Monday, September 8, 2008

தூமைக்கதைகள்













இதைப் படிக்கும் உங்களுக்குச் சீக்கிரம் அலுப்புத் தட்டும் நோக்கில் எழுதப்பட்ட பிரதி இது. ஒரு அலுப்போடும் சலிப்போடும் எழுதப்பட்ட இப்பிரதி எந்த வாசகி/கனையும் கவர்வதற்காக எழுதப்பட்டதில்லை. பிரதியைக் கட்டவிழ்த்தல், தலைகீழாக்குதல், நேர்கோடாக்குதல், அ ‍ நேர்கோடாக்குதல் என்கிற எவ்வித முந்தீர்மானங்களுமற்று தன் போக்கில் நகர்வதால் இப்பிரதி எந்த இலக்கிய லவடாவையும் படிக்கச்சொல்லிக் கோரவில்லை.
முதன் முதலாக தூமை என்கிற வார்த்தையை எத்தனாவது வயதில் நீ கேள்விப்பட்டிருப்பாய்? உன் பதின் பருவங்களிலாயிருக்கலாமா, எனில் நீ ஒரு நகரத்தின் யோனியில் பிறந்தவனாயிருக்கலாம். ஐந்து வயதில் அறியக்கிடைத்த பல தமிழ்வார்த்தைகளில் தூமையும் ஒன்றாக இருப்பதே ஜனநெருக்கடியும் சண்டைகள் மலிந்துகிடக்கும் பிரதேசங்களில் வாழப்பிறந்தவனாயிருப்பதன் மரபு..
அய்யாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் வரலாறு உடையதாய் அடிக்கடி பூலரிக்கப்படும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தூமை என்னும் வார்த்தை முதன்முதலாய்ப் பாவிக்கப்பட்ட தமிழ் இலக்கியம் எது? பாம்பின் படத்தையொத்த அல்குல், விம்மிப்புடைத்த முலைகள் என்றெல்லாம் விலாவரியாய் ஆராயும் சங்க இலக்கியங்கள் தூமை குறித்துப்பேசியதுண்டா? இல்லையெனில் அக்காலத் தமிழ்ப்பெருங்குடிப் பெண்களுக்கு மாதவிடாயே ஆகாமலிருந்திருக்கும் என்பது காரணமாயிருக்காது என்றே நம்பவிழைவோம். மறத்தினால் கொண்ட திறத்தினால் முறத்தினால் புலியை அடித்துத் துரத்தினாள் ஒரு தமிழ்ப்பெண் என பென்னம்பெரிய கவிமக்களும் கவிதாயினிகளும் கூறக்கேட்டிருக்கிறோம். அது கிடக்கட்டும் சபரிமலை மகரஜோதி கதை தெரியுந்தானே உனக்கு? இருநூறு ஆண்டுகளின் முன் பெண்ணின் தூமைக்குருதி வாடை கண்டு கொடியவனவிலங்குகள் வரக்கூடும் என்றஞ்சியே சபரிமலைக்குப் பெண்கள் வருவது தடைசெய்யப்பட்டதாம். நாப்கின்கள் காலத்திலும் பெண் தடுக்கப்படுவதெனின் வருடம் முழுதும் பேதியால் அல்லலுறும் அய்யப்பசுவாமிகளுக்கு யாரேனும் டிஷ்யூ பேப்பர் வாங்கித்தரல் நலம். தூமை என்னும் வார்த்தை வின்னர் என்னும் தமிழ்ப்படத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. வடிவேலுவை ஏமாற்ற பெண்வேடமிட்ட பிரசாந்த் 'தூமியக்குடிக்கி' என்று திட்டுவார். தூமையின் சுவை எப்படியானதாக இருக்கும்? தூமையைக் குடித்தவர்கள் என்று யாருமிருக்கிறார்களா? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய‌ மூத்த தூமைக்குடி தமிழ்க்குடியா என்றெல்லாம் கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியவில்லை என்று பேராசிரியர் கலாநிதி முத்துரத்தின முதலியார் கேள்விகளை 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுப்பியிருக்கிறார். கங்கை நதியே பூமிமாதாவின் தூமைதான் என்று புராணங்களிலிருந்து ஆதாரங்காட்டுகிறார் ஷ்ரிமத்ராகவாச்சாரிநரசிம்மன். அப்படியானால் அகண்டபாரதக்கனவுகளில் மிதப்பவர்களைத் தூமைக்குடிகள் என்றழைக்கலாமா என்னும் வினாக்களும் எழாமலில்லை.

( ......ம்ருடதொ)

6 comments:

லக்கிலுக் said...

சுவாரஸ்யமான எழுத்து நடையுடன் கூடிய இத்தொடரை தொடர்வீர்கள் என்று எத்தனை நாள் தான் காத்து காத்து ஏங்குவது? விரைவில் தொடரவும்.

Unknown said...

நான் ( நகரத்தில்) தூமை பற்றி படித்தது/கேட்டது பத்து வயதில்.
1. மகா பாரதத்தில் திரௌபதி துகிலுரியப்படும்பொழுது அவள் தூமை/தூரம்/மாதவிடாய்.
2.சிவவாக்கியர் பாடல் ஒன்றில் "தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம் "
3.பழமொழி - "அவளுக்கு வேணுமின்னா ஓடி ஓடி தூரம் ஆவ" Selfish motive

4.சில வீடுகளில் பெண்கள் , தீபாவளி நெருங்கும் சமயங்களில் தூமை வந்தால் ஒதுங்காமல் , பொய் சொல்லி தீபாவளி கொண்டாடும் வாய்ப்பை எடுத்துக்கொள்வார்கள்.

5.Uterus is bloodweeping disappointedly (It means no pregnancy have taken place)

Anonymous said...

பதிவில் உள்ள படம் நல்லதொரு பின்னவீனத்துவ படம்...!!!

வால்பையன் said...

//இதைப் படிக்கும் உங்களுக்குச் சீக்கிரம் அலுப்புத் தட்டும் நோக்கில் எழுதப்பட்ட பிரதி இது. //

அப்படியொன்னும் அலுப்பு தட்டலையே!
எதாவது விடைகிடைக்குமான்னு தேடல் தான் கடைசி வரைக்கும் இருந்தது.

Dr.V.K.Kanniappan said...

Hi,
Netru naan 'winner' thiraippataththil varum vasanaththil Vijay pesuvathu kEttu athirchiyurren. tharakkuRaivAna sorkaL media vil varuvathai thavirkkavENtum.
IthupolavE 'TUBUKKU' enRa sollum. ithu AaN kuRiyin mun paguthiyaik kuRikkiRathu.
Dr.V.K.Kanniappan

Anonymous said...

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலுநாழி
உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்; .

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)


Online Books : TAMIL
http://www.vallalyaar.com/?p=409

Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454