Saturday, February 2, 2008

ஒரு இளம்பெண்ணுக்கு ஆபத்து!

குடும்பம் மற்றும் திருமணத்தில் தனிச்சொத்து வகிக்கும் பாத்திரம் குறித்து விரிவாய் விளக்கினார் பேராசான் ஏங்கெல்ஸ். குறிப்பாக இந்தியாவில் சாதி, திருமணத்தில் வகிக்கும் பங்கு குறித்துப் பேசினார் தேசத்தந்தை அம்பேத்கர். எல்லாவற்றுக்கும் மேலாக திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்க வேன்டும் என்றார் தோழர்.பெரியார்.

திருமணமற்ற நடைமுறையைக் கைக்கொள்ளவே எனக்கும் விருப்பம். ஒரு ஆணும் பெண்ணும் விருப்பப்படும் வரை இணைந்து வாழ்வது, இல்லையேல் பிரிந்து விடுவது என்னும் விருப்பமே என் பதின்பருவங்களிலிருந்து இருந்து வந்தது. ஆனால் நடைமுறைச் சமூக அமைப்போ அதற்கு முற்றிலும் மாறாய் உள்ளது.

லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழும் பல நண்பர்களை எனக்குச் சென்னையில் தெரியும். ஆனால் சென்னையைத் தாண்டி இது சாத்தியமாவது மிகக்குறைவே. லிவிங் டூ கெதராக வாழ்ந்தால் மிகச்சுலபமாக எங்களூரில் சொல்லிவிடுவார்கள், 'இவன் இவளை வச்சுக்கிட்டிருக்கான்'.

ஆனால் பாலியல் தேவை உள்ளிட்ட பல தேவைகளை திருமண உறவுகளுக்குள்ளேயெ தீர்க்க வேண்டிய சூழலும் இன்னமும் எதார்த்தமாயுள்ளது. ஒப்பீட்டளவில் திருமணம் என்றாலும் சாதிமறுப்புத்திருமணம் குறைந்தபட்ச உடைப்புகளைச் சாதியச்சமூகத்தில் நிகழ்த்தவல்லது என்கிற புரிதல் ஏற்பட்டது.

இதற்காகவே மூன்றுவருடங்கள் வரை திருமணத்தைத் தள்ளிப்போட்டிருந்தேன். ஆனாலும் அது அவ்வளவு சுலபமாய் நிறைவேறுவதாயில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்காய்ப் பெண் தேடும்போதுதான் சூழலின் இன்னொரு பரிணாமம் புலப்பட்டது.

விடுதலை, உண்மை போன்ற பெரியாரியக்க இதழ்களில் வரும் சாதிமறுப்புத் திருமண விளம்பரங்களில் 'மாதம் 40000 ரூபாய் சம்பாதிக்கும் பெண்ணுக்கு அதை விடக் கூடுதலாக வருமானமுள்ள' தோழர் தேவை என்கிற விளம்பரங்களே அதிகம் வருகின்றன. இதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது. பெண்களின் வருமானமும் அவர்களின் சுயச்சார்பும் அதிகரித்திருக்கிறது. ஆனால் இங்கு சாதியையும் தாண்டி திருமணத்திற்கு வர்க்கச்சூழல், அந்தஸ்து மற்றும் வருமானப்பின்னணி அனைத்தும் தீர்மானிக்கும் காரணிகளாய் மாறிப்போயுள்ளன.

மேலும் அரசு வேலை குறித்த நம்பிக்கைகளும் இன்னமும் தமிழ்மக்களிடம் தகர்ந்து போகவில்லை. ஒரு விதவைப்பெண், நான்கு வயதில் குழந்தை உள்ளது. அவரைத் திருமணம் செய்ய விரும்பியும் அவர் நான் அரசு வேலையில் இல்லை என்ற காரணத்தால் நிராகரித்து விட்டார்.

அதேபோல் பெரியாரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தோழர் ஒருவரின் மனைவியின் தங்கை. அவரும் சாதிமறுப்புத் திருமணத்திற்குச் சம்மதித்திருந்தார். ஆனால் திடீரென்று தோழர் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல். பெண்ணை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தேன். என்ன காரணத்தாலோ அது அவரால் இயலவில்லை. திடீரென்று எப்போதேனும் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வரும், 'தோழர் இணையத்தில் உங்கள் கட்டுரையைப் படித்தேன், நீங்கள் நண்பராயிருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்' என்று. 'அதுசரி தோழர், பெண் விவகாரம் என்னாயிற்று?' என்று நான் பதில் அனுப்ப, அவரிடமிருந்து ஒரு பதிலும் வராது. மீண்டும் மூன்றுமாதம் கழித்து, ''தோழர் இணையத்தில் உங்கள் கட்டுரையைப் படித்தேன்....' மின்னஞ்சல்கள்.

இதில் சில 'புத்திஜீவிகள்' கேட்கும் கேள்வி, 'உங்களுக்குத்தான் சாதியே இல்லையே, அப்புறமென்ன எந்த சாதியில் திருமணம் செய்தால் என்ன?' இதன் மறைமுகப்பொருள், 'உங்கள் சாதியிலேயே திருமணம் செய்துகொள்ளுங்களேன்'. முதலில் யாரும் இங்கு முழுவதுமாக சாதியைக் கடந்து விட்டோமோ என்று தெரியவில்லை.

ஆனால் சாதி குறித்த வெறுப்பும் குற்றவுணர்வும் அதைக் கடந்து வருவதற்குமான எத்தனங்களுமே நமக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம். மேலும் 'எனக்குச் சாதியே இல்லை, அதனால் என் சொந்தக்காரப் பெண்னைத் திருமணம் செய்துகொள்வேன்' என்பதை விடவும் அயோக்கியத்தனம் வேறொன்றும் கிடையாது.

இன்னொரு தோழர், திண்டுக்கல்லில் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியைச் சேர்ந்தவர், அங்கு உணவகம் நடத்திவருகிறார். கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவரிடம், இன்னொரு தோழர் சொன்னார், 'தோழருக்கு சாதி மறுப்புத் திருமணத்திற்குப் பெண்ணிருந்தால் சொல்லுங்கள்' என்று. அதற்கு அந்த தோழர் அளித்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன்.

;தோழர், இதெல்லாம் எதுக்குப் பார்க்கறீங்க? நமக்கு அனுசரணையா இருப்பாங்களான்னு பாருங்க, நாளைக்குத் திடீர்ன்னு தமிழ்த்தேசியப் புரட்சி வந்திடுச்சுன்னு வச்சுக்கங்க, நான் உணவகத்தை விட்டுட்டு புரட்சிக்குப் போயிடுவேன், மனைவி ஓட்டலைப் பார்த்துக்குவாங்கல்ல'. ஆக மொத்தம் புரட்சி வந்தால் கூட அவர் மனைவி அவர் வீட்டையும் ஓட்டலையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இப்படியாகச் சாதிமறுப்புத் திருமத்திற்குப் பெண்தேடிய அனுபவங்களை எழுதினால் ஜெயமோகன் அளவிற்கேக் கூட ஒரு நாவல் எழுதலாம். ஆனால் ஒன்றைக் குறிப்பிடுவது முக்கியம். பெரியாரியக்கங்களின் மீது நம் அனைவருக்கும் பல விமர்சனங்கள் இருந்தபோதும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைப்பதை ஒரு கடமையாகவே கருதுபவர்கள் பெரியாரியக்கங்களிலேயே அதிகமிருக்கின்றனர்.

தலித் அரசியல் பேசுபவர்களில் பலர் தனக்குக் கீழுள்ள தலித் சாதிகளில் கூட திருமணம் செய்வதில்லை. இப்படியாகத்தான் நடைமுறை இருந்துவருகிறது. ஆனால் அதற்காக ஒரேடியாக சாதிமறுப்புத் திருமணம் சர்வரோக நிவாரணி என்றும் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சாதி மறுப்புத்திருமணத்தின் மூலம் உருவாகும் குடும்பம் சாதிய அடையாளத்தைக் கடந்துபோவதற்குப் பதிலாக தந்தையின் சாதிய மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளும் அவலமும் நிகழத்தான் செய்கிறது. இடையில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவமும் - உங்களுக்குத் தெரிந்ததுதான், சாதியரீதியான அவதூறு - அதுவும்கூட சாதிமறுப்புத்திருமணத்தின் மீதான எனது தீவிரத்தை அதிகப்படுத்தியது.

எதற்கு இவ்வளவு கதை என்று கேட்கிறார்கள். வேறொன்றுமில்லை, ஒரு வழியாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமண தேதி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பெண்ணின் பெயர் ஜெயந்தி. ஜெயந்தியின் தந்தை ஒரு சாதி, தாய் வேறு சாதி. எனக்கு இத்தொடர்பு அப்பெண்ணின் சித்தியின் கணவரின் மூலம் ஏற்பட்டது. அவர் இந்த இரண்டு சாதிகளையும் சாராத இன்னொரு சாதி.

ஜெயந்தி கடைசிப் பெண், ஆண் கிடையாது. அவரின் அக்காக்கள் இருவருமே சாதிமறுப்புத் திருமணம்தான் செய்துள்ளனர். பெண் பார்க்கப்போகும் போது ஜெயந்தியிடம் தனியாகப் பேசினேன், என்ன கொடுமையென்றால் அப்பெண் தீவிர கடவுள் நம்பிக்கையாளர், நானொ இறை மறுப்பாளன். மேலும் சுனாமிக்குப் பிறகு அதிகம் பிணங்களைப் பார்த்த பாதிப்பால் ( அவர்கள் ஊர் மார்த்தாண்டம்) அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிட்டாராம். நானோ மாம்ச ரசிகன்.

என்றபோதும் சாதியைத் தாண்டி வருவதே முக்கியம், கடவுள்நம்பிக்கை என்பது இரண்டாம்பட்சமான, தனிநபர் உரிமை சார்ந்த பிரச்சினை என்றே நம்புகிறேன். ஆனால் இது சாதிமறுப்புத் திருமணமாக இருந்தபோதும் பெண் தலித் இல்லை. மூன்று இடைநிலைச்சாதிகளுக்குள் நடைபெறும் கலப்புத்தான்.

மேலும் இன்னொரு வருத்ததுக்குரிய அம்சம், தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். (போகிற இடமெல்லாம் புருசனைக் காப்பாற்ற தாலி என்ன கோல்கேட்ஜெல் பாதுகாப்புவளையமா? என்று எவ்வளவு கேலி பேசியிருப்பேன்).

திருமணம் மே 25 அன்று திண்டுக்கல்லில் நடைபெறுவதாகவுள்ளது. நேரிலோ, மின்னஞ்சலிலோ, கடிதம் வழியாக, குறுஞ்செய்தி மூலமோ நண்பர்களுக்கு அழைப்பு அனுப்ப எண்ணம். வாய்ப்புள்ளவர்கள் வரலாம். இப்போதைக்கு இந்தப் பதிவின் மூலம் ஜெயந்திக்கு உங்கள் அனுதாபங்களைத் தெரிவிக்கலாம்.((-

நன்றி

பிரியங்களுடன்...

சுகுணாதிவாகர்.

Saturday, January 5, 2008

திருட்டைப் பற்றி ஒரு தியரி

















இந்தத் தலைப்பே திருடப்பட்டதுதான். திருட்டு என்பது மனித அடிப்படைக் குணாம்சமெங்களிலொன்று. புத்த்கம் திருடுவது, திருடப்பட்ட புத்தகத்தைப் பதிப்பிப்பது, பக்கத்து வீட்ட்டுப்பெண்ணின் உள்ளாடைகளைத் திருடுவது எனத் திருட்டுக்கள் பலவகைப்படும். உண்மையில் சொல்லப்போனால் திருட்டின் தந்தை என்று கடவுளைத்தான் சொல்லவேண்டும். ஆதி மனுசனையும் மனுசியையும் படைத்த கடவுள் அவர்களிடமிருந்து வெட்கத்தைத் திருடிக்கொண்டுதான் படைத்தார். கண்டுபிடித்துக்கொடுத்த திருவாளர் சாத்தானை உலகின் முதல் போலீஸ்காரர் என்று சொல்லலாம், தவறில்லை.எழுத்தை எழுத்தால் எழுதிக்கொண்டிருக்கிறது எழுத்து. இதுவும் ஒரு திருடப்பட்ட வரி, இதுவும்கூட நீர், நீரால் நீரை நீரடித்துச்செல்கிறது என்னும் பதியப்படாத ஒரு வரியிலிருந்து திருடப்பட்டிருக்கலாம். இப்போது திருட்டு முக்கியமா, எனில் இல்லை திருட்டைப் பற்றி ஒரு கதைகூறும் விருப்பம் அல்லது அரிப்புதான் முக்கியம். நாம் முதன்முதலில் கற்றுக்கொண்ட கதையும் திருட்டைப்பற்றித்தான் என்றால் உங்களுக்குப் புரியுமா? எப்படியோ அலிபாபாவின் குகையில் தொலைந்துபோன அந்த 40வது திருடனைக் கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி. இதுவரை திருடியதற்கும் இப்போது திருடப்போவதற்கும் ஏதேனும் குறிப்பு தருவதாய் உத்தேசமில்லை. இதுவரை எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எது நடக்கிறதோ அதுதானே நடக்கும், மேலும் எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டதும்கூட. எடுக்கப்பட்ட எல்லாமும் கொடுக்கப்படவும் செய்யும். கோபியரின் திருடப்பட்ட சேலைகள் திரவுபதைக்குப் பரிசளிக்கப்பட்டதே திருட்டைப்பற்றிய கதைகளின் நீள்வட்டப்பாதையின் இயக்கம்...மய்யத்தில் தாயக் கட்டங்களைக் கிழிக்க
குச்சிகளைத் தேடிச் சோர்ந்து எண்பதாயிரம் மைல் தொலைவிலிருக்கும்
ஐம்பதாயிரம் வயது கொண்ட அல்லாவிடம் வரம் பெற்றவர் ராவணன்! ராமரை விட இதில் லட்சுமணனுக்கு முக்கியத்துவம் அதிகம். அதுமட்டுமல்ல இந்த ராமாயணத்தில் ராமருக்கும், சீதைக்கும் பிறந்தவர் அனுமன்!""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை. ஷோபனா. 1.ஆங்கிலம் படித்தவர் 2. மேட்டிமையாளர் (எலிடெ) 3. வெள்ளை நிறம் கொண்டவர் 4. நகர்புறப் பண்பாட்டில் வளர்ந்தவர் 5. நாகரிகமானவர் 6. உயர்சாதியான பார்ப்பனர். இந்த முரணின் எதிர்நிலையில் இருப்பவாகள் மற்ற 9 மாணவர்களும். இவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் துவங்கி தெலுங்கர் முஸ்லிம் கிறித்துவர் உட்பட எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். உடல் உழைப்பாளிகள்.கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய் நாஞ்சில் நாடனுக்கு இப்போது வீரநாராயண மங்கலத்து ‘வெள்ளாம்புள்ளையோ’ கொள்ளும் நவீனமயமாதலில் ஆதாரமான கோபம் இருக்கிறது. பந்திப்பாயை விரித்து நுனியிலை பரப்பி உப்புதொட்டு கூட்டுகறி வரை விதிப்படி பரிமாறி பருப்பும் நெய்யும் பெய்து ‘மூட நெய்விட்டு மூக்கு வழிவார’ உண்ணும் பண்பாடு அழிகிறது.ஐபிஎம் இந்தியாவில் அவர்களது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களை 75000 மாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. அமெரிக்கா தாண்டி மிக அதிக பணியாளர்கள் பணியாற்றும் இடம் ஐபிஎம்பிற்கு இந்தியா தான். ஆரகிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், என மென்/வன் பொருள் நிறுவனங்கள், மெதுவாக அமெரிக்காவிலிருந்து கடையினை கொஞ்சமாக கொஞ்சமாக காலி செய்து கொண்டு பெங்களூரிலோ, சென்னையிலோ, மும்பையிலோ டேரா போடப் போகிறார்கள். இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். சொல்லப்படுகிற வரலாற்றிலும் எழுத்திலும் தனது தீவிரமான இடையீட்டை நிகழ்த்தக் கூடிய பெண் எழுத்து என்பது ஒரு மாற்றுச் செயல்பாடே. தற்போதுள்ள எழுத்தின் மொழி ஆண்மைய ஒழுங்கினால் உருவாக்கப் பட்டு பரிபாலிக்கப் படுகிற ஒன்று.இன்று உலகம் முழுவதும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் யுத்தமுனைகளில் தள்ளப்பட்டும் பாலியல் வதைகளுக்குள்ளாக்கப்பட்டும் இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும், ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.ஆடை ஏற்றுமதி வணிகம் செய்துவந்த நீதிபதி சபர்வாலின் இரண்டு மகன்கள் 2004-ம் ஆண்டு இறுதியில் பெரும் வணிகக் கட்டடங்கள் கட்டி விற்கும் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் முன்னணியில் இருந்த காபுல் சாவ்லா என்பவருடன் பங்குத்தாரராக இணைந்து அத்தொழிலில் ஈடுபட்டனர்

காக்கா வடை 'சுட்ட' கதை 1.

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம், இல்லேல்லே, பாட்டி இருந்துச்சாம், இல்லேல்லே, நரி இருந்துச்சாம், எதுதான் முதல்முதல்ல இருந்துச்சாம். இப்படியும் கூட சொல்லலாம். வடை இல்லையேல் கதை இல்லை. காக்காவைவிட பாட்டியை விட நரியை விட வடையே முக்கியம் என்பதே நீதியாம்.

காக்கா வடை 'சுட்ட' கதை 2

அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை வடைக்குப் பதிலாக முறுக்கு என்று வைத்துக்கொண்டால் கதை சொல்ல முடியாதா? இங்கு வடையோ, அடையோ, கதையோ எதுவுமில்லாமல் வருவதில்லை.

3.

நானை நானிடமிருந்து திருடி நானுக்கு விற்கும் ஒரு திருட்டு நான்.

4.

.

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டிகிட்டயிருந்து வடையைத் திருடுச்சாம். மரத்துமேல உக்காந்து காக்கா வடைய சாப்பிடப் போகும்போது பறந்து வந்து கீழே உக்காந்த கழுகு, 'காக்கா காக்கா உன் குரல் அழகாயிருக்கு, ஒரு பாட்டுப் பாடேன்'ன்னுச்சாம். காக்காவும் பாட்டுப்பாடும்போது கீழே விழுந்த வடையைத் தூக்கிட்டு கழுகு பறந்தே போயிடுச்சாம். இருந்தாலும் காக்காவுக்குக் கவலையில்லை. அது திருப்பித் திருப்பிப் பாடுச்சாம், 'ஜாரே ஜகான் ஹி அச்சா, ஜார்ஸ் போனாராம் உச்சா, உச்சா.....

Sunday, December 23, 2007

ங்கோத்தாபாடு, யோனி மற்றும் சில கெட்டவார்த்தைகள்....

சமீபத்தில் என் எழுத்துக்களைப் பற்றி எழுதும்போது 'சுகுணாதிவாகரின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்தால் புதிதாக ஒரு கெட்டவார்த்தையைத் தெரிந்துகொள்ளலாம்' என்று ஒரு நண்பர் 'பாராட்டி' எழுதியிருந்தார். ஆகமொத்தம் என் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து படித்தால் கெட்டவார்த்தைகளுக்கான அகராதியை உருவாக்கிவிடலாம். ((-.

அகராதி என்றதும் நினைவுக்கு வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழ் அகராதியைத் தொகுக்கும் வேலையில் நானும் சில நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். க்ரியாவின் தமிழ் அகராதிக்குப் பிறகு உருப்படியான அகராதி தமிழில் கிடையாது க்ரியா அகராதி வெளியாகியே பதினைந்து வருடங்களிருக்கும். இந்தப் பதினைந்து வருடங்களுக்குள் பின்நவீனம், கட்டவிழ்ப்பு, விளிம்புநிலை, மறுகாலனியாதிக்கம் போன்ற பல சொற்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றையெல்லாம் அகராதியில் கொண்டுவருவது எங்கள் நோக்கமாயிருந்தது.

இத்தோடு தமிழின் கெட்டவார்த்தைகளையும் அகராதியில் கொண்டுவரலாமென்றிருந்தோம். ஏனெனில் கெட்டவார்த்தைகள் வட்டாரத்தன்மையுடையனவாகவிருக்கின்றன. ஙோத்தா என்றால் தஞ்சை திருச்சி வட்டாரங்களில் உங்கம்மா என்று அர்த்தம். ஙோத்தாவைப் பற்றித் தெரியாதா என்றால் உங்கம்மாவைப் பற்றித் தெரியாதா என்று பொருள்.

இதுவே மதுரையில் ங்கோத்தா என்பது உச்சபட்ச கெட்டவார்த்தை. ங்கோத்தா, தேவடியாமகன் என்று ஒருவர் அழைத்தால் கொலை விழுவதற்கான சாத்தியங்களும் உண்டு. குறைந்தபட்சம் அடியாவது உண்டு. ஆனால் சென்னையில் பதினைந்து வயது சிறுவன் கூட அறுபது வயது கடைக்காரரை 'ஙோத்தா, சிகரெட் இல்லையா' என்பான். ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவிருந்தாலும் போகப்போக 'ங்கோத்தா' பழகிப்போனது.

இப்படியாக கெட்டவார்த்தைகளை அகராதியில் கொண்டு வரும் முயற்சியில் எங்களுக்குப் பெரும் சவாலாயிருந்தது 'பாடு' என்னும் சென்னைக்கேயுரிய கெட்டவார்த்தை. பொதுவாக பெரும்பாலான கெட்டவார்த்தைகள் பெண்களை வசைபாடுபவையாகவோ, அல்லது பெண்களுடன் தொடர்புள்ளவையாகவோ இருக்க பாடு மட்டும் முழுக்க ஆணுக்கான வசைச்சொல்லாகவே விளங்குகிறது. பாடு என்றால் மாமாக்கார பையன் என்று பொருள்.

ஆனால் தமிழில் இந்தியைப் போல B ஓசை, f ஓசை உள்ள எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகக்ள் கிடையாது. ஓசையைக்குறிக்கவாவது முன்னால் ஃ போட்டு எழுதும் வழக்கமுள்ளது. உதாரணம் :ஃ பாருக்,ஃ பாத்திமா. ஆனால் B ஓசையில் தொடங்கும் சொல்லுக்கு அதுவும் கிடையாது. எனவே B ஓசை உடைய சொல்லை எழுதுவதற்காக ஒரு குறியீடு அவசியமென்று உணர்ந்தோம். ஆனால் அந்த அகராதி வேலை பாதியிலேயே நின்று போனதால் மேற்கொண்டு தொடரமுடியவில்லை.

வைரமுத்துவின் ரசிகனாயிருந்த என்னை நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி நவீன இலக்கியக்களத்திற்கு அழைத்துவந்தவர் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரும் அதிகாரமற்ற நண்பனுமாகிய யவனிகாசிறீராம். அவரது முதல் கவிதைதொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு பேருந்கில் பயணம் செய்யும்போது பக்கத்திலிருந்தவர் என்னை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே வந்தார்.

பிறகுதான் காரணம் விளங்கியது. நூலின் பெயர், 'இரவு என்பது உறங்க அல்ல'. அவருக்கு அது ஏதோ மலையாளப் பட டைட்டிலைப் போலத் தெரிந்திருக்க வேண்டும். (இப்படித்தான் எமர்ஜென்சிக் காலத்தில் இந்திராகாந்தி இந்தியர்களின் அத்தியாவசியக் கடமைகளை நினைவூட்டுவதற்காகப் பல முழக்கங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றிலொன்று 'பேச்சைக்குறை உற்பத்தியைப் பெருக்கு'. பின்னால் ஒரு மலையாளப் படத்திற்கு அவ்வாக்கியமே டைட்டிலாக வைக்கப்பட்டது.)

நான் நவீனக் கவிதைகளை எழுதும்போதே கெட்டவார்த்தைகளுடன்தான் தொடங்கினேன். இத்தனைக்கும் அப்போது வானம்பாடிக்கவிஞர்களைத் தாண்டி வாசிப்பு கிடையாது. ஆனால் கெட்டவார்த்தைகளைக் கவிதைகளில் பயன்படுத்துவதில் எனக்குத்தயக்கமிருந்ததில்லை. ஒருமுறை கலை இலக்கியப்பெருமன்றம் திண்டுக்கல்லில் தலித்தியக் கவியரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது கார்கில் போர் நடந்துகொண்டிருந்த சமயம். செய்தித்தாள்களைப் போர்ச்செய்திகளே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. ஒருநாள் மாலைமலரில் ஒரு செய்தி, உத்திரப்பிரதேசத்தில் ஒரு தலித்பெண்ணைப் பதினாலு யாதவர்கள் நடுவீதியில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையில் எந்த செய்தித்தாளிலும் அந்தச் செய்தி இடம்பெறவில்லை. மீண்டும் கார்கில் சாகசச்செய்திகள்.

இந்த இரு செய்திகளையும் தொடர்புபடுத்தி நான்லீனியராக ஒரு கவிதையொன்றை வாசித்தேன். இந்தியாவையும் பாரதமாதாவையும் கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்கும் கவிதை. ( அந்தக் கவிதையை எங்கு எப்போது எழுதினாலும் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்படும் அபாயமுண்டு) 'தோழர்கள்' திகைத்துப்போனார்கள். அதன்பின் கலை இலக்கியப் பெருமன்றக்கூட்டங்கள் எனக்கு அழைப்பு அனுப்பப்படாத ரகசியக்கூட்டங்களாக நடக்கத்தொடங்கின.

எனது கவிதைத்தொகுப்பைக் கொண்டு வருவதென்று முடிவு செய்தபோது நான் வைத்தபெயர் 'யோனியில் முளைத்த குறுவாள்'. ஆனால் நூலுக்கு நூலக அனுமதி கிடைக்காது என்று யவனிகா 'விலா எலும்பு' என்று பெயர்வைத்தார். நானோ கடைசியில் தீட்டுப்பட்ட நிலா என்று பெயர் வைத்தேன். (அப்படியும் நூலக அனுமதி கிடைக்கவில்லை என்பது வேறு விசயம்)

திண்டுக்கல்லில் பேருந்து நிலையப் புத்தகக் கடைகள் பழக்கமானவை என்பதால் கவிதைத்தொகுப்பை விற்பனைக்குக் கொடுத்திருந்தேன். கெட்டவார்த்தைகள் அதிகமுள்ள அந்நூலை யாரோ ஒரு அப்பாவி வாங்கியிருக்கிறார். பேருந்தில் ஏறுவதற்கு முன்பு புத்தகத்தைப் பிரித்து ஒன்றிரண்டு கவிதைகளை வாசித்திருக்கிறார். நூலின் விலை முப்பது ரூபாய். அலறியடித்து புத்தகக்கடைக்கு ஓடிவந்தவர், 'புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், எனக்குப் பத்து ரூபாய் தந்தால் போதும்' என்றிருக்கிறார்.

இப்போது கெட்டவார்த்தைகள் குறித்து சில யோசிப்போம். பெண்கவிஞர்கள் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவதா என்று தமிழ்க்கலாச்சாரக்காவலர்கள் கொதித்துப்போன செய்தி நமக்குத் தெரியும். உதாரணமாக சல்மாவின் 'எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி' என்னும் வரி. ஆனால் கவிதைகளில் பயன்படுத்தப்படும் பல கெட்டவார்த்தைகள் கெட்டவார்த்தைகள் என்றே வெகுமக்கள் அறியமாட்டார்கள் என்பது வேடிக்கை.

உதாரணமாக யோனி என்னும் வார்த்தை சாதாரண தமிழ் ஜனங்களுக்குத் தெரியாது. யோனிக்குப் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் நேரடி வார்த்தைகளைக் கவிதையில் பயன்படுத்தினால் கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்வார்கள்? தெரியவில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் யோனி என்னும் வார்த்தையின் அர்த்தமே தெரியாமல் பயன்படுத்தப்படும் தளம் ஜோதிடம்.

என் அப்பா என் அண்ணனுக்கு சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்திருப்பார். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் அழிந்துபோன அத்திப்பட்டியைத் தவிர அனைத்து ஊர்களிலும் பெண் பார்த்திருப்பார். அப்போது அவர் அடிக்கடி கூறும் வாக்கியம், 'யோனிப்பொருத்தம் சரியில்லை' என்பது. எனக்கு ஆச்சரியமாயிருக்கும் யோனியின் அளவு ஜோசியக்காரனுக்கு எப்படித் தெரிந்தது என்று.

உண்மையில் கெட்டவார்த்தைகளைப் படைப்புகளில் பயன்படுத்துவது கலகபூர்வமானதுதானா என்றால் ஒரு வகையில் ஆம் என்றாலும் இன்னொரு வகையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்பே கூறியது போல தமிழின் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்துபவை. மேலும் FUCK என்கிற வார்த்தைக்குத் தமிழில் பயன்படுத்தப்படும் கெட்டவார்த்தைகளையோ அல்லது 'போடுவது' மாதிரியான குறியீட்டுச் சொற்களையோ எடுத்துக்கொண்டால் ஒரு உண்மை விளங்கும்.

இவ்வார்த்தைகள் அனைத்தின் சாரம் : பாலியல் உறவில் ஆண் இயங்குகிறான், பெண் ஏற்றுக்கொள்கிறாள். எனவே இவ்வகையான கெட்டவார்த்தைகள் பெண்ணுக்கு நீதி செய்யவில்லை. பாலுறவு என்பது இருவரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுச்செயற்பாடு என்பதைமறுத்து, பெண்ணுடலை பாலியல் செயற்பாட்டுக்கான கருவியாகவே பார்க்கும் ஆண்மய்யப்பார்வையையே கொண்டுள்ளன. முட்டாள், கிறுக்கு என்றெல்லாம் ஆரம்பிக்கும் கெட்டவார்த்தைகள் பெண்ணுறுப்பையே திட்டுகின்றனவே அன்றி ஒரு சொல்லும் ஆணைத் திட்டுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Monday, November 19, 2007

இருபத்தெட்டு வருடங்களின் இறுதியில்.....




தே நவம்பர் 20. இருபத்தெட்டு வருடங்களுக்குமுன் ஒரு குழந்தையாய் இந்தப் பூமிக்குள் நுழைந்தபோது, தயக்கத்தின் முட்டையுடைத்து யாரேனும் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கலாம், புணர்ச்சியின் முதல் உச்சத்தை எவரேனும் சுகித்திருக்கலாம், ஒரு கொலை நிகழ்ந்திருக்கலாம் அல்லது ஒரு தற்கொலை, மண் பார்க்கவியாலாப் பேறுடன் ஒரு சிசு கருவிலேயே சிதைந்திருக்கலாம் அல்லது சிதைக்கப்பட்டு.... எப்படியாயினும் தாயின் யோனி பூமிக்குள் துப்பிய கணம் வாழ்வின் ருசி குறித்து அறியாக்கணமே. என்னோடு பிறந்த குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தங்களது இருபத்தொன்பதாம் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனவோ. பிறந்தநாள் என்பது சின்னச்சின்ன சந்தோசங்களிலொன்றா, அல்லது மறுக்கப்பட்ட வாழ்வில் கிடந்து உழல்பவர்களைப் பரிகசிக்கும் வக்கிரமா? கேள்விகள் பெட்டிக்குள் அடைபட்டுச் சீறும் ஆண்குறியைப் போலவே எழுந்து மடங்குகின்றன. இன்றைய தலைமுறை அரசியல் உணர்வைத் தொலைத்திருக்கிறது. வீதிகளில் இப்போது கேளிக்கைகளன்றி போராட்டங்கள் நடப்பதில்லை. சமயங்களில் நம்பிக்கை கண்கட்டி கட்டி மறைகிறது. என்றபோதும் மழை பூமியைக் கைவிட்டுவிடவில்லை, இன்னமும் ஆச்சரியமாய்ப் பூக்கள் பூக்கின்ற்ன, மனிதர்கள் வெட்ட வெட்ட மரங்கள் துளிர்க்கின்றன, இன்னமும் போராளிகள் ஆயுதங்கள் ஏந்துகிறார்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் துரோகி என்று இனங்காணப்பட்டு எவரேனும் கொல்லப்படுகிறார்கள். ஆணாதிக்க விசநாக்கு இன்னமும் எனக்குள் மறையவில்லை, சாதியக்கூறுகளும் மேட்டிமையும் உப்புக்கரித்தபடி ரத்தத்தில் பதுங்கியிருக்கியிருக்கின்றன. புத்தனின் சடலத்தை மிதித்தபடி என் வார்த்தைகள் கொடுக்குகளாய் மாறுவதாய்ச் சொல்கிறானொரு நண்பன். நிதானமின்மையும் கோபமும் அவசரமுடிவுகளும் அலைக்கழிக்கின்றன. எல்லாபிறந்தநாட்களிலும் எல்லோருக்குமிருப்பதைப் போலவே எனக்கும் எதையாவது விட்டொழிப்பதென தீர்மானங்களிருந்திருக்கின்றன. இந்த பிறந்தநாளில் அத்தகைய தீர்மானங்களை விட்டொழிக்கலாமென ஒரு தீர்மானம். கடந்துபோன உறவுகளை யாராவது எப்போதாவது நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். சென்றவருடம், அதற்கும் முந்தைய வருடம், அதற்கும் முந்தைய ...இப்படியாக வாழ்த்துக்கள் சொன்னவர்களை இழந்திருக்கிறேன். இவ்வருடம் எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூடலாம். என்றபோதும் எப்படியாயினும் வாழ்வில் புக அனுமதித்த இந்தக் கணங்கள் பரவசப்படுத்துகின்றன அர்த்தமுற்றோ அற்றோ... happy birthday to me!

Sunday, November 11, 2007

அலிபாபாவும் 39 திருடர்களும்


















"புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம், எதிர்கால ஈழத்தின் தாகம் கோக் பெப்சி பானம்" என்றுரைத்து, எப்படியும் அமெரிக்காவின் புண்ணியத்தில் தமிழீழம் மலரும் என்று நம்பும் சூரியகாந்தன் ஒரு ஈழத்து எழுத்தாளர்.

'வாலறுந்தால் முளைப்பது
பல்லிகளுக்கு மட்டுமல்ல
புலிகளுக்கும்தான்" என அவ்வபோது நறுக்குகளும் எழுதுவார்.

எல்லா மனிதர்களுகும் ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. புத்தகத்தை வாங்கியவுடன் முகர்ந்து பார்ப்பது, அடுத்தவர் வீடு மற்றும் அரசு நூலகத்தில் நூல்களைத் திருடுவது, யூ டியூபில் போய்ப் பழைய சிலுக்கு படங்களைப் பார்த்து ரசிப்பது என.. அப்படி சூர்யகாந்தனுக்கு இருக்கும் வியாதி, இலக்கியவாதிகளைச் சந்தித்து அளவளாவுவது. இலக்கியவாதிகளிடம் இரண்டுவருடம் பழகுவது ஆயிரம் கட்டுவிரியன் குட்டிகளுடுடன் ஒரு கண்ணாடி அறையில் வசிக்கும் சாகசத்திற்குச் சமம் என நான் தலையாலடித்துச் சொல்லியும் அவர் கேட்பதாயில்லை.

நாங்கள் அன்றைகுச் சந்தித்தது பிரபல எழுத்தாளரும் 'கௌ' பத்திரிகையின் ஆசிரியரும், அல்வாக்கடை வியாபாரியுமான சுந்தரேசன்கொங்கணன். நாங்கள் போனபோது வீடியோவும் கையுமாக புத்தக அலமரியில் சாய்ந்துகொண்டும், கன்னத்தில் கைவைத்து மோட்டுவளையில் ஊர்ந்துகொண்டிருந்த பல்லியை முறைத்துக்கொண்டும், இன்னும் பலவாறான போஸிலிமிருந்தார். என்னவென்று ஒருகணம் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது. அவரின் முன்னோடியும் 'உள்ளொளி' பத்திரிகையின் ஆசிரியரும் ஜவுளிக்கடை வியாபாரியுமான எழுத்தாளர் சூனாசாமி ஏற்கனவே புகைப்படக்கண்காட்சி நடத்தி முடித்ததால் கொங்கணனோ புதுமையாக வீடியோகண்காட்சி நடத்தத் திட்டமிருந்தார் என்பது.

அவர் இந்த இலக்கியப்பணியில் மும்மரமாக இருக்கும் வேளையில் நான் அவரது மேசையிலிருந்த இரண்டு தட்டச்சுப்பிரதிகளைத் திருடினேன். இலக்கியவாதிகளிடம் திருடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. அவர்களே எங்கிருந்தோ திருடத்தான் செய்கிறார்கள் என்றும் சமயத்தில் அவர்களிடமிருந்து நான் திருடி எழுதும்போது அவர்கள் எழுதியிருந்தால் வந்திருப்பதைவிட நன்றாகவே இருகிறதென்றும் சமாதானம் சொல்வேன் (கூசாமல்).

முதலில் இருந்தது கல்யாணமன்னன் ஹைதர் அலியைப் பற்றி 'ஆதிக்குகை' பத்திரிகைக்கு அவர் எழுதியிருந்த கட்டுரை, 'தமிழ்ச்சமூகத்தில் பாலியல் ஒடுக்கமும் பலதாரமணமும்'. அதே கட்டுரையிலிருந்த சில வார்த்தைகளை நீக்கிவிட்டு 'ஜேப்படிபையன்' என்ற பெயரில் 'தினப்பூ - வாரப்பூ' பத்திரிகைக்கு 'ஜல்சா மன்னனின் சரச லீலைகள்' என்னும் தலைப்பில் ஒரு கிளுகிளுப்பான கட்டுரையை வரைந்திருந்தார். என்னை அவ்விரு கட்டுரைகளும் ஈர்க்கவில்லை. அவர் அடுத்து எழுதவிருந்த ஒரு நாவலுக்கான குறிப்புகளே என்னை ஈர்த்தன. இனி இந்த நாவலை நானும் நீங்களும் சேர்ந்து எழுதலாம். நான் மூலக்குறிப்புகளிலிருந்து பலவற்றை மாற்றியிருக்கிறேன். அவர் எழுதியிருக்கும் சில பொய்களுக்குப் பதிலாக நான் வேறுசில பொய்களை எழுதியிருக்கிறேன். கொங்கணன் நாவலுக்கு வைத்த தலைப்பு 'குரங்குகள் ஆண்கள் பெண்கள்'. நான் தலைப்பை மாற்றிவிட்டேன்...

-------------------------------

14ம் நூற்றாண்டில் பாண்டிநாட்டின் பள்ளியூர் என்னும் குக்கிராமத்தில் வசித்துவந்தவன் விமலநந்தன். அவன் புதிதாய் ஒரு மார்க்கத்தைக் கற்பித்துவந்தான். அம்மார்க்கத்தின் பெயர் விமலாதீகம் என்றழைக்கபட்டது. குழந்தைமையே உன்னதம் என்பதே அக்கோட்பாட்டின் அடிப்படை. குழந்தை பிறந்து ஆறுமாதங்கள் வரை மட்டுமே பவுத்திரமாக இருக்கிறது. அதற்குப் பின் மற்றவர்களின் கருத்துக்கள் ஏற்றப்பட்ட கழுதையாக மாறிவிடுகிறது. எனவே மனிதாயம் என்பதும் வன்முறையற்ற பேரன்பும் அறியாமையும் ஆறுமாதங்கள் வரை மட்டுமே சாத்தியம். விமலநந்தன் இருபத்தாறு குழந்தைகளைப் பெற்றெடுத்தான். நாற்பத்திரண்டு குழந்தைகள் வரை தத்தெடுத்து வளர்த்துவந்தான். ஆனால் குழந்தைகள் ஆறுமாதம் வளர்ந்தபிறகு அக்குழந்தைகளைக் கொன்றுவிடுவான். இவ்வாறாக குழந்தைமையின் புனிதத்தைக் காத்துவந்தான். இருபத்தாறு குழந்தைகளைப் பெற்றுக் கொல்வதற்குள் விமலநந்தனுக்கு தொண்ணூறு வயதாகிவிட்டது. இனி கொல்வதற்குக் குழந்தைகள் இல்லை,இப்போது தானே ஒரு குழந்தையாய் இருப்பதை உணர்ந்தான், ஆறுமாதத்தில் இழந்த தனது உன்னதமான குழந்தைமையை தொண்ணூறு வயதில் பெற்றிருந்தான். இதற்கு 89 வருடங்களைக் கடந்துவரவேண்டியிருந்தது. விமலன் வடக்கிருந்து உயிர்துறந்தான் என்றும் தீர்த்தங்கரர் மலையுச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டான் என்றும் கொலைகள் செய்த குற்றத்திற்காக அரசனால் தண்டிக்கப்பட்டான் என்றும் பல்வேறு கதைகள் உலவி வருகின்றன.
------------------------------------------


எழுத்தாளர் சுருளியாண்டி சமீபத்தில் வந்த இயக்குனர் சிற்றரசுவின் 'எருமைக்காரன் பாளையம்' என்னும் திரைப்படத்திற்கான விமர்சனத்தை எழுதி, அதற்கு 'தமிழ்நிலப்பரப்பில் ஒரு விளிம்புக்குரல்' என்று தலைப்பிட்டு உகாண்டா நாட்டுத் திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக விளிம்புநிலை மக்களின் குரலை மிகச்சரியாகப் பதிவு செய்தது 'எருமைக்காரன் பாளையம்'தான் என்று எழுதி தனது நண்பர் சாலமன் நடத்தும் 'தொன்மநிழல்' பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். இடையில் என்ன மேஜிகல் ரியலிசம் நடந்ததோ சாலமனின் கைகளுக்குப் போய்ச் சேரும்போது அந்த கடிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.

மதிப்பிற்குரிய இயக்குனர் எவரெஸ்ட் சிற்றரசுவிற்கு,

தங்களின் 'எருமைக்காரன் பாளையம்' திரைப்படம் பார்த்தேன். மிகச்சிறந்த படம். அதிலும் குறிப்பாக நீங்களே எழுதியிருந்த பாடலான

'ஙொம்மாவும் எங்கம்மாவும் சேரமுடியுமா
ங்கொப்பாவும் எங்கப்பாவும் கூடமுடியுமா'

என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. நான் இருபத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறேன். பல்வேறு இலக்கியச்சண்டைகளிலும் பங்குபெற்றிருக்கிறேன். எனவே உங்கள் அடுத்தபடத்திலாவது எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களென்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள
சுருளியாண்டி.

===================================================================

அழகிய தமிழ்மகன் - சிறுகுறிப்பு வரைக.

எனக்கு விஜய்யைப் பிடிக்காது, ஸ்ரேயாவைப் பிடிக்கும். நேற்று இரவு அழகிய தமிழ்மகன் படம் பார்த்தேன். வலைத்தளங்களில் காதலின் பிரிவும் பிரிவின் நிமித்தமும் எழுதப்படும் புலம்பல் கவிதைகளைவிட மொக்கையாக இருந்தது. ஸ்ரேயா படம் முழுக்க அழகாக சிரிக்கிறார், ஆனால் நடிக்கவில்லை. திறந்த மனது கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஸ்ரேயா படம் முழுக்க திறந்த முதுகுக்காரராக வருகிறார். நமீதாவைப் பார்க்கும்பொதெல்லாம் நாளை மதியம் சமையலுக்கு எத்தனை கிலோ கறி வாங்க வேண்டும் என்னும் கேள்வியே அடிக்கடி வருகிறது. வழக்கம்போல ரகுமானின் இசையில் பாடல்கள் தியேட்டரில் புரியவில்லை, எப்.எம்மிலோ கேசட்டிலோ கேட்கும்போது புரியலாம்.'பொன்மகள் வந்தாள்' பாடல் சூப்பர். 'கெட்ட விஜய்' ரஜினி போல நடிக்க முயன்று தோற்றிருக்கிறார். இந்த வில்லன் வேடத்தில் உண்மையிலேயே ரஜினி நடித்திருந்தால் அசத்தியிருப்பார், (மூன்றுமுடிச்சை மறக்கமுடியுமா?). இதேமாதிரியான ஆன்டி ஹீரோ சப்ஜெக்டில் விஜய் 'பிரியமுடன்' படத்தில் நன்றாகத்தானே நடித்தார்? எந்தக் கல்லூரியில் 'அழகிய தமிழ்மகன்', 'அழுகிய தக்காளி மகன்' என்றெல்லாம் விருதுகள் தருகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கள் கல்லுரியில் எல்லாம் எனக்கு 'அழகிய அரியர்ஸ் மகன்' விருதுதான் தந்தார்கள். இந்த ஈ.எஸ்.பி என்றால் என்ன? எதிர்காலத்தில் நடபதை அறிகிற சக்தி. அதுசரி? எதிர்காலத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, ஆக்சிடென்ட் இந்த மாதிரியான எழவுகளை மட்டுமே ஒளிபரப்பும் தனியார் சானலா அது? எதிர்காலத்தில் கல்யாணம், காதுகுத்து, சடங்கு இதெல்லாம் நடக்காதா, இதையெல்லாம் ஈ.எஸ்.பி சொல்லாதா? ஸ்ரேயாவை விஜய் குத்திவிடுவதைப்போல ஈ.எஸ்.பி பிரமை வந்து, பிரச்சினைகள் முடிந்து சுபம் போடுகிறார்களே, 'நல்ல' விஜய்க்கும் ஸ்ரேயாவிற்கும் கல்யாணம் முடிந்தபிறகு ஸ்ரேயாவையோ, ஸ்ரேயாவின் அப்பா, விஜய்யின் அப்பா, அம்மா, கஞ்சாகருப்பு இவர்களில் யாருக்கோ கத்திகுத்து, டிரெய்ன் ஆக்சிடெண்ட், குச்சிமிட்டாய் சாப்பிடும்போது தொண்டையில் அடைத்து சாவு - இப்படி எந்த எழவும் விழாதா? அதைக் கல்யாணத்திற்கப்புறம் ஈ.எஸ்.பி சொன்னால் விஜய் என்ன செய்வார்?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இறுதித்தீர்ப்பின் மறுநாளில்
பிணங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பெருவெளி.
மைதானமெங்கும் வெறும் அமைதியே சூழ்ந்திருந்தது.
ஒரே ஒரு அழகிய இளைஞன் மட்டும் உழைத்து அழகிய கறுத்த உடலுடன் புன்னகை மாறாமல் திரிந்துகொண்டிருந்தான். அவன் கையில் குழலும் பறையுமிருந்தன. பல்வேறு கனிகளைப் புசிப்பவனாயிருந்தான். தயங்கித் தயங்கி அலிபாபா கேட்டான், "நீங்கள் யார்?" இளைஞனோ கைகுலுக்குவதற்காய் கைகளை நீட்டினான். எதேச்சையாய் அலிபாபாவின் கரங்கள் தானாகக் கூப்பின.

இப்போது உரக்கச் சிரித்த இளைஞன், "பிறரைத் தீண்டுவதைத் தவிர்க்கும் தந்திரம்தான் உங்கள் கைகூப்பிய வணக்கம். எனக்கு அத்தகைய மனத்தடைகள் கிடையாது" என அலிபாபாவை ஆரத்தழுவிக் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே இளைஞன் சொன்னான் 'நான் தான் சாத்தான்"

அலிபாபா ஒரு கணம் திகைத்துப் போனான்.

மேலும் தொடர்ந்தவன் " பல்வேறு காலங்களில் பல்வேறு பெயர்கள் சித்தார்த்தன், மகாவீரன், கம்யூனிஸ்ட், நக்சலைட் என இப்படி. கையாலாகாத கடவுளின் அதிகாரம் குறித்துத் தொடர்ந்து கேள்வியெழுப்பும் கலகக்காரன் நான்"

"நீ கொடியவனில்லையா?"

இப்போது சாத்தான் இன்னும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினான், "அலிபாபா, நான் கொடியவனாயிருந்தால் இந்நேரம் நீ கேள்விகேட்டிருக்க முடியாது. காமம் என்னும் அழகிய உணர்வைக் கேவலம் ஒரு ஆப்பிளுக்குள் ஒளித்து வைத்த முட்டாள் கடவுள். நான் தான் சின்னஞ்சிறு கனியிலிருந்து காமத்தை விடுதலை செய்தேன், மனிதர்களையும். இந்த உலகம் காதலாலும் அன்பாலும் நிரப்பப்பட்டிருக்கிறதென்றால் அது என்னால்தான்"

"உனக்கு அழிவு கிடையாதா?"

"மீண்டும் மீண்டும் கேள்வி. நல்லது. கடவுளின் ராஜ்ஜியத்தில் நீ கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை. சாத்தானின் அருகாமையில் மட்டுமே நீ கேள்விகளை எழுப்பலாம், விமர்சிக்கலாம். கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தார் என்று உனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதே அலிபாபா, என்னைப் படைத்தது யாரென்று சொல்லப்பட்டிருக்கிறதா? கடவுளின் மரணத்தைச் சொன்னவன் நீட்ஷே. கடவுளுக்குத்தான் மரணம் உண்டு. அளவற்ற அன்புடையவனும் தோழமையுணர்வில் ஊறித்திளைப்பவனும் சமத்துவத்தையும் அறத்தையும் நேசிப்பவனுமான சாத்தானுக்கு மரணமில்லை"

Sunday, November 4, 2007

வீரவணக்கம்!

ஆதிக்கச்சாதி நாய்கள் இன்னொரு சாதிவெறியனின் காலையே நக்கித் திரிவார்கள் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. சாதிவெறியும் இந்துமதத்திமிருமுடைய முத்துராமலிங்கம் என்னும் கேடுகெட்ட தேசவெறியனுக்கான நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடிய கருணாநிதி அரசு, கருணாநிதிக்கு கலைஞர் என்னும் பட்டத்தை வழங்கிய கலகக்கலைஞன் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டுவிழாவைப் புறக்கணித்திருக்கிறது. அடுத்தாண்டு கலைவாணர் என்.எஸ்.கேவின் நூற்றாண்டுவிழா. அதுவும் கொண்டாடப்படுமா அல்லது வேறு ஏதாவது சாதித்தலைவனின் நூற்றாண்டு வருமாவெனத் தெரியவில்லை. கொலைகாரனும் சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாகய உணர்வற்றவனுமான முத்துராமலிங்கம் திருவுருவாக்கப்படும் இப்போதில் அவனை எதிர்த்து கொலையுண்ட தோழர். இம்மானுவேல் குணசேகரனையும் எதிர்வரும் நவம்பர் 26ல் சாதியொழிப்பிற்காய் அரசியல்சட்டத்தைக் கொளுத்தி சிறைசென்ற போராளிகளையும் நினைவுகூர்வோம்.

Tuesday, October 2, 2007

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...
















அடிக்கடி வலைப்பதிவாளர்களிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு, 'வரமாத்தேன் போ' என்று சிலர் கிளம்புவதால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே பிறப்பெடுத்த 'திராவிடக் கல்கி', நாட்டாமை முத்துதமிழினி பதிவாளர்களுக்கிடையே உரையாடலோ, விவாதமோ என்ன கண்றாவியோ ஏற்பாடுசெய்கிறார். ஆனால் பதிவர்கூட்டங்களுக்கு வராததுதான் அவரது லேட்டஸ்ட் டிரெண்ட் என்பதால் அவர் மட்டும் ஆஜராகவில்லை.....

(வலைப்பதிவாளர்கள் தங்களுக்குள் சீரியசாகப் பேசிக்கொண்டிருக்கும்போது தலைவிரிகோலமாக மூர்த்தி ஓடிவருகிறார்...)

மூர்த்தி : கிறிஸ்துவன் எப்ப திராவிடன் ஆனான்?

செந்தழல் ரவி ( டென்சனாகிறார்) : டேய் மலேசிய நாதாறி!

சுகுணா : கூல்டவுன் ரவி, கருத்துக்களை நிதானமாக எதிர்கொள்ளவேண்டும்.

குழலி : இப்படித்தான் சொல்வீங்க! ரெண்டுவாரத்திற்கு முன்னால நீங்கமட்டும் மெகாசீரியல் கணக்கா அழுவாச்சிகாவியம் பாடலியா? ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரேக்கிங்பாயிண்ட், கண்மணி அன்போடு காதலன் நான் ....

சுகுணா : ஹலோ, நிறுத்துங்க குழலி, கேப் கிடைச்சா போதுமே குணா, குருதிப்புனல்ன்னு கமல் டயலாக்கோடு வந்திடுவீங்கல்லே! சரி, அதைவிடுங்க, தோழர் மூர்த்தி, உங்க கேள்வியே அபத்தமானது. தோழர் பெரியாரின் விளிப்பில் பார்ப்பனரல்லாத கிறித்துவர், முஸ்லீம்கள் என அனைத்து இந்துவற்ற சமயத்தாரும் அடங்குவர். வித்தியாசங்களை அங்கீகரித்து பன்மையில் ஒருமையைக் காணும் ஒரு அரசியல் நிலைப்பாடு..

ரவி : இதுக்கு மூர்த்தி திட்டினதே பரவாயில்லப்பா, இந்தாள் பேசறது ஒரு இழவும் விளங்கமாட்டேங்குது...

தோழர்கள் : சுகுணா, பெரியாரைத் தோழர்ன்னு சொன்ன அதேவாயால மூர்த்தியையும் எப்படித் தோழர்ன்னு சொல்றீங்க? இதை நாங்கள் கண்டிக்கிறோம்..

அய்யனார் : பெருவெளியில் கிளைத்த பன்மைச்சமவெளியில் எல்லாவற்ரையும் அங்கீகரிக்கும் மனோநிலையும் புனிதங்களின் மீதான கட்டவிழ்ப்புமே தோழர் என்று சுகுணாவைச் சொல்லவைத்தது..

சுகுணா : யோவ், நீ பேசறது எனக்கே புரியலை, போத்ரியா கொட்டேசன்ல்லாம் யூஸ் பண்றியே, காபிரைட் வாங்கிட்டியா?

அய்யனார் : இல்லீங்ண்ணா...

சுகுணா : அப்ப கொஞ்சம் அமைதியா இரு...

மாலன் : எக்ஸ்கியூஸ் மீ, பிரபாகரனுக்கு வயிற்றுவலின்னு தினமலரில் ஒரு கட்டுரை வந்திருக்கு. அதை நான் டிரான்ஸ்லேட் பண்ணிருக்கேன். வாசிச்சுக் காட்டவா?

ரவி : தினமலர்ல தமிழ்ல்லதானே வரும்? அப்புறம் ஏன் டிரான்ஸ்லேட் பண்ணினீங்க?

மாலன் : எனக்குத் தெரியும், அடுத்து இந்துராம் மகள் ஏன் அமெரிக்காவில் படிக்கிறாங்கன்னுதானே கேக்கப்போறீங்க?

ரவி : அவங்க கொரியாவிலையா படிக்கிறங்க?

மாலன் : இல்லையே,

ரவி : அப்புறம் ஏன் நான் கேக்கப்போறேன்?

அய்யனார் : மாலனின் இந்த விஷமத்தை ஏன் செல்லா கண்டிக்கலை?

செல்லா : மாலனுக்கு மஞ்சக்காமாலை

அய்யனார் : என்னது?

செல்லா : ஆமா, பிரபாகரனுக்கு வயிற்றுவலி, மாலனுக்கு மஞ்சக்காமாலை..

அய்யனார் : மாலனை என்ன செய்யலாம்? மாலனை என்ன செய்யலாம்?

செல்லா : நான் நமீதாவையே என்ன செய்யலாம்ன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்தாள் வேற. எனக்கு அழுகை அழுகையா வருது... கண்ணீர் வருது சாமி, நான் போறேன், ஒரு நிமிசம் என் கேமிராவை எடுத்துட்டுப்போறேன்...

ரவி : ஹலோ, அது என்னோட கேமிரா...

(கேட்காமல் செல்லா போய்விடுகிறார்.. இரண்டுநிமிடம் கழித்து உள்ளே வந்து தமிழச்சியிடம் போய்...) நான் போறேன், நான் போறேன்..

தமிழச்சி : வருவியா, வரமாட்டியா? வரலைன்னா உன் பேச்சு கா...

செல்லா : வந்துட்டே....ன். தோழி, அடுத்தமுறையாவது புது ஆயுதத்தோடு வா! சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்கவேணும் பேரப்புள்ள, தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதானே கருத்து!

சுகுணா : நல்ல கருத்தா இருக்கே, யார் சொன்னது?

செல்லா : வேற யாரு, போக்கிரி விஜய்தான். அடியும் உதையும் கலந்துவச்சு இடுப்பு எலும்பை ஒடிச்சுவச்சா போக்கிரி பொங்கல், கராத்தே அடியைக் கலந்துவச்சா தமிழச்சி பொங்கல், தமிழச்சி பொங்கல்...( குதித்துக் குதித்துக் குத்தாட்டம் போடுகிறார்)எக்ஸ்கியூஸ்மீ தமிழச்சி, புதுசா எடுத்த போட்டோ இருக்கா?

சுகுணா : செல்லா, நீங்க செய்றது நியாயமே கிடையாது. நாங்க எவ்வளவு சீரியசா பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லாம இருக்கீங்க.. தோழர் தமிழச்சி நீங்களும் இதுக்கு உடந்தையா?

தமிழச்சி : நோ நோ, என்க்கு டமில் கொஞ்சும் கொஞ்சும்தான் தெரியும். வருவியா வரமாட்டியால்லாம் டமிலா? நான் கராத்தெஎ, பிளாக்பெல்ட் இத்ல்லாம்தான் டமில்ன்னு நினைச்சேன்..

பொட்டிக்கடை சத்யா : தமிழே தெரியாத நீங்க எப்படி தமிழச்சின்னு பேர்வைக்கலாம்? இது டமிழனுக்கு, சாரி மாமூ, தமிழனுக்கே அவமானம்.

மூர்த்தி : தமிழன் எப்ப திராவிடன் ஆனான் ?

(கூட்டத்திலிருந்த பலர் டென்சனாகின்றனர்)

சுகுணா : தோழர், தமிழர்களுக்கும் திராவிடர்களுக்குமுள்ள வித்தியஅசத்தைப் பெரியார் 1927ல்.......

மூர்த்தி : பெரியார் எப்ப திராவிடன் ஆனார்?

(அதற்கப்புறம் முழுடென்சனான திராவிட ஆப்பாயில் குஞ்சுகளின் கொலைவெறிக்கூத்தை நட்சத்திர வாரம் கொண்டாடும் 'சும்மா டைம்பாஸ் மச்சி' கருந்திரையில் காண்க)