Wednesday, September 5, 2007

இறுதியாய்ச் சில வார்த்தைகள்

நண்பர்களே,
எனது 'போலிடோண்டு' பதிவிற்கு வரும் இதுவரை வெளியிடப்படாத சொச்சம் பின்னூட்டங்கள் ஒரேகுரலிலேயே சில கேள்விகளை முன்வைப்பதால் அவற்றின் சாராம்சம் மட்டும்.

1. நீ போலி டோண்டு ஆளா?

2. செந்தழல் ரவியின் அல்லக்கையா?

3. சமீபத்தில் பதிவெழுவதிலிருந்து விலகப்போவதாய் ஒரு நண்பர் சீன் போட்டதைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன?

நண்பர் என்று நினைக்கும் நண்பர்களுக்காகவும் எதிரி என்று நினைக்கும் நண்பர்களுக்காகவும் சில விளக்கங்கள்.

முதலில் நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது.

போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை.

2. செந்தழல் ரவி சிலகாலங்கள் முன்புவரை கூட போலிடோண்டுவுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக போலி டோண்டுவே எழுதியிருக்கிறார். தரண் போன்றவர்களும் எழுதிவருகிறார்கள். ரவியும் இதை மறுக்கவில்லை. ஆனால் அது போலிக்கு ஆப்படிக்கும் யுக்தி என்கிறார். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை, லாஜிக் இடிக்கிறது என்றே கருதுகிறேன். இந்த கருத்தைச் சொல்வதால் எனக்கும் ரவிக்குமான தனிபட்ட நட்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்றே நம்புகிறேன். மறபடி ரவிதான் முடிவு செய்யவேண்டும்.

'ரவியிடம் ஓசித்தண்ணி வாங்கிக் குடிச்சியா, பிஸ்லெரி தண்ணி வாங்கிக் குடிச்சியா' என்றெல்லாம் வரும் பின்னூட்டங்கள் என்னை உளவியல்ரீதியாகத் தொந்தரவு செய்யும் என்று கருதினால், நண்பர்கள் மன்னிக்கவும், அத்தகைய பலவீனமான நிலையில் நான் இல்லை என்று சொல்ல நேர்வது தங்களுக்கு ஏமாறத்தை அளிக்கும் என்பதால் வருந்துகிறேன்.

மேலும் போலிடோண்டு ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர் என்று நம்பி ஏமாந்தோம் என்று சொன்னாலாவது அதில் ஒரு அர்த்தமும் அப்போதைக்கான நியாயப்பாடுமிருக்கிறது. ஆனால் அப்படியும்கூட நண்பர்கள் சொல்லத்தயாரில்லை. தமிழ்ச்சூழலில் புரட்சி என்ற வார்த்தை எவ்வாறு சீரழிக்கப்பட்டதோ, (சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷாலின் பட்டம், 'புரட்சித்தளபதி'.) அதேபோல பார்ப்பன எதிர்ப்பு என்கிற பல ஆயிரம் பாரம்பரியம் கொண்ட ஒரு வீரியமிக்க சித்தாந்தம் தங்களின் சுயநல விளையாட்டுகளுக்காகவும் வேட்டைகளுக்காகவும் இங்கு சீரழிக்கப்பட்டது என்பதே எனது கருத்து.

உதாரணமாய் மாலனின் விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். மாலன் தனக்கேயுரிய பார்ப்பன இந்துதேசிய வன்மமனோபாவத்தோடேயே ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தினார். ஆனால் டோண்டுராகவன் போன்ற சோணகிரிப் பார்ப்பனர் 'முரளிமனோகர்' என்று பொய்ப்பெயரெழுதி மாட்டிக்கொண்டால் அடித்துத்துவைக்கும் ஓசைசெல்லாவோ மாலனை 'மதிப்புக்குரிய மாலனுக்கு' என்று விளித்தார்.

அது என்னங்க 'மதிப்புக்குரிய மாலனுக்கு'?. ஊடகத்துப்பார்ப்பனர் என்றால் மட்டும் அப்பீட் ஆவீர்களோ?

ரவியும் சென்சிட்டிவான ஈழத்தமிழர்கள் விவகாரத்தை 'மாலனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்' என்றெழுதி 'விளையாடி'னார். சென்சிட்டிவான விவகாரங்களை சீரியசாக அணுகாமல் விளையாட்டுத்தனமாகவே அணுகும் மனோபாவம் எப்போதுமே வாய்ப்பதில்லையே ரவி? உங்கள் குடும்பம் குறித்து கருப்புவும் போலிடோண்டுவும் எழுதியதுகூட சென்சிட்டிவான விஷயம்தான். ஆனால் அதற்குக் கோபப்படுகிற உங்களால், நாடிழந்து வீடிழந்து அவதியுறும் ஈழத்தமிழர்கள் மீது வீசப்பட்ட பார்ப்பன வன்மத்தை மட்டும் எப்படி உருட்டி விளையாடமுடிகிறது?

அதேபோல ஓசைசெல்லா பதிவெழுவதிலிருந்து விலகுகிறேன் என்று சொன்னபோது 'மீண்டும் எழுத வாருங்கள்' என்று அழைத்ததற்கு மிக முக்கியமான காரணம் அவர் தலித் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார் என்பதற்காகத்தான்

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். என்னுடைய முந்தைய பதிவிற்குக் காசி ஆறுமுகம் பெயரில் ஒருமையில் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தன. அது உண்மையான காசியா, அல்லது காசியின் பெயரில் வந்த போலிப்பின்னூட்டமா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையான காசியாக இருந்தால் அவர் கோபப்படுவதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன.

இப்போது செல்லா, தலித் கம்மனாட்டி என்று திட்டப்படுவதற்காக கோபம் கொள்கிற நான் காசி இதே வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்டபோது தெரிந்தோ தெரியாமலோ மௌனம் சாதித்திருக்கிறேன். என் தார்மீக அறமதிப்பீடுகளின் வீழ்ச்சி அங்கிருந்தே தொடங்கியதாகவே கருதுகிறேன். இதற்காக காசி போன்ற தலித்துகள் செருப்பாலடித்தால் வாங்கிக்கொள்வதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

செல்லா விவகாரத்திற்கு வருவோம். செல்லா விவகாரம் ஒரு தலித்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதியே பலபதிவாளர்களால் தார்மீக நியாய உணர்வோடும் அனுதாபத்தோடும் அணுகப்பட்டது என்று கருதுகிறேன். ஆனால் அவரோ பதிவெழுத வந்துவிட்டு தோழர்.தமிழச்சியின் புகைப்படம் போட்டு அவர் அழைத்ததால்தான் வந்தேன் என்று அவருக்காக கசிந்துருகிக் கண்ணீர் சிந்திய மற்ற அனைவரையும் கேணக்கிறுக்கர்களாக்கிவிட்டார்.

தற்போது தமிழ்மணத்தைத் திறந்தாலே தமிழச்சியின் புகைப்படம் தாங்கிக் குறைந்தபட்சம் இரண்டு பதிவுகளாவது வருகின்றன. இதுவரை பெரியாரின் எழுத்துக்களையோ பேச்சுகளையோ பதிவிடாதவர்கள், குறைந்தபட்சம் பெரியாரின் ஒரே ஒரே மேற்கோளைக்கூட காட்டாதவர்கள், திடீர் 'பெரியாரிஸ்ட்' ஆகிவிட்டார்கள்.
இப்படியாக இணையத்தில் பெரியாரியம் 'பரவிவருகிறது'. வாழ்க பெரியாரியத்தின் வெற்றி!.

ஏதோ குமுதத்தின் அட்டைப்படத்தில் நடிகையின் புகைப்படம் போடுவது போல் ஆகிவிட்டது தமிழச்சியின் பதிவுலகப் புகைப்படம். இதில் லேட்டஸ்ட் கண்றாவி லக்கிலுக்கின், 'தோழர்களின் வேண்டுகோளையடுத்து தோழர் தமிழச்சியின் புதிய படம் போடப்பட்டிருக்கிறது!' என்கிற 'திராவிட அறிவிப்பு' (தோழர்.தமிழச்சி என்னும் பதிவு), ஏதோ ரஜினியின் புதிய படம் ரிலீஸைப் போலவோ அல்லது டூரிங்டாக்கீசில் எழுதி ஒட்டுவார்களே, பழையபடம் புதிய காப்பி என்று, அதைப்போலவும்.


இதைத் தமிழச்சியும் மறைமுகமாக ரசிக்கிறார், அனுமதிக்கிறார் என்றே கருத வாய்ப்பிருக்கிறது. தமிழச்சியின் போராட்டத்தை 'வாழ்த்துகிற' பதிவுகளில் பெரும்பான்மை மறைமுகமாக வழிகிற விண்ணப்பங்களாகவே அமைகின்றன. வேறென்ன, தமிழச்சி தலைமையில் பெரியார் பணி 'முடிப்போம்' என்று தோழர்கள் கோசமிடாதது ஒன்றுதான் குறை.

ஆணோ, பெண்ணோ அழகை ரசிப்பது, சைட் அடிப்பது, ஜொள்விடுவது, இதெல்லாம் தனிமனித விவகாரங்கள். அதைத் தடுக்கும் கலாச்சாரப்போலீசின் கறார்த்தன்மையல்ல எனது மொழி. ஆனால் அதற்கு ஏன் நண்பர்களே பெரியாரைப் பயன்படுத்துகிறீர்கள்? அந்த ஈரோட்டுக்கிழவன் தன் 95ஆம் வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்து ரோடுரோடாகச் சென்றுபிரச்சாரம் செய்து கண்டநாய்களிடமும் செருப்பாலும் மலத்தாலும் அடிவாங்கியது நீங்கள் 'நூல் விடுவதற்கா'?

இறுதியாய்ச் சில வார்த்தைகள் என்று நான் சொன்னது இதைத்தான் : இனிமேல் கருத்தியலைத் தனது தனிமனித விவகாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்பவர்களை ஆதரிக்கப்போவதில்லை. மேலும் போலி டோண்டு விவகாரம் சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கிற முக்கியமான விவகாரமில்லை என்று நான் கருதுவதால் இனி போலிடோண்டு விவகாரம் பற்றிப் பதிவெழுதப்போவதில்லை. வேறு உருப்படியான காரியங்கள் இருக்கின்றன. நன்றி.

68 comments:

சுகுணாதிவாகர் said...

இந்தப் பதிவு நிச்சயமாக எனது நண்பர்களின் மனதைப் புண்படுத்தும் என்று எனக்குத் தெரியும். இந்த நண்பர்கள் தனிப்பட்ட முறையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி என்மீது அன்பையும் அக்கறையையும் பொழிபவர்கள். ஆனாலும் சொல்லத் தோன்றுகிறது, சொல்கிறேன். உரையாடுவோம்.

Mugundan | முகுந்தன் said...

சகோதரரே,

திராவிடப் பதிவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்.
கொள்கையை "கொல்லும் பதிவர்கள்'' தான்
இப்போது தமிழச்சி‍‍ முகத்தை ''சிவாஜி''பட‌
போஸ்டர் மாதிரி ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர்.

தமிழச்சி என்ற மனுசியின் உழைப்பு
பாராட்டப்பட வேண்டியதே.

ஆனால் இப்படி கும்மி அடித்துக்கொண்டல்ல....

அன்புடன்,
முகு

நாமக்கல் சிபி said...

//போலி டோண்டு விவகாரம் சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கிற முக்கியமான விவகாரமில்லை என்று நான் கருதுவதால் இனி போலிடோண்டு விவகாரம் பற்றிப் பதிவெழுதப்போவதில்லை. வேறு உருப்படியான காரியங்கள் இருக்கின்றன//

Valid Point!

Good!

Anonymous said...

// தற்போது தமிழ்மணத்தைத் திறந்தாலே தமிழச்சியின் புகைப்படம் தாங்கிக் குறைந்தபட்சம் இரண்டு பதிவுகளாவது வருகின்றன. இதுவரை பெரியாரின் எழுத்துக்களையோ பேச்சுகளையோ பதிவிடாதவர்கள், குறைந்தபட்சம் பெரியாரின் ஒரே ஒரே மேற்கோளைக்கூட காட்டாதவர்கள், திடீர் 'பெரியாரிஸ்ட்' ஆகிவிட்டார்கள்.
இப்படியாக இணையத்தில் பெரியாரியம் 'பரவிவருகிறது'. வாழ்க பெரியாரியத்தின் வெற்றி!.

ஏதோ குமுதத்தின் அட்டைப்படத்தில் நடிகையின் புகைப்படம் போடுவது போல் ஆகிவிட்டது தமிழச்சியின் பதிவுலகப் புகைப்படம். இதில் லேட்டஸ்ட் கண்றாவி லக்கிலுக்கின், 'தோழர்களின் வேண்டுகோளையடுத்து தோழர் தமிழச்சியின் புதிய படம் போடப்பட்டிருக்கிறது!' என்கிற 'திராவிட அறிவிப்பு' (தோழர்.தமிழச்சி என்னும் பதிவு), ஏதோ ரஜினியின் புதிய படம் ரிலீஸைப் போலவோ அல்லது டூரிங்டாக்கீசில் எழுதி ஒட்டுவார்களே, பழையபடம் புதிய காப்பி என்று, அதைப்போலவும்.
//

சரியான செருப்படி !!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

/*
காசி போன்ற தலித்துகள்
*/

தெளிவாக எழுதப்பட்ட பதிவில் நெருடலை ஏற்படுத்திய சின்ன விஷயம்.

ILA (a) இளா said...

நல்ல நடுநிலைமை சுகுணா!

Osai Chella said...

nee enna loose aappaa? ethukku manam punpadum?

loosela vidu ... if it made me to think.. yes let it be... otherwise no issues!

unakku oru periya pathilpottirukken.. poi padi.. athuvum en manasukkuth thoonRiyathuthaan!

periyar 95 vayasula..un pechu ok. athe periyar 30s la eppadi?

avar maathiri naan iruukkanumkara avasiyam enakkum illai... unakkum illai.. appuram jolluvidurathukku enakku innoru perusu vendaamnu ethanai thadavappa solrathu.. url eduththu anuppattumaa..

kadaisiyaa oru keeLvi... un mathippiidukaLukku en mathippeedukal oththuppookaveendumaa enna.. irunthu vittup pokiren vidu.. existentialism pesi!

-/பெயரிலி. said...

இப்போது சீரியஸா ஒரு கேள்வி;

"மூர்த்தியின் செயற்பாட்டுகளை எப்படித்தான் எதிர்கொண்டிருக்க/கொள்ள வேண்டுமென நினைக்கின்றீர்கள்?"

Anonymous said...

போலி விவகாரம் குறித்த உங்கள் முந்தைய பதிவு, இந்தப் பதிவு இரண்டோடும் முழுக்க உடன்படுகிறேன். துணிவாக எடுத்துரைத்ததற்கு நன்றி.

வவ்வால் said...

பரவலாக சரியாகவும் ,ஆங்காங்கே லேசாக வழுக்கலாகவும் இருந்தாலும், ஏற்றுக்கொள்ள கூடியதாகவே உள்ளது உங்கள் கூற்றுகள்!

Anonymous said...

//உதாரணமாய் மாலனின் விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். மாலன் தனக்கேயுரிய பார்ப்பன இந்துதேசிய வன்மமனோபாவத்தோடேயே ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தினார். ஆனால் டோண்டுராகவன் போன்ற சோணகிரிப் பார்ப்பனர் 'முரளிமனோகர்' என்று பொய்ப்பெயரெழுதி மாட்டிக்கொண்டால் அடித்துத்துவைக்கும் ஓசைசெல்லாவோ மாலனை 'மதிப்புக்குரிய மாலனுக்கு' என்று விளித்தார்.//

See the last comment in this post

http://osaichella.blogspot.com/2007/08/blog-post_403.html

On the main theme of this post, Chella seems to be a confused Periyar follower. On the one hand he would pick on and scream at ordinary, outspoken caste fanatics like Dondu. On the other hand, he would not attempt to understand the Malan's masquerade but admire him because he just drops Periyar's name to push his politics. Chella needs to take take extra lessons from his role model Pamaran to be able to analyze and understand the micropolitics of people like Malan not focus on plainspeaking caste fanatics.

Anonymous said...

mmmm.... good Valid points...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Pot"tea" kadai said...

phone switch on seyyavum...

bemaani...

thiagu1973 said...

சுகுணா ,

உங்கள் பேச்சில் நியாயம் இருக்கிறது .

உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி

Anonymous said...

unmaiyana karuthu nanba.

Mookku Sundar said...

அடேயப்பா...தெளிவாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே...வியந்துபோய்விட்டேன். எல்லோரும் இதை சரியாக புரிந்து கொள்வார்களா..??

என்றென்றும் அன்புடன்

TBCD said...

மாசிலாவும் உடனிருந்தார் ஒருவரும்..அவரைப் பாரட்டக் கானோம்..
என்று நினைத்திருந்தேன்....நீங்கள் சொல்லிவிட்டீர்கள்..
நன்று...
ஓசை செல்லா..இன்றைய பதிவில்...லூசா விடுங்கப்பா என்று போட்டிருக்கிறார்..
அவர் அப்படி விட்டிருந்தால் இத்தனைய டிராமா தேவையில்லை..
ஆனால் மற்றவர்களுகு சொல்ல தயாராய் ஒரு வாக்கியம்..." லூசா விடுங்கப்பா"..
தன்னை தாண்டி இன்னும் சிந்திக்கப் பழக் வேண்டும் தமிழ் சமுதாயம்..(நான் உட்பட)

Ayyanar Viswanath said...

பெரியார் விளம்பரமாக்கப்படுவது குறித்தான கோபங்களும் வெறுப்பும் இரண்டு நாட்களாய் மிகுந்திருந்தது.விளம்பர லேபிளா பெரியார்? என்றொரு சினமும் உள்ளே இருந்து கொண்டே இருந்தது.இந்த பதிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தன் புகைப்படத்தை அனுமதியில்லாமல் செல்லா பதிவில் போட்டதற்காக கராத்தே திறமைகளை வெளிக்கொணர்ந்த தமிழச்சி இப்போது விதம்விதமாய் புகைப்படத்தை போட்டுக்கொள்ள அனுமதிப்பது மலிந்த விளம்பர யுக்தியாகத்தான் படுகிறது.

பெரியாரின் புத்தகங்களை தட்டச்சு செய்ய கொடுத்து அதை பதிவுகளாய் போட்டுக்கொளவதோ பாசறை,பட்டறை திராவிட குஞ்சு என அங்கங்கே பின்னூட்டம் போட்டுக்கொள்வதோ மட்டும்தான் நம் பெரியாரிஸ்டுகளின் இத்தனை காலப் பணி.மேலதிகமாய் இந்த போலி சண்டைகளும் பாப்பான் சண்டைகளும்.

பாரீஸில் நடத்தியதாய் சொல்லப்பட்ட கலகம் அதைப் பிரகடனத்தி போடப்பட்ட பதிவுகள் இன்னும் சலிப்பையே ஏற்படுத்தியது.கலகத்தினை விரிவாய் பதிவிடும்படி தமிழச்சியிடம் கேட்டுக்கொண்ட என் வேண்டுகோள் அப்படியே இருப்பது இன்னும் சலிப்பையே தருகிறது.நீங்க விளம்பரமாக பெரியார்தான் கிடைத்தாரா என்ற கசப்பும் கோபமும் நேற்று மிகுந்து வாரநாட்களில் குடிப்பதில்லை என்கிற என் கட்டுக்களையும் மீறி கராமா பாருக்கு குடிக்கப் போய்விட்டேன்.:)

Kasi Arumugam said...

சுகுணாதிவாகர்,

பல நேர்மையான சொல்லாடல்களூடே சில வழுக்கல்களையும், தட்டையான தீர்மானங்களையும் தீர்ப்புகளையும் உள்ளடக்கிய இவ்வுரையாடலுக்கு பாராட்டும் விமர்சனமும் இருந்தாலும் நேரமின்மையும் இதனால் விளையக்கூடைய பயன் என்று நான் கருதுவதென்று ஒன்றுமில்லையென்பதாலும் அவற்றுக்குள் நான் போகாமலிருக்கிறேன்.

தேவை கருதி சில வார்த்தைகள் மட்டும்.

//இதற்காக காசி போன்ற தலித்துகள் செருப்பாலடித்தால் வாங்கிக்கொள்வதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.//

காசி தன்னை தலித்தென்று என்று சொல்லிக்கொண்டான்? காசியைப் பற்றி மூர்த்தி தான் இப்படிச் சொன்னான். தன் எதிரிகளாகக் கருதும் எல்லாரைப் பற்றியும் மூர்த்தி இதைப்போலவே பலவற்றையும் சொன்னான்; சொல்லிக்கொண்டிருக்கிறான். பெரும் சமூக அக்கறையும் பரவலான அனுபவ அறிவும் இருப்பதாகக் காட்டிகொள்கிற பலரும்கூட, இவை திரும்பத்திரும்பச் சொல்லப்படுவதால் மட்டுமே, இவற்றில் உண்மை எதுவென்ற பிரக்ஞை மழுங்கிப்போய்,இவற்றை நம்பிக்கொண்டு அவற்றைப் பற்றி கிசுகிசுத்து அரட்டை அடித்து பின் சுவீகரித்து ஏமாந்து போகின்றனர். //அதேபோலத்தான் ஆப்பு, போலிடோண்டு யார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் தனது எதிரிகளின் புகைப்படங்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியிடங்கள், அவற்றின் முகவரிகள், மின்னஞ்சல்கள் ஆகிவயற்றை அனாயசமாகத் தோழர் ஆப்புவும் டூண்டுவும் தங்கள் பக்கங்களில் வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.// இவற்றில் எத்தனை சதவீதம் உண்மை? அவன் 'தகவலை' வெளியிட்டதாலேயே பிரமித்து அவனை பிரமிப்புடன் பார்க்கும் இந்த 'பின் லாடன்' வழிபாட்டுமுறைக்கும் நீங்களும் தப்பவில்லையே!

//அதேபோல ஓசைசெல்லா பதிவெழுவதிலிருந்து விலகுகிறேன் என்று சொன்னபோது 'மீண்டும் எழுத வாருங்கள்' என்று அழைத்ததற்கு மிக முக்கியமான காரணம் அவர் தலித் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார் என்பதற்காகத்தான்// செல்லா தலித்தென்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். உண்மையா என்று எனக்குத் தெரியாது, இன்று வரை அதைக் கேட்க வேண்டிய தேவை எனக்கு வரவில்லை. ஒருவேளை உண்மையாய் இருக்கலாம். அல்லது என் அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் மூர்த்தியின் வசவுக்காக செல்லாமேல் இடப்பட்ட சாதியக்குறியீடாக இருக்கலாம். வசையப்படுபவர் உண்மையில் தலித்தா இல்லையா என்பதற்கும் வசைபவனின் 'தலித்துக்கம்மனாட்டி' என்ற பார்வையில் இருக்கும் சாதியத்திமிர் வெளிப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் சம்பந்தமில்லை என்றாலும் 'உண்மை எதுவாகவும் இருக்கலாம்; ஒரு மனவிகாரம் பிடித்தவன் எழுதுவதையெல்லாம் உண்மையாக எடுத்துக்கொள்ளவேண்டாம்' என்பதை உணர்த்துவதற்காகச் சொல்கிறேன். இதே நேரத்தில் எல்லையற்ற நாகரிகத்துடன் எழுதுவோரும் இதற்கு சமமான பொய்களை தங்களுக்கே உரித்தான நாசூக்குடன் எழுதிவருவதையும் நாம் அறிவோம். நான் நேரடியாக சம்பந்தப்பட்ட தகவல்களை அவர்கள் திரிப்பதை சுட்டிக்காட்டியும் சரிப்படுத்த மறுத்திருக்கிறார்கள். அவர்களுடன் இன்னொரு தளத்தில் இன்னொரு நேரத்தில் அதை வைத்து உரையாடவேண்டும்.

//இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். என்னுடைய முந்தைய பதிவிற்குக் காசி ஆறுமுகம் பெயரில் ஒருமையில் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தன.//

//பின்னூட்டங்கள்// இல்லை ஒரே மறுமொழிதான் ஒருமையில் இட்டேன். வேண்டுமென்றேதான் ஒருமையில் *விளித்து*, //திட்டிப் பின்னூட்டங்கள் // 'நல்லாரு' என்று *வாழ்த்தித்* தான் அதுவும்:-) 'ப்பூ அட, நீ இவ்வளவுதானா?' என்பது உங்களின் 'இது காசி ஆறுமுகம்தானா?' என்பதைப் போலவேதான்! ஆனால் நீங்கள் இப்போது என்ன சொல்கிறீர்கள்? திட்டியதாகவும், பல வந்ததாகவும். உங்களுக்கு உடனே அது காசி ஆறுமுகம்தானா என்ற ஆச்சரியம் வந்தது ஏன்????? உங்கள் இந்த எதிர்வினையை வைத்துச் சொல்கிறேன்: //இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.// என்பதெல்லாம் எழுதுவதற்கு வேண்டுமென்றால் சும்மா 'கெத்'தாக இருக்கும். உங்களை நான் நம்பவில்லை:-) (துக்ளக் சோவுக்கு சற்றும் குறையாத நேர்மையாளன் லக்கிலுக் என் 'அந்த' மறுமொழியை வைத்து கதை பின்ன முயற்சித்தது வேறு தனிக்கதை. 'தம்பி, நீ என்னைப் பீடத்திலும் ஏற்ற வேண்டாம், பின்னால், ராத்திரி வந்து அதன் மேல் ஒண்ணுக்கும் அடிக்கவேண்டாம். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ.')

பின்குறிப்பு:
//இதுவரை வெளியிடப்படாத சொச்சம் பின்னூட்டங்கள்// இதில் எனக்கு உடன்பாடில்லை. அவரவர் அவரவர் பாணியிலேயே சொல்லியிருக்கவேண்டும். ஏன் நீங்கள் நிறுத்தவேண்டும்? //அவற்றின் சாராம்சம் மட்டும்.// நீங்கள் யார் அவற்றை ஒற்றைப் பரிமாணத்தில் ஏற்றி சாறு பிழிய? (வெளியிடப்படாதவற்றில் என்னுடையது எதுவுமில்லை. என்றாலும் இதை நான் சொல்லியாக வேண்டும்) உங்கள் வீரவிளக்கத்துக்காக அவர்கள் மறுமொழி நிறுத்தி வைக்க உங்களுக்கு உரிமை வேண்டுமா? வாழ்க உங்கள் கருத்துச் சுதந்திரம்!

SurveySan said...

//...ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.///

Total Absurdity!

Ayyanar Viswanath said...

பாரிஸ் வெங்காயங்கள் என்ற தலைப்பில் தமிழச்சி எழுதிய கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தை இங்கே பதிகிறேன்.

/இன்று கூட தோழர்களுடன் துண்டு பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்த
போது கோயில் ஆட்களாலும், சில மதப்பைத்தியங்களாலும் பிரச்சனைகளுக்கு உள்ளாகி ஆபத்தின் நுனியில் இருந்து விட்டுதான் வந்திருக்கிறோம்/

இதை இன்னும் விரிவா சொல்லியிருக்கலாமே!!
இல்லைன்னா துண்டு பிரசுரம் விநியோகித்ததிற்கு இத்தனை பிலட் அப் ஆ!! அப்படின்னு ஒரு எள்ளல் வருவதை தவிர்க்க முடியவில்லை
அப்படியே அந்த துண்டு பிரசுரங்களில் எழுதப்பட்ட விதயங்களையும் பகிர்ந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

//1985 - பிப்ரவரி 4- ஆம் நாள் கோயில் குடமுழுக்கு நடந்து, 1986 - முதல் இந்து வழிபாட்டு முறையில் வழிபாடுகள் நடக்கின்றன. இது விநாயகர் கோயிலின் 12- வது வருட தேர்த் திருவிழாவாகும்.பாரிசில் கடந்த 22 - ஆண்டாக இருந்து வரும் இந்த கோயிலில் ஆகம முறைப்படி 3 கால பூஜைகளும், செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பிரதோஷம், ஏகாதசி, பவுர்ணமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

தைப் பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரைப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, ஆனி உத்தரம், ஆடி அமாவாசை, ஆவணி, ஞாயிறு, புரட்டாசி, சனி, ஐப்பசி, வெள்ளி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை ஆகிய விசேஷ நாட்கள் இந்த கோயிலில் சிறப்பாக முட்டாள்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

தேர் திருவிழா அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பஞ்சமுக விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் தேர் பவனி, நாதஸ்வரம் முழங்க, காவடி, பஜனை ஆகியவற்றுடன் நடைபெறும். 3-ம் தேதி காலை
8 மணிக்கு தீர்த்தம், சங்காபிஷேகம், திருவூஞ்சல் நடைபெறும்.

இதை ஒட்டி பால்காவடி, தீர்த்தக்காவடி, புஷ்பக்காவடி, கற்பூச்சட்டி மற்றும் சாதாரண காவடிகள் எடுக்க விரும்புவோர் முன்கூட்டியே ஆலய நிர்வாகத்திற்கு தகவல் தரவேண்டும். பூஜை, அபிஷேகத்திற்கு வேண்டிய பூ, பால், தயிர், இளநீர் கொடுக்க விரும்புவோர் அவற்றை கோயிலில் ஒப்படைக்க வேண்டும் என பட்டீயல் நீண்டுக் கொண்டே போகின்றது.//

இந்த அளவிற்கு விவரமாய் ஒரு அய்ரோப்பிய பக்தனுக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை..:)

ஆழமில்லாத மேம்போக்கான எதிர்ப்பு என்பது வெற்று விளம்பரத்திற்கான தோற்றத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.உங்கள் கட்டுரைகளை எழுதும்/தட்டச்சும் நண்பரிடம் உஷாராய் இருங்கள்.....


இதற்கு பின் வீதிகளில் நோட்டிஸ் கொடுத்த புகைப்படங்களையும் நோட்டிஸ் ஒன்றையும் (நான் சிறுவயதிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் அதே நோட்டிஸ்)பதிவிட்டிருந்தார்.இந்த இரண்டு செயல்களும் மிகச் சிறந்த கலங்களாக கருதப் பட்டு விடுதலை பக்கத்தில் இவரின் போட்டோ வெளிவந்தது.

கடவுள் மறுப்பு என்பதற்கன பின்னனி விளிம்பு மாந்தர்களின் அறியாமையும் வறுமையும் அவர்கள் நசுக்கப்படுவது குறித்தான கோபங்களுக்கான எதிர்ப்புமாகத்தான் இருக்க முடியும்.ஆனால் பரிஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் பொழுது போகாத பணக்காரர்கள் இப்படி கோயில் விழா என பணத்தை கொண்டாடி கொண்டிருக்குமிடத்தில் தரப்படும் நோட்டிஸ்களுக்கும் இன்ன பிற பொருடகளின் விற்பனை பிரதிநிதிகள் கொடுக்கும் விளம்பர நோட்டிகளிலிருந்து எந்த வகையில் வேறுபடுத்தி விடமுடியும்.

ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கம் வரவேற்க கூடியதுதான் அதற்காக உடனிருந்து பணியாற்றிய மாசிலாவின் புகைப்படத்தை ஒருவரும் பதிவிடாததை இங்க கண்டிக்கிறேன்:)

Anonymous said...

//நாடிழந்து வீடிழந்து அவதியுறும் ஈழத்தமிழர்கள் மீது வீசப்பட்ட பார்ப்பன வன்மத்தை மட்டும் எப்படி உருட்டி விளையாடமுடிகிறது?///

ஈழத்தமிழர்கள் எவரையேனும் என் பதிவு புண்படுத்தியிருந்தார் அவர்களிடம் இந்த பதிவு வாயிலாக மன்னிப்பை வேண்டுகிறேன்...

லக்கிலுக் said...

பதிவை பற்றி கருத்து ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் கருத்து இதுவாகத் தான் இருக்கும் என்பது உங்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்!!

தோழர் தமிழச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் பயன்படுத்தப் படுவது சில பாதுகாப்பு காரணங்களுக்கேயன்றி வேறொன்றிற்கும் இல்லை :-)

Unknown said...

உங்கள் பதிவில் நீங்கள் நேர்மையாய் வெளியிட்டிருக்கும் கருத்துக்களுக்காக உங்களைப் பாராட்டுகிறேன்... நன்றி சுகுணா திவாகர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல./ I hope you will accept that almost all these so called 'bad words' used by poli are male centric and are designed to degrade feminism. Hence, it has to be opposed only.

கதிர் said...

++

லெனின் பொன்னுசாமி said...

சிலபிரச்ச்னைகள் எனக்கு புரியவில்லை. ஆனால் வெட்டொன்று துண்டு ரெண்டாக பேசும் உங்கள் பாங்கு பிடிக்கிறது.

சமீபத்தில் பிடித்த எழுத்து நடை உங்களுடையது.

Darren said...

///அதற்கு ஏன் நண்பர்களே பெரியாரைப் பயன்படுத்துகிறீர்கள்? அந்த ஈரோட்டுக்கிழவன் தன் 95ஆம் வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்து ரோடுரோடாகச் சென்றுபிரச்சாரம் செய்து கண்டநாய்களிடமும் செருப்பாலும் மலத்தாலும் அடிவாங்கியது நீங்கள் 'நூல் விடுவதற்கா'
/////


நியாங்கள் பதிவாக. நன்றி.

முத்துகுமரன் said...

//ஈரோட்டுக்கிழவன் தன் 95ஆம் வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்து ரோடுரோடாகச் சென்றுபிரச்சாரம் செய்து கண்டநாய்களிடமும் செருப்பாலும் மலத்தாலும் அடிவாங்கியது நீங்கள் 'நூல் விடுவதற்கா'//

மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் சுகுணா! நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டியதுதான்.

பெரியாரின் கொள்கைகளை நம்புகிறவர்கள்/பின்பற்றுகிறவர்கள் குறைந்த பட்சம் பெரியாரை இழிவு செய்யாதிருந்தால் நலம்.

வெளிப்படையான உரையாடல் நிகழும் என நம்புகிறேன்.

சீனு said...

:)))))))))))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//காசி தன்னை தலித்தென்று என்று சொல்லிக்கொண்டான்? காசியைப் பற்றி மூர்த்தி தான் இப்படிச் சொன்னான்.//

காசியின் பதிவில் இருந்து ஒன்று தெளிவாகிறது. அதாவது தான் தலித் இல்லை என்று காசி சொல்ல வருகிறார்.

ஆக இவருக்கு தலித் என்று ஒருத்தர் சொன்னால் கோபம் வருகிறது. தலித் என்றால் தாழ்ந்தவர் என்று இவரும் நம்புகிறார்!

இவர் தலித்துகள் இல்லை, அப்படிச் சொல்வதே பாவம் என்று நினைத்தார் என்றால், தலித்தும் ஒரு மனிதன் தானே, என்னை தலித் என்று சொல்வதால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.

ஆனால் அப்படிச் செய்யாமல் நான் தலித் இல்லை, பள்ளன் இல்லை, பறையன் இல்லை, வெட்டியான் இல்லை என்று பேச முனைந்திருப்பது இவரி்ன் ஜாதிவெறியையே காட்டுகின்றது!

தவச தானியத்துக்கு தமிழ்மணத்தை வித்துட்டு ஓடியவருக்கு வேறு எப்படி சிந்திக்கத் தோன்றும்?

Anonymous said...

உங்களைத்தாக்கி, உண்மைத்தமிழன் அண்ணாச்சிக்கு நான் கெஎட்ட கேள்விகள் இவை:-

முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் வலையுலக வாரியார் அவர்களே.

1)டோண்டு தன் ஜாதியை பெருமையாக சொன்னதை தவறு என்று ஏற்கிறீர்களா இல்லையா? தவறு என்றால் ஏன் நீங்கள் அவருக்கு சுட்டிக் காட்டவில்லை?

2)போலி டோண்டு மகள் போட்டோவை போட்டதை எதிர்க்கிறீர்களா இல்லையா? எதிர்க்கிறீர்கள் என்றால் ஏன் நீங்கள் அந்த பதிவில் உங்கள் எதிர்ப்பினை காட்டவில்லை?

3)சாதா கடையில் டீக்குடிக்க கடைக்குள் விடவில்லை என்றால் தலித்துகள் சொந்தமாக தனிக்கடை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே என்ற்று டோண்டு ராகவன் சொல்வதை ஆதரிக்கிறீர்களா?

4)அதியமான் என்பவர் போன் செய்து ஆபாசமாக பேசியதாக சிலர் சொல்கின்றனர். அவர் உங்கள் நண்பர் என்றால் எதிரியிடமும் ஆபாசம் பேசாதே என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்தானே?

5)பெண்கள் எல்லாரிடமும் உடலுறவு கொள்ளலாம் என்று டோண்டு சொன்னதாக போலி சொல்கிறான். இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?

6)சிறு குழந்தைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகம் என்ற கான்செப்டே தோன்றியதாக டோண்டு சொல்கிறார். இது உண்மையா?

7)போலி உங்களை எங்குமே திட்டவில்லை என்கிறான். நீங்கள் அவனை வம்பிழுத்த பிறகுதான் அவன் உங்களை தாக்கியதாக சொல்கிறான். சும்மா இருந்த அவனை தூண்டி விட்டது உங்கள் குற்றம் அல்லவா?

8)கையொடிய நாள் சம்பளத்துக்கு தட்டச்சு செய்யும் உங்களுக்கு இதுபோல பெரிய பெரிய பதிவுகள் போட நேரம் எப்படி கிடைக்கிறது?

9)செந்தழல்ரவி, குழலி, செல்லா ஆகியோர் இன்னொருவரின் புகைப்படம் எல்லாம் போட்டு பதிவு போடுகின்றனர். இது தவறு இல்லையா? கண்டித்தீர்களா?

10)உங்கள் உடல் ஊனத்தை காரணம் காட்டியதாக போலி மீது சுகுணா குற்றச் சாட்டு சொல்கிறார். நான் போலிப்பதிவில் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. தயவு செய்து அதன் லிங் தர முடியுமா?

11)எல்லாரும் அமைதியாக இருக்கும்போது டோண்டு "இரண்டாம் சாணக்கியன்" என்ற பெயரில் மெதுவாக பூனைபோல் தமிழ்மணத்தில் நுழைந்து பதிவுகள் போட்டுக் கொண்டிருப்பது எதற்காக?

Anonymous said...

உங்கள் பதிவில் பெயரிலி என்ற பெயரில் இருக்கும் கமெண்டு போலியானது. அதனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

thiagu1973 said...

கட்டுடைத்தல் ,பெருவெளி , சிறு வெளி , பண்முக தன்மை ,விழிம்பு ,
மையம் ,குவிதல் ,விலகுதல்

இதெல்லாம் கலந்து கலந்து பேசினால் அது பின் நவீனத்துவமா

எளிமையா பேசினா அதுக்கு என்னாங்க பேரு

அப்புறம் நீங்க ஒருகட்டுரை எழுதிடுங்க விளக்கமா , பின் ந.து. னன இன்னான்னு

அதுல யாரை எப்படி கூப்பிடலாம்னு சொல்லிட்டீங்கன்னா அல்லது
யாரைவேணா எப்படி வேணா கூப்பிடலாம்னு சொல்லிட்டிங்கன்னா

எதுக்குங்க உங்களை சும்மா நச்ச போறாங்க

இன்னா நான் சொல்றது

சரியா !

PPattian said...

//மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்//

உங்களை நீங்களே ஒரு பெரிய அறிவுஜீவி என எண்ணிக்கொள்வதால் வரும் வார்த்தைகள் இவை.. மனசாட்சியுடன் சொல்லுங்கள்.. இது முடியுமா உங்களால்..

Pot"tea" kadai said...

suguna,

ovvoru variyilum udanbadugiren.

//ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கம் வரவேற்க கூடியதுதான் அதற்காக உடனிருந்து பணியாற்றிய மாசிலாவின் புகைப்படத்தை ஒருவரும் பதிவிடாததை இங்க கண்டிக்கிறேன்//

do u really read all the blogs?

Pot"tea" kadai said...

//நீங்க விளம்பரமாக பெரியார்தான் கிடைத்தாரா என்ற கசப்பும் கோபமும் நேற்று மிகுந்து வாரநாட்களில் குடிப்பதில்லை என்கிற என் கட்டுக்களையும் மீறி கராமா பாருக்கு குடிக்கப் போய்விட்டேன்.:) //

ayyo ayyanaar...
sirippu thaangalai enakku...
unakku kudikka kooda periyar thevaipadaraarE???

:))

Anonymous said...

ஏற்கனவே போலியாரை ஆராதித்தவர்கள், இன்றைக்கு எதிர்ப்பதும் நாளை அவரை பாராட்டி விழா எடுப்பதும் கேவலமாக இருக்கும் அரசியல் சாக்கடைக்கு சமானம். எதோ போலியாரை கண்டுபிடித்து ஹீரோயிசம் செய்துவிட்டது போல ஓலமிடுபவர்கள், இதனால் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு என்ன கிடைத்தது எனச் சொன்னால் பரவாயில்லை. எல்லோருக்குள்ளும் போலியார் போன்றவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சுகுணாதிவாகர், நீங்கள் எழுதியது ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்று தான். போலியாரை பற்றி எழுதியவர்களுக்கு சரியான செருப்படி உங்கள் பதிவுகள். வாழ்த்துக்கள்.

மு. சுந்தரமூர்த்தி said...

சுகுணா,
உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன், பல கருத்துக்களுடன் உடன்படுபவனாயினும், சில விஷயங்களை மிகைப்படுத்தி, பிறரின் அந்தரங்க சமாச்சாரங்களையும், பட்ட காயங்களையும் உங்கள் விளம்பரத்திற்காக மலினப்படுத்தி எழுதுகிறீர்களோ என்று உங்கள் மீது கூட சந்தேகம் வருகிறது. ஒரு உதாரணம் காசியைப் பற்றி எழுதியிருப்பது. இதை எழுதலாமா என்று நேற்று முதல் யோசித்தேன். காசி இங்கு எழுதியிருப்பதால் தைரியத்தோடு எழுதலாம் என்று தோன்றியது.

காசியை தலித் என்று சொன்னது இதுவரை மூர்த்தியைத் தவிர வேறு யாருமில்லை. காசியும் தன்னுடைய ஜாதி எதுவென்று சொன்னதில்லை. மற்றவர்களும் அதைப் பற்றி கவலைப்பட்டதில்லை. மின்னஞ்சல், தொலைபேசி, நேர் சந்திப்பு என்று பலவாறு எனக்கு காசியுடன் மூன்றாண்டுகளாக நட்பிருக்கிறது. பல விஷயங்களைப் பேசியிருக்கிறோம். ஆனால் ஒருவரையொருவர் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்ளவில்லை. அதே போல காசிக்கு பல நண்பர்கள் இருக்கக்கூடும்.

ஆனால் காசியைப் பற்றி அதிகம் அறியாத நீங்கள் மூர்த்தி எழுதியதை மட்டும் நம்பி உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள, உங்கள் தலித் ஆதரவை உரத்துச் சொல்ல, செல்லா, காசி இவர்களின் பெயர்களை இழுத்திருப்பது மலிவான உத்தியாகவே தெரிகிறது. காசியை தலித் என்று மூர்த்தி எழுதியதை முன்பே கண்டிக்காதது குறித்து வருந்துவது மிகவும் செயற்கையாக உள்ளது.

நான் புரிந்துகொண்ட வரையில் மூர்த்தியின் மீதான காசியின் கோபம் காசியின் ப்ரொஃபைலில் இருந்த தகவல்களை வைத்து அதே மாதிரி ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து கண்டமேனிக்கு பின்னூட்டங்கள் எழுதியது, அப்பதிவில் ஃபோர்னோ எழுதியது போன்ற காரணங்களுக்காக. காசியின் பெயரில் வந்த ஒரு சாதாரண பின்னூட்டத்திற்கே உங்களுக்கு அதை எழுதியது காசி தான என்று சந்தேகம் வரும்போது, மூர்த்தியின் போலிக் காசி பின்னூட்டங்கள் எத்தனை பேருக்கு அதிர்ச்சியும், அதனால் காசிக்கு எவ்வளவு மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கும் என்று யோசித்தீர்களா.

மூர்த்தி எதிர்க்கப்படவேண்டியது ஜாதியத்திற்காகவும், ஆணாதிக்க மனோபாவத்திற்காகவும் என்பதாகவும், ஆபாச வார்த்தைகள் எழுதியதற்காகவும் அல்ல என்ற உங்கள் பின் நவீனத்துவ விளக்கம் புல்லரிக்க வைக்கிறது. பிறரின் ஜாதியைப் பற்றி பொய்யாக எழுதுவது அல்லது உண்மையாக இருந்தாலும் அதை இழிவு செய்வது எப்படி கண்டிக்கப்பட வேண்டுமோ அதே போல யாருடைய அம்மா/மனைவி/சகோதரி யாரோடு படுத்தார் என்று அப்பட்டமான பொய்களையோ அல்லது அவை உண்மையாக இருந்தாலுமே பிறருடைய அந்தரங்க விஷயங்களை எழுத மூர்த்திக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதற்காகவும் கண்டிக்கப்பட வேண்டும். அதைத்தான் எல்லோரும் செய்துகொண்டிருக்கிறாகள். உங்களுக்கு மட்டும் இது பொதுபுத்தியாகத் தெரிய விலகி நின்று வித்தியாசமாக இருக்க விரும்புகிறீர்கள்.

சுகுணாதிவாகர் said...

ஒருநண்பர் சொல்வதைப் போல பெயரிலியைக் கிளிக்கினால் புரொபைல் வரவில்லைதான். இருந்தாலும் யாரோ ஒரு நல்ல மனிதரின் கேள்வி

/"மூர்த்தியின் செயற்பாட்டுகளை எப்படித்தான் எதிர்கொண்டிருக்க/கொள்ள வேண்டுமென நினைக்கின்றீர்கள்/

தெரியவில்லை.

சுகுணாதிவாகர் said...

/phone switch on seyyavum...

bemaani... /

பழைய போனுக்குப் போன் செய்து போன் ஆப் ஆகி இருக்கிறது என்று பின்னூட்டம் போடாதேடா என் செல்ல சோமாறி.

சுகுணாதிவாகர் said...

காசி,

/காசி தன்னை தலித்தென்று என்று சொல்லிக்கொண்டான்? காசியைப் பற்றி மூர்த்தி தான் இப்படிச் சொன்னான். தன் எதிரிகளாகக் கருதும் எல்லாரைப் பற்றியும் மூர்த்தி இதைப்போலவே பலவற்றையும் சொன்னான்; சொல்லிக்கொண்டிருக்கிறான்/

/இவற்றில் எத்தனை சதவீதம் உண்மை? அவன் 'தகவலை' வெளியிட்டதாலேயே பிரமித்து அவனை பிரமிப்புடன் பார்க்கும் இந்த 'பின் லாடன்' வழிபாட்டுமுறைக்கும் நீங்களும் தப்பவில்லையே!

/

தெரியவில்லை. ஆனால் அவர்களால் வெளியிடப்பட்ட விவரங்களை யாரும் (நீங்கள் உட்பட) மறுக்கவில்லையென்றே நினைக்கிறேன்.

/'நல்லாரு' என்று *வாழ்த்தித்* தான் அதுவும்/

ஆஹா, இதற்குப் பெயர்தான் வாழ்த்தா? எனக்கு ஏதோ வயிறு எரிந்து மண்ணை வாரித் தூற்றியதைப் போல இருந்தது.

/துக்ளக் சோவுக்கு சற்றும் குறையாத நேர்மையாளன் லக்கிலுக் என் 'அந்த' மறுமொழியை வைத்து கதை பின்ன முயற்சித்தது வேறு தனிக்கதை. 'தம்பி, நீ என்னைப் பீடத்திலும் ஏற்ற வேண்டாம், பின்னால், ராத்திரி வந்து அதன் மேல் ஒண்ணுக்கும் அடிக்கவேண்டாம். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ.')

/


லக்கிலுக்கின் மீதுதான் உங்களுக்கு எவ்ளோஓஓஓஓஓஓவ் நம்பிக்கை?((-

///இதுவரை வெளியிடப்படாத சொச்சம் பின்னூட்டங்கள்// இதில் எனக்கு உடன்பாடில்லை. அவரவர் அவரவர் பாணியிலேயே சொல்லியிருக்கவேண்டும். ஏன் நீங்கள் நிறுத்தவேண்டும்? //அவற்றின் சாராம்சம் மட்டும்.// நீங்கள் யார் அவற்றை ஒற்றைப் பரிமாணத்தில் ஏற்றி சாறு பிழிய? (வெளியிடப்படாதவற்றில் என்னுடையது எதுவுமில்லை. என்றாலும் இதை நான் சொல்லியாக வேண்டும்) உங்கள் வீரவிளக்கத்துக்காக அவர்கள் மறுமொழி நிறுத்தி வைக்க உங்களுக்கு உரிமை வேண்டுமா? வாழ்க உங்கள் கருத்துச் சுதந்திரம்!/

சார், ஒரே கேள்வியை எத்தனை முறைதான் எதிர்கொள்வது? எனக்கும் போரடிக்காதா?

சுகுணாதிவாகர் said...

/சுகுணா ,

உங்கள் பேச்சில் நியாயம் இருக்கிறது .

உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி/

அய்யா தியாகு,

போனபதிவில் 'உங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன்' என்று சண்டைபோட்டு ஓடினீர்கள். இப்போது நியாயம் இருக்கிறது என்கிறீர்கள். நீங்கள் மட்டும்தான் இப்படியா? இல்லை, கோயம்புத்தூர்க்காரர்களே இப்படியா?

சுகுணாதிவாகர் said...

/காசியின் பெயரில் வந்திருக்கும் கமெண்டு போலி. அதனைஇ எழுதியது பெயரிலியாக இருக்கலாம்/

சமயங்களில் என் பதிவுகள் யார் வேண்டுமானாலும் வந்து கிசுகிசு எழுதிச் செல்லும் களமாகவும் ஆகிவிடுகிறது. வாழ்க கிசுகிசு கிருஷ்ணசாமிகள்! (இந்த கிருஷ்ணசாமி என்பது ஏதோ கி- க்கு கி என்று வந்துவிட்டது. மற்றபடி இந்தப் பின்னூட்டத்திற்கும் லக்கிலுக்கிற்கும் தொடர்பில்லை.)

Anonymous said...

//நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.//

மூர்த்தி வெறுமனே கெட்ட வார்த்தையில் மட்டுமே திட்டுவதில்லை சுகுணா சாரே. குடும்ப பெண்களின் போட்டோவை போட்டு காம கதைகளும் எழுதுகிறான்.

உங்கள் குடும்ப பெண்களை அவன் இப்படி எழுதினால் அதை ஒத்து கொள்வீர்களா?நீங்கள் ஒத்துகொள்வது இருக்கட்டும்.அதற்கு அவர்கள் ஒத்து கொள்வார்களா?அல்லது அவர்கள் சம்மதம் இதற்கு முக்கியமில்லையா?

Anonymous said...

//லக்கிலுக்கின் மீதுதான் உங்களுக்கு எவ்ளோஓஓஓஓஓஓவ் நம்பிக்கை?((-//

காசிக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் எனக்கு

அருண் நீங்கள் என்னிடம் தந்த ஆதாரம் மூர்த்தியின் அல்லக்கை லக்கிலுக் என்று வலுவாகவே சொல்கிறது.... உங்களின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் துணையாக இருக்க தயாராக இருக்கின்றேன்

என்று குழலி தன் பதிவில் எழுதியிருந்ததைப் படித்ததும், என்னுடைய நம்பிக்கை பன்மடங்காக உயர்ந்துவிட்டது.

Kasi Arumugam said...

//லக்கிலுக்கின் மீதுதான் உங்களுக்கு எவ்ளோஓஓஓஓஓஓவ் நம்பிக்கை?((-//

இவரென்ன, இவருக்கு உடன்பிறவா அண்ணன் ஒருவர் இருக்கிறார், அரிதாரம் இல்லாமலேயே அசத்துவார் நடிப்பில்! அவரைப்பற்றி இன்னொரு நாளில்.

Kasi Arumugam said...

//தெரியவில்லை. ஆனால் அவர்களால் வெளியிடப்பட்ட விவரங்களை யாரும் (நீங்கள் உட்பட) மறுக்கவில்லையென்றே நினைக்கிறேன்.//

நீங்கள் குழந்தையில்லையே! அவர்களால், இல்லை, அவனால் வெளியிடப்பட்ட விவரங்களை எல்லாம்மறுக்கணும் என்றால் நான் அதற்குத் தனியாக ஒரு ஆள்போட்டு அலுவலகம் நடத்த வேண்டும்:-)

ஒருவர் மேல் அபாண்டம் சுமத்தப்பட்டால், அவர் மறுக்காதவரை அவர் அதை ஒத்துக்கொண்டதாக ஆகிவிடுமா? அட இது எந்த ஊர் நியாயம்? உங்களைப் பற்றியெல்லாம் எத்தனை மதிப்பு வைத்திருந்தேன், ஹும். இத்தனை தட்டையாக இருக்கிறீரே!

Anonymous said...

//ஈழத்தமிழர்கள் எவரையேனும் என் பதிவு புண்படுத்தியிருந்தார் அவர்களிடம் இந்த பதிவு வாயிலாக மன்னிப்பை வேண்டுகிறேன்...//

நமக்கு ஆயிரம் யோசனைகள் சோதனைகள். இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. இதோ யாழ்ப்பாணத்தில இருக்கிற அம்மாக்கு காசிருந்தும் வாங்க கடையில பொருட்கள் இல்லை. பொருட்களாகவே அனுப்ப முடியுமா என பார்க்க வேண்டும்.

இந்த லட்சணத்தில் நீங்கள் யாரோடு மல்லுக்கட்டுகிறீர்கள் யாருக்கு பல்லுக்காட்டுகிறீர்கள் என பார்க்க நேரமெதுவும் இல்லை.

வேண்டுமானால் ஒரு காலத்தில் எங்கள் நாடும் அமைதி பெற்று வருமானால் அப்போது கிடைத்த சுதந்திரத்தை இவ்வாறான சொறிச் சேட்டைகளுக்குப் பயன்படுத்த நாங்களும் களத்துக்கு வாறம்.

அதுவரை..
வேறை வேலை இருக்கண்ணை -

Anonymous said...

//தெரியவில்லை. ஆனால் அவர்களால் வெளியிடப்பட்ட விவரங்களை யாரும் (நீங்கள் உட்பட) மறுக்கவில்லையென்றே நினைக்கிறேன்.//

உதாசீனப்பட்டுத்தினால் அல்லது கண்டுகொள்ளவில்லை என்றால் அதற்கு பொருள் மறுக்கவில்லை என்பதா ?
விளக்கம் ப்ளீஸ்.

உங்களை ஒருவர் அடித்து துவைக்கிறார். நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் நீங்கள் அதை ஏற்கிறீர்கள் என்று பொருளா ?

கோட்டை விட்டுவிட்டீரே சுகுணா
:)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
thiagu1973 said...

//போனபதிவில் 'உங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன்' என்று சண்டைபோட்டு ஓடினீர்கள். இப்போது நியாயம் இருக்கிறது என்கிறீர்கள். நீங்கள் மட்டும்தான் இப்படியா? இல்லை, கோயம்புத்தூர்க்காரர்களே இப்படியா? //

போனபதிவில் தாங்கள் திருவாளர் போலியை மிக்க மரியாதையுடன் தோழர் அழைத்தமைக்கான எனது பின்னூட்டம் அது .


இந்த பதிவில் செல்லாவின் மீள்பதிவை பற்றி தங்களுடைய ஆதங்கத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்லி இருப்பதை பாராட்டுகிறேன் .

அவ்ளோதான்

சுகுணாதிவாகர் said...

/I hope you will accept that almost all these so called 'bad words' used by poli are male centric and are designed to degrade feminism./

yes, i agree.

சுகுணாதிவாகர் said...

நண்பர் வேகாதவன் அவர்களுக்கு, (என்ன பேரோ, சுடுகாட்டில் எரியும்போது பாதியிலேயே எழுந்து வந்துவிட்டீர்களா?)

உண்மைத்தமிழன் என்னை எதிர்த்துப் பதிவெழுதவில்லை. சில கேள்விகள் கேட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

சுகுணாதிவாகர் said...

/உங்களை நீங்களே ஒரு பெரிய அறிவுஜீவி என எண்ணிக்கொள்வதால் வரும் வார்த்தைகள் இவை.. மனசாட்சியுடன் சொல்லுங்கள்.. இது முடியுமா உங்களால்.. /

இதென்னது சின்னப்புள்ளத்தனமா? நீங்கள் வேண்டுமானால் போலியிடம் விண்ணப்பம் வைக்கலாமே, 'சுகுணாதிவாகர் குடும்பத்தைத் திட்டு, அவன் என்ன ரியாக்ஷன் செய்கிறான், பார்ப்போம்' என்று.

K.R.அதியமான் said...

///4)அதியமான் என்பவர் போன் செய்து ஆபாசமாக பேசியதாக சிலர் சொல்கின்றனர். அவர் உங்கள் நண்பர் என்றால் எதிரியிடமும் ஆபாசம் பேசாதே என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்தானே?

nonsense. i never do that.
can anyone prove it ?

athiyaman

K.R.அதியமான் said...

i guess vehaadavan could be that poli moorthy. only that pervert phoned me from Malaya and started using filthy words and i matched his verbel abuse. and then he created a poli blog in my name..

athiyaman
nellikkani.blogspot.com

Unknown said...

ஐயா,

அவ்வப் போது இந்த மாரி கொஞ்சம் கவனச் சிதறல் வரத்தான் செய்யும். கண்டுகொள்ளாம நீங்க சொல்ல வேண்டியத சொல்லிகிட்டே போங்க. உங்களோட வாசகன் நான்.

வலைப்பதிவர்களைப் பற்றி நாம விமர்சனம் பண்ணுறதினால என்ன பயன் ? உண்மை உலகத்தில் நடப்பதைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்யும் ஊடகமாக வலையுலகம் இருக்கும் வரை, அதுக்கு நாம முக்கியத்துவம் கொடுக்கலாம். அது இல்லாம, வலைப் பதிவர்களைப் பற்றி வலைப்பதிவுகளில் பேசிக்கிட்டா அது எதுக்கும் பிரயோசனமில்லாத ஒரு மாய உலகமாக இந்த வலையுலகம் இருக்கும்.

அப்புறம், ஒங்க ஃபோட்டோவைப் பாத்தேன். பழைய காலத்து கம்பியூடெர் முன்னாடி ஒக்காந்து இருக்கிறது மாதிரி தெரியுது. ஒரு எல்.சி.டி மானிடர் வாங்கிக்கிட்டீங்கன்னா கண்ணுக்கு நல்லது.

ஓகே, கோ அஹெட்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
K.R.அதியமான் said...

suguna,

why are you allowing such annonymous comments ?

anyway, i don't give a damn.

K.R.அதியமான் said...
This comment has been removed by a blog administrator.
மு. சுந்தரமூர்த்தி said...

//ஆனால் அவர்களால் வெளியிடப்பட்ட விவரங்களை யாரும் (நீங்கள் உட்பட) மறுக்கவில்லையென்றே நினைக்கிறேன்.//

சுகுணா,
மூர்த்தி "வெளியிட்ட விவரங்கள்" எதையும் யாரும் மறுக்கவில்லை என்பதால் அவற்றை உண்மையென்று நினைக்கும் அளவுக்கு அப்பாவியாக இருப்பீர்களா? எல்லா "விவரங்களையும்" இப்படியே நம்புகிறீர்களா?

"காசி தன்னை தலித்தென்று என்று சொல்லிக்கொண்டான்? காசியைப் பற்றி மூர்த்தி தான் இப்படிச் சொன்னான்" என்று காசி சொன்னதுக்கு ஒரு அனானி அளித்திருக்கும் விளக்கத்தைப் பாருங்கள்.

ஒருவர் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்ளாததை இன்னொருவர் சொல்லும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மறுக்க வேண்டுமா? அல்லது ஒன்றும் சொல்லாமல் சும்மா இருக்க வேண்டுமா?

இன்னொரு அனானி என் பெயரில் வந்திருக்கும் பின்னூட்டத்தை எழுதியது சிங்கப்பூரில் உள்ள மரம்வெட்டி (குழலியைக் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்) என்று கூறியுள்ளது உண்மையல்ல. எழுதியது நானே தான். பெயரைக் கிளிக்கினால் என்னுடைய பதிவுக்குச் செல்லும்.

வலைப்பதிவுகளில் அனாமதேயமாக எழுத அனுமதிப்பதே அபத்தமாக இருக்கிறது. இப்படி எழுதுபவர்கள் யாரும் அதிகாரம் படைத்த நிறுவனத்துக்கு எதிரான புரட்சிகரமாக எழுதுபவர்களில்லை. பெரும்பாலும் குட்டிச்சுவருக்கு பின்னால் மறைந்துக்கொண்டு புழுதி வீசுபவர்களாகவே இருக்கிறார்கள்.

சுகுணாதிவாகர் said...

நண்பர்களுக்கு...

நண்பர்கள் அதியமான், பெயரிலி, காசி ஆறுமுகம், சுந்தரமூர்த்தி, குழலி போன்றோரைப் பற்றி வந்துள்ள அனாமதேயப் பின்னூட்டங்கள் அவர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிகிறேன். பொதுவாக, பெரும்பாலும் தணிக்கைகளைத் தவிர்த்துப் பின்னூட்டங்களை வெளியிட வேண்டும் என்னும் எனது நிலைப்பாட்டின் காரணமாகத்தான் அவற்றை வெளியிட்டேன். வெளியிட்டதற்காக அந்தக் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நண்பர்கள் கருதமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். என்றபோதும் அத்தைகய பின்னூட்டங்களை வெளியிட்டததன்மூலம் அவர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். நண்பர்கள் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இப்போது நான் உள்ள தனியார் இணைய மய்யத்தில் யூனிகோடு திறக்காததால் அந்த பின்னூட்டங்களைத் தேடித் தேடி அழிக்கமுடியவில்லை. ஆனால் விரைவில் அத்தகைய பின்னூட்டங்களை எடுத்துவிடுகிறேன். sorry.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சுகுணாதிவாகர் said...
This comment has been removed by the author.
குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2007/09/blog-post_18.html