Saturday, June 28, 2008

சினிமா நிருபருக்கு ஒரு கவனக்குறிப்பு

சமீபத்தில் 'சினிமாநிருபர்' என்னும் வலைப்பூவில் 'ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா படம்' என்னும் ஒரு கவர்ச்சிப்(?) படம் வெளியாகியிருந்தது. உண்மையில் அது 'அய்யாவழி' என்னும் வைகுண்டத்தோப்பு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் காட்சி. வைகுண்டர் ஒருகாலத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்சமூகத்தில் பிறந்தவர். பார்ப்பன - இந்துப்பெருமத மரபிற்கெதிராக மாற்றுவழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர். அக்காலகட்டத்தில் நாடார் இனப்பெண்களுக்குத் தோள்சீலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதும் அதற்கெதிராகத் தோள்சீலைப் போராட்டம் நடந்ததும் வரலாறு. எனவே வைகுண்டர் காலத்துப் பெண்ணாய் நடிக்கும் நடிகை திரு. சுஜிபாலா ஜாக்கெட் அணியாமல்தான் நடிக்கமுடியும். ஆனால் இத்தகைய வரலாற்று அவலத்தைக் கூட 'கவர்ச்சி விருந்து' படைக்க பயன்படுத்திக்கொள்வது அவமானகரமான விசயம்.

பொதுவாகவே வரலாற்றைத் தவறாகவோ அரைகுறையாகவோ சித்தரிப்பதாகவே தமிழ்ச்சினிமாக்கள் இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தொடங்கி பெரியார் வரை இதில் அடங்கும். இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியதாக ஒரு காட்சி வரும். ஆனால் இந்திய வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களைப் பாலியல் சித்திரவதைகள் செய்ததாகவோ குறிப்புகள் இல்லை. ( இதுபற்றி ஒருமுறை பேசிய அருள்மொழி 'உண்மையில் வெள்ளைக்காரன் தன் பெண்டாட்டியை நேருவிடமிடமிருந்து காப்பாற்றத்தான் சுதந்திரம் கொடுத்து ஓடினான்' என்றார்.) ஆனால் மாறாக இத்தகைய - பெண்களைப் பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் கொடுமைகளை உள்ளூர் இந்திய ஆதிக்கச் சாதிக்காரர்களும் போலீசு ராணுவமும்தான் செய்தன, செய்துவருகின்றன.

வரலாற்றைக் கொலை செய்யும் திருப்பணியைத் திரைப்படங்களும் ஊடகங்களும் போட்டிபோட்டு செய்து வர, இதுகுறித்து எந்த உணர்வுமின்றி வெறுமனே நுகர்ச்சிக்கு அடிமையான நாம் எப்போது வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவர்களாய் மாறப்போகிறோம்?

17 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அந்த இடுகையை நானும் பார்த்தேன். அது ‘கவர்ச்சிப்' படமாகத்தான் புரிந்து கொள்ளப் பட்டிருக்கும். காரணம், தலைப்பு.

சரியான நேரத்தில் முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

Anonymous said...

இந்த விளம்பர உலகில் பெண்களை கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்லவே.. ஆனால் பெண்களும் இதற்க்கு உடன்படுவதுதான் கொடுமை!

தருமி said...

அந்தப் பதிவு நம் மற்றைய அச்சு ஊடகங்களை மிஞ்சும் வண்ணம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. வலையுலகத்திலாவது இன்னும் கொஞ்சம் நல்ல ரசனையோடு சினிமாபற்றிய செய்திகளை ,நிருபர்' தொகுத்து தரலாமே!

வெண்பூ said...

// இந்தியப்பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியதாக ஒரு காட்சி வரும். ஆனால் இந்திய வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களைப் பாலியல் சித்திரவதைகள் செய்ததாகவோ குறிப்புகள் இல்லை.//

இது தென் தமிழகத்தில் நடந்ததாக விகடனிலோ / குமுதத்திலோ படித்ததாக நினைவு, அதுவும் அதில் பாதிக்கப்படவரின் பேட்டியுடன்

சின்னக்குட்டி said...

'//உண்மையில் வெள்ளைக்காரன் தன் பெண்டாட்டியை நேருவிடமிடமிருந்து காப்பாற்றத்தான் சுதந்திரம் கொடுத்து ஓடினான்' என்றார்.) //

-:)))

Anonymous said...

Mr.Ignornat,
At Madurai a police officer removed the dresses of women
who protested against British
rule. Shankar used it in a different context. Janani used
this in a serial on women and
independence movement. About the
atrocities of the British the less
said the better it is.I am not
denying that Indian Army and Police have also committed acts
of sexual violence including
rape. But you are trying to
give a clean chit to British
which is nonsense.Arulmozhi
cannot be expected to speak
truth as she is a follower
of Periyar.

Anonymous said...

தாங்கள் சொல்வது போன்ற செய்தியோ.. படமோ நிருபர் வலைப்பூவில் இடம்பெறவில்லை. நான் தினமும் சினிமா நிருபர் எழுதும் வலைப்பூவை பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்வது போன்ற தலைப்பில் தமிழ் சினிமா (tamilcineema.blogspot.com) என்ற வலைப்பூவில்தான் இடம்பெற்றுள்ளது. தயவு செய்து சினிமா நிருபர் நாகரீகமாக எழுதி வருகிறார் என்பதை குறிப்பிட்டு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வேண்டுமானால் நிருபர் வலைப்பூவை (nirubar.blogspot.com) மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள்.

Anonymous said...

தாங்கள் சொல்வது போன்ற செய்தியோ.. படமோ நிருபர் வலைப்பூவில் இடம்பெறவில்லை. நான் தினமும் சினிமா நிருபர் எழுதும் வலைப்பூவை பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்வது போன்ற தலைப்பில் தமிழ் சினிமா (tamilcineema.blogspot.com) என்ற வலைப்பூவில்தான் இடம்பெற்றுள்ளது. தயவு செய்து சினிமா நிருபர் நாகரீகமாக எழுதி வருகிறார் என்பதை குறிப்பிட்டு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வேண்டுமானால் நிருபர் வலைப்பூவை (nirubar.blogspot.com) மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள்.

ராபின் ஹூட் said...

//இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியதாக ஒரு காட்சி வரும். ஆனால் இந்திய வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களைப் பாலியல் சித்திரவதைகள் செய்ததாகவோ குறிப்புகள் இல்லை//

மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு , ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இது போன்ற அவலம் நடந்திருக்கிறது. இது குறித்து ஆனந்த விகடன் இதழில் ஒரு கட்டுரையும் வந்திருகின்றது. தினமலர் நாளிதழும் அவரின் புகைப்படத்தை ஒரு சுதந்திர தின விழாவின் போது பிரசுரம் செய்திருந்தது. அவரின்பெயர் எனக்கு நினைவில்லை. ஆனால் இந்தியன் படத்தில் சொல்லப்பட்ட சம்பவம் உண்மை.

rapp said...

மிக நல்லப் பதிவு. வாழ்த்துக்கள் சுகுணா திவாகர்.

King... said...

????????

லக்கிலுக் said...

//ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களைப் பாலியல் சித்திரவதைகள் செய்ததாகவோ குறிப்புகள் இல்லை.//

உண்மைதான். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தமிழ்ப்பெண்களை பாலியல் சித்திரவதை செய்ததைப் பற்றி பேசுகையில் பல தேசபக்தர்கள் ‘இராணுவம்னா அப்படித்தான் செய்யும்' என்று என்னிடம் வாதாடினார்கள்.

”வெள்ளைக்காரனோட இராணுவம் அதுமாதிரி இந்தியாவில் செய்ததா?” என்று நான் பதிலுக்கு கேட்டதுக்கு ஒருத்தன் கூட பதில் சொல்ல முடியவில்லை.

லக்கிலுக் said...

வெள்ளைக்காரனே செய்யாததை வாச்சாத்தியில் இந்திய போலிஸும், அஸ்ஸாமில் இந்திய ராணுவமும் செய்தது என்பது வெட்கக்கேடு!

Anonymous said...

http://valai.blogspirit.com/archive/2008/06/30/ayyavazhi.html

இதற்கு தங்களின் பதில் என்ன?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சிந்தா நதியின் பதிவில் தன்னுடைய வலைப்பூவில் சுஜிபாலா படம் வெளியிடவில்லை என சினிமா நிருபர் எழுதியிருக்கிறார்.

என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் நானும் அந்த இடுகையைப் பார்த்ததாக எழுதியிருந்தேன்.

தமிழ்மணம் மூலமாகத்தான் பார்த்தேன்.. யாருடைய பதிவில் என நினைவிலில்லை.

Anonymous said...

உங்கள் பதிவுக்கு பின்னூட்டமாக எழுத நினைத்து தனிப்பதிவாக.......

http://valai.blogspirit.com/archive/2008/06/30/ayyavazhi.html

புருனோ Bruno said...

//வலையுலகத்திலாவது இன்னும் கொஞ்சம் நல்ல ரசனையோடு சினிமாபற்றிய செய்திகளை ,நிருபர்' தொகுத்து தரலாமே!//

வழிமொழிகிறேன்