Thursday, April 30, 2009

போடுங்கம்மா ஓட்டு!

’’ஈழத்தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் & திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டுமானால் ஜெயலலிதா கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்’’ என்கிற ‘தர்க்கபூர்வமான’ முடிவை முன்வைக்கும் மின்னஞ்சல்களால் அஞ்சல்பெட்டி நிரம்பி வழிகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்தவனில்லை என்றபோதிலும் ஒருமுறை கூட இரட்டை இலைக்கு வாக்களிக்காதவன் என்ற காரணத்தாலோ என்னவோ ஒரு மனத்தடை இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதிமுகவிற்கு வாக்களிப்பது என்பது ஒரு உலகமகா பாவச்செயல் அல்ல, ‘‘விடிவுமில்லே, முடிவுமில்லே’’ என்ற ஈழமக்களின் ஓலம் கேட்டு மனம் பிசைபவர்கள் இத்தகைய முடிவு எடுப்பதில் ஒன்றும் தவறில்லைதான் என்பது பகுத்தறிவிற்குத் தெரிந்தே இருக்கிறது.

கருணாநிதி தன் வாழ்நாளில் இந்தளவுக்கு அம்பலப்பட்டிருப்பதோ, அசிங்கப்பட்டிருப்பதோ இதற்கு முன்னும் நடந்ததில்லை. இதற்குப் பின்னும் நடக்கப்போவதில்லை. ஜெயலலிதாவை மட்டுமே பாசிஸ்ட் என்று சொல்லிப் பழகிய நம்மைக் கருணாநிதி அரசின் பாசிசத்தனமான ஒடுக்குமுறைகள் நிறையவே யோசிக்க வைத்திருக்கின்றன. ஈழப்பிரச்சினை குறித்து நோட்டீஸ் கொடுத்தவர்கள், ராயப்பேட்டையில் அதிமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பெரியார் தி.க தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ப.சிதம்பரத்திற்கு எதிராக சிவகங்கையில் தேர்தலில் நிற்கும் மாணவர்கள் துண்டுப்பிரச்சாரம் கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வேட்பு மனுத்தாக்கலின்போது, ‘ஸ்டாப் தி வார்’ பனியன் அணிந்து சென்றதைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டிருக்கிறார் கார்த்திக்சிதம்பரம். ஆக மொத்தம் அம்பலப்பட்ட பாசிஸ்டாகிய கருணாநிதியை எதிர்க்க, அறியப்பட்ட பாசிஸ்ட் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உந்தப்பட்டிருக்கிறார்கள்.

அப்பட்டமான உலகமயச் சார்பு எடுத்ததால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகள், தொகை தொகையாய் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ள அபாயம், பக்கத்து மாநிலமான கர்நாடகம் வரை வந்துவிட்ட இந்துத்துவப் பாசிசம் என பல பிரச்சினைகள் இருக்கும்போது, ஈழப்பிரச்சினை மட்டும்தான் இந்த தேர்தலின் மய்யப்பிரச்சினையா என்கிற கேள்வியைக் கூட ஒருபுறம் ஒத்திவைப்போம். ஆனால் ஈழப்பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு, சில எதார்த்த நிலைமைகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளோம்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் சென்னை மாதிரியான பெருநகரங்கள் மற்றும் நமது இணையத்தளங்களைத் தாண்டி, தமிழகத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் இலங்கைப்பிரச்சினை தேர்தலின் தீர்மானகரமான பிரச்சினையாக இல்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. உண்மையிலேயே இலங்கைப்பிரச்சினை, தேர்தலில் வாக்குகளை வாங்கித்தரும்,. அல்லது வாக்குகள் விழுவதைத் தடுக்கும் என்பதுதான் எதார்த்தமென்றால் காங்கிரஸ் கூட்டணியை உதறித் தள்ளிவிட்டுக் கருணாநிதியும் ஈழ ஆதரவுப் பஜனைகளில் கலந்துகொள்வார் என்பதுதான் உண்மை.

கருணாநிதியைச் சற்றுத்தள்ளி வைப்போம். தேர்தலுக்கு முன்பே ஈழப்பிரச்சினை குறித்துக் கதையாடிய சி.பி.அய், பா.ம.க, மதிமுக, வி.சி ஆகிய அமைப்புகள் கூட ஈழ ஆதரவை மய்யமாக வைத்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிட முன்வரவில்லை என்பதிலிருந்தே ஈழப்பிரச்சினைக்காக விழும் வாக்குகளின் சதவிகிதம் மிக மிகக் குறைவுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆகக்குறைந்தது ஈழப்பிரச்சினையை ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கூட மாற்ற இயலாத குற்றம் யாருடையது? முத்துக்குமாரின் மரணத்தின்பின் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சிகள் நாம் மறக்கக்கூடியவையல்ல. அத்தகைய எழுச்சிகளைத் தமிழகம் கண்டே நெடுநாட்களாகிவிட்டன. இனி காண்பதற்கான காலமும் அருகில் இல்லை. குறிப்பாக மாணவர்களும் வழக்கறஞர்களும் தமக்கான அடையாளங்களோடு இப்போராட்டங்களில் பங்குபற்றினர். இவ்விரு தரப்பினரின் போராட்ட உணர்வுகளைச் சிதறடித்து ஒடுக்குவதற்காக திமுக அரசு ‘சிறப்பாகவே’ திட்டம் தீட்டியது.

மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்காகக் கல்லூரிகளை இழுத்து மூடியது. வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்க உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போலீசை ஏவியது. ஆனால் இன்று ஈழத்தமிழருக்காய் வீராவேச வேசம் போடும் வீராதி வீரர்கள் வைகோ, நெடுமாறன், திருமா, ராமதாஸ் யாரும் கல்லூரிகள் மூடப்பட்டதையோ உயர்நீதிமன்றத் தாக்குதலை எதிர்த்தோ ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்கவோ போராட்டங்களை நிகழ்த்திக்காட்டவோ தயாராக இல்லை.

மாறாக கோபால கிருஷ்ண கோகலே வாரிசாக, தூதரகங்களுக்கு மனுப்போடுவது, மனிதச்சங்கிலிப் போராட்டம், மயிரு சங்கிலிப்போராட்டம் என்று மக்கள் எழுச்சிகளைக் காட்டிக்கொடுத்து போராட்டங்களை மொன்னையாக்கினார்கள். தங்களது அரசியல் நலன்களைத் தாண்டி மாணவர்களும் வழக்கறிஞர்களும் போராட்டச் சக்திகளாக உருமாறுகிறார்கள் என்பதைத் தாங்கமுடியாததும் தடுக்க முயன்றதுமே இந்த கருங்காலிகளின் சதிகளுக்குக் காரணம். தங்களின் அரசியல் கயவாளித்தனத்தைத் தாண்டி எப்போதுமே போராட்டங்கள் உருப்பெற்று விடக்கூடாது என்பதிலே நெடுமாறன் தொடங்கி வைகோ வரை விழிப்போடு இருந்தார்கள். மாணவர் மற்றும் வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் கருணாநிதி அரசுக்கு ஒருபங்கு இருக்கிறது என்றால் இத்தகைய கருங்காலிகளுக்கு மறுபங்கு இருக்கிறது.

ஆனால் இத்தகைய சக்திகளை அம்பலப்படுத்தத் தொடங்கினாலே நமது சுடலைமாடன் மாதிரியான தோழர்கள், ‘‘நீங்கள் ஏன் கொளத்தூர்மணியை விமர்சிப்பதில்லை, நெடுமாறனை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கழுத்திலே துண்டு போடத்தவறுவதில்லை. கொளத்தூர்மணியும் பெரியார் தி.கவும் தமிழகம் முழுவதும் இரட்டைக்குவளைகள் அமுலில் உள்ள டீக்கடைகளைக் கணக்கெடுத்து அங்கெல்லாம் போய்க் கலகம் செய்கிற அதேவேளையில்தான் ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசுகிறார்கள். என்றைக்காவது நமது ‘தமிழர் தலைவர்’ நெடுமாறன் ஒடுக்கப்படுகிற தலித்துகளுக்காய் நின்றதுண்டா, தலித்தெல்லாம் தமிழனில்லையா?

ஆக இத்தகைய கேள்விகளை முன்வைத்தால் அடுத்து வைக்கிற பிலிம் ‘பிரியாரிட்டி பாலிடிக்ஸ்’. அட தமிழ்த்தேசியப் பாடுகளா, இதற்குத்தான் பிரியாரிட்டி, இதற்கு பிரியாரிட்டி இல்லை என்று தீர்மானிக்கிற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? என்றைக்காவது அதை எங்களுக்குத் தந்திருக்கிறீர்களா? தலித்தின் வாயில் பீ திணிக்கப்படுவது எல்லாம் உங்களுக்குப் பிரியாரிட்டி பிரச்சினைகளே இல்லையா, தாமிரபரணிப் படுகொலைகளோ மேலவளவு முருகேசன் கொலைகளோ என்றைக்காவது தேர்தல் பிரச்சினைகளாகப் பேசப்பட்டிருக்கிறதா?

இந்த லட்சணத்தில் ‘‘திருமாவளவனுக்கு சாதியவிடுதலை அளித்தது ஈழப்பிரச்சினைதான்’’ என்று அருள்வாக்கு அளிக்கிறார் தோழர்.ஆழியூரான். என்ன சாதிய விடுதலை கிடைத்துவிட்டது திருமாவிற்கு? திருமாவிற்கு வன்னியர்களும் கள்ளர்களும் லட்சக்கணக்கில் ஓட்டு போடத் தயாராகிவிட்டார்களா? ஈழப்பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த இந்த ஆறுமாத காலங்களில் செந்தட்டிப் பிரச்சினை, விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்பட்டில் சிவராத்திரியன்று கோயிலில் வழிபட்ட அருந்ததியர்கள் கட்டிவைத்து உதைக்கப்பட்டது, தஞ்சைப் பெரியகோயிலில் சுத்தம் செய்யப்போன தலித் மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து டீ குடித்ததற்காக ஒரு தலித் முதியவர் அடித்து உதைக்கப்பட்டது என பத்துக்கும் மேற்பட்ட தலித் எதிர்ப்புச் சம்பவங்கள் நடைபெற்றுத்தான் இருக்கின்றன. எனவே திருமாவளவன் சாதியத்தலைவர் என்னும் அடையாளத்திலிருந்து பொது அடையாளத்திற்குச் செல்வதற்குத்தான் ஈழப்பிரச்சினையும் தமிழ்த்தேசியமும் உதவியிருக்கிறது. அவர் ஒரு தலித் தலைவராக இருந்து தலித் பிரச்சினைகளைப் பேசுவதை ஆதிக்கச்சாதித் தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்களே தவிர தமிழ்த்தேசியம் பேசுவதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் தலித் பிரச்சினைகளைக் காட்டி ஈழத்தமிழர் துயரங்களைப் பின்னுக்குத் தள்ளுவதல்ல இப்பதிவின் நோக்கம். தேர்தல் என்பது ஒரு போராட்ட வழிமுறையாகக் கருதக்கூடியவர்கள் தங்களது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளாகப் பதிவு செய்வது என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆக மொத்தம் ஈழத்தமிழர் துயரங்களில் பங்கெடுத்துக்கொள்பவர்கள் முன் இரு வாய்ப்புகள்தான் முன்நிற்கின்றன, தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது. எதார்த்தத்தின் கொடூரம் இப்படியாய் இளிக்கிறது, ‘ஓட்டுப் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, ஓட்டுப் போடாமல் இருப்பதால் ஒரு மயிரும் ஆகப்போவதில்லை’.

11 comments:

அபி அப்பா said...

"வெறி"குட்!

பாரதி தம்பி said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஒருவர் மாத்திரம் ஓட்டுப் போடாமல் இருந்தால் ஒரு மயிரும்தான் ஆகாது... ஏனெனில் அந்த மயிரு பல மயிர்களை ஓட்டுப் போடாமல் வைக்க உழைக்க வேண்டும்...

அது சரி தேர்தல் அமைப்புள தீர்வத் தேடுனா என்ன கிடைக்கும்... ஈழம் கிடைக்குமா... இல்ல இரட்டைக் குவளை மாறுமா... இல்ல திருமா ஒரு பொதுமக்களின் தலைவரா மாறிடுவாரா..

ஏன் உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி தீர்வத் தேடுறீங்க•.. யதார்த்த்த்துல இருந்து பரிசீலிங்க•... பெதிக இரட்டைக் குவளைய ஒழிக்கப் போராடுது... அவங்க ஆதரிக்குற ஈழத்து புலிகள் ஆட்சிக்கு வந்தா தீண்டாமையை ஒழிப்போம் னு சொல்லி இருக்காங்களா....

இல்ல அவங்க ஆதரிக்குற ஜெயல்லிதா ஒருவேளை தலித் மக்கள் விடுதலைக்கும் போராடப் போறாரா என்ன•.. இல்ல காங்கிரச மட்டும் தோற்கடிச்சா ஈழம் கிடைச்சுடும் என்ற நினைப்புத்தான் சரியா... அவங்க ஆதரிக்குற சிபிஎம் ஒரு ஒன்றுபட்ட இலங்கையை ஆதரிப்பவர்கள்... எந்த முட்டுசந்தில பெதிக சினிமாக்காரங்க, நடுத்தர வர்க்க அறிவுஜீவிங்க, அந்த மாணவர்கள், தமிழினவாதிகள் நிக்கிறாங்கன்னு தெரியுதா..

இந்த தேர்தல் பாதை என்பது திருடர் பாதைதான்... உலகமயமாக்கலை பார்ப்பனியத்தை எதிர்த்து இவர்கள் முழுமையான த்த்துவம் எதுவும் இல்லாமல் போராட முடியாது... பெரியார் இவர்களது அன்றாட நிகழ்வுகளுக்கு சொர்க்கத்தில் இருந்து கொண்டு கோனார் நோட்ஸ் போட முடியாது...

இந்த தேர்தலை புறக்கணித்து தமிழக்தில் 0% மட்டுமே ஒட்டு பதிவானால் அது குறைந்தபட்சம் உலக அரங்கில் ஒரு செய்திஆக மாறி ஈழம் பற்றிய பொதுக் கருத்து என்று கூட சொல்ல வைக்கலாம்... மாறாக ஜெயா வன்றால் மறுநாளே கூட்டணியைக் கலைத்து தனது சொந்த செல்வாக்கால் வென்றாதாக சொல்வார் அவர்.. அப்படியும் மாறாத கொள்கை குன்றாக அவர் இருந்தால் பிரபாகரனை ஆதரிப்பவர்களுக்கு சங்கடமான ஒரு நிலை வரும்.. அதனை கற்பனை செய்யவே கூச்சமாகத்தான் இருக்கிறது..

கொஞ்சநாளைக்கு முன்னாடி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வைகோ பிரச்சார மேடையில் ஜெயா பேசும்போது கும்பிட்டபடியே நீண்ட நேரம் அவர் பேசி முடியும் வரை கும்பிட்டபடியே இருந்தார்... ஒரு வேளை தனி ஈழம் அதிமுக அமைத்துக் கொடுத்தால் வைகோ நாலு சீட்டுக்கே இவ்வளவு நேரம் நின்றார் எனில் பிரபாகரன் ஈழத்திற்காக எவ்வளவு நேரம் நிற்க வேண்டுமோ தெரியவில்லை...

பாரதி தம்பி said...

ஒரு சாதிக்கட்சித் தலைவர் என்ற அடையாளத்திலிருந்து பொது அடையாளத்தை சென்றடைய திருமாவளவனுக்கு ஈழப் பிரச்னை உதவியது. இதைத்தான் 'திருமாவளவனுக்கு சாதிய விடுதலை கொடுத்தது ஈழப் பிரச்னைதான்' என்று எழுதியிருந்தேன். ஆனால் அவர் அந்த ஈழப் பிரச்னையில் கூட நேர்மையில்லாமல்,நீர்த்துப்போய்விட்டதையும் என் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

உண்மையில் திருமாவளனின் நேரடி அரசியல் எதிரியாக டாக்டர் ராமதாஸ் இருந்திருக்க வேண்டும். அப்பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வன்னியர் இழைத்த கொடுமைகளுக்கு எதிராகத்தான் திருமாவளவனின் அரசியல் ஆரம்பமானது. அந்த அடக்குமுறைகள் எவையும் நின்றுவிடாத நிலையில் இப்போது மருத்துவர் மாலடிமையுடனேயே இணைந்துகொண்டுவிட்டார். அப்போதிலிருந்தே தலித் பிரச்னைகளைப் பேசுவது என்பதிலிருந்து விலக்கம் செய்துகொண்டுவிட்டார்.

இன்னொரு விஷயம்... ஈழப் பிரச்னைப்பற்றி கருத்து ரீதியான விவாதங்கள் வந்தபோது இதற்கு முன்பும் கருணாநிதியை பலர் விமர்சித்திருக்கின்றனர். அப்போதெல்லாம் லக்கிலுக் போன்றவர்கள் இத்தனை கடுப்படையவில்லை அல்லது ஒத்திசைத்தார்கள். ஆனால் இப்போது 'தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்போம்' என சொன்னதும்தான் அவர்களுக்கு கடுப்பு வருகிறது. 'சும்மா கருத்து கொள்கைன்னு கத்திக்கிட்டுப் போனா போகட்டும்' என நினைத்தவர்கள் 'ஓட்டுப்போடாதே' எனச் சொன்னதும்பதட்டமாகிறார்கள். அப்படியானால் இந்த தேர்தலில் அதுதான் சரியான நடைமுறை.

சுரேஷ் குமார் said...

காங்கிரஸ் கட்சியையும், சோனியாவையும் விட்டு விட்டு கலைஞரை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறீர். விட்டால், திமுக சொல்லித்தான் ராஜபட்சே தமிழின அழிப்பில் இறங்கியிருக்கார் என்பீர்கள் போலிருக்குதே சார்? :)

தேர்தலில் தி.மு. கழகக் கூட்டணி குறைந்த பட்சம் 25 இடங்களிலாவது வெல்லப்போவது உறுதி. LTTE ஒரு factorஏ அல்ல. உங்களது propaganda சுத்த waste.

ஒரு வேளை, அதிமுக கூடுதல் இடங்களைப் பெற நேர்ந்தால், அதற்கும் இலங்கை நிகழ்வுகள் ஒரு காரணமாக இராது. அதிமுக-பாமக்-மதிமுக-கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய 'பலமான' கூட்டணி அமைப்பே காரணமாயிருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழுணர்வு என்பது தி.மு.தொண்டனுக்குத்தான் அதிகமாக இருக்கும்/இருக்கிறது. அவன் உணர்வை வேண்டுமென்றே தூண்டிவிட்டு, அவனை திமு கழகத்திலிருந்து விலகச் செய்வதன் நோக்கமே, ஜெயா மற்றும் பார்ப்பன ஊடகங்களின் உள்நோக்கம்/hidden agenda தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், "தனி ஈழம்" கேட்கும் ஜெயாவும், 'சிறீலங்கா ரத்ன' இந்து-ராமும், LTTEவிரோத சோவும் ஓரே அணியில்!!! ரொம்ப hilariousஆ யில்லை.

இலங்கைத் தமிழரது அவலம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சையும் உலக்கத்தான் செய்கிறது. ஆனால், அவற்றை அரசியலாக்கி ஆதாயமடைய நினைக்கும் அல்ப புத்தி இன்று கலைஞரைத் தவிர எல்லாரிடமும் காண்கிறேன். இலங்கைத் தமிழன் சாக வேண்டும், அதைச் சொல்லி இங்கு ஓட்டுக் கேட்க வேண்டும், இது தான் ஜெயா அம்மையாரின் இன்றைய எதிர்பார்ப்பு, திட்டம் எல்லாம்.

நீங்கள் உங்களது பதிவில் "பாசிசம்" "பாசிசம்" "பாசிசம்" என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்களே, LTTEயிடம் காணாத பாசிசத்தையா பிறரிடம் பார்க்கிறீர்கள்? LTTEயின் கொலைவெறிக்கு சிங்களர்களைவிட பல தமிழர்கள் இறையாகியிருக்கிறார்களே, அது தெரியாதுங்களா உங்களுக்கு? இலங்கைத் தமிழரில் மிகப் பெரும்பான்மையானோர் LTTEஐயும், சிங்கள ராணுவத்தினரையும் பற்றிக் கூறுகையில் we are caught between devil and deep sea என்கிறார்கள்.

கலைஞர் சொன்னது போல இலங்கைத் தமிழரின் இந்த அவல நிலைக்கு "சகோதர யுத்தம்" தான் காரணம். ராஜபட்சேயோ சோனியாவோ அல்ல.

இவையெல்லாம் திருமாவுக்கு நன்றாகத் தெரிகிறது. அதனால் தான் உண்மை நிலையினை உணர்ந்து தி.மு. கழகத்தினோடு ஒருமித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான இசுலாமியர்களை உலகிலேயே இடம் பெயரச்சொன்ன ஒரே அமைப்பு விடுதலைப் புலிகளமைப்புத்தான். இலங்கை-முஸ்லீம் யாராவது ஓரிருவரை தயவு செய்து தொடர்புகொண்டு தெளிந்து கொள்ளவும்.

துரோகம், நம்பகத்தன்மை இவையெல்லாம் யாரிடத்தில் காணுகிறீர்கள்? கலைஞரிடமா, ஜெயாவிடமா, சோனியாவிடமா, யாரிடம்?

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இன்று நீங்கள் கலைஞரை எதிர்க்குறீர். நாளைக்கு "இந்துத்வ" பூச்சாண்டி காட்டி, மீண்டும் காங்கிரஸை ஆதரிக்க மாட்டீர்கள் என்று எப்படி நம்புது?

அப்போது ஜெயா உங்களுக்குக் கசக்கும். கலைஞரைத்தானே தேடி வருவீர்கள்?

(என்ன அய்யா, பல்டி அடிக்கத் தயாராயிட்டீயளா...?)

இவண்
சுரேஷ் குமார்
பெங்களூரு.

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

திடீர் தமிழ்வெறியன்களுக்கும், சில,பல
எனைய பொரட்சியாளய்ங்களுக்கும் சூத்துல சூடு வக்கிற மாதிரி இருக்குண்ணே.

Anonymous said...

//கொஞ்சநாளைக்கு முன்னாடி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வைகோ பிரச்சார மேடையில் ஜெயா பேசும்போது கும்பிட்டபடியே நீண்ட நேரம் அவர் பேசி முடியும் வரை கும்பிட்டபடியே இருந்தார்... ஒரு வேளை தனி ஈழம் அதிமுக அமைத்துக் கொடுத்தால் வைகோ நாலு சீட்டுக்கே இவ்வளவு நேரம் நின்றார் எனில் பிரபாகரன் ஈழத்திற்காக எவ்வளவு நேரம் நிற்க வேண்டுமோ தெரியவில்லை...//

SUPPERAPPU!!

முரளிகண்ணன் said...

நிறைய யோசிக்க வைக்கிறீர்கள்

லக்கிலுக் said...

//இன்னொரு விஷயம்... ஈழப் பிரச்னைப்பற்றி கருத்து ரீதியான விவாதங்கள் வந்தபோது இதற்கு முன்பும் கருணாநிதியை பலர் விமர்சித்திருக்கின்றனர். அப்போதெல்லாம் லக்கிலுக் போன்றவர்கள் இத்தனை கடுப்படையவில்லை அல்லது ஒத்திசைத்தார்கள். ஆனால் இப்போது 'தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்போம்' என சொன்னதும்தான் அவர்களுக்கு கடுப்பு வருகிறது. 'சும்மா கருத்து கொள்கைன்னு கத்திக்கிட்டுப் போனா போகட்டும்' என நினைத்தவர்கள் 'ஓட்டுப்போடாதே' எனச் சொன்னதும்பதட்டமாகிறார்கள். அப்படியானால் இந்த தேர்தலில் அதுதான் சரியான நடைமுறை.
//

ஆழி!

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம். ‘ஓட்டுப் போடாதே!’ என்று நீங்கள் சொல்வதற்கு எந்த ஆட்சேபணையும், யாரும் தெரிவிக்க முடியாது.

ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டு எங்களையெல்லாம் தண்ணியில்லாத கிணற்றில் குதிக்கச் சொல்கிறீர்களே? அதற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

கருணாநிதி உங்களுக்கு துரோகியாக தெரிவதில் யாருக்கும் பிரச்சினையில்லை. ஜெ.வை ஈழநாயகியாக திடீரென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை பார்க்கையில் தான் சகிக்கவில்லை!

Ajay Subramanian said...

//கருணாநிதி உங்களுக்கு துரோகியாக தெரிவதில் யாருக்கும் பிரச்சினையில்லை. ஜெ.வை ஈழநாயகியாக திடீரென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை பார்க்கையில் தான் சகிக்கவில்லை!//

well said.
better we vote for Vijayakanth's party this time. We Tamils need change.
Captain is the best person to throw the dravidian politics into dustbin.
Let us show rest of Indians our might!
juz 3 dayz to goooooooooooo!

-/சுடலை மாடன்/- said...

நீங்கள் இப்படியொரு இடுகையிட்டதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். அம்பலப் பட்டு அசிங்கப் பட்டிருக்கும் கருணாநிதி இன்னும் கருங்காலி இல்லை. ஆனால் வைக்கோ, திருமா மற்றும் நெடுமாறன் போன்றவர்கள் கருங்காலிகள். தொடரட்டும் உங்கள் அரும்பணி. சுடலைமாடனையும் கருங்காலிப் பட்டியலில் சேர்த்து விடுங்கள், அதைப் பற்றிக் கவலைப் பட்டு நான் இன்று இங்கு வரவில்லை.


புலிகள் அழிக்கப் பட்டு விட்டாயிற்று. அங்கு 2 இலட்சம் மக்கள் வதைமுகாம்களில் வைக்கப் பட்டிருப்பதை பன்னாட்டு ஊடகங்கள் ஆதாரங்களோடு வெளியிட்டு வருகின்றன. நீங்களும், உங்களைப் போன்ற தற்பெருமை அறிவுஜீவி நண்பர்கள் சோபா சக்தி, அ. மார்க்ஸ் வகையறாக்களும் ஏதாவது அவர்களுக்காக புடுங்கியிருப்பீர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் இன்று உங்கள் பதிவுப்பக்கம் வந்தேன். புலிகள் கதை முடிந்த பிறகு இலங்கை அரசு கிழிப்பதற்கு வேண்டுகோள் விடுப்பதாக உளறிக் கொட்டியிருந்தார் சோபா சக்தி. இரண்டு வாரங்களில் ஈழத்தைப் பெற்றுத்தருவார், அரசியல் தீர்வு கொண்டு வருவார் என்றெல்லாம் கேட்க வில்லை. அங்கு அரசு தமிழர்களை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்வதை குறைந்த பட்சம் உலகுக்குத் தெரிவிப்பதற்கு என்ன கிழித்துக் கொண்டிடுக்கிறீர்கள் என்று படிக்க விரும்பினேன்.

//இன்று ஈழத்தமிழருக்காய் வீராவேச வேசம் போடும் வீராதி வீரர்கள் வைகோ, நெடுமாறன், திருமா, ராமதாஸ் யாரும் கல்லூரிகள் மூடப்பட்டதையோ உயர்நீதிமன்றத் தாக்குதலை எதிர்த்தோ ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்கவோ போராட்டங்களை நிகழ்த்திக்காட்டவோ தயாராக இல்லை.//

போன இடுகையிலேயே இதைக் கேட்டிருந்தேன். நீங்கள் இதுவரை என்னென்ன செய்தீர்கள் என்று ஐந்து வரிகளில் சொன்னால் போதும்.

ஜெயமோகன், ஞானி, சாரு நிவேதிதா போன்ற "இலக்கியப் புடுங்கிகளு"க்கும் அ.மார்க்ஸ், சோபாசக்தி, சுகுணா போன்றவர்களுக்கும் பெரிதாக வேறுபாடில்லை.

இலக்கியப் புடுங்கிகள் http://www.manisenthil.comநன்றி - சொ.சங்கரபாண்டி