Saturday, January 5, 2008

திருட்டைப் பற்றி ஒரு தியரி

















இந்தத் தலைப்பே திருடப்பட்டதுதான். திருட்டு என்பது மனித அடிப்படைக் குணாம்சமெங்களிலொன்று. புத்த்கம் திருடுவது, திருடப்பட்ட புத்தகத்தைப் பதிப்பிப்பது, பக்கத்து வீட்ட்டுப்பெண்ணின் உள்ளாடைகளைத் திருடுவது எனத் திருட்டுக்கள் பலவகைப்படும். உண்மையில் சொல்லப்போனால் திருட்டின் தந்தை என்று கடவுளைத்தான் சொல்லவேண்டும். ஆதி மனுசனையும் மனுசியையும் படைத்த கடவுள் அவர்களிடமிருந்து வெட்கத்தைத் திருடிக்கொண்டுதான் படைத்தார். கண்டுபிடித்துக்கொடுத்த திருவாளர் சாத்தானை உலகின் முதல் போலீஸ்காரர் என்று சொல்லலாம், தவறில்லை.எழுத்தை எழுத்தால் எழுதிக்கொண்டிருக்கிறது எழுத்து. இதுவும் ஒரு திருடப்பட்ட வரி, இதுவும்கூட நீர், நீரால் நீரை நீரடித்துச்செல்கிறது என்னும் பதியப்படாத ஒரு வரியிலிருந்து திருடப்பட்டிருக்கலாம். இப்போது திருட்டு முக்கியமா, எனில் இல்லை திருட்டைப் பற்றி ஒரு கதைகூறும் விருப்பம் அல்லது அரிப்புதான் முக்கியம். நாம் முதன்முதலில் கற்றுக்கொண்ட கதையும் திருட்டைப்பற்றித்தான் என்றால் உங்களுக்குப் புரியுமா? எப்படியோ அலிபாபாவின் குகையில் தொலைந்துபோன அந்த 40வது திருடனைக் கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி. இதுவரை திருடியதற்கும் இப்போது திருடப்போவதற்கும் ஏதேனும் குறிப்பு தருவதாய் உத்தேசமில்லை. இதுவரை எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எது நடக்கிறதோ அதுதானே நடக்கும், மேலும் எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டதும்கூட. எடுக்கப்பட்ட எல்லாமும் கொடுக்கப்படவும் செய்யும். கோபியரின் திருடப்பட்ட சேலைகள் திரவுபதைக்குப் பரிசளிக்கப்பட்டதே திருட்டைப்பற்றிய கதைகளின் நீள்வட்டப்பாதையின் இயக்கம்...மய்யத்தில் தாயக் கட்டங்களைக் கிழிக்க
குச்சிகளைத் தேடிச் சோர்ந்து எண்பதாயிரம் மைல் தொலைவிலிருக்கும்
ஐம்பதாயிரம் வயது கொண்ட அல்லாவிடம் வரம் பெற்றவர் ராவணன்! ராமரை விட இதில் லட்சுமணனுக்கு முக்கியத்துவம் அதிகம். அதுமட்டுமல்ல இந்த ராமாயணத்தில் ராமருக்கும், சீதைக்கும் பிறந்தவர் அனுமன்!""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை. ஷோபனா. 1.ஆங்கிலம் படித்தவர் 2. மேட்டிமையாளர் (எலிடெ) 3. வெள்ளை நிறம் கொண்டவர் 4. நகர்புறப் பண்பாட்டில் வளர்ந்தவர் 5. நாகரிகமானவர் 6. உயர்சாதியான பார்ப்பனர். இந்த முரணின் எதிர்நிலையில் இருப்பவாகள் மற்ற 9 மாணவர்களும். இவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் துவங்கி தெலுங்கர் முஸ்லிம் கிறித்துவர் உட்பட எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். உடல் உழைப்பாளிகள்.கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய் நாஞ்சில் நாடனுக்கு இப்போது வீரநாராயண மங்கலத்து ‘வெள்ளாம்புள்ளையோ’ கொள்ளும் நவீனமயமாதலில் ஆதாரமான கோபம் இருக்கிறது. பந்திப்பாயை விரித்து நுனியிலை பரப்பி உப்புதொட்டு கூட்டுகறி வரை விதிப்படி பரிமாறி பருப்பும் நெய்யும் பெய்து ‘மூட நெய்விட்டு மூக்கு வழிவார’ உண்ணும் பண்பாடு அழிகிறது.ஐபிஎம் இந்தியாவில் அவர்களது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களை 75000 மாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. அமெரிக்கா தாண்டி மிக அதிக பணியாளர்கள் பணியாற்றும் இடம் ஐபிஎம்பிற்கு இந்தியா தான். ஆரகிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், என மென்/வன் பொருள் நிறுவனங்கள், மெதுவாக அமெரிக்காவிலிருந்து கடையினை கொஞ்சமாக கொஞ்சமாக காலி செய்து கொண்டு பெங்களூரிலோ, சென்னையிலோ, மும்பையிலோ டேரா போடப் போகிறார்கள். இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். சொல்லப்படுகிற வரலாற்றிலும் எழுத்திலும் தனது தீவிரமான இடையீட்டை நிகழ்த்தக் கூடிய பெண் எழுத்து என்பது ஒரு மாற்றுச் செயல்பாடே. தற்போதுள்ள எழுத்தின் மொழி ஆண்மைய ஒழுங்கினால் உருவாக்கப் பட்டு பரிபாலிக்கப் படுகிற ஒன்று.இன்று உலகம் முழுவதும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் யுத்தமுனைகளில் தள்ளப்பட்டும் பாலியல் வதைகளுக்குள்ளாக்கப்பட்டும் இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும், ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.ஆடை ஏற்றுமதி வணிகம் செய்துவந்த நீதிபதி சபர்வாலின் இரண்டு மகன்கள் 2004-ம் ஆண்டு இறுதியில் பெரும் வணிகக் கட்டடங்கள் கட்டி விற்கும் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் முன்னணியில் இருந்த காபுல் சாவ்லா என்பவருடன் பங்குத்தாரராக இணைந்து அத்தொழிலில் ஈடுபட்டனர்

காக்கா வடை 'சுட்ட' கதை 1.

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம், இல்லேல்லே, பாட்டி இருந்துச்சாம், இல்லேல்லே, நரி இருந்துச்சாம், எதுதான் முதல்முதல்ல இருந்துச்சாம். இப்படியும் கூட சொல்லலாம். வடை இல்லையேல் கதை இல்லை. காக்காவைவிட பாட்டியை விட நரியை விட வடையே முக்கியம் என்பதே நீதியாம்.

காக்கா வடை 'சுட்ட' கதை 2

அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை வடைக்குப் பதிலாக முறுக்கு என்று வைத்துக்கொண்டால் கதை சொல்ல முடியாதா? இங்கு வடையோ, அடையோ, கதையோ எதுவுமில்லாமல் வருவதில்லை.

3.

நானை நானிடமிருந்து திருடி நானுக்கு விற்கும் ஒரு திருட்டு நான்.

4.

.

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டிகிட்டயிருந்து வடையைத் திருடுச்சாம். மரத்துமேல உக்காந்து காக்கா வடைய சாப்பிடப் போகும்போது பறந்து வந்து கீழே உக்காந்த கழுகு, 'காக்கா காக்கா உன் குரல் அழகாயிருக்கு, ஒரு பாட்டுப் பாடேன்'ன்னுச்சாம். காக்காவும் பாட்டுப்பாடும்போது கீழே விழுந்த வடையைத் தூக்கிட்டு கழுகு பறந்தே போயிடுச்சாம். இருந்தாலும் காக்காவுக்குக் கவலையில்லை. அது திருப்பித் திருப்பிப் பாடுச்சாம், 'ஜாரே ஜகான் ஹி அச்சா, ஜார்ஸ் போனாராம் உச்சா, உச்சா.....

10 comments:

முரளிகண்ணன் said...

aaha onnum puriyalai.

bala said...

வெளியே மிதக்கும் அய்யா,
எல்லா திருட்டையும் சொன்ன நீங்க ஒரு சுவாரசியமான திருட்டை திருட்டுத்தனமா மறைச்சுட்டீங்களே?
கோபமான மூட்ல இருந்த கடவுள் ,உங்களைப் படைக்கும் போது,ஒரு பன்னியோடா பின்புறத்தை திருடி ஒட்டி விட்டு அனுப்பியதாலதானே உங்க பின்ன நவீனமா திருட்டு கோட்டாயிட்டீங்க.


பாலா

Ayyanar Viswanath said...

சொல்லிவிட்டு / அனுமதிவாங்கிவிட்டு செய்தால் திருட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் அல்லது அடிக்குறிப்புகளை இட்டாலும் திருட்டாகாது..மேலும் அந்த நாற்பதாவது திருடனை தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தால் சொல்லவும் :)

/நானை நானிடமிருந்து திருடி நானுக்கு விற்கும் ஒரு திருட்டு நான்./

superb...

காயத்ரி சித்தார்த் said...

//ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம், இல்லேல்லே, பாட்டி இருந்துச்சாம், இல்லேல்லே, நரி இருந்துச்சாம், எதுதான் முதல்முதல்ல இருந்துச்சாம். இப்படியும் கூட சொல்லலாம். வடை இல்லையேல் கதை இல்லை. காக்காவைவிட பாட்டியை விட நரியை விட வடையே முக்கியம் என்பதே நீதியாம்.
//

இந்த கதய சொன்னதுல இருந்து பக்கத்து வீட்டுக்குழந்தை என்னைப் பாத்தாலே வீல்னு அலறிட்டு ஓடிப் போய்டுது... சுகுணா ஏனிந்த கொலை வெறி? :)

K.R.அதியமான் said...

பின் ந‌வினத்துவ பாணியில், எப்படி வேண்டுமானாலும் பின்னோட்டம் இடலாம் என்பதால், சம்பந்தமில்லாத ஒரு பின்னோட்டம் !!! :

'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்

ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட கிழக்கிந்திய கம்பேனியின் ஞாபகம் இன்னும் பலரையும்வாட்டுகிறது. சூழ்நிலைகளும், கால கட்டமும் பலவிதமாக மாறினாலும் இந்த பயம் இன்னும் பல இடது மற்றும் பிற சிந்தனைகளை இன்றும் பாதிக்கிறது.

'பன்னாட்டு நிருவனங்களை இங்கு தொழில் தொடஙக அனுமதித்தால், அவை நம் வளங்களை சூறையாடும் ; ஏழை தொழிலாளிகளை சுரண்டும், சிறு தொழில்களை அழிக்கும், அரசின் கொள்கைகளை மறைமுகமாக கட்டுப்ப‌டுத்தும்' ; இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள், பயங்கள். 1950 முதல் 1991 வரை நமது பொருளாதார கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டன.

1955இல் யு.எஸ்.ஸ்டீல் என்னும் அமெர்க்க கம்பெனி, பிகார் / ஒரிசா பகுதிகலில் ஒருபெரிய எஃகு ஆலை அமைக்க விரும்பியது. ஆனால் நமது 'ஜனனாயக சோசியலிச' அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. அந்நிறுவனம் முதலீடு (டாலர்களில்), தனது தொழில்நுட்பம் மற்றும் (மேனெஜ்மென்ட்) நிர்வாக மேலான்மை போன்றவற்றை முழுவதும் இங்கு பயன்படுத்த தாயாராக இருந்தது. ஆனால் அரசு மிக அதிக செலவில், பொதுத் துறையில், பிலாய் எஃகு ஆலை அமைத்தது. அந்த‌ ஆலைக்கு தேவையான‌ ப‌ல‌ ஆயிர‌ம் கோடி முத‌லீட்டை நாம் க‌ட‌ன் வாங்கியும், ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்திலிருந்தும் செல‌வ‌ளித்தோம். ப‌ல‌ ஆண்டுக‌ள் ந‌ஷ்ட‌த்திலும், ல‌ஞ்ச‌ ஊழ்ல்க‌ளிலும், நிர்வாக‌ சீர்கேடுக‌ளிலும் அது ந‌ம‌க்கு மிக‌ப் பெரிய‌ சுமையாக‌ இருந்த‌து. அதே ச‌ம‌ய‌ம் எஃகு தேவை மிக‌ அதிக‌ரித்த‌தால், ப‌ற்றாக்குறைக‌ள், க‌ருப்பு மார்க்கெட் உருவான‌து. சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின்ப‌டி, எந்த‌ ஒரு தனியார் நிறுவ‌ன‌மும் த‌ன‌து இஷ்ட்ட‌ம் போல் த‌ன்து உற்ப‌த்தியை பெருக்க‌ அனும‌தி இல்லை. அத‌னால் டாடா ஸ்டீல் நிறுவ‌ன‌மும் உற்ப‌த்தி திற‌னை (புதிய‌ ஆலைக‌ள் அமைத்து) அதிக‌ப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை. க‌டுமையான‌ ப‌ற்றாக்குறை, விலை உய‌ர்வு, க‌ள்ள‌ ச‌ந்தை, ஊழ‌ல் உருவாகின‌.

சிம‌ன்ட், ச‌ர்க‌ரை, உர‌ம், ம‌ருந்து, பொறியிய‌ல் எந்திர‌ங்க‌ள், ஜவுளி ஆலைகள் ம‌ற்றும் அனைத்து துறைக‌ளிலும் இதே க‌தைதான். செய‌ற்கையான‌ ப‌ற்றாக்குறை, உல‌க‌ ச‌ந்தையை விட‌ மிக‌ அதிக‌ விலை, தரக்குறைவான பொருள்கள், க‌ள்ள‌ மார்க்கெட், ல‌ஞ்ச‌ம், ப‌துக்க‌ல், க‌ட‌த்த‌ல், போன்ற‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ளே உருவாகின‌. விலைவாசி இத‌ன் மூல‌ம் க‌டுமையாக‌ உய‌ர்ந்த‌தால் வ‌றுமை மிக‌ அதிக‌மான‌து.
வ‌ரி விதிப்பும் மிக‌ மிக‌ அதிக‌மாக்க‌ப்ப‌ட‌தால் புதிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் உருவாக்க‌ தொழில் முனைவோர் விரும்ப‌வில்லை. அர‌சாங்க‌ வேலைக்கு செல்ல‌வே பெரும்பாலான‌ இளைஞ்ர்க‌ள் விருப்பின‌ர். ஆனால் எல்லேருக்கும் அர‌சு வேலை த‌ர‌ எந்த‌ கால‌த்திலும் இய‌லாது. ஆக‌வே வேலை இல்லா திண்டாட‌ம் மிக மிக அதிக‌மான‌து.

1977இல் அய்.பி.எம் நிறுவனத்தை ஜனதா அரசு நாட்டை விட்டே துரத்தியது. அவர்கள்தாய்லாந்திலும், சைனாவிலும் தங்கள் ஃபெக்ட்ரிகளை அமைத்தனர். நாம் ப‌ல‌ ஆண்டுக‌ளை வீணடித்தோம். இறக்குமதி செய்ய டாலர்கள் இல்லாததால், உலக வங்கி (ஐ.எம்.எஃப்) இடமிருந்து பல‌ ஆயிர‌ம் கோடி டாலர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம். வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. இவ்வாறு திவால் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்ட‌தால், வேறு வ‌ழியின்றி க‌ட்டுப்பாடுக‌ளை த‌ள‌ர்தி, அந்ந்திய‌ முத‌லீடுக‌ளையும், ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங‌க‌ளையும் 1991க்கு பின் தாராள‌மாக‌ அனும‌தித்தோம்.
இன்று ப‌ல‌ நூறு ப‌ன்னாட்டு நிறுவ‌ங்க‌ள் இங்கு சுத‌ந்திர‌மாக‌ தொழிறசாலைக‌ள் அமைத்து மிக‌ அருமையான‌, ம‌லிவான‌ பொருட்க்க‌ளை உற்ப‌த்து செய்கின்ற‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர்க‌ளுக்கு நேர‌டியாக‌வும், ம‌றைமுகமாக‌வும் வேலை வாய்ப்பு, அர‌சுக்கு மிக‌ அதிக‌ வ‌ரி வ‌சூல், ம‌ற்றும் ம‌க்க‌ளுக்கு ம‌லிவான‌, தர‌மான பொருள்க‌ள் கிடைக்கின்ற‌ன‌. உதார‌ண‌மாக‌ : நோக்கியா செல் போன் நிறுவ‌ன்ம் சென்னை அருகே உருவான‌வுட‌ன், 1500 ரூபாய்க்கு ந‌ல்ல‌ செல்போன் கிடைக்கிற‌து. இன்டெல், அய்.பி.எம், மைக்ரோசாஃப்ட்,ஜி.ஈ., அல்ஸ்தோம், ஹுன்டாய், போர்ட், எ.பி.பி., ஹோன்டா, மிட்ஷுபிஷி, ம‌ற்றும் பல நிறுவனங்கள் வந்து உள்ளன. அன்னிய செலாவானி இருப்பும் மிக,மிக அதிகமாகி இன்று அய்.எம்.எஃப் வங்கியிடம் கடனே வாங்க அவசியமில்லா நிலை !!!

புதிய போட்டியினால், இதுவரை ஏகபோகத்தில் சுகமாக வளர்ந்த இந்திய நிறுவன‌ங்கள் (உ.ம் : பி.ஸ்.என்.எல், பஜாஜ் ஆட்டோ, அய்.டி.அய், எஸ்.பி.அய் போன்றவை) தஙக‌ளின் மெத்தன‌ போக்கிலிருந்து மீண்டு, தரத்தை உயர்த்தி, உற்பத்தி செலவை குறைத்து, நவீன தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.

பன்னாட்டு நிறுவ‌ன‌ங்கள், எதோ ஹைடெக் பொருட்க்க‌ளை 'ப‌ண‌க்கா‌ர‌' வ‌ர்க‌த்திற்க்காக‌ ம‌ட்டும், ஏழை தொழிலாளர்க‌ளை 'சுர‌ண்டி', த‌யாரிக்கின‌ற‌ன‌ என்ற‌ பொய்யான‌ வாத‌த்தை, பிர‌மையை இட‌துசாரிக‌ள் உருவாக்குகின்ற‌ன‌ர். இந்தியாவை மீண்டும் கால‌னியாக்குகின்ற‌ன‌ இவை,என்றும் கதைக்கிறார்க‌ள். முதலாவுதாக இது போன்ற நிருவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட மிக அதிக சம்பளம், சலுகைகள். மக்களுக்கு மிக நல்ல சேவைகள்/பொருட்க்கள். அரசாஙக்திற்க்கு நல்ல வரி வசூல் (அதன் மூலம் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள், நலத்திட்டங்களை அமல் படுத்த வாய்ப்பு). நாட்டின் பொருளாதாரம் முன்னேற‌ வாய்ப்பு.

1991க்கு முன் இருந்த நிலைமையே ப‌ர‌வாயில்லையா ? ஒப்பிட்டு பாருங்க‌ள். அனேகமாக‌ இதை ப‌டிக்கும் அனைவ‌ருமே ஏதோ ஒரு வ‌கையில் ப‌ன்னாட்டு நிருவ‌ன‌ங்க‌ளினால் ப‌ய‌ன்டைந்திருப்பீர்க‌ள். அல்ல‌து வேலை வாய்பை பெற்றிருப்பீர்க‌ள். யோசியுங்க‌ள் ந‌ண‌ப‌ர்க‌ளே.

Anonymous said...

இந்த மடப்.... அதியமான் எங்க பேல வேண்டும் எங்கே மோல வேண்டும் என்பதே தெரியாதா. பதிவின் சுவையைகூட பருகாமல் எதேதோ ஊளையிட்டிருப்பது எதற்கு ?

Anonymous said...

//1991க்கு முன் இருந்த நிலைமையே ப‌ர‌வாயில்லையா ? ஒப்பிட்டு பாருங்க‌ள். அனேகமாக‌ இதை ப‌டிக்கும் அனைவ‌ருமே ஏதோ ஒரு வ‌கையில் ப‌ன்னாட்டு நிருவ‌ன‌ங்க‌ளினால் ப‌ய‌ன்டைந்திருப்பீர்க‌ள். அல்ல‌து வேலை வாய்பை பெற்றிருப்பீர்க‌ள். யோசியுங்க‌ள் ந‌ண‌ப‌ர்க‌ளே.///

அதியமான்...இப்போ 1991க்கு முன் இருந்த நிலை பரவாயில்லை என்று யார் சொன்னது ?

மேலும் இந்த பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதது அது.

நீங்கள் இதுகுறித்து சொந்தமாக பதிவு ஒன்றை எழுதலாமே ?

பார்ப்பதர்க்கு ஆள் சங்கமம்.ரகுமான் போல இருந்தாலும் ஏன் இந்த தட்டையான சிந்தனை ?

மற்றபடி திருட்டு குறித்தான இந்த பதிவு, சிறந்த பின்னவீனத்துவ பதிவு என்பதில் சந்தேகம் இல்லை...

பாலா வந்துவிட்டார்...வரவணையான் எங்கிருந்தாலும் வருவார் என்பதில் சந்தேகமில்லை...

சுகுணாதிவாகர் said...

திருட்டைப் பற்றிய ஒரு பதிவில் அதியமான் பன்னாட்டுநிறுவனங்களை ஆதரித்து எழுதுவதிலே என்ன ஆச்சரியமிருக்கிறது? கடைசிக் காக்காவின் பாட்டு இப்போது அதியமானின் தொண்டைக்குழியின் வழியாக ஒலிக்கிறது.

லக்கிலுக் said...

வெளியே மிதக்கும் அய்யா!

பதிவை விட பின்னூட்டங்கள் அருமையாகவும், பொழுதுபோக்க உதவும் வகையிலும் இருக்கிறது.

பதிவுக்கு நன்றி!!!

K.R.அதியமான் said...

சுகுனா,

காக்காவாவுது, குருவியாவது.

உங்களுக்கு இன்னும் சரியாக‌ விளங்கவில்லை தான்.

தனிப்பட்ட முறையில் சொல்வதானால், இந்த கூகுள் பாளகர்,
நீங்கள் பணி புரியும் அனிமேசன் சினிமா மென்பொருள், வன்பொருள், பயணம்
செய்யும் கினெடிக் ஹோண்டா வாகனம், பேசும் செல்போன் மற்றும் பல பல் விசியங்கள் ; இவை அனைத்தும் இந்த 'சுரண்டும்','கொள்ளையடிக்கும்'பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தயாரிப்புகளே. 1991க்கு முன் இருந்ததை போலவே தொடர்ந்திருந்தால், உஙளுக்கும், எனக்கும், நம்மில் பலருக்கும், இப்போதிருக்கும் வேலை வாய்ப்புகளே மற்ற பொருட்களே கண்டிப்பாக கிடைத்திர்க்காது. எம்ளாய்மென்ட் எக்ஸ்சேஞில் பதிவு செய்துவிட்டு, தாடி வளர்த்திக்கொண்டு 'புரட்சி' பற்றி பேசி திரிந்திருப்போம். (பார்க்க : நீங்கள் பிறந்த போது வெளியான கமல் படம் : ' வறுமையின் நிறம் சிறப்பு).

ர‌வி,

பின்ன‌வின‌த்துவ‌ பாணியில் பின்னோட்ட‌மிட்டிருந்தேன். அவ்வ‌ளாவே !!!

இதோ மேலும் :

'தாரளமயமாக்கல்' என்றால் என்ன ?

'தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல், உலகமயமாக்கல்'‍‍ இவை பற்றிய தெளிவான , சரியான விளக்கங்கள் இன்னும் தழிழில் எழுதப்படவில்லை. உணர்ச்சி வேகம். கோபம் , பயம் போன்ற உண்ர்வுகளால் இவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களும் , விளைவுகளும் தெளிவாக்கப்படாமல் உள்ளன. முதலில் 'தாரளமயமாக்கல்' பற்றி புரிந்து கொள்வோம்.

சுதந்திரம் வந்த புதிதில். 1950களில் , பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி 'சோசியலிச' பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. அப்போது உலகெங்கிலும் இது போன்ற சிந்தனைகளே ஆதிகம் செலுத்தின. (அமேரிக்கா , மேற்க்கு ஜெர்மனி போன்ற சில நாடுகளை தவிர்த்து). சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின் முக்கிய‌ அம்ச‌ம் ' திட்ட‌மிட‌ல்' (centralised planning ) ; அதாவ‌து நாட்டிலுள்ள‌ இய‌ற்கை ம‌ற்றும் ம‌னித‌ வ‌ள‌ங்க‌ளை எவ்வாறு உப‌யோக‌ப் ப‌டுத்த‌ வேண்டும் என்று ம‌த்திய‌ அர‌சு ம‌ட்டுமே 'திட்ட‌ க‌மிச‌ன்' மூல‌ம் தீர்மாணிக்கும். சந்தை பொருளாதார‌ கொள்கைக‌ளுக்கு நேர் எதிரான‌ சித்தாந்த‌ம். பொதுத் துறை நிறுவ‌ன‌ங்க‌ளுகே முக்கிய‌த்துவ‌ம். த‌னியார்க‌ள் ப‌ல‌ முக்கிய‌ துறைக‌ளில் ( உ.ம் தொலைபேசி, மின் உற்ப‌த்தி) நுழைய‌ த‌டை. ஏற்க‌ன‌வே இருக்கும் துறைக‌ளில் தொழிலை விரிவுப‌டுத்த‌ , குறைக்க‌ ப‌ல‌ ப‌ல‌ க‌ட்டுப்பாடுக‌ள். உற்ப‌த்தியை பெருக்க‌ த‌டைக‌ள் ப‌ல‌. இக்க‌ட்டுப்பாடுக‌ளை (controls and licenses) அம‌ல்ப‌டுத்த‌ ஒரு மிக‌ப் ப‌ல‌மான‌ , பூத‌க‌ர‌மான‌ அர‌சு எந்திர‌ம் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ அந்த‌ எந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து. ஒரு தொழில‌திப‌ர் ஒரு புதிய‌ தொழிற்சாலையை நிறுவ‌ வேண்டுமானால் ப‌ல‌ அதிகாரிக‌ளின் த‌ய‌வும் , 'க‌ருணையும்', அர‌சிய‌ல்வாதிக‌ளின் (பெரும்பாலும் காங்கிர‌சஸ் அமைச்ச‌ர்க‌ள் ம‌ற்றும் த‌லைவ‌ர்க‌ள்) 'ஆத‌ர‌வும்' தேவையாக‌ இருந்த‌து. தாரளமயமாக்களுக்கு பின் இன்று எவ்வ‌ள‌வே ப‌ர‌வாயில்லை.

உதராணமாக கோவை மதுக்கரை ப‌குதியில் உள்ள ஏ.சி .சி (Tata) சிமென்ட் நிறுவனத்தை பார்ப்போம். லைசென்ஸ்டு கெப்பாசிட்டி (licensed capacity ) என்று அதற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிகப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லச்சம் டன் மட்டுமே அனுமதி (லைசென்ஸ்) என்றால் , அதற்க்கு மேல் ஒரு கிலோ கூட உற்பத்தி செய்ய அனுமதியில்லை. சந்தையில் தேவை (demand) எவ்வளவு அதிகரித்தாலும் கூட உற்பத்தியை பெருக்க அனுமதி கிடையாது. காரணம் டாடா நிறுவன அதிபர்கள் பெரும் பணக்காரர்களாக வளர்ந்து விடுவார்களாம் ! 'concentration of economic power ' என்ற ஒரு மூடத்தனமான சிந்தனை நாட்டின் பொதுபுத்தியை மிகவும் ஆக்கிரம்த்த காலம் அது. நூறு கோடிக்கு மேல் (ஒரு உதாரணத்திற்கு) ஒரு தனியார் சிமின்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை (அல்லது சொத்துகள்) அதிகரிக்க அனுமதியில்லை ! இதன் மொத்த விளைவு , செயற்க்கையான‌ தட்டுப்பாடுகள் , பதுக்கல் , கள்ளமார்க்கட், லஞ்சம். அரசே லெவி (levy) என்ற பெயரில் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை மிக குறைந்த விலைக்கு கட்டாய கொள்முதல் செய்து பின் ரேசன் முறையில் விற்றது. 1950 களில் வந்த திரைபடங்களில் வில்லன்கள் சிமென்ட், சர்க்கரை , நூல் பேல்கள் போன்றவற்றை பதுக்குவார்கள் , கடத்துவார்கள். அவ்வளவு தட்டுப்பாடு அப்போது !!

Monopolies Restricted Trade Practises Act (MRTP Act) என்று ஒரு முட்டாள்தனமான சட்டம் 1969 இல் இயற்றப்பட்டது. அதன்படி எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற் துறையிலும், எந்த ஒரு நிறுவனமும் , மிகப்பெரிய அளவில் 'வளரக்கூடாது '. இதற்கான அளவுகோள்கள் 'percentage of market share' அடிப்படையில் வகுத்திறுந்தாலாவது பரவாயில்லை ; அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் சென்றால் பெனால்டி , தண்டனை என்று உருவாக்கபட்டது. விளைவு : தட்டுப்படு, அதிக விலை.

இதற்க்கெல்லம் சிகரம் வைத்தாற்போல வரி விகுதங்கள். 'பணக்கார்க‌ள்' மீது மிக மிக அதிக வரி விதித்து , அதை ஏழைகளுக்காக ' செலவு' செய்யவதாக சொல்லப்பட்டது. அனைத்து வரிகளும் சேர்ந்து சுமார் 95 % ஆனது. விளைவு வரி ஏய்ப்பு , கருப்பு பணம், வரி வசூல் செய்யும் அரசு எந்திரம் லஞ்சமயமானது. அதிக வரிக்கு பயந்து புதிதாக யாரும் தொழில் தொடஙக முயலவில்லை. கடுமையான விலைவாசி உய்ர்வும் , வேலை இல்லாத்திண்டாட்டமும் உருவாகின.

1991 இல் அன்னிய செலாவனி தட்டுப்பாடு வந்து அரசின் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க வேண்டிய கட்டாயமான‌ சூழல் நிலையில் நரசிம்மராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக்கி , சுதந்திரமாக செயலாற்றா அனுமதிதார். முதல் வேலையாக லைசென்சிங் முறையை அறவே ரத்து செய்தார் மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளும் 'தாரளமாக' அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ' தாரளமயமாக்கல்' என்கிறோம்.

விளைவு : 9 % பொருளாதார வளர்ச்சி , மிக மிக அதிக அளவு வரி வசூல் (1991ஐ விட இன்று சுமார் 15 மடங்கு அதிகம்), வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை. வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 50 % இல் இருந்து சுமார் 25 % மாக குறைந்தது. ஐ.எம்.எஃப் உலக வங்கியிடம் இனி எப்போதுமே அன்னிய செலவாணிக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத , பலமான சூழல்.

இந்த 'தாரளமயமாக்கலை' செய்யாமல் இருந்திருதால், இன்னேரம் நாடே திவாலாகியிருகும். (அவ்வள்வு அன்னிய கடன் வாங்கியிருந்தோம்). வறுமை இன்னும் அதிகரித்திருக்கும்...