Wednesday, April 23, 2008

கல்யாணத்துக்கு வாங்க!

அன்புநண்பர்களுக்கு

சென்னை மாநகரத்திலே, அதுவும் இந்தக் கொடூர வெயிலிலே தேடித்தேடி நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைப்பது இயலாத காரியம். எனவே வரமுடிந்த நண்பர்கள் ஞாயிறு (27.04.2008) மாலை 4.00 மணிக்கு நடேசன் பூங்கா வந்தால் சந்தித்து உரையாடி அழைப்பிதழைத் தர வசதியாக இருக்கும். வரவியலாத நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று அவசியம் திருமணத்திற்கு வரவும்.

நன்றி
பிரியங்களுடன்
சுகுணாதிவாகர்

Sunday, April 20, 2008

அலை - ஒரு ஆ-கதை முயற்சி

விசித்திரன் ஒரு கதை எழுதுவதென்று தீர்மானித்தான். டத்தோ நாகராஜ் என்னும் சகபதிவர் அ கவிதை, அ கதை என்றெல்லாம் எழுதிப் பிரபலமானதைத் தொடர்ந்தே அவன் இந்த முடிவிற்கு வந்தான். ஆனால் அ கதை எழுதினால் அது வழக்கம்போல இருக்கும் என்பதால் ஆ கதை எழுதித் தமிழை வளர்த்தே தீருவதென்று கொள்கைமுடிவெடுத்தான். ஆனால் அவனுக்கோ கவிதை எழுத வருமேயொழிய கதை எழுத வராது. (அதுவும்கூடப் பொய், யோனி, முலை, மூத்திரம், குசு, குண்டி, குறி என்றெல்லாம் கெட்டவார்த்தைகளை எழுதி நிரப்பி அவை பின்நவீனத்துவக்கவிதைகள் என்று ஊரை ஏமாற்றி வந்த ஒண்ணாம்நம்பர் கிரிமினல் அவன்.)

இதற்குமுன்பு ஒருமுறை இப்படித்தான் கதை எழுதுவதென்று முடிவெடுத்து நூலகமொன்றிற்குச் சென்று மாலை ஆறுமணிவரை தமிழ்க்கதைப்புத்தகங்களையெல்லாம் புரட்டிப் புரட்டிப் படித்து பிறகு இருட்டத்தொடங்கியபோது வீடுநோக்கி நடந்தான். ஆனால் வரும்வழியில் இயற்கை உபாதை அவனை நெட்டித்தள்ளியதால் ஒரு அரசுக்கட்டணக்கழிப்பறைகுள் நுழைந்து மலங்கழித்துக்கொண்டே தான் ஆற்றப்போகும் இலக்கியச்சேவையை எண்ணிப்பூரித்தபடி ஒரு சிகரெட்டையும் முடித்திருந்தான். ஆனால் கழிப்பறைக் காவலாளியோ இவன் உள்ளேயிருப்பது தெரியாமல் கழிப்பறையைப் பூட்டிவிட்டுப்போய்விட்டார். ஒரு இரவுமுழுக்கக் கழிப்பறையிலேயே கழித்ததையே ஒரு சிறுகதையாக எழுதலாம். ஆனால் ஏனோ அவனுக்கு அதில் விருப்பமில்லை.

(கதையின் தொடர்ச்சியை thuroki.blogspot.comல் காண்க)

தொடர்ச்சி -2

விசித்திரன் அய்ந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஊதுபத்திக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஈரோடு வரை சென்று பணம் வசூல் செய்து பேருந்தில் மதுரை திரும்பிக்கொண்டிருந்தான். அவன் பையில் 60 லட்சம் பணமிருந்தது. அடிக்கடி பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அப்படித்தான் ஒருமுறை அவன் கரூர் சென்று பஸ்ஸில் திரும்பிய நேரம்தான் ஊத்தாங்கரையில் நக்சலைட்டுகளைப் போலிஸ் கைது செய்திருந்த நேரம். பைபாஸில் வண்டியை நிறுத்திப் போலிஸ் பேருந்திற்குள் சோதனை போட்டுக்கொண்டிருந்தது. பையில் 45 லட்சம் இருந்தது மட்டுமில்லாது (எல்லாம் கணக்கில் வராத பணம்) பயணத்தின்போது படிப்பதற்காகச் சில தடை செய்யப்பட்ட மா.லெ புத்தகங்களையும் வைத்திருந்தான். ஒவ்வொரு சீட்டாக சோதனை தொடர இரைப்பைகளுக்குள் நடுக்கம். ஆனால் நல்லவேளையாக இவன் பையைச் சோதனை போடவில்லை. அப்போது சோதனை போடவந்தவர்களில் ஒரு போலிஸ்காரி ஒல்லியாகப் பார்ப்பதற்கு அழகாயிருந்தாள். (இப்போதுதான் பெண் போலிஸ்கள் பார்ப்பதற்கு அழகாயிருக்கிறாள்கள். முன்பெல்லாம் பார்க்கச் சகிக்காது பீரோ போல இருப்பார்கள்). அவள் இவன் தெருவிற்கே குடிவந்தாள் பிறகு. பெயர் சோபனா. சோபனாவையும் வடக்குக் காவல்நிலையம் உதவி ஆய்வாளர் மோகன்ராஜையும் மிக மிக அந்தரங்கமாக பார்க்க நேரிட்டது.

(கதையின் தொடர்ச்சியை thuroki.blogspot.comல் காண்க)

தொடர்ச்சி -4

இந்தக் கதையை எழுதலாமா என்று அதிசயாவிடம் கேட்டபோதும் சிரித்தாள். (எப்படி எல்லாவற்றுக்கும் சிரிக்க முடிகிறது?). ஆக மொத்தம் நீ வாசகனையும் ஏமாற்றிவிட்டாய், விசித்திரனையும் பாஸ்கரையும் ஏமாற்றிக் கடைசிவரை ஹோமோசெக்சே கதையில் வராமல் பின்நவீனத்துவத்திற்கும் துரோகம் செய்துவிட்டாய்" என்றாள். விசித்திரன் ஒரு பின்நவீனத்துவவாதியா என்பதில் அவ்னுக்கே குழப்பமிருந்தது. இதை நன்கு பி.ந கற்ற எழுத்தாளர் மகோன்னதனிடம் கேட்டபோதோ, 'பின்நவீனச்சூழல்தான் உண்டு, பின்நவீனவாதி என்று யாருமில்லை' என்றார். விசித்திரனுக்கோ இன்னும் குழப்பம் அதிகரித்தது. தான் யார், இடதுசாரியா, பின்நவீனவாதியா, இல்லை மகோன்னதன் வாதத்தின்படி பார்த்தால் பின்நவீனச்சூழல்வாதியா, ஒரு இழவும் விளங்கவில்லை. ஆனால் இந்தக் குழப்பம் விசித்திரனுக்கு மட்டும் என்றில்லை, அவன் நன்கறிந்த பல பி.ந அறிஞர்களுக்குமிருந்தது. postmodern condition என்றால் என்ன? போதையின் முதல் ரவுண்டில் அறிஞர்கள் எல்லாம் பி.ந ஆதரவாளர்களாக இருப்பார்கள். இரண்டாம் ரவுண்டில் கொஞ்சம் பெரியார், மார்க்சியம், சிறுபான்மை, தலித் ஆதரவாளர்களாக இருப்பார்கள். மூன்றாம் ரவுண்டில் சினிமாப்பாட்டுப் பாடி இளையராஜா ஆதரவாளர்களாயிருப்பார்கள், நான்காம் ரவுண்டில் ஸ்ரேயாவின் முலையைச் சிலாகித்து ஸ்ரேயா ஆதரவாளர்களாயிருப்பார்கள், அய்ந்தாம் ரவுண்டில் தனிப்பட்ட பிரச்சினைகள், இலக்கியச் சர்ச்சைகள் வெடிக்க எல்லோரையும் திட்டித் 'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு நல்லவன் நான்மட்டுமே' என்று தன்முனைப்புப்போதைக்காலகட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களாக மட்டுமேயிருப்பார்கள். ஒருவேளை இதுதான் - p.m condition ஆ? ஆனால் சமீபத்தில் அவன் எழுதும் வலையுலகில் நடந்த ஒரு சம்பவம் அவன் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது. நறுமுகை என்னும் வலைத்திரட்டியில்தான் அவனின் வலைப்பூ சேர்க்கப்பட்டிருந்தது. அந்த திரட்டி போனவாரம் சிங்கப்பூரிலிருந்து எழுதும் ஒரு பெண்பதிவாளரை நீக்கியிருந்தது. அதற்குச் சொன்ன காரணம் அவர் யோனி என்கிற வார்த்தையை அதிகம் உபயோகித்திருந்தார் என்பது. ஆனால் எதிர்க்கலாச்சாரக்காவலர்களான பி.ந பதிவர்கள் இதுவிசயத்தில் கூட்டுமவுனத்தை அனுஷ்டித்தார்கள். பெண்பதிவர் நீக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் அவர் தலைப்புகளை அதிரடியாய் வைத்து வாசகர்களை ஈர்த்து விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்பது. ஆனால் பித்தன் என்னும் பி.ந பதிவர் ஒருவரின் சமீபத்தியப் பதிவுகளின் தலைப்புகள் 'டெல்யூசும் முட்டைக்குழம்பும்', 'கவுண்டமணியும் காப்ரியேல் கார்சியா மார்க்யூசும்' 'வென்சலாயியுயாவது வெங்காயமாவது' இது விளம்பரமில்லையா என்று தெரியவில்லை. இந்தக் கூத்துக்களைப் பார்த்து மனமுடைந்த விசித்திரன், மறுபக்கம் தனக்குச் சுட்டுப்போட்டாலும் கதை எழுதவராது, கெட்டவார்த்தைக்கவிதைகள் மற்றும் வம்பளப்புக் கட்டுரைகளே சாத்தியம் என்று இறுதியாய்த் தீர்மானித்து 'பின்நவீனத்துவமாவது கூதியாவது' என்று ஒரு கட்டுரை எழுதத்தீர்மானித்தான். ஆனால் இப்போது அவன்முன்ன்னால் இருந்த கேள்விகளெல்லாம் இரண்டுதான் நறும்புகை வலைத்திரட்டியின் தணிக்கை யோனிக்கு மட்டும்தானா கூதிக்கும்சேர்த்தா, பின்நவீனச்சூழல்வாதிகளுக்கு யோனி பிடிக்குமா, கூதி பிடிக்குமா என்பதுதான்.

Wednesday, April 2, 2008

முற்றுப்புள்ளி

இப்பலாம் வலைல புத்திசாலிங்க அதிகமாயிட்டாங்க. இது நாள் வரைக்கும், நீ சம்பாதிச்சி வச்சிருக்க பேர(?) இப்படி அரவேக்காட்டுத்தனமா எழுதி கெடுத்துக்காதே, ஏதோ என்னால முடிஞ்ச அறிவுரை...அப்புறம் ஒன் இஷ்டம்.

- அய்யனார்

நண்பர்களுக்கு...

ஏப்ரல் 2008 வந்தால் நான் எழுததொடங்கி நான்காண்டுகள் முடியப்போகின்றன. என் எழுத்துக்கள் மீது பலருக்கும் பலவிமர்சனங்கள் இருந்தபோதும் என் எழுத்துநடை பலரை ஈர்த்திருப்பதால்தான் ஓரளவிற்குக் கணிசமான வாசகர்வட்டம் உருவாகியுள்ளது. அரசியல், இலக்கியம், சினிமா என நான் நம்பும் மற்றும் எனக்குத் தெரிந்த விசயங்களையே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்நேரத்தில் வளர்மதியுடன் நடந்த சண்டையும் அதன் விளைவாய் எழுதப்பட்ட அக்கப்போர்ப் பதிவுகளையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் இத்தகைய பதிவுகளை வலையுலகைச் சேர்ந்த நண்பர்கள் மட்டுமில்லாது வெளியுலகில் அரசியல் மற்றும் இலக்கியவெளியில் இயங்கும் நண்பர்களும் விரும்பவில்லை.

மேலும் என் பக்கத்திற்கு வரும் பெரும்பாலான வாசகர்கள் அரசியல், இலக்கியம் ஆகியவை தொடர்பாக படிக்கவே வருகிறார்களேயன்றி இந்த அக்கப்போர்களைப் படிக்கவல்ல. வம்புச்சண்டைகளைப் படிப்பதற்கென்றே அலைகிற சிறுபான்மை கூட்டத்திற்கு வேண்டுமானால் இப்பதிவுகள் சுவாரசியமாக இருக்கும். அவர்கள்கூட இதைவிடச் சுவாரசியமான சண்டைகள் நடந்தால் அங்கு இடம்பெயர்ந்துவிடுவார்கள் என்று உணர்கிறேன்.

மேலும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் இத்தகைய அக்கப்போர்கள் இதுவரை நான் செய்துவந்த வேலைகளின் மதிப்பை சீகுலைப்பதாக நான் கருதுவதாலும் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இனி இவ்விசயம் குறித்து நான் எழுதப்போவதில்லை. இப்பிரச்சினையில் வளர்மதி, வரவணையான், ஜ்யோராம்சுந்தர் ஆகியோர் பாதிக்கப்பட்டதற்காக வருந்துகிறேன். நான் நேசிக்கும் எல்லா தத்துவம் மற்றும் அரசியலின் அடிப்படை அன்பு மற்றும் அன்பே என்று நான் நம்புவதால் வளர்மதியோ அல்லது வேறு நண்பர்களோ என் எழுத்துக்களால் தனிப்பட்டமுறையில் மனம்புண்பட்டிருந்தால் அதற்காக என்னை மன்னிக்கவேண்டுகிறேன்.

நன்றி.
பிரியங்களுடன்..
சுகுணாதிவாகர்.