Tuesday, September 4, 2007
மதுரைப் பட்டறையிலுமா மாலன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
சென்னைப் பதிவர் பட்டறை வெற்றிகரமாக நடந்து முடித்ததையடுத்து மதுரையிலும் அந்த கருமாந்திரத்தை நடத்தப்போவதாக தருமி எங்கோ சொன்னதாக ஞாபகம். அனேகமாக அது மதுரை அமெரிக்கன் காலேஜில் நடக்கலாமென்றும் அங்கேயும் 'சிறப்புறை ஆஆஆஆஆற்ற்ற்ற்ற்ற மாலன் அழைக்கப்படுவார் என்று லிவிங்ஸ்மைல் வித்யா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் மாலனின் சிறப்புரை குறித்து நம் கற்பனைக் கழுதையைத் தட்டிவிட்டோம். (கொள்ளுவாங்கிக் கட்டுபடியாகாததால் குதிரையை விற்றுவிட்டோம்)
மாலன் ( கோட்டைச் சரிசெய்தபடி...) : இப்போது சிவாஜிகணேசன் இறந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம். இதோ மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மாலை போடவருகிறார். பின்னாலேயே கவிஞர் வைரமுத்துவும் வருகிறார்.
கருமி : மாலன் சார், இழவு செய்தி சொல்ல இது சன்டிவி இல்லை. அங்கிருந்து நீங்க வெளியே வந்துட்டீங்க. இது பதிவர் பட்டறை.
மாலன் : ஓ, சாரி. சரி எனக்கு என்ன தலைப்பு?
தருமி : வலைப்பதிவாளர்களின் நன்னடத்தைகள்.
மாலன் : இதையேதானே சென்னையிலும் பேசினேன். போரடிக்குது. வேற தலைப்பு கொடுங்க.
தருமி : என்ன தலைப்பு வச்சிக்கலாம்?
மாலன் : ஏதோ ஒண்ணு, ஹிந்து ராம் நல்லவர், பெயரிலி மோசம்ன்னு பேசணும். அவ்வளவுதான்.
தருமி : என்ன பேசணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறமென்ன ஏதாவது தலைப்பில பேசுங்க.
மாலன் : அன்பார்ந்த பதிவுலகப் பெருமக்களே....
ஓசை செல்லா (உடனடியாக எழுந்து) : சார், அமெரிக்கன் காலேஜ் வாசலில் ஒரு அழகான காக்கா பார்த்தேன். பக்கத்துலயே ஒரு பாட்டி வடை சுடறதையும் பார்த்தேன். அதைப் போட்டோ எடுத்துட்டு அரைமணிநேரத்தில வந்திடறேன்.
மாலன் : ஏன் அதுக்கு இப்ப போறீங்க?
செல்லா : நீங்க ஏதாவது உளறிவைப்பீங்க. அவனவன் ஏன் எதிர்த்துக் கேள்வி கேக்கலைன்னு என்னைக் கேட்பான். இது தேவையா எனக்கு?
செந்தழல் ரவி : நான் காலையில கொரியபிகருக்குக் குட்மார்னிங் சொல்ல மறந்துட்டேன். போன்ல குட்மார்னிங் சொல்லிட்டு ஒரு மணிநேரத்தில வந்திடறேன்.
லக்கிலுக் : சார், நான் ஒரு தம்மடிச்சுட்டு மதியத்துக்குள்ள வந்திடுறேன்.
வரவணையான் : சார், எனக்கு அர்ஜெண்டா ஒண்ணுக்கு போகணும். போயிட்டு ஈவ்னிங்க்குள்ள வந்திடறேன்.
மாலன் : நோ, நோ. இப்படி எல்லோரும் போயிட்டா நான் யார்கிட்ட பேசறது. தருமி, செல்லா போட்டோ எடுக்கணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து கேமராவைப் பிடுங்கிவைங்க.
தருமி : சரிங்க சார்.
மாலன் : ரவி போன் பேசணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து செல்போனைப் பிடுங்கிவைங்க.
தருமி : சரிங்க சார்.
மாலன் : லக்கி சிகரெட் குடிக்கப் போகணுங்கிறார். அவர்கிட்டயிருந்து சிகரெட் பாக்கெட்டைப் பிடுங்கிவைங்க.
தருமி : சரிங்க சார்.
மாலன் : வரவணையான் யூரின் பாஸ் பண்னணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து.....
வரவணை : நோஓஓஓஓஒ (அலறுகிறார்) நான் எங்கேயும் போகலை. இங்கேயே இருக்கேன்.
(அதற்கப்புறம் என்ன நடந்தது? மாலனின் உளறலை மதுரைப் பட்டறையில் காண்க).
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
arumai....
ரொம்ப நாள் கழித்து புரியரமாதிரி, அதுவும் நகைச்சுவையாக உங்கள் பதிவு.... தருமியின் நிலையினை நினைத்தேன் மகிழ்ந்தேன்.
சுகுணா,
ரொம்ப சிரிக்க வைக்கிறீங்க. அதுவும் வரவனையான் அலறல்...
புகைப்படத்தில் அழகாய் இருக்கிறீர்கள்!
திரு
:)))))))))))))))))))
//கருமி : மாலன் சார், இழவு செய்தி சொல்ல இது சன்டிவி இல்லை. அங்கிருந்து நீங்க வெளியே வந்துட்டீங்க. இது பதிவர் பட்டறை.//
கருமி அல்ல தருமி.
ஏடாகூடமா பேசுவதே உங்கள் வேலையாகி விட்டது, "இழிப்பிறவி" என்ற வார்த்தைக்கு பதிலாக "தோழர்" என்ற வார்த்தையை நீங்கள் உபயோகப்படுத்துவதைப் போல...
aaka varavanaiyan entale ellorukkum athiruthilla
Varavanaiyan entale something different....
Vara.. name mai paartha vudane..neengka enna avaraipatti elutha pokireerkal enta aavalai doodiyathu... ninaithathai pola... different aaka..enna azhagana character..
good imagination with humour
ஓசி பீர் வாங்கி குடிச்ச்ச பாவத்துக்கு ஆயாவீட்டு சட்டியை இங்கேயும் விடலியா? நல்லா இரு. பொழைச்சுப்பே.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இப்படி வரைமுறையற்று கிஞ்சித்தும் உங்களது தகுதிக்கு பொருத்தமில்லாத ஒரு பதிவை காமெடி என்ற பெயரில் எழுதியிருக்கிறீர்கள். வருந்துகிறேன்..
(இன்னும் எத்தனை தடவைதான் இப்படி வருந்துகிறேன்.. கண்டிக்கிறேன்னு எழுதப் போறேன்னு எனக்கே தெரியலை..)
:))
//*கருமி : மாலன் சார*//
இது வேண்டுமென்றே போட்டதா..?
நல்ல வேளை கிருமி என்று போடவில்லை..அவர் உங்களுக்கு பாடம் எடுத்தாரோ..
பாவமய்யா விட்டுடலாம்..
சேட்டு வீட்டு பையன் மாதிரி இருந்துட்டு..கவிதை என்ற பேரில்..ஏதோ ஒன்ன எழுதுறீரு, காமேடி எழுதுறீரு, கட்டுரை எழுதுறீர்...
சரி..சரி...நான் கேட்ட விசயம்..மதுரை பட்டறையில்..நடக்கும்மா..
/"இழிப்பிறவி" என்ற வார்த்தைக்கு பதிலாக "தோழர்" என்ற வார்த்தையை நீங்கள் உபயோகப்படுத்துவதைப் போல... /
லக்கி, ஏனிந்த கொலைவெறி? தோழர்களிடம் நான் டின் கட்டிக்கொள்ள வேண்டுமென்று உறுதிமொழி எடுத்திருக்கிறீர்களா என்ன?
உண்மைத்தமிழன்,
நீங்கள் எதற்கு வருந்துகிறீர்கள் என்று விளங்கவில்லை. ஒருவேளை மாலன் உங்கள் ஆதர்சம் என்பதாலா?
/...நான் கேட்ட விசயம்..மதுரை பட்டறையில்..நடக்கும்மா/
என்ன கேட்டீங்க?
//சுகுணாதிவாகர் said...
உண்மைத்தமிழன், நீங்கள் எதற்கு வருந்துகிறீர்கள் என்று விளங்கவில்லை. ஒருவேளை மாலன் உங்கள் ஆதர்சம் என்பதாலா?//
எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். வேறு யாரைப் பற்றி எழுதியிருந்தாலும் நான் இப்படித்தான் சொல்லியிருப்பேன்... சக மனிதர்களை நாம் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்கூட பரவாயில்லை.. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்கின்ற அடிப்படை தர்க்கத்தையாவது புரிந்து கொள்ளுங்களேன்..
:)
சொந்த சரக்கா? தழுவலா?
ராமாயணம் எழுதியவனைப் பார்த்து கூட எனக்கு அதிசயமாக இருக்காது, இந்த மாதிரி நகைச்சுவையினை படிக்கையில்...யார் இப்படி சிந்தித்து இருப்பார்கள் என இருக்கும்.
நையாண்டி நன்றாக இருக்கிறது.
மாலன் கூட இதை இரசித்திருப்பார்
உண்மைத்தமிழன் ஏன் ரென்சன் ஆகிறார்?
நிகழ்ச்சி நடந்து முடிந்த அடுத்த நாள். நிழலான ஓட்டலின் மாடியில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய விவாதக் கூட்டம்.
லக்கி லுக் : என்னங்க இந்த ஆள் திருந்தவே மாட்டேங்கறாரு? ஒரு மாசம் முன்னால தானே செமத்தியா உதை வாங்கினாரு? இப்ப திரும்பவும் வந்து , தானே ஆப்பு வெச்சிக்கிறாரு?
வரவனை : ஹெஹ்ஹெஹே.. இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு? அவர் என்ன ஒவ்வொருதரமும் மாத்தியா
சொல்றாரு? விடு மாப்ள...
லக்கி லுக் : அது எப்படிங்க விட முடியும்? போன வாட்டி நமக்கு சான்ஸே குடுக்காம, மேட்டரை பெயரிலி மொத்தமா குத்தகை எடுத்துகிட்டார்... அந்தாளு எழுதறது புரிஞ்சாலாவது உள்ள பூந்து கும்மி அடிக்கலாம்..இந்த வாட்டி விடக்கூடாது.
பாலபாரதி : ரிப்பீட்டேய்ய்ய்
பொட்டீக்கடை : நாம எதுவும் செய்ய வேணாம். எப்படி இருந்தாலும் தமிழ் சசியும் குழலியும் மூச்ச பிடிச்சுகிட்டு
எழுதுவாங்க.. நாம உள்ள பூந்து குத்தாட்டம் போட்ருவோம்....என்ன வரவன, இன்னா சொல்ற?
வரவனை : அதெல்லாம் வேலைக்காவாது.. செந்தழலு.. இங்கிட்டு கொஞ்சம் வா..ராசா..
செந்தழல் ரவி : ஹோய்ய்ய்ய்.... வரவனை... சொல்லு இன்னா செய்யணும்?
வரவனை : ஒரு வேலை பண்ணு. அதாவது, " மாலனே நீ ஒரு ஆண்மகனா?" அப்படின்னு தலைப்பு போட்டு பதிவு எழுது...உள்ள உன் இஷ்டத்துக்கு எதையாச்சும் போட்டுக்க.. கொரியன் ஃபிகர் போட்டோவயும் ரெண்டையும் சேர்த்துக்க..
லக்கிலுக் : அருமை தோழரே... ரவி போஸ்ட் போட்ட உடனேயே.. நம்மாளுங்க உள்ள பூந்து
குத்திருவோம்..அமுக, சுகுணா ரசிகர் மன்றம், போலியார் பாசறைன்னு ஆளுக்கொரு பேர்ல கமண்ட் போட்டு
தமிழ்மணத்துல மேல தூக்கிருவோம்..
பாலபாரதி : ரிப்பீட்டேய்ய்
சுகுணா திவாகர் : தோழர்களே.. எனக்கு என்னமோ இது சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றுகிறது. தோழர் மாலன் பேச்சில் இருக்கும் பார்ப்பனீயக் கூறுகளை அடையாளம் காட்டுவது முக்கியமே தவிர, தோழர் லக்கிலுக், தோழர் வரவனை, தோழர் பொட்டீக்கடை, தோழர் பாலபாரதி ஆகியோர் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை. அப்படிச் செய்தால், நமக்கும் தோழர் மாலன், தோழர் டோண்டு, தோழர் அரவிந்தன் நீலகண்டன், தோழர் ஜடாயு, தோழர் மூர்த்தி போன்றவர்களுக்கும் வேறுபாடு இருக்காது.
வரவனை : அய்யோ....வக தொக இல்லாம எல்லாருக்கும் தோழர் போடறத நிறுத்துங்க மாம்ஸ்
பாலபாரதி : ரிப்பீட்டேய்ய்ய்ய
செந்தழல் ரவி : லக்கி களத்துல குதிக்கிறார்னா எனக்கு ஒண்ணும் பிரச்சனையும் இல்லை.. எந்த நாதாரி என்ன கிழக்கிறேன்னு பார்த்துடறேன்.. ஆனா ஒரு சந்தேகம்..
பொட்டிக்கடை : லேய் சந்தேகத்துக்குப் பொறந்தவனே... நீ ரொம்ப குழப்பாதே லக்கி எல்லாத்தையும்
பார்த்துக்கும்.
லக்கி ( சற்றே தயக்கத்துடன் ) : எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ஆனா, பேர் ரொம்ப கெட்டுப்
போயிருக்கு.... முன்னல்லாம் மேட்டர் கைக்குள்ள இருக்கும் இப்ப கை மீறிப் போச்சே.. அதான் கொஞ்சம்
யோசனையா இருக்கு...
பாலபாரதி : ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
உண்மைத்தமிழன் : அதாவதுங்க....
சுகுணாதிவாகர் : அந்தாளை அப்படியே ஒரே அமுக்கா அமுக்குங்கப்பா.. இப்ப பேச ஆரம்பிச்சார்னா நாளைக்கு
காலையிலேதான் முடிப்பார்....
வரவனை : லக்கி கண்ணு... இதுக்கெல்லாம் யோசிச்சா ஆகுமா? போராட்டம்னா அப்படித்தான் மாம்ஸ்.. நான் இது வரைக்கும் எத்தனை தரம் உள்ள போய் வந்திருக்கேன் தெரியுமா?
பாலபாரதி : ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
செந்தழல் ரவி : எல்லாம் சரிதான்.. ஆக்சுவலா எதுக்காக அவரை அட்டாக் பண்ணனும் கொஞ்சம் தெளிவாச் சொன்னா தேவலை...
குழலி : எதுவேணா பண்ணுங்க.. ஆனால் சட்டத்துக்கு உட்பட்டுச் செய்யணும். அதுவுமில்லாம, அவரோட முழுப்பெயர் மாலன் நாராயணன் ன்னு இப்பதான் தெரிய வந்தது.
ஓசை செல்லா : ஒரு ஐடியா.. நான் வழக்கம் போல, தமிழ் வலைப்பதிவ விட்டு வெலகறேன்னு ஒரு பதிவப்
போடறேன்.. நெறைய கூட்டம் வரும். அடுத்த நாள், 'மாலனுக்கு நச்சுன்னு நாலு கேள்வி' ன்னு ஒரு பதிவைப் போடறேன்.. வெப் டெக்னாலஜி, பாட்காஸ்டிங், ஓஷோ, சென் அண்ட் ஆர்ட் ஆஃப் மோட்டார் சைக்கிள் மெய்டெனன்ஸ் , பன்றி மேய்த்தல், பெரியார் எல்லாத்தையும் கலந்து கட்டி நச்சுன்னு நாலு கேள்வி... மனுஷன் அப்படியே ஆடிப்போய்டுவார்... போட்டுட்டு நாலு நாள் கழிச்சு திரும்பவும் வலைப்பதிவை விட்டு வெலகறேன்னு பதிவைப் போட்டா அப்படியே பத்திக்கும்ல..
கூட்டத்தில் இருந்து ஒரு குரல் : இதுக்காகவே இந்தாள் கோயமுத்தூர்லந்து பஸ் புட்சி வந்து இறங்கியிருக்கான்யா
பொட்டீக்கடை : யோய் ஓசை... இதே மாதிரி சீன் போட்டுட்டே இருந்தேன்னு வெய்யி.. நாளைக்கு நெஜமவே வெளில போறன்னா ஒர்த்தனும் வரமாட்டான்.. பாத்துக்க..
செந்தழல் ரவி : யோவ்... கொஞ்ச நேரம் கம்முன்னு இருங்கய்யா... எனக்கு ஒரு டவுட்டுன்னு சொன்னனே.. நாம எதுக்காக இந்த அட்டாக் பண்றம்?
பொட்டீக்கடை : ங்கொய்யால... உனக்கு அந்த பாலபாரதியே தேவலை
பாலபாரதி : ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்
சுகுணா திவாகர் : இருங்க நண்பர் வரவனையான். செந்தழல் ரவிக்கு விஷயம் புரியவே இல்லை...நான் தெளிவா சொல்றேன்...அதாவது ஈழத்தமிழர்களைப் பற்றி தவறாப் பேசியிருக்கார்.. அதுக்கு எப்படி நாம் எதிர்ப்பு தெரிவிக்கப் போறோம் என்று இப்ப விவாதம் செய்கிறோம். ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..., தோழர் யாராச்சும் சோடா இருந்தா குடுங்கப்பா....
லக்கி லுக் : இப்ப நாம் ஈழத்தமிழர்கள் பக்கம் இருக்கோம் இல்லையா? அதனாலே..
செந்தழல் ரவி : அப்ப நாம பெரியார் கட்சி இல்லையா?
பொட்டீக்கடை : ங்கொய்யால.. அதுக்கும் இதுக்கும் என்னடா கனக்சன்?
சுகுணா திவாகர் : தோழர் பொட்டீக்கடை சத்யா.. அமைதி. நான் பொறுமையா விளக்குகிறேன்..
கூ.இ.ஒ.குரல் : சரி, ஆனால், மூலதனம், முதலாளித்துவம், பார்ப்பனீயம், சொல்லாடல், அபான வாயு, பன்முமகத்தன்மை , கட்டுடைப்பு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் பேசவேண்டும். அன்றேல் மூடிக் கொண்டு உட்காரவும்..
வரவனை : த்தா... யார்ராவன் என் நண்பனைக் கிண்டல் பண்றது?இருட்டுல மூஞ்சி தெரியல... வெளிச்சத்தல வாடா சோமாறி...
லக்கி : இருங்க.. தோழரே. ஏன் இந்தக் கொல வெறி? .பப்ளிக்ல இப்படியெல்லாம் பேசக் கூடாது... அதுக்குத்தான் வலைப்பதிவுப் பின்னூட்டப் பெட்டி இருக்க்கே ...
பாலபாரதி : ரிப்பீட்டேய்ய்ய்ய்
செந்தழல் ரவி : அய்யோ.. எனக்கு ஒரு மசுரும் புரியலை... பேசாம ஆள்புடிக்கற ப்ளாகுல போஸ்ட் போட்டுட்டு இருந்திருக்கலாம்.. நாலு ரெஃபரன்ஸ் கிடைச்சுருக்கும்...
லக்கி : எங்க விட்டேன்.... ம்ம் சரி.. இப்ப நம்ம ஈழத்தோழர்கள் பற்றி அந்த ஆள் தப்பா பேசினதாலே.. நாம எதிர்க்குரல் குடுக்கணும்..
பொட்டீக்கடை : ட்யூசன் முடிஞ்சதா? ஓசை.. இவனுங்க வேலைக்காக மாட்டங்க.. வா...அப்படியே எஸ்கேப் .. ஆயிருவோம்..
செந்தழல் ரவி : இப்ப மேட்டர் ஒரளவுக்கு விளங்குது. ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணாங்களே அந்த மேட்டரா?
வரவனை : அட யார்ராவன்...விடிய விடிய திருப்பாச்சி பார்த்துட்டு விடிஞ்சதும், விஜய்க்குத் தங்கச்சி திரிஷான்னானாம் ஒர்த்தன், அந்தக் கதையா இருக்கு...
பொட்டீக்கடை : மவனே வரவனை... இப்பத்தான் ஒரு ஃப்ளோல போய்ட்டு இருக்கு... குறுக்க குறுக்க வந்து சால்
ஓட்டறியே...கொஞ்ச நேரம் கம்ம்ன்னு இரு
செந்தழல் ரவி ( தயக்கத்துடன் ) : அதில்ல, ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிங்க கொல பண்ணாங்கதானெ. அதனாலே விடுதலப் புலிங்க மேல தப்பு இருக்குதானே.. அதத்தானே அவரும் சொல்லி இருக்கார்,அதுக்காக நாம ஏன்.. வந்து.....
பாலபாரதி : ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
சற்று நேரம் அமைதி.
சற்றுநேரத்தில் லக்கி தவிர மற்ற எல்லோரும் கொலை வெறியோடு பாய்ந்தார்கள்.
பிகு 1 : பாதிக்கப்பட்டவர் பெயர் ரவீந்திரன் அந்தோணிசாமி என்கிற செந்தழல் ரவியா அல்லது எஸ்.பாலகிருஷ்ணன் என்கிற பாலபாரதியா என்பதை நாளை தமிழ் முரசு பேப்பர் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
பிகு 2 : லக்கி மட்டும் அந்த நேரத்தில் ஏன் அமைதியாக இருந்தார் என்பதை ஊகித்துச் சொல்பவர்களுக்கு காரைக்குடி ரெஸ்டாரண்டில் இருந்து நாட்டுக்கோழி பிரியாணி பாக்கட் ஒன்று பரிசு. .
முதிர்ச்சியற்ற எழுத்துக்கள்..........
:))
புரிஞ்சுக்குங்க சுகுணா ஸார்.. ஆனா எனக்கு காரைக்குடி பிரியாணி வேணாம். நான் திண்டுக்கல் போகும்போது தலப்பாகட்டி நாயுடு கடைல சாப்பிட்டுட்டு பில்லை மட்டும் கொண்டாந்து கொடுத்துர்றேன்.. காசு கொடுத்திருங்க..
//லக்கிலுக் : அருமை தோழரே... ரவி போஸ்ட் போட்ட உடனேயே.. நம்மாளுங்க உள்ள பூந்து
குத்திருவோம்..அமுக, சுகுணா ரசிகர் மன்றம், போலியார் பாசறைன்னு ஆளுக்கொரு பேர்ல கமண்ட் போட்டு
தமிழ்மணத்துல மேல தூக்கிருவோம்..//
அனானியோட பிற்சேர்க்கை சூப்பர். ரொம்பவும் ரசித்தேன். ஆனா அனானி அண்ணாத்தே கொண்டையை மறைக்கலே :-)))))))
//
Anonymous said...
aaka varavanaiyan entale ellorukkum athiruthilla
Varavanaiyan entale something different....
Vara.. name mai paartha vudane..neengka enna avaraipatti elutha pokireerkal enta aavalai doodiyathu... ninaithathai pola... different aaka..enna azhagana character..
good imagination with humour //
கண்ணுல தண்ணி வர வைக்கிறீங்களே மக்கா ! :))))))))))))))))
// திரு said...
புகைப்படத்தில் அழகாய் இருக்கிறீர்கள்!
திரு //
இதுக்குதானே அம்மிணி போட்டோ போட சொல்லிருக்காங்க :P
// வரவனை : லக்கி கண்ணு... இதுக்கெல்லாம் யோசிச்சா ஆகுமா? போராட்டம்னா அப்படித்தான் மாம்ஸ்.. நான் இது வரைக்கும் எத்தனை தரம் உள்ள போய் வந்திருக்கேன் தெரியுமா? //
இத யார் எழுதினான்னு கண்டுபிடிச்சிட்டேன் :))))))))))))))))))
OPISLA IRUKKEN VEETUKKU VANTHU VEKKIRAN
//தோழர் லக்கிலுக், தோழர் வரவனை, தோழர் பொட்டீக்கடை, தோழர் பாலபாரதி ஆகியோர் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை. அப்படிச் செய்தால், நமக்கும் தோழர் மாலன், தோழர் டோண்டு, தோழர் அரவிந்தன் நீலகண்டன், தோழர் ஜடாயு, தோழர் மூர்த்தி போன்றவர்களுக்கும் வேறுபாடு இருக்காது.
வரவனை : அய்யோ....வக தொக இல்லாம எல்லாருக்கும் தோழர் போடறத நிறுத்துங்க மாம்ஸ்//
:-)))))))))))))))
இங்கு அக்ரஹாரத்தில் கழுதை என்னை கேரக்டர் அசாசினேசன் செய்கிறது அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சில இடங்களில் பொட்டிக்கடை என்றும் சில இடங்களில் பொட்டீக்கடை என்றும் பேர் கொடுத்துள்ளார் அவர். அடுத்த முறை இவ்வாறான படுகொலையை நிகழ்த்த வேண்டாம்.
//பொட்டீக்கடை : ங்கொய்யால... உனக்கு அந்த பாலபாரதியே தேவலை
பொட்டீக்கடை : ங்கொய்யால.. அதுக்கும் இதுக்கும் என்னடா கனக்சன்?//
புல்ஷிட்...நான் அவ்வளவாக ங்கொய்யால...என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். அதுவு தொடர்ந்து இரண்டு முறை...வாய்ப்பே இல்லை.
இட்ஸ் ஃfஅக்கிங் புல்ஷிட் மேட்.
இதிலிருந்தே இதை யார் எழுதியிருப்பார்கள் என்று எனக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.
***
ஆன் லைட்டர் சைட்...மதியம் லன்ச் நேரத்தின் போது படித்து சத்தம் போட்டு சிரித்ததில் புது ரிசப்ஷனிஸ்ட் க்லோயே பயந்து விட்டாள்.
:)))))))))
ஏண்டாப்பா சேட்டு வூட்டு புள்ள மாதிரி சோக்காதான் கீர..ஒரு ரெண்டு போட்டு அனுப்பி வை. "பெரியாரியத்தில் கொழுத்த பின்னவீனத்துவத்தை கூறு போட்டு விற்கும் கட்டவிழ்ப்பு நாயகன் சுகுணா திவாகருக்கு வாழ்த்துக்கள்"னு ஒரு பதிவு போட்டுடறேன். எதுக்குடாப்பா ஜொள்ளு லொள்ளுன்னு பெரிய வார்த்தலாம் சொல்ற?
நிறைய சிரிப்பு.. கொஞ்சம் கசப்பு.. முடிவையும் புரியற மாதிரி சொல்லிருக்கலாம்..
Post a Comment