Tuesday, February 3, 2009

முத்துக்குமாரின் மரணத்தைக் கொச்சைப்படுத்தும் துரோகிகளும் எதிரிகளும்

தோழர். முத்துக்குமாரின் தியாகத்தைக் 'கோழைத்தனம்‘ என வர்ணிக்கின்றனர் பாரதமாதாவின் யோனிபுத்திரன்கள். இன்னொருபுறம் ‘‘மாணவர்கள் நன்னாப் படிக்கணும். போராட்டத்தில் எல்லாம் ஈடுபடக் கூடாது‘‘ என்று ரத்தம் வழியும் வாயுடன் உபதேசிக்கின்றன டோண்டு மாதிரியான பார்ப்பன நரிகள். மாணவர்கள் நன்னாப் படிக்கணும், வீதிக்கு வந்து போராடக் கூடாது என்று மண்டல் எதிர்ப்புப் போராட்டத்திலோ, அய்.அய்.டி மாணவரின் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்திலோ உபதேசித்திருந்தால் பொருத்தமாயிருக்கும். அது சரி, மாணவர்கள் என்றால் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். மடாதிபதி என்றால் ஆன்மீகத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும், சொர்ணமால்யா சோளிக்குள் கவனம் செலுத்தக்கூடாது என்று இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்குச் சொல்லியிருந்தால் பாராட்டலாம். எல்லாவற்றையும் விட கேவலமானது ஈனமானப் பேராசிரியர் அன்பழகனும் ‘தளபதி‘ மு.க.ஸ்டாலினும் விட்ட ஸ்டேட்மெண்ட்கள்தான்.

சட்டமன்றத்தில் முத்துக்குமாரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி பா.ம.க தலைவர் கோ.க.மணி பேசியபோது அந்த அஞ்சலியைத் தானும் முன்மொழிவதாகச் சொன்ன அன்பழகன், பிறகு, ‘‘இந்த மாதிரி இளைஞர்கள் தீக்குளித்து இறப்பதை ஊக்குவிக்கக்கூடாது. அதனால் அஞ்சலியை வாபஸ் வாங்குகிறேன்‘‘ என்றிருக்கிறார். நம் தளபதியோ, ‘‘ தீக்குளித்து இறப்பது தீவிரவாதம்‘‘ என்று உளறியிருக்கிறார். அடப்பாவிகளா! சின்னச்சாமியின் தீக்குளிப்புத் தியாகத்தில் தானேடா ஆட்சிக்கே வந்தீர்கள்? சின்னச்சாமி என்கிற ‘தீவிரவாதி‘ தீக்குளிக்கா விட்டால் இன்றைக்கு அழகிரி, கனிமொழி, கயல்விழி, கலாநிதி, தயாநிதி, உங்கள் வீட்டு நாய்க்குட்டிகள் எல்லாம் பதவி சுகத்தைம் அனுபவித்துக்கொண்டிருக்குமா? ‘‘தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்‘‘ என்று அறிவித்து, பிறகு தமிழகம் முழுக்க ஆங்காங்கே அப்பாவித் திமுககாரன் தீக்குளித்துச் செத்தபிறகு ‘‘ராஜினாவை வாபஸ் வாங்குகிறேன்‘‘ என்று கருணாநிதி எத்தனை முறை தமிழர்களின் தாலி அறுத்து ‘லுல்லுல்லூ‘ காட்டியிருக்கிறார்?

தமிழகம் முழுக்க இலங்கைப்பிரச்சினைக்காகப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக செயற்குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறீர்களே, யாரை எதிர்த்து அல்லது எதை எதிர்த்துப் பொதுக்கூட்டம் நடத்தப்போகிறீர்கள்? இதற்குப் ‘‘ பிரணாப் முகர்ஜியின் பியூன் இலங்கைக்குச் செல்ல வேண்டும்‘‘ என்று வழக்கம் போல தீர்மானம் போட்டிருக்க வேண்டியதுதானே!

கலைஞர் என்று சொல்வதற்கே அருவெறுப்பாக இருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார், தாமிரப்பரணி ஆற்றில் அடித்துக்கொல்லப்பட்ட தலித்துகள் என்று எத்தனையோ பிணங்களின் மீது ஏறித்தான் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி. ஆனால் அந்த கொலைகளை விட தமிழகம் முழுக்க கருணாநிதியின் துரோகத்தை வீரியத்துடன் அம்பலப்படுத்தியிருப்பவன் முத்துக்குமார்தான். கருணாநிதி யாரை மறந்தாலும் முத்துக்குமாரை மறக்க முடியாது. இன்றைக்குக் கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதாவோ வைகோவோ அல்ல. முத்துக்குமார்தான் எதிரி. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் முத்துக்குமாரின் தியாகத்தையும் கருணாநிதியின் துரோகத்தையும் மறக்க மாட்டோம்.

முத்துக்குமாரின் மரணத்தைக் ‘கோழைத்தனம்‘ என்பவர்களே! அவனின் இறுதி அறிக்கையைப் படித்தபோது எனக்குள் தோன்றிய எண்ணம், ‘‘இத்தகைய விரிவான வாசிப்பும் கருத்தியல் தெளிவும் உடைய இளைஞன் செத்திருக்கக்கூடாது‘‘ என்பதுதான். ஆனால் நம் சுரணையை மீட்டெடுக்கவும் கருணாநிதி & காங்கிரசு கள்ளக்கூட்டுத் துரோகத்தை அம்பலப்படுத்தவும் முத்துக்குமாருக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையே. முத்துக்குமாரின் ‘கோழைத்தனத்தை‘ விமர்சிக்கும் மகா மகா வீரர்களே! அவன் மரணம் உங்கள் முகத்திலும் என் முகத்திலும் காறி உமிழப்பட்ட எச்சில்.

9 comments:

ராவணன் said...

//கலைஞர் என்று சொல்வதற்கே அருவெறுப்பாக இருக்கிறது//


"கோமாளி கருணாநிதி" என்று சொல்லலாமே?

தமிழ்நதி said...

முத்துக்குமார் போன்ற தெளிவான இளைஞனின் மரணம் உங்களைப் போலவே முதலில் வேதனையை அளித்தது. ஆனால், பிறகு சிந்தித்துப் பார்க்கும்போது உயிரோடு இருந்து அவர் இதைச் சொல்லியிருந்தால் அவ்வார்த்தைகள் எங்களைச் சுட்டிருக்குமா? தமிழகம் இத்தனை எழுச்சி கண்டிருக்குமா என்றால்... இல்லை! மரணத்தின் வழியாக செவிகளில் ஓங்கி அறைந்திருக்கிறான். ஒருவேளை அவன் தீக்காயங்களோடு தப்பித்திருந்தால்... என்ன நடந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோமல்லவா? ஜனநாயக நாடய்யா... ஜனநாயக நாடு!

குழலி / Kuzhali said...

//இன்றைக்குக் கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதாவோ வைகோவோ அல்ல. முத்துக்குமார்தான் எதிரி. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் முத்துக்குமாரின் தியாகத்தையும் கருணாநிதியின் துரோகத்தையும் மறக்க மாட்டோம்.

முத்துக்குமாரின் மரணத்தைக் ‘கோழைத்தனம்‘ என்பவர்களே! அவனின் இறுதி அறிக்கையைப் படித்தபோது எனக்குள் தோன்றிய எண்ணம், ‘‘இத்தகைய விரிவான வாசிப்பும் கருத்தியல் தெளிவும் உடைய இளைஞன் செத்திருக்கக்கூடாது‘‘ என்பதுதான். ஆனால் நம் சுரணையை மீட்டெடுக்கவும் கருணாநிதி & காங்கிரசு கள்ளக்கூட்டுத் துரோகத்தை அம்பலப்படுத்தவும் முத்துக்குமாருக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையே. முத்துக்குமாரின் ‘கோழைத்தனத்தை‘ விமர்சிக்கும் மகா மகா வீரர்களே! அவன் மரணம் உங்கள் முகத்திலும் என் முகத்திலும் காறி உமிழப்பட்ட எச்சில்.
//
நிச்சயமாக....

Anonymous said...

'சொர்ணமால்யா சோளிக்குள் கவனம் செலுத்தக்கூடாது என்று இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்குச் சொல்லியிருந்தால் பாராட்டலாம்.'

உங்களுடைய கீழான புத்திக்கு
சொர்ணமால்யாவின் சோளிதான்
இந்தச் சந்தர்ப்பத்திலும் நினைவிலிருக்கும்.முத்துக்குமாரின் மரணத்தை வைத்து உன்னால்
இப்படித்தான் எழுத முடியும்.எதை
வைத்து யாரை திட்டலாம் என்று
அலையும் உன் போன்றவர்களுக்கு
இந்த நினைவுக் கூட்டமெல்லாம்
அப்படி யாரைவது திட்ட ஒரு வாய்ப்பு.

Anonymous said...

Migavum Arumaiya pathivu, now a days all are telling bad about muthu kumar but your post is amazing, really that guy is so much passionate about tamil he even writes date in tamil. Every youngster wanted to do a revolution against bad government

Anonymous said...

http://suguna2896.blogspot.com/2009/02/blog-post.html
மிகவும் அருமையான பதிவு படித்தான் உங்கள் இடம் பகிர்ந்து கொண்டால் உலகம் எங்கும் உள்ள தமிழர் சென்று அடையும் என்று கருதி நம்பி சமர்பிக்கிறேன்

i have posted to thats tamil and envazhi.com where it will reach millions

Anonymous said...

நல்ல பதிவு...
www.envazhi.com

Unknown said...

நல்ல பெயர் வைக்கவும்!

Anonymous said...

ஓகே, இதை பற்றி எழுதியாச்சு. அடுத்தது என்ன பதிவு? நான் கடவுள் விமர்சனம் தானே? இப்பவே ஒண்ணு ரெண்டு பதிவு வந்தாச்சு. அதை படிச்சிட்டு, ஜெயமோகன் என்ன உள்குத்து குத்தி இருக்காருனு யோசிச்சு கிட்டே படம் பாருங்க. வந்து பீ உருண்டை சாணி உருண்டை அப்படீன்னு ஒரு பதிவயும் போட்டுடுங்க.
உங்க பதிவு தினத்தந்தி "இன்று தீபாவளி" மாதிரி predictable-a ஆகிப்போச்சு!.