Wednesday, April 2, 2008

முற்றுப்புள்ளி

இப்பலாம் வலைல புத்திசாலிங்க அதிகமாயிட்டாங்க. இது நாள் வரைக்கும், நீ சம்பாதிச்சி வச்சிருக்க பேர(?) இப்படி அரவேக்காட்டுத்தனமா எழுதி கெடுத்துக்காதே, ஏதோ என்னால முடிஞ்ச அறிவுரை...அப்புறம் ஒன் இஷ்டம்.

- அய்யனார்

நண்பர்களுக்கு...

ஏப்ரல் 2008 வந்தால் நான் எழுததொடங்கி நான்காண்டுகள் முடியப்போகின்றன. என் எழுத்துக்கள் மீது பலருக்கும் பலவிமர்சனங்கள் இருந்தபோதும் என் எழுத்துநடை பலரை ஈர்த்திருப்பதால்தான் ஓரளவிற்குக் கணிசமான வாசகர்வட்டம் உருவாகியுள்ளது. அரசியல், இலக்கியம், சினிமா என நான் நம்பும் மற்றும் எனக்குத் தெரிந்த விசயங்களையே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்நேரத்தில் வளர்மதியுடன் நடந்த சண்டையும் அதன் விளைவாய் எழுதப்பட்ட அக்கப்போர்ப் பதிவுகளையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் இத்தகைய பதிவுகளை வலையுலகைச் சேர்ந்த நண்பர்கள் மட்டுமில்லாது வெளியுலகில் அரசியல் மற்றும் இலக்கியவெளியில் இயங்கும் நண்பர்களும் விரும்பவில்லை.

மேலும் என் பக்கத்திற்கு வரும் பெரும்பாலான வாசகர்கள் அரசியல், இலக்கியம் ஆகியவை தொடர்பாக படிக்கவே வருகிறார்களேயன்றி இந்த அக்கப்போர்களைப் படிக்கவல்ல. வம்புச்சண்டைகளைப் படிப்பதற்கென்றே அலைகிற சிறுபான்மை கூட்டத்திற்கு வேண்டுமானால் இப்பதிவுகள் சுவாரசியமாக இருக்கும். அவர்கள்கூட இதைவிடச் சுவாரசியமான சண்டைகள் நடந்தால் அங்கு இடம்பெயர்ந்துவிடுவார்கள் என்று உணர்கிறேன்.

மேலும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் இத்தகைய அக்கப்போர்கள் இதுவரை நான் செய்துவந்த வேலைகளின் மதிப்பை சீகுலைப்பதாக நான் கருதுவதாலும் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இனி இவ்விசயம் குறித்து நான் எழுதப்போவதில்லை. இப்பிரச்சினையில் வளர்மதி, வரவணையான், ஜ்யோராம்சுந்தர் ஆகியோர் பாதிக்கப்பட்டதற்காக வருந்துகிறேன். நான் நேசிக்கும் எல்லா தத்துவம் மற்றும் அரசியலின் அடிப்படை அன்பு மற்றும் அன்பே என்று நான் நம்புவதால் வளர்மதியோ அல்லது வேறு நண்பர்களோ என் எழுத்துக்களால் தனிப்பட்டமுறையில் மனம்புண்பட்டிருந்தால் அதற்காக என்னை மன்னிக்கவேண்டுகிறேன்.

நன்றி.
பிரியங்களுடன்..
சுகுணாதிவாகர்.

16 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

இதுக்கு என்ன அர்த்தம்...?

சிறில் அலெக்ஸ் said...

//நான் நேசிக்கும் எல்லா தத்துவம் மற்றும் அரசியலின் அடிப்படை அன்பு மற்றும் அன்பே என்று நான் நம்புவதால் //

நிஜமான வார்த்தைகள். பதிவர்கள் எல்லோருமாக இப்படி முடிவுகளை எடுத்தால் பதிவுலகத்தின் மீது மதிப்பு அதிகரிக்கும் என நம்புகிறேன்.

gulf-tamilan said...

நல்லது!!!இனியாவது வலைபதிவில் சண்டை இல்லாமல் இருக்கட்டும்
நன்றி.

லக்கிலுக் said...

இந்த பதிவும் சூப்பர்!

ஒரு வழியாக பழைய ஃபார்முக்கு மீண்டும் வர வாழ்த்துக்கள்!

லக்கிலுக் said...

இந்தப் பதிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி பதியப்பட்டிருப்பதையும் இப்போது தான் கவனித்தேன் :-(

மேட்டர் மெய்யாலுமே முடிஞ்சிடிச்சி இல்லே!

லக்கிலுக் said...

இங்கே ரெண்டு கமெண்டு போட்டதாக நினைவு. இங்கே தான் போட்டேனா? அல்லது வேறு எங்காவது தெரியாத்தனமாக போட்டு தொலைத்துவிட்டேனா? :-(

Anonymous said...

”நான் நேசிக்கும் எல்லா தத்துவம் மற்றும் அரசியலின் அடிப்படை அன்பு மற்றும் அன்பே என்று நான் நம்புவதால்”

சுகுணா திவாகர், அன்பை வைத்து காமெடி செய்ய வேண்டாம்.உங்கள்
பதிவுகளில் காணப்படும் வெறுப்பு
எத்தகையது என்று எல்லோருக்கும்
தெரியும்.சுஜாதாவின் மறைவினையொட்டி நீங்கள்
எழுதியதில் என்ன ‘அன்பு' இருந்தது
என்பதும் எங்களுக்குத் தெரியும்.

Anonymous said...

//சுகுணா திவாகர், அன்பை வைத்து காமெடி செய்ய வேண்டாம்.உங்கள்
பதிவுகளில் காணப்படும் வெறுப்பு
எத்தகையது என்று எல்லோருக்கும்
தெரியும்.சுஜாதாவின் மறைவினையொட்டி நீங்கள்
எழுதியதில் என்ன ‘அன்பு' இருந்தது
என்பதும் எங்களுக்குத் தெரியும்.//

இந்த புண்ணூட்டத்தை போட்டது ‘அன்புடன்' பாலாவா?

PASARAVE said...

OK DA THAMBI SIVAJI INNUM UIRODA IRUKARNU OTHUKIRAN.

PASARAVE said...

காமெடி சூப்பர்!

PASARAVE said...

சூப்பர்!
காமெடி

குமரன் said...

நல்ல முடிவு.

இப்படிப்பட்ட சண்டைகளில் தான், ஒவ்வொரு ஆளும், எத்தனை பலவீனமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது.

King... said...

என்ன இது...

King... said...

என்ன அர்த்தம் இந்த பதிவுக்கு...

King... said...

சமீபத்தில் நடந்த ஆனந்தவிகடன்...பதிவு போலவா?

King... said...

ஒரு விளக்கம் தயவு செய்து...?