Wednesday, August 6, 2008

தூங்கும்போது காலாட்டுதல்












நீண்டநாட்களாகி விட்டன. இன்னும் மூன்று மாதங்கள் எழுதாமலிருந்தால் தங்கமணி, ரோசாவசந்த் வரிசையில் 'மூத்த வலைப்பதிவர்கள்' பட்டியலில் சேர்வது உறுதி. நிறைய பதிவர்கள் புதிதாக எழுத ஆரம்பித்திருத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான செய்திதான் என்றபோதும் பெரிதும் ஆழமற்ற இடுகைகளே அதிகம் தென்படுகின்றன. சினிமாச்செய்திகளுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. ம.க.இ.க, பெரியார் திராவிடர் கழகம் போன்ற மாற்று இயக்கத்தோழர்களின் பதிவுகளும் குறைந்துவருகின்றன. சிறுபத்திரிகை மாதிரி எழுத்துப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் இதில் வருந்துதற்குரிய விஷயங்கள் இரண்டு. 'கலக்கப்போவது யாரு' அசத்தப்போவது யாரு' கோவை குணா, ரோபோ சங்கர் வகையறாக்களைப் போல, ரமேஷ் பிரேம், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனைப் பாவனை செய்யும் மிமிக்ரி கலைஞர்கள் பதிவர்களாக மாறியிருப்பது ஒரு சோகமெனில், நடைமுறை சார்ந்த அரசியல் குறித்த அவதானமோ அக்கறை இவர்களிடம் துளியும் இருப்பதாய்த் தெரியவில்லை. பொத்தாம்பொதுவாக இடதுசார்பு அரசியல்தான் எங்களுடையது என்று சொல்லிக்கொண்டாலும் கூட 90 களுக்குப் பின் உலகமயமாக்கல் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் நுழைத்திருக்கும் பாரியத்தாக்கங்கள், இன்னமும் உத்தபுரம் போன்ற பகுதிகளில் பேய்ப்பல் காட்டிச்சிரிக்கும் சாதித்திமிர் இவையெல்லாம் குறித்துப் பின்நவீனப்பூசாரிகளிடமிருந்து ஒரு எழுத்தும் வருவதில்லை. போரடிக்கும் லெக்சர்களும் எழுதிப்பழகும் உத்திகளுமே நவீன வலைப்பதிவு எழுத்துக்களாய் மீளவும் மீளவும் வைக்கப்படுகின்றன. இவற்றினின்று விலகிச் சமீபமாய் என்னைக் கவர்ந்த பதிவர் 'வினவு'. பெரிய ஆர்ப்பாட்டம், பின்நவீனத்துவ டிரெய்லர்கள் எதுவுமின்றி இயல்பாக எழுதுகிறார். குறிப்பாக் ஜெயமோகனும் நாவல்பழமும் குறித்த பதிவு ஜெமோவின் வர்க்கச்சார்பைத் தோலுரிக்கிறது. இந்தியாடுடே முஸ்லீம்களுக்கு எதிராய் வெளியிட்டுள்ள சிறப்பிதழ் குறித்து வினவு மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது துயரளிக்கிறது.

----------------------------

வலைப்பதிவுலகப் பரபரப்புச் செய்திகளை வாசிக்க நேரமில்லை. முதலாவதாகப போலி பிரச்சினை ஒருவழியாக முடிவிற்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக விடாதுகருப்பு பக்கத்தில் மூர்த்தி எழுதிய கடிதம் மட்டும் படிகக நேர்ந்தது. அப்புறம் பெயரிலி அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணியதாக அறிகிறேன். அதுகுறித்தும் முழுதாக ஏதும் தெரியாது. என்றாலும் ஒருநாள் கூகுளில் என் பெயரிட்டுத் தேடியபோது ஒரு அனானிப்பின்னூட்டத்தை வாசிக்க நேர்ந்தது. நான் எனக்கு எதிரான பின்னூட்டங்களை மட்டுறுத்திவிடுவதாகவும் ஆனால் கருத்துச்சுதந்திரம் குறித்துப் போலிக்கூச்சல் போடுவதாகவும் நண்பர் ஒரு வர் எழுதியிருந்தார். திருமணத்திற்குப் பின்னும்கூட 'உன் மனைவியை ஒழுத்ததைக் கதையா எழுதுவியாடா' என்று வந்ததைக்கூட வெளியிட்டிருக்கிறேன். எனவே இத்தகைய குற்றச்சாட்டுகளில் உள்ள அபத்தங்களை நினைத்து சிரிக்க மட்டுமே ஏலும். முன்பு நான் எல்லாவகையான பின்னூட்டங்களையும் வெளியிட்டுக்கொண்டுதானிருந்தேன், அப்பின்னூட்டங்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்றபோதிலும்கூட கருத்துச்சுதந்திரம் என்பதால். ஆனால் பின்னாளில் அத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். கடைசியாக என் பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம் கூட அவ்வாறாக வலையுலகிற்குத் தொடர்பில்லாத வேறுசில மனிதர்களைப் பற்றி அபத்தமும் ஆதாரமற்றதுமான அவதூறுகளைச் சுமந்துவந்தது. எனன செய்ய? எச்சில் இலைகளைக் குப்பைத்தொட்டிகளில்தானே எறியவேண்டும்!
--------------------------------------

தோழர் தமிழச்சி 'வெளியிட வேண்டாம் என்று ஒரு பின்னூட்டத்தை எழுதியிருந்தார். நீண்டநாட்களாக வெளியிடாமலும் ஆனால் அழிக்காமலும் வைத்திருந்தேன். இந்த எச்சில் இலை பதட்டத்தில் தவறிப்போய் வெளியிட்டுவிட்டேன். உடனடியாகச் சுதாரித்து அழித்தும்விட்டேன். அது மொத்தம் என் வலைப்பக்கத்தில் இருந்ததே மூன்று முதல் அய்ந்துநிமிடங்கள்தானிருக்கும். ஆனால் அதற்குள் அந்தப் பின்னூட்டத்தை வைத்து சர்ச்சை உருவானதாக அறிகிறேன். அது எப்படி இருபத்துநாலுமணிநேரமும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார முடிகிறது என்று தெரியவில்லை. உண்ணவும் மலங்கழிக்கவும் தேவையற்ற தேவர்களாயிருக்கக்கூடும்.

பின் நவீனம் பற்றி நான் ,அய்யனார், சுந்தர் ஆகியோர் அறிவதற்கு முன்னமே தன் தொப்புளுக்குக்கீழே முடிவளர்ந்துவிட்டதாகவும் பெயரிலிரி அண்ணை எழுதியிருந்தாராம். வாழ்க பின்நவீனத்துவத்தாத்தா பெயரிலி அண்ணை!
----------------------------------

இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் கருத்துரிமைக்கான போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
------------------------------------------------

ஒருவழியாக மன்மோகன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவை அய்ந்தாண்டுகள் நிலையாக ஆண்ட முதல் பார்ப்பனரல்லாத பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால் சீக்கியச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மன்மோகனாக இருந்தாலும், மாயாவதி மாதிரியான தலித் பிரதமராக இருந்தாலும் இடதுசாரிகளானாலும் அமெரிக்க அடியாட்களாய் மாறுவார்களின்றி வேறில்லை. மாவோயிஸ்ட்களின் அரவணைப்பிலிருக்கும் நேபாளம் என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்.
-------------------------------------
இனி வாரம் ஒருமுறையாவது எழுதவேண்டும். தீவிர இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாத சினிமாக்காரர்கள் குறித்து எழுத எண்ணம். முதலாவதாக கவுண்டமணி குறித்து எழுத ஆசை.‌
+ = &

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

Friday, July 11, 2008

பதில்கள் + ?கள்

கேள்விகளுக்கு நன்றி ஆடுமாடு.

1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)


முதலில் உதாரணத்தின் அடிப்படையில். முதலாவதாக அங்கு இலக்கிய மோதல் நடக்கவில்லை. சங்கரராம சுப்பிரமணியன், விக்கிரமாதித்யன், லட்சுமிமணிவண்ணன் ஆகிய மூன்று கவிஞர்களும் எழுத்ய கூட்டுக்கவிதைகள் ஈராக் மக்களுக்கு எதிரானதென்றும் ஈராக் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்றும் கருதிய ம.க.இ.க தோழர்கள் அவற்றிற்கெதிராக துண்டறிக்கைகளை வினியோகித்தார்கள். இலக்கியங்களுக்கெதிராகப் 'பிட்நோட்டீஸ் அடிக்கக்கூடாது' என்றோ 'புத்தகம் எழுதக்கூடாது' என்றோ சொன்னால் அண்ணாவின் 'கம்பரசத்தை'ப் பாசிசமாக அடையாளப்படுத்தலாம். ஆனால் பிரச்சினை என்னவெனில், புதிதாய் அப்போதுதான் மணமுடித்த சங்கரின் வீட்டுக்குள் புகுந்து தோழர்கள் நோட்டிஸ் வினியோகித்தது, அவரது மனைவியையை மிரளச்செய்தது, அக்கம்பக்கத்து வீட்டாரிடையே சங்கர் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கியது என்பது இலக்கியவாதிகளின் குற்றச்சாட்டு.

கவிஞர்களிடமிருந்து மிரட்டிக் கையெழுத்து வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை ம.க.இ.க தோழர்களிடம் (தனிப்பட்ட முறையில் பேசும்போது) மறுத்தார்கள். சங்கர் எழுதிய கவிதைக்காக அவர் வீட்டாரைக் கலவரப்படுத்துவது என்பது தவறுதான். ஆனால் அதற்காக எழுத்தாளர்களுக்கென்று எந்த சமூகப்பொறுப்புமே தேவையில்லையா என்ன?

உங்கள் அடிப்படையான கேள்விக்கு வருவோம். 'இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா?' என்கிற கேள்வி கேட்கப்படவேண்டிய நபர்கள் ம.க.இ.க போன்ற புறச்சக்திகள் அல்ல, உண்மையில் இலக்கியவாதிகளிடம்தான் இந்தக் கேள்வி எழுப்பப்படவேண்டும். சங்கருக்கு ஆதரவாக, வன்முறைக்கு எதிர்ப்பாக இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதே வன்முறையைச் சக இலக்கியவாதிகளின் மீது (நேரடியாகவும், எழுத்து வழியாகவும்) செலுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது எழுத்தாளனை வீடுபுகுந்து அடிப்பது, வக்கீல் நோட்டீஸ் விடுவது, போலீஸ் ஸ்டேசனில் புகார்கொடுப்பது, அடித்து உதைப்பது, செருப்பைத் தூக்கிக் காட்டுவது போன்ற அனைத்து 'உரிமைகளும்' இன்னொரு சக இலக்கியவாதிக்குத்தான் உண்டே தவிர இதில் 'அன்னியர் பிரவேசிக்க' அனுமதியில்லை. வாழ்க கருத்துச் சுதந்திரம்!

3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?

பொதுவாக நாம் இப்போது பயன்படுத்தும் 'எழுத்துத்தமிழ்' என்பது பல வட்டார வழக்குகளின் அடையாளங்களின் மீதேறி ஒற்றைப்படுத்தும் பாசிச வடிவமே. 19ம் நூற்றாண்டுப் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தால், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்டதே இந்த 'பொதுத்தமிழ்'. இந்த ஒற்றைத்துவ முயற்சிக்கு எதிராக தமிழின் பன்மைத்துவக் கூறுகளை அடையாளப்படுத்தவும், 'இங்கு தமிழ் இல்லை, தமிழ்கள்தான் உண்டு' என்று அ.மார்க்ஸ் அடிக்கடி சொல்வதைப் போல தமிழின் ஒற்றை அடையாளத்தை மறுக்கும் முயற்சியாகவே வட்டாரவழக்கின் அடிப்படையிலான இனவரைவியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய இரண்டு அம்சங்கள் வட்டாரவழக்கு என்பதும் ஒருபடித்தானதல்ல, கோவை வழக்கு என்பதில் கவுண்டர் வழக்கிற்கும் அருந்ததியர் வழக்கிற்கும் பறையர் வழக்கிற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அதேபோல் இதுவரை கவிதைகளும் கதைகளுமே வட்டார வழக்கில் வந்திருக்கின்றனவே தவிர தமிழில் எழுதப்படும் அனைத்துக்கட்டுரைகளும் 'மய்யத்தமிழையே' பிடித்துத் தொங்குகின்றன.

4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...

மகாஸ்வேதாதேவியின் '1084ன் அம்மா'. மேற்கு வங்காளத்தில் பூர்சுவாவாகப் பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து போலிசாகச் சுட்டுக்கொல்லப்பட்ட ப்ரீதி என்னும் இளைஞனின் அம்மாவின் நினைவுகள், உணர்வுகள். மேட்டுக்குடியினரின் போலித்தனம், ஒரு சமூகப்போராளியைத் தாய் எப்படிப் புரிந்துகொள்கிறாள் என்பது குறித்த வேறு நோக்கு. பின்னுரையில் வ.கீதா குறிப்பிடுவதைப் போல 'துயரத்திற்கு மாற்றாய் நீதி'யை முன்வைக்கிறது நாவல்.

2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்லை.

இனி ஜமாலனுக்குச் சில கேள்விகள்

1. ராமானுஜத்தின் 'காந்தியின் உடல் அரசியல்' விமர்சனக்கட்டுரையில் (தீராநதி)சமணம் இந்துமதத்தின் ஓரங்கமாகவே மாறிப்போனதையும் அதற்கான கூறுகள் அதன் இயல்பிலேயே அமைந்துள்ளதையும் மாற்றத்தை ஏற்காத அதன் தன்மை குறித்தும் விளக்கிக் காந்தியைச் சமணமரபில் பொருத்தி நீங்கள் கூறுவது சரியானது என்றே கருதுகிறேன். அதேபோல் பெரியாரைப் பவுத்தமரபில் பொருத்திச் சொல்ல இயலுமா?

2. தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து...

3. ஆங்கிலம் தெரிந்தால்தான் பின்நவீனத்தைப் புரிந்துகொள்ள இயலுமா?

4. 'சாரு தன் பக்கத்தில் என் வலைப்பூ பற்றிக் குறிப்பிட்டதால் 10 கோடி ஹிட்ஸ் வந்தன' என்று புல்லரிக்கும் பதிவர்கள் குறித்து...

Thursday, July 10, 2008

கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!

நேற்று மதியம் நண்பர் ஜ்யோராம்சுந்தரின் 'காமக்கதைகள்' பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன். (சுந்தர் முழுமையாக த.மணத்திலிருந்து நீக்கப்படவில்லை என்று நம்புகிறேன்.) சுந்தரிடம் பேசியபோது இதுகுறித்த முன்னறிவிப்பு மின்னஞ்சல்கள் தனக்கு எதுவும் தமிழ்மணத்திலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின்போது தோழர்.பைத்தியக்காரன், 'தமிழ்மணம் ஒரு பதிவரை எந்த அடிப்படையில் நீக்குகிறது?, குறிப்பாகத் தமிழச்சி' என்று அச்சந்திப்பிற்கு வந்த தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவரான தோழர்.சங்கரப்பாண்டியனைப் பார்த்து வினவினார்.

அப்போது சங்கரப்பாண்டி, " ஒரு பதிவர் தன்னைத் தமிழ்மணத்தில் இணைக்கும்போது அளிக்கப்படும் விதிகளின் அடிப்படையிலேயே அவர் நீக்கப்படுகிறார்' என்றும் 'அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பான்மையினரான பதிவர்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வரும்போது நீக்கப்படுகிறார்' என்றும் தெரிவித்தார்.

ஆனால் பைத்தியக்காரனின் கேள்விக்கு முன்னால் ஒரு பதிவர் சுந்தருக்குத் தொடர்ச்சியான நெகட்டிவ் ரேட்டிங் விழுவது குறித்தும், வெகுஜன அபிப்பிராயம் என்ற அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடுவது சரியா என்னும் பொருள்பட ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நானும் தமிழச்சி உள்ளிட்ட பல பதிவர்கள் வெகுஜன அபிப்பிராயத்தின் அடிப்படையில் மட்டுமே நீக்கப்படுவது என்பது எப்படிச் சரியாகும், உதாரணமாகப் பார்ப்பனியம் குறித்து ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால், பல பார்ப்பனர்கள் அவர் குறித்து அதிகப் புகார்களை அனுப்பினால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது எப்படிச் சரியானதாக இருக்கும் என்று கேட்டேன். ஆனால் சங்கரப்பாண்டி 'தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் அந்தப் பதிவுகளைத் தான் படிப்பதாக'த் தெரிவித்தாரே தவிர, அவரளித்த பதில்கள் திருப்தியளிப்பதாயில்லை.

இப்போது சுந்தர் விவகாரத்திற்கு வருவோம். சங்கரப்பாண்டி சந்திப்பில் தெரிவித்ததைப் போல குறைந்தபட்சம் எச்சரிக்கைகளாவது சுந்தருக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும். எந்த முன்னறிவிப்புமின்றி பதிவர் நீக்கப்படுவது ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல.

மேலும் வெகுஜனத்தளங்களில் எழுத விருப்பமில்லாதவர்கள்/ வாய்ப்பற்றவர்களே பெரும்பாலும் வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இது தணிக்கைமுறையினின்று தப்பிக்கும் சுதந்திரம். ஆனால் மீண்டும் அதே வலைப்பூக்களை வழக்கமான தணிக்கைமுறைகளைக் கொண்டே கழுத்தை நெறிப்பது எவ்வகையில் நீதி?

தமிழ்மணம் இதுகுறித்து தெரிவித்துள்ள விளக்கத்தில் 'தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.
'என்றும் 'தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.' என்றும் தெரிவித்துள்ளது. அப்படியானால் 'பக்தி' என்று தலைப்பிட்டு பதிவின் உள்ளே காமக்கதைகள் எழுதினால் பிரச்சினையில்லையா?

பொதுவாகவே கலைஞர்களும் எழுத்தாளர்களும் வெகுஜன அபிப்பிராயங்களுக்கும் பொதுப்புத்திக்கும் அப்பாற்பட்டவட்டவர்கள். பொதுப்புத்தியை அப்படியே பிரதிபலிக்க செய்தித்தாள் நிருபர் போதும், கலைஞர்களோ எழுத்தாளர்களோ தேவையில்லை. ஆனால் அத்தகைய எழுத்துக்களை மீண்டும் பொதுப்புத்தி அடிப்படையிலேயே மதிப்பிடுவதன் மூலம் தமிழ்மணம் 1, மாற்றுச்சிந்தனை எழுத்தாளர்களை உரையாடல் வெளியிலிருந்து அப்புறப்படுத்துகிறது அல்லது, மீண்டும் பொதுப்புத்திக்குத் தள்ளுகிறது. இது ஆரோக்கியமான எழுத்துக்களை வளர்க்காது. இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். சுந்தர் நீக்கப்படும்போது படித்த அறிவுஜீவிகளிடமிருந்து வருகின்ற இக்கண்டனங்கள் தமிழச்சியை நீக்கப்படும்போது வராததையும் தொடர்ச்சியான கள்ளமவுனம் கடைப்பிடிக்கப்பட்டதையும் நாமறிவோம். குறிப்பாக பைத்தியக்காரன் போன்ற மாற்றுச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தி எம்போன்றவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பதிவர்களும் மவுனம் சாதித்தபோது அதிர்ந்த நான் நேரடியாகவும் பகிடியாகவும் ஒருமுறைக்குமேல் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால் பதிவர் சந்திப்பின்போதாவது பைத்தியக்காரன் தமிழச்சி நீக்கம் குறித்துக் கேள்வியெழுப்பினார். ஆனால் கருத்துரிமை, பன்மைத்துவம், பெண்ணெழுத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நான் நம்பும் அய்யனார், சுந்தர், ஆடுமாடு போன்ற பதிவர்கள் இதுகுறித்துச் சின்னஞ்சிறு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாதது வருத்தத்திற்குரியதே.

நானறிந்தவரை பின்நவீனம், மாற்றுச்சிந்தனைகளை முன்னிறுத்தும்/ ஆதரிக்கும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் பொதுவெளியில் திணிக்கப்படும் கருத்தியல் மற்றும் நேரடியான வன்முறைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றியே வந்திருக்கிறார்கள்.

மொழிவிளையாட்டு என்பது, மொழியின் அதிகாரத்தைக் கேள்விகேட்கும், அதிகாரத்தை உடைக்கும் நுண்ணரசியல் செயல்பாடு என்றே நான் நம்புகிறேன். அல்லாது அது வெறுமனே வடிவம் மற்றும் உத்தி சார்ந்த எழுத்துமுறையாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமெனில் நாம் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் வாரிசாவோமேயல்லாது வேறொன்றில்லை. அது மீண்டும் விளையாட்டுகளைப் பார்த்து ரசித்து 'பலே' போடும் மேட்டுக்குடி அழகியல் பார்வைகளையே உற்பத்தி செய்யும்.

மாற்று அரசியல்/ இலக்கியம்/ சிந்தனை, அதிகாரமறுப்பு, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் பதிவர்தோழர்கள் இனியாவது குறைந்தபட்சம் தாமியங்கும் வெளியாகிய வலைப்புலத்தில் அமுல்படுத்தப்படும் தணிக்கைக்கு எதிராகவாவது, (தணிக்கைக்கு உட்படுத்தப்படும் பதிவர் மற்றும் அவரது எழுத்துக்கள் தனக்கு உடன்பாடில்லையென்றபோதும்)குரல் கொடுக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய கேள்வி.

தணிக்கையை மறுப்போம். கருத்துரிமைக்காய் நிற்போம். கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!

Monday, June 30, 2008

சிந்தாநதி?

முதலவதாக சுஜிபாலா புகைப்படம் தொடர்பான செய்தி சினிமநிருபர் வலைப்பூவில் இடம்பெறவில்லை, தமிழ்சினிமா வலைப்பூவில்தான் இடம்பெற்றது என்பதைப் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். தவறுக்கு வருந்தி வாசகர்களும் சினிமா நிருபரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தமிழ்சினிமா வலைப்பூவில் வெளியான செய்தி இங்கே.

http://tamilcineema.blogspot.com/2008/06/blog-post_9128.html



ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா என்னும் தலைப்பு ஆபாசமாக இருப்பதால் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்சினிமா பதிவர் தெரிவிக்கிறார். ஆனாலும் எனது முந்தைய பதிவின் கேள்விகள் இன்னமும் அப்படியே மிச்சமுள்ளன. 'ஆபாசம்' பற்றியல்ல, நமது வரலாற்றுப் பிரக்ஞை குறித்தவையே அக்கேள்விகள்.

ஆங்கிலேய ராணுவத்தால் தமிழ்ப்பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகவும் சில பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. நான் அச்செய்தியைப் படித்ததில்லை. வாய்ப்பிருந்தால் அதை வலையிலேற்றி நண்பர்கள் உதவலாம்.

ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை நியாயப்படுத்துவதல்ல எனது நோக்கம். மாறாக தேசபக்தி, தேஅச ஒற்றுமை, கலாச்சாரத் தேசியம், மதப்பெருமிதம் போன்ற பெருங்கதையாடல்களின் வழியாக வரலாற்றைத் திரிக்கும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே அஃது. ஆனால் பெருமளவில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைகளைச் செய்ததாக பேரளவில் ஆதாரங்களில்லை. அப்படியே இருந்தாலும் கூட அது நமது ஆதிக்கச்சாதி வெறியர்கள், இந்தியப் போலீசு மற்றும் ராணுவ 'வீரர்கள்' ஆகியோரோடு ஒப்பிட்டால் சுஜுபியாகத்தானிருக்கும்.

முந்தைய பதிவு தொடர்பாக நண்பர் சிந்தாநதி சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அது தொடர்பாக சில விளக்கங்கள்.

/
அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?/

இயக்குனரும் தயாரிப்பாளர்களும் கருத்தியல் ரீதியாக மாற்றுச்சிந்தனை உடையவர்கள் என்றோ அதற்காகத்தான் வைகுண்டர் பற்றித் திரைப்படம் எடுத்தார்கள் என்றோ அவர்களுக்கு 'கவர்ச்சி', உள்ளிட்ட வியாபார நோக்கங்கள் இல்லை என்றோ நான் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. மேலும் அத்திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் பின்னணி, கருத்தியல் பின்புலம் குறித்தும் கூட எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை வைகுண்டரை நாடார் சமூகத்தைச் சேர்ந்த 'மகானாக'ச் சுருக்கிச் சித்தரிக்கும் நோக்கமும் கூட அதற்கு இருக்கலாம். ஆனால் எனது அக்கறை அதன்பாற்பட்டதல்ல.

/ நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்./

பதிவெழுதும் இந்த நிமிடம் வரை அந்தப் படத்தையே பார்க்காத நான் அதை புரட்சிகரப்படம் என்று எப்படிக் கூற முடியும்? மேலும் எங்கே நான் அப்படிக் கூறியிருக்கிறேன்?

/வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. /

வைகுண்டர் 'பக்தர்கள்' மீது உங்களுக்கு இருப்பதைப் போலவே எனக்கும் விமர்சனங்களிருக்கின்றன. நான் எனது பதிவில் எங்கே அவரை மகானாகத் திருவுருவாக்கியிருக்கிறேன் என்பதைக் குறிப்பிடாமல் போகிறபோக்கில் அவதூறுகளைத் தெளித்துப் போவது நீதியல்ல.

மேலும் குஷ்பு விவகாரம் தொடர்பான உங்களின் ஒப்பீடு ஆகப்பெரிய அபத்தமாகத்தானிருக்கிறது. 'சுஜிபாலா வைகுண்டரின் மனைவியாக நடிக்கக்கூடாது' என்றெல்லாம் நான் உளறவில்லையே, ஒருவேளை ஒப்பீட்டின் பொருத்தப்பாடு என் சிற்றறிவிற்குத்தான் எட்டவில்லையோ, என்னவோ!

Saturday, June 28, 2008

சினிமா நிருபருக்கு ஒரு கவனக்குறிப்பு

சமீபத்தில் 'சினிமாநிருபர்' என்னும் வலைப்பூவில் 'ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா படம்' என்னும் ஒரு கவர்ச்சிப்(?) படம் வெளியாகியிருந்தது. உண்மையில் அது 'அய்யாவழி' என்னும் வைகுண்டத்தோப்பு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் காட்சி. வைகுண்டர் ஒருகாலத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்சமூகத்தில் பிறந்தவர். பார்ப்பன - இந்துப்பெருமத மரபிற்கெதிராக மாற்றுவழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர். அக்காலகட்டத்தில் நாடார் இனப்பெண்களுக்குத் தோள்சீலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதும் அதற்கெதிராகத் தோள்சீலைப் போராட்டம் நடந்ததும் வரலாறு. எனவே வைகுண்டர் காலத்துப் பெண்ணாய் நடிக்கும் நடிகை திரு. சுஜிபாலா ஜாக்கெட் அணியாமல்தான் நடிக்கமுடியும். ஆனால் இத்தகைய வரலாற்று அவலத்தைக் கூட 'கவர்ச்சி விருந்து' படைக்க பயன்படுத்திக்கொள்வது அவமானகரமான விசயம்.

பொதுவாகவே வரலாற்றைத் தவறாகவோ அரைகுறையாகவோ சித்தரிப்பதாகவே தமிழ்ச்சினிமாக்கள் இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தொடங்கி பெரியார் வரை இதில் அடங்கும். இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியதாக ஒரு காட்சி வரும். ஆனால் இந்திய வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களைப் பாலியல் சித்திரவதைகள் செய்ததாகவோ குறிப்புகள் இல்லை. ( இதுபற்றி ஒருமுறை பேசிய அருள்மொழி 'உண்மையில் வெள்ளைக்காரன் தன் பெண்டாட்டியை நேருவிடமிடமிருந்து காப்பாற்றத்தான் சுதந்திரம் கொடுத்து ஓடினான்' என்றார்.) ஆனால் மாறாக இத்தகைய - பெண்களைப் பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் கொடுமைகளை உள்ளூர் இந்திய ஆதிக்கச் சாதிக்காரர்களும் போலீசு ராணுவமும்தான் செய்தன, செய்துவருகின்றன.

வரலாற்றைக் கொலை செய்யும் திருப்பணியைத் திரைப்படங்களும் ஊடகங்களும் போட்டிபோட்டு செய்து வர, இதுகுறித்து எந்த உணர்வுமின்றி வெறுமனே நுகர்ச்சிக்கு அடிமையான நாம் எப்போது வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவர்களாய் மாறப்போகிறோம்?

Monday, June 16, 2008

தசாவாதாரம் < காமக்கதைகள் < டுபுக்கு

'நீலப் படங்களில் நிர்வானப் பெண்கள் ஏன் காலணிகளோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா ' என்று கேட்டேன் நான். 'காலனிநாடுகளில் தயாரிக்கப்பட்டு காலனியாதிக்கம் செய்யப்படும் மூன்றாம் உலகநாடுகளில் விற்பனையும் வினியோகமும் செய்யப்படுவதால்தான்' என்றான் அதீதன்.

மொழமொழன்னு யம்மா யம்மா மொழமொழன்னு யம்மா யம்மா என்றிருக்கும் முத்துராமலிங்கத்தைப் பார்த்தாலே கையடிக்கத்தோன்றுகிறது என்றும் சொன்னான் அதீதன். இந்தக் கதையில் ஏன் அதீதன் வந்தான் என்று நீங்கள் கேட்பதில் நியாயமில்லை. வெர்ஜினாவின் அறுபத்து மூன்றாம் உள்ளாடை தொலைந்துபோனதைப் போல இதுவும் ஒரு புதிரானதுதான். அப்போது வெர்ஜினாவிற்கு பதினெட்டு வயது தொடங்கியிருக்கும். ஷாப்ப்பிங்கிற்காக வெளிசென்றுவிட்டு உள்நுழைந்தபோதுதான் அறுபத்து மூன்றாவது தடவையாக தன் உள்ளாடை காணாமல் போனதைக் கவனித்தாள். அறையெங்கும் அவளது பொருட்கள் கலைத்துப் போடப்பட்டிருந்தன. முக்கியமாய் அவளது ஆடைகள். அவளது மேசையின்மேல் வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் வெர்ஜினாவின் சிகப்பு லிப்ஸ்டிக்கால் இப்படி எழுதப்பட்டிருந்தது.


















அவளுக்கு அப்போதைக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் பின்னாளில் பக்கத்து அபார்ட்மெண்டில் குடியிருந்த இருபத்தாறு வயது இளைஞனும் மொழமொழன்னு ஷேவ் செய்து தினமும் மழித்துக்கொள்பவனும் சாப்ட்வேர் பொறியாளனுமான ராம் அய்யரோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒருநாளில்தான் அந்த குறியீட்டின் பின்னுள்ள ரகசியத்தைக் கண்டுபிடித்தாள்.

வெர்ஜினா தன் ஆடைகள் அனைத்தையும் களைந்திருந்தாள். படுக்கையில் அவள் படுக்கச் செல்வதற்குமுன் ராம் அய்யர் ஏசியை முழுவதுமாக நிறுத்தியிருந்தான். அவளுக்கோ வியர்த்துக்கொட்டியது. 'உன்னை உன் வாசனையோடேயே முகரவும் நுகரவும் வேண்டும் என்றான் ராம்.

அவளது உடலெங்கும் பிசுபிசுத்து மினுமினுத்த வியர்வைத்துளிகளை நாவால் சுவைத்துக்கொண்டே வந்த ராம் இறுதியில் வெர்ஜினாவின் கக்கங்களில் நிலைகொண்டான். அவளது கக்கங்களை நுகர்ந்தபடியே அவளைப் புணரத்தொடங்கினான். குறையொளிக்குகையாய்க் கக்கங்கள் திகழ அக்குள் அல்குலாய் முயங்கி மயங்க ராம் தன்னை இழந்துமீட்டபொழுதுகளின்பின் அவன் பாத்ரூமில் இருந்தபோது அதே அடையாளம் அவனது மேசைவிரிப்புகளில் இருந்ததைக் கண்டாள் வெர்ஜினா.

பாத்ரூமிலிருந்து வெளிவந்த ராமும் அவளது உள்ளாடைகளைக் கவர்ந்துவந்தவன் தான் தான் என்று ஒத்துக்கொண்டான். முக்கியமாக அவளது வட்டுடையின் அக்குள் பகுதியை முகர்ந்தபடியேதான் தன் சுயமைதுனம் உச்சத்தை அடையுமென்றான் ராம் அய்யர். அந்த ஓம் போலத் தோற்றமளிக்கும் சின்னத்தை உற்றுக்கவனித்தால் ஒருசமயத்தில் கக்கங்களைப் போலவும் மற்றொரு சமயத்தில் யோனியை நினைவூட்டுவதைப் போலவும் இருப்பதைக் காணமுடியும். தான் அறுபத்துமூன்று உள்ளாடைகளைக் கவர்ந்ததன் மூலம் தனது பித்ருக்களான அறுபத்துமூன்று நாயன்மார்களின் ஆன்மாக்களை சாந்திப்படுத்தியதாகவும் லிங்கத்தின் அடிப்பகுதியை நன்கு உற்றுக்கவனித்தால் அது பிரேசியரின் வடிவத்தை ஒத்ததாய் இருப்பதை உணர்ந்துகொள்ள முடியுமென்றும் சொன்ன ராம் அய்யர் கலவியின் மூலமாக ஆன்மீக அனுபவத்தை உய்த்துணரமுடியுமென்றான். காமம் மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் பார்த்தால் காமம் தெரியாது. அப்போது அவனது இன்னொரு நெருங்கிய நண்பனான கோபால் அய்யங்காரின் பூர்வீகக் கதையையும் வெர்ஜினா அறிய நேரிட்டது.

கோபால் அய்யங்காரின் முந்தைய பல்பிறவிகளிலொன்றாய் 12ம் நூற்றாண்டில் குலோத்துங்கச்சோழனின் ஆட்சிக்காலத்தில் கடும் பெருமாள் பித்தனாய் வாழ்ந்திருக்கிறான். நம்பியாழ்வார் என்னும் பெயர்கொண்ட அவனுக்கு சைவச்சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கச் சோழனின் மூலமாகவும் அவன்பின்னிருந்து இயக்கிய பரச்சமயமாகிய சைவச்சமயத்தைச் சேர்ந்த சைவர்கள் மூலமாகவும் பல சோதனைகள் நிகழ்ந்தன.

அந்த சோதனைகளின் உச்சகட்டமாக ஒரு கொடுமை அரங்கேறியது. யாருக்கும் தெரியாமல் உள்ளங்கையளவே இருக்கும் ஒரு பெருமாள் சிலையைத் தானே பிரதிஷ்டை செய்து அந்த சைவ இருள் சூழ்ந்த நாட்டில் வணங்கிவந்தான் நம்பியாழ்வார். ஒருநாள் இவ்விசயம் எப்படியோ சைவக்குரவர்கள் வழியாக மன்னனுக்குத் தெரியவர அரசுக்காவலர்கள் நம்பியின் வீட்டைச் சோதனையிட வந்தனர். அப்போது பெருமாளை எங்கே ஒளித்து வைப்பது என்று தெரியாது கலங்கி நின்ற நம்பி கடைசியாய் அதற்கொரு உபாயம் கண்டுபிடித்தான்.

தனது குதப்பகுதிக்குள் கஷ்டப்பட்டுப் பெருமாள் விக்கிரகத்தை நுழைத்துத் தன்னையும் பெருமாளையும் காப்பாற்றிக்கொண்டான். ஆனாலும் நம்பி தன் உயிர்துறக்கும் வரை பெருமாள் விக்கிரகத்தை வெளியே எடுக்கமுடியவிலையென்றும், குதம்வழியாக குடலில் வாழ்ந்ததால் அவர் குதம்நுழைபெருமாள் என்று பெயர் பெற்றார் என்பதும் அய்தீகம்.

இத்தனை நூறாண்டுகளையும் யுகங்களையும் ஜென்மங்களையும் தாண்டி இந்தப் பிறவியில்தான் அமெரிக்காவில் வசித்துவந்த கோபால் அய்யங்கார் சரியாக சென்ற வைகுண்ட ஏகாதசியன்று, அதாவது செப்டம்பர் 11ம் தேதி, முக்கி முக்கி வெளிக்குப் போகும்போதுதான் அந்த பெருமாள் சிலை வெளிவந்ததாகவும் சொல்லிமுடித்தபோது வெர்ஜினவின் அக்குள் முதல் அல்குள் வரையிலான ரோமங்கள் சிலிர்த்தன.

குறுக்கெழுத்துப்போட்டி




















இடமிருந்துவலம்


1. டூ + புடுக்கு =

2. இந்தக் கதையின் முதல்வரி யாருடையது?


3.

4.


5.

வலமிருந்து இடம்

4. இக்கதையின் இரண்டாம் பத்தியில் கிண்டலடிக்கப்படும் தேசியத்தலைவர்

5. நீலப்படங்களில் பெண்கள் காலணி மட்டும் அணிந்திருக்கும்போது ஆண்கள் இதை அணிந்திருப்பார்கள்.

8.

2.


மேலிருந்து கீழ்

1. நம்பி தற்காலப்பிறவியில் செல்லமாக அழைக்கப்படும் பெயர்.

2. பூணூல் - இந்த வார்த்தையில் இடையிலிருக்கும் ணூஎன்ற எழுத்தை எடுத்துவிட்டால் மிச்சமிருக்கும் சொல்

கீழிருந்துமேல்.

1. 'இந்தக் கதை காமத்தின் அதிகாரக் கட்டமைப்பை உடைக்கிறது. இப்படித்தான் அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று பின்னூட்டம் இடப்போகும் பதிவரின் பெயர்.

2. பூலளந்தப்பெருமாள் கோயில் உள்ள இடம்.

Monday, May 12, 2008

நன்றி!

ஒருவழியாக அந்த 'திருமணம் என்கிற கிரிமினல் குற்றம்' நடந்துமுடிந்துவிட்டது. நேற்று ( 11.05.2008 அன்று ) திண்டுக்கல்லில் எனக்கும் ஜெயந்திக்கும் திருமண நிகழ்வு அரங்கேறியது. பறையொலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது (ஒலிநாடாதான்). வருவதாய்ச் சொன்ன ஆதித்தமிழர்பேரவைத் தலைவர் அதியமானும் கவிஞர்கள் விஜயபத்மாவும் தய்.கந்தசாமியும் வெவ்வேறு காரணங்களால் வரமுடியவில்லை. தமிழ்ச்சூழலில் புதிய சிந்தனைகளைத் தொடங்கி வைத்தவரும் எத்தனையோ சண்டைகளுக்கு மத்தியிலும் கண்ணியமான நட்பைத் தொடர்பவனுமாகிய கிழட்டுப் போக்கிரி அ.மார்க்ஸ் தலைமையேற்றார். மணமக்களாகிய நாங்களிருவரும் மாலைமாற்றிக்கொண்டு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றோம். தாலி கட்டுவது என்கிற அதி ஆபத்தான பார்ப்பனீயச் சடங்கு பறையிசையின் பின்னணியோடு நடந்தது ஒரு வரலாற்று முரண்நகைதான். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.பாலபாரதி, பெரியாரியல் முன்னணி அமைப்பாளர் தோழர்.தமிழ்முத்து, புதியதடம் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் மேகவண்ணன், திண்டுக்கல் கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாவட்ட அமைப்பாளரும் அவ்வப்போது சித்தாந்த ரீதியாக மோதிக்கொள்பவருமான தோழர்.விச்சலன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் இலக்கியம், அரசியல், தொழிற்சங்கம் எனப் பரந்துபட்ட களங்களில் ஆர்வங்கொண்டவரும் இளைஞர்களுடனான நட்பை எப்போதும் விரும்பக்கூடியவருமான தோழர். சந்தானம், ஆரம்பகாலத்தில் நான் முரட்டுத்தனமாகக் கவிதைகள் எழுதியபோது அந்தக் கவிதைகளின் அரசியலுக்காய் என்னை ஊக்குவித்தவரும் என்னை நவீனத் தமிழிலக்கியக் களத்திற்கு அழைத்து வந்த இரட்டையர்களான யவனிகாவின் இன்னொருவருமான நண்பன் செல்மா பிரியதர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாகப் பெரியாரின் குடியரசுத் தொகுப்பைக் கொண்டுவருகிற பணியில் தன் நாளைக் கழித்துக்கொண்டிருக்கும்பொழுதும் எனது அழைப்பினைத் தட்டாமல் வந்திருந்து சிறப்புரை வழங்கினார் பெரியார்திராவிடர்கழகத்தின் தலைவர் கொளத்தூர்மணி. உறவினர்களின் கூட்டத்தைவிடவும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையாலாயே அரங்கம் நிரம்பி வழிந்தது. எல்லாத் திருமண விழாக்களையும் போலவே இந்த மணவிழாவிலும் பேசப்பட்ட கருத்துக்கள் எவ்வளவுதூரம் முன்னிருந்த மக்களைச் சென்றடைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் வாழ்வு என்பது எத்தனமின்றி வேறென்ன?. வலையுலகத்தினின்று பிரிய நண்பன் வரவணையான்(எ) செந்தில் 'வயிற்றெரிச்சலுடன்' வாழ்த்துக்களை வழங்கினான். உடனிருந்த நண்பர் நமது வலைச்சுனாமி லக்கிலுக். செந்தழல் ரவி மனைவியோடு வந்திருந்தார். அய்யனார் உள்ளிட்ட ஒருசில வலையுலக நண்பர்கள் தொலைபேசி அழைப்பின் வழியாகவும் குறுஞ்செய்திகளின் வழியாகவும் வாழ்த்துக்களை அனுப்பினர். எல்லோருக்கும் நன்றிகளைச் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறென்ன? நன்றி.