Sunday, September 2, 2007

தோழர்.போலி டோண்டுவும் துப்பறியும் சாம்புகளும்


பரபரப்பாகப் பேசப்படும் எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வினை செய்வதோ, உடன் கருத்து சொல்வதோ அவசியமானதுதானா என்னும் ஆயாசம் மிஞ்சுகிறது என்றபோதும் இந்த போலி விவகாரம் குறித்து ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமென்று தோன்றுகிறது. அதற்குமுன் தோழர் டூண்டு (எ) போலி டோண்டுவிற்கும் எனக்குமான உறவு குறித்து ஒரு சில பகிர்தல்கள்.

வலையுலகில் எழுதவந்த ஆரம்பகாலங்களில் போலி விவகாரம் ஒரு சுவையான மர்மநாவலுக்கான ருசியையே ஏற்படுத்தியது. அதிலும் ஒவ்வொரு வலைப்பதிவாளர் சந்திப்புகளிலும் இதுகுறித்து அலசப்படுவதும், பக்கத்திலிருப்பவரே உண்மையே போலியா என்கிற பதட்டமும் சந்தேகமும் அனைவருக்கும் தொற்றிக்கொள்வதைப் பார்க்க மிகுந்த சுவாரசியமாயிருக்கும். அதிலும் ஒருசில நண்பர்கள் இந்த மர்மங்கள் குறித்த மாயசாகசங்களை விளக்குவதில் நிபுணர்கள்.

இன்னொருபுறம் இணையத்தில் கணிசமான ஆதிக்கம் செலுத்திவருபவர்களும், உலகமெங்கும் ஒரு விரிவான நெட்வொர்க் கொண்ட பார்ப்பனர்களே போலிடோண்டுவைப் பிடிக்கமுடியாமல் திணறுவதும், அதுகுறித்துப் புலம்புவதும் இன்னும் வேடிக்கை. மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் பரவலாகத் தேடப்பட்டு வந்தகாலத்தில் வீரப்பனோ மிக அனாயசமாக நாகப்பன், ராஜ்குமார் போன்றவர்களைக் கடத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். ஒருகூட்டத்தில் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இதைச் சுவைபடப் பேசினார். "வீரப்பனைப் பிடிக்க இவங்கெ போனா இவெங்களை வீரப்பன் பிடிசுட்டுப் போயிடுறான்'. அதேபோலத்தான் ஆப்பு, போலிடோண்டு யார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் தனது எதிரிகளின் புகைப்படங்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியிடங்கள், அவற்றின் முகவரிகள், மின்னஞ்சல்கள் ஆகிவயற்றை அனாயசமாகத் தோழர் ஆப்புவும் டூண்டுவும் தங்கள் பக்கங்களில் வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் வீரப்பன் விவகாரம் முடிவிற்கு வந்ததைப் போலவே தோழர் டூண்டு இவர்தான் என்று அவரது புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை, - பார்ப்பனர்களால்கூட வெளியிடமுடியாத 'ரகசியங்களை'- 'திராவிட' நண்பர்கள் வெளியிட்டிருக்கிறாகள். ஆனால் இதுகுறித்துச் சிலநாட்களாக மவுனம் சாதித்த திரு.போலிடோண்டுவோ இப்போது இதை மறுத்துத் தன் பக்கத்தில் எழுதியிருப்பது மட்டுமில்லாது இந்த 'ரகசியங்களை வெளிக்கொணர்ந்த' தோழர். செந்தழல்ரவியே போலிப்பக்கங்களில் பல காமக்கதைகளை எழுதியிருக்கிறார் என்று அவர் சில ஆதாரஙளை வெளியிட்டிருக்கிறார். சரி, எனக்கும் போலிடோண்டுவுக்குமான உறவு குறித்துச் சொல்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஆரம்பகாலங்களில் போலிடோண்டு மற்றும் ஆப்பு ஆகியோரின் பக்கங்களை ரெகுலராகப் படித்துவந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தயக்கமுமில்லை. விடாதுகருப்பு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டபோது அதைக்கண்டித்தும், டூண்டுவைத் தோழர்டூண்டு என்று விளித்தும் கவிதை எழுதியுமிருக்கிறேன். (அந்தப் பதிவுகளை புதிதாக வலைப்பக்கங்களுக்குள் வந்திருக்கும் நண்பர்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.)

ஒருமுறை தோழர்.டூன்டுவேகூட தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுமிருக்கிறார். இதை அவர் பின்னூட்டமாகவுமிட்டிருந்தார். வேறுயாராக இருந்தால் பிரச்சுரிப்பார்களா என்பதுகூட சந்தேகமே. ஆனால் சமீபகாலமாக அவரது பக்கங்களை நான்போய்ப் படிப்பதில்லை என்பதற்குக் காரணம் அவரது கெட்டவார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்பதே தவிர வேறல்ல.

மற்றபடி தன்னை எதிர்க்கும் பதிவர்களின் குடும்பங்கள் குறித்து கெட்டவார்த்தைகளில் எழுதுகிறார்தான். ஆனால் மற்றவர்களின் குடும்பங்கள் வசைபாடப்படும்போது விலகிப்படிக்கிற மனோநிலை தன்னைப் பற்றியோ தன் குடும்பம் குறித்தோ அமையும்போது அவ்வாறு அமைவது அனைவருக்கும் சாத்தியமாயில்லாதயாயிருக்கிறது. 'ங்கோத்தா நீ யாருடா என் அம்மா பற்றிப் பேச என்று கோபமாய் வெளியாகிறது. (இதுவே என்ன முரண்நகை?).

ஆனால் நீண்டநாட்களுக்குப் பின் ஓசைசெல்லாவிற்கும் டூண்டுவிற்குமான மோதல்தான் என் கவனத்தில் பட்டது. அவர் கெட்டவார்த்தைகளை விடவும் மோசமானது செல்லா ஒரு தலித் என்பதால் பறப் பு...., பள்ளப் பு.... என்றெல்லாம் திட்டியிருந்தார். இது என்ன ஒரு தலித்விரோத ஆதிக்கசாதித் திமிர்? பார்ப்பனீயம் என்பது டோண்டுராகவனுக்கு மட்டும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதில்லை என்பதைப் போலி டோண்டுவும் நிரூபித்திருந்தார்.

பார்ப்பனீயம் என்பது வெறுமனே பார்ப்பனர்களிடம் மட்டும் இருப்பதில்லை, நமக்குள் இருக்கும் பார்ப்பனீயத்தைக் களையவேண்டும். போலிடோண்டுவிடம் பார்ப்பனீயம் இல்லையென்றால் ஒரு தலித்சாதியை இழிவாய் வசைபாடும் மனோபாவம் வந்திருக்காது. அதேபோல உண்மைத்தமிழனைப் பொறுத்தவரை அவரது மொழிநடையும் அவர்து கருத்துக்களும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை. ஆனால் அவரது உடல் ஊனத்தைக் குறிப்பிட்டும் அவரது வறுமை குறித்தும் வசைபாடி போலிடோண்டு எழுதியது அவர் இதுவரை பயன்படுத்திவந்த கெட்டவார்த்தைகளை விடவும் கொடூரமானது.

அதேபோல டோண்டுவின் பதிவிற்கு யாரும் பின்னூட்டமே இடக்கூடாது என்னும் அவரது பிடிவாதம் ஜனநாயகமற்றது மட்டுமல்ல, சிறுபிள்ளைத்தனமானதும்கூட. டோண்டுவின் சஞ்சய்தத் பற்றிய பதிவில் நான் ஒரு பின்னூட்டமிட்டிருந்ததைத் தொடர்ந்து தோழர்.டோண்டு என்னைக் குறித்தும் அவர் பக்கத்தில் எழுதியிருந்தார். மேலும் சர்வேசன் பதிவில் நான் இட்டிருந்த பின்னூட்டம் தொடர்பாகவும்.

ஆனால் ஒன்றும் பெரிதாக என்னைப் பற்றி மோசமாகவோ அசிங்கமாவோ எழுதவில்லை. ஆனால் டோண்டுராகவன் கருத்தாகச் சிலவற்றைப் பட்டியலிட்டு, (ஆண் முறைதவறிய பாலுறவில் ஈடுபட்டால் பெண்களும் ஈடுபடலாம்... இப்படியாக) இதையெல்லாம் நீ ஒத்துக்கொள்கிறாயா? என்று கேட்டிருந்தார்.

உண்மையிலேயே இதையெல்லாம் டோண்டுராகவன் சொல்லியிருந்தால் அதெல்லாம் வரவேற்கத்தக்கதுதான். பெரியார் சொன்னதற்கெல்லாம் மேலாக ஒன்றும் அதிர்ச்சிகரமாக, புரட்சிகரமாகவெல்லாம் டோண்டு சொல்லிவிடவில்லை. ஆனால் இதைச் சொன்னால் தோழர்.டூண்டு அடுத்து என்னைப் பார்த்து கேட்கும் கேள்வி, 'அப்படியானால் உன் வீட்டுப் பெண்களுக்குக் காண்டம் வாங்கிக் கொடுத்து ஊர்மேய அனுப்புவாயா' என்பதாகத்தானிருக்கும். (ஏனெனில் செல்லா போன்ற பலருக்கும் இந்தப் கேள்வியையே ரெடிமேடாக வைத்திருக்கிறார்.)

அப்படியானால் பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளராகவோ, பேச்சாளராகவோ, போராளியாகவோ இருந்திருக்கமுடியாது. தோழர்.டூண்டுவின் கருத்துப்படி பெரியார் திருச்சியிலோ, சென்னையிலோ, ஈரோட்டிலோ தன் வீட்டுப் பெண்களுடன் சாலையோரத்தில் நின்று ரேட் பேசும் ஒரு மாமாவாகத்தானிருந்திருக்க முடியும் என்பதைத் தாண்டியும் வேறென்ன சொல்வது?

தோழர்.டூண்டுவும் விடாதுகருப்பும் ஒன்றுதான் என்று முன்பும், இப்போதும் சொல்லப்படுகிறது. அது உண்மையா, பொய்யா என்று தெரியாவிட்டாலும் ஒன்றுமட்டும் தெளிவாகச் சொல்லமுடியும். இருவரின் எழுத்துக்களிலுமே ஆண்மய்யப் பார்வைகள்தானிருக்கின்றன. இப்போது நடப்பது தர்மயுத்தமா, சகோதரயுத்தமா என்பது தேவையில்லாத ஒரு சர்ச்சைதான் என்று நினைக்கிறேன்.

மேலும் மூர்த்தியாக இருந்தாலும் விடாதுகருப்புவாக இருந்தாலும் போலிடோண்டுவாக இருந்தாலும் அவரை மனநோயாளி என்று குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எல்லோருக்குமே மனநோய் இருக்கிறது, அதன் சதவிகிதம்தான் மாறுகிறது என்பது உளவியலின் அடிப்படை. போலிடோண்டு மனநோயாளி என்றால் டோண்டு, இதுவரை போலிடோண்டுவோடு இருந்தவர்கள், அல்லது போலிடோண்டு பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள், தமிழ்மணத்தைத் திறந்தவுடனே இன்றைக்குப் போலிடோண்டு பற்றி யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதித் தேடிப்படித்து (மற்ற பதிவுகளுக்கெல்லாம் இரண்டாம்வாய்ப்பே அளித்துவிட்டு) படிப்பவர்கள், எனது இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்து உள்வந்து இதைப்படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், எழுதிக்கொண்டிருக்கும் நான் எல்லோருமே மனநோயாளிகள்தான்.

இரண்டுவிசயங்களை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த போலி(ஸ்) திருடன் விளையாட்டின் நேர்மறையான (அ) எதிமறையான சுவாரசியம் பிடித்துப்போன யாரும் இந்த விளையாட்டை அவ்வளவாக முடிவிற்குக் கொண்டுவந்துவிடமாட்டார்கள். எனவே மர்மநாவல் முடிந்துவிட்டதா அல்லது தற்காலிக இடைவேளையா, அல்லது முதல்பாகம் மட்டும்தான் முற்றுப்பெற்றிருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.

ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது இணையஎழுத்து என்பது ஏதோ படிப்பது, எழுதுவது, உரையாடுவது, தனக்கான நட்புவட்டத்தை உருவாக்கிக்கொள்வது என்பதைத் தாண்டி யார் யார் என்ன அய்.பியில் எழுதுகிறார்கள் என்று புலனாய்வது, கண்டுபிடிப்பது, அம்பலபடுத்துவது என்கிற மாயச்சாகசவேட்கை பலருக்கும் பிடித்தமாயிருக்கிறது. இதில் சிக்கிக்கொள்ளாமல் கும்மியடிப்பவர்களே பாக்கியவான்கள்.







பதிவு 1

தோழர் டூண்டு


வன்மத்தின் மொழியிலிருந்து
வார்த்தைகளை உருவுகிறாய்.
வன்மத்தின் திசையிலிருந்து
விலகவே விரும்புகிறேன் நான்.
ஆனாலும் வன்மத்தின் ஆதி
உன்னிலிருந்து தொடங்கியதில்லை
என்பதை உணர்கிறேன் நான்
மெய்யாலும் மெய்யாலுமே..
காற்றைக்கிழிக்கும்
உன் இரைச்சலினூடே
எத்தனை ஓசைகள்
எனக்குக்கேட்கின்றன?
கணவாய்களில் கனைக்கும்
ஆடுகளின் மேய்ச்சல் ஓசை,
கருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்
ஆதி மதுக்குடுவைகள்
உடைந்து நொறுங்கும் ஓசை,
ஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்
ஆம் காற்றைப் போலவே
திசைகளை விழுங்கும் வேளை
தென் திசையில் மண்டியிட்டு
அன்னியப் பாதங்களுக்கு
முததமிட்ட ஓசை
இன்னமும்..இன்னமும்
ஆனாலும் நான்
உன் காலடிகளைப் பின்பற்றமுடியாது
மெய்யாலும் மெய்யாலுமே
நீ வெற்றிபெற்ற கணம்தான் எது?
உன்னோடு கைகுலுக்கலாமா
வேண்டாமா என்று நான் குழம்பிய கணமா?.

பதிவு2

உங்களுக்கு commonsense இல்லையா?



சமீபகாலமாக வலையுலகில் பொதுப்புத்தி குறித்து அதிகமும் பேசப்பட்டது, குறிப்பாக அப்சல் விவகாரத்தில். ஆனால் commonsense என்றழைக்கப்படும் பொதுப்புத்தி குறித்து ஆழமான புரிதலின்றி மேலோட்டமாகவே கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பொதுவாகவே புத்தி என்பதே இயற்கையானதல்ல, மாறாகக் கட்டமைக்கப்பட்டதே. மொழி என்பது சொற்களாலானது, சொற்கள் அர்த்தங்களால் ஆனவை என்ற வழமையான மொழியியல் புரிதலிலிருந்து விலகி சொற்கள் அர்த்தங்களைப் பதிலீடு (subtitute) செய்வதில்லை, மாறாகக் குறியீடு (signify) மட்டுமே செய்கிறது என்னும் சிந்தனையின் அடிப்படையில் குறியீடு, குறிப்பான் ஆகிய கருத்தாக்கங்களை முன்வைத்தது பின்நவீனம்.

பொதுப்புத்தி என்பது சமூகத்தில் ஆதிக்கத்தைக் கைக்க்கொண்ட பெருங்கதையாடல்களால் கட்டமைக்கப்படுவது. நம்சூழலில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் தமிழ்ச்சினிமாவில் கள்ளக்கடத்தல் வில்லன்களின் பெயர்கள் பீட்டராகவோ முஸ்தபாவாகவோ இருப்பது, தலித்துகள் உணர்வற்ற அடிமைகளாகச் சித்தரிக்கப்படுவது எனப் பலவற்றைச் சொல்லலாம். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், பால்மீறிகள், நாடோடிகள், பழங்குடிகள் என விளிம்புநிலையினர் குறித்து பெருங்கதையாடல்கள் கட்டமைக்கும் பிம்பங்களே பொதுப்புத்தியாக உருமாற்றமடைகிறது.

இத்தகைய போக்கிற்கு எதிரான எதிர்வினைகளும் எழாமலிருப்பதில்லை. அத்தகைய மனநிலைகளைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். உதாரணமாக நம் இளைஞர்களிடையே உலவும் பாலியல்கதைகளில் பெரும்பாலான கதைகளின் நாயகர்களாக எம்.ஜி.ஆரும் காந்தியும் இருப்பது. இவர்கள் இருவரும் திருஉரு(icon)க்களாக்கப்பட்டவர்கள். இந்த திரு உருக்களின் மீதான எரிச்சலே பாலியல்கதைகளாக மாறுகிறது. இன்னொரு உதாரணமாகக் கேரளச்சமூகத்தில் வழக்கத்திலுள்ள தெறிப்பாட்டைச் சொல்லலாம். நம் வலைப்பூக்களிலும் இத்தகைய உதாரணங்களைச் சொல்லமுடியும்

பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள், சாதி என்பது இயற்கையானதுதான், இந்துமதமே உண்மையான மதம், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழ்நாடே கெட்டுப்போனது அதற்கு முன் இங்கிருந்த ஒரே பிரச்சினை பாலாறும் தேனாறும் ஓடியதால் ஏற்பட்ட ஈ மற்றும் கொசுத்தொல்லைப் பிரச்சினை மட்டுமே என்பதாகவே பொதுப்புத்தியின் போக்கிலிருந்து பேசுபவைதான் ஹரிஹரனின் எழுத்துக்கள். இதுபோன்ற போக்குகளுக்கு எதிர்வினையாகவே விடாதுகருப்பு, டூண்டு(எ) போலிடோண்டு ஆகிய தோழர்களின் எழுத்துக்கள் அமைகின்றன.

இவர்களின் எழுத்துக்களில் 'கெட்ட'வார்த்தைகள் இருக்கின்றதா என்றால் 'ஆம்'. ஆனால் கெட்டவார்த்தை, நல்லவார்த்தை என்பதே பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டதுதான். அவைகள் கெட்டவார்த்தைகள் என்றால் பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களை தஸ்யூக்கள், சூத்திரர்கள், வேசிமக்கள் என்று குறிப்பிடும் இந்துமதப் பிரதிகளைக் கொளுத்தி விட பார்ப்பனர்கள் தயாராக இருக்கிறார்களா?


மேலும் வியாசர்பாடியில் வசிக்கும் ஒரு தலித்துக்கு 'ஙோத்தாபாடு' என்பது சாதாரணமான வார்த்தை. நிச்சயமாக திருவல்லிக்கேணி பார்ப்பான் அந்த வார்த்தையை உச்சரிக்கமாட்டான். அதற்காக அந்த பார்ப்பான் நல்லவன் என்று சொல்லிவிட முடியுமா? கெட்டவார்த்தைகளை விட மோசமானவை சாதிய அதிகாரம் நிறைந்த வார்த்தைகள்.
(ஹரிஹரனின் எழுத்துக்கள் போலிடோண்டு மற்றும் விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்களை விடவும் நாகரீகமானவை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உண்மையில் போலிடோண்டு, விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்கள் தடைசெய்யப்படவேண்டியவை என்றால் நிச்சயமாக ஹரிஹரனின் எழுத்துகளும் தடைசெய்யப்படவேண்டியவைதான்.
டூண்டு, விடாதுகருப்பு எழுத்துக்களில் ஆணாதிக்க, ஆண்மய்ய மற்றும் ஆண்நோக்குப் பார்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதுகுறித்து எனக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நான் கருத்துமாறுபடுவதாலேயே அல்லது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன என்பதாலேயே ஒரு எழுத்தைத் தடை செய்யவோ தணிக்கை செய்யவோ கோருவது நியாயமாகாது. தணிக்கை, தடை, தண்டனை ஆகிய கருத்தாக்கங்களை மனித உரிமை ஆர்வலர்களும் நவீனச்சிந்தனையாளர்களும் கேள்விக்குள்ளாக்கிவரும் சூழலில் விடாதுகருப்பு, போலிடோண்டு, ஹரிஹரன் ஆகிய யாருடைய எழுத்துக்களாக இருந்தாலும் தடை செய்வதோ அல்லது தணிக்கை செய்வதோ நீதியாகாது. )

ஒரு வசதிக்காக ஹரிஹரனின் எழுத்துக்களைப் பெருங்கதையாடல்கள் என்றும் விடாதுகருப்பு, டூண்டு ஆகியோரின் எழுத்துக்களை சிறுகதையாடல்கள் என்றும் பிரித்துக்கொள்ளலாம்(ஒரு வசதிக்காக மட்டுமே). ஆனால் இத்தகைய இருவிதமான அணுகுமுறைகளுமே ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு உதவாது. இரு போக்குகளுமே பிடிவாதமான முன் தீர்மானங்களைக் கொண்டவை.

அப்படியானால் இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது? பொதுவாக நாம் ஒரு பிரதியை அணுகும்போது உடன்பாட்டு வாசிப்பு, எதிர்மறை வாசிப்பு என்கிற இருவிதமான வாசிப்புகள் வழியாகவே அணுகுகிறோம். இது முன் தீர்மானங்களின் அடிப்படையில் அணுகுவது. இது உங்களுக்கு எதையும் புதிதாக கற்றுத் தராது. அறிந்தவற்றிலிருந்து விலகும்போதுதான் நாம் புதிய அர்த்தங்களைச் சென்றடையமுடியும், மேலும் கண்டடைய முடியும்.

விவாதம் என்பது நீங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தை மறு உறுதி செய்வதுதான். 'என்னுடைய கருத்து மட்டுமே சரியானது" என்னும் புள்ளியிலிருந்தே இது தொடங்குகிறது. ஆனால் இதற்கு மாறாக உரையாடல் என்பது "என் கருத்திலும் தவறு இருக்கலாம்" என்னும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது.

உரையாடல் மட்டுமே நமக்குப் புதிய புரிதல்களை உருவாக்க உதவும். பொதுப்புத்தியிலிருந்து விலகுவதுமட்டுமே இதற்கான வழி.
எனவே, இனி யாராவது "உனக்கு commonsense இருக்கிறதா?" என்று கேட்டால் தயங்காமல் "எனக்கு commonsense இல்லை" என்று பெருமிதத்தோடு கூறுங்கள்.

அறிந்தவற்றிலிருந்து விலகுங்கள், அறியாமையிலிருந்து தொடங்குங்கள், உரையாடப் பழகுங்கள். உரையாடுவோம்

37 comments:

Voice on Wings said...

இவ்விவகாரத்தில் எனது எண்ணங்களைப் பிரதிபலிப்பதாய் இருந்தது இந்த இடுகை. நாம் அனைவருமே மனநோயாளிகள்தான் என்ற உங்கள் கூற்று நூறு சதவிகிதம் உண்மை.

Darren said...

///திரு.போலிடோண்டுவோ இப்போது இதை மறுத்துத் தன் பக்கத்தில் எழுதியிருப்பது மட்டுமில்லாது இந்த 'ரகசியங்களை வெளிக்கொணர்ந்த' தோழர். செந்தழல்ரவியே போலிப்பக்கங்களில் பல காமக்கதைகளை எழுதியிருக்கிறார் என்று அவர் சில ஆதாரஙளை வெளியிட்டிருக்கிறார்///


//பார்ப்பனீயம் என்பது வெறுமனே பார்ப்பனர்களிடம் மட்டும் இருப்பதில்லை, நமக்குள் இருக்கும் பார்ப்பனீயத்தைக் களையவேண்டும்.//


//மேலும் மூர்த்தியாக இருந்தாலும் விடாதுகருப்புவாக இருந்தாலும் போலிடோண்டுவாக இருந்தாலும் அவரை மனநோயாளி என்று குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எல்லோருக்குமே மனநோய் இருக்கிறது, அதன் சதவிகிதம்தான் மாறுகிறது என்பது உளவியலின் அடிப்படை.//


உண்மைகள்

Osai Chella said...

யோவ் சுகுணா உனக்கு லொள்ளுயா, எனத்தை அறியாமயிலிருந்த தொடங்குறது? எனக்குத் தான் அறியாமைன்னாவே என்ன? ங்கிற கேள்வி இன்னைக்கு வரைக்கும் இருக்குதா இல்லையான்னே தெரியலையே? இன்னா பண்லாம்? மப்பு அடிச்சுட்டு பது போடிருக்கேன்.. இப்பத்தான் முத முறையா பின்னூட்டம்... :-) %^^***. நான் கேட்ட கேள்விகளுக்கு உன் அறியாமையிலிருந்த பதில் சொல்லு ஒரு குவாட்டர் பார்சல் அனுப்பறேன்... கே ஓ வா? அட மாத்திபோட்டு படி சாமி!

குசும்பன் said...

"ஆனால் சமீபகாலமாக அவரது பக்கங்களை நான்போய்ப் படிப்பதில்லை என்பதற்குக் காரணம் அவரது கெட்டவார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்பதே தவிர வேறல்ல."

அவ்வ்வ்வ்வ்வ்:((((

"மேலும் மூர்த்தியாக இருந்தாலும் விடாதுகருப்புவாக இருந்தாலும் போலிடோண்டுவாக இருந்தாலும் அவரை மனநோயாளி என்று குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எல்லோருக்குமே மனநோய் இருக்கிறது, அதன் சதவிகிதம்தான் மாறுகிறது என்பது உளவியலின் அடிப்படை. "

100% சதவீதம் உண்மை.


போலிடோண்டு மனநோயாளி என்றால் டோண்டு, இதுவரை போலிடோண்டுவோடு இருந்தவர்கள், அல்லது போலிடோண்டு பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள், தமிழ்மணத்தைத் திறந்தவுடனே இன்றைக்குப் போலிடோண்டு பற்றி யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதித் தேடிப்படித்து (மற்ற பதிவுகளுக்கெல்லாம் இரண்டாம்வாய்ப்பே அளித்துவிட்டு)

அப்பாடா நான் அதில் வரவில்லை என்று நினைக்கும் பொழுது போட்டிங்க பாருங்க ஒரு வரி கீழ....

படிப்பவர்கள், எனது இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்து உள்வந்து இதைப்படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், எழுதிக்கொண்டிருக்கும் நான் எல்லோருமே மனநோயாளிகள்தான்.

Anonymous said...

செல்லா, குழலி போன்றவர்கள் போலியை குழிதோண்டிப் புதைத்தாலும், சற்றே பொறுத்திருங்கள். ஒன்றிரண்டு மாதம் கழிந்ததும் செல்லா, ரவி, குழலி போன்றவர்களையும் போலியின் கூலிகள் என்று திசைதிருப்பி, போலியை அவர்கள் புதைத்ததற்கு போலி அவர்களைத் தாக்கியதுதான் காரணம், மேற்கண்ட நபரைத் தாக்கியபோது மட்டும் நீங்கள் ஏன் பொத்திக்கொண்டு இருந்தீர்கள் என்று நைச்சியமாக திசைதிருப்புவார்கள் என்பது உறுதி. போலியை ஒடுக்கியதற்கு பிரதியுபகாரமாக இப்போதே செல்லா போன்றவர்களை (http://osaichella.blogspot.com/2007/09/blog-post_01.html) சட்டையைக் கிழித்துக்கொண்டு அலையவிட்டிருப்பதில்தான் இவரைப் போன்றவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவை அப்பன் மகரநெடுங்குழைகாதன் அவர்களுக்கு அளிப்பானாக.

Anonymous said...

சுகுணா,

மூர்த்தி மனநோயாளி என்று சொல்வதிலே உங்களுக்கு என்ன கண்டனம் இருக்கும் என்று புரியவில்லை. பொதுப்புத்தி என்ற கற்பிதத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்று நினைக்கிற நீங்கள், மனநோயாளி என்பதை பொதுப்புத்தியில் இருந்தே பார்ப்பதால் தான் கண்டனம் எழுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியில்லாமல், மூர்த்தி சிகிச்சைக்கு உட்படவேண்டியவன், அனுசரணை காட்டப்பட வேண்டியவன் என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா? . செல்லா அந்த அர்த்தத்தில் தான் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாதிக்கப்பட்ட சிலர், தங்கள் சுயலாபத்துக்காகச் சிலர் மூர்த்தியுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. மூர்த்தி இப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனுக்குத் தகவல்கள் தந்து, உசுப்பி விட்டுக் குளிர்காய்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை விட மூர்த்தி கொடூரமானவனில்லை என்பது என் அபிப்ப்ராயம். ஏனெனில், மூர்த்தி ஆரம்பத்தில் இருந்தே ஒரே மாதிரி, ஊகிகக் முடிபவனாகவே இருந்திருக்கிறான்.

மூர்த்தியுடன் தொடர்பு கொண்டவர்களின் நெடிய மௌனத்துக்கும் இப்போது அர்த்தம் புரிகிறது :-)

பெரியார் பற்றிய பொதுப்புத்தி, ' சாமி சிலைகளை உடைத்தவர்', என்பதில் இருந்து இப்போது, பிராமணர்களை ஒழித்துக் கட்டச் சொன்னவர் என்பதாக - குறைந்த பட்சம் இணையத்திலேனும் - மாற்றம் அடைந்திருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் உங்களைப் போன்றவர்கள் தான் என்பது என் கருத்து. இந்த இரண்டு கருத்துக்களுமே மேம்போக்கான பார்வைகள் என்பதை உங்களைப் போன்றவர்கள் - சொன்னால் படிக்க ஆளிருக்கிறார்கள் என்று தெரிந்தும் - சொல்லாமல் விட்டதுதான், பார்ப்பனீய எதிர்ப்பு பற்றி ஆஃப்பாயில்டுகள் எல்லாம் ஆளாளுக்கு பெரியார் பெயரில் அராஜகம் செய்யக் காரணம்.

மேலும், மூர்த்தியின் மனநோயால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பை நீங்கள் உங்கள் கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள். பெரியார் பற்றியும், பார்ப்பன எதிர்ப்பு, திரவிட ஆதரவு போன்ற எவ்விதமான பரிச்சயங்களும், இல்லாத ஒரு சாமானியப் பெண் இந்தத் தாக்குதலுக்கு உட்படும் போது, பொதுப்புத்திக்கு உட்பட்டுத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி, அதிகார மைய்யங்களில் நம்பிக்கை இல்லாத ஒருவர், தன் ஸ்கூட்டர் களவு போனால், இன்னமும் போலீஸ், நீதிமன்றம் என்ற அதிகார மய்யங்களை அணுகுகிறாரோ அப்படி.

SurveySan said...

இணையத்தில் எல்லா விதமான சைக்கோக்களும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எல்லோருக்குள்ளும் சைக்கோதனம் ஒளிந்து இருக்கும். மிக்காரும், அது தனியனாக இருக்கும்போது வெளிப்படும்.

பொதுத் தளங்களில், சைக்கோதனத்தை அடக்கி ஆள்பவனே, 'நார்மல்' மனிதன்.

விகாரங்களை கொட்டித் தீர்ப்பவன், பக்கா மனநோயாளி.

அறுவறுப்பான வார்த்தை ப்ரயோகம் பொதுத் தளத்தில் செய்யும் எல்லோரும் மன நோயாளிகளே.

எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது.

இம்முறை சில கரையாண்கள் அகற்றப்படும் :)

TBCD said...

எல்லோருக்கும் மனவிகாரம் இருப்பது உன்மை...

தினசரியயை படிக்கும் வாசகன் போல சூடான செய்திகளை தேடிப் பிடிக்கும் அளவிற்கு ஆகி விட்டது...

இந்த நிலைமைக்கு காரணம், இருவர்குள் முடிய வேண்டிய ஒரு கருத்து பரிமாறல், வீதிக்கு வந்தது..

இதில் விலக்கி விடப் போய் அடிபட்டவர்களும்..உண்டு...சத்தமில்லாமல் மின்னஞ்சலில் முடிய வேண்டிய சண்டைகள் கூட வீதிக்கு கொண்டு வர வேண்டிய அளவிற்கு போய் விட்டது..

சென்ஷேஷனல் நீயுஸ் குடுப்பதில் அனைவரும் ஒருவருக்கொருவர் மிஞ்சி விடுகின்றனர்..

அரசியல் களத்தில் வேடிக்கை கட்சிகளையும் அவர்களின் சண்டைகளையும், அறிக்கைப் போர்களையயம், வேடிக்கைப் பார்ப்பது போல் இதயும் பார்கின்றோம்..

கருத்துச் சுதந்திரம்..என்பது எல்லோர்க்கும் இருக்க வேண்டும்..அதே போல சண்டியர்தனமும் கூடாது..

ஆதரமில்லாமல்..சர்வ சாதரணமாக அடுத்தவர் பேரை உபயோகிப்பது, மெயில்களைப் போட்டு உடைப்பதும்..
வார்த்தைகளில் ஹைலைட் செய்து கெட்ட வார்தைகளில் சக பதிவரை தாக்குவது..அநாகரித்தின் உச்சம்..

தாக்குண்ட அனைவருக்கும் கோபப் பட உரிமையிருக்கிறது..ஆனால், தனக்கு சார்பாக யாரும் இல்லை என்றால், அவர்களையும் புருட்டஸ் ஆக சித்தரிப்பது சரியாகப் படவில்லை

இதில் வழக்கம் போல அனானிகளாக வந்து வாந்தி எடுப்பவர்களும், பாதிக்கப்பட்டவர்களும்,
ஊதிப் பெரிதாக்குவது போன்ற ஒரு தோற்றம் உண்டாகின்றது...

ஆரவாரத்துடன் ஆரம்பித்தவர்களும் இப்போது மெளனம் காக்கும் போது...எங்கே போகினறது இது என்று தெரியவில்லை..

நீங்கள் இன்னும் ஒன்றை தலைப்பில் சேர்த்திருக்கலாம்..

"தோழர்.போலி டோண்டுவும் துப்பறியும் சாம்புகளும், ம்ற்றும் அப்பாவி பதிவர்களும்"

என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது இயாலாத ஒன்று. செவியிருக்கும் வரை, கண்யிருக்கும் வரை அது தொடரும்..

பதிவுலகின திசையே திருப்பி போட்டிருக்கும் இந்த புயல் எப்போது கரை கடக்கும் என்று அவலுடன்..மற்ற பதிவர்கள் போலவே காத்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை..

தறுதலை said...

"எல்லோருக்குமே மனநோய் இருக்கிறது, அதன் சதவிகிதம்தான் மாறுகிறது என்பது உளவியலின் அடிப்படை"

1. நின்னுகிட்டு ஒண்ணுக்கே அடிக்காதவன் முதல் காலை தூக்கட்டும் என்றால் எவனுமே கால தூக்கி ஒன்னுக்கு அடிக்க முடியாது.
2. நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிராளிதான் தீர்மானிக்கிறான்.
3. ஒரு காலத்தில் பீ என்றாலே மூக்கை பொத்திக்கொண்ட ஊடகம் இன்று சகலவிதமான சொற்களையும் இயல்பாக உள்வாங்கிக்கொள்ளப் பழகிவிட்டது
3. மூர்த்திதான் கெட்ட வார்த்தையில் விளையாடுகிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
4. போலி ஒரு ஆள்தான இல்லை கூட்டமா என்பதில் என் சந்தேகம் தெளிவாகவில்லை
5. இந்த பின்னூட்டத்திற்கும் உங்கள் பதிவிற்கும் ஏதும் தொடர்பு இருப்பதாக யாராவது சொன்னால் அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.
6. இதனால் என்னை போலியின் அல்லக்கை என்றோ, போண்டாவின் அல்லக்கை என்றோ நீங்கள் முத்திரை குத்தலாம்.
7. தண்ணி அடிச்சிட்டு F தொ.கா பார்க்காம எழுதுனா இப்படியும் எழுதலாம்.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

நன்றி நன்றி அனைவருமே மனநோயாளிகள்தான் என்ற உங்கள் கூற்று நூறு சதவிகிதம் உண்மை.

அன்புடன்
விசாலாட்சி

பொன்ஸ்~~Poorna said...

கலக்கிட்டீங்க..

//எனது இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்து உள்வந்து இதைப்படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், எழுதிக்கொண்டிருக்கும் நான் எல்லோருமே மனநோயாளிகள்தான்.//
தலைப்பைப் பார்த்து வரலியே... எழுதியவர் பேர் பார்த்து தானே வந்தேன்.. அப்ப நானு? ;)

பாவெல் said...

//பரபரப்பாகப் பேசப்படும் எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வினை செய்வதோ, உடன் கருத்து சொல்வதோ அவசியமானதுதானா என்னும் ஆயாசம் மிஞ்சுகிறது என்றபோதும் இந்த போலி விவகாரம் குறித்து ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமென்று தோன்றுகிறது. அதற்குமுன் தோழர் டூண்டு (எ) போலி டோண்டுவிற்கும் எனக்குமான உறவு குறித்து ஒரு சில பகிர்தல்கள்.//



சுகுனா,
நீங்கள் எதை வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்
அது பற்றி எனக்கு கவலை இல்லை.

ஆனால் வார்த்தைகளின் மதிப்பு தெரியாமல்
எல்லா "கழிசடை"களையும் தோழர் என்று
விளிக்காதீர்கள் !

க்ஷகிலாவையும் தோழர் என்கிறீர்கள்
போலி டோண்டுவையும் தோழர் என்கிறீர்கள்

தோழர் என்றழைக்க ஒரு சில தகுதிகள் தேவை,
தோழர் என்கிற தகுதியை அடைய சில
அற்புதமான பன்புகளும்
அர்ப்பணிப்பும் தேவை
ஆனால் நீங்களோ
அற்பவாதியிலிருந்து ஆபாச நடிகை வரை
அனைவரையும் தோழர் என்கிறீர்கள்.

இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை சரியாக
உள்வாங்கிகொண்ட பிறகு அதை பயன்படுத்துங்கள்
அல்லது உங்கள் நன்பன் அ.மார்க்சிடம் கேளுங்கள்
அர்த்தம் சொல்லுவார்.

Kasi Arumugam said...

ப்பூ.. அட. நீ இவ்வளவுதானா? நல்லாரு.
-காசி

சுகுணாதிவாகர் said...

இது உண்மையான காசி ஆறுமுகம்தானா?

Ayyanar Viswanath said...

/தோழர் என்றழைக்க ஒரு சில தகுதிகள் தேவை,
தோழர் என்கிற தகுதியை அடைய சில
அற்புதமான பன்புகளும்
அர்ப்பணிப்பும் தேவை ///

பாவெல்
ஒரு சித்தாந்தத்தின் அடியொற்றிகள் மட்டும் பயன்படுத்தத்தான் ஒரு வார்த்தை எனும் ஒற்றைத் தன்மையினூடாய் உங்களின் சித்தாந்த அறிவு கேள்விகளுக்குட்படுத்த வேண்டியது என நினைக்கத் தோன்றுகிறது.தோழர் என்ற வார்த்தையை புனிதப்படுத்த நினைக்கும் உங்களின் அணுகு முறைக்கும் ஒரு மனிதனை கடவுளாய் புனிதபடுத்தும் வெகுசன அறியாமைக்கும் என்ன மிகப் பெரிய வித்தியாசம்?

லக்கிலுக் said...

//சுகுணாதிவாகர் said...
இது உண்மையான காசி ஆறுமுகம்தானா?
//

எனக்கும் அந்த சந்தேகமுண்டு. :-(((

நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.

நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!

Kasi Arumugam said...

//நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.//

ஓஹோ அப்படியா? ரொம்பத்தான் அறிந்தவர் நீங்கள்.

//நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!//
எங்கே கொஞ்சம் லிங்க் எடுத்துப்போடமுடியுமா தம்பி?

TBCD said...

இங்கே ஒரு போலி மட்டுமல்ல நிறைய போலிகள் உலாவுகிறார்கள்..ஊரு இரண்டுப் பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்...மேலெ இருக்கும்..விஜயலெட்சுமி கூட அதர் ஆப்ஷனில் போட்டது போல் இருக்கிறது...இந்த புயல் ஒயும் வரை, சிண்டு முடியும், பிரச்சனையயை திசை திருப்பும், பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம்...

எல்லா பதிவர்களுமே அதை பின்பற்றலாம்...

thiagu1973 said...

தோழர் எனும் வார்த்தையை புணிதபடுத்த வேணாம் குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமலாவது இருங்கள்

எந்த தோழனும் அடுத்த ஒரு நபரின் அம்மாவை பற்றி தங்கையை பற்றி கேவலமாக பதிவெழுதமாட்டான்.

எதையும் புனிதபடுத்தாதீர்கள் என்பதற்கு எல்லாவற்றையும் அசிங்கப்படுத்துக்கள் என புரிந்துகொண்ட உங்களின் அறியாமை கண்டு வருந்துகிறேன்.

போலி உங்களை பற்றி கேவலமாக எழுதவில்லை இனிமேலும் எழுதகூடாது எனும் நிலைபாட்டிலும்

அதே நேரத்தில் இந்த நேரத்தில் எதையேனும் தட்டச்சவேணும் எனும் நோக்கிலும் நீங்கள் போலியை தோழர் என விழிக்கும் சந்தர்ப்பவாதம் எந்த வகையில் சேர்த்தி .

உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பு கொடுத்து படித்துகொண்டும் யோசித்துகொண்டும் இருந்தேன் .

உங்களின் இந்த ஒரு பதிவு போது
நீங்கள் யார் எனும் நிலையை எனக்கு உணர்த்த நன்றி சுகுணா திவாகர்

Anonymous said...

//குழலி / Kuzhali said...
வாய்யா கருப்பு, நீதானா அது, நேற்று பேசும்போதே சொல்லியிருந்திருக்கலாமல்லவா நீ தான் கருப்பு என்று, கடைசி வரை நீங்கள் தான் கருப்பு என்று சொல்லிக்கொள்ளவேயில்லையே!!! வலைப்பதிவு பக்கமே வருவதில்லை என்றீரே? கடைசியில் பார்த்தால் கருப்பே நீராக இருக்கின்றீர்....
//

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_08.html

கருப்புவின் பதிவில் குழலியின் பின்னூட்டம். மூர்த்தியை மூன்று முறை சந்தித்தாராம். அப்போதெல்லாம் மூர்த்தி தான் போலி என்று தெரியாதாம். அம்மாவை திட்டியதும் தான் மூர்த்தி தான் போலி என்று தெரிந்ததாம். இந்த விழயம் எல்லாம் நம்பும்படியா இருக்கு?

உண்மைத்தமிழன் said...

//அதேபோல உண்மைத்தமிழனைப் பொறுத்தவரை அவரது மொழிநடையும் அவர்து கருத்துக்களும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை. ஆனால் அவரது உடல் ஊனத்தைக் குறிப்பிட்டும் அவரது வறுமை குறித்தும் வசைபாடி போலிடோண்டு எழுதியது அவர் இதுவரை பயன்படுத்திவந்த கெட்டவார்த்தைகளை விடவும் கொடூரமானது.//

நன்றி சுகுணா..

ஆனாலும் என்னைவிட அதிகமாக வசைபட்டிருப்பது டோண்டு ஸார்தான் என்பதில் எனக்கு ஐயமில்லை.

Unknown said...

Well said friend....


l am new to blogs... From my view point, its osai chella who gave lot of publicity to bad people....

without him, I would have known about all those nonsense...

He think himself he has enlightened after reading some books of osho... Now he is suffering due to that illusion...

If u read ur blog without any prejudies he will write again constructively....

பாவெல் said...

\\ஒரு சித்தாந்தத்தின் அடியொற்றிகள் மட்டும் பயன்படுத்தத்தான் ஒரு வார்த்தை எனும் ஒற்றைத் தன்மையினூடாய் உங்களின் சித்தாந்த அறிவு கேள்விகளுக்குட்படுத்த வேண்டியது என நினைக்கத் தோன்றுகிறது.தோழர் என்ற வார்த்தையை புனிதப்படுத்த நினைக்கும் உங்களின் அணுகு முறைக்கும் ஒரு மனிதனை கடவுளாய் புனிதபடுத்தும் வெகுசன அறியாமைக்கும் என்ன மிகப் பெரிய வித்தியாசம்//



அய்யனார்,

பண்மைத்தன்மையின் சித்தாந்தம் அய்ரோப்பிய நாடுகளிலேயே மண்டையை போட்டுவிட்டது
அதன் பிறகும் நீங்கள் அந்த தத்துவத்தின் வழியாகவே பார்ப்பதாக கூறுவதை நான் நம்பமுடியாது,
வேறு யாரும் நம்பவும் மாட்டார்கள் !

மார்க்சியத்தை உலககண்ணோட்டமாக
கொண்டவர்கள்,
மக்களுக்காக சொந்த வாழ்வை
இழப்பவர்கள்,
புரட்சியை தவிர வேறு
நோக்கமும்
திட்டமும்
இல்லாதவர்கள்
அவர்கள் தான் தோழர்கள். அவர்களை தான் தோழர்களாக கருத முடியும்.

மற்றவர்கள் வேண்டுமானால் சுய திருப்திக்காக
தங்களைத்தாங்களே மாறிமாறி
தோழர் தோழர் என்று கூறிக்கொள்ளலாமே தவிர
என்றுமே மக்கள் அவர்களை "தோழர்"
என்ற்ழைக்க மாட்டார்கள்
இந்த அர்த்ததில் தோழர் என்பதை
புரிந்து கொள்ளுங்கள் ஐய்யனார்.

"தோழர்" என்கிற வார்த்தையை புனிதமானது
என்று நான் எங்கு கூறியுள்ளேன் ?

கூறாவிட்டாலும் அது அந்த பொருளில் தான்
இருக்கிறது என்று நீங்கள் கருதலாம்
அது அந்த வார்த்தைக்கு உள்ள பொருளின் செறிவான உண்மையிலிருந்து வெளிப்படுகிறது
எனினும் உங்களுக்கு அதை அப்படி தான் பொருள் கொள்ள முடியும் என்று கருதுகிறேன்,
ஏனெனில்
நீங்கள் அனைத்தையும் பண்மைத்தன்மையில்
அல்லவா பார்க்கிறீர்கள்!

Arun Kumar said...

//Kasi Arumugam - காசி said...

//நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.//

ஓஹோ அப்படியா? ரொம்பத்தான் அறிந்தவர் நீங்கள்.

//நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!//
எங்கே கொஞ்சம் லிங்க் எடுத்துப்போடமுடியுமா தம்பி?//

திரு காசி ஆறுமுகம் அவர்களே தமிழ் வலைபூக்கள் வளர்க்க நீங்கள் பாடுபட்டது வெகு அதிகம். இந்த லக்கிலுக் என்ற பதிவர் தமிழ் வலைபூக்கள் அழிக்க வெகுவாக பாடுபட்டு கொண்டு இருக்கிறார்.

என்ன ஆதாரம் வேண்டும்??
நான் இந்த கிருழ்ணா என்ற இந்த லக்கிலுக் போல ஒரு பஞ்சோந்தி துரோகியை வாழ்க்கையில் இது வரை பார்த்தது இல்லை. இவனால் நான் என் வாழ்க்கையில் பட்ட கழ்டம் சொல்லி மாளாது. மூர்த்திக்கு முதல் அல்லைகை இவன் தான். நானும் அக்னிசிறகு என்று தமிழ்மணத்தில் எழுதியவன் தான். ஆனால் இந்த லக்கிலுக்கின் போட்டு கொடுத்தல் அல்லத்து கூட்டி கொடுத்தல் காரணமாக தமிழ் பதிவுலகை விட்டு விலகி விட்டேன்.. காரணம் என்னவாக இருக்கமுடியும்.. இது போல சாக்கடைகளோடு என்னால் போராட முடியவில்லை
என்னை பற்றி சைகோ மூர்த்தி நான் வேலை பார்க்கும் இடத்தில் புகார் கொடுத்தான்..என்னவாம்.. நான் இணையத்தில் ஆபாசமாக எழுதுகிறேனாம் :) .. சரி என் பெயர் ஊரு கம்பேனி எப்படி அவனுக்கு தெரிந்தது?? எல்லாம் இந்த லக்கிலுக் தான் கொடுத்தார்..

என்னிடம் அனைத்து ஆதாரமும் உள்ளது..

திரு காசி அவர்களே அந்த பொறம்போக்கு மூர்த்தியால் நான் பாதிக்கட்டது பல.,மூர்த்தியை எதிர்த்து நீங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் அங்கு நான் கைஎழுத்து இட த்யார்.. கூடவே இந்த அல்லைகை லக்க்கிலுக் சைக்கோ மூர்த்தி தொடர்பு குறித்தான வலுவான அசைகக்முடியாத ஆதாரம் என்னிடம் உண்டு.. அதை சைபர் க்ரைமிடம் சம்ர்பிக்க த்யார்..

Anonymous said...

//இவனால் நான் என் வாழ்க்கையில் பட்ட கழ்டம் சொல்லி மாளாது. மூர்த்திக்கு முதல் அல்லைகை இவன் தான்//

அனேகமாக, இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிற அனைவருமே இதை ஊகித்து விட்டிருப்பார்கள்.

Ayyanar Viswanath said...

/நீங்கள் அனைத்தையும் பண்மைத்தன்மையில்
அல்லவா பார்க்கிறீர்கள்/

நிஜம்தான் பாவெல் உண்மை பன்முகத் தன்மை கொண்டது.உண்மையின் வசீகரங்களை துய்க்க நேரிடும்போது எந்த ஒரு சட்டகங்களுக்குள்ளும் நம்மைப் பொருத்திக்கொள்ளமுடியவில்லை.ஏதாகினும் எங்கேனும் ஒரு சிறு இடைவெளியிலாவது வேறொரு கிளைத்தலுக்கான வாய்ப்புகளுமிருக்கிறது என்பதில் எனக்கெந்த சந்தேகங்களுமில்லை.
இதனால்தானோ என்னவோ நிறுவனமயமாக்கப்படும்,தனி அடையாளப்படுத்தப்படும்,புனிதங்கள் என உயர்ந்த பீடங்களில் ஏற்றிவைக்கப்படும்,அசிங்கமானது/அருவெருப்பானது என தாழ்த்தப்படும் எந்த ஒன்றினையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

Anonymous said...

நான் ஒரு அய்யங்கார் ஆத்துப்பெண் என்ற பார்வையில் இதனை பார்க்கிறேன். ஒருவன் தான் பிறந்த ஜாதியை பெருமையாக சொல்லிக் கொள்வது தவறு. அவ்வாறு சொல்பவன் எவனாக இருந்தாலும் ச்எருப்பால் அடிக்க வேண்டும்.

Anonymous said...

தரன் என்பவர், தன் பதிவில் செந்தழல்ரவி என்கிற இரவுக்கழுகு எழுதியவனை காட்டமாக பின்னி எடுத்திருக்கிறார்.

செந்தழல்ரவியிடம் தண்ணி வாங்கி குடித்துவிட்டு துண்டு சிகரெட் வாங்கி இழுத்த நீ அவனைப் பற்றி தாக்கி பதிவு எழுத மாட்டே. ஏன்னா அவன் தரும் தண்ணி உனக்கு தேவை!

Anonymous said...

அருண்குமார் என்கிற இந்த பார்ப்பன நாய் லக்கிலுக்கின் அலுவலகத்துக்கு போன்போட்டு மேலதிகாரிகளிடம் போன் செய்து வம்பு செய்தது இந்த ஓசி தண்ணி குடித்த சுகுணாதிவாகருக்கு தெரியுமா?

Anonymous said...

போலி செல்லாவை தலித்து கம்னாட்டி என்றோ தாழ்த்தப்பட்டவன் என்றோ முதலில் கூறவில்லை.

எப்போது எப்படி கூறினான் தெரியுமா?

செல்லா சென்னையில் ஹோட்டலில் ரூம்போட்டு டோண்டுவுடன் பேசு நடத்தி அதனை தன் போஸ்ட்டில் பதிவாக போடும்வரை பார்ப்பனர்களை எதிர்த்தான். அதன்பிறகு எதிர்க்கலை.

எனவே திராவிடர்களை மட்டுமே தாழ்த்தப்பட்டவன் என அசிங்கமாக பாப்பான் பேசவில்லை. தலித்துகளையும் பேசுகிறான். டோண்டு ராகவன் பார்ப்பனர் தவிர்த்த அத்தனை பேரையுமே தீண்டத்தகாதவனாகத்தான் பார்க்கிறான் என்பதை போலி புரியவைத்தான்.

அதற்கு செல்லா, ஆமாண்டா நான் தலித்துதான் என்று சொன்னபிறகுதான் போலி அந்த வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தினான். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இப்போது நீங்கள் திடீரென பள்ளன், பறையன் ஆதரவு கோஷம் போடுவது ஏன் என்று தெரியவில்லை.

அன்றைக்கு பாப்பான் தன்ஜாதியை உயர்வாகக் கூறி மற்ற தலித்துகள் இரட்டை டம்ளர் வைத்து தண்ணி குடிங்கடா என்று சொன்னபோது எங்கே சென்றே சுகுனா?

Anonymous said...

டோண்டு ராகவன் 200 ரூபாய் பணம் கொடுத்து விட்டு சிகரெட்டும் பீரும் அடித்ததற்கு, அவர் என்னமோ ஓசியில் தண்ணி அடிக்க வந்தார் என்று எழுதிய திராவிட பரதேசிகள்தானே நீங்கள் எல்லோரும்?

சுகுணாதிவாகர் said...

/மூர்த்தியின் மனநோயால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பை நீங்கள் உங்கள் கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள். பெரியார் பற்றியும், பார்ப்பன எதிர்ப்பு, திரவிட ஆதரவு போன்ற எவ்விதமான பரிச்சயங்களும், இல்லாத ஒரு சாமானியப் பெண் இந்தத் தாக்குதலுக்கு உட்படும் போது, பொதுப்புத்திக்கு உட்பட்டுத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி, அதிகார மைய்யங்களில் நம்பிக்கை இல்லாத ஒருவர், தன் ஸ்கூட்டர் களவு போனால், இன்னமும் போலீஸ், நீதிமன்றம் என்ற அதிகார மய்யங்களை அணுகுகிறாரோ அப்படி. /

உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன் நண்பரே.

Anonymous said...

செந்தழல் ரவி போலியுடன் சேர்ந்து கொண்டு செய்த காரியங்களுக்கு போலிப்பதிவில் தக்க ஆதாரமே இருக்கிறது. நீ ஏன் அவனை எதிர்த்து பதிவு எழுதவில்லை சுகுனா? குடிச்ச தண்ணிக்கு துரோகம் செய்யக் கூடாதுன்னா?

பாவெல் said...

//நிஜம்தான் பாவெல் உண்மை பன்முகத் தன்மை கொண்டது.உண்மையின் வசீகரங்களை துய்க்க நேரிடும்போது எந்த ஒரு சட்டகங்களுக்குள்ளும் நம்மைப் பொருத்திக்கொள்ளமுடியவில்லை.ஏதாகினும் எங்கேனும் ஒரு சிறு இடைவெளியிலாவது வேறொரு கிளைத்தலுக்கான வாய்ப்புகளுமிருக்கிறது என்பதில் எனக்கெந்த சந்தேகங்களுமில்லை.
இதனால்தானோ என்னவோ நிறுவனமயமாக்கப்படும்,தனி அடையாளப்படுத்தப்படும்,புனிதங்கள் என உயர்ந்த பீடங்களில் ஏற்றிவைக்கப்படும்,அசிங்கமானது/அருவெருப்பானது என தாழ்த்தப்படும் எந்த ஒன்றினையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை//



அய்யனார்

பன்முகத்தன்மையில் பார்ப்பது தவறல்ல, அவ்வாறு பார்ப்பது தான் அறிவியல் பூர்வமான அனுகு முறையும் கூட,
ஆனால் அவ்வாறு பார்க்கும் பின் நவீனத்துவம் தெளிவான
கோணலோடு பன்மைத்தன்மைகளின் மிக முக்கிய கூறாகிய வர்க்கத்தை பின் நிலைக்குத் தள்ளி விட்டு பால்,இனம்,மொழி,சாதி
போன்ற கூறுகளை முன் வைக்கிறது.

"தலித்தியம்" என்கிற வார்த்தையை அம்பேத்கர் வாழ்ந்த வரை எங்களுக்கு சொல்லித்தரவில்லை.

எமது மக்கள் வர்க்க ரீதியா திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே
ஏகாதிபத்திய&பின் நவீனத்துவ கூட்டணி உருவாக்கிய தத்துவம் தான்
தலித்தியம்.

எந்த சட்டகங்களுக்குள்ளும் உன்னை பொருத்திக்கொள்ளாதே
என்று உபதேசிப்பது முதலில் உண்மையாகவே இருக்க முடியாது
என்று கருதுகிறேன்,
எனினும் உண்மையாகவே உண்மையின் வசீகரத்தை துய்க்க
சிறு இடை வெளியல்ல
பெரு வெளியிலேயே கிளைத்தலுக்கான
வாய்ப்பு காத்திருக்கிறது,
அப்போது உங்களுடைய உண்மை ஒரு சட்டகத்திற்க்குள் கட்சிதமாக
பொருந்தி இருக்கும்.

நாங்கள் -கம்யூனிஸ்டுகள்- எதையும் புனிதம் என்று உயர்த்துவதுமில்லை
அசிங்கமானது,அருவெருப்பானது என்று தாழ்த்துவதுமில்லை.
இந்த சமூகத்திற்கென்று ஒரு அறவியல் மதிப்பீடு இருக்கிறது அதை
கடை பிடிக்கிறோம்.

உதாரணத்திற்கு அனைத்து பெண்களையும் என் பொண்டாட்டி
என்று கூறி விட முடியுமா?
அவ்வாறு கூறி விட்டு மக்களை அணிதிரட்டி புரட்சியை நடத்த கட்சியை கட்டுவதை நினைத்து பார்க்க முடியுமா ?

அல்லது நான் ஒரு "தேசதுரோகி" என்று பகட்டாக பிரகடனம்
செய்து கொண்டு நாட்டைப்பற்றி பேசத் தான் முடியுமா ஐய்யனார் ?

Ayyanar Viswanath said...

/பெரு வெளியிலேயே கிளைத்தலுக்கான
வாய்ப்பு காத்திருக்கிறது,
அப்போது உங்களுடைய உண்மை ஒரு சட்டகத்திற்க்குள் கட்சிதமாக
பொருந்தி இருக்கும். /

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை பாவெல்..பின்நவீன சித்தாந்தத்தின் அடிப்படையே பெருவெளியின் ஆக்கிரமிப்புகளை சிறுகதையாடல்களின் மூலம் உடைத்தெறிவதுதான்.மேலும் பெருவெளியென்பது சமரசங்களின்/ஒத்திசைவுகளின் ஒட்டு மொத்த குரலாக மட்டுமே இருக்கமுடியும்.சட்டகத்திற்குள் உண்மையை கொண்டுவந்துவிடமுடியென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை..காலம் என்பது வெவ்வேறு தோற்றத்தையும் வெவ்வேறு விவரணைகளையும் முன் வைக்கலாம்..மிக குறைந்த நம்பிக்கையற்ற தன்மைகளோடு ஒப்புக்கொள்ளும் உண்மை கூட நாளை இன்னொருவனால் உடைத்தெறியப்படலாம்..

/சமூகத்திற்கென்று ஒரு அறவியல் மதிப்பீடு இருக்கிறது அதை
கடை பிடிக்கிறோம்./

சமூகத்திற்கான அறவியல் மதிப்பீடுகளின் அளவு கோல்கள் குறித்தெழும் சந்தேகங்களின் விகித வேறுபாடுதான் இருவேறுபட்ட சித்தாந்தங்கள்.என் அறிவுக்கெட்டியவரை சமுகம் குறித்தெழும் அக்கறைக்கான விழுமியங்களின் தகிப்பில் தோன்றுவதே சித்தாந்தம்..நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பது கூட இந்த விகித வேறுபாடு மட்டும்தான்.ஒரு சமூகம் அல்லது அடிப்படை வாழ்வியல் முறைகளை சிதைக்க யாரும் விரும்புவதில்லை.

/தேசதுரோகி" என்று பகட்டாக பிரகடனம்
செய்து கொண்டு நாட்டைப்பற்றி பேசத் தான் முடியுமா ஐய்யனார் ? /

மகாத்மா என்கிற பட்டங்களோடு நாட்டை சூறையாடிக்கொண்டிருப்பது தெரிந்ததுதானே பாவெல்..நம் தமிழ்நாட்டு மகாத்மா க்களின் பட்டியல்களையும் அவர்களின் சூறையாடல்கள் குறித்தும் உங்களுக்கு விரிவாய் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

தேசத்துரோகி/மகாத்மா இரண்டுக்குமே எவ்வித அர்த்தங்களும் இல்லை.அவரவர் நம்பிக்கைகளுக்கேற்றார்போல் பெயர்களும் தங்களுக்கான வடிவங்களைப் பெற்றுக்கொள்கிறது.
இதைப்போலத்தான் சுகுணாவின் தோழர் என்கிற விளியும் என நம்புகிறேன்.

சுகுணாதிவாகர் said...

பாவெல்,

/பண்மைத்தன்மையின் சித்தாந்தம் அய்ரோப்பிய நாடுகளிலேயே மண்டையை போட்டுவிட்டது
அதன் பிறகும் நீங்கள் அந்த தத்துவத்தின் வழியாகவே பார்ப்பதாக கூறுவதை நான் நம்பமுடியாது,
வேறு யாரும் நம்பவும் மாட்டார்கள் !

/

பின்நவீனத்துவம் அய்ரோப்பியச் சூழலுக்கு பொருந்தும் நமது சூழலுக்குப் பொருந்தாது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்களே?

பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு. பின்நவீன அறிதல்முறைகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மேற்கிலேயே காலாவதியான போக்கு என்று டெர்ரி ஈகிள்டன் போன்றவர்களைச் சான்றாதாரங்களாக நிறுத்தி இங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. இலக்கிய, அரசியல், மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வுமுறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன
- ஷோபாசக்தியின் நேர்காணல்.

ஒருவேளை நீங்கள் சொல்வதைப் போல பன்மைத்தத்துவம் மேலைநாடுகளில் மண்டையைப் போட்டுவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். இதையேதானே மார்க்சிய எதிரிகளும் சொல்கிறார்கள், சோவியத் உடைந்துவிட்டது, சீனா முதலாளித்துவப்பாதைக்குத் திரும்பிவிட்டது. எனவே மார்க்சியம் காலாவதியாகிவிட்டதென்று. நாம் அதை ஏற்றுக்கொள்கிறோமா என்ன?

/பின் நவீனத்துவம் தெளிவான
கோணலோடு பன்மைத்தன்மைகளின் மிக முக்கிய கூறாகிய வர்க்கத்தை பின் நிலைக்குத் தள்ளி விட்டு பால்,இனம்,மொழி,சாதி
போன்ற கூறுகளை முன் வைக்கிறது.

/

அப்படியெல்லாம் சொல்லமுடியாது. வர்க்கம் போலவே பல்வேறு அடையாளங்களும் தன்னிலைகளைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கின்றன என்றே சொல்கிறது. வர்க்கத்தை எப்போதும் பின் தள்ளவில்லை.

/"தலித்தியம்" என்கிற வார்த்தையை அம்பேத்கர் வாழ்ந்த வரை எங்களுக்கு சொல்லித்தரவில்லை.

எமது மக்கள் வர்க்க ரீதியா திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே
ஏகாதிபத்திய&பின் நவீனத்துவ கூட்டணி உருவாக்கிய தத்துவம் தான்
தலித்தியம்/

இப்படியெல்லாம் எல்லாவற்றையும் சடரென்று ஏதாவது லேபிள் குத்த்தி குப்பியில் அடைப்பதுதான் உங்களிடத்தில் மாபெரும் சிக்கல். 1992 பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவிற்குப் பிறகு மாபெரும் அளவில் தமிழகச்சூழலிலும் இந்தியச்சூழலிலும் பேசப்படும், விவாதிக்கப்படும் சித்தாந்தமாக மாறியதே தலித்தியம். அதைத் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்துக் கொண்டதாலேயே ஏகாதிபத்திய ஆதரவுச் சித்தாந்தம் என்று சொல்லிவிட முடியாது. மேலும் அம்பேத்கர் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் தலித் என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார்.

/நாங்கள் -கம்யூனிஸ்டுகள்- எதையும் புனிதம் என்று உயர்த்துவதுமில்லை
அசிங்கமானது,அருவெருப்பானது என்று தாழ்த்துவதுமில்லை.
இந்த சமூகத்திற்கென்று ஒரு அறவியல் மதிப்பீடு இருக்கிறது அதை
கடை பிடிக்கிறோம்.

/

இந்த சமூகத்திற்கென்று இருக்கும் அறவியல் மதிப்பீடு என்பது எந்த வர்க்க அல்லது சாதியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்தது? முதலாளித்துவ மற்றும் பார்ப்பனீய அறவியலா அல்லது எல்லோருக்குமான நீதியை வழங்கிவிடக்கூடிய அறவியலா?

/உதாரணத்திற்கு அனைத்து பெண்களையும் என் பொண்டாட்டி
என்று கூறி விட முடியுமா?
அவ்வாறு கூறி விட்டு மக்களை அணிதிரட்டி புரட்சியை நடத்த கட்சியை கட்டுவதை நினைத்து பார்க்க முடியுமா ?

அல்லது நான் ஒரு "தேசதுரோகி" என்று பகட்டாக பிரகடனம்
செய்து கொண்டு நாட்டைப்பற்றி பேசத் தான் முடியுமா ஐய்யனார் /

என்ன தோழர் இது அபத்தமாக இருக்கிறது? அனைத்துப் பெண்களும் என் பெண்டாட்டி என்று யார்சொன்னது? பொதுவுடமை பற்றிப் பேசப்பட்டபோது 'கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவுடைமையாக்கிவிடுவார்கள்' என்று முதளாளித்துவவாதிகள்தான் அவதூறுப்பிரச்சாரம் செய்தார்கள். நீங்களும் அதே மொழியிலேயே பேசுகிறீர்களே?

தேசப்பற்று என்பது எது? இன்றைக்கு இந்துப்பார்ப்பனீயம் உருவாக்கி வைத்திருக்கிற எல்லைக்கோடுகளின் மீதான தேசிய இனவாத வெறியா? நீங்கள் தேசப்பற்று என்பது சொல்வது மக்களின் மீதான பற்று என்றுதான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்த தேசியக் கட்டமைப்பும் அதற்கு ஆதரவாக ராணுவமும் போலீசும் ஊடகங்களும் நீங்கள் ஒத்துக்கொண்டாலும். கொள்ளாவிட்டாலும் உங்களைத் தேசத்துரோகி என்றே பிரச்சாரம் செய்யும்.

பாவெல் said...

\\பின்நவீன சித்தாந்தத்தின் அடிப்படையே பெருவெளியின் ஆக்கிரமிப்புகளை சிறுகதையாடல்களின் மூலம் உடைத்தெறிவதுதான்\\


பின் நவீனத்துவத்தின் நேரடி பொருளில் சிறுகதையாடல்,
பெருங்கதையாடல் என்பதே ஒரு
ஊகத்தொகுப்பு
(அகவய கருத்து முதல் வாதம்) தான் என்கிற போது
"பின் நவீனத்துவத்தின் அடிப்படையே பெருவெளியின் ஆக்கிரமிப்புகளை
சிறுகதையாடல்களின் மூலம் உடைத்தெறிவது தான்"
என்று கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் ?


\\சட்டகத்திற்குள் உண்மையை கொண்டுவந்துவிடமுடியென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை..காலம் என்பது வெவ்வேறு தோற்றத்தையும் வெவ்வேறு விவரணைகளையும் முன் வைக்கலாம்..மிக குறைந்த நம்பிக்கையற்ற தன்மைகளோடு ஒப்புக்கொள்ளும் உண்மை கூட நாளை இன்னொருவனால் உடைத்தெறியப்படலாம்..//


அணைத்துமே வெவ்வேறு சட்டகத்திற்க்குள் தான் பயணிக்கின்றன
ஆனால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல சில தெளிவின்றி
இருக்கலாம், ஆனால் காலமும் புற நிலையும் கோரும் மாற்றம் அவற்றை
நுட்பமாகவும்,துலக்கமானா வடிவிலும் வெளிப்படுத்தி கொள்ளும்.



\\தேசத்துரோகி/மகாத்மா இரண்டுக்குமே எவ்வித அர்த்தங்களும் இல்லை.அவரவர் நம்பிக்கைகளுக்கேற்றார்போல் பெயர்களும் தங்களுக்கான வடிவங்களைப் பெற்றுக்கொள்கிறது.
இதைப்போலத்தான் சுகுணாவின் தோழர் என்கிற விளியும் என நம்புகிறேன்//


மேலே கூறியது போலவே பின் நவீனத்துவம் என்பது ஊகத்தொகுப்பின்
மொத்தம் தான் என்பதற்கு இது எடுப்பான சான்று.
ஆனால் இங்கு எட்டி பார்த்து விட்ட உண்மை நிச்சயமாக கட்டுப்பாடுகளற்ற
பின் நவீனத்துவ 'சட்டகத்திற்குள்' இருந்து வந்திருக்க முடியாது !


\\பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின்தொகுப்பு//


தத்துவம் என்பதே அறிதல் முறைகளின் தொகுப்பு தான்
என்பது கூட
சுகுனாவுக்கு தெரியாதா ?


\\இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. இலக்கிய, அரசியல், மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வுமுறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன
- ஷோபாசக்தியின் நேர்காணல்//

சரி அப்படி பிடித்தாட்டியதாகவே இருக்கட்டும்
அதன் விளைவுகள் என்ன ? எதிர்வினை, பயன் என்ன ?
அது சமூக மாற்றத்திற்கு என்ன பங்களிப்பை வழங்கியது ?



\\ஒருவேளை நீங்கள் சொல்வதைப் போல பன்மைத்தத்துவம் மேலைநாடுகளில் மண்டையைப் போட்டுவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். இதையேதானே மார்க்சிய எதிரிகளும் சொல்கிறார்கள், சோவியத் உடைந்துவிட்டது, சீனா முதலாளித்துவப்பாதைக்குத் திரும்பிவிட்டது. எனவே மார்க்சியம் காலாவதியாகிவிட்டதென்று. நாம் அதை ஏற்றுக்கொள்கிறோமா என்ன//


மார்க்சியம் காலாவதியான தத்துவம் என்பதை முதலாளித்துவவாதிகளுக்கு
முன்பே கூறிய ஜோசியக்காரர்கள் நம்ம பின் நவீனத்துவவாதிகள் தான்.
ஆனால் மார்க்சியம் உயிர்த்துடிப்புள்ள மெய்யியல் என்பதையும்,
இது மாமேதை
" மார்க்சிற்குறிய நூற்றாண்டு " என்பதையும் நிரூபிக்க
'அமெரிக்கா ஏகாதிபத்தியமாக வளர்ந்து ஏழை நாடுகளை மறுகாலனியாக்கிக் கொண்டிருப்பதும்,
ஈராக்கின் நேரடி காலனியாட்சியும்,
ஏகாதிபத்திய
எதிர்ப்பில் சிவந்து கிடக்கும் தென்னமெரிக்க கண்டமும்,
இமயத்தில் உயரும்
செங்கொடியுமே நடைமுறைச்சான்றுகள்.



\\ தலித்தியம் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்துக் கொண்டதாலேயே ஏகாதிபத்திய ஆதரவுச் சித்தாந்தம் என்று சொல்லிவிட முடியாது.//


மக்களின் போர்குனமிக்க போராட்டங்களை நீர்த்து போகச்செய்ய,
கூர்மையான வழிமுறைகளை மழுங்கடித்து தீர்வுகளை எட்ட
முடியாத பெயரளவிலான போராட்டங்களிலேயே இருத்தி வைப்பதற்கு ஏகாதிபத்தியத்தால்
உருவாக்கப்பட்ட அடிவருடிகள்,கைக்கூலிகள் தான் தன்னார்வக்குழுக்கள்.
ஏகதிபத்திய எலும்புத்துண்டுக்காக
"சாதி வெறி,ஆய் ஊய் " என்று ஊளையிடும் சொரி நாய்கள்
தான் NGO கள்.
இவர்களுக்கான 'புராஜக்ட்டை' முடிக்க தரப்பட்ட தத்துவம் தான் "தலித்தியம்".



\\அம்பேத்கர் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் தலித் என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார்.//


தலித் என்கிற சொல்லைத்தானே பயன்படுத்தினார் ?



\\இந்த சமூகத்திற்கென்று இருக்கும் அறவியல் மதிப்பீடு என்பது எந்த வர்க்க அல்லது சாதியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்தது? முதலாளித்துவ மற்றும் பார்ப்பனீய அறவியலா அல்லது எல்லோருக்குமான நீதியை வழங்கிவிடக்கூடிய அறவியலா?//


ஜனநாயகம் ஒழிந்து போகும்
போது தான்
'அணைவருக்குமான நீதியும்,அறவியல் மதிப்பீடுகளும்
நிலவ முடியும்.
எல்லோருக்குமான ஒரே நீதி,
எல்லோருக்குமான ஒரே விழுமியங்கள்
விதிகளாக இல்லாமல் இயற்கையாகி விடும் போது அங்கு "சுதந்திரம்" உருவாகி விடுகிறது.

எனவே இந்த சமூகத்தில் பொதுவான விழுமியங்களோ நீதியோ இருக்க முடியாது
என்கிற போது நாங்கள் கடைபிடிப்பது 'பாட்டாளி வர்க்க' பண்பாட்டைத்தவிர
வேறு என்னவாக இருக்க முடியும் ?



\\'கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவுடைமையாக்கிவிடுவார்கள்' என்று முதளாளித்துவவாதிகள்தான் அவதூறுப்பிரச்சாரம் செய்தார்கள். நீங்களும் அதே மொழியிலேயே பேசுகிறீர்களே?//


அந்த மொழியில்
நான்
பேசவில்லை சுகுனா,
நீங்களே வெட்கப்படாமல் சொல்லுங்கள்
பின் நவீனத்துவவாதிக்கு
ஏதாவது அறம் சார்ந்த விழுமியங்களோ,கட்டுப்பாடோ இருக்கிறதா ?

எந்த கட்டுப்பாடும் தேவை இல்லை,
எந்த மதிப்பீடும் தேவை இல்லை
யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்ளலாம்
இயற்கையாகவும்,
இயற்கைக்கு மாறாகவும்,
தேச துரோகம்
நாட்டுப்பற்று இரண்டுக்குமே
அர்த்தம் கிடையாது,
அதன் பொருள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் !

ஆனால் நாங்கள்
அப்படி இருக்க முடியாது
எனவே எல்லோரையும் தோழர் என்று அழைக்காதீர்கள் என்றதற்கு தான்
அய்யனார்
அது என்ன புனிதப்படுத்துகிறீர்கள்,
தோழர் என்பது மட்டும்
என்ன புனிதமான வார்த்தையா என்றார்.
இல்லை அய்யா சமூகத்தில் ஒவ்வொரு உறவுகளுக்கும் ஒரு மதிப்பும்,மரியாதையும்
உண்டு நாங்கள் அந்த மதிப்பீட்டிலிருந்து அனுகுகிறோம் எனவே உங்களுக்கு
புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்பதற்காக தான் அப்படி சொன்னேன்
இப்ப புரிஞ்சுதா ?



\\தேசப்பற்று என்பது எது? இன்றைக்கு இந்துப்பார்ப்பனீயம் உருவாக்கி வைத்திருக்கிற எல்லைக்கோடுகளின் மீதான தேசிய இனவாத வெறியா? நீங்கள் தேசப்பற்று என்பது சொல்வது மக்களின் மீதான பற்று என்றுதான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்த தேசியக் கட்டமைப்பும் அதற்கு ஆதரவாக ராணுவமும் போலீசும் ஊடகங்களும் நீங்கள் ஒத்துக்கொண்டாலும். கொள்ளாவிட்டாலும் உங்களைத் தேசத்துரோகி என்றே பிரச்சாரம் செய்யும்.//


பிறகு என்ன சிறந்த தேசபக்த் பட்டமா கொடுப்பார்கள் ?
இந்த 'இந்து தேசிய' கட்டமைப்பு மட்டுமல்ல எல்லா சுரண்டும் வர்க்க அமைப்புகளும்
புரட்சியாளர்களை தேசத்துரோகிகளாகத் தான் சித்தரிக்கும்.

ஆனால் நான் கேட்டது வேறைங்க சுகுனா,
சரி அதை விடுங்க பார்த்துக்கலாம்.


சுகுனா
(க்ஷோபா சக்தி நேர்கானலிலிருந்து) பின் நவீனத்துவம் ஒரு
சித்தாந்தம் அல்ல என்கிறார்,
ஆனால்
அய்யனாரோ
"சமூகத்திற்கான அறவியல் மதிப்பீடுகளின் அளவு கோல்கள் குறித்தெழும் சந்தேகங்களின் விகித வேறுபாடுதான் இருவேறுபட்ட சித்தாந்தங்கள்.என் அறிவுக்கெட்டியவரை சமுகம் குறித்தெழும் அக்கறைக்கான விழுமியங்களின் தகிப்பில் தோன்றுவதே சித்தாந்தம்..நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பது கூட இந்த விகித வேறுபாடு மட்டும்தான்."
என்கிறார்.

இவர்களுக்கிடையிலேயே இவ்வளவு குழப்பமா என்று ஆச்சரியப்படாதீர்கள்
பின் நவீனத்துவம் என்றாலே ஒருவகையில் குழப்பம் தான்
இதை பற்றி சாரு
என்கிற லூசை கேட்டால் அது ஒன்றைச் சொல்லும்,
வளர்மதி சாரைக் கேட்டால் சார்
வேறொன்றைச் சொல்லுவார்,
M G சுரேஷ் மற்றொன்றை சொல்லுவார்,
இன்னொருவருக்கு
கருத்தே கூட இல்லாமல் இருக்கலாம்,
எனவே இப்படி பலவாறு பிதற்றித்திரியப்படும் பின் நவீனத்துவம் விரைவில்
தனி ஒரு பதிவின் மூலம் அம்பலப்படுத்தப்படும்