Sunday, December 23, 2007

ங்கோத்தாபாடு, யோனி மற்றும் சில கெட்டவார்த்தைகள்....

சமீபத்தில் என் எழுத்துக்களைப் பற்றி எழுதும்போது 'சுகுணாதிவாகரின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்தால் புதிதாக ஒரு கெட்டவார்த்தையைத் தெரிந்துகொள்ளலாம்' என்று ஒரு நண்பர் 'பாராட்டி' எழுதியிருந்தார். ஆகமொத்தம் என் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து படித்தால் கெட்டவார்த்தைகளுக்கான அகராதியை உருவாக்கிவிடலாம். ((-.

அகராதி என்றதும் நினைவுக்கு வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழ் அகராதியைத் தொகுக்கும் வேலையில் நானும் சில நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். க்ரியாவின் தமிழ் அகராதிக்குப் பிறகு உருப்படியான அகராதி தமிழில் கிடையாது க்ரியா அகராதி வெளியாகியே பதினைந்து வருடங்களிருக்கும். இந்தப் பதினைந்து வருடங்களுக்குள் பின்நவீனம், கட்டவிழ்ப்பு, விளிம்புநிலை, மறுகாலனியாதிக்கம் போன்ற பல சொற்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றையெல்லாம் அகராதியில் கொண்டுவருவது எங்கள் நோக்கமாயிருந்தது.

இத்தோடு தமிழின் கெட்டவார்த்தைகளையும் அகராதியில் கொண்டுவரலாமென்றிருந்தோம். ஏனெனில் கெட்டவார்த்தைகள் வட்டாரத்தன்மையுடையனவாகவிருக்கின்றன. ஙோத்தா என்றால் தஞ்சை திருச்சி வட்டாரங்களில் உங்கம்மா என்று அர்த்தம். ஙோத்தாவைப் பற்றித் தெரியாதா என்றால் உங்கம்மாவைப் பற்றித் தெரியாதா என்று பொருள்.

இதுவே மதுரையில் ங்கோத்தா என்பது உச்சபட்ச கெட்டவார்த்தை. ங்கோத்தா, தேவடியாமகன் என்று ஒருவர் அழைத்தால் கொலை விழுவதற்கான சாத்தியங்களும் உண்டு. குறைந்தபட்சம் அடியாவது உண்டு. ஆனால் சென்னையில் பதினைந்து வயது சிறுவன் கூட அறுபது வயது கடைக்காரரை 'ஙோத்தா, சிகரெட் இல்லையா' என்பான். ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவிருந்தாலும் போகப்போக 'ங்கோத்தா' பழகிப்போனது.

இப்படியாக கெட்டவார்த்தைகளை அகராதியில் கொண்டு வரும் முயற்சியில் எங்களுக்குப் பெரும் சவாலாயிருந்தது 'பாடு' என்னும் சென்னைக்கேயுரிய கெட்டவார்த்தை. பொதுவாக பெரும்பாலான கெட்டவார்த்தைகள் பெண்களை வசைபாடுபவையாகவோ, அல்லது பெண்களுடன் தொடர்புள்ளவையாகவோ இருக்க பாடு மட்டும் முழுக்க ஆணுக்கான வசைச்சொல்லாகவே விளங்குகிறது. பாடு என்றால் மாமாக்கார பையன் என்று பொருள்.

ஆனால் தமிழில் இந்தியைப் போல B ஓசை, f ஓசை உள்ள எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகக்ள் கிடையாது. ஓசையைக்குறிக்கவாவது முன்னால் ஃ போட்டு எழுதும் வழக்கமுள்ளது. உதாரணம் :ஃ பாருக்,ஃ பாத்திமா. ஆனால் B ஓசையில் தொடங்கும் சொல்லுக்கு அதுவும் கிடையாது. எனவே B ஓசை உடைய சொல்லை எழுதுவதற்காக ஒரு குறியீடு அவசியமென்று உணர்ந்தோம். ஆனால் அந்த அகராதி வேலை பாதியிலேயே நின்று போனதால் மேற்கொண்டு தொடரமுடியவில்லை.

வைரமுத்துவின் ரசிகனாயிருந்த என்னை நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி நவீன இலக்கியக்களத்திற்கு அழைத்துவந்தவர் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரும் அதிகாரமற்ற நண்பனுமாகிய யவனிகாசிறீராம். அவரது முதல் கவிதைதொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு பேருந்கில் பயணம் செய்யும்போது பக்கத்திலிருந்தவர் என்னை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே வந்தார்.

பிறகுதான் காரணம் விளங்கியது. நூலின் பெயர், 'இரவு என்பது உறங்க அல்ல'. அவருக்கு அது ஏதோ மலையாளப் பட டைட்டிலைப் போலத் தெரிந்திருக்க வேண்டும். (இப்படித்தான் எமர்ஜென்சிக் காலத்தில் இந்திராகாந்தி இந்தியர்களின் அத்தியாவசியக் கடமைகளை நினைவூட்டுவதற்காகப் பல முழக்கங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றிலொன்று 'பேச்சைக்குறை உற்பத்தியைப் பெருக்கு'. பின்னால் ஒரு மலையாளப் படத்திற்கு அவ்வாக்கியமே டைட்டிலாக வைக்கப்பட்டது.)

நான் நவீனக் கவிதைகளை எழுதும்போதே கெட்டவார்த்தைகளுடன்தான் தொடங்கினேன். இத்தனைக்கும் அப்போது வானம்பாடிக்கவிஞர்களைத் தாண்டி வாசிப்பு கிடையாது. ஆனால் கெட்டவார்த்தைகளைக் கவிதைகளில் பயன்படுத்துவதில் எனக்குத்தயக்கமிருந்ததில்லை. ஒருமுறை கலை இலக்கியப்பெருமன்றம் திண்டுக்கல்லில் தலித்தியக் கவியரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது கார்கில் போர் நடந்துகொண்டிருந்த சமயம். செய்தித்தாள்களைப் போர்ச்செய்திகளே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. ஒருநாள் மாலைமலரில் ஒரு செய்தி, உத்திரப்பிரதேசத்தில் ஒரு தலித்பெண்ணைப் பதினாலு யாதவர்கள் நடுவீதியில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையில் எந்த செய்தித்தாளிலும் அந்தச் செய்தி இடம்பெறவில்லை. மீண்டும் கார்கில் சாகசச்செய்திகள்.

இந்த இரு செய்திகளையும் தொடர்புபடுத்தி நான்லீனியராக ஒரு கவிதையொன்றை வாசித்தேன். இந்தியாவையும் பாரதமாதாவையும் கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்கும் கவிதை. ( அந்தக் கவிதையை எங்கு எப்போது எழுதினாலும் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்படும் அபாயமுண்டு) 'தோழர்கள்' திகைத்துப்போனார்கள். அதன்பின் கலை இலக்கியப் பெருமன்றக்கூட்டங்கள் எனக்கு அழைப்பு அனுப்பப்படாத ரகசியக்கூட்டங்களாக நடக்கத்தொடங்கின.

எனது கவிதைத்தொகுப்பைக் கொண்டு வருவதென்று முடிவு செய்தபோது நான் வைத்தபெயர் 'யோனியில் முளைத்த குறுவாள்'. ஆனால் நூலுக்கு நூலக அனுமதி கிடைக்காது என்று யவனிகா 'விலா எலும்பு' என்று பெயர்வைத்தார். நானோ கடைசியில் தீட்டுப்பட்ட நிலா என்று பெயர் வைத்தேன். (அப்படியும் நூலக அனுமதி கிடைக்கவில்லை என்பது வேறு விசயம்)

திண்டுக்கல்லில் பேருந்து நிலையப் புத்தகக் கடைகள் பழக்கமானவை என்பதால் கவிதைத்தொகுப்பை விற்பனைக்குக் கொடுத்திருந்தேன். கெட்டவார்த்தைகள் அதிகமுள்ள அந்நூலை யாரோ ஒரு அப்பாவி வாங்கியிருக்கிறார். பேருந்தில் ஏறுவதற்கு முன்பு புத்தகத்தைப் பிரித்து ஒன்றிரண்டு கவிதைகளை வாசித்திருக்கிறார். நூலின் விலை முப்பது ரூபாய். அலறியடித்து புத்தகக்கடைக்கு ஓடிவந்தவர், 'புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், எனக்குப் பத்து ரூபாய் தந்தால் போதும்' என்றிருக்கிறார்.

இப்போது கெட்டவார்த்தைகள் குறித்து சில யோசிப்போம். பெண்கவிஞர்கள் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவதா என்று தமிழ்க்கலாச்சாரக்காவலர்கள் கொதித்துப்போன செய்தி நமக்குத் தெரியும். உதாரணமாக சல்மாவின் 'எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி' என்னும் வரி. ஆனால் கவிதைகளில் பயன்படுத்தப்படும் பல கெட்டவார்த்தைகள் கெட்டவார்த்தைகள் என்றே வெகுமக்கள் அறியமாட்டார்கள் என்பது வேடிக்கை.

உதாரணமாக யோனி என்னும் வார்த்தை சாதாரண தமிழ் ஜனங்களுக்குத் தெரியாது. யோனிக்குப் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் நேரடி வார்த்தைகளைக் கவிதையில் பயன்படுத்தினால் கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்வார்கள்? தெரியவில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் யோனி என்னும் வார்த்தையின் அர்த்தமே தெரியாமல் பயன்படுத்தப்படும் தளம் ஜோதிடம்.

என் அப்பா என் அண்ணனுக்கு சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்திருப்பார். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் அழிந்துபோன அத்திப்பட்டியைத் தவிர அனைத்து ஊர்களிலும் பெண் பார்த்திருப்பார். அப்போது அவர் அடிக்கடி கூறும் வாக்கியம், 'யோனிப்பொருத்தம் சரியில்லை' என்பது. எனக்கு ஆச்சரியமாயிருக்கும் யோனியின் அளவு ஜோசியக்காரனுக்கு எப்படித் தெரிந்தது என்று.

உண்மையில் கெட்டவார்த்தைகளைப் படைப்புகளில் பயன்படுத்துவது கலகபூர்வமானதுதானா என்றால் ஒரு வகையில் ஆம் என்றாலும் இன்னொரு வகையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்பே கூறியது போல தமிழின் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்துபவை. மேலும் FUCK என்கிற வார்த்தைக்குத் தமிழில் பயன்படுத்தப்படும் கெட்டவார்த்தைகளையோ அல்லது 'போடுவது' மாதிரியான குறியீட்டுச் சொற்களையோ எடுத்துக்கொண்டால் ஒரு உண்மை விளங்கும்.

இவ்வார்த்தைகள் அனைத்தின் சாரம் : பாலியல் உறவில் ஆண் இயங்குகிறான், பெண் ஏற்றுக்கொள்கிறாள். எனவே இவ்வகையான கெட்டவார்த்தைகள் பெண்ணுக்கு நீதி செய்யவில்லை. பாலுறவு என்பது இருவரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுச்செயற்பாடு என்பதைமறுத்து, பெண்ணுடலை பாலியல் செயற்பாட்டுக்கான கருவியாகவே பார்க்கும் ஆண்மய்யப்பார்வையையே கொண்டுள்ளன. முட்டாள், கிறுக்கு என்றெல்லாம் ஆரம்பிக்கும் கெட்டவார்த்தைகள் பெண்ணுறுப்பையே திட்டுகின்றனவே அன்றி ஒரு சொல்லும் ஆணைத் திட்டுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Monday, November 19, 2007

இருபத்தெட்டு வருடங்களின் இறுதியில்.....
தே நவம்பர் 20. இருபத்தெட்டு வருடங்களுக்குமுன் ஒரு குழந்தையாய் இந்தப் பூமிக்குள் நுழைந்தபோது, தயக்கத்தின் முட்டையுடைத்து யாரேனும் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கலாம், புணர்ச்சியின் முதல் உச்சத்தை எவரேனும் சுகித்திருக்கலாம், ஒரு கொலை நிகழ்ந்திருக்கலாம் அல்லது ஒரு தற்கொலை, மண் பார்க்கவியாலாப் பேறுடன் ஒரு சிசு கருவிலேயே சிதைந்திருக்கலாம் அல்லது சிதைக்கப்பட்டு.... எப்படியாயினும் தாயின் யோனி பூமிக்குள் துப்பிய கணம் வாழ்வின் ருசி குறித்து அறியாக்கணமே. என்னோடு பிறந்த குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தங்களது இருபத்தொன்பதாம் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனவோ. பிறந்தநாள் என்பது சின்னச்சின்ன சந்தோசங்களிலொன்றா, அல்லது மறுக்கப்பட்ட வாழ்வில் கிடந்து உழல்பவர்களைப் பரிகசிக்கும் வக்கிரமா? கேள்விகள் பெட்டிக்குள் அடைபட்டுச் சீறும் ஆண்குறியைப் போலவே எழுந்து மடங்குகின்றன. இன்றைய தலைமுறை அரசியல் உணர்வைத் தொலைத்திருக்கிறது. வீதிகளில் இப்போது கேளிக்கைகளன்றி போராட்டங்கள் நடப்பதில்லை. சமயங்களில் நம்பிக்கை கண்கட்டி கட்டி மறைகிறது. என்றபோதும் மழை பூமியைக் கைவிட்டுவிடவில்லை, இன்னமும் ஆச்சரியமாய்ப் பூக்கள் பூக்கின்ற்ன, மனிதர்கள் வெட்ட வெட்ட மரங்கள் துளிர்க்கின்றன, இன்னமும் போராளிகள் ஆயுதங்கள் ஏந்துகிறார்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் துரோகி என்று இனங்காணப்பட்டு எவரேனும் கொல்லப்படுகிறார்கள். ஆணாதிக்க விசநாக்கு இன்னமும் எனக்குள் மறையவில்லை, சாதியக்கூறுகளும் மேட்டிமையும் உப்புக்கரித்தபடி ரத்தத்தில் பதுங்கியிருக்கியிருக்கின்றன. புத்தனின் சடலத்தை மிதித்தபடி என் வார்த்தைகள் கொடுக்குகளாய் மாறுவதாய்ச் சொல்கிறானொரு நண்பன். நிதானமின்மையும் கோபமும் அவசரமுடிவுகளும் அலைக்கழிக்கின்றன. எல்லாபிறந்தநாட்களிலும் எல்லோருக்குமிருப்பதைப் போலவே எனக்கும் எதையாவது விட்டொழிப்பதென தீர்மானங்களிருந்திருக்கின்றன. இந்த பிறந்தநாளில் அத்தகைய தீர்மானங்களை விட்டொழிக்கலாமென ஒரு தீர்மானம். கடந்துபோன உறவுகளை யாராவது எப்போதாவது நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். சென்றவருடம், அதற்கும் முந்தைய வருடம், அதற்கும் முந்தைய ...இப்படியாக வாழ்த்துக்கள் சொன்னவர்களை இழந்திருக்கிறேன். இவ்வருடம் எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூடலாம். என்றபோதும் எப்படியாயினும் வாழ்வில் புக அனுமதித்த இந்தக் கணங்கள் பரவசப்படுத்துகின்றன அர்த்தமுற்றோ அற்றோ... happy birthday to me!

Sunday, November 11, 2007

அலிபாபாவும் 39 திருடர்களும்


"புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம், எதிர்கால ஈழத்தின் தாகம் கோக் பெப்சி பானம்" என்றுரைத்து, எப்படியும் அமெரிக்காவின் புண்ணியத்தில் தமிழீழம் மலரும் என்று நம்பும் சூரியகாந்தன் ஒரு ஈழத்து எழுத்தாளர்.

'வாலறுந்தால் முளைப்பது
பல்லிகளுக்கு மட்டுமல்ல
புலிகளுக்கும்தான்" என அவ்வபோது நறுக்குகளும் எழுதுவார்.

எல்லா மனிதர்களுகும் ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. புத்தகத்தை வாங்கியவுடன் முகர்ந்து பார்ப்பது, அடுத்தவர் வீடு மற்றும் அரசு நூலகத்தில் நூல்களைத் திருடுவது, யூ டியூபில் போய்ப் பழைய சிலுக்கு படங்களைப் பார்த்து ரசிப்பது என.. அப்படி சூர்யகாந்தனுக்கு இருக்கும் வியாதி, இலக்கியவாதிகளைச் சந்தித்து அளவளாவுவது. இலக்கியவாதிகளிடம் இரண்டுவருடம் பழகுவது ஆயிரம் கட்டுவிரியன் குட்டிகளுடுடன் ஒரு கண்ணாடி அறையில் வசிக்கும் சாகசத்திற்குச் சமம் என நான் தலையாலடித்துச் சொல்லியும் அவர் கேட்பதாயில்லை.

நாங்கள் அன்றைகுச் சந்தித்தது பிரபல எழுத்தாளரும் 'கௌ' பத்திரிகையின் ஆசிரியரும், அல்வாக்கடை வியாபாரியுமான சுந்தரேசன்கொங்கணன். நாங்கள் போனபோது வீடியோவும் கையுமாக புத்தக அலமரியில் சாய்ந்துகொண்டும், கன்னத்தில் கைவைத்து மோட்டுவளையில் ஊர்ந்துகொண்டிருந்த பல்லியை முறைத்துக்கொண்டும், இன்னும் பலவாறான போஸிலிமிருந்தார். என்னவென்று ஒருகணம் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது. அவரின் முன்னோடியும் 'உள்ளொளி' பத்திரிகையின் ஆசிரியரும் ஜவுளிக்கடை வியாபாரியுமான எழுத்தாளர் சூனாசாமி ஏற்கனவே புகைப்படக்கண்காட்சி நடத்தி முடித்ததால் கொங்கணனோ புதுமையாக வீடியோகண்காட்சி நடத்தத் திட்டமிருந்தார் என்பது.

அவர் இந்த இலக்கியப்பணியில் மும்மரமாக இருக்கும் வேளையில் நான் அவரது மேசையிலிருந்த இரண்டு தட்டச்சுப்பிரதிகளைத் திருடினேன். இலக்கியவாதிகளிடம் திருடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. அவர்களே எங்கிருந்தோ திருடத்தான் செய்கிறார்கள் என்றும் சமயத்தில் அவர்களிடமிருந்து நான் திருடி எழுதும்போது அவர்கள் எழுதியிருந்தால் வந்திருப்பதைவிட நன்றாகவே இருகிறதென்றும் சமாதானம் சொல்வேன் (கூசாமல்).

முதலில் இருந்தது கல்யாணமன்னன் ஹைதர் அலியைப் பற்றி 'ஆதிக்குகை' பத்திரிகைக்கு அவர் எழுதியிருந்த கட்டுரை, 'தமிழ்ச்சமூகத்தில் பாலியல் ஒடுக்கமும் பலதாரமணமும்'. அதே கட்டுரையிலிருந்த சில வார்த்தைகளை நீக்கிவிட்டு 'ஜேப்படிபையன்' என்ற பெயரில் 'தினப்பூ - வாரப்பூ' பத்திரிகைக்கு 'ஜல்சா மன்னனின் சரச லீலைகள்' என்னும் தலைப்பில் ஒரு கிளுகிளுப்பான கட்டுரையை வரைந்திருந்தார். என்னை அவ்விரு கட்டுரைகளும் ஈர்க்கவில்லை. அவர் அடுத்து எழுதவிருந்த ஒரு நாவலுக்கான குறிப்புகளே என்னை ஈர்த்தன. இனி இந்த நாவலை நானும் நீங்களும் சேர்ந்து எழுதலாம். நான் மூலக்குறிப்புகளிலிருந்து பலவற்றை மாற்றியிருக்கிறேன். அவர் எழுதியிருக்கும் சில பொய்களுக்குப் பதிலாக நான் வேறுசில பொய்களை எழுதியிருக்கிறேன். கொங்கணன் நாவலுக்கு வைத்த தலைப்பு 'குரங்குகள் ஆண்கள் பெண்கள்'. நான் தலைப்பை மாற்றிவிட்டேன்...

-------------------------------

14ம் நூற்றாண்டில் பாண்டிநாட்டின் பள்ளியூர் என்னும் குக்கிராமத்தில் வசித்துவந்தவன் விமலநந்தன். அவன் புதிதாய் ஒரு மார்க்கத்தைக் கற்பித்துவந்தான். அம்மார்க்கத்தின் பெயர் விமலாதீகம் என்றழைக்கபட்டது. குழந்தைமையே உன்னதம் என்பதே அக்கோட்பாட்டின் அடிப்படை. குழந்தை பிறந்து ஆறுமாதங்கள் வரை மட்டுமே பவுத்திரமாக இருக்கிறது. அதற்குப் பின் மற்றவர்களின் கருத்துக்கள் ஏற்றப்பட்ட கழுதையாக மாறிவிடுகிறது. எனவே மனிதாயம் என்பதும் வன்முறையற்ற பேரன்பும் அறியாமையும் ஆறுமாதங்கள் வரை மட்டுமே சாத்தியம். விமலநந்தன் இருபத்தாறு குழந்தைகளைப் பெற்றெடுத்தான். நாற்பத்திரண்டு குழந்தைகள் வரை தத்தெடுத்து வளர்த்துவந்தான். ஆனால் குழந்தைகள் ஆறுமாதம் வளர்ந்தபிறகு அக்குழந்தைகளைக் கொன்றுவிடுவான். இவ்வாறாக குழந்தைமையின் புனிதத்தைக் காத்துவந்தான். இருபத்தாறு குழந்தைகளைப் பெற்றுக் கொல்வதற்குள் விமலநந்தனுக்கு தொண்ணூறு வயதாகிவிட்டது. இனி கொல்வதற்குக் குழந்தைகள் இல்லை,இப்போது தானே ஒரு குழந்தையாய் இருப்பதை உணர்ந்தான், ஆறுமாதத்தில் இழந்த தனது உன்னதமான குழந்தைமையை தொண்ணூறு வயதில் பெற்றிருந்தான். இதற்கு 89 வருடங்களைக் கடந்துவரவேண்டியிருந்தது. விமலன் வடக்கிருந்து உயிர்துறந்தான் என்றும் தீர்த்தங்கரர் மலையுச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டான் என்றும் கொலைகள் செய்த குற்றத்திற்காக அரசனால் தண்டிக்கப்பட்டான் என்றும் பல்வேறு கதைகள் உலவி வருகின்றன.
------------------------------------------


எழுத்தாளர் சுருளியாண்டி சமீபத்தில் வந்த இயக்குனர் சிற்றரசுவின் 'எருமைக்காரன் பாளையம்' என்னும் திரைப்படத்திற்கான விமர்சனத்தை எழுதி, அதற்கு 'தமிழ்நிலப்பரப்பில் ஒரு விளிம்புக்குரல்' என்று தலைப்பிட்டு உகாண்டா நாட்டுத் திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக விளிம்புநிலை மக்களின் குரலை மிகச்சரியாகப் பதிவு செய்தது 'எருமைக்காரன் பாளையம்'தான் என்று எழுதி தனது நண்பர் சாலமன் நடத்தும் 'தொன்மநிழல்' பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். இடையில் என்ன மேஜிகல் ரியலிசம் நடந்ததோ சாலமனின் கைகளுக்குப் போய்ச் சேரும்போது அந்த கடிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.

மதிப்பிற்குரிய இயக்குனர் எவரெஸ்ட் சிற்றரசுவிற்கு,

தங்களின் 'எருமைக்காரன் பாளையம்' திரைப்படம் பார்த்தேன். மிகச்சிறந்த படம். அதிலும் குறிப்பாக நீங்களே எழுதியிருந்த பாடலான

'ஙொம்மாவும் எங்கம்மாவும் சேரமுடியுமா
ங்கொப்பாவும் எங்கப்பாவும் கூடமுடியுமா'

என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. நான் இருபத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறேன். பல்வேறு இலக்கியச்சண்டைகளிலும் பங்குபெற்றிருக்கிறேன். எனவே உங்கள் அடுத்தபடத்திலாவது எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களென்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள
சுருளியாண்டி.

===================================================================

அழகிய தமிழ்மகன் - சிறுகுறிப்பு வரைக.

எனக்கு விஜய்யைப் பிடிக்காது, ஸ்ரேயாவைப் பிடிக்கும். நேற்று இரவு அழகிய தமிழ்மகன் படம் பார்த்தேன். வலைத்தளங்களில் காதலின் பிரிவும் பிரிவின் நிமித்தமும் எழுதப்படும் புலம்பல் கவிதைகளைவிட மொக்கையாக இருந்தது. ஸ்ரேயா படம் முழுக்க அழகாக சிரிக்கிறார், ஆனால் நடிக்கவில்லை. திறந்த மனது கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஸ்ரேயா படம் முழுக்க திறந்த முதுகுக்காரராக வருகிறார். நமீதாவைப் பார்க்கும்பொதெல்லாம் நாளை மதியம் சமையலுக்கு எத்தனை கிலோ கறி வாங்க வேண்டும் என்னும் கேள்வியே அடிக்கடி வருகிறது. வழக்கம்போல ரகுமானின் இசையில் பாடல்கள் தியேட்டரில் புரியவில்லை, எப்.எம்மிலோ கேசட்டிலோ கேட்கும்போது புரியலாம்.'பொன்மகள் வந்தாள்' பாடல் சூப்பர். 'கெட்ட விஜய்' ரஜினி போல நடிக்க முயன்று தோற்றிருக்கிறார். இந்த வில்லன் வேடத்தில் உண்மையிலேயே ரஜினி நடித்திருந்தால் அசத்தியிருப்பார், (மூன்றுமுடிச்சை மறக்கமுடியுமா?). இதேமாதிரியான ஆன்டி ஹீரோ சப்ஜெக்டில் விஜய் 'பிரியமுடன்' படத்தில் நன்றாகத்தானே நடித்தார்? எந்தக் கல்லூரியில் 'அழகிய தமிழ்மகன்', 'அழுகிய தக்காளி மகன்' என்றெல்லாம் விருதுகள் தருகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கள் கல்லுரியில் எல்லாம் எனக்கு 'அழகிய அரியர்ஸ் மகன்' விருதுதான் தந்தார்கள். இந்த ஈ.எஸ்.பி என்றால் என்ன? எதிர்காலத்தில் நடபதை அறிகிற சக்தி. அதுசரி? எதிர்காலத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, ஆக்சிடென்ட் இந்த மாதிரியான எழவுகளை மட்டுமே ஒளிபரப்பும் தனியார் சானலா அது? எதிர்காலத்தில் கல்யாணம், காதுகுத்து, சடங்கு இதெல்லாம் நடக்காதா, இதையெல்லாம் ஈ.எஸ்.பி சொல்லாதா? ஸ்ரேயாவை விஜய் குத்திவிடுவதைப்போல ஈ.எஸ்.பி பிரமை வந்து, பிரச்சினைகள் முடிந்து சுபம் போடுகிறார்களே, 'நல்ல' விஜய்க்கும் ஸ்ரேயாவிற்கும் கல்யாணம் முடிந்தபிறகு ஸ்ரேயாவையோ, ஸ்ரேயாவின் அப்பா, விஜய்யின் அப்பா, அம்மா, கஞ்சாகருப்பு இவர்களில் யாருக்கோ கத்திகுத்து, டிரெய்ன் ஆக்சிடெண்ட், குச்சிமிட்டாய் சாப்பிடும்போது தொண்டையில் அடைத்து சாவு - இப்படி எந்த எழவும் விழாதா? அதைக் கல்யாணத்திற்கப்புறம் ஈ.எஸ்.பி சொன்னால் விஜய் என்ன செய்வார்?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இறுதித்தீர்ப்பின் மறுநாளில்
பிணங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பெருவெளி.
மைதானமெங்கும் வெறும் அமைதியே சூழ்ந்திருந்தது.
ஒரே ஒரு அழகிய இளைஞன் மட்டும் உழைத்து அழகிய கறுத்த உடலுடன் புன்னகை மாறாமல் திரிந்துகொண்டிருந்தான். அவன் கையில் குழலும் பறையுமிருந்தன. பல்வேறு கனிகளைப் புசிப்பவனாயிருந்தான். தயங்கித் தயங்கி அலிபாபா கேட்டான், "நீங்கள் யார்?" இளைஞனோ கைகுலுக்குவதற்காய் கைகளை நீட்டினான். எதேச்சையாய் அலிபாபாவின் கரங்கள் தானாகக் கூப்பின.

இப்போது உரக்கச் சிரித்த இளைஞன், "பிறரைத் தீண்டுவதைத் தவிர்க்கும் தந்திரம்தான் உங்கள் கைகூப்பிய வணக்கம். எனக்கு அத்தகைய மனத்தடைகள் கிடையாது" என அலிபாபாவை ஆரத்தழுவிக் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே இளைஞன் சொன்னான் 'நான் தான் சாத்தான்"

அலிபாபா ஒரு கணம் திகைத்துப் போனான்.

மேலும் தொடர்ந்தவன் " பல்வேறு காலங்களில் பல்வேறு பெயர்கள் சித்தார்த்தன், மகாவீரன், கம்யூனிஸ்ட், நக்சலைட் என இப்படி. கையாலாகாத கடவுளின் அதிகாரம் குறித்துத் தொடர்ந்து கேள்வியெழுப்பும் கலகக்காரன் நான்"

"நீ கொடியவனில்லையா?"

இப்போது சாத்தான் இன்னும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினான், "அலிபாபா, நான் கொடியவனாயிருந்தால் இந்நேரம் நீ கேள்விகேட்டிருக்க முடியாது. காமம் என்னும் அழகிய உணர்வைக் கேவலம் ஒரு ஆப்பிளுக்குள் ஒளித்து வைத்த முட்டாள் கடவுள். நான் தான் சின்னஞ்சிறு கனியிலிருந்து காமத்தை விடுதலை செய்தேன், மனிதர்களையும். இந்த உலகம் காதலாலும் அன்பாலும் நிரப்பப்பட்டிருக்கிறதென்றால் அது என்னால்தான்"

"உனக்கு அழிவு கிடையாதா?"

"மீண்டும் மீண்டும் கேள்வி. நல்லது. கடவுளின் ராஜ்ஜியத்தில் நீ கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை. சாத்தானின் அருகாமையில் மட்டுமே நீ கேள்விகளை எழுப்பலாம், விமர்சிக்கலாம். கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தார் என்று உனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதே அலிபாபா, என்னைப் படைத்தது யாரென்று சொல்லப்பட்டிருக்கிறதா? கடவுளின் மரணத்தைச் சொன்னவன் நீட்ஷே. கடவுளுக்குத்தான் மரணம் உண்டு. அளவற்ற அன்புடையவனும் தோழமையுணர்வில் ஊறித்திளைப்பவனும் சமத்துவத்தையும் அறத்தையும் நேசிப்பவனுமான சாத்தானுக்கு மரணமில்லை"

Sunday, November 4, 2007

வீரவணக்கம்!

ஆதிக்கச்சாதி நாய்கள் இன்னொரு சாதிவெறியனின் காலையே நக்கித் திரிவார்கள் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. சாதிவெறியும் இந்துமதத்திமிருமுடைய முத்துராமலிங்கம் என்னும் கேடுகெட்ட தேசவெறியனுக்கான நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடிய கருணாநிதி அரசு, கருணாநிதிக்கு கலைஞர் என்னும் பட்டத்தை வழங்கிய கலகக்கலைஞன் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டுவிழாவைப் புறக்கணித்திருக்கிறது. அடுத்தாண்டு கலைவாணர் என்.எஸ்.கேவின் நூற்றாண்டுவிழா. அதுவும் கொண்டாடப்படுமா அல்லது வேறு ஏதாவது சாதித்தலைவனின் நூற்றாண்டு வருமாவெனத் தெரியவில்லை. கொலைகாரனும் சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாகய உணர்வற்றவனுமான முத்துராமலிங்கம் திருவுருவாக்கப்படும் இப்போதில் அவனை எதிர்த்து கொலையுண்ட தோழர். இம்மானுவேல் குணசேகரனையும் எதிர்வரும் நவம்பர் 26ல் சாதியொழிப்பிற்காய் அரசியல்சட்டத்தைக் கொளுத்தி சிறைசென்ற போராளிகளையும் நினைவுகூர்வோம்.

Tuesday, October 2, 2007

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...
அடிக்கடி வலைப்பதிவாளர்களிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு, 'வரமாத்தேன் போ' என்று சிலர் கிளம்புவதால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே பிறப்பெடுத்த 'திராவிடக் கல்கி', நாட்டாமை முத்துதமிழினி பதிவாளர்களுக்கிடையே உரையாடலோ, விவாதமோ என்ன கண்றாவியோ ஏற்பாடுசெய்கிறார். ஆனால் பதிவர்கூட்டங்களுக்கு வராததுதான் அவரது லேட்டஸ்ட் டிரெண்ட் என்பதால் அவர் மட்டும் ஆஜராகவில்லை.....

(வலைப்பதிவாளர்கள் தங்களுக்குள் சீரியசாகப் பேசிக்கொண்டிருக்கும்போது தலைவிரிகோலமாக மூர்த்தி ஓடிவருகிறார்...)

மூர்த்தி : கிறிஸ்துவன் எப்ப திராவிடன் ஆனான்?

செந்தழல் ரவி ( டென்சனாகிறார்) : டேய் மலேசிய நாதாறி!

சுகுணா : கூல்டவுன் ரவி, கருத்துக்களை நிதானமாக எதிர்கொள்ளவேண்டும்.

குழலி : இப்படித்தான் சொல்வீங்க! ரெண்டுவாரத்திற்கு முன்னால நீங்கமட்டும் மெகாசீரியல் கணக்கா அழுவாச்சிகாவியம் பாடலியா? ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரேக்கிங்பாயிண்ட், கண்மணி அன்போடு காதலன் நான் ....

சுகுணா : ஹலோ, நிறுத்துங்க குழலி, கேப் கிடைச்சா போதுமே குணா, குருதிப்புனல்ன்னு கமல் டயலாக்கோடு வந்திடுவீங்கல்லே! சரி, அதைவிடுங்க, தோழர் மூர்த்தி, உங்க கேள்வியே அபத்தமானது. தோழர் பெரியாரின் விளிப்பில் பார்ப்பனரல்லாத கிறித்துவர், முஸ்லீம்கள் என அனைத்து இந்துவற்ற சமயத்தாரும் அடங்குவர். வித்தியாசங்களை அங்கீகரித்து பன்மையில் ஒருமையைக் காணும் ஒரு அரசியல் நிலைப்பாடு..

ரவி : இதுக்கு மூர்த்தி திட்டினதே பரவாயில்லப்பா, இந்தாள் பேசறது ஒரு இழவும் விளங்கமாட்டேங்குது...

தோழர்கள் : சுகுணா, பெரியாரைத் தோழர்ன்னு சொன்ன அதேவாயால மூர்த்தியையும் எப்படித் தோழர்ன்னு சொல்றீங்க? இதை நாங்கள் கண்டிக்கிறோம்..

அய்யனார் : பெருவெளியில் கிளைத்த பன்மைச்சமவெளியில் எல்லாவற்ரையும் அங்கீகரிக்கும் மனோநிலையும் புனிதங்களின் மீதான கட்டவிழ்ப்புமே தோழர் என்று சுகுணாவைச் சொல்லவைத்தது..

சுகுணா : யோவ், நீ பேசறது எனக்கே புரியலை, போத்ரியா கொட்டேசன்ல்லாம் யூஸ் பண்றியே, காபிரைட் வாங்கிட்டியா?

அய்யனார் : இல்லீங்ண்ணா...

சுகுணா : அப்ப கொஞ்சம் அமைதியா இரு...

மாலன் : எக்ஸ்கியூஸ் மீ, பிரபாகரனுக்கு வயிற்றுவலின்னு தினமலரில் ஒரு கட்டுரை வந்திருக்கு. அதை நான் டிரான்ஸ்லேட் பண்ணிருக்கேன். வாசிச்சுக் காட்டவா?

ரவி : தினமலர்ல தமிழ்ல்லதானே வரும்? அப்புறம் ஏன் டிரான்ஸ்லேட் பண்ணினீங்க?

மாலன் : எனக்குத் தெரியும், அடுத்து இந்துராம் மகள் ஏன் அமெரிக்காவில் படிக்கிறாங்கன்னுதானே கேக்கப்போறீங்க?

ரவி : அவங்க கொரியாவிலையா படிக்கிறங்க?

மாலன் : இல்லையே,

ரவி : அப்புறம் ஏன் நான் கேக்கப்போறேன்?

அய்யனார் : மாலனின் இந்த விஷமத்தை ஏன் செல்லா கண்டிக்கலை?

செல்லா : மாலனுக்கு மஞ்சக்காமாலை

அய்யனார் : என்னது?

செல்லா : ஆமா, பிரபாகரனுக்கு வயிற்றுவலி, மாலனுக்கு மஞ்சக்காமாலை..

அய்யனார் : மாலனை என்ன செய்யலாம்? மாலனை என்ன செய்யலாம்?

செல்லா : நான் நமீதாவையே என்ன செய்யலாம்ன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்தாள் வேற. எனக்கு அழுகை அழுகையா வருது... கண்ணீர் வருது சாமி, நான் போறேன், ஒரு நிமிசம் என் கேமிராவை எடுத்துட்டுப்போறேன்...

ரவி : ஹலோ, அது என்னோட கேமிரா...

(கேட்காமல் செல்லா போய்விடுகிறார்.. இரண்டுநிமிடம் கழித்து உள்ளே வந்து தமிழச்சியிடம் போய்...) நான் போறேன், நான் போறேன்..

தமிழச்சி : வருவியா, வரமாட்டியா? வரலைன்னா உன் பேச்சு கா...

செல்லா : வந்துட்டே....ன். தோழி, அடுத்தமுறையாவது புது ஆயுதத்தோடு வா! சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்கவேணும் பேரப்புள்ள, தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதானே கருத்து!

சுகுணா : நல்ல கருத்தா இருக்கே, யார் சொன்னது?

செல்லா : வேற யாரு, போக்கிரி விஜய்தான். அடியும் உதையும் கலந்துவச்சு இடுப்பு எலும்பை ஒடிச்சுவச்சா போக்கிரி பொங்கல், கராத்தே அடியைக் கலந்துவச்சா தமிழச்சி பொங்கல், தமிழச்சி பொங்கல்...( குதித்துக் குதித்துக் குத்தாட்டம் போடுகிறார்)எக்ஸ்கியூஸ்மீ தமிழச்சி, புதுசா எடுத்த போட்டோ இருக்கா?

சுகுணா : செல்லா, நீங்க செய்றது நியாயமே கிடையாது. நாங்க எவ்வளவு சீரியசா பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லாம இருக்கீங்க.. தோழர் தமிழச்சி நீங்களும் இதுக்கு உடந்தையா?

தமிழச்சி : நோ நோ, என்க்கு டமில் கொஞ்சும் கொஞ்சும்தான் தெரியும். வருவியா வரமாட்டியால்லாம் டமிலா? நான் கராத்தெஎ, பிளாக்பெல்ட் இத்ல்லாம்தான் டமில்ன்னு நினைச்சேன்..

பொட்டிக்கடை சத்யா : தமிழே தெரியாத நீங்க எப்படி தமிழச்சின்னு பேர்வைக்கலாம்? இது டமிழனுக்கு, சாரி மாமூ, தமிழனுக்கே அவமானம்.

மூர்த்தி : தமிழன் எப்ப திராவிடன் ஆனான் ?

(கூட்டத்திலிருந்த பலர் டென்சனாகின்றனர்)

சுகுணா : தோழர், தமிழர்களுக்கும் திராவிடர்களுக்குமுள்ள வித்தியஅசத்தைப் பெரியார் 1927ல்.......

மூர்த்தி : பெரியார் எப்ப திராவிடன் ஆனார்?

(அதற்கப்புறம் முழுடென்சனான திராவிட ஆப்பாயில் குஞ்சுகளின் கொலைவெறிக்கூத்தை நட்சத்திர வாரம் கொண்டாடும் 'சும்மா டைம்பாஸ் மச்சி' கருந்திரையில் காண்க)

Tuesday, September 11, 2007

வேலூர் திருப்பத்தூர் நண்பர்களுக்கு...

அன்பு நண்பர்களுக்கு

இவ்வாண்டு தோழர் பெரியாரின் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் (வேலூர்) தூயநெஞ்சர்கல்லூரி செப்டம்பர் 16ம் தேதி முழுநாள் கருத்தரங்கமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கில், 'பெரியாரின் போராட்டமுறைகள் - தற்கால அரசியல்சூழலிலிருந்து ஒரு மதிப்பீடு' என்னும் தலைப்பில் பேசவுள்ளேன். மேலும் பொ.வேல்சாமி, டி.தருமராஜன், ஸ்டாலின்ராஜாங்கம், பார்த்திபராஜா போன்ற பலரும் பேசவுள்ளனர். நேரமுள்ள நண்பர்கள் வரவும். என்னை தொடர்புகொள்ள : தொலைபேசி எண் : 9941910052

Friday, September 7, 2007

நரிக்குறவர்கள் - வாழ்வின் அசல்கள்

எப்போதாவது திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் வாய்ப்பு வந்தால் கவனியுங்கள், பேருந்து நிலையத்திற்கு முன்பு ஆர்.டி.ஓ பேருந்து நிறுத்தம் என்று ஒரு நிறுத்தம் வரும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம். அதற்கெதிரே விரிந்துகிடக்கும் மைதானத்தில்தான் 2000 ஆம் ஆண்டில் நரிக்குறவர்கள் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தனர்.

அப்போது நான் தன்னார்வத்தொண்டு நிறுவனம் என்னும் ஒரு ஏகாதிபத்திய அடிவருடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்திருந்த காலம். என்.ஜி.ஓக்களின் அரசியல் குறித்த அறிவில்லை. எனக்கான புராஜெக்ட் 'குழந்தை உழைப்பு ஒழிப்பு'. பாதியில் படிப்பை நிறுத்திய குழந்தைத் தொழிலாளர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மாலை நேரத்தில் குழந்தைத்தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுப்பது இவையே எனது பணி.

பெரும்பாலும் குழந்தைத்தொழிலாளர்களாக தலித்துகள் மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளே இருப்பார்கள். மாலை நேரங்களில் அவர்களுக்குக் கல்வி கற்றுத் தருவதைத் தருவதை விடவும் கே.ஏ.குணசேகரன் மற்றும் ம.க.இ.கவின் தலித்விடுதலை மற்றும் தீண்டாமை சாதியெதிர்ப்பு தொடர்பான பாடல்களைச் சொல்லிக் கொடுப்பதிலேயே காலம் கழிந்தது.

இந்த நேரத்தில்தான் நரிக்குறவர் குழந்தைகளுக்கு ஏன் கல்வி புகட்டக்கூடாது என்னும் எண்ணம் தோன்றியது. அப்போது எனக்கு உதவியவர் சாம்சன். நரிக்குறவர் சமூகத்தில் பிறந்து எம்.ஏ வரை படித்திருந்த சாம்சன், கிறித்துவ மதத்திற்கு மாறியிருந்தார். அவ்வப்போது ஏதேனும் தொண்டுநிறுவனங்கள் வருவதும் குழந்தைகளுக்கு ஒரு பேஸ்கட்பால் தந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் வாடிக்கையாயிருந்தன.

சிலகாலங்களில் நரிக்குறவர் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிப்பதைவிடவும் அவர்களது வாழ்முறை மற்றும் கலாச்சாரம் குறித்து அறியும் ஆவலே மேலோங்கியது. ஏனெனில் அதிகாரக் கறைபடிந்த நமது பாடத்திட்டங்கள் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வைச் சூறையாடிவிடும் என்றே தோன்றியது.

குறவர்களைப் பொருத்தவரை உபரி என்கிற ஒன்று பெரும்பாலும் கிடையாது. உழைப்பு, குடி, கொண்டாட்டம் இவைதான் வாழ்க்கை. உணவிற்கும் உறைவிடத்திற்குமான கவலைகள் கிடையாது. அவர்களுக்கான மாபெரும் கேளிக்கை தமிழ்ச்சினிமா. மூன்று காட்சிகளும் படம் பார்க்க அவர்கள் தயங்குவதில்லை. அதிலும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் கொள்ளைப்பிரியம்.

திரையரங்குகளில் அமர்ந்துகொண்டே பாசிமணி பின்னிக்கொண்டிருப்பார்கள். நம்பியார் எம்ஜிஆரை அடித்துவிட்டாலோ பதட்டத்தில் பாசிமணி பின்னும் வேகம் அதிகரிக்கும். நான் ஆடு. மாடு இவைகளைத்தாண்டி பல்வேறுவகையான மாமிசங்களை உண்ணப்பழகியது அங்குதான். அவர்களின் சமையலுக்கென்று ஒரு காட்டுருசி இருக்கும். அவர்கள் குழம்போ, ரசமோ வைப்பதில்லை.

கறியைச் சமைத்து அப்படியே சோற்றில் பிசைந்து சாப்பிடுவார்கள். (பின்னாளில் ஒரு ஈழத்தமிழ் நண்பரின் வீட்டில்சாப்பிடும்போது அவர்களும் இதேமுறையில் சாப்பிட நான் அசந்துபோனேன்). மாமிசமில்லாமல் அவர்களின் உணவு இல்லை.

குறவர்களிடத்தில் சாதியில்லை. ஆனால் இரண்டுபிரிவுகள் இருக்கின்றன. ஆடு சாப்பிடுகிற பிரிவு, மாடுசாப்பிடுகிற பிரிவு. ஆடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு அதே பிரிவைச் சேர்ந்த இன்னொருவர் பங்காளி முறை வேண்டும். அதேபோல மாடுசாப்பிடுகிற பிரிவினருக்கும்.

ஒரே பங்காளிப் பிரிவிற்குள் பெண் எடுக்க மாட்டார்கள். எதிரெதிர்ப் பிரிவுகளில்தான் மண உறவுமுறைகள். அதேபோல் திருமண உறவுகளைத் தாண்டிய சுதந்திரமான பாலுறவுகள் குறவர்சமூகங்களில் உண்டு என்றாலும், ஒரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஆண், இன்னொரு ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த பெண்னோடு பாலியல் உறவுவைத்துக்கொள்ளமாட்டான்.

நரிக்குறவர் பெண்கள் அழகிகள். அவர்கள் மட்டும் குளித்து நாகரீக ஆடைகள் அணிந்தால் நமது பெண்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஆனால் எந்த ஒரு குறவர் பெண்னையும் நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிடமுடியாது, அதேபோல பெரும்பாலும் குறவர்பெண்கள் பாலியல்தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. இதற்குக் காரணம் போதுமான பாலுறவு தங்கள் சமூகங்களுக்குள்ளேயே கிடைத்துவிடுவதால்தான் என்று கருதுகிறேன்.

பலாத்காரம் அல்ல, சாதாரணமாக ஒரு குறவர் பெண்ணின் கையைக்கூட நீங்கள் பிடித்து இழுத்துவிட முடியாது.எதிர்த்து நிற்கும் உடலுறுதி ஒரு காரணமென்றால், இன்னொரு காரணம் அவர்களின் கூச்சலிலேயே ஊர்கூடிவிடும். ஒருமுறை தாலுகா அலுவலகத்திலிருந்து குறவர்களுக்குப் பட்டா ஒதுக்கியிருந்தார்கள். ஆனால் அவர்கள் பட்டா ஒதுக்கிய நிலங்களோ அவர்களின் வேட்டையிடங்களிலிருந்து தொலைவிலிருந்தன.

பலமுறை முறையிட்டும் பலனில்லை. ஒருநாள் குறவர் கூட்டமே தாலுகா அலுவலகத்திற்குள் நுழைய, ஒரே கூச்சல், களேபரம். தாலுகா அலுவலகத்திலிருந்த எல்லா அலுவலர்களும் வெளியேறிவிட்டார்கள். தாசில்தார் மட்டும் மாட்டிக்கொண்டார். பிறகு தாசில்தார் சொன்னார், 'தயவுசெய்து நீங்கள் என் இடத்திற்கு வரவேண்டாம், நானே உங்கள் இடத்திற்கு வந்துவிடுகிறேன்'.

நமது அரசமைப்பின் முட்டாள்தனத்திற்கு ஒரு மகத்தான சான்று அரசின் சாதிப்பட்டியலில் குறவர்களுக்கான இடம். அரசின் வரைமுறைப்படி நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வருவர். உண்மையில் அவர்கள் பழங்குடியினர் பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவர்கள். ஒரு பிரமலைக்கள்லரும் எம்.பிசி, வன்னியரும் எம்.பி.சி, நரிக்குறவரும் எம்.பிசி. நமது வரையறுப்புகளின் கேடுகெட்டதனங்களுக்கு இதைவிடவும் சாட்சி வேண்டுமா?

எனக்குக் குறவர்களோடு இருந்த நான்குமாதங்களில் இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும். இன்னொன்று அங்கு மேரி என்னும் பெண்னைத் திருமணம் செய்துகொள்லலாம் என்று நினைத்திருந்தேன். பாதியில் இடைநின்ற மேரியை நான் தான் மீண்டும் பள்ளியில் சேர்த்திருந்தேன்.

சாம்சனிடமும் விசாரித்தேன், குறவர் பெண்னைப் பிறசமூகத்தவர் திருமணம் செய்ய இயலுமாவென்று. அதிலொன்றும் தடையில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்னையும் மாப்பிள்ளையையும் தனது சமூகத்திற்குள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அதேபோல மாலை ஆறுமணிக்குமேல் வீடுதிரும்பும் பெண்ணையும் விலக்கம் செய்துவிடுவார்கள். எல்லாப் பழங்குடிச் சமூகங்களைப் போலவே இனத்தூய்மை பேணும் சமூகம்தான் குறவர்சமூகமும்.

ஆனால் எனக்கும் அந்த தொண்டுநிறுவனத்திற்குமிடையில் பிரச்சினைகள் உருவாக வேலையை விட்டு நின்றுவிட்டேன். மூன்றுமாதங்களுக்குப் பிறகு சென்று பார்த்தபோது அங்கு சாம்சனுமில்லை, மேரியுமில்லை. குறவர்கள் வேறெங்கோ கூடாரம் அடிக்கக் கிளம்பியிருந்தனர்.

Wednesday, September 5, 2007

இறுதியாய்ச் சில வார்த்தைகள்

நண்பர்களே,
எனது 'போலிடோண்டு' பதிவிற்கு வரும் இதுவரை வெளியிடப்படாத சொச்சம் பின்னூட்டங்கள் ஒரேகுரலிலேயே சில கேள்விகளை முன்வைப்பதால் அவற்றின் சாராம்சம் மட்டும்.

1. நீ போலி டோண்டு ஆளா?

2. செந்தழல் ரவியின் அல்லக்கையா?

3. சமீபத்தில் பதிவெழுவதிலிருந்து விலகப்போவதாய் ஒரு நண்பர் சீன் போட்டதைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன?

நண்பர் என்று நினைக்கும் நண்பர்களுக்காகவும் எதிரி என்று நினைக்கும் நண்பர்களுக்காகவும் சில விளக்கங்கள்.

முதலில் நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது.

போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை.

2. செந்தழல் ரவி சிலகாலங்கள் முன்புவரை கூட போலிடோண்டுவுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக போலி டோண்டுவே எழுதியிருக்கிறார். தரண் போன்றவர்களும் எழுதிவருகிறார்கள். ரவியும் இதை மறுக்கவில்லை. ஆனால் அது போலிக்கு ஆப்படிக்கும் யுக்தி என்கிறார். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை, லாஜிக் இடிக்கிறது என்றே கருதுகிறேன். இந்த கருத்தைச் சொல்வதால் எனக்கும் ரவிக்குமான தனிபட்ட நட்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்றே நம்புகிறேன். மறபடி ரவிதான் முடிவு செய்யவேண்டும்.

'ரவியிடம் ஓசித்தண்ணி வாங்கிக் குடிச்சியா, பிஸ்லெரி தண்ணி வாங்கிக் குடிச்சியா' என்றெல்லாம் வரும் பின்னூட்டங்கள் என்னை உளவியல்ரீதியாகத் தொந்தரவு செய்யும் என்று கருதினால், நண்பர்கள் மன்னிக்கவும், அத்தகைய பலவீனமான நிலையில் நான் இல்லை என்று சொல்ல நேர்வது தங்களுக்கு ஏமாறத்தை அளிக்கும் என்பதால் வருந்துகிறேன்.

மேலும் போலிடோண்டு ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர் என்று நம்பி ஏமாந்தோம் என்று சொன்னாலாவது அதில் ஒரு அர்த்தமும் அப்போதைக்கான நியாயப்பாடுமிருக்கிறது. ஆனால் அப்படியும்கூட நண்பர்கள் சொல்லத்தயாரில்லை. தமிழ்ச்சூழலில் புரட்சி என்ற வார்த்தை எவ்வாறு சீரழிக்கப்பட்டதோ, (சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷாலின் பட்டம், 'புரட்சித்தளபதி'.) அதேபோல பார்ப்பன எதிர்ப்பு என்கிற பல ஆயிரம் பாரம்பரியம் கொண்ட ஒரு வீரியமிக்க சித்தாந்தம் தங்களின் சுயநல விளையாட்டுகளுக்காகவும் வேட்டைகளுக்காகவும் இங்கு சீரழிக்கப்பட்டது என்பதே எனது கருத்து.

உதாரணமாய் மாலனின் விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். மாலன் தனக்கேயுரிய பார்ப்பன இந்துதேசிய வன்மமனோபாவத்தோடேயே ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தினார். ஆனால் டோண்டுராகவன் போன்ற சோணகிரிப் பார்ப்பனர் 'முரளிமனோகர்' என்று பொய்ப்பெயரெழுதி மாட்டிக்கொண்டால் அடித்துத்துவைக்கும் ஓசைசெல்லாவோ மாலனை 'மதிப்புக்குரிய மாலனுக்கு' என்று விளித்தார்.

அது என்னங்க 'மதிப்புக்குரிய மாலனுக்கு'?. ஊடகத்துப்பார்ப்பனர் என்றால் மட்டும் அப்பீட் ஆவீர்களோ?

ரவியும் சென்சிட்டிவான ஈழத்தமிழர்கள் விவகாரத்தை 'மாலனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்' என்றெழுதி 'விளையாடி'னார். சென்சிட்டிவான விவகாரங்களை சீரியசாக அணுகாமல் விளையாட்டுத்தனமாகவே அணுகும் மனோபாவம் எப்போதுமே வாய்ப்பதில்லையே ரவி? உங்கள் குடும்பம் குறித்து கருப்புவும் போலிடோண்டுவும் எழுதியதுகூட சென்சிட்டிவான விஷயம்தான். ஆனால் அதற்குக் கோபப்படுகிற உங்களால், நாடிழந்து வீடிழந்து அவதியுறும் ஈழத்தமிழர்கள் மீது வீசப்பட்ட பார்ப்பன வன்மத்தை மட்டும் எப்படி உருட்டி விளையாடமுடிகிறது?

அதேபோல ஓசைசெல்லா பதிவெழுவதிலிருந்து விலகுகிறேன் என்று சொன்னபோது 'மீண்டும் எழுத வாருங்கள்' என்று அழைத்ததற்கு மிக முக்கியமான காரணம் அவர் தலித் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார் என்பதற்காகத்தான்

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். என்னுடைய முந்தைய பதிவிற்குக் காசி ஆறுமுகம் பெயரில் ஒருமையில் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தன. அது உண்மையான காசியா, அல்லது காசியின் பெயரில் வந்த போலிப்பின்னூட்டமா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையான காசியாக இருந்தால் அவர் கோபப்படுவதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன.

இப்போது செல்லா, தலித் கம்மனாட்டி என்று திட்டப்படுவதற்காக கோபம் கொள்கிற நான் காசி இதே வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்டபோது தெரிந்தோ தெரியாமலோ மௌனம் சாதித்திருக்கிறேன். என் தார்மீக அறமதிப்பீடுகளின் வீழ்ச்சி அங்கிருந்தே தொடங்கியதாகவே கருதுகிறேன். இதற்காக காசி போன்ற தலித்துகள் செருப்பாலடித்தால் வாங்கிக்கொள்வதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

செல்லா விவகாரத்திற்கு வருவோம். செல்லா விவகாரம் ஒரு தலித்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதியே பலபதிவாளர்களால் தார்மீக நியாய உணர்வோடும் அனுதாபத்தோடும் அணுகப்பட்டது என்று கருதுகிறேன். ஆனால் அவரோ பதிவெழுத வந்துவிட்டு தோழர்.தமிழச்சியின் புகைப்படம் போட்டு அவர் அழைத்ததால்தான் வந்தேன் என்று அவருக்காக கசிந்துருகிக் கண்ணீர் சிந்திய மற்ற அனைவரையும் கேணக்கிறுக்கர்களாக்கிவிட்டார்.

தற்போது தமிழ்மணத்தைத் திறந்தாலே தமிழச்சியின் புகைப்படம் தாங்கிக் குறைந்தபட்சம் இரண்டு பதிவுகளாவது வருகின்றன. இதுவரை பெரியாரின் எழுத்துக்களையோ பேச்சுகளையோ பதிவிடாதவர்கள், குறைந்தபட்சம் பெரியாரின் ஒரே ஒரே மேற்கோளைக்கூட காட்டாதவர்கள், திடீர் 'பெரியாரிஸ்ட்' ஆகிவிட்டார்கள்.
இப்படியாக இணையத்தில் பெரியாரியம் 'பரவிவருகிறது'. வாழ்க பெரியாரியத்தின் வெற்றி!.

ஏதோ குமுதத்தின் அட்டைப்படத்தில் நடிகையின் புகைப்படம் போடுவது போல் ஆகிவிட்டது தமிழச்சியின் பதிவுலகப் புகைப்படம். இதில் லேட்டஸ்ட் கண்றாவி லக்கிலுக்கின், 'தோழர்களின் வேண்டுகோளையடுத்து தோழர் தமிழச்சியின் புதிய படம் போடப்பட்டிருக்கிறது!' என்கிற 'திராவிட அறிவிப்பு' (தோழர்.தமிழச்சி என்னும் பதிவு), ஏதோ ரஜினியின் புதிய படம் ரிலீஸைப் போலவோ அல்லது டூரிங்டாக்கீசில் எழுதி ஒட்டுவார்களே, பழையபடம் புதிய காப்பி என்று, அதைப்போலவும்.


இதைத் தமிழச்சியும் மறைமுகமாக ரசிக்கிறார், அனுமதிக்கிறார் என்றே கருத வாய்ப்பிருக்கிறது. தமிழச்சியின் போராட்டத்தை 'வாழ்த்துகிற' பதிவுகளில் பெரும்பான்மை மறைமுகமாக வழிகிற விண்ணப்பங்களாகவே அமைகின்றன. வேறென்ன, தமிழச்சி தலைமையில் பெரியார் பணி 'முடிப்போம்' என்று தோழர்கள் கோசமிடாதது ஒன்றுதான் குறை.

ஆணோ, பெண்ணோ அழகை ரசிப்பது, சைட் அடிப்பது, ஜொள்விடுவது, இதெல்லாம் தனிமனித விவகாரங்கள். அதைத் தடுக்கும் கலாச்சாரப்போலீசின் கறார்த்தன்மையல்ல எனது மொழி. ஆனால் அதற்கு ஏன் நண்பர்களே பெரியாரைப் பயன்படுத்துகிறீர்கள்? அந்த ஈரோட்டுக்கிழவன் தன் 95ஆம் வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்து ரோடுரோடாகச் சென்றுபிரச்சாரம் செய்து கண்டநாய்களிடமும் செருப்பாலும் மலத்தாலும் அடிவாங்கியது நீங்கள் 'நூல் விடுவதற்கா'?

இறுதியாய்ச் சில வார்த்தைகள் என்று நான் சொன்னது இதைத்தான் : இனிமேல் கருத்தியலைத் தனது தனிமனித விவகாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்பவர்களை ஆதரிக்கப்போவதில்லை. மேலும் போலி டோண்டு விவகாரம் சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கிற முக்கியமான விவகாரமில்லை என்று நான் கருதுவதால் இனி போலிடோண்டு விவகாரம் பற்றிப் பதிவெழுதப்போவதில்லை. வேறு உருப்படியான காரியங்கள் இருக்கின்றன. நன்றி.

Tuesday, September 4, 2007

மதுரைப் பட்டறையிலுமா மாலன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?சென்னைப் பதிவர் பட்டறை வெற்றிகரமாக நடந்து முடித்ததையடுத்து மதுரையிலும் அந்த கருமாந்திரத்தை நடத்தப்போவதாக தருமி எங்கோ சொன்னதாக ஞாபகம். அனேகமாக அது மதுரை அமெரிக்கன் காலேஜில் நடக்கலாமென்றும் அங்கேயும் 'சிறப்புறை ஆஆஆஆஆற்ற்ற்ற்ற்ற மாலன் அழைக்கப்படுவார் என்று லிவிங்ஸ்மைல் வித்யா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் மாலனின் சிறப்புரை குறித்து நம் கற்பனைக் கழுதையைத் தட்டிவிட்டோம். (கொள்ளுவாங்கிக் கட்டுபடியாகாததால் குதிரையை விற்றுவிட்டோம்)


மாலன் ( கோட்டைச் சரிசெய்தபடி...) : இப்போது சிவாஜிகணேசன் இறந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம். இதோ மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மாலை போடவருகிறார். பின்னாலேயே கவிஞர் வைரமுத்துவும் வருகிறார்.

கருமி : மாலன் சார், இழவு செய்தி சொல்ல இது சன்டிவி இல்லை. அங்கிருந்து நீங்க வெளியே வந்துட்டீங்க. இது பதிவர் பட்டறை.

மாலன் : ஓ, சாரி. சரி எனக்கு என்ன தலைப்பு?

தருமி : வலைப்பதிவாளர்களின் நன்னடத்தைகள்.

மாலன் : இதையேதானே சென்னையிலும் பேசினேன். போரடிக்குது. வேற தலைப்பு கொடுங்க.

தருமி : என்ன தலைப்பு வச்சிக்கலாம்?

மாலன் : ஏதோ ஒண்ணு, ஹிந்து ராம் நல்லவர், பெயரிலி மோசம்ன்னு பேசணும். அவ்வளவுதான்.

தருமி : என்ன பேசணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறமென்ன ஏதாவது தலைப்பில பேசுங்க.

மாலன் : அன்பார்ந்த பதிவுலகப் பெருமக்களே....

ஓசை செல்லா (உடனடியாக எழுந்து) : சார், அமெரிக்கன் காலேஜ் வாசலில் ஒரு அழகான காக்கா பார்த்தேன். பக்கத்துலயே ஒரு பாட்டி வடை சுடறதையும் பார்த்தேன். அதைப் போட்டோ எடுத்துட்டு அரைமணிநேரத்தில வந்திடறேன்.

மாலன் : ஏன் அதுக்கு இப்ப போறீங்க?

செல்லா : நீங்க ஏதாவது உளறிவைப்பீங்க. அவனவன் ஏன் எதிர்த்துக் கேள்வி கேக்கலைன்னு என்னைக் கேட்பான். இது தேவையா எனக்கு?

செந்தழல் ரவி : நான் காலையில கொரியபிகருக்குக் குட்மார்னிங் சொல்ல மறந்துட்டேன். போன்ல குட்மார்னிங் சொல்லிட்டு ஒரு மணிநேரத்தில வந்திடறேன்.

லக்கிலுக் : சார், நான் ஒரு தம்மடிச்சுட்டு மதியத்துக்குள்ள வந்திடுறேன்.

வரவணையான் : சார், எனக்கு அர்ஜெண்டா ஒண்ணுக்கு போகணும். போயிட்டு ஈவ்னிங்க்குள்ள வந்திடறேன்.

மாலன் : நோ, நோ. இப்படி எல்லோரும் போயிட்டா நான் யார்கிட்ட பேசறது. தருமி, செல்லா போட்டோ எடுக்கணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து கேமராவைப் பிடுங்கிவைங்க.

தருமி : சரிங்க சார்.

மாலன் : ரவி போன் பேசணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து செல்போனைப் பிடுங்கிவைங்க.

தருமி : சரிங்க சார்.

மாலன் : லக்கி சிகரெட் குடிக்கப் போகணுங்கிறார். அவர்கிட்டயிருந்து சிகரெட் பாக்கெட்டைப் பிடுங்கிவைங்க.

தருமி : சரிங்க சார்.

மாலன் : வரவணையான் யூரின் பாஸ் பண்னணும்ங்கிறார். அவர்கிட்டயிருந்து.....

வரவணை : நோஓஓஓஓஒ (அலறுகிறார்) நான் எங்கேயும் போகலை. இங்கேயே இருக்கேன்.

(அதற்கப்புறம் என்ன நடந்தது? மாலனின் உளறலை மதுரைப் பட்டறையில் காண்க).

Sunday, September 2, 2007

தோழர்.போலி டோண்டுவும் துப்பறியும் சாம்புகளும்


பரபரப்பாகப் பேசப்படும் எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வினை செய்வதோ, உடன் கருத்து சொல்வதோ அவசியமானதுதானா என்னும் ஆயாசம் மிஞ்சுகிறது என்றபோதும் இந்த போலி விவகாரம் குறித்து ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமென்று தோன்றுகிறது. அதற்குமுன் தோழர் டூண்டு (எ) போலி டோண்டுவிற்கும் எனக்குமான உறவு குறித்து ஒரு சில பகிர்தல்கள்.

வலையுலகில் எழுதவந்த ஆரம்பகாலங்களில் போலி விவகாரம் ஒரு சுவையான மர்மநாவலுக்கான ருசியையே ஏற்படுத்தியது. அதிலும் ஒவ்வொரு வலைப்பதிவாளர் சந்திப்புகளிலும் இதுகுறித்து அலசப்படுவதும், பக்கத்திலிருப்பவரே உண்மையே போலியா என்கிற பதட்டமும் சந்தேகமும் அனைவருக்கும் தொற்றிக்கொள்வதைப் பார்க்க மிகுந்த சுவாரசியமாயிருக்கும். அதிலும் ஒருசில நண்பர்கள் இந்த மர்மங்கள் குறித்த மாயசாகசங்களை விளக்குவதில் நிபுணர்கள்.

இன்னொருபுறம் இணையத்தில் கணிசமான ஆதிக்கம் செலுத்திவருபவர்களும், உலகமெங்கும் ஒரு விரிவான நெட்வொர்க் கொண்ட பார்ப்பனர்களே போலிடோண்டுவைப் பிடிக்கமுடியாமல் திணறுவதும், அதுகுறித்துப் புலம்புவதும் இன்னும் வேடிக்கை. மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் பரவலாகத் தேடப்பட்டு வந்தகாலத்தில் வீரப்பனோ மிக அனாயசமாக நாகப்பன், ராஜ்குமார் போன்றவர்களைக் கடத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். ஒருகூட்டத்தில் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இதைச் சுவைபடப் பேசினார். "வீரப்பனைப் பிடிக்க இவங்கெ போனா இவெங்களை வீரப்பன் பிடிசுட்டுப் போயிடுறான்'. அதேபோலத்தான் ஆப்பு, போலிடோண்டு யார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் தனது எதிரிகளின் புகைப்படங்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியிடங்கள், அவற்றின் முகவரிகள், மின்னஞ்சல்கள் ஆகிவயற்றை அனாயசமாகத் தோழர் ஆப்புவும் டூண்டுவும் தங்கள் பக்கங்களில் வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் வீரப்பன் விவகாரம் முடிவிற்கு வந்ததைப் போலவே தோழர் டூண்டு இவர்தான் என்று அவரது புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை, - பார்ப்பனர்களால்கூட வெளியிடமுடியாத 'ரகசியங்களை'- 'திராவிட' நண்பர்கள் வெளியிட்டிருக்கிறாகள். ஆனால் இதுகுறித்துச் சிலநாட்களாக மவுனம் சாதித்த திரு.போலிடோண்டுவோ இப்போது இதை மறுத்துத் தன் பக்கத்தில் எழுதியிருப்பது மட்டுமில்லாது இந்த 'ரகசியங்களை வெளிக்கொணர்ந்த' தோழர். செந்தழல்ரவியே போலிப்பக்கங்களில் பல காமக்கதைகளை எழுதியிருக்கிறார் என்று அவர் சில ஆதாரஙளை வெளியிட்டிருக்கிறார். சரி, எனக்கும் போலிடோண்டுவுக்குமான உறவு குறித்துச் சொல்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஆரம்பகாலங்களில் போலிடோண்டு மற்றும் ஆப்பு ஆகியோரின் பக்கங்களை ரெகுலராகப் படித்துவந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தயக்கமுமில்லை. விடாதுகருப்பு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டபோது அதைக்கண்டித்தும், டூண்டுவைத் தோழர்டூண்டு என்று விளித்தும் கவிதை எழுதியுமிருக்கிறேன். (அந்தப் பதிவுகளை புதிதாக வலைப்பக்கங்களுக்குள் வந்திருக்கும் நண்பர்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.)

ஒருமுறை தோழர்.டூன்டுவேகூட தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுமிருக்கிறார். இதை அவர் பின்னூட்டமாகவுமிட்டிருந்தார். வேறுயாராக இருந்தால் பிரச்சுரிப்பார்களா என்பதுகூட சந்தேகமே. ஆனால் சமீபகாலமாக அவரது பக்கங்களை நான்போய்ப் படிப்பதில்லை என்பதற்குக் காரணம் அவரது கெட்டவார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்பதே தவிர வேறல்ல.

மற்றபடி தன்னை எதிர்க்கும் பதிவர்களின் குடும்பங்கள் குறித்து கெட்டவார்த்தைகளில் எழுதுகிறார்தான். ஆனால் மற்றவர்களின் குடும்பங்கள் வசைபாடப்படும்போது விலகிப்படிக்கிற மனோநிலை தன்னைப் பற்றியோ தன் குடும்பம் குறித்தோ அமையும்போது அவ்வாறு அமைவது அனைவருக்கும் சாத்தியமாயில்லாதயாயிருக்கிறது. 'ங்கோத்தா நீ யாருடா என் அம்மா பற்றிப் பேச என்று கோபமாய் வெளியாகிறது. (இதுவே என்ன முரண்நகை?).

ஆனால் நீண்டநாட்களுக்குப் பின் ஓசைசெல்லாவிற்கும் டூண்டுவிற்குமான மோதல்தான் என் கவனத்தில் பட்டது. அவர் கெட்டவார்த்தைகளை விடவும் மோசமானது செல்லா ஒரு தலித் என்பதால் பறப் பு...., பள்ளப் பு.... என்றெல்லாம் திட்டியிருந்தார். இது என்ன ஒரு தலித்விரோத ஆதிக்கசாதித் திமிர்? பார்ப்பனீயம் என்பது டோண்டுராகவனுக்கு மட்டும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதில்லை என்பதைப் போலி டோண்டுவும் நிரூபித்திருந்தார்.

பார்ப்பனீயம் என்பது வெறுமனே பார்ப்பனர்களிடம் மட்டும் இருப்பதில்லை, நமக்குள் இருக்கும் பார்ப்பனீயத்தைக் களையவேண்டும். போலிடோண்டுவிடம் பார்ப்பனீயம் இல்லையென்றால் ஒரு தலித்சாதியை இழிவாய் வசைபாடும் மனோபாவம் வந்திருக்காது. அதேபோல உண்மைத்தமிழனைப் பொறுத்தவரை அவரது மொழிநடையும் அவர்து கருத்துக்களும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை. ஆனால் அவரது உடல் ஊனத்தைக் குறிப்பிட்டும் அவரது வறுமை குறித்தும் வசைபாடி போலிடோண்டு எழுதியது அவர் இதுவரை பயன்படுத்திவந்த கெட்டவார்த்தைகளை விடவும் கொடூரமானது.

அதேபோல டோண்டுவின் பதிவிற்கு யாரும் பின்னூட்டமே இடக்கூடாது என்னும் அவரது பிடிவாதம் ஜனநாயகமற்றது மட்டுமல்ல, சிறுபிள்ளைத்தனமானதும்கூட. டோண்டுவின் சஞ்சய்தத் பற்றிய பதிவில் நான் ஒரு பின்னூட்டமிட்டிருந்ததைத் தொடர்ந்து தோழர்.டோண்டு என்னைக் குறித்தும் அவர் பக்கத்தில் எழுதியிருந்தார். மேலும் சர்வேசன் பதிவில் நான் இட்டிருந்த பின்னூட்டம் தொடர்பாகவும்.

ஆனால் ஒன்றும் பெரிதாக என்னைப் பற்றி மோசமாகவோ அசிங்கமாவோ எழுதவில்லை. ஆனால் டோண்டுராகவன் கருத்தாகச் சிலவற்றைப் பட்டியலிட்டு, (ஆண் முறைதவறிய பாலுறவில் ஈடுபட்டால் பெண்களும் ஈடுபடலாம்... இப்படியாக) இதையெல்லாம் நீ ஒத்துக்கொள்கிறாயா? என்று கேட்டிருந்தார்.

உண்மையிலேயே இதையெல்லாம் டோண்டுராகவன் சொல்லியிருந்தால் அதெல்லாம் வரவேற்கத்தக்கதுதான். பெரியார் சொன்னதற்கெல்லாம் மேலாக ஒன்றும் அதிர்ச்சிகரமாக, புரட்சிகரமாகவெல்லாம் டோண்டு சொல்லிவிடவில்லை. ஆனால் இதைச் சொன்னால் தோழர்.டூண்டு அடுத்து என்னைப் பார்த்து கேட்கும் கேள்வி, 'அப்படியானால் உன் வீட்டுப் பெண்களுக்குக் காண்டம் வாங்கிக் கொடுத்து ஊர்மேய அனுப்புவாயா' என்பதாகத்தானிருக்கும். (ஏனெனில் செல்லா போன்ற பலருக்கும் இந்தப் கேள்வியையே ரெடிமேடாக வைத்திருக்கிறார்.)

அப்படியானால் பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளராகவோ, பேச்சாளராகவோ, போராளியாகவோ இருந்திருக்கமுடியாது. தோழர்.டூண்டுவின் கருத்துப்படி பெரியார் திருச்சியிலோ, சென்னையிலோ, ஈரோட்டிலோ தன் வீட்டுப் பெண்களுடன் சாலையோரத்தில் நின்று ரேட் பேசும் ஒரு மாமாவாகத்தானிருந்திருக்க முடியும் என்பதைத் தாண்டியும் வேறென்ன சொல்வது?

தோழர்.டூண்டுவும் விடாதுகருப்பும் ஒன்றுதான் என்று முன்பும், இப்போதும் சொல்லப்படுகிறது. அது உண்மையா, பொய்யா என்று தெரியாவிட்டாலும் ஒன்றுமட்டும் தெளிவாகச் சொல்லமுடியும். இருவரின் எழுத்துக்களிலுமே ஆண்மய்யப் பார்வைகள்தானிருக்கின்றன. இப்போது நடப்பது தர்மயுத்தமா, சகோதரயுத்தமா என்பது தேவையில்லாத ஒரு சர்ச்சைதான் என்று நினைக்கிறேன்.

மேலும் மூர்த்தியாக இருந்தாலும் விடாதுகருப்புவாக இருந்தாலும் போலிடோண்டுவாக இருந்தாலும் அவரை மனநோயாளி என்று குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எல்லோருக்குமே மனநோய் இருக்கிறது, அதன் சதவிகிதம்தான் மாறுகிறது என்பது உளவியலின் அடிப்படை. போலிடோண்டு மனநோயாளி என்றால் டோண்டு, இதுவரை போலிடோண்டுவோடு இருந்தவர்கள், அல்லது போலிடோண்டு பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள், தமிழ்மணத்தைத் திறந்தவுடனே இன்றைக்குப் போலிடோண்டு பற்றி யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதித் தேடிப்படித்து (மற்ற பதிவுகளுக்கெல்லாம் இரண்டாம்வாய்ப்பே அளித்துவிட்டு) படிப்பவர்கள், எனது இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்து உள்வந்து இதைப்படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், எழுதிக்கொண்டிருக்கும் நான் எல்லோருமே மனநோயாளிகள்தான்.

இரண்டுவிசயங்களை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த போலி(ஸ்) திருடன் விளையாட்டின் நேர்மறையான (அ) எதிமறையான சுவாரசியம் பிடித்துப்போன யாரும் இந்த விளையாட்டை அவ்வளவாக முடிவிற்குக் கொண்டுவந்துவிடமாட்டார்கள். எனவே மர்மநாவல் முடிந்துவிட்டதா அல்லது தற்காலிக இடைவேளையா, அல்லது முதல்பாகம் மட்டும்தான் முற்றுப்பெற்றிருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.

ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது இணையஎழுத்து என்பது ஏதோ படிப்பது, எழுதுவது, உரையாடுவது, தனக்கான நட்புவட்டத்தை உருவாக்கிக்கொள்வது என்பதைத் தாண்டி யார் யார் என்ன அய்.பியில் எழுதுகிறார்கள் என்று புலனாய்வது, கண்டுபிடிப்பது, அம்பலபடுத்துவது என்கிற மாயச்சாகசவேட்கை பலருக்கும் பிடித்தமாயிருக்கிறது. இதில் சிக்கிக்கொள்ளாமல் கும்மியடிப்பவர்களே பாக்கியவான்கள்.பதிவு 1

தோழர் டூண்டு


வன்மத்தின் மொழியிலிருந்து
வார்த்தைகளை உருவுகிறாய்.
வன்மத்தின் திசையிலிருந்து
விலகவே விரும்புகிறேன் நான்.
ஆனாலும் வன்மத்தின் ஆதி
உன்னிலிருந்து தொடங்கியதில்லை
என்பதை உணர்கிறேன் நான்
மெய்யாலும் மெய்யாலுமே..
காற்றைக்கிழிக்கும்
உன் இரைச்சலினூடே
எத்தனை ஓசைகள்
எனக்குக்கேட்கின்றன?
கணவாய்களில் கனைக்கும்
ஆடுகளின் மேய்ச்சல் ஓசை,
கருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்
ஆதி மதுக்குடுவைகள்
உடைந்து நொறுங்கும் ஓசை,
ஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்
ஆம் காற்றைப் போலவே
திசைகளை விழுங்கும் வேளை
தென் திசையில் மண்டியிட்டு
அன்னியப் பாதங்களுக்கு
முததமிட்ட ஓசை
இன்னமும்..இன்னமும்
ஆனாலும் நான்
உன் காலடிகளைப் பின்பற்றமுடியாது
மெய்யாலும் மெய்யாலுமே
நீ வெற்றிபெற்ற கணம்தான் எது?
உன்னோடு கைகுலுக்கலாமா
வேண்டாமா என்று நான் குழம்பிய கணமா?.

பதிவு2

உங்களுக்கு commonsense இல்லையா?சமீபகாலமாக வலையுலகில் பொதுப்புத்தி குறித்து அதிகமும் பேசப்பட்டது, குறிப்பாக அப்சல் விவகாரத்தில். ஆனால் commonsense என்றழைக்கப்படும் பொதுப்புத்தி குறித்து ஆழமான புரிதலின்றி மேலோட்டமாகவே கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பொதுவாகவே புத்தி என்பதே இயற்கையானதல்ல, மாறாகக் கட்டமைக்கப்பட்டதே. மொழி என்பது சொற்களாலானது, சொற்கள் அர்த்தங்களால் ஆனவை என்ற வழமையான மொழியியல் புரிதலிலிருந்து விலகி சொற்கள் அர்த்தங்களைப் பதிலீடு (subtitute) செய்வதில்லை, மாறாகக் குறியீடு (signify) மட்டுமே செய்கிறது என்னும் சிந்தனையின் அடிப்படையில் குறியீடு, குறிப்பான் ஆகிய கருத்தாக்கங்களை முன்வைத்தது பின்நவீனம்.

பொதுப்புத்தி என்பது சமூகத்தில் ஆதிக்கத்தைக் கைக்க்கொண்ட பெருங்கதையாடல்களால் கட்டமைக்கப்படுவது. நம்சூழலில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் தமிழ்ச்சினிமாவில் கள்ளக்கடத்தல் வில்லன்களின் பெயர்கள் பீட்டராகவோ முஸ்தபாவாகவோ இருப்பது, தலித்துகள் உணர்வற்ற அடிமைகளாகச் சித்தரிக்கப்படுவது எனப் பலவற்றைச் சொல்லலாம். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், பால்மீறிகள், நாடோடிகள், பழங்குடிகள் என விளிம்புநிலையினர் குறித்து பெருங்கதையாடல்கள் கட்டமைக்கும் பிம்பங்களே பொதுப்புத்தியாக உருமாற்றமடைகிறது.

இத்தகைய போக்கிற்கு எதிரான எதிர்வினைகளும் எழாமலிருப்பதில்லை. அத்தகைய மனநிலைகளைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். உதாரணமாக நம் இளைஞர்களிடையே உலவும் பாலியல்கதைகளில் பெரும்பாலான கதைகளின் நாயகர்களாக எம்.ஜி.ஆரும் காந்தியும் இருப்பது. இவர்கள் இருவரும் திருஉரு(icon)க்களாக்கப்பட்டவர்கள். இந்த திரு உருக்களின் மீதான எரிச்சலே பாலியல்கதைகளாக மாறுகிறது. இன்னொரு உதாரணமாகக் கேரளச்சமூகத்தில் வழக்கத்திலுள்ள தெறிப்பாட்டைச் சொல்லலாம். நம் வலைப்பூக்களிலும் இத்தகைய உதாரணங்களைச் சொல்லமுடியும்

பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள், சாதி என்பது இயற்கையானதுதான், இந்துமதமே உண்மையான மதம், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழ்நாடே கெட்டுப்போனது அதற்கு முன் இங்கிருந்த ஒரே பிரச்சினை பாலாறும் தேனாறும் ஓடியதால் ஏற்பட்ட ஈ மற்றும் கொசுத்தொல்லைப் பிரச்சினை மட்டுமே என்பதாகவே பொதுப்புத்தியின் போக்கிலிருந்து பேசுபவைதான் ஹரிஹரனின் எழுத்துக்கள். இதுபோன்ற போக்குகளுக்கு எதிர்வினையாகவே விடாதுகருப்பு, டூண்டு(எ) போலிடோண்டு ஆகிய தோழர்களின் எழுத்துக்கள் அமைகின்றன.

இவர்களின் எழுத்துக்களில் 'கெட்ட'வார்த்தைகள் இருக்கின்றதா என்றால் 'ஆம்'. ஆனால் கெட்டவார்த்தை, நல்லவார்த்தை என்பதே பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டதுதான். அவைகள் கெட்டவார்த்தைகள் என்றால் பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களை தஸ்யூக்கள், சூத்திரர்கள், வேசிமக்கள் என்று குறிப்பிடும் இந்துமதப் பிரதிகளைக் கொளுத்தி விட பார்ப்பனர்கள் தயாராக இருக்கிறார்களா?


மேலும் வியாசர்பாடியில் வசிக்கும் ஒரு தலித்துக்கு 'ஙோத்தாபாடு' என்பது சாதாரணமான வார்த்தை. நிச்சயமாக திருவல்லிக்கேணி பார்ப்பான் அந்த வார்த்தையை உச்சரிக்கமாட்டான். அதற்காக அந்த பார்ப்பான் நல்லவன் என்று சொல்லிவிட முடியுமா? கெட்டவார்த்தைகளை விட மோசமானவை சாதிய அதிகாரம் நிறைந்த வார்த்தைகள்.
(ஹரிஹரனின் எழுத்துக்கள் போலிடோண்டு மற்றும் விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்களை விடவும் நாகரீகமானவை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உண்மையில் போலிடோண்டு, விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்கள் தடைசெய்யப்படவேண்டியவை என்றால் நிச்சயமாக ஹரிஹரனின் எழுத்துகளும் தடைசெய்யப்படவேண்டியவைதான்.
டூண்டு, விடாதுகருப்பு எழுத்துக்களில் ஆணாதிக்க, ஆண்மய்ய மற்றும் ஆண்நோக்குப் பார்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதுகுறித்து எனக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நான் கருத்துமாறுபடுவதாலேயே அல்லது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன என்பதாலேயே ஒரு எழுத்தைத் தடை செய்யவோ தணிக்கை செய்யவோ கோருவது நியாயமாகாது. தணிக்கை, தடை, தண்டனை ஆகிய கருத்தாக்கங்களை மனித உரிமை ஆர்வலர்களும் நவீனச்சிந்தனையாளர்களும் கேள்விக்குள்ளாக்கிவரும் சூழலில் விடாதுகருப்பு, போலிடோண்டு, ஹரிஹரன் ஆகிய யாருடைய எழுத்துக்களாக இருந்தாலும் தடை செய்வதோ அல்லது தணிக்கை செய்வதோ நீதியாகாது. )

ஒரு வசதிக்காக ஹரிஹரனின் எழுத்துக்களைப் பெருங்கதையாடல்கள் என்றும் விடாதுகருப்பு, டூண்டு ஆகியோரின் எழுத்துக்களை சிறுகதையாடல்கள் என்றும் பிரித்துக்கொள்ளலாம்(ஒரு வசதிக்காக மட்டுமே). ஆனால் இத்தகைய இருவிதமான அணுகுமுறைகளுமே ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு உதவாது. இரு போக்குகளுமே பிடிவாதமான முன் தீர்மானங்களைக் கொண்டவை.

அப்படியானால் இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது? பொதுவாக நாம் ஒரு பிரதியை அணுகும்போது உடன்பாட்டு வாசிப்பு, எதிர்மறை வாசிப்பு என்கிற இருவிதமான வாசிப்புகள் வழியாகவே அணுகுகிறோம். இது முன் தீர்மானங்களின் அடிப்படையில் அணுகுவது. இது உங்களுக்கு எதையும் புதிதாக கற்றுத் தராது. அறிந்தவற்றிலிருந்து விலகும்போதுதான் நாம் புதிய அர்த்தங்களைச் சென்றடையமுடியும், மேலும் கண்டடைய முடியும்.

விவாதம் என்பது நீங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தை மறு உறுதி செய்வதுதான். 'என்னுடைய கருத்து மட்டுமே சரியானது" என்னும் புள்ளியிலிருந்தே இது தொடங்குகிறது. ஆனால் இதற்கு மாறாக உரையாடல் என்பது "என் கருத்திலும் தவறு இருக்கலாம்" என்னும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது.

உரையாடல் மட்டுமே நமக்குப் புதிய புரிதல்களை உருவாக்க உதவும். பொதுப்புத்தியிலிருந்து விலகுவதுமட்டுமே இதற்கான வழி.
எனவே, இனி யாராவது "உனக்கு commonsense இருக்கிறதா?" என்று கேட்டால் தயங்காமல் "எனக்கு commonsense இல்லை" என்று பெருமிதத்தோடு கூறுங்கள்.

அறிந்தவற்றிலிருந்து விலகுங்கள், அறியாமையிலிருந்து தொடங்குங்கள், உரையாடப் பழகுங்கள். உரையாடுவோம்

Monday, August 13, 2007

தமிழ்நதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்தமிழ்நதிக்கும் எனக்குமான உறவு ஒரு சின்ன மோதலிலிருந்து தொடங்கியது. அவரது பதிவொன்றிற்கு நான் இப்படியாகப் பின்னூட்டமிருந்தேன்...' உங்கள் பல பதிவுகள் சௌகார்ஜானகி படம் பார்த்ததைப் போல இருக்கிறது' என்று. அன்று இரவு ஒருமணியிருக்கும், ஒரு குறுஞ்செய்தி தமிழ்நதியிடமிருந்து என் தொலைபேசியைத் தட்டி, 'இந்தப் பின்னூட்டத்தை நான் வெளியிடத்தான் வேண்டுமா?' என வினவியது. 'வெளியிடத்தானே பின்னூட்டமிட்டேன்' என்று மறுமொழி அனுப்பினேன்.

மறுநால் காலையில் தமிழுக்குப் போன் செய்து பேசினேன். வெறுமனே வலியையும் கண்ணீரையும் முன்வைப்பதைவிடவும் அவ்விடத்தில் கொண்டாட்டத்தை முன்வைக்கவேண்டுமென்பது என்னுடைய கருத்தாகவிருந்தது. ஆனால் வாழ்க்கையைக் கொண்டாட முடியாத நிலையிலிருக்கிறோம் என்றார் தமிழ். நான் முதல்நாள் பேசிய அன்றே அவரது நெருங்கிய உறவுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து இறந்துபோனார். பிறகு அந்தக் கருத்தை நான் மாற்றிக்கொண்டேனா இல்லையா என்ற குழப்பம் இன்றளவிலும் தொடரும் நிலையிலும் என்னுடைய பிடிவாதம் தளர்ந்தது. தடியாலடித்து சொர்க்கத்திற்கு வழியனுப்புவதைக் கைவிடத்தொடங்கினேன்.

முதன்முதலாக தமிழ்மணப்பூங்காவில் 'பெண் - நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை' என்னும் பதிவைப்படித்துவிட்டுத்தான் தமிழ்நதியின் பக்கம் சென்றிருந்தேன். அவர் பக்கத்தில் நான் படித்த முதல் பதிவு, 'நேற்றிருந்தேன் அவ்வூரினிலே...'. நட்பின் ஆரம்பகாலங்களில் தமிழிடம் சொன்னேன், 'தமிழ், உங்களுக்குக் கவிதை எழுதவரவில்லை. ஆனால் உங்கள் உரைநடையில் கவித்துவமிருக்கிறது. தயவுசெய்து கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு உரைநடையில் கவனம் செலுத்துங்கள்' என்று. 'ஆனால் என்னுடைய நண்பர்கள் என் கவிதைகள்தான் நன்றாகவிருப்பதாகச் சொல்கிறார்கள்' என்றார் அவர். ஒருவேளை நான் படித்த ஆரம்பகாலக் கவிதைகள் அப்படி இருந்திருக்கக்கூடும்.

பிற்பாடு அவரது கவிதைகளின் அசாத்தியமான ஆளுமை பிரமிக்கவைத்தது. அவருக்கென்று ஒரு வாசகர்வட்டம் இருக்கிறது, என்னையும் சேர்த்து. அவரது ஒருசில கவிதைகள் தவிர பெரும்பாலான கவிதைகள் மொழியை வலுப்படுத்துபவையாக உள்ளன. அவரது எழுத்துக்களின் பலம் அதில் விரவியிருக்கும் உண்மைதான் என்று கருதுகிறேன். இப்போது இதேநாளில் மதுரையில் அவரது முதல் கவிதைதொகுப்பு 'சூரியன் தனித்தலையும் பகல்' பனிக்குடம் பதிப்பகத்தின் வெளீயீடாக வெளியிடப்படுகிறது.

அவரது பிறந்தநாளன்றே அவரது கவிதைத்தொகுதி வெளியாவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி. நிச்சயமாக இந்தத் தொகுதி மூலம் தமிழின் முக்கியமான கவிஞர்களின் பெயர்ப்பட்டியலில் தமிழ்நதியின் பெயரும் இடம்பெறும் என்பது என்பது எனது பெரிய நம்பிக்கை.

எழுத்துக்களைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரியவர் தமிழ். ஒவ்வொரு தனிமனிதர்கள் மீதும் அவருக்கு தனிப்பட்ட அக்கறைகள். விருந்தினர்களை உபசரிப்பதில் அளவிடமுடியாத ஆவல், நட்பைப்பேணுவதில் கரிசனம், தான் இழந்துவிட்ட பூனைக்குட்டிகளின் வெற்றிடத்தைத் தன் அன்பால் நிரப்பிவிட பேராசைப்படும் மனசு இதுவெல்லாம் தமிழ்நதி. ஒரு மண்ணில் வீழாத முதல் மழைத்துளியைப்போலவே உண்மையானதும் ஈரமானதும் அரவணைப்பதும் அவரது இதமிக்க தோழமை.

என் பிரியத்துக்கும் பிரியமான தோழி தமிழ்நதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்வதில் மகிழ்வும் பரபரப்பும் நிரம்பியிருக்கிருக்கிறது என்னுள். happy birthday to my dearest friend.

Sunday, August 12, 2007

சீரியசாக எழுதுவது எப்படி? - கும்மிப்பதிவாளர்களின் அவசரக்கூட்டம்


சீரியசாக எழுத என்ன செய்யவேண்டும்?

குமுதம், குங்குமம், சன்டிவி போன்ற சீரியசான மீடியாக்களில் வேலைபார்த்திருக்கவேண்டும்.

- ஜெர்மானிய மானுட வரலாற்றெழுதியல் அறிஞர் டிராவுட்மேன் 'தி இன்விசிபிள் திங்கிங்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலிருந்து....


திடீரென்று தமிழ்மணம் தீவிரவாதிகளின் பிடிக்குச் சென்றுவிடுகிறதென்று வைத்துக்கொள்வோம். தீவிரம் என்றால் சீரியஸ்தானே!! சீரியஸ்பதிவுகள் மட்டுமே போடவேண்டும், சீரியசான பின்னூட்டம் மட்டுமே இடவேண்டும் என்று ஒரு அவசரச்சட்டம் அர்ஜெண்டாக அமுலுக்கு வருகிறது. இந்த நெருக்கடிநிலையைச் சமாளிக்க செந்தழல்ரவி தலைமையில் கும்மிப்பதிவாளர்களின் போர்க்காலக் கூட்டம் கூடுகிறது.. இனி......

ஓசைசெல்லா : ஹீம்... இதுவரைக்கும் 200 பதிவு போட்டிருக்கேன். இப்ப சீரியசாதான் எழுதணும்ன்னு சொன்னா என்ன பண்றது?

செந்தழல் : இதை வெளியே சொல்லாதீங்க 200 பதிவில 150 பதிவு வெறும் போட்டா மட்டும்தான். மீதி 50 போனவாரம் மட்டுமே போட்டிருக்கீங்க, பதிவர் பட்டறைக்குச் செல்லும் வழி, வெளியேறும் வழி, பக்கத்திலிருக்கும் முட்டுச்சந்துன்னு..

செல்லா : (ஆவேசமாக...) கும்மி அடிப்பது எங்கள் பிறப்புரிமை. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை பிரன்சிலிருந்து பிளாக்பெல்ட் வந்தபோதிலும் நச் கும்மி அடிக்க நமக்கு அச்சமென்பதில்லையே..

ரவி :ஆமா, இங்கெல்லாம் சவுண்ட் விடுங்க பட்டறையில் மாலன் உளறப்ப மட்டும் அமைதியாயிருந்துடுங்க.

ஓசை : அப்ப நான் முக்கியமான விஷயமா வெளியே போயிருந்தேன்

ரவி : என்ன விஷயமா?

ஓசை : வரவணை பொட்டிக்கடையில சிகரெட் வாங்கப்போனார். அதைப் போட்டோ எடுக்கப் போனேன்.

வரவணை : உங்க அநியாயம் தாங்கலைங்க. நான் டீ குடிச்சாலும் போட்டோ எடுக்கிறீங்க. சரக்கடிச்சாலும் போட்டோ எடுக்கிறீங்க. போட்டோவைப் பார்த்துட்டு அவள் மூணுநாளாப் பேசலை (விம்முகிறார்)

லக்கிலுக் : நீங்களாவது அடிச்சீங்க. நான் சும்மா பார்ல உக்காந்திருந்தேன். அதையும் போட்டோ எடுத்துப்போட்டு என் பொண்டாட்டி எதார்த்தமா பார்த்து வீட்டில ஒரே மாத்து ( லக்கியும் கதறுகிறார். இருவரும் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.)

ரவி : அடவிடுங்கப்பா, ஏதோ மதிமுக கூட்டத்துக்கு வந்த பீல் வருது. முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இனிமேல் சீரியசாத்தான் எழுதணுமாம். விதிமுறையே கொண்டுவந்துட்டாங்க. அய்யனார் நீங்க என்ன பண்ணப்போறீங்க?

அய்யனார் : நான் தாஆஆஆஆஆஆ அப்படின்னு ஒரு கவிதை எழுதிவச்சிருக்கேன். அதைப் போடப்போறேன்.

ரவி : உங்களோட ஒரே இம்சைங்க. வாஆஆஆஆஅ, போஓஓஓஓஓஓ, ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஏதாவது எழுதிடுறீங்க. படிக்கிறவன்ல்லாம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு கொட்டாவி விடறான். சரி காயத்ரி நீங்க என்ன பண்ணப்போறீங்க?

காயத்ரி : நான் 'பிரிவின் வலி' ன்னு கவிதை எழுதியிருக்கேன்.

ரவி : இன்னாமா நீ எழுதறே, டாவடிச்சவன் எஸ்கேப்பாகித் தப்பிச்சுட்டான். நான் மெர்ஜாகி ஒரே பீலிங்கா இருக்கு. இதானே எழுதப்போற. ஆக்சுவலா அது ஒரே ஒரு கவிதைதான். ஆனா நீ வார்த்தையை மாத்தி மாத்திப் போட்டு 127 கவிதைப் பதிவு போட்டுட்டே. சரி ஒழி. பொன்ஸ் நீங்க என்னப் பண்ணப்போறீங்க?

பொன்ஸ் : நான் ஆப்பிரிக்க யானையின் உணவுமுறைகள்ன்னு ஒரு கட்டுரை நெட்ல டவுன்லோட் பண்ணிவச்சிருக்கேன். அதை வச்சு ஒப்பேத்திடுவேன்.

ரவி : அடப்பாவி, சரி தல பாலபாரதி நீங்க....?

பாலபாரதி : நான்தான் எழுதறதே இல்லையே, ஆனா பாகச பதிவுன்னு தினம் மூணுபதிவு என்னைக் கலாய்ச்சு என் போட்டோவோட வரும். எனக்கும் திருப்தியாயிருக்கும். ஆனா அதையும் தடை பண்ணிட்டாங்கே. சன்டிவில மூஞ்சியக் காட்டலைன்னு அழுத வைகோ மாதிரி ஆயிட்டேன் நான்.

பொன்ஸ் : ஏன் நீங்க சீரியசா எழுத டிரை பண்ணவேண்டியதுதானே?

பாலபாரதி : அடங்கமாட்டியாம்மா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன். ஆனா நான் தப்பிச்சுக்கிடுவேன்.

ரவி : எப்படி?

பாலா : நான் கமெண்ட் போடுறதை நீங்கக் கவனிச்சதில்லையா? யாராவது வேலைமெனக்கிட்டு கமெண்ட் போட்டுவச்சிருப்பான். அதைக் காபி பேஸ்ட் பண்ணி ரிப்பீட்டே அப்படின்னு எழுதிடுவேன். அவ்வளவுதான். யாராவது சீரியசாப் பதிவுபோட்டுட்டா அதைக் காபி பேஸ்ட் பண்ணிடுவேன். அதை என் பிளாக்கில போட்டுட்டு கீழே ரிப்பீட்டுன்னு எழுதிட வேண்டியதுதான். அப்புறம் நானும் சீரியஸ் பதிவாளர்தான்.

ரவி : ஆஹா, இப்படித்தான் நீங்க குப்பை கொட்டிக்கிட்டிருக்கீங்களா? குசும்பன் நீங்க என்ன பண்ணப்போறீங்க?

குசும்பன் : எனக்கு சீரியசா எழுதறதில ஒரு பிரச்சினையுமில்லை. ஆனா ஒரே ஒரு சந்தேகம்.....

ரவி : என்ன?

குசும்பன் : சீரியஸ்ன்னா என்ன?

ரவி : கிழிஞ்சது கிருஷ்ணகிரி. சீரியஸ்ன்னா என்னப்பா? (பாலபாரதியைக் கேட்கிறார். அவர் முழிக்கிறார். எல்லோருமே முழிக்கிறார்கள். அப்போது வரவணைக்கு பொட்டிக்கடை சத்யாவிடமிருந்து போன் வருகிறது.)

வரவணை : (சத்யாவிடம்) சீரியசா எழுதறதுன்னா என்ன?

சத்யா : அதுவா? படிக்கும்போதே பேதியாகணும், கொஞ்சம் சத்தமா படிச்சா பக்கத்துல இருக்கிறவங்க ஒருமாதிரிப் பார்க்கணும். தப்பித்தவறிக்கூட படிக்கிறவன் சிரிச்சுடவே கூடாது. தொடர்ந்து மூணுவருசம் படிச்சா முப்பதுவயதில ஹார்ட் அட்டாக் வந்து செத்துடணும். எழுத்தெல்லாம் தமிழ்ல்ல தான் இருக்கும். ஆனா படிச்சா வேற மொழியில படிக்கிற பீலிங் வரணும். ஒண்ணும் பிரச்சினையில்லை. பின்நவீனத்துவத்தில நான்லீனியர் ரைட்டிங்ன்னு ஒண்ணு இருக்கு. சம்பந்தா சம்பந்தமில்லாம இருக்கணும். அவ்வளவுதான்.

வரவணை : அப்ப ஆளுக்கு ஒரு வரி சொல்வோம். அப்புறம் எல்லாத்தையும் சேர்த்துப் போட்டுட்டா தலையும் புரியாம வாலும் புரியாம சீரியஸ் பதிவாயிடும்.

ரவி : சரி, ஆளுக்கு ஒரு லைன் சொல்லுங்க நான் எழுதிக்கறேன், தருமி நீங்க சொல்லுங்க.

தருமி : 1976ல் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் இட்லியும் ஆமைவடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது எம்ஜி ஆர் போனார்.

ரவி : நீங்க மொழி படத்து பாஸ்கர் மாதிரியே இருக்கீங்க. எப்பதான் 1976- அய் விட்டு வரப்போறீங்களோ? உண்மைத்தமிழன், நீங்க சொல்லுங்க.

உண்மைத் : இனிய வலைமக்களே, திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோவிலில் நீர்மோர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். இந்த திராவிட அரசியல்வாதிகள்தான் நீர்மோரில் தண்ணீரை அதிகம் ஊற்றிக் கெடுத்துவிட்டார்கள்.துக்ளக் ...

ரவி : அய்யா நிறுத்துங்கய்யா, சுகுணா, பட்டறை பத்தி மூணு பாராவில ஒரு பதிவு போட்டா நீங்க பின்னூட்டமே ஏழு பாராவில போடுறீங்க. நீங்க சொன்னதில பாதிதான் எழுதுவேன். அய்யனார் நீங்க....

அய்யனார் : துபாயில் பாரில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த சந்தியாவுக்கு முலைகள் துருத்திக்கொண்டிருந்தன.

ரவி : ஏம்பா, அந்தம்மாவுக்குத்தான் பிரெஸ்ட்கேன்சர்ன்னு போனமாசமே எடுத்துட்டாங்களே, நீ விடமாட்டியா, காயத்ரி நீங்க சொல்லுங்க..

காயத்ரி : நீ சென்ற பாதையைத் திரும்பிப்பார்க்கிறேன். கவிதை எழுத உட்கார்கிறேன் வெறும் காற்றுதான் வருது.

ரவி : பொன்ஸ்...

பொன்ஸ் : ஆனை ஆனை அழகர் ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை.

ரவி ; இது ஒண்ணாங்கிளாஸ் பாடம்மா. இதைத்தான் நீங்க நெட்ல டவுன்லோட் பண்ணி வச்சிருக்கீங்களா, தலையெழுத்து, தல நீங்க சொல்லுங்க.

பாலபாரதி : ரிப்பீட்டே...

ரவி : எல்லாம் எழுதியாச்சு இப்ப இதெல்லாம் சேர்த்துட்டா சீரியசான பதிவாயிடுமா?

வரவணை : ஊஹீம். குணா படத்துல 'கண்மனி அன்போடு' பாட்டில 'மானே பொன்மானே' போடுற மாதிரி அங்கங்க வெளிநாட்டு அறிஞர்கள், சினிமா டைரக்டர்கள், ஓவியர்கள் பேரெல்லாம் போடணும்.

ரவி : சரி, அப்ப நீங்களே ரெடிபண்ணுங்க.

வரவணை : (தயார்செய்து வாசிக்கிறார்.)

1976ல் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் பெர்க்மென் இட்லியும் ஆமைவடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது எம்ஜி ஆர் கோட்டைமாரியம்மன் கோவிலில் போர்ஹேக்கு நீர்மோர் ஊற்றிக்கொண்டிருந்தார். பாரில் டான்சாடிக்கொண்டிருந்த வான்காவுக்கு முலைகள் துருத்திக்கொண்டிருந்தன. பீத்தோவனின் பியானோவில் வெறும் காற்றுதான் வருது. மார்க்யெஸீம் உம்பர்ட்டோ ஈகோவும் காஸ்ட்ரோவோடு ஒரு வெண்ணிற இரவில் மது அருந்திக்கொண்டிருந்தபோதுதான் காப்காவின் கரப்பான்பூச்சி ஒரு கவிதையாக உருமாற்றம் அடைந்தது இப்படியாக...ஆனை ஆனை அழகர் ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை. இந்தக் கவிதை வரிகள் தொன்ம மனங்களில் புதைந்திருக்கும் விலங்குணர்வையும் ஆதிவேட்கை மனோபாவத்தையும் ஒருசேரப்பிரதிபலிப்பதாக ' த டெக்சுவல் ரிவிவ்யூ' பத்திரிகையில் விமர்சனம் எழுதிய இஹாப்ஹாசனும் ஃபெலிக்ஸ்கட்டாரியும் ஒருசேர எழுதிய விமர்சனக்கட்டுரையின் தலைப்பு 'ரிப்பீட்டே...'.

ரவி : சூப்பர் சூப்பர் ஒருத்தனுக்கும் ஒரு இழவும் விளங்காது. சரி, இந்தப் பதிவுக்கு தலைப்பென்ன?

வரவணை : விமர்சனப்பிரதிகளின் இயங்குமுறை குறித்த அ- நேர்கோட்டு எழுதுமுறைமையிலான அ -தர்க்க நோக்கு

Friday, July 27, 2007

அய்யனார்க்கு ஒரு கடிதம்அன்புள்ள அய்யனார்,
எப்படி இருக்கீங்க? எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்தானா? நீங்கள் எட்டு விளையாட்டுக்குக் கூப்பிருந்தீர்கள். லாங் லாங் அகோ தமிழ்நதி அக்காவும் அழகு பற்றி எழுதச்சொலியிருந்தார்கள். இந்த விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வமில்லை. இருந்தாலும் எப்போதும் சீரியசாக எழுத நாமென்ன வயசானவர்களா என்ன? நாம் யூத்(மாதிரி)தானே?
ஆனால் எட்டு விளையாட்டுக்கான இலக்கணம் தெரியவில்லை. (ஆமா, நீ அறுசீர்கழிநெடிலடி விருத்தம் எழுதறே, தளை தட்டுதுன்னு வருத்தப்படுவதற்குன்னு நீங்கள் புலம்புவது கேட்குது). லக்கிலுக் வேற உன் பக்கத்திற்கு வந்தால் தாவு தீருதுங்கிறார். பொன்சும் எப்ப எழுதுவதை நிறுத்தப்போறேன்னு மிரட்டுறாங்க. அதனால ஒரு ஜாலியா அரட்டை.
********
'புரிகிற மாதிரி எழுது' புரிகிற மாதிரி எழுது என்றெல்லாம் அபயக்குரல்களைக் கேட்கும்போது ஒரு சம்பவம் நினைவிற்கு வரும்.
ராஜிவ்கொலையில் அப்பாவித்தமிழர்கள் 24பேர் சிறையில் தள்ளப்பட்டார்கள். ஆறுபேருக்கு மரணதண்டனை. அதில் ஒரு தோழர் பிணையில் வந்திருந்தார். அப்போது நான் பெரியார் தி.கவில் இருந்தேன். வெளியே வந்த தோழர் ரிலாக்சாக இருக்கட்டுமேன்னு ஒரு தோழர், இப்போது கருப்புப்பிரதிகள் பதிப்பகம் நடத்தும் நீலகண்டனிடம் எங்காவது அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்.
நீல்ஸ் அழைத்துப்போனதோ கோணங்கியின் பாழி நூல் விமர்சனக்கூட்டத்திற்கு. நம் இலக்கியவாதிகள் விட்டுவிடுவார்களா என்ன? 'இந்தப்பிரதியை இங்கிருந்தும் வாசிக்கலாம், அங்கிருந்தும் வாசிக்கலாம், இப்படியும் வாசிக்கலாம், அப்படியும் வாசிக்கலாம், தலைகீழாக வாசிக்கலாம்' என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த தோழரோ நீல்ஸிடம் கதறியிருக்கிறார், 'எனக்கு மரணதண்டனை கூட கொடுக்கட்டும் தயவுசெய்து இலக்கியக்கூட்டத்திற்கு மட்டும் கூட்டிட்டு வராதீங்க'.
*********
பின்நவீனத்துவம் பற்றி எழுதும் ஆரம்பகாலங்களில் அ.மார்க்ஸ் அடிக்கடி ஒரு வாக்கியத்தைத் திரும்பத்திரும்ப எழுதுவார். (ஆரம்பிச்சுட்டான்யா என்று நீங்கள் அலறுவது கேட்கிறது.) 'நான் எழுதும் 'அ'விற்கும் நீங்கள் எழுதும் 'அ'விற்கும் வித்தியாசம் இருக்கிறது'. வித்தியாசங்களின் அரசியல் பற்றியும் சொற்களைத் தாண்டி நிற்கும் அர்த்தங்கள் பற்றியும் விளக்கவே இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துவார். (இதற்குமேல் சீரியசாக எழுதினால் மண்டைகாயும்).
ஆனால் இப்போது ஜெசிலா எழுதும் 'அ'விற்கும் நான் எழுதும் 'அ'விற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறதா என்ன? எல்லாமே யூனிகோட் அ. ஃபாண்டும் வித்தியாசம் கிடையாது. அப்படியானால் வித்தியாசங்கள் தகர்ந்துவிட்டதா? அறிவுஜீவிகள்தான் பதில்சொல்ல வேண்டும்,.
நம்முடைய கையெழுத்தில் நம்முடைய படைப்புகளை இப்போதெல்லாம் எழுதிப்பார்க்க முடியவில்லை. அதிலும் வெள்ளைத்தாளில் கருப்புமையால் எழுதும் கையெழுத்து எனக்குப்பிடிக்கும். பொதுவாக எனக்குக் கருப்பு எப்போதும் பிடிக்கும். கருப்பு மை, கருப்புப் பேனா, கருப்புச்சட்டை, கருப்புப் பேண்ட், அப்புறம் கருத்தபெண்கள். கருத்தபெண்களுக்கு எப்போதும் கண்கள் அழகாக இருக்கும். ஒருவேளை முகம் முழுதும் கருப்பாக இருந்து கண்கள் மட்டும் தனித்து வெள்ளையாய் மிதப்பதாலோ என்னவோ? ஆனால் அந்தக் கண்கள் அழகு. அதுவும் கருத்தபெண்களின் கன்னங்கள் குண்டாய் இருந்தால் தேவதைகள்தான்.
நான் சொல்ல வந்ததே வேறு. இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் கடிதங்கள் எழுதுவதில்லை. எல்லாம் மெயில்கள், எஸ்.எம்.எஸ்கள்தான். குடுகுடுப்பைக்காரர்களைப் போலவே தபால்காரர்கள் என்னும் இனமும் அழிந்துவருகிறது. ஆனால் கடிதங்களைப் படிப்பது அலாதியான விஷயம்தான். நான் திண்டுக்கல்லில் படிக்கும்போது என் அப்பா சென்னையில் ஒரு தோல்ஷாப்பில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இன்லேண்ட் லெட்டரில் எங்கள் வீட்டில் இருக்கும் அய்ந்துபேருக்கும் கடிதம் எழுதுவார். திருக்குறளை எல்லாம் கோட் பண்ணி அறிவுரைகள். (இப்போது நினைதால் தமாசாகத்தானிருக்கிறது. எந்த பையனும் அப்பாவின் அறிவுரைகளைக் கேட்டு உருப்பட்டதுமில்லை. காலம்போனகடைசியில் தன்மகனுக்கு அட்வைஸ் பண்ணத்தவறியதுமில்லை). நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். அப்பா ஊரில் இருக்கிறார். ஆனால் இருவருக்கிமிடையில் எந்தக் கடிதங்களுமில்லை. போன்தான். அதுவும் வீட்டிருந்து அவர்களாகப் பண்ணினால்தான் உண்டு.
அதேபோல் மறக்கமுடியாதவை சுகுணாவின் கடிதங்கள். சுகுணா எனக்கு எழுதும் கடிதங்களில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் இருக்கும். நான் பிழைகளைத் திருத்தி அவளிடமே வாசித்துக்காண்பிப்பேன். இப்போதுதான் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது தெரிகிறது. நான் அன்பு செய்வதை விட்டுவிட்டு வாத்தியார் வேலைபார்த்திருக்கிறேன் என்பது இப்போதுதான் உறைக்கிறது.
********************
பள்ளியில் கொஞ்சம் நன்றாகப் படித்துத்தொலைதத்தால் சகமாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பாவம் வந்து சேரும். அதுவும் நான் படித்தது கார்ப்பரேசன் பள்ளியில். எங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஒருமுறை பிரிட்டிஷ் ராணுவத்திற்கும் பிரெஞ்சு ராணுவத்திற்குமிடையில் போர் நடக்கிறது என்பதை ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்.' ' என்று. போர் 'நடக்கிறதாம்'.
அதேபோல சத்தியமூர்த்தி அய்யரைப் பற்றித் தமிழில் ஒரு பாடம். அவர் ஆங்கிலேயர்களின் சட்டமன்றத்தில் சென்று ஆங்கிலத்திலேயே உரையாற்றியதைப் பற்றிப் பாடப்புத்தகத்தில் இப்படிக்குறிப்பிட்டிருப்பார்கள், 'சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன்பிடரியை உலுக்கியதுபோல'.
தேர்வில் உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக என்று இந்த வாக்கியத்தைக் கொடுத்துவிட்டர்கள். எழுதிய பையனுக்கோ சத்தியமூர்த்தியின் பெயரும் சிங்கமும் மட்டும்தான் ஞாபகம் இருந்தது. அவன் இப்படி எழுதியிருந்தான்,
" சத்தியமூர்த்தி அய்யர் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார், சிங்கம் சத்தியமூர்த்தியைப் பார்த்தது, சத்தியமூர்த்தி சிங்கத்தைப் பார்த்தார். சிங்கம் உறுமியது. மெதுவாக சிங்கத்தின் அருகில் சென்ற சத்தியமூர்த்தி அய்யர் அதன் பிடரியைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கினார்'.
************
அதேபோல எங்கள் கல்லூரியில் எதைப் படித்தால் வேலைகிடைக்காதோ அந்த கோர்ஸையெல்லாம் பேப்பராக வைத்திருப்பார்கள். அப்படி ஒரு பேப்பர்தான் பைன் ஆர்ட்ஸ் - நுண்கலைகள். நல்ல பாடம்தான். ஆனால் ஆசிரியர் அரைவை மிஷின்போல ஆங்கிலத்தில் ஒருமணி நேரம் பேச எங்களுக்கோ ஒரு இழவும் விளங்காது. நல்ல அறிவாளி மாணவர்களுக்குக் கூட அந்தப் பாடத்தில் அரியர் விழும். ஏன் விழுமென்றெல்லாம் தெரியாது. இதனால் பலர் கோல்டுமெடலைக் கூட இழந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர் விடைத்தாள்களைத் திருத்துவதைப் பற்றி இரண்டுவிதமான கதைகள் உலாவின. அவருக்குப் பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. பேப்பர், வெயிட்டாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்.
கதை1 : அவர் ஒரு பிரம்பை வைத்திருப்பார். பிறகு விடைத்தாள்களுக்கிடையில் செருகி தூக்கிப் பார்ப்பார். திருப்தியான வெயிட் இருந்தால் பாஸ்.
கதை 2 : எல்லா விடைத்தாள்களையும் மேஜையில் அடுக்கி பேனை புல்ஸ்பீடில் சுற்றவிடுவார். மேஜையிலிருந்து கீழே விழும் பேப்பர்கள் எல்லாம் பெயில். பல தடைகளைத் தாண்டி நிற்கும் பேப்பர்கள் மட்டும் பாஸ். தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்!
எங்களுக்கு இந்தியும் இரண்டு செமஸ்டர் இருந்தது. மேத்ஸ், பிஸிக்ஸ், ஹோம்சயன்ஸ், கெமிஸ்ட்ரி என்று நான்கு வகுப்புகளையும் ஒரு பெரிய ஹாலில் வைத்துத்தான் இந்தி ஜி பாடம் நடத்துவார். ஆனாலும் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் 'யக் கியா ஹை?' (இது என்ன?) மாதிரியான வார்த்தைகள்தான்.
ஒருமுறை நீண்டநாட்களாக இந்திவகுப்பிற்கே எட்டிப்பார்க்காத ஒரு மாணவன் வந்திருந்தான். அவனை எழுப்பி 'டீவார் பர் கியா ஹை?' என்று ஜி கேட்டார். அதாவது 'சுவரில் என்ன இருக்கிறது?' அதற்குச் சொல்லவேண்டிய பதில் 'டீவார் பர் கடி ஹை'. 'சுவரில் கடிகாரம் இருக்கிறது. அந்த மாணவனுக்கோ ஒரு இழவும் விளங்கவில்லை.
ஜி மீண்டும் கேட்டார், 'டீவார் பர் கியா ஹை', 'சுவரில் என்ன இருக்கிறது?' அந்தப் பையன் தயங்காமல் சொன்னான். 'சுண்ணாம்பு இருக்கிறது'.
************* உங்களைப் போன்ற இலக்கிவியாதிகளுக்கு சாரி, வாதிகளுக்கு சினிமாப்பாடல்கள் பிடிக்காது. ஆனால் எனக்கு ரொம்பப்பிடிக்கும். 'அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன், உதிர்ந்துபோன மலரின் வாசமா?' வரிகளில் கரைந்துபோகாமல் இருக்கமுடியவில்லை. நா.முத்துக்குமாரும் தாமரையும் நவீனகவிதையைத் திரைக்குக்கொண்டு வருகிறார்கள் என்பது என் கருத்து. எல்லோருக்கும் இருப்பதைப் போல எனக்கான பேவரைட் பாடல் ஜேசுதாசின் குரலில் 'பூவே செம்பூவே பொன்வாசம் வரும்'.
நீங்கள் எனக்குப் போன் செய்யும்போது என் காலர்டியூனில் ஒலிக்குமே, 'பருவமே புதியராகம் பாடு, இளமையின் பூந்தென்றல் ராகம்', அந்தப் பாடலும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல்
ஒருமுறை கல்லூரியில் நடனப்போட்டி அறிவித்திருந்தார்கள். நமக்கு நடனமெல்லாம் ஆடவராதுதான். ஆனால் அதற்காக அலும்பு பண்ணாமல் இருக்கமுடியுமா, என்ன? நானும் இன்னொரு நண்பரும் நடனம் ஆடத்தேர்ந்தெடுத்தது இந்த 'பருவமே புதியராகம் பாடு' பாடலைத்தான்.
உண்மையில் அந்தப் பாடலுக்கு நடனம் கிடையாது. 'நெஞ்சத்தைக்கிள்ளாதே' படத்தில் மோகனும் சுகாசினியும் ஜாகிங் போகும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல். நாங்கள் பாடலைப்போட்டுவிட்டு அது முடியும்வரை மேடையில் ஜாகிங் போய்க்கொண்டிருந்தோம். அந்த நடனத்திற்குப் பரிசு கிடைக்கவில்லை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா, என்ன?
******************
சினிமாப்பாடல்களில் உள்ள இலக்கணப்பிழை, காலப்பிழை, சூழல்பிழை ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு.
கண்ணதாசன் எவ்வளவு பெரிய கலைஞன். ஆனாலும் அவரது பாடல்களில் இரண்டு பிழைகளைப் பரவலாகச் சுட்டிக்காட்டுவார்கள்.
படம் ஆனந்தஜோதி என்று நினைக்கிறேன், 'மானல்லவோ கண்கள் தந்தது' பாடல். அதில் ஒருவரி வரும், 'பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது' என்று. ஆனால் பூக்கள் என்பது பன்மை. தந்தன என்றுதான் வரவேண்டும். மீட்டர் இடிக்கக்கூடாது என்பதற்காக தந்தது என்று எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.
அதேபோல அவரின் இன்னொருபாடல், 'கட்டோடு குழலாட ஆட...' அதில் ஒரு வரி. 'பச்சரிசிப் பல்லாட...ஆட'. கதாநாயகியோ பதினெட்டுவயது. பதினெட்டு வயதுப்பெண்னிற்கு எப்படிப் பல் ஆடும்? கிழவிக்குத்தான் ஆடும்.
எனக்குச் சமீபத்தில் இரண்டு பாடல்களில் தவறு இருப்பதாகத் தோன்றியது. அதில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது,
புலம்பெயரும் சூழலையும் போர்ச்சூழலையும் ஒலிக்கும் இரண்டு பாடல்கள், 'விடைகொடு எங்கள் நாடே, கடல்வாசல்தெளிக்கும் வீடே' (உண்மையில் வைரமுத்து கவிஞன்தான்). அதேபோல அரண்' படத்தில் வரும் 'யா அல்லா எங்கள் காஷ்மீர் அழகாய் மாறாதோ''..
அந்தப் பாடலில் ஒரு வரி இப்படி வரும், 'ஓ எங்கள் காஷ்மீரின் ரோஜாக்கள், விதவைகள் பார்த்து அழத்தானா?' ஆனால் உண்மையில் இந்துச்சமூகத்தில்தான் விதவைகள் பூச்சூடமாட்டார்கள். காஷ்மீரத்து முஸ்லீம்சமூகத்தில் அப்படியான பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் விதவைகள் பூக்களைப் பார்த்து அழவேண்டும்?
இன்னொரு பாடல், எம்டன்மகன் படத்தில் யுகபாரதி எழுதிய 'கோலிக்குண்டு கண்ணு, கோவைப்பழ உதடு...'. அதில் கதாநாயகன் நாயகியைப் பார்த்து பாடுகிறான், 'நீ எனக்குப் பிறந்தவ, ஏன் உசிரை வாங்குறே?' எனக்காகப் பிறந்தவள் என்றுதான் வரவேண்டும். எனக்குப் பிறந்தவள் என்றால் என்னுடைய மகள் என்று அர்த்தம்.
*****************
இப்போது தி.நகரிலிருந்து திருவான்மியூரெல்லாம் தாண்டி பாலவாக்கம் வந்துவிட்டோம். பரபரப்பான மக்கள் நிறைந்த பகுதியிலேயே வசித்துவந்து இந்த பகுதியில் வசிப்பது போரடிக்கிறது. கடல் இருக்கிறது அவ்வளவுதான். அப்புறம் எங்கள் பகுதிமுழுக்க ஏகப்பட்ட ஸ்பீடுபிரேக்கர்கள். ஸ்பீடுபிரேக்கர்கள் என்றால் மலைக்கோட்டைகளைக் கட்டி அதில் தார்பூசி வைத்திருக்கிறார்கள்.
ஏன் இத்தனை ஸ்பீடுபிரேக்கர்கள்? ஒருவேளை வண்டியில் வரும் காதலர்களின் வசதிக்காக இருக்கலாம். எப்போதாவது கடற்கரைக்குப் போனால் காதலர்கள் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்பி வெறுப்பேற்றுகிறார்கள். ஆனால் எப்போதும் ஏதேனும் நம்மைப்போலவே தனிமைப்பட்டுப்போன விடுபட்ட செருப்புகளைக் கடற்கரையில் கண்டுபிடிக்கலாம்.
என் அப்பா வேறு அடிக்கடி போன்செய்து, 'வீட்டை மாற்று, சுனாமி வரப்போகிறது' என்று கவலைப்படுகிறார். அவர் அந்தக் காலத்து ஆள். எனக்கோ சுனாமி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வராது என்றுதான் தோன்றுகிறது. சுனாமி வந்தபோது தமிழ்நட்டுக் கவிஞர்கள் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமா என்ன? குமுதத்திலும் விகடனிலும் போட்டோ போட்டு 'இயற்கைத்தாயே ஏனிந்த வஞ்சனை' 'தாயே குழந்தைகளைக் கொல்லலாமா' என்றெல்லாம் எழுதித் தள்ளிவிட்டார்கள். அதையெல்லாம் படித்த சுனாமி மீண்டும் வருமா என்ன? அதற்குத் தெரியாதா என்ன, மீண்டும் வந்தால் கவிஞர்கள் கவிதை எழுதி இம்சைபண்ண ஆரம்பித்துவிடுவார்கள் என்று.
ஆனால் ஒருவேளை சுனாமி வருவது உறுதியாகத் தெரிந்தால் அந்த நாளில் நாம் கடற்கரையில் வலைப்பதிவாளர் சந்திப்பை வைத்துக்கொள்வோம். அப்போதும் நம்முடைய கவிஞர்கள் சுனாமிக் கவிதைகளை விட்டுவிடுவோமா, என்ன? அப்படி எழுதினால் எப்படித்தான் இருக்கும்?
அய்யனார்
சுனாமியின் இசை
நான் கவிதை எழுதப்போகிறேன்சுனாமியே எட்டிநில்கடலின் குரல் கேட்கிறதா?போடா போடா புண்ணாக்குஒரு கவிஞனின் மடியில்கடல் சுருளும்போடாத தப்புக்கணக்குகாற்றைக் கிழித்து கவிதைகள் உருவாகும்.தொன்மங்களின் ஞாபகத்தில்கானகத்திலிருந்து புலி வரும்பலகிறுக்கு உனக்கு இருக்கு ஒன்றாய்ப் பத்தாய் நூறாய்க்கவிதைகளும் அலைகளும்நம்மைத் தழுவுகின்றன இப்ப என்னாதான் மனக்கணக்கு?
தமிழ்நதி
கடல்கரைந்தது
தீபாகுறிதவறாமல் பலூன்சுடக்கற்றுக்கொள். அது சில அய்ம்பதுரூபாய்களைச் சம்பாதிக்க உதவும்.அம்மாஎன் பால்யத்தின் ஞாபகத்தில் இன்று ஒருமுறை மட்டும் உடைக்கிறேனேமாங்காய் உள்ள இந்த பிளாஸ்டிக் பேப்பரை.
காயத்ரி]நெய்தல்திணை
கடற்கரையில் மொய்க்கும் ஈ உன்னையே ஞாபகப்படுத்துகிறது. உன்னை நினைக்கும்போதெல்லாம்மீன்கவுச்சி அடிக்கிறது.நாளையாவது நீ வருவாயாசுண்டல்வாங்கித்தர.
சுகுணாதிவாகர்
நிவேதனாவிற்குக் குட்நைட்
இப்போதெல்லாம் நிவேதனா இரவுகளில் கூடகுட்நைட் சொல்வதில்லை.ஆனால் அதிசயமாக மதியவெயிலில்கடற்கரையில் இருக்கும்போதுதூங்கப்போகிறேன் குட்நைட் என்கிறாள்.ஆனால் சுனாமி என்னைஅடித்துப்போகிறது. இன்றிரவு எனக்குப் பேட்நைட்நிவேதனாவிற்கோ குட்நைட்.
அப்புறமென்ன, ரோஸ்லீன் இன்று இரவு பார்ட்டிக்கு அழைத்திருந்ததாகச் சொல்லியிருந்தீர்கள். ஆனால் அளவாய்க்குடியுங்கள். உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் சேவை நாசமாய்ப்போன நாட்டிற்குத் தேவைதானே? எனவே குறைவாய்த் தண்ணியடியுங்கள், அதிகமாய்ச் சரக்கடியுங்கள். அப்புறமாய் அரட்டையடிப்போம்.
சுகுணாதிவாகர்.

ஒரு புரட்சிகர திராவிடச் சந்திப்பு

எச்சரிக்கை : இது செந்தழல் ரவிக்கு நேற்று இரவு வந்த கனவு. அடுத்தவர் அந்தரங்களைப் படிக்கக்கூடாது என்னும் நாகரீகம் உள்ளவர்கள் வேறு பக்கங்களுக்குச் சென்றுவிடலாம்.
( ஒரு காரில் வரவணையான் (எ) செந்தில், லக்கிலுக், பொட்டிக்கடை சத்யா ஆகியோர் டீக்கடை முன் இறங்குகிறார்கள்)
லக்கி : என்ன வரவணை, அசுரனைச் சந்திக்கப்போலாம்னு சொல்லிட்டு பெரியார்திடல் போகாமல் டீக்கடைக்கு வந்திருக்கீங்க?
வரவணை : ஓ, நீங்க ஆசியர் அய்யாவைச் சொல்றீங்களா? இப்ப நாம உண்மையான அசுரனைச் சந்திக்கப்போகிறோம்.
லக்கி : உண்மையான அசுரனா? அப்ப ஆசிரியர் போலியா?
வரவணை : எப்பய்யா நீ இந்த போலிப் பஞ்சாயத்திலிருந்து வரப்போறே? உன்னோட தாவு தீருது.
லக்கி : இந்த டயலாக்கை நான்தானே சொல்லணும்.
வரவணை : சரி, நீயே சொல்லித்தொலை. இப்ப நாம பதிவர் ம.க.இ.க அசுரனைச் சந்திக்கப்போகிறோம்.
(டீக்கடை வாசலில் அசுரன் அனைவரையும் செவ்வணக்கம் தெரிவித்து வரவேற்கிறார். டீக்கடைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக...)
லக்கி : தோழர், புரட்சி எப்ப வரும்?
அசுரன் : எப்ப வரும், எப்படி வரும்ன்னெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்திற்குக் கண்டிப்பா வரும்.
வரவணை : ஏன் நீங்க மட்டும் தனியாக வந்திருக்கீங்க? தோழர்கள் பாவெல், தியாகு இவங்கல்லாம் வரலையா?
அசுரன் : சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வரும்.
வரவணை : அப்ப கூட்டமா வந்திருக்கிற எங்களைப் பன்னிங்கிறீங்களா? (டென்சனாகிறார்)
லக்கி : வரவணை, கூல். போனவாரம்தான் தோழர் அசுரன் 'நான் சிகப்பு மனிதன்' படம் பார்த்திருக்கிறார். அதனால் ரஜினி மேல கொஞ்சம் கிரேசா இருக்கிறார். இது ஒரு பிரச்சினையா, நீங்க சொல்லுங்க தோழர், புரட்சி எப்ப வரும்?
அசுரன் : வரும், வரும், இன்னும் கொஞ்ச சேரத்தில டீ வரும் அதை முதல்ல சாப்பிடுவோம்.
(டீ வருகிறது. டீ சாப்பிடும்போதே...)
லக்கி : தோழர், தமிழ்நாட்டிற்கு எப்ப புரட்சி வரும்?
அசுரன் : ஓ நீங்க தமிழ்த்தேசியப்புரட்சியைக் கேக்கிறீங்களா?.....................................................
லக்கி : தாவுதீருது, டவுசர் கிழியுது. ஒண்ணும் விளங்கலை. சரி, இந்தியா, தமிழ்நாடெல்லாம் பெரிய விஷயம்.. மடிப்பாக்கம் மூன்றாவது குறுக்குத்தெருவுக்கு புரட்சி எப்ப வரும்?
அசுரன் : (குழப்பத்துடன்) அங்க என்ன இருக்குது?
லக்கி : எங்க வீடு.
அசுரன் : (கோபத்துடன்) இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா? புரட்சி என்ன கேஸ்கனெக்சனா, கேபிள் கனெக்சனா, உங்கவீட்டுக்கு வர? விட்டா எங்க கிச்சனுக்கு எப்ப புரட்சி வரும்ன்னு கேப்பீங்க போல...
லக்கி : சும்மா மழுப்பாதீங்க தோழர், உலகத்துல முதன்முதல்ல கோவை சாய்பாபா காலனியில்தான் புரட்சி வரும்ன்னு மார்க்சே எழுதிருக்கிறாராம்ல. நம்ம ஓசை செல்லா நேற்றுத்தான் 'நக்சல்களுக்கு நச்சுன்னு அஞ்சு கேள்விகள்ன்னு பதிவு போட்டிருந்தாரே?
அசுரன் : சாய்பாபா காலனியில புரட்சியா? (குழம்பிப்போகிறார்). மார்க்ஸ் எழுதியிருக்கிறாரா, எந்த மார்க்ஸ், அ.மார்க்சா?
வரவணை : அவர் சாய்பாபா காலனின்னு எழுதமாட்டாரே, காந்திபுரத்திலதானே புரட்சிவரும்ன்னு எழுதுவார்?
அசுரன் : சரியாச் சொன்னீங்க தோழர். நம்ம தோழர் பாவெல்கூட பதிவு போட்டிருந்தாரே, அவர் அ.மார்க்ஸ் அல்ல, அ.காந்தின்னு.
வரவணை : வந்ததிலேயிருந்து ரொம்ப சீரியசா பேசிட்டோம். சரக்கடிப்போமா தோழர், உங்களுக்கு வோட்கா ஓகேவா? காசு பத்தலைன்னா கவலைப்படவேண்டாம், ஓகை நடராஜனுக்குப் போன்பண்ணினா வந்திருவாரு.
அசுரன் : தோழர், நான் குடிப்பதில்லை, மக்களை நேசிப்பவன் தனிப்பட்ட போதைகளில் மூழ்கிக்கிடக்கலாமா? நாம் குடித்துவிட்டு மக்களிடம் போகமுடியுமா தோழர், மகிழ்ச்சி என்பது போராட்டம், போதையில்லை.லக்கி : அப்ப புரட்சி வந்தா டாஸ்மார்க்கெல்லாம் மூடிடுவீங்களா தோழர்?
வரவணை : இந்தாள் டார்ச்சர் தாங்கமுடியலையே!
அசுரன் : இந்த மாதிரிக் குடித்துக் கூத்தடிப்பதற்குத்தான் உங்கள் பின்நவீனத்துவ நாதாறி நண்பர் வெளியே மிதக்கும் அய்யா இருக்கிறாரே, அவரைக் கூப்பிட வேண்டியதுதானே!
வரவணை : கூப்பிட்டேனே, காலையிலே 7.30க்குப் போன் பண்ணினா நிவேதனா குட்நைட் சொல்லலைன்னு புலம்புறார். 7.30க்கு எப்படிய்யா குட்நைட் சொல்லுவாங்கன்னு சொன்னாலும் கேக்கமாட்டேங்கிறார். அவர் கொஞ்சகாலமா என்னோடு பேசுவதில்லை தோழர். என்னோடு மட்டுமில்லை, மனுசஜீவராசிகளோடேயே பேசுறதில்லை. தயாள், நிவேதனா, சௌகத்ன்னு அமானுஷ்யங்களோடேயே பேசிக்கிட்டிருக்கிறாரு, கிட்டத்தட்ட ஆவி அமுதா மாதிரி ஆயிட்டார்.
அசுரன் : நானும் கவனித்தேன். பின்நவீனத்துவம் மாதிரியான கழிசடைச் சீரழிவுத்தத்துவம் தனிநபர்வாதத்திற்குத்தான் கொண்டுபோகும். அமைப்பாக்காது. அவர் சமீபமா அரசியல் கவிதையே எழுதலை பார்த்தீங்களா, நேற்று என்னடான்னா குஞ்சம்மா குச்சி ஐஸ் வாங்கித்தரலைன்னு வருத்தப்பட்டுக் கவிதை எழுதிவச்சிருக்காரு. அவர் அய்யனார் மாதிரியான நவீன இலக்கிய வியாதிகளோடு சேர்ந்து 'கலை கலைக்காக'ன்னும் சொன்னாலும் சொல்லுவாரு. (சற்று உரக்க) கலை கலைக்காக அல்ல (அல்ல, அல்ல என்று டீக்கடைச்சுவர்களில் எதிரொலிக்கிறது. டீக்கடைக்காரர் ஜெர்க் ஆகிறார். அசுரனோ இன்னும் உரக்க) கலை மக்களுக்காக.
(அதுவரை பேசாமல் இருந்த பொட்டிக்கடை சத்யா ஆர்வமாக..) கலைன்னா யாரு கலைச்செல்வியா?
( அசுரன் டென்சனாகிறார். ஆனால் அப்போது புதிதாக டீக்கடைக்குள் நுழைந்த கருப்புச்சட்டை போட்ட நபர் அசுரனிடம் கைகுலுக்கிவிட்டு அவர் பக்கத்தில் அமர்கிறார். அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்புகிறது.)
வரவணை : யார் இவர்?
அசுரன் : இவர்தான் ...மாமா.
வரவணை : மாமா,,,வா? தோழர் நீங்கள் உங்கள் புத்தியைக் காட்டிவிட்டீர்களே, ஒரு திராவிடக் குலக்கொழுந்தை அவமானப்படுத்திவிட்டீர்களே, கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.
பொட்டிக்கடை : என்னது இது, கோத்ரேஜ் பூட்டு விளம்பரமா?
வரவணை : இனத்துரோகி, இது நமது ஆசிரியர் அய்யா அடிக்கடி சொல்வது. எனக்குத் தெரியும் தோழர். நீங்கள் சந்தேகத்துக்குரிய பார்ப்பனத்தலைமை... (சொல்லிக்கொண்டிருக்கும்போதே வரவணையின் செல்போன் ஒலிக்கிறது) பார்த்தீங்களா, பார்ப்பனத்தலைமைன்னு சொன்னவுடனே உங்கள் தோழர்கள் போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. (ஆனால் அதற்குள் செல் ஒரு ரிங்கோடு கட்டாகிவிடுகிறது.) மிஸ்ட்கால். இந்த மிஸ்ட்காலுக்குப் போன் பண்ணி நான் மிரட்டலை வாங்கணுமா? இது உங்களுக்கே ஓவராத் தெரியலை?
அசுரன் : இல்லை தோழர் வந்து...
லக்கிலுக் : (ஆவேசமாக) இருந்தாலும் தமிழர்தலைவர் மானமிகு அய்யாவை நீங்க அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. வீரமணி அய்யா நல்லவர்.
அசுரன் : அப்படியா?
லக்கி : தினமலர் ரமேஷ் சார், ரொம்ப நல்லவர்
அசுரன் : அப்ப சங்கராச்சாரியாரும் நல்லவரா? அப்ப யார்தான் கெட்டவர்?
லக்கி : டோண்டுராகவன்
வரவணை : அதை விடுங்க, சந்தேகத்துக்குரிய... (மீண்டும் போன் அடிக்கிறது), வார்த்தையையே முடிக்கலை, போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க பார்த்தீங்களா, (எதிர்முனையில் இருப்பதோ பாலபாரதி)
வரவணை : (மிகவும் பவ்யமாக) வணக்கம் தோழர்.
பாலபாரதி : ஹாஹாஹா, இன்னும் உனக்கு பீதி தெளியலையா? நான்தான் பாலபாரதி பேசறேன்.
வரவணை ((தனக்குள்)இந்தாள் வேறயா...) சொல்லுங்க.
பாலா : புதுசா அரைவிளையாட்டுனு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன். கடைசியா நடந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில குஷ்பு போட்ட ஜாக்கெட் கலர் என்னான்னு உங்களுக்குக் கேள்வி கேட்டிருக்கேன். நான் கேள்வி கேட்ட அரைமணி நேரத்தில நீங்கள் பதில் பதிவு போடணும். அப்புறம் நீங்க லக்கிலுக்கிட்ட மொக்கையா ஏதாவது கேள்வி கேட்கணும். லக்கிலுக் அசுரன்கிட்ட 'கிழக்குப்பதிப்பகத்தில் எப்பப் புரட்சி வரும்?'ன்னு கேட்பார். அசுரன் நம்ம சுகுணாகிட்ட ஏதாச்சும் கேள்விகேட்பார். அந்தாள் வழக்கம்போல பதில் சொல்லமாட்டான், அப்புறம் விளையாட்டு முடிஞ்சுடும்.
வரவணை : என்னாது அரைமணி நேரத்தில பதிவு போடணுமா? ஏங்க நீங்கதான் கிழக்குப் பதிப்பகத்துல சும்மா இருக்கீங்க, போரடிச்சுதுன்னா எவனுக்காவது போன் பண்ணி மொக்கை போடறீங்க, இல்லன்னா உண்மைத்தமிழன் பேரில அஞ்சு கமெண்ட் போடுறீங்க. அதுவுமில்லாம லேப்டாப் வச்சிருக்கீங்க. இங்க நான் பிரௌசிங் சென்டர்தான் போகணும். போனமாசம் பண்ணின பிரௌசிங்கிற்கே காசெல்லாம் தீர்ந்து இந்தமாசம் வீட்டிலிருந்து கலர்டிவியை வித்துக் காசு அனுப்பியிருக்காங்க.
பாலா : அப்ப என்ன பண்ணலாம்? பேசாம ஒருமணி நேரமா எக்ஸ்டெண்ட் பண்ணிடலாமா? என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்?
வரவணை : ம்..? போனைக் கட்பண்ணலாம். (கட்செய்கிறார்)
அசுரன் : நான்தான் சொன்னேனே எங்கள் தோழர்கள் ராணுவக்கட்டுப்பாடு உள்ளவங்கன்னு.
( இப்போது மீண்டும் வரவணையின் போன் ஒலிக்கிறது)
வரவணை : பார்த்தீங்களா, இப்ப சந்தேகமே இல்லாமல் உங்க தோழர்கள்தான், (ஆனால் எதிர்முனையிலோ முத்துதமிழினி)
முத்துதமிழினி : பிரீயாத்தான் இருக்கேன். எதுவும் பிரச்சினை இருக்கா?
வரவணை : நீங்க எப்ப ரிட்டயர்ட் ஆவீங்க?
முத்து : ஏன்?
வரவணை : இல்ல, தலைவர்கிட்ட சொல்லி விசாரணைக் கமிஷனுக்கு தலைவராப் போடச்சொல்லலாம்னுதான். எப்ப பார்த்தாலும் என்ன பிரச்சினை, என்ன பிரச்சினைன்னு. இப்பதான் மாமா போன் பண்ணி கழுத்தறுத்தார்.
முத்து : நீங்களும் அசுரன் பக்கத்துல இருக்கிறதனால ஆசிரியரை அப்படியே சொல்ல ஆரம்பிச்சீட்டீங்களா? ஆசிரியர் உங்களுக்குப் போன் பண்ணியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாரா, அவ்வளவு நெருக்கமா, போனமுறை திடலுக்குப் போட்டோ எடுக்கப் போனபோதுதான் என்னைக் கூட்டிட்டுப் போகலை (குரல் தழுதழுக்கிறது)
வரவணை : ஒண்ணும் கவலைப்படாதீங்க. திருப்பிப் பிரச்சினை வரும்போலிருக்கு. கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன். கண்ணைத் துடைச்சுக்கங்க.
முத்து : ஆமா, ஆசிரியர் பிளாக்கெல்லாம் ரெகுலரா படிக்கிறதாச் சொன்னீங்களே?
வரவணை : ஆமாமா, போன வாரம்கூட செந்தழல்ரவி பதிவுக்கு மூணு அனானி கமெண்ட் போட்டிருந்தாரு. ஆனா இப்ப என்கிட்ட போன்ல பேசினது ஆசிரியர் இல்லை. பாலபாரதி மாம்ஸ்.
முத்து : என்ன பாலபாரதி மாமாவா? வரவணை நீங்க கொள்கைக்கு நேர்மையா இல்ல. நீங்கதானே சொன்னீங்க இயக்கத்தில் முக்கியப்பொறுப்பில இருக்கிறவங்களை மாமான்னு சொல்லக்கூடாதுன்னு. அமுக, பாகச மாதிரி இயக்கங்களில முக்கியப்பொறுப்பில இருக்கிற பாலாவை மாமான்னு எப்படிச் சொல்லலாம்? இதை உடனே கண்டிச்சு பதிவு எழுதணுமே, நான் பிளாக்கில எழுதறது கிடையாது. சரி சுகுணாதிவாகர் பாஸ்வேர்ட் தெரியும் எனக்கு. அதிலபோய் 'பிறப்பால் மாமாவா?' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டிடறேன். அப்படியே ம.க.இ.க.காரங்க எல்லோரையும் ஓவராத்திட்டுறாங்க, அவங்க முதல்ல திமுக பாமக் அரசியலைப் பண்ணட்டும்னு சொல்லி எழுதறேன். அசுரனை லக்கிகிட்ட சொல்லி திமுகவிலே சேர்த்துடலாம், பாவெலை குழலிகிட்ட சொல்லி பாமகவில சேர்த்துடலாம். ஆமாம், பிரீயாத்தான் இருக்கேன், பிளாக்கர்மீட்டிங் ஏதாவது இருக்கா?
(அதற்குள் கிராஸ்டாக்கில் கிராஸாகும் பாலபாரதி) இருக்கு இருக்கு 32ந்தேதி மதியம் நடேசன்பார்க்கில.
முத்து : எத்தனை மணிக்கு?
பாலா : 4 மணிக்கு
முத்து : அப்ப 3 மணிக்கே பார்க் வாசல்ல வந்துடறேன்.
(வரவணை கடுப்புடன் போனைக் கட்பண்ணுகிறார். திரும்பிப்பார்த்தால் லக்கிலுக், டீக்கடைக்காரரிடம், 'வீரமணி அய்யா நல்லவர், ரமேஷ் சார் ரொம்ப நல்லவர், ருக்மாங்கதன் அய்யர் நல்லவரா, கெட்டவரா' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார், 'பக்கத்துல தினகரன் ஆபிஸ் எங்க இருக்கு?' என்றும் விசாரிக்கிறார். இவ்வளவு களேபரங்களுக்கும் நடுவில் பொட்டிக்கடை சத்யா மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரிடமோ சிரித்துச் சிரித்து கடலைபோட்டுக்கொண்டிருக்கிறார்.)
பொட்டிக்கடை : நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க, நேற்று நீங்க போட்டிருந்த கிரீன் டி-ஷர்ட் சூப்பர், உங்க சிரிப்பு எனக்குப் பிடிக்கும், நான் என்ன பண்றேன்னா கேட்டீங்க, இப்ப உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன், ஹாஹாஹா, என்ன இந்த மாதிரி ஜோக்கை நீங்க எங்கேயும் கேட்டதில்லையா? ஹாஹாஹா
வரவணை : (கடுப்புடன்) யோவ், இங்க என்னா பஞ்சாயத்து ஓடிக்கிட்டிருக்கு, நீ என்னடான்னா கடலை போட்டுகிட்டு இருக்கே?
பொட்டி : வரவணை, எனக்கும் பிரச்சினை மேல அக்கறை இருக்கு. பிரச்சினையைத் தீர்க்கத்தான் போன்ல பேசிக்கிட்டிருக்கேன்,
வரவணை : யார்கூட பேசறே?
பொட்டிக்கடை : மாமாகூட ச்சே, மகாலெட்சுமிகூட
வரவணை : எந்த மகாலெட்சுமி?
பொட்டி : சன்மியூசிக் மகாலெட்சுமி.
வரவணை : அவங்ககிட்ட என்ன பேசறே?
பொட்டி : இங்க ஒரே பிரச்சினையா இருக்கு, எல்லாரையும் கூல் பண்ண 'அழகிய அசுரா' பாட்டு பாடச்சொல்லிக் கேட்கறேன், (போனில்) என்னாது, பழைய பாட்டுதான் போடுவீங்களா, அப்ப அந்த 'மாமா, மாமா' பாட்டைப் போட்டுடுங்க.
அசுரன் (தாங்கமுடியாமல்) தோழர்............ (என்று அலறுகிறார்). ஒருநிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க. இவர் உண்மையிலேயே எனக்கு மாமாதான். எங்க அக்காவீட்டுக்காரர். பேரு திராவிடமாமன், ச்சே, திராவிடமாறன். தஞ்சாவூர்ல திகவில கோட்டச்செயலாளரா இருக்காரு.
வரவணை : இதை நீங்க முதல்லேயே சொல்லியிருக்கலாமே தோழர்.
அசுரன் : நீங்க எங்க சொல்லவிட்டீங்க? பீஸ்கட்டணும், கலெக்ஷன் காசு என்னாச்சுன்னு கௌதம் போன்பண்ணினாக்கூட 'ம.க.'இ..ககாரங்க போன்பண்ணி மிரட்டுறாங்க'ன்னு பீதியைக் கிளப்புனீங்க. பொதுவாக நக்சலைட்டுகளிடம் அரசாங்கம் ஆயுதங்களைத்தான் ஒப்படைக்கச்சொல்லும். ஆனா, எங்களைச் செல்போன், லேண்ட்லைன் இதெல்லாம் ஒப்படைக்கச் சொல்லி அரசு உத்தரவு போடப்போறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு.
வரவணை: சாரி தோழர், மன்னிச்சுக்கங்க தோழர்.
லக்கி : என்னையும் மன்னிச்சுக்கங்க தோழர், ஆமா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவேயில்லையே, மடிப்பாக்கம் மூன்றாவது குறுக்குத்தெருவுக்கு புரட்சி எப்ப வரும்?
அசுரன் : (கடுப்புடன்) அங்க ஒரு எதிர்ப்புரட்சிகரச்சக்தி ஒண்ணு இருக்கு. அதைப் போட்டுத்தள்ளிட்டா புரட்சி வந்துடும்.
( இப்போது லக்கிலுக்கின் முகத்தில் பயரேகை)
-------------------------------------------------------------------
செந்தழல் ரவி வியர்த்து, விறுவிறுத்து கனவுகலைந்து எழுகிறார், 'ச்சே, தூங்குறதுக்கு முன்னாடி இந்த வீணாப்போன சுகுணாதிவாகர் கவிதையைப் படிக்காமல் தூங்கணும். ஒண்ணு கனவுல யாராவது கெட்டவார்த்தை சொல்லித்திட்டுறாங்க, இல்லன்னா யாராவது யாரையாவது கொலை செய்யப்போறேன்னு மிரட்டுறாங்க" என்றபடியே பாட்டிலிலிருந்து தண்ணீரை மடக் மடக்கென்று குடிக்கிறார். 'தூக்கத்துலகூட இந்தப் பன்னாடைங்க நம்மளை விடமாட்டேங்கிறாங்களே' என்று புலம்பியவர், படுத்ததும் கண்களை மூடித்தன் அருகிலிருந்த ரிமோட்டை எடுத்து பட்டனை அழுத்துகிறார்.
கனவு மாறுகிறது.. ரவியின் முகத்தில் இனம் தெரியாத பரவசம்.
இப்போது கனவில் ரவி வெள்ளை விக் வைத்து ஆளே பயங்கர சிகப்பாக மாறிவிட பக்கத்தில் கொரியபிகர் தன் உதடுகளைக் குவிக்கிறது. ரவி ஆட ஆரம்பிக்கிறார்,
"ஒருகூடை சன்லைட்...ஒருகூடை மூன்லைட்...'

அன்பு நண்பர்களுக்கு....
கடந்த இரண்டரை வருடங்களாக 'மிதக்கும்வெளி' என்னும் வலைப்பக்கத்தின் வழியாக உங்களோடு உரையாடிவந்தேன். ஆனால் சமீபகாலமாக அப்பக்கத்தில் பதிவு எதையும் பதிவிட முடியவில்லை. பிளாக்கர்.கொம் என்னுடைய பிளாக்கை 'ஸ்பாம் பிளாக்' என்று அடையாளம் கண்டிருப்பதால் பின்னூட்டங்களை வெளியிட முடிகிறதேயல்லாது பதிவிட முடியவில்லை. இதன் பின்னணியிலிருப்பது பார்ப்பனச்சதியா, ஏகாதிபத்தியச்சதியா, பில்லிசூனியமா என்று தெரியவில்லை ((-. எனவே கீழ்க்கண்ட மூன்று வலைப்பக்கங்களின் வழியாக உங்களைச் சந்திக்கலாமென்றிருக்கிறேன்.
உரையாடுவோம்.


பிரியங்களுடன்...சுகுணாதிவாகர்.