நீண்டநாட்களுக்குப் பிறகு எனது ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குறித்த விமர்சனம் பல்வேறு எதிர்ப்புகளையும் வசைகளையும் சந்தித்துள்ளது மகிழ்ச்சியே. நண்பர் ஜ்யோவ்ராம்சுந்தர் குறிப்பிட்டுள்ளதைப் போல் மாற்றுப்பார்வைகளையே அனுமதிக்காத மூர்க்கம் வலையுலகில் ஒரு வியாதியைப் போல் பரவியுள்ளது. முன்பு சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதிய விமர்சனங்களும் இத்தகைய நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது என்றாலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான், வரவணையான், முத்துதமிழினி, அசுரன், ராஜாவனஜ் என்று பலரும் தீவிரமாகப் பதிவுலகில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ( அனேகமாக ரோசாவசந்த் தான் எழுதுவதை நிறுத்த தொடங்கிய காலகட்டம்) போலி டோண்டு மாதிரியான பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தபோதும் கூட குறைந்தபட்சம் மாற்றுப்பார்வைகளை ஆதரிக்கிற கணிசமான குரல்கள் இருந்தன. ஆனால் இப்போது அத்தகைய குரல்கள் குறைந்து போனது வருத்தமளிக்கிறது.
பதட்டப்படுகிற பெரும்பாலான பதிவர்கள் தங்கள் அளவில் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. கட்டமைக்கப்பட்ட அவர்களது பொதுப்புத்தி தொந்தரவுக்கு உள்ளாகிறது. கந்தசாமி படத்தை என்ன வேண்டுமானாலும் கிழிக்கலாம், விஜய்யையும் அஜித்தையும் என்ன வேண்டுமானாலும் கிண்டலடிக்கலாம், ஆனால் ஒரு அரசியல் சினிமாவின் பின்னுள்ள அரசியலைக் கட்டவிழ்க்கும்போது மட்டும் பதறிப் போகிறார்கள். ‘‘ஒரு இயக்குனர் இப்படியெல்லாம் பார்த்தா சினிமா எடுத்தார், நான் ஒரு பாமரன்தான்’’ என்று அலறுகிறார்கள். ‘‘இடைவேளையில் பப்ஸ் சூடாக இருக்கிறதா என்பதைத் தாண்டி ஏன் கவலைப்படுகிறீர்கள்?’’ என்று அங்கலாய்க்கிறார்கள்.
இது ஒரு சினிமாதான், சினிமாதான் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்பவர்கள்தான் நான் பதிவு எழுதுவத்ற்கு முன்பு ‘உன்னைப் போல் ஒருவன்’ தமிழகத்தைக் கடைத்தேற்ற வந்த படம் என்றார்கள், தார்மீகக் கோபம் என்றார்கள், ‘இந்த மாதிரியான படம்தான் வராதா என்று எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தோம்’ என்றார்கள். இப்போதும் கூட அவர்கள் விஜய்யோடும் அஜித்தோடும் கமலை ஒப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். போக்கிரியையும் உ.போ. ஒவையும் ஒப்பிடுவதை ரசிக்க மாட்டார்கள்.
போகட்டும், ஆனால் இவர்களது பார்வை சாதாரண பொதுப்புத்தி என்பதையும் தாண்டி இந்துமனோபாவத்தை ஏற்றுக்கொள்கிற, மற்றமையை விலக்கி வைக்கிற ஆபத்தான கட்டத்தை அடைவதை அவதானிக்க வேண்டும். ‘‘போங்கடா போலி செக்யூலரிஸ்ட்களா, தொப்பி போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பவர்கள், முஸ்லீம்களைத் தாஜா செய்பவர்கள், அல்லாவின் பெயரால் முஸ்லீம்கள் பல திருமணங்கள் செய்பவர்கள்’ என்னும் வகையான கருத்துக்களைத் தெரிவிப்பதிலோ அல்லது அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பிலோ மாறுபாடில்லாதவர்கள், போகிற போக்கில் பொத்தாம் பொதுவாகச் சொல்கிற விஷயம், ‘‘சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் விஷத்தை விதைக்காதீர்கள்’’.
காலங்காலமாக சாதி எதிர்ப்புப் பார்வைக்கும் அரசியலுக்கும் சாதி அரசியல் என்றும் சாதிப் பார்வை என்றுமே முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசியலை அம்பலப்படுத்துபவர்கள் நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்களாகவும் பிரிவினைவாதிகளாகவுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இது நமக்குப் புதிதில்லை. ஆனால் போகிற போக்கில் ‘சமூக அக்கறை’ குறித்தெல்லாம் இவர்கள் எடுக்கிற கிளாஸ்கள்தான் நமக்குத் தாங்க முடியவில்லை, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கலாம், எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கவில்லை, எனவே எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் நண்பா, எல்லாம் ‘இங்கிருந்தே எடுக்கப்பட்டது’.
இதில் ஸ்டேண்ட் அப் காமெடியில் விடாமல் கலக்குபவர் செருப்பு புகழ் பதிவர். ஆனால் இவர்கள் போகிற போக்கில் ஏதோ உளறுகிறார்கள் என்றில்லாமல் எவ்வளவு ஆபத்தான பாசிச மனோபாவம் கொண்டவர்கள் என்பதற்கு அந்த 'ஜெர்மி பெந்தாம்’ தியரி ஒரு உதாரணம். மேலும் உதிர்க்கிற முத்துக்களைப் பாருங்கள்.
‘‘ஐம்பதாண்டு காலமாக மனித உரிமை மண்ணாங்கட்டி சமாச்சாரத்தைப் பேசி பேசி வீடு முழுக்க மூட்டைப்பூச்சிகள். பெரும்பான்மையின் பாதுகாப்பு என்கிற ஒரு காரணம் போதும் அவர்களை நசுக்கிக் கொல்வதற்கு’’
இங்கே எங்கே வந்தது ஐம்பதாண்டு? ஒருவேளை பாகிஸ்தான் உருவான காலத்திலிருந்தே முஸ்லீம்களை நாடு கடத்தியிருக்க வேண்டும் என்கிறீர்களா? ஆனால் நண்பா, இந்தியாவில் தீவிரவாததிற்கு வயது வெறும் 50 அல்ல. சாதாரண பிளேக் நோயால் பாதிக்கப்படக் கூடாது என்று எலியை அழிக்கச் சொன்ன வெள்ளைக்காரனை ‘மதத்தை அழிக்கப் பார்க்கிறான்’ என்று வன்முறையைத் தூண்டி விட்டாரே பாலகங்காதர திலகர், ‘இந்து சனாதன தருமத்தைக் காப்பாற்ற ஜார்ஜ் பஞ்சயனைச் சுட்டுக்கொல்கிறேன்’ என்று சட்டைப்பையில் கடிதம் எழுதி வைத்திருந்தானே வாஞ்சிநாதன், ‘‘முஸ்லீம்களுக்கு நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும்’’ என்று 1910ல் தீர்மானம் போட்டதே இந்துமகாசபை அந்த தீவிரவாதத்திற்கு அடுத்த வருடம் வந்தால் வயது 100 ஆகப்போகிறது.
‘‘எனக்குத் தெரிஞ்சு எந்த இந்தியனோ குறிப்பா இந்துவோ பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயி பொது இடங்களில் குண்டு வைச்சதாகவோ, ரயில்வே ஸ்டேசன்களில் புகுந்து பச்சைக் குழந்தையிலிருந்து பூக்காரக் கிழவி வரை சுட்டுக் கொன்னதாகவோ, பாராளுமன்றத்துக்குள் புகுந்து சுட்டதாகவோ சரித்திரம் இல்லை’’ என்கிறார் திருவாளர் பத்தாம் நம்பர்.
அட முண்டமே! வாக்கெடுப்பு நடத்துகிறேன் என்று வாக்கு கொடுத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாய் ராணுவத்தை நிறுத்தி தினமும் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கிறதே உன் இந்தியா, அஸ்ஸாமில் பெண்களை இந்திய ராணுவ மிருகங்கள் சிதைத்து தீர்த்ததே, அவ்வளவு ஏன் ஈழத்தில் கடைசி இழவு விழும் வரை காத்திருந்து விட்டு எள்ளும் தண்ணியும் இறைத்து விட்டு வந்து டாட்டாவும் அம்பானியும் பிசினஸ் செய்ய சுடுகாடுகளைப் புனரமைத்துக்கொண்டிருக்கிறதே, இன்னமும் நேபாளத்தில் ரெண்டு பார்ப்பான் பிரச்சினைக்காக ஒரு ஆட்சியைக் கவிழ்த்துத் தன் தாலியறுக்கும் குணத்தைக் காட்டியதே உன் இந்தியா, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், மேலாதிக்கம் குறித்தும், அடுத்த நாட்டில் குண்டு போடுவது குறித்தும் பேசுவதற்கு இந்திய நாய்களுக்கு யோக்கியதை இருக்கிறதா?
முதலில் இந்த ‘காமன் மேன்’ என்னும் கருத்தாக்கமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்த காமன்மேனுக்கு 3000 முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது கோபம் வராதாம், வாழ வேண்டிய ஒரு கல்லூரிப் பெண் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும்போது கோபம் வராதாம், ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் ஒரு இனத்தின் மீது படுகொலைகள் ஏவப்படும்போது கோபம் வராதாம், பிறகு எப்போதுதான் கோபம் வருமாம்? தான் பயணிக்கிற பேருந்தில், ஓடும் ரயிலில், தக்காளி வாங்கும் மார்க்கெட்டில், முக்கிப் பேள்கிற டாய்லெட்டில் குண்டு வெடித்தால் மட்டும் கோபம் வருமாம். சக மனிதர்கள் குறித்து எந்த அக்கறையுமற்று இருப்பவனுக்குப் பெயர் காமன்மேனா, டாபர்மேனா? இந்த காமன்மேனுக்குக் குண்டு வெடிப்பதுதான் பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த குண்டையும் காமன்மேனில் தலையில் கொண்டு போய்ப் போடுங்கள், மரணபயம் போகும்.
அப்புறம் ‘தனிநபர் தாக்குதல் கூடாது’ என்கிறார்கள் நண்பர்கள். நல்லது தனிநபரைத் தாக்கக் கூடாது. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம் அல்லவா? ஈழ ஆதரவுப் பதிவர்களில் சிலர் கூட கமலின் உ.போ.ஒருவனைப் பாராட்டுகிறார்கள். இதே கமல்ஹாசன்தான் நண்பர்களே, ஈழப்பிரச்சினைக்காக திரையுலகம் நடத்திய கூட்டத்தில் ‘‘அடக்குமுறை இருக்கும் நாட்டில் தீவிரவாதம் வெடித்தே தீரும்’’ என்று ஆவேச வேடம் போட்டவர். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே கமலின் சமூக அக்கறையின் நிறம் என்ன?
குண்டு வெடிக்கிறது, குண்டு வெடிக்கிறது என்று கூப்பாடு போடுபவர்களே, உலகமெங்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களின் வன்முறைகளை விடவும் அரச பயங்கரவாதத்தாலும் ராணுவ பயங்கரவாதத்தாலும் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம். அதுகுறித்து உங்கள் சினிமா, கலைஞானிக்கள் ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை பேசியிருப்பார்களா? அல்லது நீங்கள்தான் அதுகுறித்து என்றாவது எழுதியிருப்பீர்களா? மும்பை குண்டு வெடிப்பு பற்றி பொங்கலோ பொங்குபவர்கள் போபாலுக்காகவும் இன்னமும் கல்பாக்கத்து அணு உலைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்காகவும் பொங்குவீர்களா?
‘எல்லாம் சரிதான், அந்த கெட்டவார்த்தை மட்டும் வேண்டாமே’ என்கிறார் நர்சிம். என்ன செய்வது நர்சிம். நான் கெட்டவார்த்தை பேசுவது புதிதில்லையே. மேலும் ஒரு முஸ்லீம் பெண்ணின் மரணத்தை ஏதோ நாய்க்குட்டி செத்துப்போச்சு ரேஞ்சுக்குப் பேசும்போது என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை, வெண்ணெய் போட்டு உருவி கமலுக்கு உபதேசிக்க முடியவில்லை. சென்ஷியின் பதிவைப் படித்தீர்கள்தானே, ஒரு முஸ்லீமாய் அன்னியப்படுத்தப்படும் வலி, ஒரு தலித்தாய் நிராகரிக்கப்படும் வலி இதையெல்லாம் புரிந்துகொள்ளக் கூட முயற்சிக்கா விட்டால் எனக்கு படைப்பெல்லாம் சு&&&&&&&&மயிருக்குத்தான் சமம். மற்றமையை உணர்வதே நீதி, அறம், தார்மீகம், படைப்பு, கலை. ‘ஆனாலும் நண்பா...’ என்ற உங்கள் நாகரீக இழுதல் கேட்கிறது.
விக்ரம் படத்தில் கமலின் மனைவி கொலை செய்யப்பட்டுவிடுவார். அதற்கப்புறம் கூட கமலுக்குச் ‘செட் ஆவதற்கு’ இரண்டு ‘பிகர்கள்’ இருப்பார்கள். ஆனாலும் கமல் தன் போலீஸ் மேலதிகாரியிடம் கேட்பார், ‘‘எந்த தேவடியா மகன் சார் என் பெண்டாட்டியைக் கொன்றது?’’. கதை - சுஜாதாவுடையது.
Tuesday, September 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
67 comments:
உன்னைப் போல் ஒருவன் படத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்லி இவர்கள் செய்யும் பல செயல்கள் மிக ஆபத்தானவை. வேறு என்ன சொல்ல :(
சில்லித்தனமாய் சிலரை ஏசி?
எப்போதுமே ஜ்யோ மெஜாரிட்டிக்கு எதிர்பக்கத்தில்தான் இருப்பார்..
செல்வேந்திரனை தாக்குவதில் உங்களுக்கு அப்படி என்ன இன்பம்?
ஒருவேளை ஜ்யோவிற்காகவா?
10 என்பது ஏன் செருப்பு சைஸாக இருக்கவேண்டும்?
பழைய பார்முக்குக் கொண்டு வந்ததற்காக நண்பர்களுக்கு நன்றிகள்.
நீங்கள்தான் அதிகம் பதட்டபடுகிறீர்கள் சுகுணா...பதிலுக்கு பதில்..எதிர்வினை என்று ஏன் போய் கொண்டே இருக்கவேண்டும்?பேர்தான் ஏற்கனவே வாங்கி விட்டீர்களே?
/பழைய பார்முக்குக் கொண்டு வந்ததற்காக நண்பர்களுக்கு நன்றிகள்.//
இதற்குத்தான் ஆசைப்பட்டீர்களா?
அப்புறம் என்ன அடிச்சு ஆடுங்க
/உன்னைப் போல் ஒருவன் படத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்லி இவர்கள் செய்யும் பல செயல்கள் மிக ஆபத்தானவை. வேறு என்ன சொல்ல ://
நீங்கள் ஆபத்பாந்தவர்களாக இருங்கள்..
நகைச்சுவையும் உங்களுக்கு வருகிறது ஜ்யோ
தண்டோரா, ஏதோ கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
/எப்போதுமே ஜ்யோ மெஜாரிட்டிக்கு எதிர்பக்கத்தில்தான் இருப்பார்../
மைனாரிட்டிக்கு ஆதரவாக...?
/செல்வேந்திரனை தாக்குவதில் உங்களுக்கு அப்படி என்ன இன்பம்?
ஒருவேளை ஜ்யோவிற்காகவா/
செல்வேந்திரன் என்னும் நபரோடு எனக்கு உறவும் இல்லை, பகையும் இல்லை. ஜ்யோவும் நானும் கடுமையாக முரண்படும் புள்ளிகளும் கூட உண்டு. அதை அவரும் கூட பல பின்னூட்டங்களில் பதிவும் செய்திருக்கிறார். இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கலாம் இல்லையா, நீங்கள் ஏன் செல்வேந்திரனைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்று.
/10 என்பது ஏன் செருப்பு சைஸாக இருக்கவேண்டும்?/
பாரதமாதாவின் சைஸாகக் கூட இருக்கலாம்.
சபாஷ் மாப்பிளே... காஷ்மீரும், அஸ்ஸாமும் எப்ப மாப்பிளே வெளிநாடு ஆனது? உள்நாட்டுக் குழப்பங்கள் வேற தீவிரவாதம் வேறன்னு அவன் எழுதி இருந்தானே... அதுக்கு பதில் எதுனா வச்சிருக்கீயா கண்ணு...
உன்னோட டவுசர எல்லோருமா சேர்ந்து கழட்டுறானுவளேன்னு விரல் நடுங்குதா மாப்பிளே... பயப்படாதே யாராச்சும் எச்சக்குடிக்கு கூட்டிட்டுப் போவாங்க...
மாப்ளே,
காஷ்மீரில் போய், 'இந்தியாவிலதான் இருக்குன்னு சொல்லிப்பாரு', விழும் அடிக்கான சைஸ்தான் தெரியாது. எது மாப்ளே உள்நாட்டுக்குழப்பம், வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு வீடு வீடாகப் போய் முஸ்லீம்களை வேட்டையாடியதா?
//சுகுணாதிவாகர் said...
பழைய பார்முக்குக் கொண்டு வந்ததற்காக நண்பர்களுக்கு நன்றிகள்.
//
பழைய ஃபார்ம்ல வந்ததுக்கு மிகுந்த சந்தோசங்கள் :-))))
/பாரதமாதாவின் சைஸாகக் கூட இருக்கலாம்.//
ஏண்ணா இப்படியெல்லாம்??
தொடர்ந்து கலக்குங்கள்.. :-)
ராணுவ தாக்குதலும், தீவிரவாத தாக்குதலும் ஒன்றா!?
எனது நண்பர் இந்திய நாணுவத்தில் இருக்கிறார்!, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தோற்றால் நாலைந்து குண்டு வந்து நம் பக்கம் விழுமாம்! நிலமையை எடுத்து சொல்லி பர்மிஷன் வாங்கவதற்குள் இடம் அமைதியாகிவிடும்!
நம்மிடம் ஒவ்வோரு குண்டுக்கும் கணக்குண்டு, அவர்களுக்கு இல்லையென்கிறார்!
இதைக்கூட நான் மதரீதியாக பார்க்கவில்லை! ராணுவத்தால், தீவிரவாதம் அளவுக்கு தன்னிச்சையாக செயல்பட முடியாது, ராணுவம் வேறு தீவிரவாதம் வேறு என்பது என் கருத்து!
//தண்டோரா, ஏதோ கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
/எப்போதுமே ஜ்யோ மெஜாரிட்டிக்கு எதிர்பக்கத்தில்தான் இருப்பார்../
மைனாரிட்டிக்கு ஆதரவாக...?
/செல்வேந்திரனை தாக்குவதில் உங்களுக்கு அப்படி என்ன இன்பம்?
ஒருவேளை ஜ்யோவிற்காகவா/
செல்வேந்திரன் என்னும் நபரோடு எனக்கு உறவும் இல்லை, பகையும் இல்லை. ஜ்யோவும் நானும் கடுமையாக முரண்படும் புள்ளிகளும் கூட உண்டு. அதை அவரும் கூட பல பின்னூட்டங்களில் பதிவும் செய்திருக்கிறார். இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கலாம் இல்லையா, நீங்கள் ஏன் செல்வேந்திரனைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்று.
/10 என்பது ஏன் செருப்பு சைஸாக இருக்கவேண்டும்?/
பாரதமாதாவின் சைஸாகக் கூட இருக்கலாம்.//
சபாஷ்...ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் ஒரு வசனம்”டபுள் கிராசிங்”
தொடருவோம் நண்பரே....இன்னும் நிறைய கைவசம்(10 ஆம் நம்பர் இல்லை..பார்ப்போம்)
மன உளைச்சல் உண்மைதான்..அது யாருக்குத்தான் இல்லை..
மைனாரிட்டிக்கு ஆதரவாக...?
மைனாக்கள் இப்போது அதிகம் தென்படுவதில்லை..ரேடியேஷன்??
///10 என்பது ஏன் செருப்பு சைஸாக இருக்கவேண்டும்?/
பாரதமாதாவின் சைஸாகக் கூட இருக்கலாம்.//
ஆஹா..அற்புதம்..பாரதமாதாவின்??? செருப்பை கொண்டுதான் உங்களை....
அப்பாடா..!
சுகுணா பழைய பார்முக்கு வந்துட்டாரு..!
இனிமேலாவது அண்ணனைத் தெரியாதவங்க, தெரிஞ்சுக்கிட்டு, புரிஞ்சுக்கிட்டுப் பேசுவாங்கன்னு நினைக்கிறேன்..!
வாழ்க கமல்ஹாசன்..!
ஆனாலும், தெருச்சண்டையில் ஈடுபடுபவர்போல் சக பதிவரை கடுமையான சொற்களால் அழைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!
கோபத்தைக் குறைங்கோ சாமி..!
//பாரதமாதாவின் சைஸாகக் கூட இருக்கலாம்.//
வாய்விட்டு சத்தமாய் சிரித்தேன்.
அப்புறம் பஞ்சதந்திரம், micheal mathana kamarajan குப்பை படம் என்று சொன்னீர்கள். அவை சிறந்த நகைசுவை படம் அல்லவா? பஞ்சதந்திரத்தில் யூகிசேது dailogue மூலம் பார்ப்ப்னியத்தை கிழிக்க வில்லையா கமல்? micheal mathana படத்திலும் இந்த சாடல் உண்டு.
ஆனால் ஹே ராமிலும், தேவர்மகன் மற்றும் உ.போ.ஒ.னிலும் கமல் சறுக்கியிருப்பது உண்மை.
*****
குறைந்தபட்சம் மாற்றுப்பார்வைகளை ஆதரிக்கிற கணிசமான குரல்கள் இருந்தன. ஆனால் இப்போது அத்தகைய குரல்கள் குறைந்து போனது வருத்தமளிக்கிறது.
*****
உங்களை போன்றே உங்கள் கருத்தை ஆதரித்து பலரும் எழுதி தானே வருகிறார்கள். யுவகிருஷ்ணா எழுதினார், அதிஷா எழுதினார், ஆழியூரான் எழுதினார், சென்ஷி அருமையாக அவரது அனுபவத்தையும் சேர்த்து எழுதியுள்ளார். மாதவராஜ் எழுதியுள்ளார். பின்னூட்டத்திலும் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் ? உங்கள் எதிர்பார்ப்பு தான் என்ன ?
உன்னைப்போல் ஒருவனைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்களே அதேதான் நடந்திருக்கிறது. எத்தனை நாத்திகன் வேடம் தரித்தாலும் ஆழ்மனத்தில் செலுத்தப்பட்டிருக்கும் வெறுப்புணர்வே திரைவடிவம் எடுத்து வந்திருக்கிறது. கோத்ராவிற்கு பின்பான இன அழித்தல் நோக்கிலான வன்முறையை தீவிரவாதியின் மூன்றாவது மனைவியின் அதுவும் 16வயது பருவமங்கையின் கோரமரணமாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் இந்துத் தீவிரவாதம் நியாமான ஒன்றே என்பதை திறமையான திரைவடிவம் மூலம் மறைத்துக் கொண்டு வந்திருக்கிறது. பிஜெபியின் மோடி நீட்டி முழக்கிக்கொண்டிருப்பதை கமல் திரைவடிவமாக்கி இருக்கிறார்.வெட்னஸ் டே வில் பேரை மறைத்திருப்பதற்கும் இதில் பேரை மறைத்திருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. காமன்மென் எதிர்வினை புரிந்தால் விசில் பறக்கும். பாதிக்கப்பட்டவன் எதிர்வினை புரிந்தால் அது தீவிரவாதம் என்று கட்டமைக்கப்படும். இன்னொன்று தீவிரவாதம் என்ற சட்டகத்துக்குள் கொண்டுவந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற பாசிசத்தின் போக்கே மறைந்திருக்கிறது.
சிறப்பான தோலுரிப்பைச் செய்திருக்கிறீர்கள். ஆடை களைந்த அம்மணத்தைக் கண்டு பலர் துடிப்பது உணர்ந்து கொள்ளத் தக்கதே.
சுந்தர்ஜி, எந்த பிரச்சினையிலும் தனிநபர் தாக்குதல் கூடாது என்பவர் நீங்கள். உ.போ.ஒ ஆதரிப்பதை ஆபத்து என்றவர், பதிவின் தலைப்பே உஙக்ளுக்கு தவறாக தெரியவில்லையா?இப்படி தலைபு வைப்பதால் நாளையே எதிர்பதிவு போடுபவர் “****” என்று எழுதுவது ஆபத்தில்லையா?
சுகுணாவின் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். உபயோகித்த வார்த்தைகளுக்கு முக்கியம் தராமல், சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
சுகுணா, சரியான விதயத்தை தவறான கண்ணோட்டத்திலும், தவறான விதயங்களை சாதகமான கண்ணோட்டத்திலும் பார்க்கும் இயல்பு நிறைய பேருக்கு இருக்கிறது. A Wednesday யை முதலில் பாருங்கள்.நீரஜ் பாண்டே, அனுபம் கேர், நஸ்ரூதீன் ஷா, ஜிம்மி, மற்றும் அமீர் பஷீர் இவர்கள் எல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டார்களா? கமல்ஹாசன் என்னும் கலைஞன் பிராமணன் அ பிராமணன் எங்கிருந்து வந்தது? உங்கள் பிரச்சனையை ஒரு திரைப்படத்தின் மீதும் அதன் படைப்பாளியின் மீதும் ஏற்றிப் பார்த்து குற்றம் கண்டுபிடிப்பது எவ்வகை நியாயம்? நான் இந்துத்துவாவிற்கோ தீவிரவாதங்களுக்கோ கொடி பிடிப்பவள் அல்ல, ஆனால் உங்கள் கருத்தியிலை வலியன திணிப்பதாகவே தோன்றுகிறது.
common man என்ற பதத்தின் மீது உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு, நாம் எல்லாம் அதுதானே? நமக்கு பதவி இருக்கிறதா, we do not have any power, rather we are forced to accept whatever shit put on our head. we pointlessly accept anything and everything. eventhough its shame on our part, we dont have any option. thats our stand. நம்மிடம் வார்த்தைகள் மட்டுமே கைவசம் இருக்கிறது, ஆனால் அது துப்பாக்கியின் தோட்டாக்களை விட வலிமையானது, யார் மனதை துளைத்துவிடக்கூடிய விஷம் அதற்கு வாய்த்திருக்கின்றது, அப்படித்தானே தோழர்?
உங்கள் கருத்தியலில் சரியே ஆனால் எதை எதன் மீதேற்றிப் பார்ப்பது எனும் புரிதல் தேவை தோழர். உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்தின் பின்னூட்டம் இடவில்லை, தயவு செய்து தவறான வார்த்தைகளையும், தனி மனித குரோதங்களை விட்டொழித்துவிட்டு ஆக்கபூர்வமான விதயங்களையும் அலசி ஆராய்ந்து எழுதுங்கள்.
//பெரும்பான்மையின் பாதுகாப்பு என்கிற ஒரு காரணம் போதும் அவர்களை நசுக்கிக் கொல்வதற்கு’//
இப்போத்தான் எனக்கு அந்தத் தியரியின் பொருள் விளங்குது. அப்போ இலங்கையில் இனத் துடைப்பு நடந்தேறுவதும் அந்த தியரியின் அடிப்படையிலதானா?
அப்போ அந்தத் தியரியை பிடிச்சு தொங்குறவங்களும் அதுக்குத் துணையா?
:((
என்னமோ நடக்குது இங்க.. ஒரு இழவும் புரியலை... ஆனால், சுகுணா! மறுபடி உங்கள் புளொக்கில் சூடு பறக்கிறது. கலகமில்லாமல் நியாயமில்லை. அதிலிருந்தும் இதிலிருந்தும் வடிகட்டி சரியான பக்கத்தை வாசிப்பவர்கள் கண்டடைவார்கள். அதுவே பெரிய உதவியல்லவா? அடிச்சு ஆடுங்க:)
என்ன பிரச்சனை சார் உங்களுக்கு? A Wednesday வந்தபோதும் இதே மாதிரி விமர்சனம் பண்ணினீங்களா?
நல்லா கண்டுபுடிச்சு வச்சுருக்கீங்கப்பா பின் நவீனத்துவம், கட்டமைப்பு, பொதுப்புத்தி...இப்படி அஞ்சாறு வார்த்தைகளை. வேலைய முடிச்சுட்டு வந்து, ராத்திரி டூரிங் டாக்கீசுல மண்ணுக்கூட்டி படம் பாக்குற எங்களுக்கு ஒரு எழவும் தேவையில்லை. படம் பார்த்தமா...பின்னாடி இருக்கிற மண்ணத் தட்டுனமான்னு போய்கிட்டே இருப்போம். அத வுட்டுட்டு படத்துல அவுரு சிரிக்கறதுக்கு ஒரு அர்த்தம், ஒண்ணுக்குப் போறதுக்கு ஒரு அர்த்தம்னு எழுதிகிட்டு...இப்படி வெகுண்டு எந்திரிக்கிற புரட்சிக்காரர் நீர் நம்ம மாண்புமிகுக்கள் பண்ற அக்கிரமத்தையும் தட்டிக்கேட்டா பரவால்ல. ஆனா செய்ய மாட்டீரே? எங்கூர்ல ஆத்து பைப்ல தண்ணி வரமாட்டேங்குது. குறைஞ்ச பட்சம் வந்து அதையாவது தட்டிக் கேட்டீர்னா...உங்க மேதாவித்தனத்தயெல்லாம் ஒத்துக்குறேன். எங்கூரு மாப்ஜான் பாய் என்னய மாப்ளன்னு தான் இன்னமும் கூப்புடறாரு.
நல்ல கட்டுரை. கமல் தன் 'முற்போக்காளர்' முகமூடியை முற்றிலும் இப்படித்தின் மூலம் துறந்து உள்ளார். அவர் மட்டும் அல்லாமல் பல பூனைகளுக்கு மணி கட்டிஉள்ளது இப்படம்.
கிழ் வரும் வரிகள் அருமை.
//இது ஒரு சினிமாதான், சினிமாதான் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்பவர்கள்தான் நான் பதிவு எழுதுவத்ற்கு முன்பு ‘உன்னைப் போல் ஒருவன்’ தமிழகத்தைக் கடைத்தேற்ற வந்த படம் என்றார்கள், தார்மீகக் கோபம் என்றார்கள், ‘இந்த மாதிரியான படம்தான் வராதா என்று எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தோம்’ என்றார்கள்.//
இப்படத்தை நானும் பார்க்கும் தூர்பாக்கியம் நேர்ந்தது அதற்கு மேல் எனக்கு ஏற்பட்ட வருத்தம் பல வலைபதிவர்கள் இதை புகழ்ந்த விதம். நம் ஊரில் சினிமாவின் தாக்கம் தெரிந்தும் இப்படத்தை படமாக மட்டும் பார்க்க வேண்டும் என்றால்.. அடங்கொய்யால
சுகுணா உங்கள் கட்டுரைக்கு வாழ்த்துகள்.
///இதே கமல்ஹாசன்தான் நண்பர்களே, ஈழப்பிரச்சினைக்காக திரையுலகம் நடத்திய கூட்டத்தில் ‘‘அடக்குமுறை இருக்கும் நாட்டில் தீவிரவாதம் வெடித்தே தீரும்’’ என்று ஆவேச வேடம் போட்டவர். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே கமலின் சமூக அக்கறையின் நிறம் என்ன?//
சந்தேகமில்லாமல் காவிதான். பிறகு, எவ்வளவு நாள்தான் சிவப்பு சாயம் பூசிக்கொண்டு அலைவது? அலுத்துவிடாதா? அதான் இந்த புதிய காவிரூபம். சுயமரியாதைத் திருநாட்டில் தனக்கு பிசினஸ் இருந்திராவிட்டால் அவ்வப்போது பூசிக்கொள்ளும் கருப்பு வண்ணமும் இவருக்கு தேவைப் பட்டிருக்காது.
மேலும் நடிகன் என்பதாலேயே எப்போதும் ஒப்பனையிலேயே இருக்க முடியுமா சுகுணா? முற்போக்கு வேடத்தை கலைத்து அவ்வப்போது உண்மையான முகர கட்டையுடன் ஹாயாக உலாத்துவதற்குத்தான் இம்மாதிரியான படங்களை எடுக்கிறார் கமல்.
இந்த மொள்ளமாறிகளுக்கு 'சோ'மாறிகள் தேவலாம்!!
//நான், வரவணையான், முத்துதமிழினி, அசுரன், ராஜாவனஜ் என்று பலரும் தீவிரமாகப் பதிவுலகில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ( அனேகமாக ரோசாவசந்த் தான் எழுதுவதை நிறுத்த தொடங்கிய காலகட்டம்) //
பரவாயில்லை! இந்த அளவிற்காவது என் பின்னூட்டத்திற்கு எதிர்வினையாற்றும் ̀நேர்மையும் மாற்றுப்பார்வையும், உரையாடும் தன்மையும்' உங்களுக்கு இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி!
திரு. யமுனா ராஜேந்திரன் இந்த பதிவை/பின்னூட்டத்தை படிப்பாராயின் அவருக்கு என் தனிப்பட்ட கேள்வி(யை, பதிவுடன் தொடர்புடையதாயினும், கேட்பதற்கு ஸாரி)!
சாருவும், அ.மார்க்ஸும் வெட்நெஸ்டே படம் குறித்து நல்லவிதமாக எழுதியிருந்ததாக பின்னூட்டியிருந்தீர்கள். சாரு சாமியார், ஜோசியக்காரன், மந்திரவாதி, அரசியல்வாதி போல எந்த கேனக்கருத்தையும் கவர்ச்சி ஃபார்மேட்டில் திடுதிப்பென போடுவார். கேட்க அறிவுஜீவியிலிருந்து பாமரர் வரை பலர் இருக்கிறார்கள். அது குறித்து எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் அ.மார்க்ஸ் அவ்வாறு எழுதினார் என்று நீங்கள் சொல்வது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது (சுகுணா திவாகருக்கு இது குறித்து எந்த கேள்வியும் அடுத்த பதிவில் கூட எழவில்லை என்பது எனக்கு ஆச்சரிமாக இல்லை). அ.மார்க்ஸ் இப்படி ஒரு அரசியல் ரீதியான அபத்தத்தை செய்வார் என்று என் மனம் நம்ப மறுப்பதால், இது குறித்த அ.மார்க்ஸின் கட்டுரை அல்லாது மேற்கோளை, என் சொந்த தெளிவிற்காக இங்கே தரமுடியுமா? மிகவும் நன்றி!
மாற்றுப்பார்வை என்ற வகையில் உங்கள் கருத்துகளை ஆதரிக்கிறேன் சுகுணா. ஆனால் அதேநேரம் ஒரு பொழுதுபோக்குப் படைப்பில், சின்னச் சின்ன விசயங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.
//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
உன்னைப் போல் ஒருவன் படத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்லி இவர்கள் செய்யும் பல செயல்கள் மிக ஆபத்தானவை. வேறு என்ன சொல்ல :(
//
உங்களுடன் முற்றிலும் வேறுபடுகிறேன் சுந்தர்ஜி.. படத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள், மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள், இதை ஏன் நீங்கள் உங்களுக்கு எதிரான மாற்றுக்கருத்தாக ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது? அந்த மாற்றுக்கருத்துகளே தவறு என்பது போல் நீங்கள் சொல்வதாகப் படுகிறது. தவறென்றால் சொல்லவும்.
Intruthaan athika pathivukalai paarkkiraen. Mikavum varunthukiraen ungalin pathivukalai ariyathu irunthamaikku.
Vazhthukiraen maelum vanankukiraen ungal unarvukkaka. Thodarungal ungal payanathai
நிறைய படிக்கிறீர்கள். கூர்ந்த வாசிப்பும் அலசி ஆராயும் தெளிவும் இருக்கிறது என்பது புரிகிறது... எந்த பத்திரிகையிலும் இப்படி எழுத முடியுமா..??? அதற்கு தானே வலை..?? கட்டற்ற சுதந்திரம்..??
சிறப்பாய் use பண்ண வேண்டியதையெல்லாம் Misuse பண்ண வேண்டுமா..?? Oh. நீங்களும் Commaan man..??
ஆனாலும் தயவு செய்து தவறான வார்த்தைகளையும், தனி மனித குரோதங்களை விட்டொழித்துவிட்டு ஆக்கபூர்வமான விதயங்களையும் அலசி ஆராய்ந்து எழுதுங்கள்.
உமா ஷக்தியை வழி மொழிகிறேன்.
கமல் ஒன்றும் லட்சிய புருஷன் இல்லை நடித்து பணம் சம்பாதிக்கும் ஒருவன் நடிப்பை தொழிலாக பார்த்து கொண்டுள்ளவன் . உன்னை போல் ஒருவன் சினிமாவினால் இந்தியாவில் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை . படம் பிடித்திருந்தால் பாருங்கள் . அதை விட்டு விட்டு கமலிடம் நீங்கள் எதிர் பார்ப்பது முட்டாள் தனம் .........
:-)
வெண்பூ, கண்ட கருமாந்திரங்களையும் கொட்டிச் செல்வதா ’கருத்துகள்’? ஒருவர் 99 பேர் ஹிந்துகளாக இருந்து மிச்சமுள்ள ஒருவர் மட்டும் முஸ்லீமாக இருந்தால், என்னதான் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொண்டாலும், அந்த ஒருவர், அப்படித்தான் இருப்பார் என்கிறார். இதையெல்லாம் என்னால் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கார்க்கி, எல்லாக் காலத்திற்குமான எல்லாச் சமயத்திற்குமான ஃபார்முலாவெல்லாம் என்னிடம் கிடையாது. தனிமனித தாக்குதல் வேண்டாம் என்பது ஒரு பண்பு, அவ்வளவுதான்.
வெண்பூ, சொல்ல விட்டது - இன்னொருவர், எனக்கு இடைவேளையில் கிடைக்கும் puffs தான் முக்கியம் என்று அரசியல் நீக்கம் செய்யப்பட்டவராகப் பேசுகிறார். இன்னும் சிலர், இப்படி எழுதுவது போலி செக்யூலரிசம் என்று சொல்லும் நிலைமைக்குச் செல்கிறார்கள். நீங்கள் பலர் எழுதியதைப் படிக்கவில்லை போலும்.
உண்மைத்தமிழன்,
பத்தாம் நம்பர் செருப்பு என்பது நாகரீகமான பாராட்டுதலா?
அசோக்,
பஞ்சதந்திரம், மைக்கேல்மதன காமராஜன் படம் குறித்து நான் எங்கே பேசியிருக்கிறேன்?
கார்க்கி,
கரப்பான் பூச்சி என்பது மோசமான அல்லது இழிவுபடுத்தும் வார்த்தை அல்ல. தோன்றிய காலத்திலிருந்தே இன்னமும் அழியாத ஒரே இனம் கரப்பான்பூச்சிதானாம்.
A Wednesday, when it was released was criticized equally for its content even in the mainstream press.
Either it be Nasrudeen Shah or it be Amir Khan or whoever it be, the film is to go along with the 'common man' and Kamal Hasan is no exception.
Why blame Kamal Hasan, he is after all a film maker.
உமாஷக்தி,
முடியல்ல்ல! பழையபடி 'ஓரோண் ஒண்னு" என்று என்னால் கிளாஸ் எடுக்க முடியாது. முடிந்தால் அரசியல் தொடர்பான கட்டுரைகளைத் தேடிப் பிடித்துப் படியுங்கள், இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கவிதை எழுதுங்கள்.
தமிழ்,
ரொம்ப நாளாச்சுல்ல இந்த மாதிரி சண்டை போட்டு. இடையில் நீங்கள் வந்து 'நானும் ரவுடிதான்' என்று சண்டை போட்டீர்கள். இருந்தாலும் நாங்க போடற சண்டை அளவுக்குத் தூள் பறக்காது!
ரோசா,
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். போகிற போக்கில் எல்லோருக்கும் சொல்வதைப் போல் உங்களுக்குப் பதில் சொல்ல முடியாது இலலியா? எனக்கும் ய.ரா எழுதிய விஷயம் குறித்து சந்தேகம் வந்தது. ஆனால் தோன்றுகிற விஷயத்தை எல்லாம் ஒரு பதிவு எழுதும்போது எழுதி விட முடிவதில்லையே! அதுவும் அ.மார்க்ஸ் உயிர்மையிலேயே வெட்னெஸ்டேஏவைப் பாராட்டிக் கட்டுரை எழுதியிருந்ததாக ய.ரா கூறியிருக்கிறார். அ.மா உயிர்மையில் எழுதி பல ஆண்டுகள் இருக்கும்.
வெண்பூ,
சுந்தர் குறிப்பிடுவது உ.போ.ஒவை ஆதரிப்பது, எதிர்ப்பதைப் பற்றியல்ல. பெரும்பான்மைவாதத்தை முன்வைப்பதை.
தமிழ்நதி,
நான் அ.மார்க்சின் ரசிகன் இல்லை. குஷ்பு ரசிகன்.
//இப்போதும் கூட அவர்கள் விஜய்யோடும் அஜித்தோடும் கமலை ஒப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். போக்கிரியையும் உ.போ. ஒவையும் ஒப்பிடுவதை ரசிக்க மாட்டார்கள்.//
விஜய் வாழ்க!
இதிலென்ன பிரச்சனை உங்களுக்கு, விஜய்யோடும் அஜித்தோடும் கமலை ஏன் ஒப்பிடணும்? உண்மையிலேயே புரியலை
நல்ல கற்பனை.
ஹேராம் வந்த பொழுது இப்படித்தான் சில ஹிந்துத்வாவாதிகள் கத்தினார்கள். ஹிந்துக்களை கேவலப்படுத்திவிட்டார் என்றார்கள்.
கமல் ஒரு கிரிப்டோ துலுக்கன் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நிச்சயம் அவர்கள் கமலின் ஜாதியைப் பற்றிப் பேசவில்லை. உங்களைப்போல்.
இரண்டு சைடிலிருந்தும் அடி வாங்கும் ஒரே கலைஞன் கமலாகத் தான் இருக்க முடியும்.
வெட்னஸ்டே படத்தில் கமல் பாத்திரத்தைச் செய்தது நசீருத்தீன் ஷா என்ற முஸ்லீம். அவர் படத்தில் ஹிந்துவா முஸ்லீமா கிருத்தவரா என்று கடைசிவரை தெரியாது. அதே தான் இங்கேயும்.
சினிமா என்பது நிஜவாழ்க்கை எதார்த்ததின் பிரதிபலிப்பு. இதற்கு மேல் உங்களைப்போன்ற "அறிவுஜீவிகளுக்கு" என்னைப்போன்ற பொதுபுத்தி மட்டுமே கொண்ட காமன் மேன்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
எங்களையெல்லாம் ஒண்ணும் தெரியாத அப்பாவி கோயிந்துகள் என்று கருதும் "ஆறிவாளிகள்" நீங்கள். உங்களையெல்லாம் நாங்கள் எப்படி "போடா முட்டாள்" என்று திட்ட முடியும் ?
good publicity...
அடுத்தவங்களை திட்டி தானும் பெரிய ஆளுன்னு காமிக்க வேண்டியிருக்கு...
இந்த பொழப்பு தேவையா?
பிடிச்சா பாரு இல்லை போய்கிட்டே இரு. இதுக்கு போயி ஹையோ ஹையோ
//அசோக்,
பஞ்சதந்திரம், மைக்கேல்மதன காமராஜன் படம் குறித்து நான் எங்கே பேசியிருக்கிறேன்?//
போனபதிவில் பேசியிருக்கீங்க...
அட ... இந்த மாதிரி பதிவு போட்ட கூட அதரவு அளிப்பாங்களா?
யாருக்கும் முஸ்லிம் மீது அக்கறை இல்லை. இவங்க குறிக்கோளெல்லாம் பூணூல் போட்டவன திட்டனும். அதான்.
பதிவுலகம் நாரி போய் கிடக்கு சாமியோவ்.
அன்பரே,
நீர் இந்திய முஸ்லீமாக இருந்துகொண்டு இந்தியாவின் சோ கால்டு செக்குலரிசத்தின் மீது ஏறி நின்று கொண்டு இந்தியாவையே தூற்றுகிறீர். இதே போல் ஒரு இந்து பாகிஸ்தானில் பேச முடியுமா என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சலுகையை உரிமையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் மைனாரிட்டி என்பது உண்மையானல் மைனரிடிகளாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர மயிரை புடுங்குவேன்,தயிரை கடைவேன் என்றெல்லாம் பினாத்தி மாநிலத்துக்கு ஒரு மோடியை நீங்களே உருவாக்கி விடாதிர்கள்.
மூர்த்தி
http://www.sandeepweb.com/2006/11/09/hindu-holocaust-a-thorn-by-any-other-name/
ithukku padil sollu mudalla......
ungaluku elam muslim na theviravathi nu soli kudutha thevidiya payan yaru da? vayasana arasiyal vathiyum intha cinema karanungalum thana?
ovoru naalum indha varthaya ketu ketu sethukitu irukom da........ aana evanume mugathuku nera pesa matreenga, apa matum muslim nalavana?
ipadiye pesi pesi neengale uruvaakidatheenga da .
romba nandri sir.....
theaterla , padathula vara oru character padam pakura audiencea pathu pongada thevidiya pasangala nu sona kooda neenga amaithiya padam pathutu manna thatitu poiduveengala? yarayo thitina , yaroyo keli senja kai thati siripeenga la? ena manusanga da neenga? padam pakura elarayum santhosa paduthanum yar manasayum pun padutha koodathu, apdi padam edukuravan than nala cinema karan. sila nerangalla manasuku nyayama thondra sila visayangala avaruke theriyama padathula kondu vanthudraru . adhuku than ipa vangi katikuraru...... minority majority nu yaro pesirukanga,,, mudhala oru manusana manusana paru...... ulagathula entha prachanayum varathu...
<<<
முதலில் இந்த ‘காமன் மேன்’ என்னும் கருத்தாக்கமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்த காமன்மேனுக்கு 3000 முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது கோபம் வராதாம், வாழ வேண்டிய ஒரு கல்லூரிப் பெண் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும்போது கோபம் வராதாம், ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் ஒரு இனத்தின் மீது படுகொலைகள் ஏவப்படும்போது கோபம் வராதாம்
>>>
சூப்பரு...
ஒரு அற்புதமன அலசல்.
நன்றி சுகுனா.
<<<
வெட்னஸ்டே படத்தில் கமல் பாத்திரத்தைச் செய்தது நசீருத்தீன் ஷா என்ற முஸ்லீம். அவர் படத்தில் ஹிந்துவா முஸ்லீமா கிருத்தவரா என்று கடைசிவரை தெரியாது. அதே தான் இங்கேயும்.
சினிமா என்பது நிஜவாழ்க்கை எதார்த்ததின் பிரதிபலிப்பு. இதற்கு மேல் உங்களைப்போன்ற "அறிவுஜீவிகளுக்கு" என்னைப்போன்ற பொதுபுத்தி மட்டுமே கொண்ட காமன் மேன்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
>>>
@வஜ்ரா,
நான் இன்னும் உ.போ.ஒ பார்க்கவில்லை... "A Wednesday" பார்த்திருக்கிறேன்,
படம் நல்ல படம்தான் கருத்தும் சரிதான். பிடிபடும் தீவிரவாதிகளை நமது நாட்டில் பிரியாணி போட்டு வளர்த்து கொண்டுள்ளனர். தண்டிக்கபட வேண்டியவர்கள், சுதந்திர படுத்த படுகிறார்கள் என்பதுதான், படத்தில் வரும் ஒரு சராசரி மனிதனின் கோபம்.
சரி இந்த சராசரி மனிதனுக்கு இதற்கு முன்பு நடந்த விசயத்தில் கோபமே இல்லையா? இல்ல வராதா?
ஏன் தண்டிக்க பட வேண்டியவர் அடுத்த பிரதமராக கனவு காணவில்லையா?
ஒரு இனத்தையே கொன்று குவித்தவருக்கு என்ன தண்டனை கொடுத்தது, இந்த சமூகம்?
இப்படி பட்ட கோபம் தான், இப்பதிவா இருக்கு இல்லையா சுகுனா?
ஒரு சராசரி மனிதன், முஸ்லீம்களை மட்டும் அழிக்க நினைப்பது என்ன நியாயம்?
தண்டனை என்பது பொது தானே...
Every Action has an Equal and Opposite Reaction -Newton's laws
சில பேர் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமுதாயத்தை பழி வாங்குவதையும், அனைவரையும் குற்றவாளி ஆக்குவதையும் சினிமா என்றுமே ஆதரித்து கொண்டுதான் உள்ளது.
முஸ்லீம்களையோ அல்லது கிருத்துவர்களையோ தாக்கி எடுக்கும் படங்கள் எல்லாம், காமன் மேன் பார்வையில் பார்க்க படுவது கொடுமை.
இப்படிதான், ஹிந்தியில் "சர்பரோஸ்" படம், அதுவும் இப்படிதான்... இந்த படத்தை ஆர் எஸ் எஸ் தலைவர் பார்த்து விட்டு பாராட்டினார். ஏன் என்றால்... முஸ்லீம்களை அதுவும் முஸ்லீம் சமுதாயத்தில் இருக்கும் ஒரு பெரியவர் தீவிரவாதிகளுக்கு உதபுவராக கமிப்பார்கள்.
ஏன், மராட்டில் ஒருவர் இன்னும் தீவிரவாதிகளை உருவக்கும் விதமாக பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறாரே, அவர்களை பற்றி இந்த ஆண்மைவாதிகள் யாரும் ஏன் வாயே திறப்பதில்லை?
எனக்கு ஆதங்கமே, தப்பு, எந்த பக்க இருந்தாலும் அழிக்கனும். ஒரு குறிகிய கண்னோடத்துடன் தான் இதை "COMMON MAN" அனுகிறான்.
அருமை. Back to பார்ம் !!!
//சுகுணாதிவாகர் said...
பழைய பார்முக்குக் கொண்டு வந்ததற்காக நண்பர்களுக்கு நன்றிகள்.//
எதுக்கு ? இந்திய நாய்கள் என்று சொல்ல வாய்ப்பு கிடைத்ததற்கா? நன்றியும் அந்த முட்டாள் நண்பர்களுக்குத் தானே.. உங்களை பழைய பார்முக்குக் கொண்டுவர முட்டாள்கள் தான் தேவைப் படுகிறார்கள். அறிவாளிகள் இல்லை. உங்க லெவல் புரிகிறதா?
நான் பார்ப்பானும் அல்ல. எந்த சாதிய ஆதிக்கத்தையும் ஆதிக்கும் சாதி வெறியனும் இல்லை. இந்தியன் மட்டுமே. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அடையாள அட்டை என்று ஒன்று உங்களிடம் இருந்தால் நீங்களும் நானும் ஒன்றே.. நாய்கள் .
//இந்தியாவில் தீவிரவாததிற்கு வயது வெறும் 50 அல்ல. சாதாரண பிளேக் நோயால் பாதிக்கப்படக் கூடாது என்று எலியை அழிக்கச் சொன்ன வெள்ளைக்காரனை ‘மதத்தை அழிக்கப் பார்க்கிறான்’ என்று வன்முறையைத் தூண்டி விட்டாரே பாலகங்காதர திலகர், ‘இந்து சனாதன தருமத்தைக் காப்பாற்ற ஜார்ஜ் பஞ்சயனைச் சுட்டுக்கொல்கிறேன்’ என்று சட்டைப்பையில் கடிதம் எழுதி வைத்திருந்தானே வாஞ்சிநாதன், ‘‘முஸ்லீம்களுக்கு நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும்’’ என்று 1910ல் தீர்மானம் போட்டதே இந்துமகாசபை அந்த தீவிரவாதத்திற்கு அடுத்த வருடம் வந்தால் வயது 100 ஆகப்போகிறது.//
இந்த அசிங்கத்தையெல்லாம் கட்டிலுக்கடியில் மறைத்துக் கொண்டு ஒரு மூன்றாந்தர வியாபாரியின் படத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டாடுகிறது ஒரு கும்பல். உங்கள் கருத்துக்கள் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.
//உங்க லெவல் புரிகிறதா?//
உன் லெவல் நல்லாவே புரியுது. போயி சோனியா வாழ்க. ராகுல் வாழ்க என கோஷம் போடு தம்பி.
////உங்க லெவல் புரிகிறதா?//
உன் லெவல் நல்லாவே புரியுது. போயி சோனியா வாழ்க. ராகுல் வாழ்க என கோஷம் போடு தம்பி. //
நமக்கு நாமே திட்டமா? வாழ்க வளமுடன். அனானி ஆப்ஷனை ரொம்ப நல்லாவே பயன்படுத்தறிங்க. மேலும், உங்கள் அறிவுரைக்கு நன்றி.
anpulla rosa vasanth-
enna kodumai ithu?
this is what i wrote in my earlier feed back : " what a pity, your asan's and your's favourate writer 'charu' wrote postively aobut 'a wednesday' and celebrate it is as a best film on terrorism.go and read it in uyirmmai some time back". what i addressed towards suguna is " your asna's( ie a.marx's) and your's (ie.suguna's) favourite authour charu wrote that article,not a.`marx. rosa vasnath and suguna, please try to read and understand what is written in before questioning anybody.anpudan yamuna rajendran
தமிழ்நதி,
"நான் அ.மார்க்சின் ரசிகன் இல்லை. குஷ்பு ரசிகன்."
அப்பூபூடியா? நடக்கிறதெல்லாம் பார்த்தா அப்படித் தோன்றவில்லை. கற்பூரம் ஏத்தி அணைச்சு சத்தியம் பண்ணினாலும் யாரும் நம்பமாட்டார்கள்.:) (கற்பூரம் பற்றி எழுதியதால் என்னை இந்துத்துவவாதி என்று யாரும் அறிவித்துவிடமாட்டார்கள் என்று நம்புகிறேன்)
யமுனா, தெளிவுபடுத்தியதற்கு நன்றி. எனக்கு தமிழ் பதிவில் இங்கிலீஷ், அதுவும் தமிழ் கலந்த இங்கீலீஷில் எழுதுவது இதெல்லாம் ரொம்ப அலர்ஜி. பொதுவாய் வாசிப்பதில்லை. நீங்கள் எழுதியுள்ளதால் ஏதோ வாசித்தேன். அதில் ஒரு 's மிஸ்ஸாகிவிட்டது. (அ.மார்க்ஸ் என் எதிர்பார்பிற்கு மாறாக செய்யவில்லை என்பது மகிழ்ச்சி.) நீங்கள் இப்படி எழுதுவதையெல்லாம் எழுத்துப்பிழை இல்லாமல் வாசிக்க நேர்ந்தால்தான் மற்றவர்களை கேள்வி/சந்தேகம் கேட்கவேண்டும் என்பதெல்லாம் ஏற்றுக்க்கொள்ளவே முடியாத கருத்து. இந்த மாதிரி பலர் பலவிதமாய் கண்டிஷன் போடுவதை எல்லாம் கண்டுகொண்டால் வண்டி ஓட்டுவது கஷ்டம். மேலும் நான் உங்களை எதிர்த்து கேட்கவில்லை, என் தெளிவிற்காக சந்தேகம் தீர்க்க கேட்டேன் என்பதை நீங்கள் யோசித்தால் புரிந்துகொள்ளலாம். எப்படியிருந்தாலும் மீண்டும் நன்றி!
மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்
எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்பவர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?
நீங்கள் கூறுவது போல கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் தன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?
கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.
பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.
அண்ணா நான்,உங்க கருத்துல,பல இடங்கள்ல்.உடன்படுகிறேன்,சில இடங்களில்,வேறுபடுகிறேன்...
சின்ன விஷயம்...பாதிக்க பட்ட,ஒரு காமன் மேன்(ஹிந்து)அதாவது கமல்,உள்ள இருக்குற தீவிரவாதியை கொண்றால்,அது தெசபக்தி...பாதிக்க பட்ட ஒரு முசுலிம்,அவன் சட்டத்தை கையில் எடுத்தால்,அவன் தீவிரவாதி...ஏன் அவன் ஒரு முசுலிம் என்பதை தவிர வெறு காரணங்கள் இல்லை...இன்னக்கி குஜராத்ல பாதிக்க பட்ட ஒரு முசுலிம்,தன் குடும்பதை கருவருத்தவனை கொண்றால்,அவனை இந்த நாடு,தீவிரவாதி என்று முத்திரை குத்தும்.மக்களும்,அவன் தீவிரவாதிதான் என்று ஊடகங்களால்,பெசவைக்க படுவார்கள்...
இதில் எவன் சட்டத்தை கையில் எடுத்தாலும்,தவறுதான்..அதுவும்,எதும் அறியாத பொது மக்கள் மீது தாக்குதல் ந்டத்துவது,அவன் முசுலிமாக(நானும் ஒரு முசுலிம்)இருந்தாலும்,அது நிரூபிக்க படும் பட்ஷத்தில்,அவனுக்கான தண்டனை,அரபு நாட்டு பாணியில்,பொது இடத்தில் தூக்கு அல்லது சுட்டு தல்லுவது....இது தான் இந்த காமன் மேனின் தீர்ப்பு...
தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு மில்லியன் டாலர்கள்
துலுக்கத் தீவிரவாதிகளை விடுவிக்க போராட்டம் நடத்த: 500000 டாலர்கள்.
கவர்மெண்ட் கட்டும் அணைகளை கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்த: 250000 டாலர்கள்.
மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய: வெறும் 100000 டாலர்கள் மட்டுமே
புத்தாண்டு சிறப்பு சலுகை 50% டிஸ்கவுண்டுடன் கூடிய பாக்கேஜ் உண்டு.
அழைக்கவேண்டிய நபர்கள்:
அருந்ததி சுசான்னா ராய்
எஸ்.ஏ.ஆர்.கீலானி
டீஸ்டா செடல்வாத்
பாகிஸ்தானிலிருந்து போன்கால்கள் இலவசம்.
thozha... vimarsanam sirappaaga irundhadhu. kamal maha kurukke vandhu aen aadinaal nu kandupidichu sollunga
Post a Comment