Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரம் - ஜிகினாப் பேப்பருக்குள் சில பீ உருண்டைகள்

பார்ப்பனீய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, போலீசு எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைக்கும் எதிர் அரசியலாளார்களாகிய நாம் தமிழ்ச்சினிமாவில் செருப்பாலடிக்க வேண்டியவர்கள் பட்டியலில் கௌதம்வாசுதேவ மேனனுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்ற போலீசுப் படங்களைக் கொடுத்த மேனனுக்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்னும் போலீஸ் பொறுக்கிகளைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்திய பெருமை உண்டு. இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட 28 என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களில் 20 பேர் தலித்துகள் என்னும் உண்மை உறக்கும்போது மேனனை ஏன் செருப்பாலடிக்க வேண்டும் என்பது மட்டுமில்லாது எந்த செருப்பால் அடிக்க வேண்டும் என்பதும் விளங்கும்.

வாரணம் ஆயிரம் - தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும். காஷ்மீர்ப் பிரச்சினை, திராவிட இயக்கங்கள் குறித்து எந்த அறிவுமின்றி எடுக்கப்பட்ட ரோஜா, இருவர் என்று பட்டியல் நீளும். உண்மையில் திராவிட இயக்கம் குறித்து காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தது அமைதிப்படையே தவிர இருவர் அல்ல. கமலின் ஹேராம் உள்ளிட்ட படங்களின் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் படைப்பிற்கான அவரது உழைப்பு மீது எனக்கு மரியாதை உண்டு. இருவரோ ஒரு பீரியாடிக்கல் படத்திற்கான எந்த உழைப்புமில்லாத, மொழிமாற்றம் செய்யப்படட் ஒரு ஆங்கில நாடகத்தைப் போன்றுதான் இருக்கும். சரி, வாரணம் ஆயிரத்திற்கு வருவோம்.

சூர்யா, அவரது பாசமுள்ள அப்பா கிருஷ்ணா, (இன்னொரு சூர்யா) ஆகியோருக்கிடையிலான உறவு குறித்து முன்வைக்கும் பாவனையில் பல அபத்தங்களையும் ஆபத்துக்களையும் படம் முன்வைக்கிறது. வழக்கமாக தமிழ்ச்சினிமா நாயகர்கள் சிலுக்குவார்பட்டியிலிருந்து தங்கள் காதலியைத் தேடி சிங்காரச்சென்னைக்கு வருவார்கள். ஆனால் மேனன் ஒரு 'உயர்தர' இயக்குனர் அல்லவா? நாயகன் சூர்யா காதலியைத் தேடி அமெரிக்கா போகிறார். ''காதலியைத் தேடிப்போகிறேன்'' என்றதும் தூதரக அதிகாரி சிரித்துக்கொண்டே விசா வழங்குகிறார். கமல்ஹாசனின் டவுசர் விமானநிலையத்தில் கழற்றப்பட்டதைச் சாமர்த்தியமாக மேனன் மறைத்திருக்கிறார். ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஜட்டியை இறுக்கப் பற்றிக்கொண்டதாகக் கேள்வி.

அமெரிக்காவில் காதலிக்கும் பெண் குண்டுவெடிப்பில் இறந்துவிடுகிறார். (வேறு யார் குண்டுவைக்கப் போகிறார்கள், 'முஸ்லீம் தீவிரவாதிகளை'த் தவிர). அப்புறம் காதல் தோல்வியின் சோகத்தில் சிகரெட், கஞ்சா, பெத்தடின் என்று படிப்படியாய் முன்னேறுகிறார் சூர்யா. திடீரென்று அவர் காஷ்மீர் கிளம்பிப் போகும்போது மேனன் தன் புத்தியைக் காட்டப்போகிறாரோ என்று பயமாயிருந்தது. ஆனால் ஒரே காட்சியில் காஷ்மீர் முடிந்ததும் நிம்மதி வந்தது. இருந்தாலும் மேனன்னா சும்மாவா? தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.

டெல்லியின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, குழந்தை ஆதித்யாவைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்துவிடுகிறார். குழந்தைகளைக் கடத்திக் கோடிக்கணக்கில் பேரம் பேசுபவர்கள், பெண்களைக் கடத்தி மாமா வேலை பார்ப்பவர்களின் பெயர்கள் டப்பு மாலிக், ஆசாத், பின்னணியில் மசூதி, பாங்கோசை, அப்புறம் கௌதம் வாசுதேவ மேனனின் விறைத்துநிற்கும், சுன்னத் செய்யப்படாத இந்துக்குறி. ங்கோத்தா பாடுகளா!

ஒரு இந்துக்குழந்தையை முஸ்லீம் கிரிமினல்களிடமிருந்து காப்பாற்றிய சூர்யா என்ன செய்வார்? இதற்கிடையில் கௌதம் மேனனுக்கு 'என்னடா, தன் டிரேட் மார்க் டுமீல் டுமீல் துப்பாக்கிச் சத்தத்தைக் காணோமே' என்று தோன்ற, கரெக்ட், சூர்யா மிலிட்டரியில் சேர்கிறார். 'தனக்குச் சிறுவயதிலிருந்தே மிலிட்டரியில் சேர வேண்டும் என்கிற அரிப்பு இருந்ததாகவும்' சூர்யா சொல்கிறார். எனக்கென்னவோ கஞ்சா, பெத்த்தடின், அமெரிக்கக்காதலி புணர்ச்சி என்று போதையேறிப் போன சூர்யா, மிலிட்டரி சரக்கு மற்றும் பழங்குடிப் பெண்களின் உடல்களுக்காக மிலிட்டரியில் சேர்கிறாரோ என்று தோன்றியது.

மிலிட்டரியிலோ தினம் தினம் சண்டை நடக்கிறது. வழக்கமான தமிழ்ச்சினிமா கதாநாயகன்களைப் போல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டையும் சூத்தையும் காப்பாற்றுகிறார். அப்பா கிருஷ்ணா மண்டையைப் போடும் சமயத்திலும் யாரோ ஒரு பெண்ணைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஜெய்ஹிந்த் இந்தியன். படம் முழுக்க, 'டாடி, (அதென்னடா அம்மாவை மட்டும் அம்மா என்று கூப்பிடுகிறீர்கள்?), லவ், தஸ், புஸ்' என்று முக்கால் படத்தில் இங்கீலீஷ் பேசிவிட்டுக் கடைசியில் 'வாரணம் ஆயிரம்' என்னும் ஆண்டாளின் பாடலுக்கு அர்த்தம் சொல்லிச் சிம்ரன் முடிக்க, பார்வையாளர்கள் அடித்துப் பிடித்துத் தியேட்டரை விட்டு ஓடி வருகிறார்கள்.

துப்பாக்கியல்ல, மேனனின் 'இந்துக் குறி'!






இடையில் ஒரே பாட்டில் என்ன இழவு வேலை பார்த்தோ சம்பாதித்து நின்றுபோன வீட்டைக் கட்டிமுடிப்பது, ஒரே பாட்டில் ராணுவத்தில் மேஜராவது போன்ற ஹைடெக் விக்ரமன் தனக் கூத்துகளுக்கும் பஞ்சமில்லை. அப்பா சூர்யாவைப் போலத்தான் அம்மா சிம்ரனும் சூர்யா மீது பாசமாக இருக்கிறார், சுதந்திரம் கொடுக்கிறார். ஆனால் ஏன் அப்பா மீது மட்டும் சூர்யாவுக்கு இவ்வளவு பிரியம் என்று தெரியவில்லை. வழக்கம் போல கௌதம மேனன் படத்துப் பெண்களைப் போலவே முதல் பாதியில் கித்தாரை வருடியபடி ஒரு காதலியும் பின்பாதியில் துப்பாக்கியை வருடியபடி ஒரு காதலியும் சூர்யாவுடன் 'படுத்து விட்டுப்' போகிறார்கள். போர்நடைமுறைகள் கூடத் தெரியாது முட்டாள்தனமாக ராணுவக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மிஷின்கன்னை முதுகிலேயே வைத்துக்கொண்டு வெறும் பிஸ்டல்களால் மட்டும் சூர்யா சுடும்போது. 'ஒருவேளை முதுகில் இருப்பது கித்தார் என்று நினைத்துவிட்டாரோ' என்று நினைக்கத்தோன்றுகிறது.

இந்த மூன்றரை மணிநேரக் குப்பை நிச்சயமாக ஜெயிக்கப் போவதில்லை. அதுவும், பி, சி, பார்வையாளர்கள் படத்தின் மீது ஒண்ணுக்குத்தான் அடிப்பார்கள் என்பது ஆறுதலான செய்தி. போட்ட காசு வாராததால் மு.க.அழகிரி கௌதம் வாசுதேவ மேனனின் முதுகில் தோரணம் ஆயிரம் கட்டப்போவது வேறு விஷயம். ஆனால் இந்தக் குப்பையை 'உலக சினிமா' என்று எழுதிய சில அபத்தப் பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. தரமான இசை மற்றும் ஒளிப்பதிவு, சூர்யா என்னும் மகத்தான கலைஞனின் அபாரமான உழைப்பு என்னும் ஜாக்லேட் ஜிகினாப்பேப்பருக்குள் பார்ப்பனப் பாசிச மலத்தை (நன்றி : தோழர் பைத்தியக்காரன்)ப் பொட்டலம் கட்டித் தந்திருக்கிறார் மேனன். இந்த முஸ்லீம் விரோதச் சினிமாவை ஆசிப் மீரான் போன்ற இஸ்லாமியத் தோழர்களும் கொண்டாடுவது பயமாயிருக்கிறது. இதற்குப் பெயர்தான் உலகசினிமா என்றால் நம் பெண்களுக்கு நாப்கின் வாங்குகிற செலவு மிச்சம். இந்த உலக சினிமாக்களில் தூமையைத் துடைத்து மேனன்களின் முகத்தில் எறிவோம்.

30 comments:

Mohandoss said...

//தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.//

படம் பார்த்தீங்களா சுகுணா! சரி தகவற் பிழைன்னு வைச்சிக்கிடுவோம்.

//மிஷின்கன்னை முதுகிலேயே வைத்துக்கொண்டு வெறும் பிஸ்டல்களால் மட்டும் சூர்யா சுடும்போது. 'ஒருவேளை முதுகில் இருப்பது கித்தார் என்று நினைத்துவிட்டாரோ' என்று நினைக்கத்தோன்றுகிறது.//

//போர்நடைமுறைகள் கூடத் தெரியாது முட்டாள்தனமாக ராணுவக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.//

படத்தை இன்னும் கவனமாகப் பார்க்கலாம் - ஆனால் ஒதுக்கி வைக்க வேண்டிய படம் என்கிற முன் தீர்மானத்துடன் தியேட்டருக்குள் நுழைந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

கைத்துப்பாக்கி சைலன்ஸர் பொறுத்தி சுடுவதைக் காண்பித்திருப்பார் - பின்னர் நிருபரைக் காப்பாற்றியதும் மிஷின் கன்னிற்கு மாறுவார். ரொம்ப லாஜிக்கலான விஷயம் என்று எனக்குப் படுகிறது. இராணுவ நடைமுறைகள் எனக்கு தெரியாது என்றாலும் கூட.

இதையெல்லாம் நான் அவர் செய்வது சரி / தவறு என்பதற்காகச் சொல்லவில்லை. போட்டுக்காட்டணும் என்று ஆனபிறகு இவற்றைவிட்டு விட்டிருக்கலாம்.

//அமெரிக்கக்காதலி புணர்ச்சி//

சூப்பர் மேட்டர் சுகுணா. அழகா சுருக்கிட்டீங்க படத்தை.

//டெல்லியின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, குழந்தை ஆதித்யாவைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்துவிடுகிறார். குழந்தைகளைக் கடத்திக் கோடிக்கணக்கில் பேரம் பேசுபவர்கள், பெண்களைக் கடத்தி மாமா வேலை பார்ப்பவர்களின் பெயர்கள் டப்பு மாலிக், ஆசாத், பின்னணியில் மசூதி, பாங்கோசை, அப்புறம் கௌதம் வாசுதேவ மேனனின் விறைத்துநிற்கும், சுன்னத் செய்யப்படாத இந்துக்குறி. ங்கோத்தா பாடுகளா!//

இந்த மாதிரி முக்கியமான விஷயம் பேச வர்றப்ப எதுக்கு தேவையில்லாம மேலிருப்பதை இழுக்குறீங்க. இன்னும் ‘முஸ்லீம்’களை மட்டும் தீவிரவாதிகளாகக் காண்பிப்பதைக் கட்டுடைத்திருக்கலாம். இது ரொம்ப முக்கியமான விஷயம்.

Suresh ET said...

இத்திரைபடத்தை நான் இன்னும் பார்க்கவில்லை (பார்ப்பேன் என்றும் தோன்றவில்லை). ஆனால் உங்கள் அரசியல் ரீதியான விமர்சங்களை - சங்கர், மேனன், மணிரத்தினம் குறித்த - முழுதும் ஆமோதிக்கிறேன். அதே சமயம் நீங்கள் ஒப்பீடாக முன்னிறுத்தும் படங்களில் உள்ள manipulative, romanticized விஷயங்களை நினைவில் வைப்பது அவசியம். குறிப்பாக சேரனின் படங்களும் ஒரு வகை வலது சாரி கர்பிதங்களையே முன்வைப்பவை. தமிழ், தமிழ்த்தன்மை, தமிழர் மரபு போன்ற rigid, moralistic வாழ் நெறிகளைக் கொண்டு கதையாடல் செய்பவை. இப்படங்கில் தோய்ந்துள்ள ஆணாதிக்கப் போக்கையும் மறக்கவியலாது. விசு படங்களில் முன்னிறுத்தப்படும் குடும்பத் தலைவன் கதாபாத்திரம் (the upright patriarch) சேரன் படங்களில் வயது குறைத்து, டூயட் சகிதம் rehash செய்யப்பட்டன. தங்கர்பச்சானின் "தமிழரின் எளிய வாழ்வை" காட்ட முயன்ற படமும் அதே வட்டத்தில் சிக்கியது; இம்முறை ஐம்பதுகளில் வெளி வந்த கருப்பு வெள்ளை, அழுகை படங்களை நினைவூட்டின. (இவ்விருவராலும் பாடல்களை தவிர்க்க முடியவில்லை என்பது இன்னொரு கரும்புள்ளி.) "தமிழர்களின்" வாழ்கைக்கு ஒரு "authenticity" உள்ளதென்றும் அதைக் கய்யால தங்களால் மட்டும்தான் முடியும் என்பது போன்ற கருத்தும் பிரச்சனைக்குரியதே.


ஆக ஷங்கர், மணிரத்தினம், மேனன் போன்றோரின் படங்களை self-contained விமர்சனத்துக்குள்ளாக்குவதே சரி என்று தோன்றுகிறது. இவை பல முனைகளில் நின்று ஒரு வகை மிடில் கிளாஸ் wannabe mentality'கு தீனி போடுபவை. ஆங்கில மோகம், "தேசப்பற்று", போலித்தனங்களையும், சித்தாந்த ரீதியான அடக்கு முறைகளையும் பூசிமுழுகும் அழகியல் எல்லாம் இவர்கள் கய்யாலும் ஆயுதங்கள். இதற்கு நேர் எதிரே இருப்பதும் இவற்றி பிம்பங்களே - "local" fetishization, "authenticity", morality இவைதாம் சேரன், தங்கர்பச்சான் போன்றோரின் ஆயுதங்கள். ஆனால் அடிப்படையில் இவர்கள் இருவரும் வலது சாரி சித்தாந்தங்களையே -- வெவ்வேறு அளவுகளில் -- முன்வைக்கிறார்கள்.
ஆயினும், மேனன் போன்றோனின் அரசியல் வேறெதையும் விட பன்மடங்கு ஆபத்தானது எனபதையும் ஒப்புக்கொள்கிறேன்.

இறுதியாக பெண்களின் மாதவிலக்கை ஒட்டிய சாடல் நெருடலாக உள்ளது. "மலத்தை துடைத்து மேனன் மூஞ்சியில் விட்டெரிய வேண்டும்" என்று சொல்லி இருந்தால் கூட பிரச்சனை இருந்திருக்காது. பெண்களை சம்மந்தம் இல்லாது இங்கிழுத்ததர்கு ஏதாவது உட்காரணம் இருக்கிறதா?

* - எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்.

Anonymous said...

Unakku irukkudi nichayam special police kavanippu & encounter

Indian said...

//அமெரிக்காவில் காதலிக்கும் பெண் குண்டுவெடிப்பில் இறந்துவிடுகிறார். (வேறு யார் குண்டுவைக்கப் போகிறார்கள், 'முஸ்லீம் தீவிரவாதிகளை'த் தவிர).//

சாணிக் கரைசல் ட்ரம் ரெடி போல. அண்ணே அவசரப்படாதீங்க, அது திமோத்தி மேக்வே.

Unknown said...

உனக்கு ஏன் இந்த கொல வெறி! படம் பாத்த நாங்களாம் இனவாதமாவா பேசிகிட்டு இருக்கோம். இவ்ளோ அரசியல் புகுத்தி யோசிச்சிருக்கியே, அப்ப நீ எப்படிபட்ட ஒரு இனவெறியனா இருப்பே!!

Indian said...

//தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.//

அது அமெரிக்காவிலிருந்து திரும்புகையில் விமானத்தில் சூரியாவுக்கு ஆறுதல் சொன்ன சக பயணி.

முரளிகண்ணன் said...

கிழிச்சு தோரணம் கட்டிட்டீங்க

குசும்பன் said...

//சினிமாவை ஆசிப் மீரான் போன்ற இஸ்லாமியத் தோழர்களும் கொண்டாடுவது பயமாயிருக்கிறது. //

தோழர் என்று ஆன பிறகு ஏன் இஸ்லாமியத் தோழர், இந்து தோழர், பார்பனத்தோழர்,தலித் தோழர் என்று பிரித்துபார்க்கவேண்டுமா?

Anonymous said...

சுகுணா

இதை முஸ்லீம் விரோத சினிமா என்று என்னால் 'கண்டு பிடிக்க' முடியாமல் போனதால்தான் "கொண்டாடி விட்டேன்" :-) பொறுத்தருள்க! பயம் கொள்ளத் தேவையில்லை.

இதை உலகப்படம் என்று நான் கொண்டாடவில்லை. ஒரு புதினம் வாசித்ததுபோலிருந்ததென்றுதான் சொல்லியிருக்கிறேன்.

மட்டமான் படம், குப்பை என்றெல்லாம் அடிக்கபப்டும் ஜல்லிகளுக்கு மத்தியில் எனது விமர்சனம கொண்டாட்டமாக அமைந்து விட்டது தற்செயல்தான்:-)

தமிழ் சினிமாவின் அபத்தங்களில் இசுமாமியர் நல்லவராகக் காட்டப்பட்டாலும் கூட இசுலாமியர்களின் நடை உடை பாவனைகளில் கோட்டை விட்டு விடுவதை காலம் காலமாகப் பார்த்து கடுப்பாகி விட்டு விட்டதைப் போல இசுலாமியத் தீவிரவாதம் பேசும் தமிழ் திரைப்படங்களையும் போய்த்தொலையுங்கள் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியிருக்கிறது.

லக்கிலுக் said...

//வழக்கமான தமிழ்ச்சினிமா கதாநாயகன்களைப் போல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டையும் சூத்தையும் காப்பாற்றுகிறார்.//

வழக்கம்போல சூப்பர் தலைவரே! :-)

Athisha said...

அடேங்கப்பா இந்த கண்றாவி கருமாந்திரம் புடிச்ச குப்பை படத்தில் இத்தினி உள்குத்து இருக்கா..

கௌதம் '' மேனன் '' !!!

மேனன்னனா படிச்சி வாங்கின பட்டமா?

Athisha said...

பாஸ் இந்த படத்தப்பத்தி உங்க பிரண்ட்ஸ் நிறைய பேரு நல்லாருக்குனு சொல்லிருக்காங்க?

ச.ஜெ.ரவி said...

‘என்னை ராஜினாமா சொல்வதற்காக, சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளனர் எதிர்கட்சிகள்’ என தமிழக முதல்வரால் குற்றம்சாட்டப்பட்ட செய்தியை படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியாமல் இணையம் பக்கம் பார்வை செலுத்திய என்னை உங்களின் இந்த பதிவு மேலும் நகைப்புக்குள்ளாக்குகிறது. உங்களின் இந்த பதிவு விளம்பரத்துக்காக எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன். சாதிகள் வேண்டாம் எனும் நிலைமாறி, குறிப்பிட்ட சாதி வேண்டாம் என்ற நிலையை உருவெடுக்கிறது உங்கள் பதிவு. சாதியம் குறித்த, சாதி எதிர்ப்பு குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்கள் எல்லாம் பதிவு எழுதுவதை தவிர்த்து விடுங்கள் அதுதான் சிறந்தது. குறிப்பிட்ட சாதியம் இகழப்படுவதை நானும் ஏற்றுக்கொள்ளக்கூடியவன் அல்ல. அதற்காக ஒன்றுமே இல்லாத பிரச்னையை சாதி பிரச்னையை தூண்டும் வகையில், நீங்கள் எழுதுவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிரத்னம், கமலஹாசன் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சாதியத்துக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் எப்போது அறிவீர்கள் என தெரியவில்லை. அதேபோல், ராணுவம் குறித்த உங்களது அடிப்படை அறிவும் வியக்க வைக்கிறது. என்னைக்கேட்டால் உங்களை போன்ற ஆட்களெல்லாம் பதிவு எழுதுவதை தவித்தாலே சாதிப்பிரச்னைகள் நீங்கி விடும் என கருதுகிறேன்.

ச.ஜெ.ரவி said...

‘என்னை ராஜினாமா சொல்வதற்காக, சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளனர் எதிர்கட்சிகள்’ என தமிழக முதல்வரால் குற்றம்சாட்டப்பட்ட செய்தியை படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியாமல் இணையம் பக்கம் பார்வை செலுத்திய என்னை உங்களின் இந்த பதிவு மேலும் நகைப்புக்குள்ளாக்குகிறது. உங்களின் இந்த பதிவு விளம்பரத்துக்காக எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன். சாதிகள் வேண்டாம் எனும் நிலைமாறி, குறிப்பிட்ட சாதி வேண்டாம் என்ற நிலையை உருவெடுக்கிறது உங்கள் பதிவு. சாதியம் குறித்த, சாதி எதிர்ப்பு குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்கள் எல்லாம் பதிவு எழுதுவதை தவிர்த்து விடுங்கள் அதுதான் சிறந்தது. குறிப்பிட்ட சாதியம் இகழப்படுவதை நானும் ஏற்றுக்கொள்ளக்கூடியவன் அல்ல. அதற்காக ஒன்றுமே இல்லாத பிரச்னையை சாதி பிரச்னையை தூண்டும் வகையில், நீங்கள் எழுதுவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிரத்னம், கமலஹாசன் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சாதியத்துக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் எப்போது அறிவீர்கள் என தெரியவில்லை. அதேபோல், ராணுவம் குறித்த உங்களது அடிப்படை அறிவும் வியக்க வைக்கிறது. என்னைக்கேட்டால் உங்களை போன்ற ஆட்களெல்லாம் பதிவு எழுதுவதை தவித்தாலே சாதிப்பிரச்னைகள் நீங்கி விடும் என கருதுகிறேன்.

nagoreismail said...

எனக்கு தெரிந்த வரை ஒரு வரி கூட மறுக்க முடியாதவை - ஒரு முஸ்லீம் கூட இந்த அளவுக்கு கொதித்து போய் எழுதுவாரா என்பது கேள்விக்குறி தான்?

மு.வேலன் said...

'வாரணம் ஆயிரம்' ஒரு தரமான தமிழ் படம். பெரிய விஷயங்களை அடக்கிய சிறிய படம். நல்ல நுணுக்கமான படைப்பு. ஏன் தமிழ் நாட்டு தமிழர்கள் இப்படிப்பட்ட தரமான தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை. இரசிகர்களாகிய நீங்கள் உங்கள் இரசிக்கும் தரங்களை மேம்படுத்த மாட்டீர்களா? காலபோக்கில் உங்களைப் போன்ற தரமில்லா இரசிகர்களால்தான் தமிழ் நாட்டிற்குப் பேரிழிவு! கவனம்!

ரவி said...

கலக்கல் !!!!!

தமிழ்நதி said...

"செருப்பாலடிக்க வேண்டும்"
"இந்துக்குறி"

என ஆவேசம் சற்று மிகையாகத் தெரிகிறாற் போலிருக்கிறது. முன்தீர்மானங்களோடு போகவில்லைத்தானே:)

Anonymous said...

//இறுதியாக பெண்களின் மாதவிலக்கை ஒட்டிய சாடல் நெருடலாக உள்ளது. "மலத்தை துடைத்து மேனன் மூஞ்சியில் விட்டெரிய வேண்டும்" என்று சொல்லி இருந்தால் கூட பிரச்சனை இருந்திருக்காது. பெண்களை சம்மந்தம் இல்லாது இங்கிழுத்ததர்கு ஏதாவது உட்காரணம் இருக்கிறதா?//

என்னையா இவரு சேரனெல்லாம் மொராலிட்டி பேசுறாருண்ணு சொல்லிட்டு இப்படி முடிச்சிருக்காரு. ஜட்டி கிழிஞ்சிடுச்சா?

Suresh ET said...

Morality, ethics -- இரண்டுக்கும் உள்ள வித்யாசம், மொழி ரீதியான பாலியல் வன்முறை, பாலியல் நுண் அரசியல் இவற்றையெல்லாம் உள்ள்வாங்கிகொண்டு பேசும் anon என் ஜட்டி கழன்றுவிட்டதென்று சொன்னால் நான் சாத்திக்கொண்டு ஏற்பதுதான் முறை.
http://www.mum.org/ifmencou.htm - இங்கே சென்று "If men could menstruate" என்ற கட்டுரையை படிக்கச் சொல்லலாம் என்று பார்த்தேன், ஆனால் அதெல்லாம் தெரியாத தற்குறியா நீங்கள்? என் பேதமைக்கு ஜட்டி கழன்றது மட்டுமல்லாமல், கழன்ற ஜட்டியை தலையில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர வேண்டும்.

தமிழன்-கறுப்பி... said...

பதிவு போட்ட அன்னைக்கே வாசிச்சுட்டேன் ஆனா அன்னைக்கு இருந்த மனோ நிலையில் எதுவும் சொல்லலை...
டென்சனோடு போய் படம் பார்த்தீர்களா அல்லது மோன்தாஸ் மற்றும் தமிழ் நதி சொன்னது போல முன்னரே தீர்மானித்த முடிவுகளோடு போனீர்களா...?

கடுமையாஇருக்கு...!

வினவு said...

இந்தப் படம் ஏதோ மசாலாப் படம் என்றுதான் நினைத்தேன். உங்கள் விமரிசனத்தைப் பார்த்த்தும்தான் விசமத்தனம் தெரியவருகிறது. நன்றி

வினவு

Unknown said...

சுகுணா படம் பார்க்கிற ஆசையே போயிடுச்சு...பாடல்களைப் பற்றி எதுவும் சொல்லலையே..சரி..விட்டுடுங்க...;)))

சுகுணாதிவாகர் said...

சுரேஷ்,

பச்சான், சேரன் வகையறாக்களின் வலதுசாரிப் படங்களை நான் என்றுமே ஆதரித்ததில்லை. 'மாயக்கண்ணாடியில் தெரியும் சேரனின் பிம்பங்கள்' என்னும் என் பதிவைப் படித்துப் பாருங்கள். கௌதம் மேனனின் ஹைடெக் முலாம் பூசப்பட்ட சினிமாக்குப்பைகளை விட சேரனின் படங்கள் எவ்வளவோ மேல் என்பது என் கருத்து.

சுகுணாதிவாகர் said...

/மணிரத்னம், கமலஹாசன் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சாதியத்துக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் எப்போது அறிவீர்கள் என தெரியவில்லை/

/உங்களின் இந்த பதிவு விளம்பரத்துக்காக எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன்/

/என்னைக்கேட்டால் உங்களை போன்ற ஆட்களெல்லாம் பதிவு எழுதுவதை தவித்தாலே சாதிப்பிரச்னைகள் நீங்கி விடும் என கருதுகிறேன்./

சூப்பர் தலைவா!

M.VIJAYKUMAR said...

'iniya nanbarukku'vanakkam.ippa than ungalidam pesinen.romba nalaiiku piragu ippathan ungaloda WEBSITE paarthen.varanam aayiram padaththoda vimarsanam padithen.sir,vimarsanam panrathukku munnadi inime pain killer tablet vachikittu than padikkanum.pattaya kelappitteenga.sirichi sirichi vayiru punnaagi vittathu.yen wife kooda intha padatha (tiruttu dvd) la paarthal.but 10 miniuts la cd ya yeduthu kuppayila pottutal.yenakku 50 ruba nastam.inime ongaloda vimarsana paarkkama yentha 'kaluthai'yoda padathaiyum paarkka kudathunnu mudivu pannitten.naan meendu yeluthuven sir.Vanakkathudan-VIJAY

புருனோ Bruno said...

//'வாரணம் ஆயிரம்' ஒரு தரமான தமிழ் படம்.//
ஜிகினா பேப்பர்


// பெரிய விஷயங்களை அடக்கிய சிறிய படம்.//
ஜிகினா பேப்பர்

//நல்ல நுணுக்கமான படைப்பு.//
ஜிகினா பேப்பர்

//ஏன் தமிழ் நாட்டு தமிழர்கள் இப்படிப்பட்ட தரமான தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை. இரசிகர்களாகிய நீங்கள் உங்கள் இரசிக்கும் தரங்களை மேம்படுத்த மாட்டீர்களா? காலபோக்கில் உங்களைப் போன்ற தரமில்லா இரசிகர்களால்தான் தமிழ் நாட்டிற்குப் பேரிழிவு! கவனம்!//

இவர் எதிர்ப்பது ஜிகினா பேப்பரை அல்ல.

தலைப்பை ஒரு முறை வாசிக்கவும்

சுகுனா எதை எதிர்க்கிறார் என்று புரியும்
--

குளிர்சாதன அறையில், நறுமணப்புகைசூழ, இனிய இசையுடன், அழகான, பல வேலைப்பாடுகள் உள்ள பீங்கான் கோப்பையில் வைத்து தருகிறார்கள் என்பதற்காக பீனாயிலை குடிக்க முடியாது

புரியும் என்று நினைக்கிறேன்

--

தூங்குபவர்களை எழுப்பலாம்

தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது

butterfly Surya said...

சுகுணா கிழித்த "தோரணம் ஆயிரம்" ..

கிழிச்சு கந்தலாகிட்டிங்க. சூப்பர்

இந்த படத்தை ஆஹா ஒஹோ வென்று எழுதியதற்கு ஒரு பின்னூட்டத்த்தில் Dramaticக்காக இருக்கு.. மொக்கை தான் என்று சொன்னதற்கு ஒரு வலைபதிவர் என்னை கன்னா பின்னாவின்று திட்டினார்.

இதை படித்தால் என்ன செய்வாரோ..??

Anonymous said...

//தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.//

படம் பார்த்தீங்களா சுகுணா! சரி தகவற் பிழைன்னு வைச்சிக்கிடுவோம்.

//மிஷின்கன்னை முதுகிலேயே வைத்துக்கொண்டு வெறும் பிஸ்டல்களால் மட்டும் சூர்யா சுடும்போது. 'ஒருவேளை முதுகில் இருப்பது கித்தார் என்று நினைத்துவிட்டாரோ' என்று நினைக்கத்தோன்றுகிறது.//

//போர்நடைமுறைகள் கூடத் தெரியாது முட்டாள்தனமாக ராணுவக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.//

In which army you were? Are you experienced in war practices? Were you in Tamil Eelam fighting against Sinhala Forces?.......Hi Hi Hi.........Dei padatha pathiya illa padaththa parkamale evno sonnatha illa vera vimarsanatha vachukittu vimarsanam eluthuriya.....ungathola okka

tharudhalai said...

ஏன் இந்த அளவு முஸ்லீம்கள் எழுத மாட்டேங்குராங்களா? சும்மாவே தீவிரவாதி மாலை தயாரா இருக்கு,மாப்லைங்க கழுத்துல போட.இதுல எழுதுனா கிழிஞ்சிடும் பாய்மாருங்க லுங்கி.