Tuesday, October 2, 2007

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...
















அடிக்கடி வலைப்பதிவாளர்களிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு, 'வரமாத்தேன் போ' என்று சிலர் கிளம்புவதால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே பிறப்பெடுத்த 'திராவிடக் கல்கி', நாட்டாமை முத்துதமிழினி பதிவாளர்களுக்கிடையே உரையாடலோ, விவாதமோ என்ன கண்றாவியோ ஏற்பாடுசெய்கிறார். ஆனால் பதிவர்கூட்டங்களுக்கு வராததுதான் அவரது லேட்டஸ்ட் டிரெண்ட் என்பதால் அவர் மட்டும் ஆஜராகவில்லை.....

(வலைப்பதிவாளர்கள் தங்களுக்குள் சீரியசாகப் பேசிக்கொண்டிருக்கும்போது தலைவிரிகோலமாக மூர்த்தி ஓடிவருகிறார்...)

மூர்த்தி : கிறிஸ்துவன் எப்ப திராவிடன் ஆனான்?

செந்தழல் ரவி ( டென்சனாகிறார்) : டேய் மலேசிய நாதாறி!

சுகுணா : கூல்டவுன் ரவி, கருத்துக்களை நிதானமாக எதிர்கொள்ளவேண்டும்.

குழலி : இப்படித்தான் சொல்வீங்க! ரெண்டுவாரத்திற்கு முன்னால நீங்கமட்டும் மெகாசீரியல் கணக்கா அழுவாச்சிகாவியம் பாடலியா? ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரேக்கிங்பாயிண்ட், கண்மணி அன்போடு காதலன் நான் ....

சுகுணா : ஹலோ, நிறுத்துங்க குழலி, கேப் கிடைச்சா போதுமே குணா, குருதிப்புனல்ன்னு கமல் டயலாக்கோடு வந்திடுவீங்கல்லே! சரி, அதைவிடுங்க, தோழர் மூர்த்தி, உங்க கேள்வியே அபத்தமானது. தோழர் பெரியாரின் விளிப்பில் பார்ப்பனரல்லாத கிறித்துவர், முஸ்லீம்கள் என அனைத்து இந்துவற்ற சமயத்தாரும் அடங்குவர். வித்தியாசங்களை அங்கீகரித்து பன்மையில் ஒருமையைக் காணும் ஒரு அரசியல் நிலைப்பாடு..

ரவி : இதுக்கு மூர்த்தி திட்டினதே பரவாயில்லப்பா, இந்தாள் பேசறது ஒரு இழவும் விளங்கமாட்டேங்குது...

தோழர்கள் : சுகுணா, பெரியாரைத் தோழர்ன்னு சொன்ன அதேவாயால மூர்த்தியையும் எப்படித் தோழர்ன்னு சொல்றீங்க? இதை நாங்கள் கண்டிக்கிறோம்..

அய்யனார் : பெருவெளியில் கிளைத்த பன்மைச்சமவெளியில் எல்லாவற்ரையும் அங்கீகரிக்கும் மனோநிலையும் புனிதங்களின் மீதான கட்டவிழ்ப்புமே தோழர் என்று சுகுணாவைச் சொல்லவைத்தது..

சுகுணா : யோவ், நீ பேசறது எனக்கே புரியலை, போத்ரியா கொட்டேசன்ல்லாம் யூஸ் பண்றியே, காபிரைட் வாங்கிட்டியா?

அய்யனார் : இல்லீங்ண்ணா...

சுகுணா : அப்ப கொஞ்சம் அமைதியா இரு...

மாலன் : எக்ஸ்கியூஸ் மீ, பிரபாகரனுக்கு வயிற்றுவலின்னு தினமலரில் ஒரு கட்டுரை வந்திருக்கு. அதை நான் டிரான்ஸ்லேட் பண்ணிருக்கேன். வாசிச்சுக் காட்டவா?

ரவி : தினமலர்ல தமிழ்ல்லதானே வரும்? அப்புறம் ஏன் டிரான்ஸ்லேட் பண்ணினீங்க?

மாலன் : எனக்குத் தெரியும், அடுத்து இந்துராம் மகள் ஏன் அமெரிக்காவில் படிக்கிறாங்கன்னுதானே கேக்கப்போறீங்க?

ரவி : அவங்க கொரியாவிலையா படிக்கிறங்க?

மாலன் : இல்லையே,

ரவி : அப்புறம் ஏன் நான் கேக்கப்போறேன்?

அய்யனார் : மாலனின் இந்த விஷமத்தை ஏன் செல்லா கண்டிக்கலை?

செல்லா : மாலனுக்கு மஞ்சக்காமாலை

அய்யனார் : என்னது?

செல்லா : ஆமா, பிரபாகரனுக்கு வயிற்றுவலி, மாலனுக்கு மஞ்சக்காமாலை..

அய்யனார் : மாலனை என்ன செய்யலாம்? மாலனை என்ன செய்யலாம்?

செல்லா : நான் நமீதாவையே என்ன செய்யலாம்ன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்தாள் வேற. எனக்கு அழுகை அழுகையா வருது... கண்ணீர் வருது சாமி, நான் போறேன், ஒரு நிமிசம் என் கேமிராவை எடுத்துட்டுப்போறேன்...

ரவி : ஹலோ, அது என்னோட கேமிரா...

(கேட்காமல் செல்லா போய்விடுகிறார்.. இரண்டுநிமிடம் கழித்து உள்ளே வந்து தமிழச்சியிடம் போய்...) நான் போறேன், நான் போறேன்..

தமிழச்சி : வருவியா, வரமாட்டியா? வரலைன்னா உன் பேச்சு கா...

செல்லா : வந்துட்டே....ன். தோழி, அடுத்தமுறையாவது புது ஆயுதத்தோடு வா! சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்கவேணும் பேரப்புள்ள, தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதானே கருத்து!

சுகுணா : நல்ல கருத்தா இருக்கே, யார் சொன்னது?

செல்லா : வேற யாரு, போக்கிரி விஜய்தான். அடியும் உதையும் கலந்துவச்சு இடுப்பு எலும்பை ஒடிச்சுவச்சா போக்கிரி பொங்கல், கராத்தே அடியைக் கலந்துவச்சா தமிழச்சி பொங்கல், தமிழச்சி பொங்கல்...( குதித்துக் குதித்துக் குத்தாட்டம் போடுகிறார்)எக்ஸ்கியூஸ்மீ தமிழச்சி, புதுசா எடுத்த போட்டோ இருக்கா?

சுகுணா : செல்லா, நீங்க செய்றது நியாயமே கிடையாது. நாங்க எவ்வளவு சீரியசா பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லாம இருக்கீங்க.. தோழர் தமிழச்சி நீங்களும் இதுக்கு உடந்தையா?

தமிழச்சி : நோ நோ, என்க்கு டமில் கொஞ்சும் கொஞ்சும்தான் தெரியும். வருவியா வரமாட்டியால்லாம் டமிலா? நான் கராத்தெஎ, பிளாக்பெல்ட் இத்ல்லாம்தான் டமில்ன்னு நினைச்சேன்..

பொட்டிக்கடை சத்யா : தமிழே தெரியாத நீங்க எப்படி தமிழச்சின்னு பேர்வைக்கலாம்? இது டமிழனுக்கு, சாரி மாமூ, தமிழனுக்கே அவமானம்.

மூர்த்தி : தமிழன் எப்ப திராவிடன் ஆனான் ?

(கூட்டத்திலிருந்த பலர் டென்சனாகின்றனர்)

சுகுணா : தோழர், தமிழர்களுக்கும் திராவிடர்களுக்குமுள்ள வித்தியஅசத்தைப் பெரியார் 1927ல்.......

மூர்த்தி : பெரியார் எப்ப திராவிடன் ஆனார்?

(அதற்கப்புறம் முழுடென்சனான திராவிட ஆப்பாயில் குஞ்சுகளின் கொலைவெறிக்கூத்தை நட்சத்திர வாரம் கொண்டாடும் 'சும்மா டைம்பாஸ் மச்சி' கருந்திரையில் காண்க)

14 comments:

முரளிகண்ணன் said...

innum konjam veendum

மாசிலா said...

இதைத்தான் 'சும்மா டைம்பாஸ் மச்சி' பதிவுன்னு சொல்றதா?

;-D

kiddy ppl said...

எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நம்ப தோழர் மூர்த்தி எப்படி உங்களுக்கெல்லாம் எதிரியானார்?

குழலி / Kuzhali said...

யோவ் கேப் உடாம கலாய்க்கிறிங்களே....

Osai Chella said...

அண்ணி நமீதாவை வம்பிக்கிழுக்கும் சுகுணாவின் கொடும்பாவி கொழுத்த கலகக் கண்மணிகளை இரு க'ரம்' கூப்பி அளைக்கிளோம்..

இப்பழிக்கு
அண்ணி நமீழா பாசரை
அண்ணன் ஓசையார் பதிவெறிக்கலகம்
கோழம்பாளம்

சுகுணாதிவாகர் said...

நண்பர்கள் மூர்த்தி, குழலி, ரவி ஆகியோர்க்கு... பழைய விசயத்தைக் கிளறுவதாய் நினைக்காமல் புண்பட்ட நெஞ்சை மொக்கைபோட்டு ஆற்று என்னும் புதுமொழிக்கிணங்க ரிலாக்ஸ்..

செல்லா , ஒருவரி டயலாக் கூட தரலையேன்னு வருத்தத்தைப் போக்க ஒரு பாட்டு, குத்து டான்ஸ் கூட கொடுத்தாச்சு, ( என்னாது, ஹலோ 45 வயசில டூயட் வேணுமா, இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவரு)

முதல்முறையாய்க் கலாய்க்கப்பட்ட தோழர். தமிழச்சி டென்சனாக மாட்டார்களென்று நம்புகிறேன்.

kiddy ppl said...

என்ன முதல் முதலாய் கலாய்கிறீங்களா? அப்படியானால் செல்லா கலாக்கவில்லையா? தாவுக்கும் -
கலாய்தலுக்கும் -
விளக்கம் தர முடியுமா?

Anonymous said...

செல்லா உங்கள் வைசு
45 தா .... யப்பா .

லக்கிலுக் said...

நல்ல வேளை. நம்ம டவுசர கிழிக்கலை. நன்றி!

Anonymous said...

யாரெல்லாம் திராவிடன்? சுகுணா பேட்டி
வலைப்பதிவில் ஜாதியே இல்லை என்று சொல்லிவிட்டு பிறகு என் "பிள்ளைமார் ஜாதிய" வளர்மதி சொல்லிப்புட்டான் என்று எல்கேஜி பையன்போல ஒப்பாரி வைத்த சுகுணா திவாகருடன் டவுசர்... இல்ல இல்ல ஜட்டி கிழியும் ஒரு பேட்டி.

வலைப்பதிவின் திராவிட, ஆரிய, அடிவருடி, கூட்டிக்கொடுக்கி, பன்னாடை, நாதாரிகளின் கூட்டம் சென்னை கிழக்கு கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஒத்தை ரூபாய் கட்டண கக்கூஸில் நடந்தது.

கூட்டத்தில் முன்னுக்கு நின்று அனனவரையும் வரவேற்றவர் உண்மைத் தமிழன் அவர்கள்.

உண்மை: அனைவரும் வருக, தமிழ் பால் பருக!

அதியமான்: வந்துட்டேன் நண்பா.

உண்மை: என்ன சொன்னீங்க?

அதியமான்: (காதுக்குள்: போச்சுடா, செவிட்டு கம்மனாட்டிங்களை எல்லாம் வெச்சு மாரடிக்க வேண்டி இருக்கு.) ஒன்னுமில்லீங்க்னா... உங்களை வலையுலக வாரியார்னு சொன்னேங்கனா.

அனைவரும் அமர்கின்றனர் டாய்லெட்டில் அடுத்தடுத்து வரிசையாக... கூட்டத்தில் ஒரே பரபரப்பு.. என்னவென்று விசாரித்ததில் வலையுலக நோண்டுல்கர் தன்னுடைய விமானத்தில் வந்து இறங்கி அதனை பார்க் பன்ன இடமில்லாமல் அலைவதாக சொன்னார்கள். ஒருவழியாக ஓட்டி வந்தவரையே திரும்ப எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டு கூட்டத்தில் வந்து அமர்ந்தார். அவருக்கு பக்கத்தில் யார் அமர்வது என்பதில் உண்மைத் தமிழனுக்கும் KRஅதியமானுக்கும் பெரிய அடிபுடி சண்டை. ஒருவழியாக மற்றவர்கள் அவர்களை பிரித்து நோண்டுவின் இடப்புறம் ஒருத்தனையும் வலப்புறம் ஒருத்தனையும் அமர வைத்தார்கள்.

பேச்சை சட்னி ஆரம்பித்தார்...

சட்னி: வணக்கம் சுகுணா. இது திராவிட, ஆரிய, அடிவருடி இன்னபிற பதிவாளர்களின் கூட்டம். யாரெல்லாம் திராவிடன், யாரெல்லாம் ஆரியன் என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். முதலில் உங்களப் பற்றிச் சொல்லிவிட்டு ஆரம்பியுங்களேன்.

சுகுணா: என் பெயர் சிவக்குமார்.

(சட்னி உடனே)

சட்னி: அப்போ சுகுணா திவாகர்ங்கிறது?

சுகுணா: எவனுக்கு தெரியும்? சும்மா கவர்ச்சியா இருக்கனும்கறதுக்காக சுகுணாதிவாகர்னு பொம்பளை பேரை போட்டுக்கினேன். இப்பதான் நாலஞ்சு பேர் சாட் பன்றான், மெயில் பன்றான். போனடிக்கிறான். சிவக்குமார்னு இருந்தா ஒரு பயலும் சட்டை பன்ன மாட்றான்ல! அதான்.. அதோட நான் மட்டுமா இப்படி பேரு வெச்சிருக்கேன்? வளர்மதி கூடத்தான் வெச்சிருக்கான். ஏன் நீங்க அவனைக் கேக்கலே?

சட்னி: கவர்ச்சியா? அதுக்கு ஒக்கா தங்கச்சி போட்டோவை மாட்ட வேண்டியதுதானே? சரி சரி, வளர்மதியவும் கேட்போம். நீங்க தொடருங்க.

சுகுணா: செந்தழல்ரவியை திராவிடனான்னு அல்லாரும் கேட்கிறாங்க. அவனோட அப்பா அந்தோணிசாமி. கன்வர்ட்டடா மதம் மாறிய கிறித்துவன். ஆனால் அதுக்கு முன்பு என்ன ஜாதியா இருந்தாங்க? மீன்பிடிக்கிற ஜாதி. அந்த ஜாதி திராவிடனா இல்லையா?

சட்னி: நீங்க சொல்றது சரிதான், ஆனா செந்தழல்ரவி வாங்கி ஊத்துன தண்ணிக்குத்தான் நீங்க அவனுக்காக கத்துறதா ஒரே பரபரப்பா பேசிக்கிறாங்களே?

சுகுணா: இது எல்லாம் சுத்த பொய்யி. இது அந்த வளர்மதி பன்னின வேலையாதான் இருக்கும்! கிறித்துவன் எல்லாருமே இந்துவா இருந்து பிறகு காசுக்காக மதம் மாறியவந்தான். எனவே அவங்க பூர்வீகம் திராவிடம்தான். அதேபோல எல்லா முஸ்லிமும் திராவிடர்தான். ஏன்னா முஸ்லிம் மன்னர் ஆட்சிக்காலத்தில் திராவிட தமிழ் மக்களை கட்டாயப்படுத்தி மதம் மாத்தினாங்க. எனவே இப்போ உள்ளா எந்த முஸ்லிமும் உண்மையான முஸ்லிம் இல்லை. அவங்க எல்லாம் கன்வர்ட்டடு பசங்கதான். எனவே எல்லா முஸ்லிமும் திராவிடந்தான்.

சட்னி: வுட்டா எல்லா சீக்கியனும், எல்லா புத்தனும்னு சொல்லிக்கிட்டே வந்து எல்லா அமெரிக்கனும் திராவிடன்னு சொல்லுவே... நீ போயி உக்காரு.. ஏய் ஒதியமான்... சாரி அதியமான் நீ வா, வந்து பேசு....

அதியமான்:From : K.R.Athiyaman, Chennai - 96

To : Thriru.Ki.Veeramani Ayya Avargal, Chennai

Anbulla Ayya,

The creamy layer (that is, those who are upper middle class and above) among BC/SC/ST communities continue to enjoy the benifits of reservation unashamedly.
(i hail from such a family).

We propose that economic criteria should also be included as an additional qualification for being eligible for reservation benefits. Families whose annual income is above say, Rs.1,80,000/- and where the parents are well educated may be deemed as FCs. And many schools, where annual fees are above Rs.60,000 may be classified as FC schools.

Reservation was meant to be a short term issue and never a permenent institution as
it has become now. And there should be a standing committe consisting of eminent
jurists, educationalists and honest people to perodically evaluate the effects/abuse
of reservation benefits. The whole process should a dynamic one, not a static one, which is now a vote bank issue and nutured by vested interests. And there should be a maximum limit for resrvation (and not the present >70%), which should be gradually brought down to zero.

And in promotion among govt staff only seniority, merit and efficency should be the criteria. Only one generation of any family must be eligible for the benefits. Subsequent generation must be deemed FCs.

Unfair reservation benefits to numerous well off students has created resentment and heart burn among FCs and many fair minded people. The caste divisions has become more rigid and divisive (esp in govt offices).

I am sure Thandai Periyar and Ambedhkar would endorse my above views if they are alive today. They were basicaly honest in all issues.

DK should have functioned as a bridge between BCs and SCs (esp in rural areas) and established peace committes for stopping caste clashes. The aliented SCs have formed many organisations of their own to fight for their rights, instead of joinning DK. Blaming brahmins alone for all the ills of the society will not solve any thing.

Thanks & Regards

K.R.Athiyaman
Chennai

சட்னி: ஏண்டா பரதேசி, நீ சொல்லும் இதுக்கும் திராவிட ஆரியனுக்கும் என்னடா சம்பந்தம்?

அதியமான்: intha points ellam capitalsim naaduhalil (EU, Finland) ullana. USSR azhinthathu. ungallukku naan kooruvathu puriyavillai. bus problemukku enna solution solhirrerhal? nadai murai saathiyam enna?

சட்னி: மவனே, இதுக்குமேல பேசுனே செருப்பாலயே அடிப்பேன்..

அதியமான்: நானும் திராவிடந்தான், எங்க அப்பாவும் திராவிடன் அதுவும் கரூர் கவுண்டன் தெரியுமா? எங்க தாத்தா முரசொலிதான் படிச்சாரு. எங்க அப்பா வாலிபரா இருந்தப்போகூட கருணாநிதிதான் முதலமைச்சர் தெரியுமா? எங்க அம்மாகூட...

சட்னி: டேய் வேனாம்டா ஆரிய அடிவருடி..

அதியமான்: அப்படிப்பட்ட என்னையா பார்த்து அடிவருடிங்கிறே? நான் பார்ப்பன ஆதரவா பேசினா உடனே அடிவருடியா? உண்மையா சொல்ல விடமாட்டியா?

உண்மை தமிழன்: அதியமான், ஏன் இந்த சில்லறற பசங்ககிட்ட பேசுறீங்க. வாங்க நாம ரெண்டு பேரும் பழையபடி நோண்டுக்கு கொட்டை தாங்குவோம்.

K.R.அதியமான் said...

Suguna,

this annonymous pervert is polli murthy. i cannot understand how you or Chella can ever call his nanbar or thozhar.

he will never ever change or repent for his perverted ways.

and Chella is impractical in
forgiving him so easily. he
needs continious attack to keep
him at bay. the threat at Arakkonam needs to be revived and
kept like a "thaliakku mele kathi"

and why don't you read thru all comments before allowing them ?

And To Polli pervert Murthy :

i am now totally immune to all your
perverted ways and got used to you.
nothing is going to make any difference. and you can rot in your
self-made hell forever with your
perversions and illusions..

சுகுணாதிவாகர் said...

நண்பர் அதியமான்,

எனக்கும் அதை எழுதியது மூர்த்திதான் என்று நன்றாகவே தெரியும். ஒரு சாதாரணக்கிண்டலைக் கூட பக்குவமாக எடுத்துக்கொள்ளமுடியாமல் தன் வக்கிரத்தைக் கொட்டுவதன் மூலம் மூர்த்தி திருந்துவதற்கு வாய்ப்பேயில்லாத மனிதர் என்பதை நிரூபித்திருக்கிறார். இங்கு மட்டுமல்ல, தமிழச்சியின் பதிவு போன்ற பல இடங்களிலும் இதே போக்கையே மூர்த்தி தொடர்கிறார். அவர் தனது போலி வலைத்தளங்களை அழித்தபோதிலும் தன்னைச் சுயவிசாரணை செய்யத்தயாரில்லை. இதை அம்பலப்படுத்துவதற்காகத்தான் அதை வெளியிட்டேன். மற்றபடி நமக்குப் பிடிக்காது, அல்லது நம்மை அவருக்குப் பிடிக்காது என்பதற்காகவே ஒருவரை நண்பர் என்று அழைக்கக்கூடாது என்பதிலே எனக்கு உடன்பாடில்லை. நன்றி

மிதக்கும்வெளி said...

தமிழச்சி,

எனக்கு மூர்த்தி மட்டுமல்ல, யாரும் எதிரியில்லை. சில அரசியல் விமர்சனங்கள் இருக்கின்றன அவ்வளவே..

/தாவுக்கும் -
கலாய்தலுக்கும் -
விளக்கம் தர முடியுமா?
/

இது வேறயா? ((-

சுந்தர் / Sundar said...

ம்ம்ம் ... Truely Enjoyed .