Thursday, June 4, 2009

வெறுப்பைக் கட்டமைக்கும் லக்கிலுக்

சமீபமாக வலையில் அதிகம் பதிவதற்கான அவகாசமும் மனநிலையுமில்லை. என்றபோதும் விடாமல் அவ்வப்போது பதிவுகளை வாசிப்பதுண்டு. ஈழப்போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவைச் சந்தித்து இலங்கை அரசின் வதைமுகாம்களில் மிச்சமிருக்கும் தமிழர்கள் உயிரோடு இருக்கும் பாவத்தாலேயே ஆகக்கீழான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற தருணங்களில் கம்ப்யூட்டரும் கீபோர்டும் இருக்கிறது என்பதற்காக எழுதித்தள்ளப்படுகிற படு அபத்தங்களை வாசிக்க நேர்கையில் ஆயாசமே எஞ்சுகிறது.

நக்கீரனின் ‘பொறுக்கித்தனம்’ குறித்து பைத்தியக்காரன் எழுதிய பதிவு, ஈழப்போராட்டத்தில் ‘அகிம்சையின் முக்கியத்துவம்’ குறித்து சாருவும் ஜெயமோகனும் உதிர்த்த அபிப்பிராயங்கள், தமிழ்நதியின் எதிர்வினைப் பதிவு, சாருவின் மீதான விமர்சனப்பதிவுகள், சாருவை ஆதரித்த பதிவுகள் என தொடர்ந்து நேற்றோ அதற்கு முதல்நாளோ லக்கிலுக் எழுதிய ‘இப்போது வருந்துகிறோம்’ பதிவு.

கொஞ்சம் கொஞ்சமாக அபாயம் அதிகரித்து இப்போது வெறுப்புணர்வு உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே நினைக்கத்தோன்றுகிறது லக்கியின் பதிவையும் அதற்கிடப்பட்ட பின்னூட்டங்களையும் நோக்கும்போது. சாரு எழுதியிருப்பதைப் போல அகிம்சைப்போராட்டம்/ ஆயுதப்போராட்டம்தான் சரி என்றெல்லாம் கறுப்பு வெள்ளையாக பிரச்சினைகளை அணுகமுடியாது. மேலும் புலிகள் தவறு செய்திருக்கிறார்கள், இத்தகைய பாரிய தோல்விகளுக்கு புலிகள் இழைத்த தவறுகளும் ஒரு காரணம் என்பதெல்லாம் உண்மையென்றாலும் ஒரு விடுதலைப்போராட்டமே தவறு என்று சொல்வது எந்த நியாயத்தில் சேர்த்தி, அதுவும் அது பின்னடைவைச் சந்தித்திருக்கும் நேரத்தில்.

சாரு, காந்தி குறித்து எழுதிய கருத்துக்களைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக உரையாடலாம். ஆனால் ஜெயமோகன் குறித்து தமிழ்நதி எழுதியதை யாரும் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. மீண்டும் விவாதங்கள் சாருவை ஆதரித்தும் எதிர்த்தும் சாருவை என மய்யப்படுத்தியே நிகழ்ந்தன. உண்மையில் ஜெயமோகன் ஒரு காமெடி பீஸ். அவர் சீரியசாகப் பேசுகிற பல விஷயங்கள் மிக மிக மேலோட்டமானவை. ஏதாவது உளறி, ஆனால் அது உளறல் என்று தெரியாத அளவிற்கு ‘தத்துப்பித்து தத்துவ’ முலாம் பூசுவதாலேயே அது படு பேமஸாகிவிடுகின்றன. காந்தி குறித்து ஜெமோ உதிர்த்த முத்துக்களும் அப்படியே.

உதாரணமாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான முரண் குறித்து அவர் சொல்கிற கருத்துக்கள் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் காந்தியாலேயே முன்வைக்கப்பட்டது. அம்பேத்கரால் அது பலமாக மறுக்கப்பட்டது. ‘தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமை தந்துவிட்டால் தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று காந்தி ‘கருதினாராம்’. அவருடைய நிலைப்பாடு சரியாக இருந்ததனால்தான் காங்கிரஸ் இட ஒதுக்கீடை அங்கீகரிக்கும் அளவுக்காவது இப்போதுவரை இறங்கிவந்திருக்கிறதாம்’.

அட லூசுகளா! கருதினார் என்ன கருதினார்? காந்தி வெளிப்படையாகவே சொல்லவே செய்தார், ‘‘முஸ்லீம்களும் சீக்கியர்களும் தங்களுக்கான தனிவாக்காளர்தொகுதி கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று. தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற அபத்தமான வாதத்திற்கு அம்பேத்கர் மிகத் தெளிவாகவே பதில் சொன்னார், ‘இப்போது மட்டும் என்ன வாழுகிறது?’ என்று. தனி கிணறு, தனிச்சுடுகாடு, தனி வாழ்விடம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கிவிட்டு தனி வாக்காளர் தொகுதி கேட்டால் மட்டும் ‘அய்யோ தனிமைப்பட்டுப் போய்விடுவீர்கள்’ என்று பாசாங்கு செய்வது உச்ச அயோக்கியத்தனம்!

ஜெயமோகன் வாதப்படியே இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் ‘தனிமைப்பட்டு விட மாட்டார்களா’ என்ன? ஆக, இந்த மாதிரியான பிரதிவாதங்கள் எல்லாம் பல தசாப்தங்களுக்கு முன்பே நடந்து முடிந்த சமாச்சாரங்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகளே தெரியாமல் ‘பி.தொ.நி.கு’ என்று ஒரு குப்பையை எழுதுவது, காந்தி, சேகுவாரா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஆர்யா, சூர்யா என்று சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களைக் கழிந்து செல்வது என இப்படியான முட்டாள்தனங்கள் நிகழ்வதற்கு ஜெமோ மட்டுமே காரணமில்லை. படிக்கிற வாசகி/கன் கூமுட்டையாக இருந்தால் ஜெமோ என்ன வேண்டுமானாலும் உளறலாம்தானே!. தனக்கு நன்கு தெரிந்த விஷயத்தில் ஜெயமோகன் உளறத்தொடங்கும்போது மிக எளிதாக அம்பலப்பட்டுப்போகிறார்.

ஜெயமோகனின் வக்கிரமும் அபத்தமும் கடைசியாக செத்துப்போன கமலாதாஸ் சுரையாவையும் விடவில்லை. ‘அவர் கறுப்பாக, குண்டாக, அவலட்சணமாக இருந்ததால்தான் பாலியல் பற்றி எழுதினார்’ என்பது ஜெமோவின் ‘கண்டுபிடிப்பு’. கமலாதாஸ் குறித்த கட்டுரையில்கூட இஸ்லாம் குறித்த வெறுப்பைக் கக்கியுள்ளார் பாருங்கள். கமலாதாஸ் இஸ்லாத்திற்கு மாறியதும், இறுதிக்காலத்தில் அதிலிருந்து வெளியே வர விரும்பியதும் பலரும் அறிந்ததுதான். ‘‘எனக்கு மதம் அலுத்துப்போச்சு’ என்றுகூட கமலாதாஸ் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறக்கூடாது என்று ‘ரகசியமாக’ மிரட்டல்கள் வந்ததாலேயே அவர் மறுமதம் மாறவில்லையாம்! ‘இந்துக்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள், ஆனால் இஸ்லாமியர்களோ கொடூரமானவர்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறார் ஜெமோ. ‘ரகசியமாக’ மிரட்டப்பட்டது ஜெயமோகனுக்கு மட்டும் எப்படி தெரியவந்தது என்று தெரியவில்லை.

ஆக இத்தகைய வெறுப்பின் மனநிலை இப்போது லக்கிலுக்கிற்கும் ‘பிரமாதமாக’ கைகூடி வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்குப் பதிலாக ஈழத்தமிழர்கள் என்று வெறுப்பின் இடம் மட்டும் மாறியிருக்கிறது. ‘ராஜீவ்காந்தி கொலையின்போது திமுக கொடிக்கம்பங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன, திமுகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதனால் அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு’ என்று சின்னப்புள்ளத்தனமாக வரலாற்றின் கணிதத்தைச் சமன் செய்கிறார் லக்கி. அதை விட மோசம் ஈழத்தமிழர்கள் x இந்தியத்தமிழர்கள் என்கிற மோசமான முரணையும் அவரது எழுத்துக்கள் கட்டமைக்கின்றன.

ராஜிவ் கொலையின்போது நிகழ்ந்த வன்முறைகளும் காலித்தனங்களும் தமிழகம் நன்கு அறிந்ததுதான். அதற்காக ஒரு இனப்படுகொலையின்போது வாளாவிருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை. லக்கியின் வாதங்களையே ஒத்துக்கொண்டால் கூட, லக்கி மனச்சாட்சிப்படி பதில் சொல்லட்டும். அந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட திமுககாரர்கள்தானா இப்போது அதிகாரத்தின் ருசியை அனுபவித்துக்கொண்டிருக்கிறப்பவர்கள்?

மிசா, தடா, ராஜீவ் கொலையை ஒட்டி நிகழ்ந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அரசின் ஒடுக்குமுறையைச் சந்தித்தவர்கள் இவர்கள்தானா லக்கி இப்போது திமுகவின் உள் மற்றும் வெளி பதவிகளை நிரப்பிக்கொண்டிருப்பவர்கள்? ஒரு ஊழல்மயப்பட்ட தலைமுறை அதிகாரத்தை ருசிப்பதற்காகத்தான் கடந்த தலைமுறையின் தியாகங்கள் பலியாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது திமுக தலைமையால் மீண்டும் மீண்டும் தியாகங்கள் ‘சொல்லப்படுகின்றனவே’ தவிர மதிக்கப்படுவதில்லை. திமுக தனக்கான எல்லா அடிப்படைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறது. அதன் உச்சம் ஈழப்பிரச்சினை என்பதைக் கொஞ்சமும் மனச்சாட்சியுள்ள திமுககாரன் அறிவான். ஈழத்தமிழர்கள் மீதான லக்கியின் இத்தகைய பதிவுகள் ஒரு மோசமான பாசிச மனநிலையைக் கட்டமைக்கும் தன்மை வாய்ந்தவை. தான் சார்ந்திருக்கிற கட்சிக்கு இருக்கக்கூடிய ‘இக்கட்டுக்களையும்’, ‘நிர்ப்பந்தங்களையும்’ வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக மாற்றிப்போட்டு நியாயப்படுத்துவது நீதியாகாது.

இந்திராகாந்தி கொலையையட்டி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்குக் காரணம் யார் என்பதை சீக்கியர்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள் என்பதன் சாட்சியம்தான் அந்த கனத்த சப்பாத்து. ஆனால் ‘ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொலைகாரர்களாக்கிய’ ஜெயின்கமிஷன் அறிக்கையையும் அதைக் காரணமாய் வைத்து திமுக ஆட்சியைக் கலைக்க வைத்த காங்கிரசையும் நோக்கித்தான் லக்கியின் கோபம் திரும்பியிருக்க வேண்டும். அல்லது அத்தகைய மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்ட காங்கிரசுடன் உறவைத் தொடர்வதற்காக எத்தகைய சமரசங்களையும் மேற்கொள்ளத் தயாராயிருக்கும் தன் கட்சித்தலைமையின் மீது திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அது அநியாயமாக ஈழத்தமிழர்கள் மீதான வெறுப்பை உற்பத்தி செய்கிறது.

நண்பர் லக்கிக்கு, சில அபத்தமான நிகழ்வுகளை, (ஈழப்போராட்டத்தின் பின்னடைவிற்குப் பிறகு, மிக மிகச் சமீபத்தில் நிகழ்ந்தவை) எந்த மேற்கத்திய அறிஞரின் பெயர் உதிர்த்தலுமின்றி, செய்தித்தாள்களில் இருந்தே வரிசைக்கிரமமாக முன்வைக்கிறேன். கணக்கு சரியாகிறதா என்று பாருங்கள்.

1. ‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது’ சென்று கருணாநிதி பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்.

2. இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தான் வாக்களித்தது மட்டுமில்லாமல், இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளையும் அணிதிரட்டுகிறது.

3. ‘மாநிலச்சுயாட்சிக்காகப் பாடுபடுவதுதான் தன் பிறந்தநாள் செய்தி’ என்று அறிவிக்கிறார் மு.கருணாநிதி.

முத்தமிழே நீ வாழ்க! மூவேந்தே நீ வாழ்க! வாழ்க!
குளிர்மதியே நீ வாழ்க! குறள்வழியே நீ வாழ்க! வாழ்க!

சுபம்

33 comments:

லக்கிலுக் said...

//"வெறுப்பைக் கட்டமைக்கும் லக்கிலுக்"//

உண்மை என்றே ஒப்புக் கொள்கிறேன். வெறுக்கிற அளவுக்கே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் நடந்து கொள்கிறார்கள்.

என் பதிவினையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் மட்டுமே படித்துவிட்டு உடனடியாக வழக்கம்போல தீர்ப்பு எழுதுகிறீர்கள்.

உங்களுக்கு தனிமடலில் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் அனுப்புகிறேன். கடந்த ஒருமாதக் காலத்தில் இணையத்தில் இவர்களால் கொட்டப்பட்ட குப்பை டன் டன்னாக சேர்ந்திருக்கிறது. முடிந்தால் அதில் சிலவற்றையாவது படித்துவிட்டு வந்து தீர்ப்பினை மாற்றி எழுதவும் :-)

லக்கிலுக் said...

இந்தப் பின்னூட்டம் ‘கோடி பெறும் பின்னூட்டங்களை’ என் மின்னஞ்சலில் பெறுவதற்காக :-)

Anonymous said...

உங்கள் முந்தைய பதிவில் கண்ட ஒரு பின்னூட்டம். திருந்துங்க சுகுணா.

//காங்கிரஸ் கட்சியையும், சோனியாவையும் விட்டு விட்டு கலைஞரை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறீர். விட்டால், திமுக சொல்லித்தான் ராஜபட்சே தமிழின அழிப்பில் இறங்கியிருக்கார் என்பீர்கள் போலிருக்குதே சார்? :)

தேர்தலில் தி.மு. கழகக் கூட்டணி குறைந்த பட்சம் 25 இடங்களிலாவது வெல்லப்போவது உறுதி. LTTE ஒரு factorஏ அல்ல. உங்களது propaganda சுத்த waste.

ஒரு வேளை, அதிமுக கூடுதல் இடங்களைப் பெற நேர்ந்தால், அதற்கும் இலங்கை நிகழ்வுகள் ஒரு காரணமாக இராது. அதிமுக-பாமக்-மதிமுக-கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய 'பலமான' கூட்டணி அமைப்பே காரணமாயிருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழுணர்வு என்பது தி.மு.தொண்டனுக்குத்தான் அதிகமாக இருக்கும்/இருக்கிறது. அவன் உணர்வை வேண்டுமென்றே தூண்டிவிட்டு, அவனை திமு கழகத்திலிருந்து விலகச் செய்வதன் நோக்கமே, ஜெயா மற்றும் பார்ப்பன ஊடகங்களின் உள்நோக்கம்/hidden agenda தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், "தனி ஈழம்" கேட்கும் ஜெயாவும், 'சிறீலங்கா ரத்ன' இந்து-ராமும், LTTEவிரோத சோவும் ஓரே அணியில்!!! ரொம்ப hilariousஆ யில்லை.

இலங்கைத் தமிழரது அவலம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சையும் உலக்கத்தான் செய்கிறது. ஆனால், அவற்றை அரசியலாக்கி ஆதாயமடைய நினைக்கும் அல்ப புத்தி இன்று கலைஞரைத் தவிர எல்லாரிடமும் காண்கிறேன். இலங்கைத் தமிழன் சாக வேண்டும், அதைச் சொல்லி இங்கு ஓட்டுக் கேட்க வேண்டும், இது தான் ஜெயா அம்மையாரின் இன்றைய எதிர்பார்ப்பு, திட்டம் எல்லாம்.

நீங்கள் உங்களது பதிவில் "பாசிசம்" "பாசிசம்" "பாசிசம்" என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்களே, LTTEயிடம் காணாத பாசிசத்தையா பிறரிடம் பார்க்கிறீர்கள்? LTTEயின் கொலைவெறிக்கு சிங்களர்களைவிட பல தமிழர்கள் இறையாகியிருக்கிறார்களே, அது தெரியாதுங்களா உங்களுக்கு? இலங்கைத் தமிழரில் மிகப் பெரும்பான்மையானோர் LTTEஐயும், சிங்கள ராணுவத்தினரையும் பற்றிக் கூறுகையில் we are caught between devil and deep sea என்கிறார்கள்.

கலைஞர் சொன்னது போல இலங்கைத் தமிழரின் இந்த அவல நிலைக்கு "சகோதர யுத்தம்" தான் காரணம். ராஜபட்சேயோ சோனியாவோ அல்ல.

இவையெல்லாம் திருமாவுக்கு நன்றாகத் தெரிகிறது. அதனால் தான் உண்மை நிலையினை உணர்ந்து தி.மு. கழகத்தினோடு ஒருமித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான இசுலாமியர்களை உலகிலேயே இடம் பெயரச்சொன்ன ஒரே அமைப்பு விடுதலைப் புலிகளமைப்புத்தான். இலங்கை-முஸ்லீம் யாராவது ஓரிருவரை தயவு செய்து தொடர்புகொண்டு தெளிந்து கொள்ளவும்.

துரோகம், நம்பகத்தன்மை இவையெல்லாம் யாரிடத்தில் காணுகிறீர்கள்? கலைஞரிடமா, ஜெயாவிடமா, சோனியாவிடமா, யாரிடம்?

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இன்று நீங்கள் கலைஞரை எதிர்க்குறீர். நாளைக்கு "இந்துத்வ" பூச்சாண்டி காட்டி, மீண்டும் காங்கிரஸை ஆதரிக்க மாட்டீர்கள் என்று எப்படி நம்புது?

அப்போது ஜெயா உங்களுக்குக் கசக்கும். கலைஞரைத்தானே தேடி வருவீர்கள்?

(என்ன அய்யா, பல்டி அடிக்கத் தயாராயிட்டீயளா...?)

இவண்
சுரேஷ் குமார்
பெங்களூரு.
//

Anonymous said...

லக்கியின் எல்லா எழுத்துக்களும் அவுருடைய சொந்த எழுத்துக்கள் கிடையாது. நன்றாக விலை போன வலைப்பதிவு அவருடையது. அதில் அவரும் எழுதுவார், அவர் பாணியில் வாங்கியவர்களும் எழுதுவார்கள். கிழக்கின் கூட்டமும், இட்டலி வடைக் கூட்டமும் பின்னால் நின்று இயக்கும் ஒரு வலைப்பதிவு. அவர்களால் நேரடியாகத் திட்ட முடியாதவற்றைத் திட்டவும், பாராட்ட முடியாதவற்றைப் பாராட்டவும் லக்கி வலைப்பதிவு பயன்படும்.

பத்ரிக்கும் இட்லி வடைக்கும் விருப்பமில்லாத தமிழ்மணத்திற்கும், காசிக்கும் - லக்கி - ஒரு எதிரி - முரட்டுத் தொண்டன்

லக்கி பதிவில் அதிக ஹிட்ஸ் கிடைத்தால் அது கிழக்கின் - புத்தகங்களுக்குமான ஒரு விளம்பரம்

இப்படிப் பல,

கார்மேகராஜா said...

///தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழுணர்வு என்பது தி.மு.தொண்டனுக்குத்தான் அதிகமாக இருக்கும்/இருக்கிறது. அவன் உணர்வை வேண்டுமென்றே தூண்டிவிட்டு, அவனை திமு கழகத்திலிருந்து விலகச் செய்வதன் நோக்கமே, ஜெயா மற்றும் பார்ப்பன ஊடகங்களின் உள்நோக்கம்/hidden agenda தான்.///

இது என்ன புதுக்கதையாக இருக்கிறது? குறிப்பிட்ட கட்சிக்குத்தான் உணர்வு அதிகம் என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? இந்த தேர்தலின் முடிவை பார்த்தும் உங்களால் எவ்வாறு இப்படி கூற முடிகிறது? கருணாநிதி இந்த தேர்தலுக்கு முன் அல்லது இலங்கை பிரச்சனையின் தற்போதைய நிலையில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை மறந்து விட்டீர்களா? கொஞ்சம் நினைத்து பாருங்கள்,

----காங்கிரசின் கூட்டணியில் இருந்தும் கடைசிவரை கடிதங்கள் மட்டுமே அனுப்பிக்கொண்டிருந்தார்.

---- மொத்த எம்.பிக்களையும் ராஜினாமா செய்வார்கள் என்று கவிதை எழுதுவார். எம்.பி கள் அனைவரும் ராஜினாமா கடிதம் எழுதி கலைஞரிடம் கொடுப்பார்கள் (?). இதனையடுத்து பிரதமரோ அல்லது வெளியுறவு துறை அமைச்சரோ உறுதியளித்ததாக கூறி கடிதங்கள் அனைத்தும் குப்பை கூடைக்கு போகும். இதெல்லாம் தொண்டர்களையோ அல்லது மக்களையொ ஏமாற்றும் வேலையில்லையா?

----உச்சகட்ட உணர்ச்சி (ஏமாற்று வேலை?) வந்து காலை பத்து மணிக்கு (வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு) கடற்கரையோரம் வந்து உண்ணாவிரதம் தொடங்குவார். அவரை சுற்றி அனைத்து அமைச்சர்களும் உற்றார் உறவினர்களும் இருப்பார்கள். இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் (சூரிய குளியல் – sun bath) இருப்பார். அதற்க்குள் அவருக்கு மட்டும் தனியாக வெளியுறவுத்துறை தொடர்பு கொண்டு இலங்கையில் போர் நின்றுவிட்டது என தகவல் தரும். அதனை அவருக்கும் அவரது பேரப்பிள்ளைகளுக்கும் சொந்தமான 33 தொலைக்காட்சிகளிலும் அவரச்செய்தியாக வெளியிடுவார்கள். எப்படி தெரியுமா, இப்படித்தான் - கலைஞர் வெற்றி, உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் போரை நிறுத்து வைத்தார்.

அடடா இவர் மட்டும் இரண்டாம் உலகப்போரின்போது உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவ்வளவு உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

இத்தனையையும் பார்த்த மக்கள் திரும்பவும் கலைஞரையும் காங்கிரசையும் அரியணையேற்று அழகு பார்த்தார்கள் என்றால் என்னவென்று சொல்வது?

அதற்க்காக நான் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிக்க மாட்டேன். இங்கே அரசியல் பொறுக்கிகள் என்றால் அங்கே இருப்பது பிணம் திண்ணும் கழுகுகள்.இரண்டு மாதம் முன்புவரை, இலங்கையில் நடப்பது உள் நாட்டு பிரச்சனை, அங்கே யாரும் தலையிட முடியாது என்றும் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்றும் கூறிய தலைவி(?) தேர்தல் ஜுரம் வந்தவுடன் இந்திரா காந்தி பின்பற்றிய முறையை பின்பற்றுவாராம்.

கார்மேகராஜா said...

தமிழர்களை காக்க வந்த ராஜ ராஜ சோழனே நீர் வாழ்க.

(இதனை சுகுணாதிவாகர் மறந்துவிட்டார்)

சுகுணாதிவாகர் said...

லக்கி, கிழக்கு பதிப்பகம் குறித்த அனானியின் பின்னூட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை.

Anonymous said...

”லக்கி, கிழக்கு பதிப்பகம் குறித்த அனானியின் பின்னூட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை.”

அந்த அனானி வேறு யாருமில்லை. நம்ம முடியலத்துவம் செல்வேந்திரன்.

Anonymous said...

//லக்கி, கிழக்கு பதிப்பகம் குறித்த அனானியின் பின்னூட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை//

அப்புறம் என்ன மயித்துக்கு அதை அப்படியே விட்டு வெச்சிருக்கீரு? தூக்குமய்யா!

ஐந்திணை said...

//முத்தமிழே நீ வாழ்க! மூவேந்தே நீ வாழ்க! வாழ்க!
குளிர்மதியே நீ வாழ்க! குறள்வழியே நீ வாழ்க! வாழ்க!
//
அருமையான வஞ்சப்புகழ்ச்சி!

ஐந்திணை said...
This comment has been removed by the author.
புரட்சிக்கவி said...

சுகுணாதிவாகர் !

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். லக்கியின் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்த நான். இப்போது அதனை நிறுத்திக் கொண்டேன்.

கொல்லப்படுபவர்கள், ஈழத்தமிழரின் சொந்தங்கள் !. உங்களுடைய தந்தையோ, தங்கையோ யாராவது துப்பாக்கி முனையில் நிற்கும் போது, லக்கி போன்ற யாராவது, "கருணாநிதிக்குப் பெரும்பான்மை இல்லை, அதனால்தான் அவர் ஈழப்பிரச்சனையில் செயல்படமுடியவில்லை, அதற்கு காரணமான வைகோ போன்றவர்களே காரணம்" என்று சொன்னால் யாருக்குதான் கோபம் வராது. இவ்வாறு ஈழத்தமிழர்கள் தனிமடலில் திட்டியதற்காக ஈழத்தமிழர்களைக் குறைச் சொல்கிறார் லக்கி !!

"நீங்கள் ஓட்டுப்போடாவிட்டாலும் உங்களை விட்டு ஓடுவதற்கு நான் ஒன்றும் தெரு நாய் இல்லை, அடித்தாலும் உதைத்தாலும் உங்கள் காலகளையேச் சுற்றி சுற்றி வரும் உங்கள் வீட்டு நாய்" என்று லக்கியின் தன்மானத்தமிழர், 'தன்மானத்தோடு இருந்தபோது' சொன்னது. லக்கி இதையாவது சிறிது சிந்தித்து, ஈழத்தமிழர்கள் திட்டினாலும், அவர்கள் நிலையினை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

Anonymous said...

WHEN DID KARUNANITHI COME TO KNOW ABT LTTE TERRORISM?WAS IT BEFORE S.P.THAMIZH SELVAN'S DEATH OR AFTER..?
BECAUSE KARUNANITHI WROTE A PRAISING POEM ABOUT HIM INFACT A 'VEERAKKAVITHAI'!MAY BE HE DID NOT KNOW ABOUT THE 'sahotharappadukolai'THAT TIME!
IF LTTE WINS,KARUNANITHY WILL WRITE A 'PUTHIYA PURANAANOORU'!
NOW THEY LOST.....NOW WE ALL KNOW WHAT KARUNANITHI WOULD SAY ABOUT THEM!

Anonymous said...

KODANAATTIL KUMMAALAM....
GOPALAPURATHTHIL MATTUM EEZHA THAMIZHARKALUKKAAGA AZHUTHU KONTIRUKKIRAARKALAA...
.ANGUM KONDAATTAMTHAAN....!!!

Pot"tea" kadai said...

//மாநிலச்சுயாட்சிக்காகப் பாடுபடுவதுதான் தன் பிறந்தநாள் செய்தி’ என்று அறிவிக்கிறார் மு.கருணாநிதி.//

ippadiyae thaan kizhavan arasiyalai nadathikkondirukkiraan...

உடன்பிறப்பு said...

ஈழத்தமிழர்கள் கலைஞர் மீது கட்டமைத்த வெறுப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர் சுகுணா, அதைவிட இது ஒன்றும் மோசம் இல்லை

Anonymous said...

//அட லூசுகளா! //

This is piece of sample that you are another person affected by the preachings by VAIKO & SEEMAAN..

யாரோ - ? said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் நானும் ஆரம்பத்தில் இருந்தே லக்கியின் பதிவை வாசித்து வந்தவன்தான். ஆனால் இப்போது நிறுத்திவிட்டேன். அதற்கு அவரது கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் திமுக நிலைப்பாடுதான் காரணம். கலைஞர் மீதான நியாயமான விமர்சனங்களைக் கூடி லாவகமாக புறந்தள்ளக்கூடியவர். இவரிடம் கலைஞரின் குறைகளைச் சுட்டிக்காட்டி ஏதாவது கேட்டால் அந்தப் பக்கமே ஆளைக் காணமுடியாது. இவர் ஈழத்தமிழர்க்கு ஆதரவாம். பிரபாகரனின் தீவிர ரசிகனாம் என தன் தன்னை அடையாளம் காண்டி தன் மீதான எதிர்வினைகளை லாவகமாக கையாள்வர். ஆனால் நாங்கள் அவரை எப்போதோ அடையாளம் கண்டுவிட்டோம். என்ன அவரிடம் ஒரு நல்ல விடயம் அவர் எடுத்த திமுக நிலைப்பாட்டில் என்றும் மாறாமல் நிற்பார். ஒன்று தன்பிழைப்புக்காக மற்றவரை ஏமாற்றுவது நீண்ட காலத்திற்கு நிலைக்காது. லக்கி நீங்கள் திமுக அனுதாபியாக மட்டுமே இருங்கள். பிரபாகரன் மற்றும் ஈழத்தமிழர் ஸ்டன்கள் இனிமேலும் தேவையில்லை.

Ayyanar Viswanath said...

அஞ்சலி ஸ்பெசலிஸ்ட் ன் சமீபத்திய வன்ம வாந்தியும் பெரும் எரிச்சலையும் கோவத்தையும் ஏற்படுத்தியது.அதையெல்லாம் காமெடி பீஸ் என தள்ளிவிட்டு போகலாம்தான் என்றாலும் குறைந்த பட்சம் வலைச் சூழலிலாவது எதிர்வினைகள் மிக அவசியம் என்றே படுகிறது.

நன்றி

Anonymous said...

//கலைஞர் சொன்னது போல இலங்கைத் தமிழரின் இந்த அவல நிலைக்கு "சகோதர யுத்தம்" தான் காரணம். ராஜபட்சேயோ சோனியாவோ அல்ல.
//
சிறிலங்காவின் ஏழ்மை பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு சகோதர யுத்த்தக்காரர்களோ, ராஜபக்செவோ புலிகளை வென்று இருக்கவே முடியாது . இந்தியா, பாகிஸ்தான், சைனா இன்னும் பல அல்லக்கை நாடுகளின் துணை இல்லாமல் ஒரு @##௪
பிடுங்கி இருக்க முடியாது. ஆனாலும் தொடர்ந்து இந்த பொய்யை எழுதுகிறார்கள்.

Muthu said...

லக்கியின் பதிவை தொடர்ந்து படித்து வந்த பலகோடி பேரில் பெரும்பாலானவர்கள் படிப்பதை நிறுத்தி கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.

தம்பி லக்கி,

தயவு செய்து இனிமேல் இணைய தமிழர்கள் விரும்புவது போல் எழுதவும். உனக்கு தோணியதை எழுதாதே :)என்ன கொடுமை சார் இது?

லக்கிலுக் said...

//தம்பி லக்கி,

தயவு செய்து இனிமேல் இணைய தமிழர்கள் விரும்புவது போல் எழுதவும். உனக்கு தோணியதை எழுதாதே :)என்ன கொடுமை சார் இது?
//

முத்து அண்ணே!

செம ஃபார்மில் இருக்கீங்க. அப்படியே அவ்வப்போது ஏதாவது பதிவு, கிதிவு போட்டு துரோகி பட்டத்தை ஷேர் பண்ணிக்கிடலாமில்லே? :-)

Deivaa said...

Good. I appreciate your words. Youva Krishna change your name to Kila Krishna. My Simple Questions:

1. Why International Media not allowed in Srilanka War Place?

2. Why UN Members pushed away from srilanka.

3. why India (A FAMOUS DOMESTIC COUNTRY IN THE WORLD) does not oppose these Srilanka's stand?

Persons lick Lucky shd act with humanism. But unfortunately all media are running here by political party only.

regards,
deivaa

nagoreismail said...

"சாரு, காந்தி குறித்து எழுதிய கருத்துக்களைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக உரையாடலாம்"
- அத்தகைய உரையாடலில் கலந்து கொள்ள ஆர்வம்

"கமலாதாஸ் குறித்த கட்டுரையில்கூட இஸ்லாம் குறித்த வெறுப்பைக் கக்கியுள்ளார் பாருங்கள்."
- ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

நிற்க. எனக்கு ஒரு சந்தேகம்,
நீங்கள் ஜெயலலிதாவிற்கு வாக்களிப்பது ஒரு உலக மகா பாவ செயலுமல்ல என்று எழுதியிருந்தீர்கள். இதற்கான காரணம் கலைஞரின் செயல்பாடுகள் சரியில்லை என்பதாக இருந்தால், ஜெயலலிதாவால் கலைஞர் அரசைஇதை விட சிறப்பாக செயல் முடியும் என்று எண்ணுகிறார்களா, நம்புகிறீர்களா அல்லது கலைஞருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கலைஞர் மீதான கோபத்தின் வெளிப்பாட்டா?

அடுத்து, என்னை பொறுத்த வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்வது, அதிகாரத்தில் இருப்பது என்பது வேறு - ஈழ சகோதரர்களுக்காக போர் நிறுத்தத்திற்கு தமிழக அரசு போராடுவது என்பது வேறு என்றே கருதுகிறேன் - ஆட்சி, அதிகாரத்தை பற்றி கவலைப்படாமல் தூக்கி பதவிகளை தூக்கி எறிந்து விட்டால் மட்டும் கலைஞரால் இப்பொழுது இருக்கும் நிலையை தடுத்திருக்க முடியும் என்று கருதுகிறீர்களா?

Anonymous said...

//இந்தியா, பாகிஸ்தான், சைனா இன்னும் பல அல்லக்கை நாடுகளின் துணை இல்லாமல் ஒரு @##௪
பிடுங்கி இருக்க முடியாது//

அல்லக்கை????
உலக அரசியலைக் கலக்கி ஒரே gulpல் குடிச்சுடீங்களே!
சீக்கிரமே நீங்கள் ஃபாரின் மினிஸ்டராக வாள்துக்கல் :)

ஈழத்தமிழரின் அவல நிலயை வைத்து தமிழகத்தில் 'அரசியல்' செய்ய நினைத்த ஜெயா, வைகோ, ராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழக மக்கள் ஆப்பு வைத்ததிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்? தமிழக மக்கள் தமிழ்நாடு எல்லாத்துறையிலும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் திமுக-காங்கிரஸ் ஆட்சிதான் மத்தியிலும் மாநிலத்திலும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்.
எனது தாயகம் பீகாரைப் போன்
றோ, ஜார்கண்ட்-சட்டிஸ்கரைப் போன்றோ அல்லாமல், சதா ஸ்ட்ரைக்கில் ஈடுபடும் கேரளா, மே.வங்காளம் போல் இல்லாமல், குஜராத், மகாராஷ்டிராவைப் போல் தொழில் துறையில் வளர்சி கண்டு தமிழர்களுக்கு வேலை வாய்புகள் அதிகரிப்பதையே நான் விரும்புகிறேன்.

லக்கிலுக் பக்கா திமுக காரராக இருக்கலாம். ஆனால், தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டும் என்று நினைப்பவர் எல்லாருமே "ஈழ நிகழ்வுகள்" தமிழக அரசியலைப் பாதிக்காமலிருக்கவே விரும்புகிறார்கள்!

For tamils like us, overall development of tamilnadu in socio-economic spheres is more important; and are fully confidant of the Congress led UPA government's steps in ensuring srilankan tamils welfare.

ஏகாதிபதிய அமெரிக்காவின் பிரதிநிதியான ஒபாமாவின் பின்னால் வாலை ஆட்டிக்கொண்டு ஓடும் தமிழர்களை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது.

For ensuring the safety and sercurity of Srilankan Tamils, Kalaignar took all possible measures. Congress Party, Sonia an Manmohan are also doing their best to reduce the sorry plight of those srilankan tamils who have been internally displaced due to war. FINALLY ONE WORD, IT IS ONLY INDIA THAT HAS CONTRIBUTED LOT OF MONEY TO RESCUE THE SRILANKAN TAMILS WHO ARE STARVING IN SRILANKA! Not your Obama!

Long live Kalaignar!
Long live Sonia!
Long live Manmohan!
Long live DMK-Congress Alliance!

இவண்
சுரேஷ் குமார்
பெங்களூரு.

K.R.அதியமான் said...

//அட லூசுகளா! கருதினார் என்ன கருதினார்? காந்தி வெளிப்படையாகவே சொல்லவே செய்தார், ‘‘முஸ்லீம்களும் சீக்கியர்களும் தங்களுக்கான தனிவாக்காளர்தொகுதி கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று. தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற அபத்தமான வாதத்திற்கு அம்பேத்கர் மிகத் தெளிவாகவே பதில் சொன்னார், ‘இப்போது மட்டும் என்ன வாழுகிறது?’ என்று. தனி கிணறு, தனிச்சுடுகாடு, தனி வாழ்விடம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கிவிட்டு தனி வாக்காளர் தொகுதி கேட்டால் மட்டும் ‘அய்யோ தனிமைப்பட்டுப் போய்விடுவீர்கள்’ என்று பாசாங்கு செய்வது உச்ச அயோக்கியத்தனம்!

///

No. wrong premises. The Poona Pact between Gandhi and ambedhar of 1942could have been easily broken later after 1948, when Gandhiji was killed. Ambedthkar was one of the important architechts of Indian constitution then. But no one (incl Ambedhkar) tried to reverse the Poona Pact which was against double constituency method. because of the wisdom of it. Hindsight proves Gandhi was right.

And JeMo's article about Gandhiyin Thuroham is one his very best ones.
If possible try to argue against that article with info, data and logic instead of one liners and gross generalisations.

We may differ with JeMo's views but he is an important writer of our times. and Pin Thodarum Nool is not a kuppai to be dismissed in word. esp the core story of Bukarin of USSR and his trial and murder. It was based on history.

Suguna : can you answer this question : do you support of oppose human rights and basic democracy with free speech and other fundamental rights.
You do not seem to understand that communism is incompatible with basic democracy and fundamental rights. It is impossible to implement a marxist state without crushing basic rights of ALL people. that is the lesson from history.

K.R.அதியமான் said...

why was my comment not published till date ?

i consider my comment was not a
thanimanitha thaakuthal, etc.

then why comrade ?

யுவகிருஷ்ணா said...

இந்தப் பதிவை மீள்பார்வை செய்யும் ந்லையில் இப்போது வெளியே மிதக்கும் அய்யா இருக்கிறாரா?

ஏனெனில் சமீபத்தில் மிதக்கும் வெளியில் எழுதிய பதிவொன்றிலும், த.அகிலனின் பதிவில் போடப்பட்ட பின்னூட்டமொன்றிலும் வேறொரு வெளியே மிதக்கும் அய்யாவை பார்த்ததாக ஞாபகம்!

லெமூரியன்... said...

எனகென்னமோ நாமளே லக்கிலுக் கை பெரியாள் ஆக்குகிற மாதிரி தோணுதுங்க....அந்த ஆள் சொல்றதுனால எல்லாம் உண்மை ஆகப் போறதும் இல்ல...
அப்டி ஏதும் சொல்லாட்டியும் பெரியவர்(கருணாநிதி) அயோக்கியத்தனங்கள் தெரியாமர்ப் போகபோரதில்லை....

அஹோரி said...

'தமிழ்' , 'தமிழனை' வைத்து வியாபாரம் பண்ணியாச்சி, இப்ப 'முன்னாள் தமிழின தலைவர்' நம்பி இருப்பது 'அரசு ஊழியர்களின் குடும்பங்களையும்' , லாவகமாக செய்த 'பிராமண எதிர்ப்பு' சாதி அரசியலும் தான். இரண்டுக்குமே பவர் ஜாஸ்தி.

தோ ... பழைய ஸ்டைல் லில் , அடுத்த தலைமுறை "டாக்டர்' ரெடி.

இன்னும் எத்தனை காலம் இந்த '100 ரூவா பிரியாணி' தமிழர்கள் எமாற்றபடுவார்களோ?

அருண்மொழிவர்மன் said...

அதற்க்காக நான் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிக்க மாட்டேன். இங்கே அரசியல் பொறுக்கிகள் என்றால் அங்கே இருப்பது பிணம் திண்ணும் கழுகுகள்////

இங்கே இருக்கும் கூட்டம் காலில் விழும் கூட்டம் என்றால், அங்கே இருப்பது கரணம் அடிச்சு காலில் விழும் கூட்டம் இது தான் திமுக மற்றும் அதிமுக இடையிலான வேறுபாடு...

அது போல தாமரை சொன்ன “ஜெ. தமிழ்நாட்டின் அமாவாசை என்றால் கலைஞர் அமாவாசைக்கு அடுத்த நாள்”
போன்ற கருத்துகள் தான் எனது கருத்தும். இந்த கருத்து சொன்னவர்களின் எல்லாக் கருத்துக் க்ளாஇயும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் மேற்சொன்ன கருத்துக்கள் மேல் எனக்கு அதிகம் நம்பிக்கை உண்டு....

அருண்மொழிவர்மன் said...

cb

Anonymous said...

எவ்வளவு நாளைக்குத்தான் பொங்கலையும்.புளியோதரையும் கொடுத்து ஏமாத்துவீங்க.கொஞ்சம் பிரியாணியும் சாப்டுதான் பாக்கட்டுமே.