Tuesday, September 16, 2008

கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 1.

நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஏன் 'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் பெயரும் இடம்பெறலாம். ஆனால் கவுண்டமணியின் பெயர் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் விவேக்கைப் போல பகுத்தறிவு என்னும் பெயரில் இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடித்தவரல்ல கவுண்டமணி. வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் ஏதும் அறிவிக்கவில்லையெனினும் தமிழ்ச்சினிமாவின் பல மரபுகளைக் கவிழ்த்துப்போட்டவர். வெளிமரபுகளை மட்டுமல்லாது, சினிமா உள்மரபுகளையும் நொறுக்கியவர்.

'மரியாதைக்குரிய நம் கலைஞர்கள்' ஏற்க விரும்பாத பல அடித்தட்டுமக்களின் வேடங்களை ஏற்றவர். இந்த வகையில் சிவாஜியை விட அதிக வேடங்களை ஏற்று நடித்தவர் என்ற பெருமை கவுண்டமணிக்கு உண்டு. (வேலையில்லாத பட்டதாரி இளைஞன் என்னும் வேடத்தைப் பெரும்பாலும் தாண்டாத விவேக்கை 'வொயிட் காலர் காமெடியன்' எனலாம்.)

ஒரு இடையீடு : யமுனாராஜேந்திரன் குறித்த தோழர் சுகனின் விமர்சனத்தில் இப்படி ஒரு வரி :

'குமிஞ்சான்', 'குள்ளன்' என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் 'கோமுட்டித் தலையா', 'நெல்சன் மண்டலோ மண்டையா' போன்ற வசவுகளுக்கும் 'குமிஞ்சான்' என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( கவனிக்க : Counter culture அல்ல) என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததே.
ஆக யமுனா கவுண்டர் சாதியில் பிறந்தவர், கவுண்டமணியும் கவுண்டர். எனவே கவுண்டர் கல்ச்சர். என்னே ஒரு வார்த்தை விளையாட்டு!

தனக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் இப்படியாக 'ஜாதிப்புத்தி', 'கவுண்டர் கல்ச்சர்' என்று அடையாளப்படுத்திவிடுவது எவ்வளவு எளிது? உண்மையில் கவுண்டமணி பிறப்பால் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவரல்ல, மேடைநாடகமொன்றில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் கவுண்டர், அதுவே பின்னாளில் கவுண்டமணி என்றாயிற்று என்று அறியும்போது சுகனின் உத்தி கிழிபட்டுப் போகிறது.

இருக்கட்டும். கவுண்டமணி மருத்துவர் போன்ற ஏதோ ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டதுண்டு. (கவுண்டமணி குறித்த மேலதிகத்தகவல்களைத் திரட்டுவது கடினம். கவுண்டமணி தனது சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள் பத்துக்குள்ளேயே இருக்கும்.)

கவுண்டமணி செந்திலை அடிப்பதும் உதைப்பதும் பலாராலும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளான ஒன்று. ஆனால் இதை வேறு வகையாய் வாசிக்க முயல்வோம்.

கூலி என்னும் படத்தில் கவுண்டமணி மில் கேன்டின் உரிமையாளர். செந்திலோ அந்தக் கேண்டினில் வேலை பார்க்கும் டீமாஸ்டர். ஒரு உரையாடலின்போது, பேச்சுவாக்கில் செந்தில் கவுண்டமணியை அடித்துவிடுவார். அவர் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும். செந்தில் சொல்வார், ''அண்ணே, நாங்கள் அடிக்கிற சாதிண்ணே, அதான் அடிச்சா உடனே ரத்தம் வந்திடுச்சு'. கவுண்டர் கேட்பார், ''நீ என்ன சாதிடா?'' செந்தில் கவுண்டரின் காதுக்குள் குசுகுசுப்பார். பிறகு கவுண்டமணி செந்திலின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிடுவார். இப்போது செந்திலின் மூக்கிலும் ரத்தம். கவுண்டர் சொல்வார், '' உங்க சாதிக்காரன் மட்டுமில்லைடா, எங்க சாதிக்காரன் அடிச்சாலும் ரத்தம் வரும்'.

இங்கு முக்கியமாய்க் கவனிக்கவேண்டிய ஒன்று, கவுண்டமணி நடத்தும் கேன்டினில் அம்பேத்கர் படமும் எம்.ஜி.ஆர் படமும் மாட்டப்பட்டிருக்கும். ( பொதுவாக எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை தலித் வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொண்டவர்.) கேண்டின் உரிமையாளரான கவுண்டமணி பாத்திரம் ஒரு தலித் பாத்திரம் என்பது குறிப்பால் அறியப்படும் செய்தி. இன்னொரு முக்கியமான விஷயம், செந்தில் பிறப்பால் ஆதிக்கச்சாதியான, சாதிய வன்முறையின் குறியீடாய் முன்நிறுத்தப்படும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்குவதே சாதிய வன்மத்தைப் பழிதீர்க்கும் கணக்கு என்று ஏன் கொள்ளக்கூடாது?

( தொடரும்...)21 comments:

ரவி said...

கவுண்டமணியை மறக்கமுடியுமா என்ன ? இன்றைக்கும் நான் மிகவும் ரசிக்கும் காமெடி க்ளாஸிக்ஸ் கவுண்டமணியுடையது...

அதிலும் சத்தியராஜுடன் அவர் அடித்த லூட்டிகள்...!!!!

பேப்பர் ரோஸ்ட் எப்படி இருக்கனும் என்று அவர் கொடுத்த விளக்கத்தை பார்த்ததில் இருந்து, எப்போது பேப்பர் ரோஸ்டை பார்த்தாலும் கவுண்டரின் நினைவுதான் :))

ரவி said...

யார் தொழிலதிபர் என்று அவர் ஒருமுறை சொல்வாரே ?

முந்தாநேற்று கூட அதை சொல்லி சிரித்தோம்....!!!

senthil said...

good

Anonymous said...

திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அவர் யார் பேசினாலும் அதை Counter செய்து பேசுவது வழக்கமாம் அதனால் அவரை counter மணி என அழைக்க தொடங்கியதாகவும் அதுவே பிற்காலத்தில் கவுண்டர் மணி ஆகிவிட்டதாகவும் கேள்வி. நடனசபாபதி சென்னை

Anonymous said...

kavundamani.. kovaiyail naavithar samoogaththai saernthavar endru kaelvi pattullen.. thavaraagavum irukkalaam.

Anonymous said...

என் மனதிற்கு பிடித்த நடிகரைப்பற்றி படிக்க ஆவலாய் வந்தேன். ஆனால் அதிலும் சாதி சாயம் பூசி நமத்துப்போகச் செய்துவிட்டீர்கள்.

அவர் வசனங்களை டைமிங்கில் (கவுண்டில்) பேசுவதால் “கவுண்ட்”மணி என்று அழைக்கப்பட்டு மறுவி கவுண்டமணி ஆகிவிட்டதாக நண்பர் கூறியிருக்கிறார்.

அடுத்த பகுதியிலாவது சாதியை விட்டுவிட்டு அந்த கலைஞன் செய்த சாதனைகளை எழுதுங்கள்!

Anonymous said...

கவுண்டமணிக்கு நிகர் அவர்தான்.

Anonymous said...

//தனக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் இப்படியாக 'ஜாதிப்புத்தி', 'கவுண்டர் கல்ச்சர்' என்று அடையாளப்படுத்திவிடுவது எவ்வளவு எளிது?//

Hahaha! அதான் இவ்ளோ நாளா செஞ்சுட்டு இருந்தீங்களா?? அரசியல்வாதி தோத்தான் உங்ககிட்ட!

Anonymous said...

தமிழ் சினிமா'வின் - என்னை பொறுத்தவரை அதையும் தாண்டி - நிகரற்ற கலைஞனான கவுண்டமணிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை. நகைச்சுவையின் எல்லைக்கோடுகளை பெருமளவு விரிவாக்கியவர் அவர். அந்த அளவில், பரவலாக படிக்கப்படும் ஒரு வலைப்பதிவர் அவரைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி.


ஆனால் கவுண்டமணி-செந்தில் ஜாதிகள் சார்ந்து அவர்கள் நகைச்சுவையை அணுக முயல்வது உவப்பாக இல்லை.

'கூலி' படத்தில் நீங்கள் தந்த எடுத்துக்காட்டுக்கு எதிராக பல படங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளை வைக்க முடியும். அவருடைய பாணியான எகத்தாளத்தை வன்மத்தின் வெளிப்பாடாகப் பார்க்கலாம். 'பெரிய தம்பி' படத்தில், செந்தில் போல் உருவம் கொண்ட ஒருவரை டீக்கடையில் வேட்டியை கழட்டி தரையில் உட்காரச் செய்வது போல ஒரு காட்சி வரும். இதற்கு படத்தில் ஒரு காரணம் உண்டு என்றாலும் - மேற்பரப்பில், இதை ஒரு ஜாதீய ஒடுக்குமுறையின் சித்திரமாக பார்ப்பது எளிதல்லவா.

ஒருவேளை நடிப்பவர்களின் ஜாதியை பொருத்து அக்காட்சியையும் எதிர்-வன்முறை என்று அர்த்தப்படுத்திக்கொள்வீர்களோ :-)

இதுபோல பல பல சொல்லலாம். பல படங்களில் விளிம்புநிலை மக்களை நகையாடும் பிற்போக்கான காட்சிகளும் அவர் நடித்ததுண்டு - பெண்கள், வயசாளிகள் இன்ன பிறர்.
("சங்கு ஊதுர வயசுல என்ன சங்கீதா ? - கட்டபொம்மன்)

ஆனால் அதை எல்லாம் கணக்கிலெடுத்துக்கொள்ளாதபடி அதிர்ந்து சிரித்தோம். எல்லாவற்றையும் தாண்டி நம்மை சிரிக்கவைத்தவர் அவ்ர். நாகேஷ் என்ன, சாப்ளின் கூட என்னைப் பொறுத்தவரை கவுண்டமணியை நெருங்க முடியாது. சந்தேகமில்லாமல் ஒரு ஜீனியஸ்.

நகைச்சுவைக்கான தளைகளை உடைத்து, 'எல்லாம் சிரிப்புக்குரியவையே' என்று நிலைக்கச் செய்ததே அவரது மாபெரும் புரட்சி. அதை விட்டுவிட்டு, வேறு புரட்சி கட்டமைப்புகளுக்குள் அவரை திணித்துப் பார்ப்பது நகைப்புக்குரியதே.

ஜாதியின் கூறுகள் சமுதாயத்தில் பல இடங்களில், எளிதில் தெரியாத நுணுக்கங்களோடு இருக்கின்றன என்பதற்காக, எல்லாவற்றிலும் ஜாதியின் வீச்சை காண முயல்வது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.

பிரபு ராம்

மாயவரத்தான் said...

ஹூம்.. போன வாரம் இந்தப் பதிவு வந்திருந்தால் அவரிடமே பதிலை கேட்டு இங்கே சொல்லியிருப்பேன். பரவாயில்லை. அடுத்த முறை நேரில் சந்திக்கும் போது கேட்கிறேன்.

ஆனால் அவருடைய பாஸ்போர்ட்டிலும் கூட 'கவுண்டமணி' என்று தான் பெயர் இருக்கிறது.

அவர் 'ஜக்குபாய்' படத்திற்காக தாய்லாந்து வந்த போது அமைதியின் திருவுருவாக இருந்ததை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

***

அவர் என்ன ஜாதி என்ற செய்திக்குள்ளே நுழையவிரும்பவில்லை.

அவரும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் உறவினர்கள் என்பது மட்டும் செய்தி.

உண்மைத்தமிழன் said...

முதல் பாகம் என்றுதான் போட்டிருக்கிறீர்கள்.. முழுமையாக முடியுங்கள்.. வந்து பின்னூட்டமோ, பதில் பதிவோ இடுகிறேன்..

Anonymous said...

He is Indian Carlos Mencia.

Or Carlos Mencia is Latino Kavundamani.

Both of them are my favorites.

Carlos Mencia is America's famous stand-up comedian.

He once said of homosexuals, "Don't say, Carlos you are offending them. If they can take a dick, they can certainly take a joke".

Anonymous said...

திடீரென சுகனை தாக்குவதன் உள்நோக்கம் என்னவோ? தமிழிச்சியின் எழுத்துக்களை படித்த தாக்கமோ? தமிழிச்சி சோபா சக்தியை அடித்ததாக பதிவு போட்டுவிட்டு சில நாட்களுக்கு பின் நீக்க என்ன காரணம்? கொள்கை ஒன்றும் புகழ்பெரும் ஆசைக்காகவும் பரபரப்பான தமிழிச்சியின் எழுத்துக்களை படித்து விட்டு இன்று சுகனின் மீது காழ்புணர்வு தோன்றுகின்றதோ?

முரளிகண்ணன் said...

தொடருங்கள்

புருனோ Bruno said...

அண்னே.... முதல் பகுதி இங்க இருக்கு. அடுத்த பகுதி எங்கன்னே

(அதானே இதுன்னு சொல்லிராதீங்க)

:) :)

வெட்டிப்பயல் said...

பெரிய பெரிய விஷயங்களை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போறதுல கவுண்டரை அடிச்சிக்கவே முடியாது.

விவேக் நல்லவரா இருந்து அறிவுரை சொல்லுவாரு. கவுண்டர் ரியாலிட்டில எப்படி இருக்குனு நடிச்சி காட்டுவாரு.

அவர் பண்ண அளவுக்கு ரோல்ஸ் தமிழ் சினிமால யாரும் பண்ணதில்லைனு நினைக்கிறேன்.

பிச்சை எடுப்பது, சலவை தொழிலாளி, ரிக்‌ஷா இழுப்பது முதல் கொண்டு அமைச்சர் வரை ரோல் பண்ணியிருக்கார்.

இன்னும் எழுதுங்க படிக்க காத்திருக்கிறோம் :)

nagoreismail said...

தினமும் உங்கள் வலைத்தளத்திற்கு வந்து ஏமாந்து போவது ஒரு பெரிய சோகம். பிறகு நீண்ட நாட்களாக வரவேயில்லை. (ஒரு வேலை நீங்கள் ஒரு பதிவில் எழுதியிருந்த படியே சீனியர் பதிவராக மாற நீங்களே எடுக்கும் முயற்சியாக இருக்குமோ?)

நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை இனிமையாக உள்ளதா?

சரி, இந்த பதிவை பற்றி..

எப்படிங்க இப்டில்லாம்? கவுண்டமணியின் வேடங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டமே வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறது.

உங்களுடைய எந்த பதிவும் உங்கள் சாதீய எதிர்ப்பை உணர்த்துவதாகவே உள்ளது. சாதீய எதிர்ப்பு உங்கள் சுவாசமாகவே உள்ளது என்று அறிய முடிகிறது.

உங்களுக்கான மேடைகள் இது மட்டுமல்ல, அந்த மேடை இன்னும் ஏராளமான மக்களை கல்வி கற்ற பாமரர்கள் உள்பட அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது என் அவா (இந்த அவா அவாள் உபயோகிக்கும் அவா, இவா அந்த அவா அல்ல)

சரி, என் பங்குக்கு நான் கொண்டாடும் நோன்பு பெருநாளில் உங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்

வரவனையான் said...

//திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அவர் யார் பேசினாலும் அதை Counter செய்து பேசுவது வழக்கமாம் அதனால் அவரை counter மணி என அழைக்க தொடங்கியதாகவும் அதுவே பிற்காலத்தில் கவுண்டர் மணி ஆகிவிட்டதாகவும் கேள்வி. நடனசபாபதி சென்னை //

மேற்கண்ட கருத்தே உண்மை. கவுண்டமணி ஒரு அற்புத கலைஞன்.என் பங்கு பதிவு தலைக்கு

http://kuttapusky.blogspot.com/2006/04/hexa.html


// 'ஆகவேதான் நாம் அப்படி சிந்திக்க வேண்டியுள்ளது , நம் தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத நடிகராக ,அதே வேளை அதிகம் சாதித்த மனிதராய் தனக்கான இடத்தை இதுவரை எவரும் எட்டி பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியும், தான் வாழும் காலத்திலேயே தன் பிடிவாதத்தால் அல்லது தனக்கென்று தானே உருவாக்கிகொண்ட தொழிற்ச்சார்ந்த விதிகளால் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னமும் ஆளில்லாமல் தானே , தன் பழம் பிரதிகளே அதை நிரப்பிக்கொண்டிருக்கும் நிலையை ரசித்தபடியே தன் சுயத்தை உறுதிசெய்த மனிதனை நாம் அவ்வளவு சுலபமாக தாண்டிச்செல்ல முடியாது.திரைப்படங்களில் விளிம்புகளின் மையத்தை நோக்கிய எள்ளல் மிகுந்த விமர்சனங்களாகவும்,அபத்தமான காட்சியமைப்புகளிலும் அவர் வீசுகின்ற ஒற்றை சொல்லின் அதிர்வுகள் இன்றைக்கும் "நகைச்சுவை" நேரங்களின் தயவால் மீண்டும் மீண்டும் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் தனது பயணத்தை தொடர்ந்தபடியே உள்ளது //

வரவனையான் said...

//திரு கௌண்டமணி அவர்களின் இயற் பெயர் மணி என்றும் அவர் யார் பேசினாலும் அதை Counter செய்து பேசுவது வழக்கமாம் அதனால் அவரை counter மணி என அழைக்க தொடங்கியதாகவும் அதுவே பிற்காலத்தில் கவுண்டர் மணி ஆகிவிட்டதாகவும் கேள்வி. நடனசபாபதி சென்னை //

மேற்கண்ட கருத்தே உண்மை. கவுண்டமணி ஒரு அற்புத கலைஞன்.என் பங்கு பதிவு தலைக்கு

http://kuttapusky.blogspot.com/2006/04/hexa.html


// 'ஆகவேதான் நாம் அப்படி சிந்திக்க வேண்டியுள்ளது , நம் தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத நடிகராக ,அதே வேளை அதிகம் சாதித்த மனிதராய் தனக்கான இடத்தை இதுவரை எவரும் எட்டி பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியும், தான் வாழும் காலத்திலேயே தன் பிடிவாதத்தால் அல்லது தனக்கென்று தானே உருவாக்கிகொண்ட தொழிற்ச்சார்ந்த விதிகளால் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னமும் ஆளில்லாமல் தானே , தன் பழம் பிரதிகளே அதை நிரப்பிக்கொண்டிருக்கும் நிலையை ரசித்தபடியே தன் சுயத்தை உறுதிசெய்த மனிதனை நாம் அவ்வளவு சுலபமாக தாண்டிச்செல்ல முடியாது.திரைப்படங்களில் விளிம்புகளின் மையத்தை நோக்கிய எள்ளல் மிகுந்த விமர்சனங்களாகவும்,அபத்தமான காட்சியமைப்புகளிலும் அவர் வீசுகின்ற ஒற்றை சொல்லின் அதிர்வுகள் இன்றைக்கும் "நகைச்சுவை" நேரங்களின் தயவால் மீண்டும் மீண்டும் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் தனது பயணத்தை தொடர்ந்தபடியே உள்ளது //

PRABHU RAJADURAI said...

சாதி பற்றி எழுதித்தானாக வேண்டும் என நினைக்கிறேன். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவரான கவுண்டமணி செந்திலை அடிப்பது போல காட்சிகள்...சாதிப்பாகுபாடுகள் உள்ள திரை உலகத்தில் சலசலப்பை ஏற்ப்படுத்தியதாக, எனக்கு தெரிந்த ஒரு இயக்குஞர் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் செந்தில் அவர்கள் பெருந்தன்மையாக அவ்வாறு சலசலப்பை ஏற்ப்படுத்தியவர்களை நிராகரித்ததாகவும் கேள்விப்பட்டேன்.

நீ என்ன சாதிடா என்று கேட்டு செந்திலை அறையும் காட்சியில் நானும் அதிந்து விட்டேன். சாதித் திமிருக்கு எதிரான மிகவும் துணிச்சலான காட்சி அது!

Unknown said...

//
அவரும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் உறவினர்கள் என்பது மட்டும் செய்தி.//

இருக்க வாய்ப்பில்லை மாயவரத்தாரே. ரவிக்குமார் முதலியார். ஒரு வேளை இவர்கள் குடும்பத்திற்குள் கலப்புமணம் எதாவது இருந்திருந்தால் உறவினர் ஆகி இருக்க வாய்ப்புண்டு.