Friday, April 17, 2009

ஷகீலா திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்


இது சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, இதே ஏப்ரலில் பதிவிட்ட பதிவு. நிலைமை அதே மாதிரியாக இருக்கிறது என்பதை விடவும் அதைவிட மோசமாகியிருக்கிறது என்பதே உண்மை. சாதாரண சினிமா ரசிகர்கள் தங்களுக்குத் திரைப்படம் பிடித்திருந்தால், ‘படம் சூப்பர்’ என்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் நம் எழுத்தாள ரசிகர்களோ, தங்களுக்குப் பிடித்த படங்களையெல்லாம் ‘பின்நவீனத்துவப் படங்கள்’ என்று திடீர் & திகில் பட்டங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். இது வெறுமனே ரசனை சார்ந்தது மட்டுமல்ல, வேறு நலன்கள் சார்ந்ததும்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்கு அடுத்து மிகவும் மலிவாகக் கிடைப்பவை இந்த பின்நவீனத்துவப்பட்டங்கள். இந்தச் சூழலில் இந்தப் பதிவை மீள்பதிவு செய்யலாமென்று தோன்றியது


சமீபத்தில் ஏப்ரல் தீராநதி இதழில் எம்.ஜி.சுரேஷின் 'தமிழ்த்திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இறுக்கமான இலக்கியச்சூழலில் மனம்விட்டுச் சிரிக்க உதவுபவை சுரேஷின் கட்டுரைகள். இந்தக் கட்டுரையும் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த பின்நவீனத்துவத் திரைப்படங்களாக சுரேஷ் குறிப்பிடும் படங்கள் அலைபாயுதே, ஆயுத எழுத்து, வேட்டையாடுவிளையாடு, காக்க காக்க.

இதில் வேட்டைவிளையாடு, காக்க காக்க திரைப்படங்களில் கதை என்கிற ஒன்று இல்லை (அ) எதிர்க்கதை /கதையற்ற கதை இருக்கிறது. எனவே அவை பின்நவீனத் திரைப்படங்கள் என்கிறார் சுரேஷ்.

அலைபாயுதே படத்தின் தொடக்கக்காட்சியில் கதாநாயகியைத் தேடி ரயில்நிலையத்திற்கு வருகிறான் நாயகன். ஆனால் அவள் வரவில்லை. நாயகனின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. காட்சியமைப்புகள் முன்பின்னாக மாற்றப்பட்டிருப்பதால் அது ஒரு பின்நவீனத்துவத் திரைப்படம் என்கிறார் சுரேஷ். புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தபோது தினத்தந்தியில் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.

சீன் படங்கள், பிட்படங்கள், பலான படங்கள் என்றழைக்கப்படும் பாலியல் திரைப்படங்களை உங்களில் எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. (பெண்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை). ஆனால் அவை சுரேஜின் லாஜிக்படி பார்த்தால் நிச்சயமாக பின்நவீனத்துவத்திரைப்படங்கள்தான்.

அவைகளுக்கான கோட்வேர்ட் 'சாமிப்படங்கள்'. (கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை தியேட்டர் கவுண்டரில் 'சாமிப்படம்'தான் ஓடுகிறதா என்று கவுண்டரில் உறுதிப்படுத்திக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் அமர்ந்தால் உண்மையிலேயே 'சரணம் அய்யப்பா' படம் ஓட அலறியடித்து ஓடிவந்தது தனிக்கதை). இதன்மூலம் புனித அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

படத்தின் அறிமுகத்தில் ஒரு பெண் நடித்துக்கொண்டிருப்பார்.ஆனால் சம்பந்தமேயில்லாமல் சில காட்சிகளுக்குப் பிறகு 'பிட்' அல்லது 'சீன்' என்றழைக்கப்படும் பாலுறவுக்காட்சியில் 'நடித்துக்கொண்டிருக்கும்' பெண்ணின் அறிமுகக் காட்சியே இடைவேளைக்குப் பின் தான் வரும் அல்லது வராமலே கூடப் போகலாம். மூன்றாவது காட்சி ஆறாவது காட்சியாகவும் ஆறாவது காட்சி பதினொன்றாவது காட்சியாகவும் முன்பின்னாக மாற்றப்பட்டு ஓட்டப்படும். இதன்மூலம் சீன்படங்கள் பிரதியின் ஒழுங்கைக்குலைக்கின்றன.

அதேபோல சமயங்களில் பிட்டில் இடம்பெறுபவர்களுக்கும் படத்திற்குமே சம்பந்தமிருக்காது. இப்படியாக இப்படங்களில் நான்லீனியர் தன்மை அமைந்திருக்கின்றன. சிலவேளைகளில் தமிழ்ப்படங்களில் இங்கிலீஸ் பிட் ஓடும், இங்கிலீஸ் படங்களில் தமிழ் பிட் ஓடும். ஆகமொத்தம் பிட்கள் மொழி, தேசம் ஆகிய எல்லைகளைத் தகர்க்கின்றன.

ஒருசில படங்களில் சென்சார் போர்டு பிரச்சினைக்காக ஆங்கில வசனங்களை இந்தியநடிகர்கள் பேசி நடித்திருப்பார்கள். இவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டால் நிறுத்தி நிதானமாக பள்ளிகளில் essay ஒப்பிப்பதைப் போல ஆங்கிலம் பேசுவார்கள். இவை ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்களாக இருப்பதால் தமிழர்கள் இந்தப் படங்களுக்குத் தொடர்ந்து போய்த் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

இந்தப் படங்களில் கதை என்கிற ஒன்று பெரிதாகத் தேவைப்படாது.ஆனால் கடைசியில் ஏதேனும் ஒரு 'நீதி' சொல்லப்படும். கட்டாயமாக கடைசிக்காட்சியில் யாராவது யாரையாவது துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் இந்தக் காட்சிகளைப் பார்க்க தியேட்டரில் யாரும் இருக்கமாட்டார்கள். 'சீன்' முடிந்தவுடனே பலர் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

ஆனால் எப்படியாவது இன்னும் சில 'சீன்'கள் ஓட்டப்படாதா என்கிற பேராசை உள்ளவர்கள் மட்டுமே தியேட்டரில் இருப்பார்கள். இன்னும் சிலபேர் யாராவது தெரிந்தவர்கள் வந்து அவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே எல்லோரும் போகட்டும் என்று காத்திருப்பார்கள்.

ஆகமொத்தம் இத்தகைய பின்நவீனக்கூறுகள் கொண்ட பின்நவீனத்துவத் திரைப்படங்களில் ஷகீலா, ஷகீலாவின் தங்கை ஷீத்தல், மரியா, ரேஷ்மா, பிட்பிரதீபா ஆகிய பின்நவீனத்துவ நாயகிகள் நடித்திருப்பார்கள். (இந்தப் படங்களில் நடிக்கும் ஆண்நடிகர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது அல்லது அதுபற்றிக் கவலையில்லை.)

என் நினைவிலிருந்து தமிழில் வெளியான பின்நவீனத்துவத் திரைப்படங்கள்.

1. சாயாக்கடை சரசு
2. மாயக்கா
3. அவளோட ராவுகள்
4. அஞ்சரைக்குள்ள வண்டி
5. காமதாகம்
6. மாமனாரின் இன்பவெறி
7.....
8....
9......
.
.
.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆராய்ச்சி மணிகட்டி ஆண்டுவந்த தென்னகத்தில் பிறந்தவர்தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்

Raj Chandra said...

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹாஹாஹா.

கலக்கல்!

மருதநாயகம் said...

நிறைய பின்னவீனத்துவ படங்கள் பார்த்து இருக்கீங்க போல

Anonymous said...

சுரேஷ் கட்டுரையை நான் படிக்கவில்லை ஆனால் போர்ணோ-க்களில் பின்நவீன நிலைக்கூறுகள் மலிந்து கிடப்பது உண்மைதான். உங்களிடம் எக்ஸிஸ்டென்ஷலிசக் கண்ணாடி இருந்தால் அதுவும் அங்கு இருக்கும்.
பசோலினியின் திரைப்படங்களா... மறந்து போய்விட்டது.. சைக்... teorema எடுத்த மனுசன். அதில இருக்கிற கடவுள் ஒருத்தனுக்கான ஏக்கத்தை நான் என்னுடைய ரக போர்ணோக்களில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
இதைவிட, சமீபத்தில் மு.மயூரன் இதேமாதிரியான பின்நவீனம் பற்றிய உரையாடலில் எனக்கு சிபாரிசு செய்த சாம் ஆண்டர்ஸனின் படங்களில் எனக்கு பின்நவீன நிலைக்கூறுகளை வாசிக்க இயலுமாய் இருக்கிறது.

tharudhalai said...

"இனி அவள் உறங்கட்டும்" என்ற இலக்கியத்தரமான பெயர் மற்றும் சினிமாவை எப்படி விடலாம்?