இதே நவம்பர் 20. இருபத்தெட்டு வருடங்களுக்குமுன் ஒரு குழந்தையாய் இந்தப் பூமிக்குள் நுழைந்தபோது, தயக்கத்தின் முட்டையுடைத்து யாரேனும் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கலாம், புணர்ச்சியின் முதல் உச்சத்தை எவரேனும் சுகித்திருக்கலாம், ஒரு கொலை நிகழ்ந்திருக்கலாம் அல்லது ஒரு தற்கொலை, மண் பார்க்கவியாலாப் பேறுடன் ஒரு சிசு கருவிலேயே சிதைந்திருக்கலாம் அல்லது சிதைக்கப்பட்டு.... எப்படியாயினும் தாயின் யோனி பூமிக்குள் துப்பிய கணம் வாழ்வின் ருசி குறித்து அறியாக்கணமே. என்னோடு பிறந்த குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தங்களது இருபத்தொன்பதாம் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனவோ. பிறந்தநாள் என்பது சின்னச்சின்ன சந்தோசங்களிலொன்றா, அல்லது மறுக்கப்பட்ட வாழ்வில் கிடந்து உழல்பவர்களைப் பரிகசிக்கும் வக்கிரமா? கேள்விகள் பெட்டிக்குள் அடைபட்டுச் சீறும் ஆண்குறியைப் போலவே எழுந்து மடங்குகின்றன. இன்றைய தலைமுறை அரசியல் உணர்வைத் தொலைத்திருக்கிறது. வீதிகளில் இப்போது கேளிக்கைகளன்றி போராட்டங்கள் நடப்பதில்லை. சமயங்களில் நம்பிக்கை கண்கட்டி கட்டி மறைகிறது. என்றபோதும் மழை பூமியைக் கைவிட்டுவிடவில்லை, இன்னமும் ஆச்சரியமாய்ப் பூக்கள் பூக்கின்ற்ன, மனிதர்கள் வெட்ட வெட்ட மரங்கள் துளிர்க்கின்றன, இன்னமும் போராளிகள் ஆயுதங்கள் ஏந்துகிறார்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் துரோகி என்று இனங்காணப்பட்டு எவரேனும் கொல்லப்படுகிறார்கள். ஆணாதிக்க விசநாக்கு இன்னமும் எனக்குள் மறையவில்லை, சாதியக்கூறுகளும் மேட்டிமையும் உப்புக்கரித்தபடி ரத்தத்தில் பதுங்கியிருக்கியிருக்கின்றன. புத்தனின் சடலத்தை மிதித்தபடி என் வார்த்தைகள் கொடுக்குகளாய் மாறுவதாய்ச் சொல்கிறானொரு நண்பன். நிதானமின்மையும் கோபமும் அவசரமுடிவுகளும் அலைக்கழிக்கின்றன. எல்லாபிறந்தநாட்களிலும் எல்லோருக்குமிருப்பதைப் போலவே எனக்கும் எதையாவது விட்டொழிப்பதென தீர்மானங்களிருந்திருக்கின்றன. இந்த பிறந்தநாளில் அத்தகைய தீர்மானங்களை விட்டொழிக்கலாமென ஒரு தீர்மானம். கடந்துபோன உறவுகளை யாராவது எப்போதாவது நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். சென்றவருடம், அதற்கும் முந்தைய வருடம், அதற்கும் முந்தைய ...இப்படியாக வாழ்த்துக்கள் சொன்னவர்களை இழந்திருக்கிறேன். இவ்வருடம் எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூடலாம். என்றபோதும் எப்படியாயினும் வாழ்வில் புக அனுமதித்த இந்தக் கணங்கள் பரவசப்படுத்துகின்றன அர்த்தமுற்றோ அற்றோ... happy birthday to me!
Monday, November 19, 2007
இருபத்தெட்டு வருடங்களின் இறுதியில்.....

Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
வாழ்துக்கள் நண்பனே...... வீரியமிக்க நாட்களை வெற்றியுடன் எதிர்கொள்வாயாக.
நட்புடன் இசை
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்...
நல்ல பின்னவீனத்துவ பிறந்தநாள் வாழ்த்து..கடைசி பத்திகளில் கொஞ்சம் புரிஞ்சது....
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.>><<
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுகுணா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர்!
இந்த இள வயதில் இப்படியான ஒப்பாரியா?
இந்தாண்டுக்கான உங்கள் தீர்மாணங்கள் என்ன?
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுகுணா.
;-D
வரும் வருடம் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற விருப்பத்துடன், பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுகுணா...
வாழ்த்துக்கள் நண்பா.
ஆமா 78ல பிறந்தா 29 வருசம் முடிஞ்சு, 30க்குள்ள தான நுழையிறீக. கணக்கு உதைக்குதே ? சரியா உமக்கு 10 வருசம் முன்னாடி பிறந்த எனக்கு அடுத்த மாதம் 39 முடியுதே....
Don't worry, be happy and make others happy.
வாழ்த்துகள் சுகுணா.
காலாகாலத்துல கல்யாணம் பண்ணி குட்டி சுகுணாவ உருவாக்குங்க.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழரே!!
நமக்குள் நாமே ஊடுருவி பார்த்துக்கொள்ளும் ஒவ்வொரு கணமும் நாம்
அவமானத்தில் கூனி-குருகத்தான் வேண்டியிருக்கிறது!!!
ஆயினும் அதுவே நாம் மேம்பட ஒரே வழி!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுகுணா
Happy birthday Suguna!
குடியும், குடித்தனமுமாக வாழுங்கள் என வாழ்த்த வயதில்லாததால் வணங்குகிறேன்! ;-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவாகர்! இப்படி வந்து வாழ்த்துச் சொல்வதைக் கூட 'முதுகு சொறிதல்'க்குள் அடக்கிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. யார் முதுகை யார் சொறிந்து என்ன ஆகப்போகிறது என்பதை அடுத்த பிறந்தநாளுக்குள்ளாவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள்:)
ஒன்றிரண்டு அல்ல... 16 கூடியிருக்கிறது வாழ்த்துகள் என்னையும் சேர்த்து!
பின்னவீனத்துவ பிறந்தநாள் கட்டுரை படித்தேன். (இது பின்னநவீனத்துவமா என்னன்னு தெரியாது)
வேறென்ன சொல்ல..?
பிறந்தநாள் வாழ்த்துதான்.
வாழ்த்துகள்
many more happy returns of the day
பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் திவாகர்.
நல்லா இருங்க.
வாழ்த்துக்கள்
Happy Birthday Man .
Belated wishes Suguna.
Hope you had a nice time.
Post a Comment