மையற்றவர்களாகக் காட்டினீர்கள். (இதில் உண்மையென்னவென்றால் உங்களுக்குச் சாதிப்புத்தி இருக்கு என்றோ இல்லையென்றோ சொல்வதற்கு எந்தத் தடயத்தையும் யாரும் கொடுக்க முடியாது, சாதிப்புத்தி என்பது உணர்வடிப்படையிலானது, உருவ ஆதாரங்கள் கொடுக்க முடியாதது). ஆனால் தமிழச்சி சொல்லியிருக்கும், நீங்கள் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டு? இவ்வளவு பெரிய பொய்க் குற்றச்சாட்டை அனுமதித்ததற்கு உங்களிடமிருந்து ஒரு வருத்தமில்லை.
இந்த இலட்சணத்தில் மற்றவர்களைப் பற்றி அவர் எழுதியதைப் படிக்காமலே அடிக்கடி தீர்ப்புச் சொல்ல வந்து விடுகிறீர்கள். இதுதான் உண்மையிலேயே உணர்ந்து எழுதுகிறவர்களுக்கும், எழுத்துத் திறமையைக் காட்ட விரும்புகிறவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
நன்றி - சொ.சங்கரபாண்டி
கவுண்டமணியை பற்றி நீங்கள் நிச்சயம் எழுதவேண்டும் நண்பா...திரைத்துரையில் இருந்துக்கொண்டு மரபுகளை(?!) உடைத்தவர்களில் எம்.ஆர்.ராதாவிர்கு பிறகு கவுண்டமணி தான் பெரும் பணியை செய்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்..
குறிப்பாக அவரது கதாப்பாத்திரங்கள் குறித்து நீங்கள் எழுதவேண்டும் சுகுணா..
--மயில்வண்ணன்
வாங்க வாங்க
இப்படித்தான் காலாட்டுவீங்களா...
எழுதுங்க எழுதுங்க...
சுடலை மாடன் சொல்வதே சரி.. அந்தப் பின்னூட்டம்( நான் பார்த்த அளவில்) ஒன்றிரண்டு நாட்களாக அப்படியே இருந்தது.. நான் அதை இரண்டு முறை படித்திருக்கிறேன் ( ஒரு நாள் இடைவெளியில் )
நீங்கள் இந்தப் பதிவில் செய்ய முற்பட்டிருப்பது தேவையற்ற இமேஜ் மேக் ஓவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.. இது தேவையற்றது சுகுணா
"ஆமாண்டா நான் வேணுமின்னு தான் வெளியிட்டேன்..அதுக்கென்னா இப்ப? அப்படித்தான் செய்வேன்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் கூட உங்களைப் பாராட்டலாம்.. ஆனால் இப்படி நல்ல பெயர் எடுக்க முயற்சித்து கோமாளியாக மாறிப்போனது வருத்தமளிக்கிறது..
ராஜ்
என்ன சுகுணா, காலாட்டி ரொம்ப நாளாச்சு போல :)
சீக்கிரம் எழுதுங்க மக்கா!
Post a Comment